'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Thursday, August 21, 2014
கேரளாவில் பூரண மது விலக்கு அமல் - உம்மன் சாண்டி
திருவனந்தபுரம்: கேரளாவில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த முடிவு செய்திருப்பதாகவும் .இதனை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்திட முடிவு செய்திருப்பதாகவும் அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் காங்.தலைமையில் ஐக்கிய ஜனநாய முன்னணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக காங். கட்சியைச் சேர்ந்த உம்மன்சாண்டி உள்ளார். இம்மாநிலத்தில் லைசென்ஸ் பெற்ற மதுக்கடை பார்கள் மற்றும் மதுபான விடுதிகள் உள்ளன. தவிர 3 ஸ்டார், 4 ஸ்டார், மற்றும் 5 ஸ்டார் ஹோட்டல்களுக்கும் பார் லைசென்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்திட உம்மன்சாண்டி அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக விவாதிப்பதற்காக கூட்டணி கட்சிகளின் உயர்மட்டக்குழுக் கூட்டம் நடந்தது. இதில் புதிய மது கொள்கையை அமல்படுத்திட முடிவு செய்யப்பட்டது.
2015- ஏப்ரல் முதல் அமல்
அதன்படிமுதல்கட்டமாக 3 ஸ்டார் மற்றும் 4 ஸ்டார் ஹோட்டல்களுக்கு வழங்கப்பட்ட லைசென்ஸ்கள் ரத்து செய்யப்படும், இதன் மூலம் மாநிலத்தில் 730 பார்கள் இழுத்து மூடிவிடவும், 5 ஸ்டார் ஹோட்டல்களுக்கு மட்டும் லைசென்ஸ்கள் வழங்கிடவும், இவற்றில் 312 பார்களுக்கான லைசென்ஸ் காலம் மார்ச் 31 ,2015-ம் ஆண்டு முடிவடைகிறது. இவற்றின் லைசென்ஸ்களை மேலும் புதுப்பிக்க தடை விதித்திடவும், இத்திட்டம் 2015-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்படுத்திடவும், அடுத்த 5ஆண்டுகளில் மதுபானவிடுதிகளை மூடிடவும், படிப்படியாக அடுத்த 10 ஆண்டுகளில் மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்திடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து முதல்வர் உம்மன்சாண்டி கூறுகையில், புதிய மதுகொள்கை மூலம் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மது பார்களில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு சுயவேலைவாய்ப்பு மூலம் மாற்றுஏற்பாடு செய்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-பத்திரிக்கை செய்தி
21-08-2014
வாழ்த்துக்கள் முதல்வர் உம்மண் சாண்டி அவர்களே! ஒவ்வொரு மாவட்டத்திலும் 'மது மறு வாழ்வு மையமும்' அமைக்கப்படல் வேண்டும். மதுவுக்கு அடிமையானவர்கள் தங்களின் வாழ்வை சீராக்க இந்த மையங்களில் உள்ள மருத்துவர்கள் முனைவார்கள். பல ஏழை தாய்மார்கள் கண்ணீர் இதன் மூலம் துடைக்கப்படும்.
ஒரு வகையில் தமிழகத்துக்கு லாட்டரி அடித்தது என்றே சொல்லலாம். கேரள குடி மகன்கள் இனி குடிக்க தமிழகம் நோக்கி படையெடுக்கலாம். தமிழக முதல்வருக்கு மேலும் வருமானம் பெருகும். 'அம்மா உணவகம்' போல 'அம்மா சாராயமும்' இனி விநியோகப்படலாம்.
வாழ்க தமிழகம்: வளர்க நம் அரசியல்வாதிகள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment