Followers

Wednesday, August 27, 2014

தாழ்த்தப்பட்டவர்கள் உருவாக மொகலாயர்களே காரணமாம்!



//சுருங்கச் சொல்வதானால், இஸ்லாமிய ஆட்சியானது காடுகளுக்குள் ஒளிந்து வாழ்ந்த பல இந்துக்களை அவர்களின் சொந்த சாதியிலிருந்து விலகி இருக்கக் காரணமாகியதுடன், அவர்கள் ஒரு வேறொரு புதிய சாதியினரான, தாழ்த்தப்பட்ட ஒரு சாதியினராக ஆக்கியது. இஸ்லாமிய ஆட்சியினால் இறுகிய சாதி அமைப்பிற்கு இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே.//

இந்துத்வா தளத்தில் வந்த ஒரு கட்டுரை. அடப்பாவிகளா! பொய் சொல்வதற்கும் ஒரு அளவு இல்லையா? இன்று நமது நாட்டில் சாதி வெறி ஓரளவு மட்டுப்படுத்தப் பட்டுள்ளதே 1000 ஆண்டு கால மொகலாயர் ஆட்சி என்பதை சரித்திரம் சொல்லுமே!

இந்த நாட்டில் சாதி எவ்வாறு வேரூன்றியது என்பதை இனி பார்போம்.

யஜூர் வேதம் பிறப்பினடிப்படையில் என்ன கூறுகிறது? .......

அத்தியாயம் 31 சுலோகம் 11 என்ன கூறுகிறது?
ஃப்ராஹ் மணோஸ்ய முகமாஸீத் பாஹூ ராஜன்ய க்ருத:1 ஊருததஸ்மா யத்வைஸ்ய பத்யாம் சூத்ரோ அஜாயத் - 11.
பிரம்மனின் முகத்திலிருந்து பிராம ணன் பிறந்தான்; தோள்களினின்றும் சத்திரியன் பிறந்தான்; துடைகளினின்றும் வைசியன் பிறந்தான்; பாதங்களினின்று சூத்திரன் பிறந்தான் என்பது இதன் பொருள்.

சூத்திரன் என்பவன் ஏழு வகைப்படும்.
1) யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்
2) யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன்
3) பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன்
4) விபச்சாரி மகன்
5) விலைக்கு வாங்கப்பட்டவன்
6) ஒருவனால் கொடுக்கப்பட்டவன்
7) தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்கிறவன் (மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415)

மனுதர்மம் அத்தியாயம் ஒன்று சுலோகம் 87
அந்தப் பிர்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளினின்று உண்டான பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர வருணத் தாருக்கு இம்மைக்கும், மறுமைக்கும் உரிய உபயோகமான கருமங்களைத் தனித் தனியாகப் பகுத்தார்.

பிறப்பினடிப்படையில் மனிதனை பிரித்ததில் வேதம் ஸ்ருதி ஸ்ருமிதி,இதிகாசம் புராணம்,வரலாறு,நிகழ்கால நடைமுறை என அனைத்திலும் இருக்கும் போது இந்துமதத்தில் இல்லை என்பதும் இதற்கு மொகலாய மன்னர்களே காரணம் என்பதும் ஏமாற்று வேலை அல்லவா?

சூத்திரன் என்ற இனத்தை இந்த அளவு கேவலப்படுத்தினால் அவனை சமூகம் எந்த அளவில் வைத்திருக்கும் என்பது நாம் சொல்ல வேண்டியதில்லை. மொகலாயர்களின் ஆட்சியோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் வந்தது. ஆனால் தாழ்த்தப்பட்ட இனம் உருவாகி 3000 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இவ்வளவு துணிச்சலாக பொய் கூறுவதற்கும் அதனை ஒரு பொது தளத்தில் பிரசுரிப்பதற்கும் கொஞ்சம் கூட வெட்கப்படாதவர்கள் இந்த இந்துத்வாவினர்.

இனி தலித்கள் உருவாக மற்றொரு காரணத்தையும் பார்ப்போம்.....

தலித்களின் மூலமதமாகவும் பௌத்தம் இருந்தது. தலித்களின் தாழ்வு நிலைக்கு காரணம் பௌத்தம் சமயம்தான் (அதாவது பெளத்ததை பின்பற்றியதால் தலித்கள் அடிமைகளாக்கப்பட்டார்கள் ). அதே பௌத்தம் சமயம்தான் தலித் விடுதலைக்கும், அதிகாரம் பெறுவதற்கும் உறுதுணையாகவும் வழியாகவும் இருக்கவேண்டியுள்ளது. இந்திய பாரம்பரியம் பௌத்த மதமாக இருந்தது என்கிறார் அதனை தன் தமிழ் புலமை மூலம் விளக்குகிறார். இந்திய என்ற சொல் 'இந்திரம்' என்பதன் திரிபு. இந்திரனாகிய புத்தனும் அவனைக் குருவாக கருதும் மக்களும் வாழும் நாட்டிற்கு 'இந்திரதேசம்' என்ற பெயர் வந்தது. ஆரியர் வாருகைக்கு முன் இங்கே ஒரு தேசம் இருந்தது அந்த தேசியத்தை பௌத்தம் உருவாக்கியது. அதில் பகுத்தறிவு, மனித நேயம், சமத்துவம்,அறக்கருதொற்றுமை மெய்யியல் மற்றும் நடைமுறை சார்பானதாகவே இருந்து வந்திருக்கின்றது. இதில் அன்னியரான வெளியாரின் ஊடுருவால். படையெடுப்பால் கால்ப்போக்கில் அது மந்திர அல்லது மாயத்தன்மையென திரிக்கப்பட்டது என்று பண்டிதர் விளக்குகிறார். சொந்த நாட்டின் சாதியற்ற பண்பாட்டை அயல் சக்திகள், வெளியாட்கள் நசித்துதிரித்துவிட்டார்கள். பிறப்பால் ஏற்ப்படும் ஏற்றத்தாழ்வுகளை அழித்து சமத்துவத்தை நோக்கி நடைபோடும் ஓர் அரசியல் கருத்தியலை உருவாக்கும் ஒரு தேசியத்தை கட்டமைக்க முயற்சிகிறார்.


சாதியின் தோற்றம்

சாதியின் தோற்றம் பற்றிய பல்வேறு கருதுகோள்கள் வேறுபட்ட அறிஞர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. சாதியின் தோற்றம் குறித்து பக்தவச்சல பாரதியின்மானிடவியல் கோட்பாடுகள்[1] என்ற நூலில் விளக்கங்கள் தரப்பட்டிருக்கின்றன. சாதியின் தோற்றம் குறித்து இந்த பகுதியில் இடம்பெறும் தகவல்கள் அந்த நூலையே அடிப்படையாக கொண்டவை. அதில் சாதியத்தின் தோற்றத்தை விளக்கும் ஆறு கோட்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை:
1. மரபுக் கோட்பாடு (traditional theory)
2. தொழிற் கோட்பாடு (occupational theory)
3. சமயக் கோட்பாடு (religious theory)
4. அரசியற் கோட்பாடு (political theory)
5. இனக் கோட்பாடு (racial theory)
6. படிமலர்ச்சிக் கோட்பாடு (evolutionary theory)

மரபுக் கோட்பாடு

சாதி இறைவனால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்பதுவே மரபுக் கோட்பாடு ஆகும். ரிக் வேதம், மனு தர்மம், பகவத்கீதை ஆகியவை சாதி இறைவனால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்றே கூறுகின்றன. பகவத்கீதை குணத்தின் அடிப்படையில் சாதி அமைகின்றது என குறிப்பிட்டாலும், பிற பிறப்பின் அடிப்படையிலேயே சாதி அமைகின்றது என்பதை வலியுறுத்துகின்றன.

தொழிற் கோட்பாடு

சாதி மக்கள் குழுக்கள் செய்யும் தொழில் அடிப்படையில் அமைந்தன என்பதுவே தொழிற் கோட்பாடு. தொழில்களின் தன்மை காரணமாக ‘தூய்மை’ ‘தீட்டு’ வரையறை செய்யப்பட்டன.

பிறப்பு ரீதியிலான தமிழ் சமூக அமைப்பை மறுக்கும் பலர், தொழில் ரீதியிலான தமிழ் சமூக அமைப்பு இயல்பான என்றும் கருத்தாக்கம் செய்துள்ளார்கள்.

சமயக் கோட்பாடு

சாதி முறைக்கு அடிப்படை சமயமே என்பது சமயக் கோட்பாடு. குறிப்பாக இந்து சமய சூழலே சாதி முறையை தோற்றுவித்தது.

அரசியற் கோட்பாடு

உயர் சாதியினர் தமது சலுகைகளை தக்கவைக்க ஏற்றவாறு அமைத்துகொண்ட அமைப்பே சாதி என்பது அரசியற் கோட்பாடு.
இனக் கோட்பாடு

ஆரியர்கள் இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த போது தொல் திராவிடர்களை அடிமைப்படுத்தி நிறுவிய அமைப்பே சாதி அமைப்பு என்கிறது இனக் கோட்பாடு. “குடியேறிய ஆரியர்கள் இங்கிருந்தவர்களைக் காட்டிலும் உடல் தோற்றத்தில் பொலிவானவர்களாக திகழ்ததால் அதனைப் பயன்படுத்தி அவர்கள் வருணப் பாகுபாட்டை காட்டத் தொடங்கினர்.”[2]

இந்திய சாதி அமைப்பு

இந்திய துணைக்கண்டத்தில் சாதி தொழிலின் அடிப்படையில் தோன்றி பின்னர் பிறப்படிப்படையில் மாற்றாம் பெற்றது. இந்தியாவில் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் வந்து பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் கூடி வாழ்ந்திருக்கிறார்கள். பல்வேறு போக்குகளால் பிறப்படிப்படையில் சாதிகள் அடையாளம் கொண்டு இன்றளவும் நிலைப்பெற்றுள்ளன.

தமிழரிடையே சாதி என்பது, வழிவழியாய் தொழில் அடிப்படையில் (பரம்பரைத்தொழில்) இருந்த குழுக்களும் கூட்டங்களும் நாளடைவில், பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சமூக அமைப்பாய் மாறி, பின் படிமுறை அமைப்பும் ஏற்பட்டது. சாதிகளில் படிமுறை ஏற்றாத்தாழ்வுகள் தமிழரிடம் தொன்றுதொட்டு இருந்ததல்ல; ஆனால், எப்பொழுது எவ்வப்பகுதிகளில், எத்தனை வலுப்பெற்று இருந்தது என்பது திண்ணமாய்த் தெரியவில்லை. சாதி வகுப்புமுறைமைகளும் படிமுறை அமைப்பும் இடத்துக்கிடம் வேறுபடும். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், முற்கால அரசரிடமும், பிற செல்வந்தர்களிடமும் இருந்த நெருக்கம், அணுக்கம் பற்றிய உறவாட்ட வேறுபாடுகளினாலும், சாதிகளில் ஏற்றத்தாழ்வுகள் மாறி வந்துள்ளன.
வடமொழியில் உள்ள மனு ஸ்ம்ரிதி ( மனுநீதி சாத்திரம் ) என்னும் நூலும் அவ்வரிசையில் உள்ள பிற வடமொழி நூல்களும், தமிழரிடையே சாதியின் அடிப்படையில் பிறப்படிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் ஊட்டவும் வலியுறுத்தவும் துணை செய்தன. தமிழில் பிறப்பின் அடிப்படையில் படிமுறையில் ஏற்றத்தாழ்வுகள் கூறும் நூல்கள் யாதும் 16 ஆம் நூற்றாண்டு வரையிலும் ஆன காலப்பகுதியில் இருபதாகத் தெரியவில்லை.

http://tamilanmanian.wordpress.com/2013/10/22/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D


7 comments:

UNMAIKAL said...

வேறு ஜாதியினர் சமைக்கும் உணவை சாப்பிட மாட்டோம்: ராஜபாளையம் மாணவிகள்!


ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே வேறு ஜாதியினர் சமைக்கும் உணவை சாப்பிட மாட்டோம் என நடுநிலைப்பள்ளி மாணவிகள் கடந்த ஒரு வருடமாக சத்துணவை புறக்கணித்து வருகின்றனர்.

ராஜபாளையம் அருகேயுள்ளது கே.கம்மாபட்டி கிராமம். இங்குள்ள கிராமத்தில் 200 வீடுகள் இருக்கின்றன. அங்கு வசிக்கும் அனைவரும் ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். ஸ்ரீவில்லிப்புத்து£ர் யூனியனுக்கு சொந்தமான அரசு துவக்கப்பள்ளி இங்குள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த 50 மாணவர்களும், 25 மாணவிகளும் இந்த பள்ளியில்தான் படிக்கின்றனர். மாணவர்களுக்கு மதியம் சத்துணவு வழங்கப்படுகிறது. கடந்த ஒராண்டுக்கு முன்பு வரை ராஜகம்பளத்தை சேர்ந்த ஒரு வயதான பெண்மணிதான் சத்துணவை சமைத்து போட்டு வந்தார். அவர் பணியிலிருந்து விலகிய பிறகுதான் பிரச்னை ஆரம்பமானது.

கே.கம்மாபட்டி கிராமத்தில் உள்ள தொடக்கபள்ளியில் காலியாக இருந்த சத்துணவு சமையல்காரர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த மரகதவள்ளி (25) என்பவர் சமையல்காரராகவும், சரவணக்குமாரி (30) என்பவர் சமையல் உதவியாளராகவும் அரசு நியமனம் செய்தது. கடந்த 30.7.12 அன்று பள்ளி மாணவர்களுக்கு ஆசையாக மதிய சத்துணவை சமைத்து விட்டு மாணவர்களை சாப்பிட அழைத்தனர். ஆனால், 'பிற ஜாதியினர் சமைத்த சாபப்பாட்டை எங்கள் பிள்ளைகள் சாப்பிட்டால் தீட்டு வரும்' என்று சொல்லி பெற்றோர்கள் மாணவர்களை வீடுகளுக்கு அழைத்து சென்று விட்டனர்.

பின்னர் சமைத்த சாப்பாட்டை மாடுகளுக்கு போட்டு விட்டு சத்துணவு பணியாளர்கள் வீடுகளுக்கு திரும்பினர். உடனே இந்த பிரச்னை வெளிச்சத்துக்கு வந்தது. கலெக்டர், சத்துணவு திட்ட அதிகாரிகள் எல்லோரும் பேச்சு வார்த்தை நடத்தியும். கே.கம்மாபட்டி ஊர் மக்கள், 'வேறு ஜாதியினர் சமைத்த சத்துணவை எங்கள் பிள்ளைகள் சாப்பிட மாட்டார்கள்' என்று சொல்லி தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். ஆனால் சத்துணவு பணியாளர்கள் தினமும் சத்துணவை சமைத்து விட்டு பிள்ளைகளுக்காக காத்திருப்பதும், பிறகு சாப்பாட்டை கீழே கொட்டுவதும் என இப்போது வரை வாடிக்கையாக நடந்து கொண்டிருக்கிறது.

கடந்த ஜூலை மாதம் 30ஆம் தேதி சத்துணவை புறக்கணிக்கும் போராட்டம் தொடங்கியது. இப்போது ஒராண்டு கடந்தும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த 11.7.13 அன்று சத்துணவு திட்ட இணை இயக்குனர் வசந்தி, இந்த கிராமத்துக்கு சென்று ஊர் பெரியவர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போதும் அவர்கள் பழைய பல்லவியை பாடியிருக்கின்றனர்.

பிறகு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டியதிருக்கும் என்று எச்சரித்த பிறகு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மட்டும் சத்துணவு சாப்பிடட்டும், மாணவிகள் சாப்பிட மாட்டார்கள் என்று சொல்லி அனுப்பினார்களாம். இப்போது 23 மாணவர்கள் மட்டுமே சத்துணவு சாப்பிடுகிறார்கள். மாணவிகள் எப்போதும் போல் சத்துணவை புறக்கணித்து வருகின்றனர்.

எல்லாம் ஜாதி படுத்தும்பாடு. வேறு என்னத்தை சொல்ல?


news.vikatan.com/article

UNMAIKAL said...

நான் இந்து இல்ல; நான் இப்ப பள்ளனும் இல்ல
ஜாதிய ஒழிச்சுக்கட்டிய முகம்மது பிலால்!


முகம்மது பிலால் வியாழன், 06 செப்டம்பர் 2012 23:39

நான் 6.12.1992 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளன்று, அம்பேத்கர் நினைவு நாளில் சென்னை அசோக் நகர் பள்ளி வாசலில் 1000 பேருடன் இஸ்லாம் தழுவினேன். அதில் 300 பேர் தாழ்த்தப்பட்டவர்கள்.

இதற்கு முன்பே 1981 இல் தென் மாவட்டங்களில் கொடிக்கால் ஷேக் அப்துல்லா போன்றோரின் தலைமையில், மிகப்பெரிய மதமாற்றம் மீனாட்சிபுரத்தில் நடந்தது என்பது பலருக்கும் தெரியும்.

குறிப்பாக, பள்ளர்கள் அதிகமாக இஸ்லாம் தழுவினார்கள்.

பொதுவாக தங்களுக்கு நடக்கிற பிரச்சனைகளுக்கு எதிராகப் போராடுகிற, எதிர்க்கிற, எதிர்த்துத் தாக்குகிற குணம் பள்ளர்களுக்கு உண்டு. வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்க மாட்டாங்க. இயல்பாகவே அப்படி ஒரு குணம். அந்த குணங்களுக்கு ஏற்றதாகக்கூட இஸ்லாத்தை தழுவியிருக்கலாம்.

மதமாற்றத்தில் ஈடுபடுகிற பலருக்கும் பல நோக்கங்கள் இருக்கும். ஒருத்தர் நான் இந்து இல்லன்னு சொல்லி மதம் மாறுவார். இன்னொருத்தர் சாதிக் கொடுமைகள் இருக்கு, அதனால மதம் மாறுகிறோம்னு சொல்லுவார். இன்னும் சிலர் சலுகைக்காக மதம் மாறுகிறோம்னு சொல்லுவாங்க.
ஆனா, மதமாற்றத்தில் நான் முன் வைத்த கருத்து – "பிறவி இழிவு நீங்க வேண்டும்' பொறக்கும்போது பள்ளனா பொறந்திட்டேன். என் பிள்ளைகளும் பள்ளர்களாகப் பிறக்கணும்னு என்ன அவசியம் வேண்டியிருக்கு. இத யார் தீர்மானிக்கிறது? நான் பள்ளனா பொறந்திட்டேன்.

என்னுடைய அடுத்த தலைமுறை பள்ளனா பொறக்கக்கூடாது
அதுக்கு உடனடித் தீர்வு இஸ்லாம்.
இப்ப என் பேரனுங்கள பள்ளன்னு கூப்பாடு போட்டு சொன்னாலும் யாரும் நம்பப் போறதில்ல.

அவன் யாருன்னு ஜமாத்துக்கும் தெரியும், மக்களுக்கும் தெரியும். ஒரு தலைமுறை மாறிடுச்சு. பையன கொடுத்தோம், பெண் எடுத்தோம்.

இந்த மாதிரியான மாற்றம் நம்முடைய பிறவியிலேயே ஏற்படுணும்னா, அதுக்கு ஒரே தீர்வு இஸ்லாம்தான்.

மதம் மாறுவது என்கிற நிலையில் நீங்க பவுத்தரா, கிறித்துவரா மாறுவது ரொம்ப சுலபம். அது யாரையும் இந்த சமூகத்துல பாதிக்காது.

மதம் மாறுகிறவர்கிட்டேயும் மாற்றத்த கண்டுபிடிக்க முடியாது. வேணும்னா கூட்டம் போட்டு சொல்லிக்கலாம்.

ஆனா, நீங்க இஸ்லாம் மாறுவது என்பது மதமாற்றம் மட்டுமல்ல, உன்னுடைய சமூகத்துல உன்ன அடிமைப்படுத்துகிற கலாச்சாரத்திலிருந்தும் மாறுகிறோம்.

இந்தத் தலைமுறைக்கு அது போதும்.

மறந்தும் இந்த மதத்தோட எந்தத் தன்மையும் உன்னை பாதிக்காது.
இத பவுத்தத்தில இருந்து உன்னால சொல்ல முடியாது; கிறித்துவரா இருந்தும் சொல்ல முடியாது. இரண்டிலும் இந்து மதம் நம்மள இழி பிறவியா நடத்துற எல்லா விசயமும் அதுக்குள்ள இருக்குது.
பள்ளர்கள் எப்பவோ இஸ்லாம் மதத்தைத் தழுவிவிட்டார்கள் என்று சொல்ல முடியும்.

12 ஆம் நூற்றாண்டில் தென் மாவட்டத்தில் ஒருத்தர்கூட தலித் இஸ்லாமியர் இல்லை.

இந்தக் காலகட்டத்தில்தான் நாகர்மலை, சமணர்மலை, யானைமலை போன்ற பகுதிகளை சைவர்கள் கைப்பற்றுகிறார்கள். மிகப்பெரிய சைவப் போராட்டம் நடக்கிறது. சைவம் எப்படி சமணத்தை வீழ்த்தியதோ, அதைப் போலவே சைவத்தை வீழ்த்த வேண்டும்; சைவத்தை வீழ்த்த வேண்டுமானால், அதை எதிர்க்கின்ற, வீழ்த்துகின்ற சக்தியுடைய ஒன்றோடு கூட்டுச் சேர வேண்டும்.

சமணத்தையோ, பவுத்தத்தையோ கூட்டு சேர்க்க முடியாது. அதுதான் வீழ்ந்து கிடக்குதே.

அப்ப அதை எதிர்க்கிற மதமாக இருந்தது இஸ்லாம்தான்.

இந்த மோதலில் செத்துக் கொண்டிருந்தவர்கள் நம்முடைய முன்னோர்கள்தான். அதனால் அவர்கள் இஸ்லாம் மாறி இருக்கலாம்.

நான் இருக்கிற சோழவந்தான் பகுதி முழுவதும் சைவ மதம் அட்டூழியம் பண்ணிய இடம். இன்னைக்கும் அந்த பாதிப்பு இருக்குது. அது யாருக்கும் தெரியல.

எனக்கு பள்ளர் – பறையர்னு பிரிச்சுப் பார்க்கத் தெரியல.
என்னுடைய அதிக காலம் வடக்கேதான் கழிஞ்சது. தந்தை சிவராஜ்தான் தலைவர். பிரச்சனைகள் வடக்கே ஒரு மாதிரியா இருக்கலாம், தெற்கே ஒரு மாதிரியா இருக்கலாம்.

பவுத்தத்தில் கிறித்துவத்தில் சில நல்லதுக இருக்கலாம். சலுகைகள் கிடைக்கலாம். அது, அவரவர் தேவையைப் பொருத்தது.
நான் இஸ்லாமியரா இருக்கிறேன்.

ஏற்கனவே இந்த சமூகம் என் பாட்டன், பாட்டிய பேசின இழிந்த நிலையை இப்ப எங்கிட்ட பேச முடியாது.

அதுதான் எனக்குக் கிடைச்ச விடுதலையா பார்க்கிறேன்.
நான் இந்து இல்ல; நான் இப்ப பள்ளனும் இல்ல;

ஜாதிய ஒழிச்சுக்கட்டிய முகம்மது பிலால்!

நேர்காணல் : அன்பு செல்வம்

SOURCE: http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=21050&Itemid=139

UNMAIKAL said...

தேசிய அவமானம்-தலித் முரசு ஆசிரியர் குழு


புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியத்தைச் சேர்ந்த கருவடத் தெரு ஊராட்சி மன்றத் தலைவர் அ. கலைமணி என்ற தலித் பெண்மணி, குடியரசு நாள் விழாவில் தேசியக்கொடி ஏற்றியபோது, அதே ஊராட்சி மன்றத் துணைத் தலைவரின் மகன் 20 பேருடன் திடீரென்று புகுந்து ஊராட்சி மன்றத் தலைவரின் சாதிப் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசி, தாக்கி, தேசியக் கொடியை ஏற்றவிடாமல் தடுத்து தானே ஏற்றியிருக்கிறார்.

கலைமணி தலித் என்பதால், அவரை தேசியக் கொடி ஏற்ற அனுமதிக்கக் கூடாது என்று கள்ளர் சாதியினர் திட்டமிட்டுள்ளதை அறிந்து 19.1.2012 அன்று கண்மணி காவல் நிலையத்தில் புகார் அளித்து தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டுள்ளார். ஊராட்சி மன்றத் தலைவரின் புகாரை காவல் துறை அலட்சியப்படுத்தியுள்ளது ("தி இந்து' 29.1.2012).

இன்றளவும் சமத்துவத்தைப் பேண இந்து சமூகம் தயாரில்லை என்பதுமட்டும் அல்ல; அத்தகைய சமத்துவத்தைப் பேணும் தலித் மக்களையும் அதனால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு : ஒரிசா மாநிலத்தில் உள்ள போலாங்கிர் மாவட்டத்தைச் சேர்ந்த லாத்தூரில் 22.1.2012 அன்று 9 ஆம் வகுப்பு படிக்கும் தலித் மாணவன் கணேஷ் சுனா, தனக்கென ஒரு புதுச்சட்டை வாங்குவதற்காக உள்ளூரில் உள்ள ஒரு துணிக்கடைக்கு சென்றிருக்கிறார். கடையில் அந்த மாணவர் விசாரித்துக் கொண்டிருக்கும்போது, அவர் சட்டைக்கு உள்ளே பனியன் அணிந்திருப்பதை அந்த சாதி இந்து கடைக்காரர் கவனித்திருக்கிறார். இது, அவர் கண்ணை உறுத்தியிருக்கிறது. ஆனால், இதை வெளிப்படுத்தாமல் அந்த மாணவர் தன் கடைக்கு திருட வந்ததாகச் சொல்லி கடுமையாகத் தாக்கியிருக்கிறார். இதைக் கண்டித்த அவரது தாத்தாவும் தாக்கப்பட்டுள்ளார். மேலும், இம்மாணவர் வசிக்கும் சேரிக்கு திரண்ட சாதி இந்து கும்பல் 50 வீடுகளையும், அவர்களது உடைமைகளையும் எரித்துச் சாம்பலாக்கியுள்ளது ("தி இந்து', 25.1.2012).

மகாராட்டிர மாநிலத்தில் உள்ள முல்கான் கிராமத்தில் 42 வயதான தலித் பெண்ணின் ஆடைகளை அவிழ்த்து, தாக்கி, நிர்வாணமாக நடக்கவிட்டுள்ளனர். இப்பெண்ணின் மகன் ஒரு சாதி இந்து பெண்ணுடன் ஒரு மாதத்திற்கு முன்பு ஊரைவிட்டு ஓடிவிட்டான்.

இதனால்ஆத்திரமடைந்த சாதி இந்துக்கள், பட்டப்பகலில் அனைவரின் முன்னிலையிலும் இக்கொடுமையை நிகழ்த்தியுள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் இப்பெண் அளித்த புகாரை போலிஸ் வாங்க மறுத்திருக்கிறது. பாதிக்கப்பட்ட அப்பெண்மணி கூறுகிறார் : "சாதி இந்து பெண்கள் என்னை கீழே தள்ளி என் புடவையை உருவி நிர்வாணமாக்கினர். அதற்குப் பிறகு என்னைச் செருப்பாலும் கம்புகளாலும் அடிக்கத் தொடங்கினர். இரண்டு மணி நேரம் என்னை இப்படியே துன்புறுத்தினர்' ("தி இந்து', 12.1.2012).

UNMAIKAL said...

கிறிஸ்தவ ஜாதி சனியன். இந்து வெளியே போனாலும், உள்ளே வருகிறது ஜாதி!

CLICK TO >>>கிறிஸ்துவர்களால் வாயில் மலம் திணித்த சாதி கொடுமை . அராஜகம். <<< READ

.

UNMAIKAL said...

இந்து மதம் என்னும் மனித விரோத மத அமைப்பில்தான் எத்துணை எத்துணைக் கொடுமைகள்!

பிறப்பில் பேதம் என்னும் நச்சு விதை ஊன்றப்பட்ட இந்தச் சமூக அமைப்பில் பிறப்பு முதல் சாவுவரை வெறுப்பும் - பகைமையும் குரோதமும்தான் கொடிகட்டிப் பறக்கிறது!

பார்த்தால் தீட்டு, நெருங்கினால் தீட்டு, தொட்டால் தீட்டு என்னும் ஜாதீய ஒடுக்குமுறை இந்து மதத்தின் ரத்த ஓட்டமாகும்.


கோத்திரம் என்றால் அது என்னவாம்! ரிஷிகளைத் தங்கள் சந்ததிக்கு முதல்வராகக் கொண்ட பிரிவாம்!

யார் இந்த ரிஷிகள்?

அவர்களுக்குள்ள வரலாறு என்ன என்பதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது. அவர்கள் கூறும் ரிஷிகளுக்குப் புராணங்கள்தான் ஆதாரம். அந்தப் புராணக் குப்பைகளைப் படித்து புரட்டிப் பார்த்தால் வயிற்றுக்குள்ளிருக்கும் குடல் புரட்டிக் கொண்டு வெளியில் வந்து விழுந்து விடும். அவ்வளவு மூடத்தனமும், ஆபாசமும் நிறைந்தவை அவை.

கலைக்கோட்டு ரிஷி, மானுக்கும், ஜம்புகர், நரிக்கும், அகஸ்தியர், குடத்துக்கும், மாண்டவியர், தவளைக்கும், காங்கேயர், கழுதைக்கும், சவுனகர், நாய்க்கும், கணாதர், கோட்டானுக்கும், சுகர், கிளிக்கும், ஜாம்புவந்தர், கரடிக்கும், அஸ்வத்தாமன், குதிரைக்கும் பிறந்தானாம். இப்படிப் பிறக்க முடியுமா என்கிற அறிவார்ந்த கேள்வி ஒருபுறம் இருக்கட்டும்;

இப்படிக்கூட கற்பனை செய்துள்ளார்களே. அவர்களின் அருவருப்பான அறிவினை எந்தப் பட்டியலில் சேர்ப்பது! இப்படிப் பிறந்த ரிஷிகள்தான் இந்து மதத்தின் கோத்திரங்களுக்கான முன்னோர்களாம்.

SOURCE: http://thamizhoviya.blogspot.sg/2011/06/blog-post_12.html

Unknown said...

இவ்வளவு கேவலமான போலி கருத்துகளை பதிவிட உங்களுக்கு தைரியம் இருக்கிறதே அதுவே ஹிந்துக்களின் பொறுமைக்கு எடுத்துக்காட்டு, பாகுபாடு பிற சமயங்களில் அதிகம் , அது அயல்நாட்டிலும் அதிகமுண்டு

Unknown said...

இவ்வளவு கேவலமான போலி கருத்துகளை பதிவிட உங்களுக்கு தைரியம் இருக்கிறதே அதுவே ஹிந்துக்களின் பொறுமைக்கு எடுத்துக்காட்டு, பாகுபாடு பிற சமயங்களில் அதிகம் , அது அயல்நாட்டிலும் அதிகமுண்டு