அன்புள்ள கதிரவன்!
// அன்புள்ள சுவனப்பிரியன்,
இந்தியாவில் ஆந்திராவில் கடப்பா மாவட்டத்தில் ஒரு புகழ்பெற்ற தர்கா உள்ளது. அங்கு சென்று தான் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் அவர்கள் மாதம் ஒருமுறை சென்று வழிபடுகிறார்.//
அதே ஏ ஆர் ரஹ்மான் ஐந்து வேளை தொழுகையையும் நேரத்தோடு நிறைவேற்றுகிறார். அதை மறந்து விட்டீர்களே! அவர் தர்ஹா மீது கொண்ட பிரியத்தை குர்ஆனை உண்மையாக விளங்கியவுடன் விட்டு விடுவார் என்றே நினைக்கிறேன். இது பற்றி அவருக்கு பல மடல்களும் எழுதியுள்ளேன்.
//மக்கள் புனிதமாக கருதி வழிபடும் தர்காக்களை இடிக்க உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது ? கொடுஞ்செயலை நியாயப்படுத்தி எழுதும் கேவலத்தை நீங்கள் செய்யலாமா ? 10-க்கும் மேற்பட்ட தர்காக்கள் இடிக்கப்பட்டதை நியாயப் படுத்தி எழுதியுள்ளீர்கள். உங்களை கடவுள் மன்னிக்க மாட்டார்.//
தர்ஹாக்களை இடிக்க எனக்கு குர்ஆனும் நபி மொழிகளும் அனுமதி கொடுத்துள்ளது. ஆனால் அதனை தர்ஹாக்களை வணங்கும் அந்த மக்களே உணர்ந்து அதனை அப்புறப்படுத்தும் வரை நாங்கள் பொறுமை காப்போம். இனி குர்ஆன் வசனங்களை பார்ப்போம். ஒரு மனிதன் மரணித்து விட்டால் அவனுக்கும் உலகத்துக்கும் இடையிலான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிடுகிறது. இறந்த ஒரு மனிதனால் கேட்கவோ, பார்க்கவோ முடியாது! இனி குர்ஆன் வசனங்களை பார்ப்போம்.
குருடனும், பார்வையுள்ளவனும் இருள்களும், ஒளியும் நிழலும், வெப்பமும் சமமாகாது. உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச்செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச்செய்பவராக இல்லை. (திருக்குர் ஆன் 35:19-22)
பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!
குர்ஆன் 72:18
ஹஜ்ரத் அலி அவர்கள் அபுல் ஹய்யாஜ் அல் அஸதியை நோக்கி ‘அறிந்து கொள்! நபிகள் நாயகம் என்னை எதற்காக அனுப்பினார்களோ அதற்காக நானும் உன்னை அனுப்புகின்றேன். பூமியின் மட்டத்தை விட்டும் உயர்ந்திருக்கின்ற எந்த ஒரு கப்ரையும் சமப்படுத்தாமல் விட்டு விடாதே எனப்பணித்து அனுப்பினார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம்:1662)
“அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கப்ருகளை பூசுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் கட்டப்படுவதையும் தடை செய்தார்கள்.”
(அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்-1610)
‘இறைவா! எனது அடக்கத் தலத்தை வணக்கத்தலமாக ஆக்கி விடாதே என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.’
(அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), நூல்: முஸ்னத் அல் ஹுமைதி)
மேற்கண்ட ஆதாரங்கள் அனைத்தும் தர்ஹாக்கள் கட்டுவதையும் அங்கு விழாக்கள் நடத்துவதையும் தடை செய்கின்றன. மக்கள் அறியாமையில் செய்தால் அதனை குர்ஆன், நபி மொழிகளோடு விவாதித்து அவர்களை நேர்வழிப்படுத்துகிறோம். இஸ்லாத்தில் தர்ஹாக்களுக்கு இடமில்லை. இஸ்லாத்தை விட்டு வெளியேறி தனி மதமாக அறிவித்துக் கொண்டு அவர்கள் வழிபட்டால் அதற்கு நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப் போவதில்லை.
எனவே தர்ஹா விஷயமாக இறைவன் என்னை குற்றம் பிடிக்க மாட்டான் என்று உறுதியாக நான் சொல்கிறேன்.
8 comments:
நமது இந்திய செவிலியர்களை மிகவும் கண்ணியமாக நடத்திய போராளிகள் தாங்கள் நோன்பிருந்தாலும் நோன்பிருக்காத அந்த சகோதரிகளுக்கு அந்த இக்கட்டான நிலையிலும் உணவுக்கு ஏற்பாடு செய்தனர். 'நீங்கள் எங்களின் எதிரிகளல்ல. நீங்கள் எங்களின் சகோதரிகள்' என்று கூறி எங்களின் மேல் ஒரு துரும்பு கூட படாமல் கண்ணியமாக இந்திய ஹைகமிஷனிடம் எங்களை ஒப்படைத்தனர். அந்த போராளிகள் மிகவும் நல்லவர்கள்' என்று அனைத்து செவிலியர்களும் பேட்டியாக கொடுத்ததை அநீ வசதியாக மறந்து விட்டார்.
அந்த போராளிகள் மிகவும் நல்ல குணம் படைத்தவர்கள் என்பதாலேயே அனைத்து பெண்களும் கண்ணியமாக திருப்பி அனுப்பப் பட்டனர். இதில் மோடி அரசோ, சுஷ்மாவின் வெளியுறவுத் துறையோ போர் மேகம் சூழ்ந்த அந்த இடத்தில் எதுவும் செய்திருக்க முடியாது. மோடியின் பேச்சையோ, சுஷ்மாவின் பேச்சையோ கேட்கும் நிலையில் அவர்களும் இல்லை என்பதை அநீ அறியாதவர் அல்ல.
எனவேதான் கேரள எதிர்கட்சி தலைவர் அச்சுதானந்தம் 'ஈராக்கில் போரிடும் அவர்களை தீவிரவாதிகள் என்று கூறாதீர்கள்: போராளிகள் என்று கூறுங்கள்' என்று சட்டமன்றத்திலேயே உரக்க கூறினார். இதையும் அநீ வசதியாக மறந்து விட்டார்.
எப்படியோ நமது சகோதரிகள் பாதுகாப்பாக வந்து தங்கள் உறவினர்களை சந்தித்தது பெருத்த மகிழ்ச்சியை நம் அனைவருக்கும் கொடுத்தது.
TNTJ தரப்பினரால் மட்டுமே தர்காவிற்க்கு செல்வதை வழிபாடாகவும் , வலிகேடாகவும் பார்க்க முடியும். தர்க்காவிட்க்கு செல்வது ஜியரத்திட்க்காகத்தான் வணங்குவதற்காக இல்லை என்பது நீங்களும் அறிந்ததே, அறிந்தும் ஏன் மறுக்கிறீர்கள் என்று புரியவில்லை.
(மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச்செய்பவராக இல்லை).
மண்ணறையில் இருப்பவர்களை மட்டும் அல்ல கருவறையில் உள்ளவர்களையும் கூட செவி ஏற்க்க செய்ய தகுதிஉடையவன் இறைவன் ஒருவனே என்பதில் இஸ்லாமியர்களுக்கு சந்தேகம் இல்லை. மண்ணறையில் உள்ளவர்களும் இறைவனின் அருளால் செவி ஏற்கிறார்கள் என்று நம்பும் விதத்தில் தான் நபிகளாரின் பொன்மொழிகள் அமைந்துள்ளது...
(பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்! )
தர்கா வேறு பள்ளிவாசல் வேறு என்பதை சிறார்கள் கூட அறிந்துள்ளார்கள் தோழரே, அப்படி இருக்கையில் எதற்கு தங்களுக்கு இந்த குழப்பம்.
கடைசியாக ஒன்றை மட்டும் சொல்லி முடிக்கிறேன் , தர்காவிற்க்கு செல்வோரில் ஒரு சிலர் அங்கே அறியாமையால் வழிபாடு நடத்தும் நிலையை கண்டால் அதனை தடுத்து நிறுத்துங்கள் அதை மார்க்கம் அறிந்த யாரும் தடுக்க மாட்டார்கள் . மாறாக தர்காவிற்க்கு சல்வதையே ஒரு வழிபாடாக கருதினால் பிழை உங்களிடத்தில் தான் உள்ளது என்பதை உணருங்கள்.
zahir.bukhari
“அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கப்ருகளை பூசுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் கட்டப்படுவதையும் தடை செய்தார்கள்.”
நீங்கள் சொல்லுவது போன்று கபுருகளை தரை மட்டமாக ஆக்கி விட்டால் அங்கே கபூர் இருக்கின்றது என்று எப்படி தெரியும் கொஞ்சம் விளக்கம் தரவும்????
‘இறைவா! எனது அடக்கத் தலத்தை வணக்கத்தலமாக ஆக்கி விடாதே என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.’
தர்காவில் மக்கள் அங்கே அடங்க பட்டவரை தான் வணங்குகின்றார்கள் என்று உங்களுக்கு ஏதும் மறைமுக ஞானம் வந்ததோ, உலகிலே மிக பெரிய தர்கா மதீனாவில் நம் நபி நாதரின் தர்கா உள்ளதே????
//நீங்கள் சொல்லுவது போன்று கபுருகளை தரை மட்டமாக ஆக்கி விட்டால் அங்கே கபூர் இருக்கின்றது என்று எப்படி தெரியும் கொஞ்சம் விளக்கம் தரவும்????//
எங்கள் ஊரில் மிகப் பெரிய அடக்கத்தலம் உள்ளது. வரிசையாக அடக்கம் பண்ணி முடிந்தவுடன் இடம் இல்லை என்றால் புறப்பட்ட இடத்துக்கே திரும்பவும் வந்து குழி தோண்டுவார்கள். 2 , 3 வருடங்கள் ஆனபடியால் அந்த கபுரல் உள்ள உடம்பு மண்ணோடு மண்ணாகி இருக்கும். ஒரு சில எலும்புகள் மண்டை டுகள் கிடைத்தால் பக்கத்தில் சிறு குழி தோண்டி புதைத்து விடுவர். மறுமை நாளில் ஒவ்வொரு அடக்கத் தலத்திலிருந்தும் 70000 மனிதர்கள் எழுப்பபடபடுவார்கள் என்று நபி மொழி கூறுகிறது. ஒரே கப்ரில் பல உடல்கள் அடக்கப்பட்டாலே இது சாத்தியம். எனவே ஒரு முறை அடக்கம் பண்ணினால் அது காலத்துக்கும் அடையாளமாக இருக்க வேண்டும் என்பது இஸ்லாமிய நடைமுறை அல்ல. அடையாளம் இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. நமது உறவினர் அடக்கம் செய்த இடத்தை ஞாபகம் வைத்துக் கொண்டு அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்டால் அதனை இறைவன் ஏற்றுக் கொள்வான்.
//தர்ஹாக்களை இடிக்க எனக்கு குர்ஆனும் நபி மொழிகளும் அனுமதி கொடுத்துள்ளது. //
நாங்கள் அனுமதி கொடுக்கவில்லை!
//ஆனால் அதனை தர்ஹாக்களை வணங்கும் அந்த மக்களே உணர்ந்து அதனை அப்புறப்படுத்தும் வரை நாங்கள் பொறுமை காப்போம்.//
இது பொறுமை இல்லை, உங்களுடைய இயலாமை.
//அந்த போராளிகள் மிகவும் நல்ல குணம் படைத்தவர்கள் என்பதாலேயே அனைத்து பெண்களும் கண்ணியமாக திருப்பி அனுப்பப் பட்டனர்.//
இது சுவனப்பிரியன் வழங்கும் இன்னொரு காமெடி கலாட்டா. ஐ எஸ் ஐ எஸ் பயங்கரவாதிகள் நல்லவர்களாம். முகம்மதுவை நல்லவர் என்று உளறிக்கொண்டு இருக்கும் சுவனப்பிரியன் என்ற கயவர் இப்படிதான் கொடூர நகைச்சுவை செய்வார். அதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
//எனவேதான் கேரள எதிர்கட்சி தலைவர் அச்சுதானந்தம் 'ஈராக்கில் போரிடும் அவர்களை தீவிரவாதிகள் என்று கூறாதீர்கள்: போராளிகள் என்று கூறுங்கள்' என்று சட்டமன்றத்திலேயே உரக்க கூறினார். //
அச்சுதானந்தம் சொல்லிவிட்டால் பயங்கரவாதிகள் நல்லவர்களாகிவிடுவார்களா? கம்யூனிஸ்டுகள் பல வகைகளில் முஸ்லிம்களை போன்றவர்களே.
Post a Comment