'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Friday, August 29, 2014
அன்று யாரோ! ஆனால் இன்று அப்துல் குத்தூஸ்!
எல்லாப்புகழும் இறைவனுக்கே!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் எழுச்சியை சாலையில் கண்டேன்:
ஆம்! இவர் பெயர் அப்துல் குத்தூஸ். தொண்டியை பிறப்பிடமாக கொண்டவர், அந்தநாளில் பி.யு.சி (P.U.C) படித்தவர். ஒரு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் இஸ்லாத்தை தழுவியவர். இன்று நிலக் கடலை வண்டி இழுத்து பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார். இவரை தற்செயலாக தொண்டி அருகேயுள்ள உப்பூர் என்ற கிராமத்தில் சந்தித்தேன்.
அந்த நாளில், அதாவது இஸ்லாத்தை தழுவுவதற்கு முன் பல சிறந்த தலைவர்களின் வரலாற்று நூல்களைப் படிப்பது இவரது அன்றாட வழக்கம். அப்படி படித்துக் கொண்டிருக்கும் போது தான் நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கை வரலாறுகளும், இஸ்லாமிய வணக்க வழிமுறைகளும் இவர் கைகளுக்கு கிடைத்தன. அல்லாஹ் மிகப் பெரியவன், அவன் தான் உள்ளத்தை நொடிப் பொழுதில் திருப்புபவனாச்சே! திருப்பி விட்டான் இவர் உள்ளத்தை. தழுவினார் இஸ்லாத்தை, வணங்கினார் அல்லாஹ்வை, வாழ்கிறார் இஸ்லாமிய அடிப்படையில். அல்ஹம்து லில்லாஹ்.(எல்லாப்புகழும் இறைவனுக்கே!)
அவர் சொன்ன மற்றொரு சிறப்பு தகவல் என்னவென்றால்! "தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியில் மாற்று மத சகோதரர்கள் கேட்கும் கேள்விகளுக்கு குரான், ஹதீஸ் அடிப்படையில் பதில் சொல்லுவது என்னைப் போன்றவர்களுக்கு மிகுந்த உதவியாக உள்ளது. முஸ்லிம் அல்லாதவர்களுக்கும், படிக்காத பாமரனுக்கும் விளங்கும் வகையில் பி.ஜைனுல் ஆபிதீனின் பதில் சொல்லும் விதம், அந்த மக்களுக்கு எளிதில் புரியும் விதமாக இருப்பதோடு, அந்த சகோதரர்களுக்கு இஸ்லாத்தின் பால் வருவதற்கு வகை செய்வதாகவும் அமைந்துள்ளது: எனக்கும் ஒரு வாய்ப்பையும் தந்தது" என்று தன் மனதில் உள்ளதை சொல்லுகிறார்.
இன்று தமிழ்நாடு தவ்கீத் ஜமாத்தின் பணிகள் உலகளாவிய அளவில் இருப்பதை நாம் பெருமிதத் தோடு சொன்னாலும், மேலதிகமாக இவர்களைப் போல் பட்டி தொட்டி எல்லாம் அல்லாஹ்வின் மார்க்கம் சென்று அடைந்தது கொண்டுதான் இருக்கிறது என்பதை நினைக்கும் போது! அல்ஹம்து லில்லாஹ்(எல்லாப்புகழும் இறைவனுக்கே)! அல்லாஹ் மிகப் பெரியவன்.
இருப்பினும் நாம் மறுமையின் பலன் கருதி, இன்னும் அல்லாஹ்வின் ஏகத்துவத்தை அனைத்து மக்களிடமும் சென்றடைய பாடுபடுவோம். இதன் கூலி எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் கிடைக்கும்.
S.L.நசீருதீன் - நன்றி புகைப்படம் தினத்தந்தி : 30.12.2009: இராமநாதபுரம் மாவட்ட செய்திகள் பக்கம் 13
இந்த அளவு பிஜேயின் பேச்சும் எழுத்தும் சாமானய மக்களை சென்றடைந்து கொண்டிருக்க தமிழகத்தில் இதனால் பாதிப்படைந்த பலரும் ஒன்று கூடி இவரை எதிர்ப்பதையே முழு நேர பணியாகக் கொண்டிருக்கின்றனர். நேற்று ஒரு பெண்மணி 'ஈஸ்வரும் அல்லாவும் ஒன்று என்று வாழ்ந்து வரும் எங்களை பிஜே பிரிக்க பார்க்கிறார்' என்று அபாண்டமாக பழி சுமத்தி அவரை அசிங்கமாக திட்டுவதையும் பார்த்து மனம் வேதனைபட்டது. பாதிக்கப்பட்ட புரோகிதர்களெல்லாம் ஒன்று கூடி கூலிக்கு ஆட்களை அழைத்து வந்திருப்பதையும் பார்க்க முடிந்தது. அந்த அம்மணிக்கு தலையில் முக்காட்டை போட்டு விடுவதற்கு கூட ஒரு பெண்மணி தேவைப்படுகிறார். தவ்ஹீத் ஜமாத்தின் அளப்பெரும் பணியினால்தான் இந்துத்வாவாதிகள் தங்களின் செயல்பாடுகளை தமிழகத்தில் சுருக்கிக் கொண்டுள்ளார்கள்: தீவிரவாதம் மட்டுப்படுத்தவும் பட்டுள்ளது என்பதை அனைவரும் அறிவோம். 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சியின் மூலம் பல இந்துக்களின் கசப்பான எண்ணங்களை மாற்றியமைத்ததை கண் கூடாக கண்டோம். ரத்த தானத்தில் தமிழகத்திலேயே பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து மனித நேய சேவையை செய்து வருகிறோம். தீவிரவாத எதிர்ப்புக்கு எதிராக இன்று தினமும் பிரசாரம் செய்து வருகிறோம். நமது ஒற்றுமையால் சில தினங்களுக்கு முன்பு இஸ்லாமியரை தாக்கிய ஒரு போலீஸ் அதிகாரியை கண்ணியமாக எடுத்துரைத்து இட மாற்றம் செய்ய வைத்துள்ளோம். இந்த ஜமாத்துக்கு அரசும் எந்த அளவு மரியாதை கொடுக்கிறது என்பதை இந்நிகழ்வுகள் காட்டுகின்றன. காசுக்கு அடிபணியாத கூட்டம் இந்த தவ்ஹீத் ஜமாத் என்பதை முதல்வர் ஜெயலலிதாவும் நன்றாக உணர்ந்துள்ளார். 7 லட்சம் உறுப்பினர்கள் கொண்ட பேரியக்கம் என்று அவர் வாயாலேயே சொல்வது என்பது அவ்வளவு லேசுபட்ட காரியம் அல்ல.
இது போன்ற எதிர்ப்புகள் தவ்ஹீத் ஜமாத் மேலும் வலுவூன்ற துணையாகத்தான் இருக்குமே யொழிய பாதிப்பை எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது. இவர்களுக்கு பதில் கொடுத்துக் கொண்டு நம்மை தரம் தாழ்த்தி கொள்ளாமல் ஆக்கபூர்வ பணிகளில் நம் சகோதரர்கள் ஈடுபடுவார்களாக. தமிழகத்தில் பிரபலமாக பிஜேயை திட்டினால் போதும் என்ற மனப்போக்கு பலரிடம் உள்ளது. அதற்கு நாமும் களம் அமைத்துக் கொடுக்க வேண்டாம்.
கண்ணை மூடிக் கொண்டு இவரைப் பின்பற்ற சொல்லி நான் கோரிக்கை வைக்கவில்லை. மனிதன் என்ற முறையில் இவரிடமும் தவறுகள் வரலாம். அதனை கண்ணியமாக சுட்டிக் காட்டுங்கள். பல முறை திருத்திக் கொண்டுள்ளார். இதுதான் ஆக்கபூர்வமான வேலை. உண்மையான முஸ்லிம் அதைத்தான் செய்வான். அதை விடுத்து அவருடைய ஒளி நாடாக்களை அங்கும் இங்கும் ஒட்டி வெட்டி பொய்களை பரப்புவது அவர் சொல்லாததை சொன்னதாக பரப்புவது நயவஞ்சகர்களின் வேலை. அதனை நாம் செய்ய வேண்டாம். இறைவனுக்கு பயந்து கொள்வோம்.
இன்று சவுதி அறிஞர்கள் மத்தியிலும் பிஜேயின் பல கருத்துகள் விவாதப் பொருளாக மாறி வருவதைப் பார்க்கிறோம். ஒரு தமிழனின் ஆக்கங்கள் மதினா பல்கலைக் கழகத்தில் ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழன் என்ற முறையில் பெருமைப்படுகிறேன். இவரின் பல புத்தகங்கள் உலகின் பல மொழிகளில் சவுதி அரசினால் மொழி பெயர்க்கப்பட்டு பல நாடுகளுக்கும் இலவசமாக அனுப்பப்பட்டுக் கொண்டுள்ளது. நாத்திகத்தின் பக்கம் சென்று கொண்டிருந்த என்னை அழைப்பு பணி செய்யும் ஊழியனாக மாற்றியது பிஜேயின் எழுத்துக்களும், பேச்சும் என்றால் மிகையாகாது. இவரின் தவ்ஹீத் பணி எந்த தொய்வுமின்றி மேலும் பல சிகரங்களைத் தொட இறைவனிடம் பிரார்த்திப்போம்.
Labels:
இஸ்லாம்,
காப்பி பேஸ்ட் :-),
தமிழர்கள்,
பி.ஜெய்னுல்லாபுதீன்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
//தவ்ஹீத் ஜமாத்தின் அளப்பெரும் பணியினால்தான் இந்துத்வாவாதிகள் தங்களின் செயல்பாடுகளை தமிழகத்தில் சுருக்கிக் கொண்டுள்ளார்கள்: //
தலைகீழாக சொல்கிறீர்கள்
//அல்லாஹ் மிகப் பெரியவன், அவன் தான் உள்ளத்தை நொடிப் பொழுதில் திருப்புபவனாச்சே! திருப்பி விட்டான் இவர் உள்ளத்தை.//
அப்படியே அவரையே எல்லாத்தையும் திருப்ப சொல்லுங்க. முக்கியமா சியா சுன்னி பிரச்சனையை தீத்து வெக்க சொல்லுங்க்க. யூதர்களையும் திருப்ப சொலுங்க முடிஞ்சா..
Post a Comment