Followers

Wednesday, February 17, 2021

மேடையில் சரிந்து விழுந்த பிஜேபி முதலமைச்சர்

 குஜராத் வதேதராவில் தேர்தல் பரப்புரை செய்து கொண்டிருக்கும் போதே மேடையில் சரிந்து விழுந்த பிஜேபி முதலமைச்சர் விஜய் ரூபானி. அவருக்கு கொரோனா தொற்று உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

6 comments:

Dr.Anburaj said...

BJP முதல் அமைச்சா் மேடையில் மயங்கி விழுந்தாா். அவருக்கு கொரோனா நோய் வந்துள்ளது .... ஆம் செய்தி.

எனவே முஸ்லீம்கள் எலலாம் கிடா வெட்டி . . . . . மகிழ்சியுடன் கொண்டாடுங்கள்.

சுவனப்பிரயின் மிக்க மகிழ்வோடு பதிவிட்டுள்ளாா்.

Dr.Anburaj said...

தானே இருநிலம் தங்கி விண்ணாய் நிற்கும்;
#006 to #010

#6. முக்தி தருபவன் சிவன்

அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனின்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன்றில்லை
அவனன்றி ஊர் புகுமாறறி யேனே.

சிவனை விட உயரிய தெய்வம் ஒன்றும் இல்லை.
அவனையன்றிச் செய்யும் அருந்தவம் ஒன்றும் இல்லை.
அவனின்றி மும் மூர்த்திகள் செய்வது ஒன்றும் இல்லை.
அவனின்றி முக்தி அடையும் வழி ஒன்றும் இல்லை.

#7. அவனியோருக்குத் தந்தை சிவனே!

முன்னை ஒப்பாய் உள்ள மூவர்க்கும் மூத்தவன்
தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன்
தன்னை,” அப்பா” எனில் அப்பனுமாய் உளன்
பொன்னை ஒப்பு ஆகின்ற போதகத் தானே.

தனக்குச் சமமான மும் மூர்த்திகளுக்கும் மூத்தவன்;
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைமகன் சிவன்;
தன்னை “அப்பா!” என்பவருக்குத் தந்தையாவான்;
பொன்னை ஒத்த ஸஹஸ்ர தளத்தில் விளங்குவான்.

#8. வெய்யன், தண்ணியன்

தீயனும் வெய்யன் புனலினும் தண்ணியன்;
ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை;
சேயினும் நல்லன்; அணியன் நல்அன்பர்க்கு;
தாயினும் நல்லன்; தாழ் சடையோனே.

தாழ்ந்த சடையினை உடைய சிவ பெருமான்
தீயவருக்குத் தீயை விட வெம்மையானவன்;
தன் அடியவருக்கு நீரை விடக் குளிர்ந்தவன்;
சின்னக் குழந்தையை விட நல்லவன் ;
தன் அன்பர்களுக்கு மிகவும் அருகில் இருப்பவன்;
பெற்ற தாயைவிட அருள் மிகுந்தவன்;
ஆயினும் அவன் அருளை எவரும் அறிவதில்லை

# 9. தொழப்படுவர் இல்லாதவன்

பொன்னால் புரிந்திட்ட பொற்சடை யென்னப்
பின்னால் பிறங்க இருந்தவன்; பேர் நந்தி;
என்னால் தொழப்படும் எம் இறை; மற்று அவன்
தன்னால் தொழப்படுப வார்இல்லை தானே.

பொன்னை முறுக்கி அமைத்தது போன்ற
செஞ்சடை பின்புறம் விளங்குகின்ற சிவன்;
அவன் பெயர் நந்தி என்பதாகும்;
என்னால் வணங்கத் தகுந்தவன் அவன்;
உயிர்கள் எல்லாவற்றுக்கும் தலைவன்;
ஆனால் அவனால் வணங்கத் தகுந்தவர்
என்று எவரும் இல்லாதவன் என் இறைவன்.

# 10. யாதுமாகி நிற்பவன்

தானே இருநிலம் தங்கி விண்ணாய் நிற்கும்;
தானே சுடும் அங்கி, ஞாயிரும், திங்களும்;
தானே மழை பொழி தையலுமாய் நிற்கும்;
தானே தடவரை, தண்கடல் ஆமே.

தானே இரு நிலத்தையும் தாங்குவான்;
தானே விண்ணாக வடிவெடுத்து நிற்பான்;
தீயாகவும், சூரிய, சந்திரர்களாகவும் உள்ளான்;
தானே அருள் மழை பொழியும் சக்திதேவி ஆகின்றான்;
அகன்று உயர்ந்த மலையும் அவனே!
பரந்து குளிர்ந்த கடலும் அவனே!

Dr.Anburaj said...

#19. தவத்தில் விளங்குகின்றவன்

இதுபதி ஏலம் கமழ்பொழில் ஏழும்
முதுபதி செய்தவன்; மூதறிவாளன்;
விதுபதி செய்தவன்; மெய்த்தவம் நோக்கி,
அதுபதி யாக அமர்கின் றானே.

வடக்கு திசைக்கு அதிபதியானவன் சிவபெருமான். விஷய வாசனைகள் விளங்கும் ஏழு ஆதாரங்களையும்
அழித்துப் பாழ் நிலமாக ஆக்கியவன் சிவன். அனைத்தையும் அறிய வல்ல மூதறிவாளன். நம் பாவங்களைப் போக்க வல்லவன் சிவன். அடியவர்களின் உண்மையான தவத்தைக் கண்டவுடன் அதையே தன் இருப்பிடமாகக் கொண்டு எழுந்தருள்வான்.

# 20. ஈசன் உருவம்

முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் அறநெறி நாடில்,
இடியும் முழக்கமும் ஈசன் உருவம்
கடிமலர்க் குன்றம் மலைஅது தானே.

சிவன், கருவில் உருவாகும் முன்னரே நம்முடைய பிறப்பையும், இறப்பையும் வரையறை செய்பவன். அவன் உறையும் நியதியை அறிந்து கொண்டால் அதுவே விளக்கம் பொருந்திய கண் மலர்களுக்கு மேலுள்ள சிரசாகும்.
அந்த இறைவனின் வடிவம் ஒளியும், இடியின் ஒலியும் ஆகும்.

(பஞ்ச பூதங்களின் தலைவர் சிவபெருமான். தியானப் பயிற்சியில ஈடுபடுபவர்களுக்கு ஒளி வட்டம் தோன்றும்! இடி முழக்கம் கேட்கும்!)

-------------------------------------------------
பெற்றா ருலகில் பிரியாப் பெருநெறி
பெற்றா ருலகில் பிறவாப் பெரும் பயன்
பெற்றாரம் மன்றில் பிரியாப் பெரும் பேறு
பெற்றா ருலகுடன் பேசப் பெருமையே.

பொன் போன்று ஒளிரும் வெளியில் விளங்கினாலும், சிவசித்தர்கள் உலகை விட்டுப் பிரிந்து நிற்பதில்லை.உலகத்தினருக்கு உதவுவதையே தம் கொள்கையாக கொள்வர். உலகில் இருந்து கொண்டு உலகத்தினருக்கு உதவினாலும் அவர்கள் மீண்டும் உலகில் பிறவாத பெரும் பேறு பெறுவார். தம் சேவையை பந்தமின்றிச் செய்வதுவே காரணம் ஆகும்.

43. நிறைந்து நிற்பான்

அரன்அடி சொல்லி, அரற்றி, அழுது
பரன்அடி நாடியே, பாவிப்ப நாளும்
உரன்அடி செய்து அங்கு ஓதுங்க வல்லார்க்கு
நிரன்அடி செய்து நிறைந்து நின்றானே.

திரு ஐந்தெழுத்தை தூய உள்ளத்துடன் இடைவிடாது ஓதி, அவன் பிரிவை ஆற்றாமல் அரற்றியும் அழுதும் திரிந்து, அவன் அடிகளையே எப்போதும் நாடுபவர்களுக்கு,அந்தத் திருவடிகளிலேயே அடங்கி நிற்க வல்லவர்களுக்கு, அவன் தன் திருவடிகளை உறுதியாகத் தருவான். மேலும் அவர்களிடம் ஒன்றி நிறைந்து நிற்பான்.

#44. அன்புள் விளங்குவான்

போற்றி என்பார் அமரர் புனிதன் அடி;
போற்றி என்பார் அசுரர் புனிதன் அடி;
போற்றி என்பார் மனிதர் புனிதன் அடி;
போற்றி என் அன்புள் விளங்க வைத்தேனே.

அமரர்கள் சிவபெருமானைப் போற்றுவர். அசுரர்கள் சிவபெருமானைப் போற்றுவர்; மனிதர்கள் சிவபெருமானை போற்றுவர். நானும் அந்தப் பெருமானைப் போற்றி வணங்கி என் அன்பினுள் அவன் விளங்குமாறு செய்தேன்.

(தேவர்கள் தம் சுய நலத்துக்காகப் போற்றுவர். ஞானிகள் எப்பயனும் கருதாமல் போற்றுவர். தேவர்கள் ஈசனை அன்பு இன்றிப் போற்றுவர். ஞானிகள் ஈசனை அன்புடன் போற்றுவர்.)

#45. வழிகாட்டி

விதிவழி அல்லதுஇல் வேலை உலகம்;
விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை;
துதிவழி நித்தலும் சோதிப் பிரானும்
பதிவழி காட்டும் பகலவன் ஆமே.

கடல் சூழ் உலகு இறைவன் விதித்தபடி இயங்கும். வேறு விதமாக அதனால் இயங்க இயலாது. நாம் அடையும் இன்பமும் விதி வழிப்பட்டதே. அதுவும் இறைவனின் விதிக்கு மாறுபட்டதல்ல. துதிவழி நின்றால் பேரொளியாகிய சோதிப்பிரான் முக்தி பெறும் வழியை நமக்கு பகலவன் போலக் காட்டுவான்