'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Sunday, August 17, 2014
'அஞ்சான்' படத்தில் பணத்தை தொலைத்தவர்களுக்காக..... :-)
48 வயதேயான ஹமூத் இன்று நடக்க முடியாமல், தனது அத்தியாவசியத் தேவைகளைக் கூட செய்து கொள்ள முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டுள்ளார். இவரது வீட்டிலிருந்து கடந்த மூன்று வருடங்களாக உடல் பருமனால் வெளியேற முடியாமல் உள்ளார். அந்த அளவு உடல் பெருத்து விட்டது. இவரை பரிசோதிக்க வரும் ஒரு சில டாக்டர்களும் இவரது நோயை குணப்படுத்த முடியாது என்று கை விரித்து விட்டனர்.
"கடந்த மூன்று வருடங்களாக வீட்டை விட்டு வெளியேறாமல் சிரமப்படுகிறேன். எனது எடை 300 கிலோவை நெருங்கி விட்டது. எனக்கு குழந்தைகளோ மனைவியோ கிடையாது. ரியாத்தின் கிழக்குப் பகுதியில் வாடகை வீட்டில் தற்போது தங்கியுள்ளேன். வருடத்திற்கு 20000 ரியால் வாடகை கொடுக்க வேண்டும். சவுதி அரசு எனக்கு மாதம் 1700 ரியால் மான்யமாக தருகிறது. இதை வைத்து எனது காலத்தை மிகக் கஷ்டத்தோடு ஓட்டி வருகிறேன்" என்று வருத்தத்தோடு தனது சிரமங்களை பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவ மனையின் மருத்துவ குழு வந்து இவரை பார்வையிட்டது. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், தைராய்டு பிரச்னைகள் என்று பல நோய்கள் இவரை தாக்கியுள்ளது. இதோடு சேர்ந்து யானைக்கால் வியாதியும் சேர்ந்து கொண்டுள்ளது. எனவே மருத்துவ குழு இவருக்கு சிகிச்சை அளித்து காப்பாற்ற முடியாது என்று கை விரித்து விட்டது. இன்னும் சில மாதங்களில் இறந்து விடுவார் என்றும் மருத்துவக் குழுவினர் சொல்லியுள்ளார்களாம்.
'சமூக அமச்சகத்தை தொடர்பு கொண்டு எனக்கு ஒரு உதவியாளரை தரும்படி கேட்டுக் கொண்டேன். வீல் சேரில் என்னை வைத்து வெளியில் அழைத்துச் செல்ல இது உதவியாக இருக்கும். ஆனால் என்னுடைய இந்த கோரிக்கைக்கு அரசிடமிருந்து எந்தவிதமான பதிலும் இதுவரை வரவில்லை. சவுதியிலோ அல்லது வெளி நாட்டிலோ எனக்கு உரிய சிகிச்சை அளிக்க அரசு முன் வர வேண்டும்.' என்று சோகத்தோடு பத்திரிக்கையாளரிடம் தனது வருத்தத்தை பகிர்ந்து கொண்டார்.
அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டினர் தற்போது அவருக்கு சில உதவிகளை செய்து வருகின்றனர். இருந்தும் உறவினர்கள் யாரும் இல்லாததால் பல சிரமங்களை அனுபவித்துக் கொண்டள்ளார்.
தகவல் உதவி
சவுதி கெஜட்
16-08-2014
நான் பல சவுதிகளின் திருமண விருந்துகளில் கலந்து கொண்டுள்ளேன். நாம் மூன்று பேர் சாப்பிடும் சாப்பாட்டை அவர்கள் ஒருவராக அமர்ந்து வெளுத்து வாங்குவதை ஆச்சரியத்தோடு பார்ப்பேன். ஆட்டின் கொழுப்பை மட்டுமே சாப்பிடுபவர்களும் உள்ளனர். இவ்வளவு சாப்பிடும் இவர்களுக்கு அதனை கரைக்கும் அளவுக்கு உடல் உழைப்பு கிடையாது. இதுதான் பிரச்னையே. அதிகமாக செல்வந்தர்களாக இருப்பதால் உடல் உழைப்பு இல்லாததனால் உடல் பெருத்து விடுகிறது.
நபித் தோழர் ஜாபிர்அறிவிக்கின்றார்கள்:
''ஒருவரின் உணவு இரண்டு நபர்களுக்குப் போதும். இரண்டு பேர் உணவு நான்கு நபர்களுக்குப் போதும். நான்கு நபர் உணவு, எட்டு நபர்களுக்குப் போதுமாகும்'' என நபி(ஸல்) கூறினார்கள்.
நூல்: முஸ்லிம்
மற்றொரு அறிவிப்பில் 'வயிற்றை மூன்று பகுதிகளாக பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு பகுதி உணவு: ஒரு பகுதி தண்ணீர்: ஒரு பகுதி காற்று' என்றும் நபி அவர்கள் கூறியுள்ளனர்.
நபி அவர்கள் சொன்னது மிகச் சிறந்த மருத்துவம். நபி காட்டித் தந்த வழிமுறையை கடைபிடிக்காததனால் இன்று இந்த இளைஞர் சிரமப்படுவதைப் பார்க்கிறோம். மேலும் இவர் இருப்பது வறுமையான ஆப்ரிக்காவில் அல்ல. செல்வம் பூத்துக் குலுங்கும் சவுதி நாட்டில். கண்டிப்பாக இதற்கு மருத்துவம் இருக்கிறது. நான்கு சவுதி செல்வந்தர்கள் சேர்ந்தாலே இந்த இளைஞனின் சிரமத்தைப் போக்கி விடலாம். சவுதி அரசு மனது வைத்தாலும் சில மாதங்களிலேயே இவரது சிரமத்துக்கு விடிவு கிட்டி விடும்.
இவரது சிரமம் நீங்க நாமும் பிரார்த்திப்போம். இதனை படிக்கும் நாமும் உணவு விஷயத்தில் சர்வ ஜாக்கிரதையாக இருப்போம். 'உடுத்திக் கெட்டான் பாப்பான்: திண்டு கெட்டான் துலுக்கன்' என்ற பழமொழியை நம் அளவிலாவது மாற்ற முயற்சிப்போம், :-)
400, 500 என்று பணத்தை அழுது அஞ்சான் படம் பார்த்தவர்கள் அது ஊத்திக் கொண்டதால் தமிழகத்திலும் உலகமெங்கிலும் ஒரு வித வெறியில் அலைந்து கொண்டுள்ளார்களாம். :-) சமூகத்தைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கும் அனைத்துப் படங்களும் ஊத்திக் கொள்ளட்டும். அடுத்த தலைமுறையாவது சினிமா சம்பந்தமில்லாத ஒரு முதல்வரை தமிழகம் காணட்டும். படம் பார்த்து பணத்தை இழந்த அனைவரும் 'கொழுப்பு நோய் இறப்பில் கொண்டு விடும்' என்ற இந்த அருமையான டாக்குமெண்டரி படத்தை இலவசமாகப் பார்த்து மனதை தேற்றிக் கொள்வார்களாக!
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
ஒரே சாப்பாட்டில் எல்லோரும் கையை போட்டு சாப்பிடும் அரபிகளின் செயலை பார்க்க எனக்கு குமட்டிக்கொண்டு வருகிறது!
Post a Comment