Followers

Sunday, August 17, 2014

எபோலா வைரஸ்... அறிகுறிகள் என்ன?



எபோலா... அறிகுறிகள் என்ன?

அ.சோமசுந்தரம், குழந்தைகள் நல மருத்துவர்:

** எபோலா வைரஸ் மூன்று வழிகளில் பரவுகிறது. **

1. இந்த நோய் தாக்கிய ஒருவரின் உடல் திரவங்கள்... அதாவது ரத்தம், வியர்வை, சிறுநீர், எச்சில், கண்ணீர், விந்து... போன்றவை மற்றவர்களின் உடலுக்குள் செல்லும் போது எபோலா தாக்கும்.

2. எபோலா தாக்குதலுக்கு உள்ளான மிருகங்களின் மாமிசத்தைச் சாப்பிட்டால் பரவும்.

3. எபோலா தாக்கி இறந்தவரின் உடல்மீதும் அந்த வைரஸ் உயிர்ப்புடன் இருக்கும். அந்தச் சடலத்தைத் தொட்டு புழங்கும்போது எபோலா தாக்கும்.

* எபோலா வைரஸ் காற்று மூலம் பரவாது என்பது பெரிய ஆறுதல். பூச்சிக்கடி, கொசுக்கடி, தும்மல் இவற்றின் மூலமும் பரவாது.

* எபோலாவுக்கு எனப் பிரத்தியேக அறிகுறிகள் இல்லை. இந்த வைரஸ் தாக்கியதில் இருந்து சுமார் ஒரு வாரத்தில் கடுமையான காய்ச்சல், உடல் அசதி, வாந்தி, மூட்டுவலி, பசியின்மை, நெஞ்சு வலியுடன்கூடிய இருமல், கடும் வயிற்றுப்போக்கு... போன்றவை அடுத்தடுத்து தாக்கும். இறுதியில் மஞ்சள்காமாலை, ரத்தக்கசிவு ஏற்பட்டு மரணம் நேரும். மேற்கண்ட அறிகுறிகள் ஒன்றன்பின் ஒன்றாகப் பாதித்தால், உடனடியாக மருத்துவச் சோதனை மேற்கொள்ள வேண்டும்.

* மேலே சொல்லப்பட்ட அறிகுறிகளுடன் ஒருவர் மரணம் அடைந்தால், அவரை உடனடியாக அடக்கம் செய்துவிட வேண்டும்.

* எபோலாவுக்கு மருந்து கிடையாது. அந்த வைரஸ் தாக்கினால், 60 முதல் 90 சதவிகிதம் வரை மரண அபாயம் உண்டு. ஆகவே, எபோலாவால் பாதிக்கப்பட்டவரை உடனே தனிமைப்படுத்த வேண்டும்.

* சுத்தமாக இருப்பது, அடிக்கடி சோப் உபயோகித்து கைகளைக் கழுவுவது, புதிய நபர்களுடன் தொட்டுப் புழங்காமல் இருப்பது, முடிந்த வரை வீட்டிலேயே சமைத்து உண்பது, சுகாதாரமற்ற பகுதிகளில் இருந்து விலகி இருப்பது போன்றவை முன்னெச்சரிக்கை தற்காப்புகளாக இருக்கும்!

* எபோலா தாக்குதல் குறித்த உதவிகளுக்கு இந்திய அரசு அமைத்திருக்கும் 24 மணி நேர இலவச தொலைபேசி எண்: 01123061469

- விழுப்புணர்வுக்கு பகிரவும்...

-நன்றி விகடன்

அடுத்த மாதம் ஹஜ் சீசன் துவங்கி விடும். லைபீரியாவிலிருந்து அதிக அளவு மக்கள் ஹஜ் கடமையை நிறைவேற்ற வருவார்கள். மற்ற ஆப்ரிக்க நாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான ஹாஜிகள் வர உள்ளனர். இவர்களில் இந்த வைரஸ் தாக்கியவர்களை கண்டறிந்து மற்றவர்களை அனுமதிப்பது என்பது மிகவும் சிரமமான ஒன்று. சவுதி அரசாங்கம் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டுள்ளது. 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஓரிடத்தில் தங்கும் போது பல அசௌகரியங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நோய் தொற்றுவதற்கும் வாய்ப்புள்ளது. இறைவன்தான் எந்த சிக்கலும் இல்லாமல் இந்த வருட ஹஜ் பயணத்தை அனைவருக்கும் இலகுவாக்கித் தர வேண்டும். இது சம்பந்தமாக நமது தொழுகைகளில் நமது பிரார்த்தனையையும் வைப்போம்.

No comments: