Followers

Showing posts with label israel. Show all posts
Showing posts with label israel. Show all posts

Wednesday, January 13, 2016

தன்னை சுட்டவனை கடைசியாக பார்த்து சரியும் சிறுவன்!



ஆயுதங்களற்ற நிராயுதபாணியாக ஆடி ஓடிய சிறுவன் நான்!

பாலஸ்தீனியனாக எனது சொந்த மண்ணில் பிறந்தவன் நான்!

கோழைத் தனமாக என்னை சுட்டு நீ மெடல் வாங்கலாம்!

வந்தேறியான இஸ்ரேலி நீ சந்தோஷத்தில் திளைக்கலாம்!

உன்னை கடைசியாக ஒரு முறை பார்த்துக் கொண்டேன்!

இந்த ஒரு குண்டுக்கு பதிலாக ஓராயிரம் குண்டுகள்

உனது நெஞ்சை பதம் பார்க்கும் அந்த இறுதி நாள்

நியாயத் தீர்ப்பு நாளில் என் இறைவன் முன்னால்

மக்கள் குழுமியிருக்கும் கூட்டத்துக்கு முன்னால்

கண்டிப்பாக உன்னை பழி தீர்ப்பேன்! மறந்து விடாதே!

வீரனான எனக்கு பூமியில் இன்று ஒரு முறைதான் சாவு

கோழையான உனக்கு மறுமையில் பல முறை சாவு!

--------------------------------------------------

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!

நிச்சயமாக நாம் இறைவனுக்கு உரியவர்கள் அவனிடமே நாம் திரும்ப வேண்டியுள்ளது

அல் குர்’ஆன் 2:156

Saturday, January 02, 2016

ஐஎஸ்ஐஎஸ் என்ற தீவிரவாத குரூப்பை உருவாக்கியது ?

ஐஎஸ்ஐஎஸ் என்ற தீவிரவாத குரூப்பை உருவாக்கியது ஒபாமாவும் ஹிலாரி கிளிண்டனும் - டொனால்ட் ட்ரம்ப்

Hillary Clinton and Barack Obama created Isis, says Donald Trump

-theguardian.com
03-01-2016

பல வருடங்களாக நாம் சொல்லி வருகிறோம். ஐஎஸ்ஐஎஸ் என்ற தீவிரவாத அமைப்பு அரபு நாட்டு பெட்ரோலை கொள்ளையடிக்க இஸ்ரேலாலும் அமெரிக்காவாலும் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு என்று. அதனை இன்று அமெரிக்க ஜனாதிபதிக்கு போட்டியிடும் ஒரு வேட்பாளரே கூறியிருப்பது உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. கார்டியன் பத்திரிக்கையும் இதனை செய்தியாக வெளியிட்டுள்ளது. எவ்வளவு திறமையாக மறைத்தாலும் உண்மை ஒருநாள் வெளிப்படவே செய்யும் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சிறந்த உதாரணம்.

http://www.theguardian.com/us-news/2016/jan/03/hillary-clinton-and-barack-obama-created-isis-says-donald-trump

Thursday, December 31, 2015

ஜெருஸலத்திலும் தூய இஸ்லாத்தை எத்தி வைக்கும் பணி!











இன்று உலக அளவில் இஸ்லாமியருக்கு பெருத்த சேதங்களை விளைவிப்பவர்கள் யூதர்களே.... அதிலும் குறிப்பாக இஸ்ரேலைப் பற்றி சொல்லவே வேண்டாம். எப்படி ஒருவர் பார்பனராக மாற முடியாதோ அது போல் யூதனாகவும் ஒருவன் மாற முடியாது. ஆனால் இஸ்லாம் நாள் தோறும் வளர்ந்து கொண்டுள்ளது. இது யூதர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளவர்களுக்கு பெருத்த தலைவலியாக இருக்கிறது. அனைவரும் இஸ்லாமியராக மாறி விட்டால் நமக்கு மதிப்பு போய் விடுமே என்ற அச்சத்தில் இஸ்லாமியரின் மேல் பொய்க் குற்றச்சாட்டுக்கள். குண்டு வெடிப்புகள் நிகழ்த்தி இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்கப் பார்க்கிறார்கள்.

அதே அளவுகோல்தான் இந்தியாவிலும். இந்து மக்களை தங்களுக்கு கீழ்படிய வைத்து இத்தனை காலம் சுகமாக வாழ்ந்து விட்டது மேல்சாதி வர்க்கம். தற்போது பல இந்து பிற்படுத்தப்பட்ட மக்கள் இன விடுதலை வேண்டி இஸ்லாத்தை நோக்கி அலை அலையாக வந்து கொண்டிருக்கின்றனர். இது மேல் சாதி வர்க்கத்துக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இஸ்லாத்தின் மேல் எப்படியாவது பழி சுமத்த எந்த நேரமும் சிந்தனையுடனேயே உள்ளனர். வன்முறையை இஸ்லாமிய பெயர்களில் அரங்கேற்றுகின்றனர். பல குண்டு வெடிப்புகளை நிகழ்த்துகின்றனர். 'கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் வரை' என்பது போல் அனைத்தும் இந்துத்வாவாதிகள் செய்ததாக நிரூபிக்கப்பட்டது. இந்த மாதம் வந்த மழை வெள்ளம் இஸ்லாமியர் எப்படிப்பட்டவர்கள் என்பதை பலரும் உணர்ந்து கொண்டனர்.

அதே போல் இஸ்ரேலிய யூதர்களுக்கு இஸ்லாத்தை எத்தி வைக்கும் பணியை நமது சகோதரர்கள் செய்து வருகின்றனர். அவர்கள் இஸ்லாத்தை ஏற்கிறார்களோ இல்லையோ இஸ்லாம் பற்றிய தவறான பிம்பத்தை துடைத்தெறிய இது போன்ற அழைப்புப் பணி நமக்கு மிக உதவிகரமாக இருக்கும்.

Wednesday, December 30, 2015

நிஜமான ஹீரோக்களை பார்க்க வேண்டுமா?

சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய இஸ்ரேலிய வீரர்கள். கொஞ்சம் கூட அசராது தங்களின் இறை வணக்கத்தை செலுத்திக் கொண்டிருக்கும் பாலஸ...

Posted by Nazeer Ahamed on Wednesday, December 30, 2015


சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய இஸ்ரேலிய வீரர்கள். கொஞ்சம் கூட அசராது தங்களின் இறை வணக்கத்தை செலுத்திக் கொண்டிருக்கும் பாலஸ்தீன முஸ்லிம்கள். துப்பாக்கி வைத்திருக்கும் இஸ்ரேலியர்கள் மனதில் இனம் புரியாத ஒரு திகில் இருக்கிறது. நிராயுதபாணிகளாக நிற்கும் முஸ்லிம்கள் மனதில் எந்த பயமும் இல்லை.

உண்மையாளர்களுக்கு வீரர்களுக்கு ஒரு முறைதான் சாவு. கோழைகளுக்கு தினமும் சாவு. தினம் தினம் அவன் செத்து பிழைப்பான். இஸ்லாமியன் என்ற காரணத்துக்காக வெட்டுப்பட்டோ குண்டடிப் பட்டோ இறந்தால் அந்த இளைஞனுக்கு நேரடியான சொர்க்கம். எனவே எந்த பயமுமின்றி யாருக்கும் தலை வணங்காமல் செல்கின்றனர் முஸ்லிம்கள். அரசும், ராணுவமும் காவல் துறையும் அமெரிக்காவும் கை வசம் இருப்பதால் இன்று வரை தாக்கு பிடிக்கிறது இஸ்ரேல். நிராயுதபாணிகளாக பாலஸ்தினர்களை சந்திக்கச் சொல்லுங்கள் பார்போம். ஒரே நாளில் இஸ்ரேல் காணாமல் போய் விடும்.

இஸரேலின் கைப்பாவைகளாக செயல்படும் நம் நாட்டு இந்துத்வாவாதிகளுக்கும் இது பொருந்தும். 10 பேர் சேர்ந்து கொண்டு திருட்டுத்தனமாக சென்று ஒரு முஸ்லிமைக் கொல்வார்கள். குஜராத்திலிருந்து நேற்று நடந்த ஏர்வாடி ஹாஜா கொலை வரை இந்த கோழைத்தனத்தைத்தான் இவர்கள் பின்பற்றுகிறார்கள்.

ஆட்டோ டிரைவரான ஹாஜாவை 'சவாரிக்கு வா' என்று சொல்லி அழைத்துச் சென்று ஐந்து பேர் கொண்ட இந்துத்வ கும்பல் வெட்டி சாய்த்திருக்கிறது. வீர முள்ள ஆண் மகன்களாக இருந்திருந்தால் நேருக்கு நேர் சந்தித்திருப்பார்கள். ஆனால் இவர்கள்தான் கோழைகள் ஆயிற்றே. குஜராத்திலும் 100 மற்றும் 200 பேராக சென்றுதான் பெண்களையும் வயோதிகர்களையும் கொன்றிருக்கிறார்கள் பேடிகள். இறைவன் இவர்கள் மனத்திலே நம்மைப் பற்றிய ஒரு பயத்தை உண்டு பண்ணி விடுகிறான். எனவேதான் நேருக்கு நேர் சந்திக்க பயந்து கோழைத்தனமாக நடந்து கொள்கின்றனர்.

'ஏக இறைவனை மறுப்போரே! உங்கள் கூட்டம் அதிகமாக இருந்த போதும் அது உங்களுக்குச சிறிதளவும் உதவாது. நம்பிக்கைக் கொண்டோருடன் இறைவன் இருக்கிறான்'

-குர்ஆன் 8:19

Saturday, November 28, 2015

ஐஎஸ்ஐஎஸ் திருடிய பெட்ரோல் இஸ்ரேலுக்கு செல்வதெப்படி?



சிரிய எண்ணெய் கிணறுகளிலிருந்து ஐஎஸ்ஐஎஸ்ஸால் திருடப்பட்ட பெட்ரோல் துருக்கி வழியாக இஸ்ரேலுக்கு எப்படி யாரால் கடத்தப்படுகிறது என்பதை விளக்கும் அரிய படம். ஒரு லேப்டாப்பையும் இணைய வசதியையும் வைத்திருக்கும் நமக்கு தெரிந்த செய்தி அமெரிக்காவின் நாசாவுக்கு தெரியவில்லையாம்...

நம்புங்கண்ணே நம்புங்க.....

Monday, November 16, 2015

பாரிஸ் தாக்குதலையடுத்து உடனடியாக பலனடைந்தவர்கள் யார்?













வெள்ளிக் கிழமை பாரிஸில் தீவிரவாதிகளின் தாக்குதல் நடைபெற்றது. மறு நாள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மீது போர் பிரகடனம் செய்தன பல நாடுகள். அடுத்த சில மணி நேரங்களிலேயே உலக ஆயுத வியாபாரிகளின் ஆயுத விற்பனையும் சூடு பிடித்துள்ளது.

பாரிஸ் தாக்குதலால் நேரிடையாக லாபம் அடைந்தது யார் என்பது இப்போது புரிகிறதா?

https://theintercept.com/2015/11/16/stock-prices-of-weapons-manufacturers-soaring-since-paris-attack/

Sunday, February 22, 2015

ஐஎஸ்ஐஎஸ் யாருடைய ஆட்கள்? மற்றுமொரு ஆதாரம்!



உலக முஸ்லிம்கள் லட்சக்கணக்கான பேர் இருந்து இறைவனை தொழுதாலும் சேர்ந்து தொழுவார்கள். அடுத்து கஃபா எந்த திசையில்இருக்கிறதோ அந்த திசையை நோக்கித்தான் தொழுவர். நம் முண்டாசுக் கவி பாரதி கூட 'திக்கை வணங்கும் துருக்கர்' என்று பாடினான். பாரதிக்கே தெரிந்த இந்த உண்மை ஐஎஸ்ஐஎஸ்யை தயாரித்த அமெரிக்க சிஐஏக்கும் இஸ்ரேலின் மொஸாத்துக்கும் தெரியவில்லை.

திருடன் எவ்வளவுதான் தடயங்களை அழித்து விட்டு சென்றாலும் ஏதாவது ஒன்றை அவசரத்தில் விட்டு விடுவான் என்று கேள்விப்பட்டுள்ளோம். அதுபோல் சிஐஏக்கும மொசாத்துக்கும் தொழுவது எப்படி என்று தெரிந்த அளவுக்கு ஒரே திசையை நோக்கித்தான் தொழ வேண்டும் என்ற உண்மை தெரியாமல் போய் விட்டது. ஐரோப்பா, அமெரிக்கா, இஸ்ரேல் என்று கூலிக்கு அழைத்து வரப்பட்ட ஆட்களுக்கு சரியான பயிற்சி இல்லாததால் ஆளுக்கொரு பக்கமாக திரும்பி தொழுது கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் உண்மை முஸ்லிம்களாக இருந்தால் அல்லவா இஸ்லாமிய சட்ட திட்டங்கள் சரிவர தெரிந்திருக்கும்? எனவே இது இவர்களின் தவறல்ல. சிஐஏ மொசாத் போன்ற நாசகார உளவு நிறுவனங்களின் தவறு. அவர்களின் அறியாமை இதிலும் வெளிப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் யார் என்பதை உலகுக்கு காட்டிக் கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்கள் கழித்து பல உண்மைகளும் தானாக வெளிவரும். அது வரை பொறுத்திருப்போம்.

Wednesday, February 11, 2015

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பாலஸ்தீனியர்கள் சுட்டு கொலை!







அமெரிக்காவின் நார்த் கரோலினாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பாலஸ்தீனிய முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த துயர சம்பவம் இன்று நடந்துள்ளது. பரகத் வயது 23, அவரது மனைவி யூசுர் சாலிஹா வயது 21, தங்கை ரிஜான் அபு சாலிஹா வயது 19 இந்த மூன்று இளம் தளிர்களை வீட்டீன் உள்ளே வந்து தலையில் சுட்டு கொன்றிருக்கிறான் ஒரு கொடியவன். அவனை போலீசார் கைது செய்துள்ளனர். 46 வயதான ஸ்டிபன் ஹீக்ஸ் என்று போலிஸாரால் அறியப்பட்டுள்ளான்.

இந்த மூன்று பாலஸ்தீனியர்களுமே எப்போதும் சமூக சேவைகளில் மிகவும் அக்கறை கொண்டவர்கள். இந்த குடும்பம் பொது மக்களுக்கு சாரிட்டி மூலம் உணவு விநியோகத்திலும் அதிகம் ஈடுபடும். பாலஸ்தீனிலும் ஒரு மருத்துவ மனையை நிர்வகிக்க ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

பரகத் மருத்துவ படிப்பை தேர்ந்தெடுத்து அமெரிக்க பல்கலைக் கழகத்தில் படித்து வந்தார்.அவரது மனைவியும் கல்லூரியில் படித்து வரும் மாணவி. இரண்டு மாதம் முன்பு தான் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது. வாழ வேண்டிய இந்த இளம் குருத்துகளை பாவிகள் அழித்து விட்டனர்.

இவர் நடத்தி வரும் சமூக வலை தளம் ட்விட்டரில் ஒரு வாரம் முன்பு அவர் பதிந்த ஒரு செய்தி:

'பாலஸ்தீனியர்களை கொல்வோம்' என்று ஒரு சாராரும் 'யூதர்களை கொல்வோம்' என்று ஒரு சாராரும் அவரவர் நிலைப்பாட்டில் இருக்கின்றனர். இது மிகவும் தவறான அணுகு முறை. இது போன்ற கொலைகளால் எந்த பிரச்னையும் தீரப் போவதில்லை.' என்று ட்விட் செய்துள்ளார்.

இவர்கள் சமூக சேவை செய்ததைத் தவிர வேறு எந்த குற்றமும் செய்யவில்லை. இவர்கள் பாலஸ்தீனியர்கள். இந்த மூன்று பேரையும் கொல்வதற்கு இது போதும் இஸ்ரேலியர்களுக்கு.

வாழ வேண்டிய இளம் தளிர்கள் இன்று கருகி விட்டன. இவர்களின் மறுமை வாழ்வு சிறப்பாக அமைய நாமும் பிரார்திப்போம்.

தகவல் உதவி
INDEPENDENT.CO/NEWS
11-02-2015

Saturday, January 31, 2015

நெதன்யாஹூவின் மனைவி ஊழல் புகாரில் சிக்கியுள்ளார்!



இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ வின் மனைவி சாரா தற்போது ஊழல் புகாரில் சிக்கியுள்ளார். பிளாஸ்டிக் பொருட்களை மறு சுழற்சி செய்வதற்காக இஸ்ரேலிய மக்களிடமிருந்து பொது நிதி திரட்டியுள்ளனர். அதிலிருந்து கிடைத்த வருமானத்தின் ஒரு பகுதியை சாரா தனது சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இஸ்ரேலின் தினப்பத்திரிக்கைக்கு நெதன்யாஹூவின் விடு;டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மெனி நேஃபாளி இந்த குற்றச் சாட்டை வைத்துள்ளார்.

சாரா நெதன்யாஹூ 4000 டாலர் பொது மக்கள் பணத்தை சுருட்டியிருப்பதாக இவரது குற்றச்சாட்டு உள்ளது. (இந்திய அரசியல்வாதிகளைப்போல் 100 கோடி 200 கோடி என்று சுருட்டாமல் மிக குறைந்த தொகையாக உள்ளதே. :-) ) நஃப்தாலி 20 மாதங்கள் நெதன்யாஹூவின் வீட்டில் வேலை செய்துள்ளார். நெதன்யாஹூவின் மனைவி தன்னை துன்புறுத்தியதாகவும் இன்னொரு குற்றச்சாட்டையும் வைத்துள்ளார். மார்க்கரெட் தாட்சர் இரங்கல் விழாவில் செலவழிக்கப்பட்ட தொகையிலும் கணிசமான தொகையை அம்மணி சுருட்டியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அம்மணி ப்யூட்டி பார்லருக்கு அதிகம் செலவழிப்பதாக நினைக்கிறேன். :-) இது அனைத்தும் இஸ்ரேலிய தினப் பத்திரிக்கை யூதியோத் ஆரோனாத் Yedioth Ahronoth தில் வந்துள்ளது. ஐஸ்கிரீம் சப்ளை செய்வது சம்பந்தமாக பட்ஜெட் தாக்கல் செய்ததில் நெதன்யாஹூ ஊழல் செய்துள்ளதாக முன்பு செய்தி வந்து இவருக்கு அரசியல் அரங்கில் பின்னடைவையும் ஏற்படுத்தியது. வரும் மார்ச்சில் இஸ்ரேலில் தேர்தல் நடக்கவுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளெல்லாம் நெதன்யாஹூவின் அரசியல் வாழ்வை ஒரு முடிவுக்கு கொண்டு வந்து விடும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து. பொறுத்திருந்து நல்ல செய்தியை எதிர்பார்போம்.

தகவல் உதவி

By Inna Lazareva, Tel Aviv

telegraph.co.uk

30 Jan 2015

http://www.telegraph.co.uk/news/worldnews/middleeast/israel/11379902/Israeli-PMs-wife-obsessively-recycled-bottles-for-cash.html