Followers

Saturday, February 27, 2021

இந்து வேதங்களில் ஹிஜாப்

 இந்து வேதங்களில் ஹிஜாப்

கடவுள் பெண்களை படைத்து, அவர்களை கூச்சமுடையவராக ஆக்கியுள்ளார். பெண்கள் எந்த ஆணையும் தலைதூக்கி பார்க்க கூடாது. பார்வையை தாழ்த்திக்கொண்டவராக ,உச்சி முதல் பாதம் வரை ஆடை கொண்டு மூடப்பட்டவராக பெண்கள் இருத்தல் வேண்டும்.
(ஆதாரம் : ரிக் வேதம் - எட்டாம் நூல் 33வது மந்திரம் 19-20 வரை)
பெண்களுடைய உடைகளை ஆண்கள் ஒருபோதும் உடுத்த கூடாது
(ஆதாரம் : ரிக் வேதம் - 10வது நூல் 85வது பாடல் மந்திரம் 30)
பரசுராமர் ,ராமரை சந்திக்க வந்த போது... சீதையை பார்த்து ராமர் கூறுகிறார்... "சீதையே! நீ திரைகளுக்குள் இருந்து கொள், உன் பார்வையை தாழ்த்திக்கொள்" என்று
(ஆதாரம் : மஹாவீர சரித்திரம் - அதிகாரம் 2, 71வது பக்கம்)
பிரம்மா , பெண்ணை படைக்கும் போதே அவளுக்கு கட்டளையிடுகிறார் , "பெண்ணே நீ பார்வையை தாழ்த்திக்கொள், ஆடவர்களை தலைதூக்கி பார்க்காதே, ஆடைகள் கொண்டு மூடப்பட்ட உனது அங்கங்களை யாருக்கும் வெளிப்படுத்தாதே, பெண்மையை பேணிக்கொள்வது உன் மீது கடமையாகிறது" .
(ஆதாரம் : ரிக் வேதம் ,பாகம் 19, மந்திரம் 8 - 33வது வரி)
இந்தியாவில் குப்தர் காலத்திலும் அவர்களுக்கு பிந்தைய கால ஆட்சியாளர்களது காலத்திலும் வெளியிடப்பட்ட உலோக நாணயங்களில் தலை, தோள் முதல் மார்பு வரை ஆடையால் முழுவதும் மூடப்பட்ட பெண்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது என வரலாற்று ஆசிரியர்கள் கண்டறிந்துள்ளார்கள்.
இந்து மதம் , தன் பெண்களை ஆடைகளை கொண்டு தன் அங்கங்களை மறைக்க கூறுகிறது. தலைக்கு முக்காடு போட்டு பார்வையை தாழ்த்தச்சொல்கிறது. வெளிப்படையாக காட்டவேண்டிய புற உறுப்புகளை தவிர ஏனைய பகுதிகளை முழுவதுமாக மூட சொல்கிறது,முகத்தையும் சேர்த்து. பெண்கள் அணியும் ஆடைகளை ஆண்களும், ஆண்கள் அணியும் ஆடையை பெண்களும் அணிய தடைவிதித்துள்ளது.
இதுகுறித்து இஸ்லாமிய விழுமியங்கள் பேசுவதை ஏளனப்படுத்துவோர் இந்து வேத சாஸ்த்திரங்கள் என்ன கூறியுள்ளது என்பதையும் கொஞ்சம் படித்தல் நலம். இன்றளவும் வட இந்திய ராஜதானி,குஜராதி,உபி,பிகார் ,பஞ்சாப், ஹரியாணா, ஜார்கண்ட், வங்காளிகள் , மபி, ஒரிசா வரை பெண்கள் தலையில் கூங்கட் எனும் முக்காடு அணியும் பழக்கம் உள்ளவர்களாகவும்... திருமணம் மற்றும் அந்நிய ஆண்கள் இருக்கும் நேரங்களில் முகத்தை மறைக்கும் ஜுனாரி எனும் முகத்திரை அணியும் பழக்கமுடையவராகவும் காணப்படுகின்றனர். இதனை இந்து மதம் சார்ந்தவர் மாத்திரமல்லாது ஜைனர், பௌத்த, சீக்கிய,மார்வாரி இனப்பெண்களும் கடைபிடிக்கின்றனர்.
இந்து சமஸ்கிருத புராணங்களில் தலை முக்காடு என்பதை "அவகுந்தனா" என்ற சொல்லைக்கொண்டு குறித்துள்ளனர். உத்தரியா என்பது தோள் சீலையையும், அதிகந்தப்பட்டா என்பது உடல் முழுக்க மூடும் ஆடையையும், சிரோவஸ்த்ரா என்பது தலை துணியையும் குறிக்கும் சொல்லாக பயன்படுத்தியுள்ளனர். ஆனால் கிமு 3-4 நூற்றாண்டுகளுள் எழுதப்பட்ட சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்திலும், பிராமணர்கள் இயற்றிய ஆரியங்க மற்றும் உபநிஷத்து தர்மசாஸ்திரத்திலும், வத்சாயன மல்லநாகர் எழுதிய காமசூத்திராவிலும் பெண்கள் உடலை மறைக்க வேண்டுமென எங்கும் கூறப்பட்டவில்லை. ஆனால் ஆடை அணியும் பெண்கள் நாகரீக அமைப்பில் வாழ்பவராகவும், மேலாடை அணியாது தலையை மறைக்காதவர்கள் பரத்தைகளாகவும், ஆதிவாசிகளாகவும் பார்க்கப்பட்டனர் என்கிற தகவல்கள் கௌதமசாஸ்திரம் தெரிவிக்கிறது.
தலைப்பாகை அணிவது இரான் வழியாக, இந்திய இஸ்லாமிய ஆண்களுக்கு பரவியது போல எல்லா மதம் சார்ந்த வடநாட்டு ஆண்களுக்கும் பொதுவானதொரு பழக்கமானது. ஆனால் தலைக்கு முக்காடு அணிவது என்பது இஸ்லாமிய பழக்கம் வரும் முன்னரே இந்திய பெண்களுக்கு ஹிஜாப் அணியும் பழக்கம் ஜைனம் மற்றும் பௌத்த சமய நம்பிக்கைப்படி புரான காலத்தில் இருந்தே பழக்கிவிடப்பட்டுள்ளது. குறிப்பாக கோவில்களுக்கும் பொதுத்தளங்களுக்கும் வரும் பெண்கள் மெல்லிய ஆடையை கொண்டு தலை மற்றும் முகத்தை மறைத்துக்கொண்டே ஆக வேண்டும். நாகரீக உலகில் அப்பழக்கங்களை பலர் கடந்து வந்துவிட்டாலும், தங்களது மதம் போதித்தவற்றை வடநாட்டு பழங்குடிகள் யாரும் விட்டுக்கொடுக்கவில்லை.
பெண்கள் தலையை மறைப்பது உலகின் எல்லா கலாச்சாரத்திலும் கடைபிடிக்கப்பட்டு வந்த ஒன்று தான். அவர் மதக்கட்டுப்பாடு என்றில்லாமல் அதனை ஒரு ஆடைக்கலாச்சாரமாகவே எடுத்துக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. உடலின் எல்லா உறுப்பிற்கும் ஒரு ஆடை என்பது போல தலையை மறைக்கவும் ஒரு ஸ்கார்ஃப் என மிக எளிமையாக புரிந்து வைத்துள்ளனர்.


-Nasrath S Rosy பதிவின் காப்பி பேஸ்ட்





2 comments:

Dr.Anburaj said...

உடை அணிவதற்கு இலக்கணம் உண்டு. அனைவரும் கடைபிடிக்க வேண்டும். கடைபிடித்தார்கள்.கடைபிடிக்காதஇடம் நயவஞ்சகம். வேசிகளுக்குதான் உடை இலக்கணம் விதிக்கப்படவில்லை. இன்றைய சமூகம் சினிமாகாரன் பின்னால் செல்கிறது.சங்கடங்கள் ஏராளம்.ஏராளம்.
உடலை கருப்பு துணியால் பொதிந்து முகத்தில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு கண்களுக்கு மட்டும் வலை போட்டு அலைவது மிகவும் மட்டமான கலாச்சாரம்.

அழகிய கம்பீரமான ஆணை அவள் பார்க்க மாட்டாள் என்பது என்ன நிச்சயம் ? அதனால் அவா் பாதிக்கப்படவில்லை என்பது என்ன நிச்சயம்.

ஆனால் மக்கள் கலாச்சார ரீதியாக தொழில் காரணமாக பண்பாடு மாறி வந்துள்ளது. கூலி வேலை செய்து பிழைக்கும் பெண்கள் ஒரளவிற்கு பண்பாடாக ஆடை அணிய முடியும்.ஆனால் முகத்தை மறைப்பது சாத்தியமல்ல.
மேல்தட்டு உயா் வருவாய் பிரிவினா்கள் முஸ்லீம்களில் மிக அதிகம்.எனவே அவர்களால் உடை கட்டுப்பாடு கடைபிடிக்கப்படுகிறது. வயல்களில் களை பறிப்பது செங்கல் சுமப்பது .. . . .போன்ற வேலைகளில் முஸ்லீம் பெண்கள் ஈடுபடவில்லை.எனவே அவர்களின் சங்கடங்களை முஸ்லீம்களும் சுவனப்பிரியனும் அறிய மாட்டார்கள்.ஹிந்து சமுகத்திலும் உயா் வருவாய் பிரிவினா்கள் உடை கட்டுப்பாடு கொண்டிருக்கின்றார்கள்.

வழக்கம் போல் இந்து குழந்தைகளுக்கு நல்லது கெட்டது கற்றுக் கொடுக்க நாதியில்லை.அதுவம் ஒரு பிரச்சனை. ரெடிமேட் உடை, சினிமா நடிகை போட்ட மாடல் என்றால் வாங்க கொள்ளை பிரியம் . என்ன செய்வது கைவிடப்பட்ட சமூகம் இந்து சமூகம்.
சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை
(அதிகாரம்:வாழ்க்கைத்துணை நலம் குறள் எண்:57)

பொழிப்பு (மு வரதராசன்): மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்புமுறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தாம் காக்கும் காப்பே சிறந்தது.
பிரம்மச்சரியம் பிரதி பன்னம் வீரிய லாப
கற்பு நெறி காப்பதால் உடலுக்கும் மனதிற்கும் ஆன்மாவிற்கும் வீரியம் வாய்க்கின்றது.
உபதேசங்களுக்கு பஞ்சம் இல்லை. பின்பற்ற வேண்டும் என்றால் பஞ்சம்தான்.

Dr.Anburaj said...


நவீன கால பிரம்மச்சரியம்: இனி காமத்தை வெல்வது மிக எளிது (Tamil Edition)
by Selvakumar (Author அமேசானில் உள்ளது.
புத்தகம் சந்தையில் உள்ளது. நான் இன்னும் படிக்கவில்லை. விருபபம் உள்ளவா்கள் படிக்கலாம்.