காசா பிரச்னையால் இங்கிலாந்து அமைச்சர் ராஜினாமா!
பாலஸ்தீன் பிரச்னையில் இங்கிலாந்து நாடாளுமன்றம் எத்தகைய அமைதி முயற்சியையும் மேற்கொள்ளாதது குறித்தும், மற்றும் அப்பாவிகளை இலக்காக்கி கொன்று குவிக்கும் இஸ்ரேலின் காட்டுமிராண்டித் தனத்தை கண்டிக்காததாலும் அதனை எதிர்க்கும் முகமாக வெளியுறவுத்துறையிலும், சமூகங்கள் மற்றும் மத நம்பிக்கைகளுக்கான விவாரங்களை கவனித்து வரும் அமைச்சர் சய்யீதா வார்ஸி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தனது டிவிட்டர் தளத்தில் அவர் கூறுவதாவது 'இன்று காலை பிரதம மந்திரிக்கு எனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி விட்டேன். இது எனக்கு மிகுந்த வருத்தத்தையே அளிக்கிறது. இதற்கு மேலும் பிரிட்டிஷ் பாராளுமன்றம் பாலஸ்தீன பிரச்னையில் அமைதி காப்பதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என்ற வேதனையிலேயே எனது ராஜினாமாவை சமர்ப்பிக்கிறேன்' என்கிறார்.
இந்த பெண்மணியின் துணிச்சலை பாராட்டுகிறோம். இவருக்கு இருக்கும் இந்த உணர்வில் பாதியாவது நமது அரபுலக தலைவர்களுக்கு இருந்திருக்குமானால் முஸ்லிம்கள் இத்தனை இழப்புகளை சந்தித்திருக்க மாட்டார்கள். இந்த பெண்ணைப் பாரத்தாவது இனியாவது அரபுலகம் தனது குரலை உயர்த்தி அப்பாவிகள் கொல்லப்படுவதை தடுக்க முன் வருவார்களாக! அமெரிக்க அரசுக்கு மேலும் நெருக்குதலை கொடுப்பார்களாக!
உலக முஸ்லிம்கள் தங்களின் இரு கரம் ஏந்தி பாலஸ்தீன மக்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்க பிரார்த்திப்பார்களாக!
தகவல் உதவி
சவுதி கெஜட்
04-08-2014
4 comments:
சுவனப்பிரியரே,
முதலாவதாக அமாஸ் தங்கள் மக்களைக் காப்பாற்ற துப்பில்லை என்று தெரிந்தும், எதிராளிக்கு பெருத்த சேதத்தை உண்டாக்க முடியாது என்று தெரிந்தும், எதிராளி திருப்பி அடித்தால் அது தரும அடியாக இருக்கும் என்று தெரிந்தும், அதை தங்களால் தடுக்க முடியாது என்று தெரிந்தும் வலிய போய் வம்பிழுத்தது முட்டாள்தனம்.
தங்கள் மக்களை காப்பாற்ற iron dome, siren , red alert apps, shelter
போன்ற கண்டு பிடிப்புகளை வைத்திருக்கிறது. அவர்கள் பக்கம் பாதிப்பு குறைவாகத்தான் இருக்கும். அல்லா வெற்றியைக் கொடுப்பான் என்ற நம்பிக்கையை 10% வைத்துக் கொண்டு உண்மையிலேயே எப்படி வெற்றி கொள்வது என்று சிந்திப்பதற்கு 90% மூளையை பயன் படுத்தட்டும். லாஜிக் ரொம்ப முக்கியம் என்பது நினைவிருக்கட்டும்.
மற்றபடி எல்லா முஸ்லிம்களும் சேர்ந்து அமாஸிடம் ஊசி பட்டசை வெடிப்பதை நிறுத்த சொன்னால் பல அப்பாவி பொது மக்களைக் காப்பாற்றலாம்.
//வலிய போய் வம்பிழுத்தது முட்டாள்தனம்.//
Unmai. What else do you want them to do with their tiny brain and monster ego?
ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலியர்களை அவ்வபொழுது வம்புக்கு இழுப்பதும் இஸ்ரேல் அவர்களுக்கு செமத்தியாக உதை கொடுத்தவுடன் உடனே அவர்கள் ஐயோ, அம்மா, வலி தாங்க முடியலியே என்று கதறுவதும், இதைபார்த்து பரிதாபப்பட்டு உலக நாடுகள் உதை கொடுப்பதை நிறுத்துமாறு இஸ்ரேலை கேட்டுக்கொள்வதும் வழக்கமாக நடப்பதுதான்.
பாலஸ்தீனர்கள் என்று சொல்லிக்கொளும் அரபியர்கள் உண்மையில் பக்கத்துக்கு நாடான ஜோர்தான் நாட்டிலிருந்து குடியேறிவர்கள். அவர்கள் ஜோர்தானுக்கு மீள் குடியேற்றம் செய்து அங்கேயே தங்கிவிடுவதுதான் இந்த பிரச்சினைக்கு ஒரே தீர்வு. அவர்களுக்கு பாலஸ்தீன் என்று தனி நாடு கொடுப்பது இஸ்ரேலுக்கு பல பிரச்சினைகளை கொடுக்கும்.
இந்த அம்மணி தாரளாமாக ராஜினாமா செய்யட்டும். அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்ததே முதலில் தவறு.
Post a Comment