Followers

Monday, August 18, 2014

கிருஷ்ண ஜெயந்தியில் இஸ்லாமிய சிறுவர்கள்!



உத்தர பிரதேசத்தில் கிருஷ்ண ஜெயந்தி அன்று அந்த விழாவில் கலந்து கொள்ள ஒரு முஸ்லிம் பெண் தனது குழந்தைகளை கிருஷ்ணனின் வேடமிட்டு அழைத்துச் செல்வதைத்தான் நாம் பார்க்கிறோம். தமிழ் இந்து தளத்தில் மத ஒற்றுமைக்கு உதாரணமாக இதனை குறிப்பிட்டு ஒரு ஆர்ட்டிக்கிள் வந்துள்ளது. இதன் மூலம் மத ஒற்றுமை வந்து விடுமா என்றால் கண்டிப்பாக வராது.

மத மோதல்களே எதனால் வருகிறது? ஒருவர் மற்றவர் மதத்தை சரியாக புரிந்து கொள்ளாததாலேயே முறுகல் முற்றி அது மத சண்டையாக மாறி விடுகிறது.

அப்துல்லா என்ற ஒரு உபி கார்பெண்டர் எங்கள் கம்பெனியில் வேலை செய்தான். அவனது குடும்பம் பல தலைமுறைகளாக இஸ்லாமியர்களாக வாழ்ந்தாலும் இஸ்லாமிய அடிப்படையான தொழுகை எவ்வாறு தொழுவது என்பது கூட அவனுக்குத் தெரியவில்லை.

அவனது கிராமத்தில் பல முஸ்லிம்கள் வீட்டில் ராமனின் படமும் கிருஷ்ணனின் படமும் இருக்குமாம். ராமனின் நாடகமும் கூத்தும் நடக்கும் போது இவனும் நடனமாடுவானாம். ராம நாடகத்தில் நடனம் ஆட தெரிந்த இவனுக்கு ஐந்து வேளை தொழுகை எவ்வாறு தொழ வேண்டும். அந்த தொழுகையில் என்ன ஓத வேண்டும் என்று எதுவும் தெரியாமலேயே 25 வயது வரை வளர்ந்து பொருளீட்ட சவுதிக்கும் வந்துள்ளான். பிறகு அவனுக்கு இஸ்லாம் என்றால் என்ன? அவன் எவ்வாறு பலதரப்பட்ட மனிதர்க ளோடு வாழ வேண்டும்? அதற்கு குர்ஆன் சொல்லும் வழி என்ன? என்பதை பற்றியெல்லாம் இரண்டு ஆண்டுகள் அவனுக்கு தொடர்ந்து வகுப்பெடுத்தேன். இன்று குர்ஆன் காட்டும் ஒரு சிறந்த முஸ்லிமாக உபிக்கு சென்றுள்ளான்.

அவனிடம் நான் கேட்டேன் 'இவ்வாறு ஹிந்து கலாசாரத்தோடு வளர்ந்துள்ளாயே உனது கிராமத்தில் ஹிந்து முஸ்லிம் பிரச்னை வந்திருக்கிறதா?'

'அது அவ்வப்போது வரும். கொலை வரை கூட செல்லும்'

'அப்படி என்ன உங்களுக்குள் பிரச்னை வரும்?'

'அதிகமாக பெண் பிரச்னைதான். இந்து பெண்களை முஸ்லிம்கள் காதலிப்பதும், முஸ்லிம் பெண்களை இந்துக்கள் காதலிப்பதும் பிறகு பெரியவர்கள் தலையிட்டு அந்த காதலை தடுப்பதும் இதில்தான் அதிக பிரச்னை வரும். எனது சொந்தங்களில் கூட பல இளைஞர்கள் இன்றும் சிறையில் இருக்கிறார்கள்' என்றான்.

அந்த கிராமத்தில் இந்து கலாசாரத்தை இஸ்லாமியர்கள் உள் வாங்கியதால் கலவரம் குறைந்து விடவில்லை. மற்ற மாநிலங்களை விட அதிகமாகவே கலவரங்களை சந்திக்கும் மாநிலம் உபி. இதனை நாம் அறிவோம். ஒரு இஸ்லாமியன் எப்படி வாழ வேண்டும்? யாரை திருமணம் முடிக்க வேண்டும் என்ற புரிதல் இல்லாததால் இந்துத்வத்தை உள் வாங்கியும் அங்கு அமைதியை கொண்டு வர முடியவில்லை.

நமது தமிழகத்தை எடுத்துக் கொள்வோம். கடந்த 25 வருடங்களாக ஏகத்துவ சிந்தனை வந்தவுடன் 20 வயது 25 வயது இளைஞர்கள் கூட குர்ஆன் காட்டும் வழியில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளத் தொடங்கினர். வன்முறைக்கு குர்ஆனின் வழியில் கிஞ்சிற்றும் இடமில்லை என்பதை உளப்பூர்வமாக உணர்ந்தார்கள். நம்மோடு ஒன்றாக பழகும் இந்து கிறித்தவ நண்பர்கள் அனைவருக்கும் மூலம் ஒரு தாய்தான் என்று போதிக்கப்படுவதால் அவர்கள் மேல் ஒரு சகோதரத்துவ பாசத்தை இந்த ஏகத்துவம் கொண்டு வந்துள்ளது.

சமூகத்திலிருந்து ஒதுங்கியிருந்த இஸ்லாமியர்களை பொதுத் தொண்டாற்ற பழக்கியது ஏகத்துவ இயக்கங்கள். இன்று தமிழகத்தில் ரத்த தானத்தில் பல வருடங்களாக முதல் இடத்தில் இருப்பது ஏகத்துவ இயக்கங்கள்தான். ஆம்புலன்ஸ் சேவை, அனாதை விடுதி, மரம் வளர்த்தல், முதியோர் இல்லம், பேரிடர் நடந்து விடும் போது ஓடி வந்து உதவும் குணம், கல்வியில் மறு மலர்ச்சி என்று சாதி மதம் பாராமல் இவர்கள் செய்த சேவைகள் இன்று தமிழகத்தை ஒரு அமைதிப் பூங்காவாக மாற்றியுள்ளது.

'இஸ்லாம் ஊர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சியின் மூலம் இந்துக்களைக் கேள்வி கேட்க வைத்து அழகிய முறையில் பொறுமையாக பதிலளித்தது ஏகத்துவ இயக்கங்களே! தமிழகத்தின் அனைத்து கிராமங்கள் நகரங்களிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப் பட்டதால் இந்து முஸ்லிம் கலவரத்தை தூண்ட நினைத்த இந்துத்வாவாதிகளின் எண்ணத்தில் மண் விழுந்தது. ஒரு சில கொலைகள் நடந்ததும் கந்து வட்டி, பெண் பிரச்னை, ரியல் எஸ்டேட் என்ற உண்மையை தமிழக காவல்துறை அதிகாரியே பட்டியலிட்டதை நாம் பார்த்தோம்.

இதனையும் மீறி ஒரு சில கொலை, கொள்ளைகளை முஸ்லிம்கள் செய்திருந்தால் அவர்களின் பின்புலத்தை பார்த்தால் அவர்களிடம் தொழுகையோ இன்ன பிற வணக்கங்களோ இல்லாதிருப்பதை அவதானிக்கலாம். அந்த குற்றவாளிகள் ஏகத்துவ வாதிகளாக இல்லாததையும் நாம் பார்த்திருக்கலாம்.

எனவே ஒருவன் தவ்ஹீத் கொள்கையை அதாவது வஹாபிய கொள்கையை ஏற்றிருப்பதால் மாற்று மதத்தவர்களோடு முறுகல் நிலையை ஏற்படுத்தியதை பார்க்க முடியாது. அவனுக்கு தாய் மொழியான தமிழ் மொழிப் பற்றும் இருக்கும். சொந்த தாய் நாட்டை நேசிப்பவனாகவும் மாறி விடுகிறான். குர்ஆன் எதிர்பார்ப்பதும் இதைத்தான்.

எனவே இந்துக்கள் நோன்பு கஞ்சி குடிக்க தலையில் தொப்பியோடு போலியாக அமரவும் வேண்டாம். முஸ்லிம்கள் மத ஒற்றுமை என்ற பெயரில் கிருஷ்ணனாக வேடமிடவும் வேண்டாம். அவரவர் மதத்தை நன்கு விளங்கி அவர்களின் மதத்தில் பிடிப்புடன் இருந்தாலேயே மத ஒற்றுமை தானாக வந்து விடும். அதனை கடந்த 25 ஆண்டுகளாக தவ்ஹீத் ஜமாத்தினர் தமிழகத்தில் செயல்படுத்தியும் வருகின்றனர். தமிழகத்தை போன்றே இலங்கையிலும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் குறைந்த காலத்திலேயே மிகப் பெரிய தாக்கத்தை இலங்கையில் ஏற்படுத்தி வருவதை நாம் பார்க்கிறோம். தமிழகம் இலங்கை போன்று அனைத்து இந்திய மாநிலங்களுக்கும் தவ்ஹீத் சிந்தனை வளர வேண்டும். மத ஒற்றுமை மேலும் மேலும் வளர வேண் டும் என்று இறைவனிடம் நாம் பிரார்த்திப்போமாக!

3 comments:

Anonymous said...

you are one bad wahabi

UNMAIKAL said...

ராஜஸ்தான் போன்ற சிறிய எண்ணிக்கையில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில், கோவில்களில் நடக்கும் பூஜை-புனஸ்காரங்கள் உள்ளிட்ட செயல்களிலும் முஸ்லிம்கள் ஈடுபட நிர்பந்திக்கப்படுகின்றனர்.

விழாக்காலங்களில் கோலமிடுவது, நாக பூஜைகளின்போது "பாம்பு புத்துக்களில் பாலூற்றுவது" சரஸ்வதி பூஜையின்போது நடனமாடுவது உள்ளிட்ட காரியங்களில் முஸ்லிம் பெண்மணிகள் கட்டாயமாக ஈடுபடுத்தப்படுகின்றனர்.


தொழுகை போன்ற வணக்கங்கள் - பர்தா உள்ளிட்ட ஒழுக்கங்களை பேணும் முஸ்லிம் பெண்கள், உயிருக்கு பயந்து - சூழ்நிலைக்கு அஞ்சி, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தின் புகழ்பெற்ற "அஜ்மீர் தர்கா" அமைந்துள்ள, முக்கிய கடை வீதிகளில், ஆர்.எஸ்.எஸ்.ன் "சாகா-பயிற்சி" ஊர்வலத்தில், குண்டர்கள் மீது "மலர் தூவி வரவேற்க" முஸ்லிம்கள் கட்டாயப்படுத்தப்படுத்தப்பட்டனர்.

"சாகா பயிற்சி" ஊர்வல பாதையில் வழிநெடுக இருபுறமும் காத்திருந்து, முஸ்லிம்களை கொன்றொழிக்கும் ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் மீது முஸ்லிம்கள், மலர் தூவி வரவேற்றனர்.

>>இங்கே சொடுக்கி படம் பார்க்க 1.<<<

இங்கே சொடுக்கி படம் பார்க்க 2. <<<

.

Anonymous said...

//வன்முறைக்கு குரானின் வழியில் கிஞ்சிற்றும் இடமில்லை என்பதை உளப்பூர்வமாக உணர்ந்தார்கள்//

எப்படி உங்களால் இப்படி தமாஸ் செய்ய முடிகிறது ?

//எனவே ஒருவன் தவ்ஹீத் கொள்கையை அதாவது வஹாபிய கொள்கையை ஏற்றிருப்பதால் மாற்று மதத்தவர்களோடு முறுகல் நிலையை ஏற்படுத்தியதை பார்க்க முடியாது. அவனுக்கு தாய் மொழியான தமிழ் மொழிப் பற்றும் இருக்கும். சொந்த தாய் நாட்டை நேசிப்பவனாகவும் மாறி விடுகிறான். குரான் எதிர்பார்ப்பதும் இதைத்தான்.//

இதையெல்லாம் உங்கள் கூட்டத்தை சேர்ந்தவர்களெ ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.