'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Thursday, August 28, 2014
ஹஜ் பயணிகளின் முதல் குரூப் மதினாவை வந்தடைந்தது!
ஹஜ் பயணிகளின் முதல் குரூப் மதினாவை வந்தடைந்தது!
ஹிஜ்ரி 1435 ஆம் ஆண்டுக்கான ஹாஜிகளின் முதல் க்ரூப் மதினாவை வந்தடைந்தது. இந்த முதல் க்ரூப்பில் 235000 (இரண்டு லட்சத்து முப்பத்தி ஐயாயிரம்) பேர் நலமுடன் வந்திறங்கினர். இவர்கள் அனைவரும் இந்தியா மற்றும் பங்களாதேஷத்தைச் சார்ந்த ஹாஜிகளாவர். இந்த ஹாஜிகளை சவுதி அரசு அதிகாரிகளும், இந்திய தூதரக அதிகாரிகளும் இன்முகத்தோடு வரவேற்று உபதேசித்தனர்.
கல்கத்தா, நியூ டெல்லி, லக்னோ, ஸ்ரீநகர், மேங்களூர், டாக்கா போன்ற நகரங்களிலிருந்து ஏர் இந்தியா மற்றும் பங்களாதேஷ் விமானங்கள் விமானங்கள் தொடர்ந்து ஹாஜிகளை இறக்கிக் கொண்டிருக்கிறது. தங்களுக்கு கிடைக்கும் அன்பான உபசரிப்பு எங்களை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது என்று ஹாஜிகள் சந்தோஷத்தோடு செய்தியாளர்களிடம் தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டனர்.
'ஹஜ் வெல்ஃபேர் பாஃர்ம்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் அனைவருக்கும் தண்ணீர், பேரித்தம் பழங்களை கொடுத்து உபசரித்தனர். அவர்களின் தேவைகளை வலிய சென்று கேட்டு பூர்த்தி செய்து கொடுத்தனர். மூன்று வேளை உணவுகளும் அனைவருக்கும் பரிமாறப்பட்டது. சுங்க நுழைவு பரிசோதனையும் இந்த முறை மிக சுலபமாக முடிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டது. அதில் அவர்களைப் பற்றிய முழு விபரமும் மற்றும் அவர்கள் தங்கியுள்ள விடுதியின் விலாசமும் அரபியிலும் ஆங்கிலத்திலும் குறிக்கப்பட்டிருக்கும். வழி தவறி விடுபவர்களை தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள் அடையாளம் கண்டு உரிய இடத்தில் சேர்ப்பிப்பதற்கு இந்த அடையாள அட்டை மிக உதவிகரமாக இருக்கும்.
சவுதி ஏர்லைன்ஸூம், ஏர் இந்தியாவும் இந்த வருடம் 360 விமானங்களை ஹஜ்ஜூக்காக உபயோகப்படுத்துகிறது. மொத்தம் 100020 ஹாஜிக்கள் அரசு அனுமதியோடு அழைத்து வரப்படுகின்றனர். மேலும் 36000 ஹாஜிகள் தனியார் நிறுவனங்கள் மூலம் அதிக பணம் கட்டி அழைத்து வரப்படுகின்றனர்.
ஹஜ் விவகாரங்களுக்கான துணை அமைச்சர் முஹம்மத் மர்கலானி, மற்றும் மேஜர் ஜெனரல் முஹம்மது அப்துல்லா பராவி சவுதிக்கான இந்திய தூதர் போன்ற முக்கியஸ்தர்கள் ஹாஜிகளை விமான நிலையத்தில் வரவேற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். ஹாஜிகள் அனைவருக்கும் முஸல்லா (தொழுவதற்கான பாய்) மற்றும் சில அன்பளிப்பு பொருள்களும் வழங்கப்பட்டன.
தகவல் உதவி
சவுதி கெஜட்
28-08-2014
'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றும்
'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்றும்
ஒருமித்து சொல்ல உலகெங்கிலிருந்தும்
புறப்பட்டு விட்டது எங்கள் புரட்சிப்படை!
ஓசையற்ற கல்லை நீர் உடைத்து உருக்கள் செய்கிறீர்
பூசை பெற்ற கல்லிலே பூவும் நீருஞ் சாற்றுறீர்
வாசலில் பதித்த கல் மழுங்கவே மிதிக்கிறீர்
ஈசனுக்கு உகந்த கல் இரண்டு கல்லுமல்லவே
நட்டு வைத்த தேவரும் நடாது வைத்த தேவரும்
சுட்டு வைத்த தேவரும் சுடாது வைத்த தேவரும்
இட்டு வைத்த இடத்தை விட்டு எழுந்திராத தேவரை
வட்டமிட்டு மாந்தர்கள் வணங்குமாறு எங்கனே!
நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்பம் சாற்றியே
சுற்றி வந்து மொண மொணென்று சொல்லும் மந்திர மேதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதனுள் இருக்கையிலே
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
இஸ்லாத்தின் கட்டளைகளை இனிதாக கூறிய
சிவ வாக்கியரின் சத்தியமான வார்த்தைகளை
சிலாகித்துக் கூறுவதற்கென்றே இந்த வருடமும்
புறப்பட்டு விட்டது எங்கள் புரட்சிப் படை!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment