அல்ஜிமர்ஸ் நோயை விரட்டுகிறது தொழுகை-அமெரிக்க ஆய்வு
எனது தாத்தாவுக்கு 90 வயதுக்கு மேல் ஆகிறது. முடிந்த வரை பள்ளியில் சென்று தொழுது வருவதை நான் பார்த்துள்ளேன். சில வருடங்களுக்கு முன் மதிய தொழுகை தொழுது விட்டு அவர் வீடு செல்வதற்கு பதில் எங்கள வீட்டு பக்கம் வர ஆரம்பித்துள்ளார். எனது நண்பன் இவர் ஞாபக மறதியில் தெரு மாறி செல்கிறார் என்பதால் 'என்ன தாத்தா? தெரு மாறி செல்கிறீர்கள்? உங்கள் வீடு அடுத்த தெரு' என்றவுடன் தாத்தா சுதாரித்துக் கொண்டு 'ஹி...ஹி...எனக்கு தெரியும் தம்பி. என் மக வீட்டுக்கு போறேன். வேறொன்றுமில்லை' என்று சிறிது தூரம் நடந்து பிறகு வந்த வழியே திரும்பி சென்றிருக்கிறார். என் நண்பன் என்னிடம் 'உன் தாத்தாவுக்கு குப்புற விழுந்தாலும் மீசையில மண் ஒட்டவில்லை என்ற கதை தான். எப்படியாவது சமாளித்து தான் கண்டிஷனில் இருப்பதாக காட்டிக் கொள்வார்' என்றான் சிரித்துக் கொண்டே........
(அமெரிக்க சர்ச் ஒன்றில் தொழுகைக்கான அழகிய அழைப்பொலி)
இதை நான் சொல்லக் காரணம் இறை பக்தியில் தினமும் தொழுகையை தவறாது பள்ளியில் சென்று ஐந்து நேரமும் நிறைவேறறுபவர்கள் எவருக்கும் சிரமம் கொடுக்காமல் தங்களது 90 வயதிற்கு பிறகும் நோய் நொடி இல்லாமல் வாழ்வதை பார்த்து வருகிறேன் என்பதை தெரிவிப்பதற்காகவே. சில ஆண்டுகளுக்கு முன்பு தான் எனது தாத்தாவுக்கு கண் பார்வை மங்கத் தொடங்கியுள்ளது. இதே போல் இந்துக்களிலும் காலையிலும் மாலையில் எழுந்து குளித்து கோவிலுக்கு சென்று வருபவர்கள் நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்து வருவதை பார்த்து வந்துள்ளேன்.
இதை எல்லாம் நான் இங்கு குறிப்பிட காரணம் ஐவேளை தொழுகையை நேரம் தவறாமல் நிறைவேற்றும் முஸ்லிம்களிடம் அல்ஜிமர்ஸ் எனும் நோய் 50 சதவீதம் கட்டுப்படுத்தப் பட்டுள்ளதாக அமெரிக்க - இஸ்ரேலிய விஞ்ஞானிகள் புதிதாக கண்டு பிடித்துள்ளனர். அப்பாவி உலக மக்களை அழிப்பதில் முன்னணியில் இருக்கும் இந்த இரு நாடுகளும் இது போன்று ஆக்கபூர்வமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டால் பலரும் பயனடைவர். :-) அல்ஜிமர்ஸ் எனும் இந்த நோய் மனிதனுக்குள் ஏற்படும் ஞாபக மறதியைப் பற்றியது. தொழுகாத மக்களை விட நேரம் குறிப்பிட்டு சரியாக மசூதியை அடைந்து விடும் மக்களுக்கு இந்த நோய் வருவது தடுக்கப்படுகிறது.
டெல் அவீவ், யாஃபா, அமெரிக்காவின் இதர பல்கலைக்கழகத்தைச் சார்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். நினைவாற்றல் குறையாமலிருக்க பயிற்சி மையங்கள் மற்றும் இதர வழிகளில் பயிற்சி மேற்கொள்பவர்களை விட குறிப்பிட்ட நேரத்தில் தொழுகையை பேணுபவர்களுக்கு அல்ஸிமர்ஸ் நோய் தாக்கும் வாய்ப்பு குறைவாகும் என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
குறித்த நேரத்தில் தொழுகையை பேணுவது அல்ஷிமர்ஸ் நோயிலிருந்து காப்பாற்றுவதுடன் புத்தியாகவும், சிந்தனை ரீதியாகவும் பேசுவதற்கு தேவையான ஆக்கப்பூர்வமான பலன்கள் கிடைப்பதாக இந்த ஆய்வுக் குழுவின் தலைவராக பணியாற்றிய பேராசிரியர் Rivka Inzelberg கூறுகிறார். இவரது ஆராய்ச்சியின் முடிவை துருக்கியில் நடந்த சர்வதேச ஆய்வு மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. துருக்கி, ஈரான், ஈராக், லெபனான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரபு நாடுகள், இந்தியா, போன்ற நாடுகள் இதில் கலந்து கொண்டன.
65 வயதுக்கு மேற்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 92 பேருக்கு மட்டுமே ஞாபக மறதி நோய் பாதித்துள்ளது. 300 பேருக்கு சிறிய அளவில் பாதித்துள்ளது. மீதமுள்ளோருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.
'யார் வேதத்தை உறுதியாகப் பிடித்துக் கொண்டு தொழுகையையும் நிலை நாட்டுகிறாரோ அத்தகைய சீர்படுத்திக் கொள்வோரின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம். '
-குர்ஆன் 7:170
ஆம். மன நிம்மதி, நோயிலிருந்து மீட்டல், பல வேலைகளையும் குறித்த நேரத்தில் செய்வதற்கான உந்துதல், சிறந்த உடற்பயிற்சி இவை எல்லாவற்றையும் விட இறப்புக்கு பிறகு இறைவன் தரக் கூடிய சொர்க்க வாழ்க்கை என்று ஐந்து வேளை தொழக் கூடியவரின் நன்மையின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
இக்பால் செல்வன், சார்வகனிலிருந்து தருமி வரை எப்படியாவது முஸ்லிம்களை நாத்திகத்தின் பக்கம் கொண்டு வந்து விட வேண்டும் என்று அல்லும் பகலும் பாடுபடுகின்றனர். ஆனால் இறைவன் அவர்கள் நம்பும் அறிவியலின் மூலமாகவே பல உண்மைகளை உலகுக்கு அறிவித்துக் கொண்டுள்ளான்.
எனவே ஐவேளை தொழும் பழக்கம் இல்லாத மக்கள் இன்றிலிருந்து ஐந்து வேளையும் மசூதியில் சென்று தொழும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வார்களாக! இதன் மூலம் செய்யும் தவறுகளிலிருந்தும் நோய்களிலிருந்தும், இறைவனின் கோபத்திலிருந்தும் தங்களை காத்துக் கொள்வார்களாக.....
http://www.haaretz.com/news/national/israeli-u-s-study-praying-regularly-could-reduce-risk-of-alzheimer-s.premium-1.453668
http://israel21c.org/health/israeli-research-shows-gardening-reading-and-praying-can-help-stave-off-alzheimers-disease
http://dinaex.blogspot.in/2012/08/50.html
http://thebeautyofislam.tumblr.com/post/28542915951
http://25.media.tumblr.com/tumblr_m64tffH12e1ruvx75o1_500.gif
Study shows females who prayed regularly had 50 percent less chance of having mild dementia or Alzheimer’s.
Praying regularly can reduce the risk of developing Alzheimer’s disease and milder memory problems by 50 percent, according to a joint Israeli-American study funded by the U.S. National Institutes of Health.
The study was aimed at identifying factors that increase the risk of developing Alzheimer’s. Researchers examined several aspects of the subjects’ lives, including what they did in their spare time during their 20s and 30s. It turns out females who prayed regularly had 50 percent less chance of having mild dementia or Alzheimer’s.
Lead researcher Prof. Rivka Inzelberg said they couldn’t determine the connection between praying and Alzheimer’s amongst men because 90 percent of their male subjects prayed daily. “But among the women, only 60 percent of the women prayed five times a day, as per Islamic custom, but 40 percent didn’t pray regularly, so we were able to compare the data,” Inzelberg explained.
The study did not characterize the connection between prayer and memory, but Inzelberg noted, “Prayer is a custom in which thought is invested, and the intellectual activity involved in prayer, beyond the content of the prayers, may constitute a protective factor against Alzheimer’s.”
The findings, presented at a Tel Aviv conference last month, also showed that 50 percent more women suffer memory problems than men and that formal schooling reduced the risk of Alzheimer’s and memory impairments.
Other risk factors that were identified were high blood pressure, diabetes, excess fats in the blood and heart problems.
In addition, researchers said those who gardened in their youths also had a reduced risk of dementia, though they hadn’t calculated the exact degree of influence.
This is not the first study suggesting a link between religion and health. In 2005 researchers concluded that adopting a spiritual or religious lifestyle slows down the progress of Alzheimer’s. An earlier study showed that more people succumbed to heart problems and cancer in secular kibbutzim than in religious ones.
The Israeli group Assia found that the morbidity and mortality rates among infants was much lower in religious communities than in secular ones. And researchers who conducted another joint Israeli-American study postulated that the mortality rate was lower for Arab dialysis patients than Jewish patients as a result of spiritual and community support.
http://thebeautyofislam.tumblr.com/post/28542915951
4 comments:
எல்லா புகழும் இறைவனுக்கே ..!!!
எல்லா புகழும் இறைவனுக்கே ..!!!
தினமும் குனிந்து, நிமிர்ந்து, உட்கார்ந்து, எழுந்து உடல் பயிற்சி செய்தால் உடலுக்கு நல்லது என்பதை இஸ்லாமிய தொழுகையோடு சம்பந்தப்படுத்தி பயங்கரவாத மதத்திற்கு ஆள் பிடிக்கும் வேலை ஒரு பிழைப்பா?
நிற்பது, குனிவது, முகங்குப்புற தரையில் விழுந்து வணங்குவது, திரும்ப அதையே பல முறை செய்வது என்ற வணக்க முறை யூதர்கள் செய்து வந்த ஒன்று. அதை பார்த்து அப்படியே காப்பி அடித்து முஹம்மது தன்னுடைய அடிபொடிகளுக்கும் அதை கடமையாக்கினார். இதை பற்றி பீற்றிக்கொள்ள என்ன இருக்கிறது?
முஸ்லிம்கள் செய்துவரும் தொழுகை முறையை இப்படிதான் செய்ய வேண்டும் என்று முழுமையாக அல்லாஹ் குரானில் கூறவில்லை. நிற்பது, குனிவது, முகங்குப்புற தரையில் விழுவதை பற்றி பிட்டு பிட்டாக ஒரு சில வசனங்களில் அல்லாஹ் குரானில் கூறுவதாக உள்ளது. தொழுகையின்போது நின்றுகொண்டு, குனிந்துகொண்டு, முகங்குப்புற தரையில் விழுந்து, உட்கார்ந்த நிலையில் என்ன ஓத வேண்டும் என்று எங்காவது அல்லாஹ் குரானில் கூறி இருக்கிறானா? தொழவில்லை என்றால் நரகத்தில் வேதனை செய்வேன் என்று பயமுறுத்த தெரிந்த அல்லாஹ்வுக்கு அதை எப்படி செய்ய வேண்டும் என்று மட்டும் குரானில் சொல்லி கொடுக்க தெரியவில்லையா? முஹம்மதின் தகாத காம இச்சை, கொலை வெறிக்கெல்லாம் ஓடோடி வந்து வஹி இறக்கி நியாயப்படுத்திய அல்லாஹ், குரானின் ஒவ்வொரு பக்கத்திலும் நரகத்தை சொல்லி பயமுறுத்திய அல்லாஹ், சொன்ன கதையையே மறந்து பல அத்தியாயங்களில் சில மாறுதல்களுடன் திரும்ப திரும்ப குரானில் கூறி போரடிக்கும் அல்லாஹ் ஏன் தொழுகையை எப்படி செய்ய வேண்டும் என்று முழுமையாக ஒரே மூச்சில்,ஒரே வசனத்தில் தெளிவாக சொல்லவில்லை?
இது யூத அமெரிக்க சதி . நம்பாதீர்கள். அதென்ன இஸ்லாத்திற்கு ஆதரவாக இருப்பதுபோல் ஒருவர் சொன்னால் எந்த ஆராய்ச்சியும், ஆதாரம் கேட்டலும் இல்லாமலேயே ஒப்புக் கொள்கிறீர்கள் ?
Post a Comment