கல்லினைச் செம்பினைக் கட்டையைக் கும்பிடல் புல்லறிவாகுமேடி குதம்பாய் புல்லறிவாகுமேடி - குதம்பைச் சித்தர்
ஓசையற்ற கல்லை நீர் உடைத்தது உருக்கள் செய்கிறீர்
பூசை பெற்ற கல்லிலே பூவும் நீருஞ் சாற்றுறீர்
வாசலில் பதித்த கல் மழுங்கவே மிதிக்கிறீர்
ஈசனுக்கு உகந்த கல் இரண்டு கல்லுமல்லவே - சிவவாக்கியர்
அண்டாண்டங் கடந்து நின்ற சோதி தானும்
அவனிதன்னில் உடைந்த கல்லில் அமருமோ? - அகஸ்தியர் ஞானம்
நட்டு வைத்த தேவரும் நடாது வைத்த தேவரும்
சுட்டு வைத்த தேவரும் சுடாது வைத்த தேவரும்
இட்டு வைத்த இடத்தை விட்டு எழுந்திராத தேவரை
வட்டமிட்டு மாந்தர்கள் வணங்குமாறு எங்கனே! - சிவவாக்கியர்
உளி இட்ட கல்லும் உருப்பிடித்த செஞ்சாந்தும்
புளிஇட்ட செம்பும் பொருளாவ தெக்காலம் - பத்திரகிரியார் புலம்பல்
கொல்லனும் குசவனும் கல் தச்சனும் கன்னானும்
கொட்டிய சம்மட்டியாலே தட்டிய உருவங்களை வல்வினை அகற்றுமென்று சொல்லி உங்கள் வாயிலே
மண்களை வாரிப் போட்டுக் கொண்டு கண்ணை மூடிக் கொள்ளாதீர்! - வேதாந்த சாத்திரம்
எத்தனைதான் கல்லுகளை பூசித்தாலும்
ஈனர்களே உங்களுக்கு மோட்சமுண்டோ
பித்தர்களே கல்லுகளை விலைக்கு வாங்கி
பிரானென்றே சிலையினிலே முட்டுகின்றீர் - சங்கராச்சாரி
சற்குருவை அறியாமல் உலகிலேதான்
சண்டாளர் கல்லுகளைத் தெய்வமென்று
பொய்க் குருக்கள் சொன்ன புத்தி தன்னைக் கேட்டு
பூசை செய்து கல்லுகளைப் போற்றி செய்வார் - ஞானோபதேசம்
நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்பம் சாற்றியே
சுற்றி வந்து மொண மொணென்று சொல்லும் மந்திர மேதடா
நட்ட கல்லும் பேசுமோ..... ....... - சிவவாக்கியர்
மாறுபட்ட மணி குலுக்கி மலர் இறைத்து வீணிலே
ஊறுபட்ட கல்லிலே உருக்கள் செய்யும் மூடரே - சிவவாக்கியர்
சாவதானத் தத்துவச் சடங்கு செய்யு மூடர்காள்
தேவர் கல்லும் ஆவரோ சிரிப்பதன்றி என் சொல்வேன் - சிவவாக்கியர்
செங்கல்லும் கருங்கல்லும் சிவந்தசாதி லிங்கமுஞ்
செமனையுந் துருவையுந் தெய்வமென்று கூறுறீர் – சிவவாக்கியர்
வட்ட மதி இரவிதனைப் பூசிப் போரும்
மண்ணை இலிங்கமாக வைத்துப் பூசிப்போரும்
சுட்ட உருமரச் சிலைகள் பூசிப் போரும்
துய்ய செப்பு கல்லுருவைப் பூசிப்போரும்
திட்டமுடன் எட்டெழுத்துப் பொருளென்போரும்
சிறந்த எழுத்தஞ்சுமே பொருளென்போரும்
விட்ட இடம் தன்னை அறியார் இவரெல்லரும்
விட்ணு வென்றும் சிவனென்றும் விளம்புவாரே
- சங்கராச்சாரி உடலறி விளக்கம்
கும்பிடு கோவில் குளம் மடம் சேத்திரம்
கோபுரம் தேர் திருவாசல்
கோலமாய் முகிழ்த்து சிலை சித்திர படஞ்செய்
கொத்துவேலைகளுக்குப் பார்த்தால்,
சம்பரமாய் ஆண் பெண் குறிகளைக் காட்டு சாயலு மோகலீலைகளின்
சாத்திர மன்மதன் நூல்
கொக்குவத்தினிற்
சாற்றுகின் றதனினு மென்மடங்காய்
விம்பவா சனஞ்சிங்காரித்து ரதத்தின்மீது
சாமிகள் வைத்து யதனில்
தாசிவேசிகளையேற்றி ராசதெரு வீதியில்
தட்சணம் புரியும் செயலால்
கெம்பித ரெனும்பிற வஞ்சரே மதிகள்
கெட்ட அந்தகர்களே இதெல்லாம்
கியானமோ அல்லதக் கியானமோ உங்கள் கிறுக்கைவிட் டிதற்குரை பகருவீர்.- சங்கராச்சாரி உடலறி விளக்கம்
கல்லினுஞ் செம்பிலுமோ இருப்பான் எங்கள் கண்ணுதலே - பட்டினத்தார்
உளியிட்ட கல்லையு மொப்பிட்ட சாந்தையும் ஊற்றையறப்
புளியிட்ட செப்பையும் போற்றுகிலேன் உயர் பொன்னெனவே - பட்டினத்தார்
ஒருவன் ஓர் இரும்புகொண்டு உருத்தரித்து வைத்ததில் பெரிய பாவை பேசுமோ அறிவிலாத பேதைகாள் - சிவவாக்கியர்
பண்ணி வைத்த தேவரைப் பரப்பி வைத்திருந்து நீர்
எண்ணி எண்ணி யென்னநின்றுரைக்கிறீர்கள் பேதைகாள் - சிவவாக்கியர்
சிவ வாக்கியர் சொன்னால் 'நீங்க சொல்றது சரிதான்' என்று சொல்லும் சில பேர் அதனையே முஸ்லிம்களாகிய நாங்கள் சொன்னால் 'தீவிரவாதி... குண்டு வைக்கிறே' என்று சொல்லி இருக்கும் இடத்தை காலி பண்ணும் பலரை நினைத்து ஆச்சரியப்படுகிறேன். :-(
3 comments:
என்னவோ நீங்கள் சொல்லித்தான் இது எங்களுக்கு தெரிவதாக நினைப்போ ? எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாதது முகமது இறைதூதர் என்பதுதான். ஒன்று செய்யுங்கள், இஸ்லாத்தை விட்டு வெளியேறி, சித்தர் பாடல்களை காண்பித்து , இந்திய ஓரிறைக் கொள்கையை பரப்புங்கள், மதவெறி இல்லாமல். மதவெறிக் கொள்கைகள் இந்துக்களிடம் செல்லுபடியாகாது.
பூமிக்குள் லிங்கம் என்று புரளி செய்து கட்டப்பட்ட கோயில் இடிக்கப்பட்டது!
32 இந்து அமைப்பினர் கைது!
போத்தனூர், ஆக.16- பூமிக்குள் லிங்கம் என்று புதுக் கரடி விட்டு, அங்கு சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட கோயில் நகராட்சிப் பணியாளர் களால் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டது.
கோவை அருகே லிங்கம் தோன்றியதாக புரளி செய்த இடத்தில் கட்டப்பட்ட கோவில் இடிக்கப்பட்டது. இது தொடர்பாக 32 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவையை அடுத்த கோவைப்புதூர் என்.பிளாக் பாரதிநகரில் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கோவிலுக்கு எதிர்புறம் உள்ள மாநகராட்சி இடத்தில பூமிக்கடியில் லிங்கம் உள்ளதாக ஒரு பெண் அருள்வாக்கு என்று புரூடா விட்டார்.
இந்த நிலையில் நேற்று காலை பூமிக்கடியிலுள்ள லிங்கம் வெளியே வருவ தாகக் கிளப்பி விட்டனர். இதைத் தொடர்ந்து பொது மக்கள் அங்கு கூடி னார்கள்.
அந்த இடத்தை தோண்டியபோது லிங்கம் இருந்தது.
ஆச்சரியத்துடனும் பார்த்த பொதுமக்கள் லிங்கத்துக்கு அதே இடத்தில் கோவில் அமைக்க வேண்டும் என்று கூறினார்கள். பல்வேறு இந்து அமைப்பினரும் இதே கருத்தை வலியுறுத்தினார்கள்.
ஆனால் மற்றொரு தரப்பினர் இது மாநக ராட்சிக்கு சொந்தமான இடம். இங்கு கோவில் எதுவும் கட்டக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித் தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தடையை மீறி இந்து அமைப்பினரும் பொது மக்களும் சேர்ந்து பீடம் அமைத்து லிங்கத்தை வைத்து பூஜை செய்து வழிபட தொடங்கி னார்கள்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் உதவி ஆணையர்கள் ராமச்சந் திரன், மனோகரன், ஆய் வாளர்கள் ஜோஸ், சிவக்குமார், சக்திவேல் மற்றும் காவலர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அனுமதி யில்லாமல் வழிபாட்டுத் தலங்கள் அமைக்க கூடாது. மீறி அமைக்கும்பட்சத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே கட்டப்பட்ட கோவிலை அகற்ற வேண்டும் என்று கூறினார்கள்.
இதனால் காவல் துறையினருக்கும் இந்து அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத் தில் மாநகராட்சி ஊழி யர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.
அதிகாரிகளின் உத்தரவின் பேரில் ஊழியர்கள் கோவிலை இடித்து அப்புறப்படுத்தினார்கள். தடையை மீறி கோவில் அமைத்த இந்து அமைப்பினர் 32 பேரை காவலர்கள் கைது செய்து கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். இதை அறிந்த இந்து அமைப்பினர் சுமார் 100 பேர் ராமநாதபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கைது செய்தவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
உடும்பு வேண்டாம் கை வந்தால் போதும் என்கிற நிலைக்கு ஆளாகி விட்டனர் இந்து முன்னணியினர்.
குறிப்பு: சென்னை தியாகராயர் நகரில் இப்படித்தான் திடீர் பிள்ளையார் என்று புரளி கிளப்பியதுண்டு. பூமிக் கடியில் அப்பகுதியைச் சேர்ந்த கே.எம். சுப்பிர மணியம் என்ற பார்ப் பனர் யோசனைப்படி போலீஸ் கான்ஸ்டபுள் செல்வராசு என்பவர் பூமியில் விநாயகர் சிலை யைப் புதைத்த பித்தலாட்டம் கண்டுபிடிக்கப்பட்டதை இந்த இடத்தில் நினைவு கூர்கிறோம்.
Read more: http://www.viduthalai.in/headline/85941-2014-08-16-09-56-21.html#ixzz3AcGvYJUw
சுவனப்பிரியன்,
உம்மைவிட ஓரிறை பற்றி ஹிந்துக்களுக்கு நன்றாகவே தெரியும். அந்த ஒரே கடவுளை எப்படி வணங்குவது பற்றித்தான் ஆப்ரஹாமிய மதத்தவர்களுக்கும் ஹிந்துக்களுக்கும் கருத்து வேறுபாடு இருக்கிறது. இருக்கிற ஒரே கடவுளை உருவமில்லாமலும் எந்த உருவிலும் வணங்கலாம் என்பது ஹிந்து கொள்கை. அப்படி அல்ல, கடவுளை உருவமில்லாமல்தான் வணங்க வேண்டும் என்று அடம் பிடிப்பது ஆப்ரஹாமிய மதங்களான யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய கொள்கை. இஸ்லாமிய மத பைத்தியம் உங்களை பிடித்து ஆட்டுகிறது. சும்மாவேனும், ஓரிறை, ஓரிறை என்று பித்து பிடித்து சத்தம் போட்டுக்கொண்டே இருக்கிற உம்மை பார்த்தால் பரிதாபம்தான் ஏற்படுகிறது. ஐயோ பாவம்!
வழிபாடு என்பதே தேவை இல்லை, கடவுள் வழிபாட்டை எதிர்பார்ப்பதே இல்லை, உருவ வழிபாடோ அரூப வழிபாடோ மனிதர்கள் எது செய்தாலும் அதை கடவுள் பொருட்படுத்துவதே இல்லை, கடவுள் எவரையும் எந்த தவறுக்காகவும் தண்டிப்பதும் இல்லை; எந்த நற்செயலுக்காகவும் எவருக்கும் வெகுமதி அளிப்பதும் இல்லை, மாறாக அது எல்லோர்மீதும் எப்பொழுதும் நிபந்தனையற்ற அன்பு செலுத்துகிறது என்று நான் ஏற்கெனெவே தெளிவுபடுத்தி இருக்கிறேன். இது 100% உண்மை.
Post a Comment