'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Friday, August 08, 2014
காலில் விழாத மாணவனை அடித்த சக மாணவர்கள்!
மன்னார்குடி தனியார் பொறியியல் கல்லூரியில் காலில் விழச் சொல்லி ராகிங் செய்த மாணவர் கள் உருட்டுக் கட்டையால் தாக்கிய தில், மாணவர் ஒருவர் கைகளில் எலும்பு முறிவுகளுடன் தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் விளார் சாலை அண்ணா நகர் 17-ம் தெருவைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி. மின்வாரியத்தில் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் ரவிச்சந்திரன் இறந்துவிட்டார். இவர்களின் மகன் ஜெகன்(22).
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஜெகன் டிப்ளமா (டிஇஇஇ) முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளார். திங்கள்கிழமை கல்லூரிக்குச் சென்ற அவரை, வாசலிலேயே வழிமறித்த மாணவர்கள் சிலர், தங்கள் காலில் விழச் சொல்லி ராகிங் செய்தனராம். மறுத்த ஜெகனை உருட்டுக் கட்டைகளால் உடல் முழுக்கத் தாக்கியதில், கைகள் இரண்டிலும் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, ஜெகன் தஞ்சை தெற்கு காவல் நிலைய போலீஸா ரிடம் அளித்த புகாரில், “திங்கள்கிழமை கல்லூரிக்குச் சென்ற என்னை, அதே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சிலர் அழைத்து, தங்களை அண்ணன் என அழைக்கக் கூறினர். நானும் கூறினேன். பின்னர், காலில் விழுந்து வணக்கம் சொல்லச் சொன்னார்கள். நான் முடியாது என்று கூறிவிட்டு, வகுப்புக்குச் சென்றுவிட்டேன். அப்போது, என்னை தகாத வார்த்தைகளால் திட்டினர்.
மாலையில், வகுப்பு முடிந்து வீட்டுக்குச் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த மாணவர்கள் மீண்டும் என்னைக் காலில் விழச் சொன்னபோது, வாக்குவாதம் ஏற்பட்டது. என்னை உருட்டுக் கட்டைகளால் உடல் முழுதும் தாக்கி, கீழே தள்ளி மிதித்தனர். மீண்டும் கல்லூரிக்கு வந்தால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டல் விடுத்தனர். அவர்கள் தாக்கியதில் எனது இரு கைகளிலும் எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன. என்னைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
07-08-2014
காலில் விழும் இந்த கலாசாரம் படிக்கும் இந்த மாணவர்களை எந்த அளவு கொண்டு சென்றுள்ளது என்பதைப் பார்க்கிறோம். இதற்குத்தான் இஸ்லாம் இப்படிப்பட்ட ஒரு கலாச்சாரத்தையே குழி தோண்டி புதைத்தது.
-----------------------------------------------------------------
இந்திய அரசியல், சினிமாத்துறை, கல்விக் கூடங்கள் என்று எங்கு பார்த்தாலும் மரியாதை நிமித்தமாக காலில் விழும் பழக்கம் அனைவரிடத்திலும் குடி கொண்டுள்ளது. ஒருவரை மதிக்கிறோம் என்ற பெயரில் இந்த காரியத்தை நாம் சர்வ சாதாரணமாக செய்து வருகிறோம். அரசியல் வாதிகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். புகழ் கிடைக்கிறது என்பதற்காக இதை அவர்கள் மனதாற ஆதரிக்கிறார்கள். தொண்டனும் கிடைக்கும் பணத்துக்காகவும், ஒரு சில எம்.எல்.ஏ, எம்.பி சீட்டுகளுக்காகவும் காலில் விழுவதைப் பார்க்கிறோம். நம்மைப்போன்ற ஒரு மனிதனிடம் மிகச்சிறப்பு வாய்ந்த தலையை அவன் காலடியில் கொண்டு வைப்பது சுய மரியாதைக்கு இழுக்கு என்று நாம் சிந்திப்பதில்லை.
'நான் ஹீரா என்ற ஊருக்குச் சென்றேன். அங்குள்ள தலைவருக்கு அந்த மக்கள் காலில் விழுந்து சிரம் பணிவதைப் பார்த்தேன். காலில் விழுந்து மரியாதை செய்வதற்கு நம்முடைய நபி மிகப் பொருத்தமானவர்களாயிற்றே என்று எனக்குள் கூறிக் கொண்டேன். முகமது நபி அவர்களிடம் வந்து 'ஹீரா ஊர் மக்கள் தங்கள் தலைவருக்கு காலில் விழுந்து மரியாதை செய்வதைக் கண்டேன். இறைவனின் தூதரே! இதற்கு நீங்கள் தகுதியானவர்கள்' என்றேன். அதற்கு முகமது நபி அவர்கள் 'நான் இறந்த பிறகு எனது சமாதியில் இதே போன்ற வணக்கத்தைச் செலுத்துவாயோ?' என்று கேட்டனர். மாட்டேன் என்று நான் கூறினேன். பின்னர் முகமது நபி அவர்கள் 'மனிதனுக்கு மனிதன் காலில் விழுந்து மரியாதை செய்யும் பழக்கத்தை செய்யாதீர்கள். ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு சிரம் தாழ்த்த அனுமதி இருந்தால் ஒரு மனைவி தனது கணவனுக்கு சிரம் தாழ்த்த சொல்லியிருப்பேன். ஏனெனில் அவர்கள் கணவர்களுக்கு அதிகம் கடன்பட்டிருக்கிறார்கள்.'
-அறிவிப்பவர் கைஸ் பின் சாத், நூல் அபுதாவுத்: 1828.
'படைக்கப்பட்டவற்றிற்க்கு சிரம் தாழ்த்தி வணங்காதீர்கள். படைத்தவனை மாத்திரமே சிரம தாழ்த்தி வணங்க நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம்.'-முகமது நபி, அரபி 45.
ஒருமுறை முகமது நபி அவர்கள் தமது தோழர்களுடன் நடந்து சென்றார்கள். அவர்களின் தலை மீது மட்டும் நிழல்படுவதைக் கண்டார்கள். தலையை உயர்த்திப் பார்த்தபோது ஒரு துணிக் குடையால் அவர்களுக்கு நிழல் தரப்படுவதைக் கண்டார்கள். 'விடுங்கள்' என்று கூறி அந்தத் துணியை வாங்கி மடக்கி வைத்தார்கள். 'நானும் உங்களைப் போன்ற மனிதன் தான்' என்றும் கூறினார்கள்.
ஆதாரம்: தப்ரானி.
தனக்கு யாரும் விசேஷமாக மரியாதை செய்து விடக் கூடாது என்பதிலும், தனது இறப்புக்குப் பின் யாரும் தன்னை கடவுளாக்கி விடக் கூடாது என்பதிலும் முகமது நபி எந்த அளவு கவனமாக இருந்திருக்கிறார்கள் என்பதை நினைத்து ஆச்சரியப்படுகிறோம்.
இறைவனையே சிரம் தாழ்த்தி வணங்குங்கள்.
-குர்ஆன்: 53: 62
--------------------------------------------------------------------
ஜீ டிவி சரிகமபா வில் கமால்கான் என்ற ஒரு பாடகரின் செய்கையைத்தான் இங்கு பார்க்கிறீர்கள். பாடல் முடிந்தவுடன் அபிமானத்தைக் காட்ட வேண்டி 'ஏ.ஆர்.ரஹ்மானின் காலைத் தொட்டு ஆசீர்வாதம் வாங்குகிறேன்' என்கிறார். அதற்கு அனுமதியும் வழங்கப்படுகிறது. தலர் மெஹந்தி ஆசீர்வாதம் பெற அனுமதிக்கிறார். ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் சீட்டை விட்டு எழும்பாமல் கைகளை மட்டும் கொடுத்து விட்டு 'காலில் விழ வேண்டாம்' என்று தடுப்பதைத்தான் நாம் பார்க்கிறோம். பிறவியிலேயே முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த கமால்கான் இஸ்லாத்தின் போதனைகளை மறந்து காலில் விழ செல்கிறார். நமக்கு தெரிந்து இஸ்லாத்தை ஏற்ற ரஹ்மான் இஸ்லாம் தடுத்ததால் காலில் விழுவதை தடுக்கிறார். இவர் சினிமாத் துறையில் இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. இதிலிருந்து இவர் தவிர்ந்து கொள்ள வேண்டும். அதே போல் தர்ஹாக்களுக்கு செல்வதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அவருக்கு நெருக்கமானவர்கள் இந்த செய்தியை அவருக்கு கொண்டு சென்றால் நல்லது. ஒருவரின் பெயரில் இஸ்லாம் இல்லை. இஸ்லாமிய கொள்கைகளை கடைபிடிப்பதில்தான் அவர் இஸ்லாமியனாகப் பார்க்கப்படுகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment