Followers

Tuesday, August 26, 2014

'லவ் ஜிஹாத்' உண்மையில் நடக்கிறதா?



இந்துத்வாவாதிகள் தற்போது ஒரு புதிய குற்றச்சாட்டை வைக்கின்றனர். அதாவது இஸ்லாமியர்கள் வேலை வெட்டிக்கெல்லாம் போகாமல் இந்துப் பெண்களையாக பார்த்து காதலித்து அவர்களை முஸ்லிம்களாக மாற்றுகிறார்களாம். இந்துக்களின் ஓட்டுக்களை ஒன்று சேர்க்க பிஜேபி கையாளும் தந்திரங்களில் இதுவும் ஒன்று. இது எந்த அளவு உண்மை என்று பிஜேபி ஆதரவு ஊடகமான என்டிடிவி உத்தர பிரதேசத்திற்கு சென்று நேரடியான கள ஆய்வை மேற்கொண்டது. அதன்படி அறிக்கை கூறுவதாவது:

மீரட்டில் நடந்த கூட்டுக் கற்பழிப்பில் 'லவ் ஜிஹாத்' என்று மத சாயம் பூசி முஸ்லிம்க்கு எதிராக இந்துக்களை திரட்டும் பணியை பலரும் செய்து வந்தனர். இதன் உண்மை நிலையை அறிய எங்கள் குழு மீரட், புலந்த் சாஹர், காஸியாபாத், கவுதம்பத் நகர், ஹபூர், ஸஹாரான்பூர், முஸாஃபர்நகர் என்று பல இடங்களிலும் ஆய்வுகளை மேற்கொண்டோம். மீரட் நகரில் மட்டும் 37 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 7 வழக்குகளில் முஸ்லிம்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். பாக்கி உள்ள 30 வழக்குகள் இந்துக்களே சம்பந்தப்பட்டுள்ளனர்.

அனைத்து நகரங்களிலும் மொத்தம் 334 வன்புணர்வு வழக்குகள் பதிவாகியுள்ளன. காவல் துறை அறிக்கை சொல்வதாவது.....

1. இஸ்லாமிய ஆண்கள் இந்து பெண்களிடம் பிரச்னை செய்ததாக உள்ள வழக்குகள் மொத்தம் 25

2. இந்து ஆண்கள் முஸ்லிம் பெண்களிடம் பிரச்னை செய்ததாக உள்ள வழக்குகள் மொத்தம் 23

3. இஸ்லாமிய ஆண்கள் இஸ்லாமிய பெண்களிடம் பிரச்னை செய்ததாக உள்ள வழக்குகள் 96

4. இந்து ஆண்கள் இந்து பெண்களிடம் பிரச்னை செய்ததாக உள்ள வழக்குகள் 190

இவை அனைத்தும் காவல் துறையினர் வழக்கு பதிந்த வகையில் எடுக்கப்பட்ட சர்வேயாகும். இந்த அறிக்கையின் மூலம் தெரிய வருவது இஸ்லாமியர் யாரும் 'லவ் ஜிஹாத்' என்ற பெயரில் எந்த முயற்சியிலும் ஈடுபடுவதில்லை என்பதே. ஒன்றிரண்டு சம்பவங்கள் படிக்கும் இடங்களில் ஆங்காங்கே இரு சமூகத்திலும் நடந்து வருகிறது.

ஆனால் வன்புணர்வு என்பது ஆதிக்கசாதியான யாதவர்கள் தாழ்ந்த சாதியான தலித்களை கொடுமைபடுத்துவது பரவலாக நடைபெற்று வருகிறது. தாங்கள் உயர்ந்த சாதி என்ற ஆதிக்க மனப்பான்மை கூட இதற்கு காரணமாக இருக்கலாம். எனவே இந்து இளைஞர்களுக்கு போதிய ஆன்மீக பயிற்சி கொடுத்து இது போன்ற வன்புணர்வு கொடுமைகளை செய்யாதிருக்க இந்துத்வா அமைப்புகள் முயற்சி எடுக்க வேண்டும்.

அதை விடுத்து தேவையில்லாமல் முஸ்லிம்களை இழுத்து அவர்கள் மேல் பொய் கேசுகளை போடுவதால் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர முடியாது. கடைசியில் வெறுத்து போய் அந்த தலித் மக்களே தாங்களாகவே இஸ்லாத்தை ஏற்கும் நிகழ்வையும் உங்களால் தடுக்க முடியாது.

எனவே பிஜேபியினர் உளுத்துப் போன இந்துத்வா கொள்கையை தூரமாக்கி நாட்டு மக்கள் ஒற்றுமையாக வாழ என்ன வழி என்று யோசிப்பார்களாக!

சாதியின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கும் 70 கோடி இந்துக்களின் மறு வாழ்வுக்கு உரிய திட்டங்களைத் தீட்டுவார்களாக!

நடந்து முடிந்த இடைத் தேர்தலின் முடிவுகள் காங்கிரஸூக்கு சாதகமாக உள்ளது. இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு பிஜேபியினர் அனைத்து மக்களின் நலனுக்காக பாடுபட முயற்சிக்க வேண்டும்.




தகவல் உதவி: என்டிடிவி

http://www.ndtv.com/article/india/how-crime-data-contradicts-communal-spin-to-up-rape-cases-581843?site=classic

2 comments:

Anonymous said...

இசுலாமியர் எண்ணிக்கை மற்றும் இந்துக்கள் எண்ணிக்கையை கணக்கு கொள்ளாது தரப்படும் தகவல்.

கொடுக்கப்பட்ட எண்ணிக்கையே லவ் ஜிஹாத் இருப்பதை தெரிவிக்கிறது.

UNMAIKAL said...

லவ் ஜிஹாத் அவதூறுப் பிரச்சாரத்திற்கு மகளிர் அமைப்புகள் எதிர்ப்பு!


புதுடெல்லி: வகுப்புவெறியை தூண்டும் நோக்கில் சமூகத்தை பிளவுப்படுத்த சங்க்பரிவார அமைப்புகளும், சில கிறிஸ்தவ சபைகளும் நடத்தி வரும் லவ் ஜிஹாத் அவதூறு பிரச்சாரத்திற்கு மகளிர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

விருப்பமுடையவர்களை தங்களது வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொள்ள ஆணுக்கும்,பெண்ணுக்கும் உரிமை உண்டு என்று அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர் ஜகமதி சங்க்வான், என்.எஃப்.ஐ.டபிள்யூ தலைவர் ஆனி ராஜா, பிரபல வழக்கறிஞர் பிருந்தா க்ரோவர், சமூக ஆர்வலர் டீஸ்டா ஸெடல்வாட் ஆகியோர் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.

சமூக ஆர்வலர் ஷப்னம் ஹாஷ்மி தலைவராக இருக்கும் அன்ஹத் அமைப்பு பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடுச் செய்திருந்தது.

பருவ வயதை அடைந்த யாரும் தமது விருப்பப்படி திருமணம் புரிய அனுமதி உண்டு என்று உச்சநீதிமன்றம் பல தடவை உத்தரவிட்டுள்ளது.இளைஞர் அல்லது இளம்பெண்ணின் குடும்பத்தினர் எதிர்த்தால் கூட கலப்பு திருமணம் புரியலாம்.

இவ்வாறு திருமணம் முடிப்பவர்களுக்கு தொந்தரவு அளிப்பவர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவுச் செய்வதற்கு சட்டத்தில் இடமுண்டு.

பெண்களை கவர்ந்து செல்லும் நோக்குடன் முஸ்லிம் இளைஞர்கள் இந்து இளம் பெண்களை திருமணம் புரிவதாக இந்துத்துவாவினர் பரப்புரைச் செய்கின்றனர்.

ஆனால், முஸ்லிம் பெண்களை இதர மதத்தவரும் திருமணம் புரிகின்றனர் என்பதுதான் உண்மை.

பாலிவுட் நடிகர் சுனில் தத் நர்கீஸையும், ஆதித்யா பாஞ்சோலி ஷெரீனா வஹாபையும், கிரிக்கெட் வீரர் அஜித் அகர்கர் பாத்திமாவையும், காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் ஃபாரூக் அப்துல்லாவின் மகளையும், அரசியல்வாதி அருண் காவ்லி அயிசாவையும், சி.பி.எம் தலைவர் சீதாராம் யெச்சூரி சீமா சிஸ்தியையும், இலக்கியவாதி வி.எஸ்.நெய்போல் நாதியாவையும் திருமணம் புரிந்து வாழ்வது எல்லோருக்கும் தெரியும்.

வாக்குகளை குறிவைத்து பா.ஜ.கவும், சங்க்பரிவார அமைப்புகளும் கதைகளை ஜோடிக்கின்றன என்று வழக்கறிஞர் பிருந்தா க்ரோவர் குற்றம் சாட்டினார்.

கலப்பு திருமணம் தொடர்பாக தகராறுகள் ஏற்படும்போது சமூகம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

முஸ்லிம்கள் இதர மதத்தவர்களை மதம் மாற்றவும், மக்கள் தொகையை அதிகரிக்கவும் திருமணம் முடிப்பதாக பரப்புரைச் செய்யப்படுகிறது.

முஸ்லிம்களை தீயசக்திகளாக சித்தரிக்கும் நோக்குடன் குறுமதியாளர்கள் ’லவ் ஜிஹாத்’ என்ற வார்த்தையை பிரயோகிக்கின்றனர்.

1920களிலும் இந்துத்துவாவினர் இத்தகைய பரப்புரையை கட்டவிழ்த்து விட்டனர்.

கர்நாடகாவிலும், கேரளாவிலும் இப்பரப்புரை மீண்டும் துவக்கப்பட்டது.

இந்துப்பெண்கள், தங்களது தனிப்பட்ட வாழ்க்கையை எவ்வாறு அமைத்துக்கொள்ளவேண்டும்? என்பதை தீர்மானிக்க முடியாத ஒரு சூழல் உருவாகியுள்ளது.

குஜராத், கண்டமால், முஸஃபர் நகர் உள்ளிட்ட பல்வேறு கலவரங்களிலும், இனப்படுகொலைகளிலும் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த பெண்களை கூட்டாக பாலியல் வன்புணர்வுச் செய்தவர்கள் தாம் இந்த பரப்புரையைச் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.

லவ் ஜிஹாத் என்பது பொய் பரப்புரை மட்டுமே என்று கேரள, கர்நாடகா மாநில போலீசார் கண்டறிந்துள்ளனர் என்று பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடுச் செய்த அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

- See more at: http://www.thoothuonline.com/archives/68398#sthash.pmXzer2F.dpuf

http://www.thoothuonline.com/archives/68398