Followers

Monday, August 25, 2014

மது கொள்கையில் கேரளாவை பின்பற்றுமா தமிழகம்!



"நபியே! மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு அவற்றில் சில பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது.”

(அல்குர்ஆன் 2: 219)

மது அருந்துதல் ஷைத்தானின் அருவக்கத்தக்க செயலாகும்: -

நம்பிக்கை கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?

(அல்-குர்ஆன் 5:90-91)

மது அருந்துபவர் மற்றும் மதுவுடன் தொடர்புடையவர்கள் அல்லாஹ் மற்றும் நபி அவர்களால் சபிக்கப்பட்டவராவர்: -

மது அருந்துபவர், அதனை அருந்தச் செய்பவர், வாங்குபவர், விற்பவர், தயாரிப்பாளர், சுமப்பவர், இதன் மூலம் கிடைத்த வருவாயை சாப்பிடுபவர்கள் அனைவரையும் நபி அவர்கள் சபித்துள்ளார்கள்.

(ஆதாரங்கள் : அபூதாவுத், திர்மிதி, இப்னுமாஜா)

2 comments:

UNMAIKAL said...

மதுபான புரட்சி! கல்லா கட்டும் அரசு. தள்ளாடும் மக்கள்.

'பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் உடல்நலனுக்கும் அவர்களின் சமூக பொருளாதார நல்வாழ்வுக்கும் ஊறுவிளைவிக்கும் கள்ளச்சாராய பிடியில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதே அரசின் முக்கியக் கொள்கையாகும்.

கள்ள மதுபானம் அருந்தி மோசமாக பாதிக்கப்படும் மக்களின் சமூக பொருளாதார நலனை(!) மேம்படுத்தும் உறுதியான நோக்கத்தை செயல்படுத்துவதற்காக சீரிய கொள்கையை (டாஸ்மாக்) செயல்படுத்தி வருகிறது.

இதனால் சமூக விரோதிகளிடம் சட்டவிரோதமாகப் பணம் சேருவதை கட்டுப்படுத்துவதிலும் அரசு கருவூலத்துக்கு வருவாய் சென்றடைவதையும் உறுதி செய்கிறது'' - மதுவை விற்பதற்காக இப்படியொரு கேலிக்கூத்தை எந்த அரசாவது சொல்லத் துணியுமா?

சட்டமன்றத்திலேயே இதைப் பதிவுசெய்யும் அளவுக்கு துணிச்சல் படைத்த அரசாக விளங்குகிறது ஜெயலலிதா அரசு.


சரக்கு விற்று ஆண்டுதோறும் 22 ஆயிரம் கோடி ரூபாய் 'கல்லா’ கட்டும் அரசுக்கு வருவாயில் தள்ளாட்டம் போல. அதனால், கூடுதலாக 2,500 கோடியை கல்லாவுக்கு கொண்டுவர மதுபானங்களின் விலையை 120 வரை உயர்த்தியிருக்கிறது.


'மது விற்பனை’ துறை என்பதை மாற்றிக்கொள்ள முடியாத ஆட்சியாளர்கள், அரசுக்கு சில்லறையையும் மக்களுக்கு கல்லறையையும் கட்டி வருகிறார்கள்.

'எலைட் ஷாப்’, பீர் மட்டும் விற்கும் மதுக்கடைகள் என மது விற்பனையில் நவீனத்தை புகுத்திக்கொண்டிருக்கிறது.

தனியாரிடம் இருந்து மதுபான விற்பனையை அரசே விற்கும் முடிவை எடுத்தது, முந்தைய அ.தி.மு.க ஆட்சியில்தான்!

தமிழகத்தில் 11 மதுபான உற்பத்தி நிறுவனங்களும், ஏழு பீர் நிறுவனங்களும் ஒரு ஒயின் தயாரிக்கும் நிறுவனமும் செயல்பட்டு வருகின்றன.

எம்.ஜி.ஆருக்குப் பிறகு கருணாநிதி ஆட்சியில் ஆறு நிறுவனங்களுக்கும் ஜெயலலிதா ஆட்சியில் ஏழு நிறுவனங்களுக்கும் உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது.

மதுபான விற்பனையில் ஜெயலலிதா அரசு சிவப்புக் கம்பளம் விரித்திருக்கிறது. 2011-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு நான்கு நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியிருப்பதே இதற்குச் சான்று.


முந்தைய தி.மு.க ஆட்சியின்போது ஆண்டுக்கு சராசரியாக 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் அதிகரித்து வந்தது. இப்போதைய அ.தி.மு.க ஆட்சியில் ஆண்டுக்கு 3 ஆயிரத்து 500 கோடிக்கு மேல் வருவாய் அதிகரித்து வருவதை கணக்கு போட்டாலே மதுபான விற்பனைக்கு அரசு காட்டும் மும்முரம் புரியும்.

'மதுவால் வருவாய் இழப்பு நடந்துவிடக் கூடாது’ என்பதற்காக தமிழகத்தில் 45 மதுவிலக்குச் சோதனைச் சாவடிகளை அமைத்திருக்கிறார்கள். அத்துடன் போலி மதுபானம் தொடர்பான தகவல்களை மக்கள் தெரிவிப்பதற்காக 10581 என்ற கட்டணம் இல்லாத தொலைபேசி சேவையை நடத்தி வருகிறது.

வருவாயைப் பெருக்கும் நோக்குடன் கொண்டுவரப்பட்ட இந்த இலவச கட்டுப்பாட்டு மையமும் அ.தி.மு.க ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது.

'அரசு எடுத்துவரும் நடவடிக்கையால் 2011 முதல் கள்ளச்சாராய இறப்புகள் இல்லை’ என பெருமை பேசுகிறது தமிழக அரசு.

டாஸ்மாக்கில் குடித்துவிட்டு குடிநோயாளிகள் எண்ணிக்கை பெருகிக்கொண்டிருப்பதையும், ஆல்கஹால் இறப்புகளையும் அரசு ஏனோ கணக்கு காட்ட மறுக்கிறது.

சாராயம் அருந்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதற்காக அரசு பெருந்தன்மையாக ஒரு கோடி(!)யை ஒதுக்கியிருக்கிறது.

ஆயிரம் கோடிகளில் கரன்ஸி புழங்கும் டாஸ்மாக்கில், ஒரு கோடியை தூக்கி கொடுத்துவிட்டு அதற்கும் தம்பட்டம் போட்டுக்கொள்ளும் அரசை என்ன சொல்ல?

'தமிழகத்தில் மதுவால் ஆண்டுதோறும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் சுடுகாட்டுக்கு போய்க்கொண்டிருக்கிறார்கள்.

குடிப்பழக்கத்தால் ஏற்படும் சமூக, மருத்துவக் கேடுகளை சரிசெய்ய 40 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக செலவாகிறது’ என சுகாதார ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மதுவினால்தான் சாலை விபத்துகள், பாலியல் வன்கொடுமைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன என புள்ளிவிவரங்கள் சொல்லப்பட்டாலும், 'தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது’ என பல்லவி பாடுகிறது அரசு.

அரசியல் பின்புலத்துடன் இயங்கும் மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆட்சியாளர்களின் கரிசனப் பார்வை எப்போதும் உண்டு. அதில் இரண்டு திராவிட கட்சிகளும் சளைத்தவை இல்லை. எலைட் டிஸ்டில்லரீஸ், எஸ்.என்.ஜெ டிஸ்டில்லரீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் தி.மு.க ஆட்சியில் வளம் கொழித்தன.

இப்போது மிடாஸுக்கு சுக்கிர தசை.
மக்களைப் படிக்க வைக்க வேண்டிய அரசு குடிக்க வைத்துக் கொண்டிருக்கிறது!
- எம்.பரக்கத் அலி,

நன்றி: விகடன்.காம்

UNMAIKAL said...

பூரண மதுவிலக்கு கோரிக்கைக்கு எதிராக வைக்கப் படும் சொத்தைக் காரணங்கள்.

பூரணமதுவிலக்கு பற்றி ஒரு தொலைக்காட்சியில் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

அதில் ஒருவர் பேசும்போது பூரணமதுவிலக்கை தனிப்பட்ட முறையில் ஆதரிக்கிறேன் என்றும் ஆனால் பூரண மதுவிலக்கு கொண்டுவரும்போது மூன்று முக்கிய சிக்கல்கள் இருக்கின்றன, அவற்றை எப்படி எதிர்கொள்வது என்று கூறினார்.

சிக்கல் ஒன்று :
பக்கத்து மாநிலங்களில் மது விற்பனை அமோகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது தமிழ்நாட்டில் மட்டும் பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால் தமிழ்நாட்டில் வசிக்கும் அனைவரும் பக்கத்து மாநிங்கள் நோக்கி சாரைசாரையாக படையெடுப்பார்கள்.


>> எனக்கு புரியயே இல்லை. எல்லையோரங்களில் இருப்பவர்கள் வேண்டுமானால் அப்படி செல்லலாம். அப்படியே சென்றாலும் எவ்வளவு நாள் இப்படி மாநிலம் விட்டு மாநிலம் சென்று குடித்துக் கொண்டிருப்பார்கள். வீதிக்கு வீதி டீககடைகள் போல திறந்து வைத்திருப்பதால் தான் குடிக்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக கொண்டே இருக்கிறது.

பணி முடிந்து திரும்புபவர் குடிக்கக் கூடாது என்று வைராக்கியத்தோடு முதல் கடையை கடந்து அடுத்து இரண்டாவதாக இருக்கும் கடையை கடந்து வந்தாலும் அடுத்து ஒரு கடையை கடக்கும்போது அவரது வைராக்கியம் தளர்ந்து விடுவதாக சொல்கிறார்கள்.

குடிக்கு அடிமையாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் டீக்கடைகள் போல மதுக்கடைகள் பெருவிட்டதுதான் முக்கிய காரணம்.

இப்படிப்பட்ட நிலையில் மாநிலம் விட்டு மாநிலம் செல்வார்கள் என்று சொல்வது சொத்தைக்காரணம்தான்.

சிக்கல் இரண்டு : பூரண மதுவிலக்கை கொண்டு வந்தால் தமிழகத்தல் கள்ளச் சாராயம் பெருகிவிடும். உயிரிழப்புகள் அதிகமாகிவிடும்.

>>> முன்பு சாராயம் குடிப்பவர்கள் யாருக்கும் தெரியாமல் ஒளிந்தும் மறைந்தும் அருந்துவார்கள். இன்று மது அருந்துவதே ஒரு அந்தஸ்து என்று பார்க்கும் அளவுக்கு நிலை மாறி விட்டது.

கள்ளச்சாராயம் விற்பவர்கள் எங்காவது ஒளிந்தும் மறைந்தும் திருட்டுத்தனமாகவே தங்கள் விற்பனையை நடத்துவார்கள். இதை அருந்துபவர்களும் திருட்டுத்தனமாக அருந்தமுடியும். அப்படி இருக்கும்போது கள்ளச்சாராயம் அருந்துபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகத்தான் இருக்கும்.

இதையும் தடுக்கவேண்டியதுதான் தமிழக அரசின் காவல்துறையின் வேலை, இதைத்தடுப்பது கடினமான வேலை என்றால் பிறகு எதைத்தான் இந்த அரசும் காவல்துறையும் செய்யப் போகிறார்களாம்? இதை தடுக்க முடியாது என்றால் பிறகு எதற்காக இவர்கள இருக்கிறார்கள், திருட்டை தடுக்கமுடியவில்லை என்பதற்காக அரசாங்கமே திருட ஆரம்பித்து விடுவதா?

இன்று மது அருந்தி சாலை விபத்து முதல் மதுவினால் பாதிப்புக்குள்ளாகி மரணிப்பவர்களை எண்ணிக்கையை கணக்கிட்டால் கள்ளச்சாராயத்தால் மரணிப்பவர்களின் விகிதாதாச்சாரத்தை விட குறைவாகவே இருக்கும்.


சிக்கல் மூன்று : ஒரே நாளில் பூரண மதுவிலக்கை கொண்டுவந்தால் இதுவரை மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் நிலை மிகுந்த கவலைக்குரியதாகிவிடும். முழுக்குடிகாரர்களாக ஆக்கப்பட்ட ஒரு சமூகம் எப்படி திடீரென மாறமுடியும்.

>>> பூரண மதுவிலக்கு கோரிக்கைக்கு எதிராக இத்தனை காரணங்களை கண்டுபிடிப்பவர்கள் இந்த மது அடிமைகளை மீட்பதற்கு உரிய வழிமுறைகளை கண்டுபிடித்து சொல்லியிருக்க வேண்டாமா?

நடுத்தர, ஏழைக் குடும்பத்தை சேர்ந்த ஒரு மனிதர் தனது வருமானத்தில் பெரும்பகுதியை மதுவின் மூலம் இழக்கிறார்.

அதிகரித்து வரும் விலைவாசி உயர்வின் மூலம் திண்டாடி வரும் ஒரு குடும்பத்தில் தனது வருமானத்தை இப்படி மதுப்பழகத்தின் மூலம் இழப்பதின் முலம் அந்தக் குடும்பமே வறுமையில் வாடுகிறது.

முதல்நாள் இரவு மது அருந்தும் குடிநோயாளி மாறுநாள் காலையில் தலைவலி போன்ற விளைவுகளினால் காலையிலும் மது அருந்தினால்தான் இயல்பாக இருக்கமுடியும் என்கிறார்.

பின் முழுமையாக மதுவுக்கு தன்னை இழக்கிறார். பெரும்பான்மை குடும்பங்கள் இப்படித்தான் சீரழிந்து வறுமையில் வாடிக்கொண்டிருக்கின்றன. மதுவுக்கு அடியானவர்களில் உத்திரப்பிரதேசத்திற்கு அடுத்த இடத்தில் இந்தியாவில் இரண்டாவது இடத்தை பெற்றிருக்கும் பாக்கியம் நமது தமிழ்நாட்டிற்குதான் கிடைத்துள்ளது.

இதிலிருந்து மக்களை மீட்க ஒரே நாளில் மதுவிலக்கை கொண்டு வராவிட்டாலும் அரசு நினைத்தால் படிப்படியாக இதை நடைமுறைக்கு கொண்டுவரலாம். வருமானத்தை மேலும் மேலும் எப்படி பெருக்கலாம் என்பதை பற்றி சிந்திக்காமல் சிறிது சிறிதாக நேரத்தை குறைக்கலாம்,

பார்களை முழுவதுமாக அடைக்கலாம். 22 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு மது வழங்குவதை தடை செய்யலாம். படிப்படியாக பூரணமதுவிலக்கு நோக்கி பயணிக்கலாம்.

எதற்குமே எதிர்மறையாகவே காரணங்களை கண்டுபிடித்து சொல்கிறவர்கள் ஆக்கப்பூர்வமான கருத்துகளையும் சொல்ல வேண்டும்.
Posted by: த. முத்துகிருஷ்ணன்

Source: http://rtmuthukrishnan.blogspot.sg/2014/08/blog-post_23.html