Followers

Wednesday, August 13, 2014

தாய்லாந்தில் வளர்ந்து வரும் இஸ்லாம்!



தாய்லாந்தின் புகழ் பெற்ற பள்ளிவாசலில் ரமலான் இரவுத் தொழுகையை நிறைவேற்றும் தாய்லாந்து முஸ்லிம்கள்!

தாய்லாந்தின் மக்கள் தொகையில் பவுத்தர்களுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருப்பவர்கள் முஸ்லிம்கள். இஸ்லாத்தின் வளர்ச்சி இங்கு மிகச் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த வருட ஹஜ் பயணத்துக்காக 10000 பேர் தாய்லாந்திலிருந்து புனித மெக்கா வர இருக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் ஒரு நாட்டுக்கு ஒதுக்கப்படடும் ஹஜ் கோட்டாவில் 20 சதவீதம் இந்த வருடம் குறைக்கப்பட்டுள்ளது. காரணம் மெக்கா பள்ளியின் விரிவாக்க பணிகளே!

பட்டாணி, யாலா, நரதிவாட், சாதுன் போன்ற ஊர்களிலிருந்து பெருமளவிலான தாய்லாந்து முஸ்லிம்கள் இந்த வருடத்திற்கான தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர். ஆனால் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே!

அரசு அதிகாரி கூறும் போது '95 சதவீதம் புத்த மதத்தை கொண்ட எங்கள் சமூகம் இஸ்லாமியர்களையும் அரவணைத்துச் செல்கிறது. இஸ்லாமியர்கள் எங்கள் நாட்டு மக்களோடு நட்புறவோடு பழகி இந்நாட்டின் முன்னேற்றத்திலும் சிறந்த பங்காற்றி வருகின்றனர். தாய்லாந்து அரசு சமீபத்தில் மிகப் பெரிய இஃப்தார் பார்ட்டியையும் ஏற்பாடு செய்திருந்தது.' என்கிறார்.

அவர் மேலும் கூறும் போது '800 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய கல்விக் கூடங்கள் தாய்லாந்து முழுக்க பரவி உள்ளன. மசூதிகள் கிட்டத்தட்ட 3802 வரை ரிஜிஸ்டர் செய்யப்பட்டுள்ளது. பாங்காக்கில் மாத்திரம் 177 பள்ளி வாசல்கள் உள்ளன. பவுத்தர்களும் இஸ்லாமியர்களும் எந்த பிணக்குமின்றி தங்கள் பணிகளை செய்து வருகின்றனர்' என்கிறார்.

தகவல் உதவி
அரப் நியூஸ்
26-07-2014

1 comment:

ஆனந்த் சாகர் said...

இஸ்லாம் வளர்கிறது என்பது சுத்த பொய். அது அதிகமாக தேய ஆரம்பித்து இருக்கிறது. இந்த நூற்றாண்டில் இஸ்லாம் காணாமல் போய்விடும் அல்லது மிக மிக சொற்ப எண்ணிக்கையினர்தான் முஸ்லிம்களாக இருப்பர். இன்று உலகில் அதிகமாக வளர்வது நாத்திகமும் ஆன்மீகமும்தான்.