Followers

Showing posts with label ஹஜ். Show all posts
Showing posts with label ஹஜ். Show all posts

Monday, October 09, 2017

ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை!




'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை!
மோடி அரசு ஹஜ் மான்யம் ரத்து செய்யப் போவதாக அறிவிப்பு செய்துள்ளது. நல்ல முயற்சி. இதனை உடன் அமுல்படுத்த வேண்டும். அப்போதுதான் இஸ்லாமியர் பெயரை சொல்லி இந்துத்வாவாதிகள் சாப்பிடும் உண்மை உலகுக்கு வெளிச்சத்துக்கு வரும். பழைய பதிவு என்றாலும் மீண்டும் அதனை பதிக்கிறேன்.

பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு? வசதியுடைய முஸ்லிம்களுக்குத்தானே கடமை' என்ற வாதத்தை வைக்கின்றனர். நியாயமான கோரிக்கையும் கூட. இது பற்றி இந்த பதிவில் அலசுவோம்.

கேரள ஹஜ் கமிட்டி தலைவரும் வழக்கறிஞரும் சட்டமன்ற உறுப்பினருமான பி.டி.அப்துல் ரஹீம் அவர்கள் தேஜஸ், மாத்யமம் மலையாள நாளிதழ்களில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்:

ஹஜ் மான்யம் என்று கேட்டவுடன் புனித பயணிகளை அரசு இலவசமாக அழைத்துச் செல்வதாகவோ அல்லது புனித யாத்திரைக்கு பெருந் தொகையை ஒதுக்குவதாகவோ பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர். ஆனால் இதில் துளி கூட உண்மையில்லை.

மத்திய அரசின் கீழ் ஹஜ் கமிட்டி வழியாக செல்லும் ஒவ்வொரு புனித பயணியும் பயணம், தங்குமிடம், உணவு உள்ளிட்ட தேவைகளுக்காக சராசரியாக ஒன்றே கால் லட்ச ரூபாய் கட்டுகிறார். இதில் விமானக் கட்டணம் தற்பொழுது 16 ஆயிரம் ஆகும். இது நிரந்தர கட்டணமாகும். விமான பயணத்திற்கு இதனை விட அதிக கட்டணம் தேவைப்பட்டால் அதனை அரசு வழங்கும். இதுதான் ஹஜ் மான்யம். இந்த மான்யமும் அரசின் கீழ் இயங்கும் விமான நிறுவனங்களுக்கு மட்டுமே அளிக்கப்படும். தனியார் விமானங்களுக்கு கிடையாது.

உதாரணமாக...கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஹஜ் புனித பயணிகள் கோழிக்கோட்டில் இருந்து ஹஜ்ஜூக்கு புறப்படுகின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். கோழிக் கோட்டிலிருந்து ஜெத்தா செல்வதற்கு ஏர் இந்தியா வசூலிக்கும் தொகை 17300 ரூபாய் ஆகும். (தற்போது சில ஆயிரங்கள் வித்தியாசப்படலாம்). இந்த தொகைப்படி ஒரு ஹஜ் பயணிக்காக அரசு செலுத்த வேண்டிய மானியத் தொகை வெறும் 1300 ரூபாய் மட்டுமே! (ஜெட் ஏர்வேஸின் விமானக் கட்டணத்தோடு ஒப்பிட்டால் ஒவ்வோர் ஹஜ் பயணிக்கும் ரூ 2000 அரசு திரும்ப தர வேண்டியிருக்கும்.

ஒன்றேகால் லட்ச ரூபாயை புனித ஹஜ் பயணத்திற்காக கட்டும் பயணி மேலதிகமான 1300 ரூபாயை கட்டத் தயங்குவாரா? அதனையும் நாங்களே வழங்குகிறோம் என்று ஹஜ் பயணிகள் கூறினாலும் அரசு இதுவரை சம்மதிக்கவில்லை. நாங்களே வழங்குகிறோம் என பிடிவாதம் பிடித்து வருகிறது. இங்கேதான் ஹஜ் மானியத்தின் பெயரால் அரசு நடத்தும் ஏமாற்று வித்தை அம்பலப்படுகிறது. அதாவது ஆரிய மூளை இங்குதான் வேலை செய்கிறது.

அது எப்படி என்று பார்ப்போமா!

கடனில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தைக் காப்பாற்ற அரசு கண்டு பிடித்த வழிதான் இந்த ஹஜ் மானியம் என்பது. ஹஜ் மானியத்தின் பெயரால் ஒரு பெருந்தொகையை அரசு ஏர் இந்தியாவுக்கு தானமாக வழங்குகிறது. முந்தய ஆண்டுகளை கவனித்தால் இது புரிய வரும். 2008 ஆம் ஆண்டு ஹஜ் மானியமாக 770 கோடி ரூபாய் ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டது. அதற்கு முந்தய வருடம் 2007 ஆம் ஆண்டு 595 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இதே போல் 2009, 2010, 2011 ஆகிய ஆண்டுகளின் புள்ளி விபரங்களை பெற முயற்சி மேற்கொண்டபோது அந்த துறையைச் சார்ந்த அதிகாரிகள் தகவலை தர மறுக்கின்றனர். ஹஜ் ஒதுக்கீடு, நல்லெண்ண பிரதிநிதித்துவக் குழு ஆகியன தொடர்பான வழக்கில் தகவல்கள் ஒருக்கால் வெளியாகலாம்.

2008
ஆம் ஆண்டு 1.10 லட்சம் புனித பயணிகள் ஹஜ் கமிட்டி வழியாக ஹஜ்ஜூக்கு சென்றுள்ளனர். இவர்களுக்காக அரசு ஏர் இந்தியாவுக்கு மானியம் என்ற பெயரால் அளித்த தொகை 770 கோடி ரூபாயாகும். இதன்படி ஒவ்வொரு புனித பயணிக்கும் 70 ஆயிரம் ரூபாய் வீதம் ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு அளித்துள்ளது.

எவ்வளவு கடுமையான சீசனாக இருந்தாலும் ஒரு புனித பயணிக்கு கோழிக்கோட்டில் இருந்து ஜெத்தவிற்கோ மதினாவிற்கோ சென்று விட்டு திரும்பி வர விமானக் கட்டணமாக ரூ 70 ஆயிரம் செலுத்தத் தேவையில்லை. விமானக் கட்டணத்திற்காக புனிதப் பயணிகள் அளிக்கும் 16 ஆயிரம் ரூபாயோடு சேர்த்து ரூ 770 கோடியை ஏர் இந்தியாவுக்கு தாரை வார்க்கிறது மத்திய அரசு. பல பயணிகள் சவுதி விமானத்திலும் அனுப்பப்படுகின்றனர். அதற்கு மானியம் கிடையாது. இதன்படி ஒவ்வொரு நபருக்கும் எழுபதாயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை மானியமாக முஸ்லிம்களின் பெயரால் ஏர் இந்தியாவுக்கு அளிக்கிறது நமது கையாலாக அரசு.

ஏர் இந்தியாவில் பணி புரியும் நபர்களுக்கு நமது ஹஜ் மானியத் தொகை எப்படி அனுப்பப்படுகிறது என்பதை பார்த்தோம். நம் ரத்தத்தை உறிஞ்சி ஏர் இந்தியா குடும்பங்கள் சகல வசதிகளையும் பெற்று வாழ்கின்றன.

இனி வரும் காலங்களில் ஹஜ் புனித பயணம் செல்வோர் 'எங்களுக்கு மானியத் தொகை வேண்டாம்! அப்படி கொடுக்கும் பணத்தில் நாங்கள் ஹஜ் செய்ய விரும்பவில்லை' என்று கையெழுத்து இயக்கம் நடத்தி அதனை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். தவ்ஹீத் ஜமாத், தமுமுக, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்ற இயக்கங்கள் இதற்கான போராட்டங்களை அறிவிக்க வேண்டும். வழக்கும் தொடர வேண்டும். அவ்வாறு செய்தால் இந்த ஹஜ் மானியத்தில் உண்டு கொழித்த அனைத்து கருப்பு ஆடுகளும் யார் என்பது வெளி உலகுக்குத் தெரிய வரும்.

முஸ்லிம்களை ஏமாற்றுவதில் காங்கிரஸ் சற்றும் சளைத்ததல்ல. ஓட்டு கேட்டு வரும் அரசியல் கட்சிகளிடம் இத்தனை ஆண்டுகள் ஹஜ் மானியம் யார் யாருக்கு எவ்வளவு வழங்கப்பட்டது? இந்த மானிய பணத்தை இது நாள் வரை அனுபவித்தவர்கள் யார்? யார்? என்ற விபரங்களைக் கேட்க வேண்டும். முக்கியமாக காங்கிரஸ் தொண்டர்களிடம் கேட்க வேண்டும்.

ஆக....இஸ்லாமியரின் ஹஜ் மானிய பணத்தில் தனது ஜீவனை நடத்திக் கொண்டிருக்கிறது ஏர் இந்தியா நிறுவனம் என்பது இதன் மூலம் விளங்குகிறது.. இஸ்லாமியருக்கு உதவினோம் என்ற பெயரும் வந்து விடும்: ஏர் இந்தியாவின் ஊழியர்கள் சுகமான வாழ்வுக்கும் அடித்தளம் இட்டது போல் ஆகி விடும். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது இதுதானோ! :-(


Tuesday, September 05, 2017

ஜெத்தா பயண அனுபவம் - ஹஜ் பெருநாள்

ஜெத்தா பயண அனுபவம் - ஹஜ் பெருநாள்

முதலில் நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஹஜ் பெருநாள் வாழத்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஐந்து நாட்கள் ஹஜ் விடுமுறையை கழிக்க ஜெத்தா சென்றதால் இந்த தாமதமான வாழ்த்து... :-)

பல ஆண்டுகள் சந்திக்காமல் இருந்த நண்பர்களை இந்த முறை ஜெத்தாவில் சந்தித்தேன். சந்தோஷமான சந்திப்புகள். பழைய கதைகளை பேசிக் கொண்டே சிரித்து வயிறு வலி வந்து விட்டது. இவ்வாறு கதை பேசிக் கொண்டு பிரியாணி, நெய் சோறு என்று ருசித்துக் கொண்டிருந்ததால் வெளியில் அதிகம் சுற்றவில்லை.

மேலும் ரியாத்திலிருந்து ஜெத்தா செல்லும் போது தாயிஃப் நகரத்தை தொட்டுதான் செல்ல வேண்டும். (நாகூர் அனீஃபா பாடிய 'தாயிப் நகரத்து வீதியிலே' என்ற பாடல் ஞாபகம் வந்திருக்கும்) நபிகள் நாயகம் இந்த நகரத்தில் மிகவும் சிரமப்பட்டதாக வரலாறு தெரிவிக்கிறது. அவ்வாறு செல்லும் போது மலைகளை குடைந்து சாலைகளை அமைத்துள்ளார்கள். மிகவும் நேர்த்தியான சாலைகள். குறுகலான ரோடுகளாக இருந்தாலும் நன்கு பாதுகாப்பாக கட்டியுள்ளார்கள். அரஃபா நோன்பும் வைத்திருந்தோம். ஆனால் எந்த களைப்பும் தெரியவில்லை. வழியில் தொழுகைக்காக இரண்டு இடங்களில் நிறுத்தி தொழுகைகளை சேர்த்து தொழுது கொண்டோம்.

மலைப் பாதையை தேர்ந்தெடுப்பவர்களின் வாகனம் நல்ல கண்டிஷனோடு இருக்க வேண்டும். இன்ஜின், டயர், பெட்ரோல் அனைத்தும் சரியாக்கிக் கொண்டு மலைப் பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும். வழியில் பல வண்டிகள் பிரேக் டவுனாகி ஓரமாக நின்றதை பார்த்துக் கொண்டே வந்தோம். அங்கு வண்டியை சரி செய்வதும் மிகவும் சிரமம். நன்கு பழக்கமுள்ள ஓட்டுனர்கள் இருந்தாலே இந்த மலைப் பாதையை தேர்ந்தெடுங்கள்.

மலைப் பாதையின் ஊடே கேபிள் காரும் வலம் வருகிறது. விருப்பமுள்ளவர்கள் ஆசைக்காக சிறிது தூரம் பயணிக்கலாம். எங்களுக்கு நேரமில்லாததால் அதில் பயணிக்கவில்லை.  மேலிருந்து கீழ் நோக்கி பார்த்தால் தலை சுற்றுகிறது. அந்த அளவு உயரம். பயணத்தில் எந்த ஒரு அசம்பாவிதமும் இல்லாமல் பாதுகாப்பாக எங்களை கொண்டு சேர்த்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்.













போட்டோக்கள் இணையத்தில் எடுத்தது.....

Monday, September 04, 2017

ஹஜ் பயணிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்!


ஹஜ் பயணிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்!

இஸ்லாத்தின் முக்கிய கடமைகளில் ஒன்றான ஹஜ்ஜை நிறைவேற்ற உலக மக்கள் பல நாடுகளிலிருந்து 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ஓரிடத்தில் குழுமுகின்றனர். அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சவுதி அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியையே இந்த காணொளியில் காண்கிறீர்கள்.

Tuesday, August 29, 2017

அரஃபா நாளில் நோன்பு

ஹாஜிகள் அல்லாத மற்றவர்கள் அரஃபா நாளில் நோன்பு வைப்பதற்கு பின்வரும் செய்தி ஆதாரமாக அமைந்துள்ளது.
1976 قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثٌ مِنْ كُلِّ شَهْرٍ وَرَمَضَانُ إِلَى رَمَضَانَ فَهَذَا صِيَامُ الدَّهْرِ كُلِّهِ صِيَامُ يَوْمِ عَرَفَةَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ وَصِيَامُ يَوْمِ عَاشُورَاءَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அரஃபா நாள் நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டு பாவங்களுக்குப் பரிகாரமாகும்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
நூல் : முஸ்லிம்


Saturday, August 12, 2017

ஹாஜிகள் குழும தொடங்கி விட்டனர்!

உலகம் முழுவதிலுமிருந்து ஹாஜிகள் குழும தொடங்கி விட்டனர்!

உலகம் முழுவதிலும் இருந்து 140 நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் தங்களின் ஹஜ் கடமையை நிறைவேற்ற ஜெத்தா ஏர்போர்டில் குழுமத் தொடங்கி விட்டனர். 1000 க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் இமிக்ரேஷன் சரி செய்ய பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.


அனைவருக்கும் ஒரே உடை: ஒரே வணக்க வழிபாடு: கருப்பன், வெள்ளையன், அமெரிக்கன், ஐரோப்பியன், ஆப்ரிக்கன் என்ற பாகுபாடு இல்லாமல் 'இறைவா! உனக்கு நாங்கள் அடிபணிந்தோம்' என்று சப்தமாக கூறிக் கொண்டு இதோ வந்து விட்டனர் ஹாஜிகள். இந்த ஹாஜிகளின் எண்ணத்தை ஏக இறைவன் பரிபூரணமாக்குவானாக! எந்த ஒரு ஆபத்தும் இல்லாமல் தங்களின் கடமையை நிறைவேற்ற இறைவன் இவர்களுக்கு உதவி புரிவானாக!


Wednesday, January 20, 2016

'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை!





//*இந்த உலகில் கிட்டத்தட்ட 52 முஸ்லீம் ந நாடுகள் உள்ளன, அதில் எத்தனை நாடுகள் ஹஜ் மானியம் கொடுக்கின்றன ?//

வீர முத்து பால கிருஷ்ணன் என்ற இந்துத்வாவாதி நேற்று @ram nivas பதிவில் கக்கிய விஷமே இது. அதாவது 'ஹஜ் மான்யம்' என்ற பெயரில் மத்திய அரசு கோடிக் கணக்கில் இஸ்லாமியருக்கு கொட்டிக் கொடுப்பதாக ஒரு பொய்யை அரங்கேற்றுகிறார். ஹஜ் பயணம் செய்வோரிடமிருந்து மத்திய அரசு கொள்ளையடிக்கிறது என்பதுதான் உண்மை.

'ஹஜ் மான்யத்தால்' பலன் பெறுவது பெரும்பாலும் பார்பனர்களே. இது ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஏர் இந்தியா நிறுவனத்தில் அதிகம் வேலை செய்வது யார்,? பார்பனர்கள். ஓகே... இனி எனது பழைய பதிவை படியுங்கள் உண்மை விளங்கும்.

---------------------------

பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு? வசதியுடைய முஸ்லிம்களுக்குத்தானே கடமை' என்ற வாதத்தை வைக்கின்றனர். நியாயமான கோரிக்கையும் கூட. இது பற்றி இந்த பதிவில் அலசுவோம்.

கேரள ஹஜ் கமிட்டி தலைவரும் வழக்கறிஞரும் சட்டமன்ற உறுப்பினருமான பி.டி.அப்துல் ரஹீம் அவர்கள் தேஜஸ், மாத்யமம் மலையாள நாளிதழ்களில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்:

ஹஜ் மான்யம் என்று கேட்டவுடன் புனித பயணிகளை அரசு இலவசமாக அழைத்துச் செல்வதாகவோ அல்லது புனித யாத்திரைக்கு பெருந் தொகையை ஒதுக்குவதாகவோ பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர். ஆனால் இதில் துளி கூட உண்மையில்லை.

மத்திய அரசின் கீழ் ஹஜ் கமிட்டி வழியாக செல்லும் ஒவ்வொரு புனித பயணியும் பயணம், தங்குமிடம், உணவு உள்ளிட்ட தேவைகளுக்காக சராசரியாக ஒன்றே கால் லட்ச ரூபாய் கட்டுகிறார். இதில் விமானக் கட்டணம் தற்பொழுது 16 ஆயிரம் ஆகும். இது நிரந்தர கட்டணமாகும். விமான பயணத்திற்கு இதனை விட அதிக கட்டணம் தேவைப்பட்டால் அதனை அரசு வழங்கும். இதுதான் ஹஜ் மான்யம். இந்த மான்யமும் அரசின் கீழ் இயங்கும் விமான நிறுவனங்களுக்கு மட்டுமே அளிக்கப்படும். தனியார் விமானங்களுக்கு கிடையாது.

உதாரணமாக...கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஹஜ் புனித பயணிகள் கோழ்க்கோட்டில் இருந்து ஹஜ்ஜூக்கு புறப்படுகின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். கோழிக் கோட்டிலிருந்து ஜெத்தா செல்வதற்கு ஏர் இந்தியா வசூலிக்கும் தொகை 17300 ரூபாய் ஆகும். (தற்போது சில ஆயிரங்கள் வித்தியாசப்படலாம்). இந்த தொகைப்படி ஒரு ஹஜ் பயணிக்காக அரசு செலுத்த வேண்டிய மானியத் தொகை வெறும் 1300 ரூபாய் மட்டுமே! (ஜெட் ஏர்வேஸின் விமானக் கட்டணத்தோடு ஒப்பிட்டால் ஒவ்வோர் ஹஜ் பயணிக்கும் ரூ 2000 அரசு திரும்ப தர வேண்டியிருக்கும்.

ஒன்றேகால் லட்ச ரூபாயை புனித ஹஜ் பயணத்திற்காக கட்டும் பயணி மேலதிகமான 1300 ரூபாயை கட்டத் தயங்குவாரா? அதனையும் நாங்களே வழங்குகிறோம் என்று ஹஜ் பயணிகள் கூறினாலும் அரசு இதுவரை சம்மதிக்கவில்லை. நாங்களே வழங்குகிறோம் என பிடிவாதம் பிடித்து வருகிறது. இங்கேதான் ஹஜ் மானியத்தின் பெயரால் அரசு நடத்தும் ஏமாற்று வித்தை அம்பலப்படுகிறது. அதாவது ஆரிய மூளை இங்குதான் வேலை செய்கிறது.

அது எப்படி என்று பார்ப்போமா!

கடனில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தைக் காப்பாற்ற அரசு கண்டு பிடித்த வழிதான் இந்த ஹஜ் மானியம் என்பது. ஹஜ் மானியத்தின் பெயரால் ஒரு பெருந்தொகையை அரசு ஏர் இந்தியாவுக்கு தானமாக வழங்குகிறது. முந்தய ஆண்டுகளை கவனித்தால் இது புரிய வரும். 2008 ஆம் ஆண்டு ஹஜ் மானியமாக 770 கோடி ரூபாய் ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டது. அதற்கு முந்தய வருடம் 2007 ஆம் ஆண்டு 595 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இதே போல் 2009, 2010, 2011 ஆகிய ஆண்டுகளின் புள்ளி விபரங்களை பெற முயற்சி மேற்கொண்டபோது அந்த துறையைச் சார்ந்த அதிகாரிகள் தகவலை தர மறுக்கின்றனர். ஹஜ் ஒதுக்கீடு, நல்லெண்ண பிரதிநிதித்துவக் குழு ஆகியன தொடர்பான வழக்கில் தகவல்கள் ஒருக்கால் வெளியாகலாம்.

2008 ஆம் ஆண்டு 1.10 லட்சம் புனித பயணிகள் ஹஜ் கமிட்டி வழியாக ஹஜ்ஜூக்கு சென்றுள்ளனர். இவர்களுக்காக அரசு ஏர் இந்தியாவுக்கு மானியம் என்ற பெயரால் அளித்த தொகை 770 கோடி ரூபாயாகும். இதன்படி ஒவ்வொரு புனித பயணிக்கும் 70 ஆயிரம் ரூபாய் வீதம் ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு அளித்துள்ளது.

எவ்வளவு கடுமையான சீசனாக இருந்தாலும் ஒரு புனித பயணிக்கு கோழிக்கோட்டில் இருந்து ஜெத்தவிற்கோ மதினாவிற்கோ சென்று விட்டு திரும்பி வர விமானக் கட்டணமாக ரூ 70 ஆயிரம் செலுத்தத் தேவையில்லை. விமானக் கட்டணத்திற்காக புனிதப் பயணிகள் அளிக்கும் 16 ஆயிரம் ரூபாயோடு சேர்த்து ரூ 770 கோடியை ஏர் இந்தியாவுக்கு தாரை வார்க்கிறது மத்திய அரசு. பல பயணிகள் சவுதி விமானத்திலும் அனுப்பப்படுகின்றனர். அதற்கு மானியம் கிடையாது. இதன்படி ஒவ்வொரு நபருக்கும் எழுபதாயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை மானியமாக முஸ்லிம்களின் பெயரால் ஏர் இந்தியாவுக்கு அளிக்கிறது நமது கையாலாக அரசு.

ஏர் இந்தியாவில் பணி புரியும் நபர்களுக்கு நமது ஹஜ் மானியத் தொகை எப்படி அனுப்பப்படுகிறது என்பதை பார்த்தோம். நம் ரத்தத்தை உறிஞ்சி ஏர் இந்தியா குடும்பங்கள் சகல வசதிகளையும் பெற்று வாழ்கின்றன.

இனி வரும் காலங்களில் ஹஜ் புனித பயணம் செல்வோர் 'எங்களுக்கு மானியத் தொகை வேண்டாம்! அப்படி கொடுக்கும் பணத்தில் நாங்கள் ஹஜ் செய்ய விரும்பவில்லை' என்று கையெழுத்து இயக்கம் நடத்தி அதனை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். தவ்ஹீத் ஜமாத், தமுமுக, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்ற இயக்கங்கள் இதற்கான போராட்டங்களை அறிவிக்க வேண்டும். வழக்கும் தொடர வேண்டும். அவ்வாறு செய்தால் இந்த ஹஜ் மானியத்தில் உண்டு கொழித்த அனைத்து கருப்பு ஆடுகளும் யார் என்பது வெளி உலகுக்குத் தெரிய வரும்.

முஸ்லிம்களை ஏமாற்றுவதில் காங்கிரஸ் சற்றும் சளைத்ததல்ல. ஓட்டு கேட்டு வரும் அரசியல் கட்சிகளிடம் இத்தனை ஆண்டுகள் ஹஜ் மானியம் யார் யாருக்கு எவ்வளவு வழங்கப்பட்டது? இந்த மானிய பணத்தை இது நாள் வரை அனுபவித்தவர்கள் யார்? யார்? என்ற விபரங்களைக் கேட்க வேண்டும். முக்கியமாக காங்கிரஸ் தொண்டர்களிடம் கேட்க வேண்டும்.

ஆக....இஸ்லாமியரின் ஹஜ் மானிய பணத்தில் தனது ஜீவனை நடத்திக் கொண்டிருக்கிறது ஏர் இந்தியா நிறுவனம் என்பது இதன் மூலம் விளங்குகிறது.. இஸ்லாமியருக்கு உதவினோம் என்ற பெயரும் வந்து விடும்: ஏர் இந்தியாவின் ஊழியர்கள் சுகமான வாழ்வுக்கும் அடித்தளம் இட்டது போல் ஆகி விடும். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது இதுதானோ! :-(

'ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே.... காசு

காரியத்தில் கண் வையடா தாண்டவக் கோனே'


Posted by சுவனப் பிரியன் at 12:22 PM

Sunday, September 27, 2015

ஹஜ்ஜில் மற்றவரை காப்பாற்றி தனது உயிர் ஈந்த மன்சூரி!



சவுதி அரேபியா மாகாணம் யான்பூவில் மெகானிகல் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தவர் நியாசுல் ஹக் மன்சூரி. மனைவி மற்றும் மூன்று குழந்தைகளோடு யான்பூவில் வசித்து வந்தவர். இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். ஹஜ்ஜில் வரும் வெளிநாட்டவருக்கு உதவி செய்வதில் முன்னணியில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனமான India Fraternity Forum (IFF) ல் அங்கத்தினராக மினாவுக்கு வந்தார். 950 பேர் இவ்வாறு தொண்டு செய்ய வந்திருந்தனர். மினாவில் ஏற்பட்ட நெரிசலில் பல உயிர்களை காப்பாற்றியுள்ளார். ஆனால் தனது உயிரை காப்பாற்ற முடியவில்லை. நெரிசலில் சிக்கி இறந்துள்ளார் மன்சூரி.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் - "நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பச் செல்பவர்கள்"

இவரது தாயும் தந்தையும் இந்த வருட ஹஜ்ஜூக்கு வந்துள்ளார்களாம். அவர்களை இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை. கூட்டத்தில் அவர்கள் எங்கு தவித்துக் கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை. இறைவன் இவரது தாய் தந்தையரை நலமுடன் இருப்பிடத்தில் சேர்ப்பிப்பானாக!

மன்சூரி செய்த இந்த செயலுக்கு பெயர்தான் ஜிஹாத். நன்மையை நாடி ஒரு செயலை செய்து அதில் இன்று உயிர் பிரிந்துள்ளது. மன்சூரியின் பாவங்களை இறைவன் மன்னித்து சுவனபதியில் சேர்ப்பானாக! இவரது தாய் தந்தையர் நலமுடன் தங்களின் இருப்பிடத்தை அடைவார்களாக! சிரமத்திற்கு உள்ளாகியிருக்கும் பல லட்சம் ஹாஜிகளுக்கு இறைவன் நன்மையை வாரி வழங்குவானாக!

தகவல் உதவி
சவுதிகெஜட்
27-09-2015

Saturday, September 26, 2015

105 வயது நூர் முஹம்மதின் ஹஜ் பயண அனுபவம்!



'ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு தடங்கல் வந்து கொண்டேயிருக்கும். இடையில் குடும்ப சூழலும் கஷ்டத்தைக் கொடுத்த போது உடைந்தே போய் விட்டேன். 100 வயதை எட்டியவுடன் திட்டமிட்டு பொருளாதாரத்தை சேகரிக்க தொடங்கினேன். நாளுக்கு நாள் ஹஜ்ஜூக்கான செலவுகள் கூடிக் கொண்டே போனது மேலும் எனக்கு சிக்கலை கொடுத்தது. எனது வாழ்நாள் கனவான ஹஜ்ஜூப் பயணத்தை இன்று இறைவன் நனவாக்கி வைத்துள்ளான். பல ஆண்டுகள் செய்த எனது பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக் கொண்டுள்ளான். ஹஜ் பயணம் இந்த வயதில் மிகவும் சிரமம் என்று நினைத்திருந்தேன். ஆனால் எல்லா வசதிகளையும் இந்த அரசு செய்து கொடுத்து எங்களைப் போன்றவர்களின் பயணத்தை மிக இலகுவாக்கியுள்ளது. எல்லா புகழும் இறைவனுக்கே!' என்று பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்தார் 105 வயதை தொட்டிருக்கும் பாகிஸ்தானை சேர்ந்த நூர் முஹம்மது.

அவர் பேட்டியளிக்கும் போது கண்களிலிருந்து கண்ணீர் வந்து கொண்டேயிருந்தது. இது பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு 'இது எனது ஆனந்த கண்ணீர்' என்று பதிலளித்தார்.

இவரைப் போன்று பல்லாயிரக்கணக்கான வயோதிகர்களின் கனவை இறைவன் நனவாக்கி வைப்பானாக!

தகவல் உதவி
சவுதி கெஜட்
26-09-2015

Tuesday, September 22, 2015

நாளை அரஃபா நோன்பை மறக்க வேண்டாம்!



இந்த வருடம் வெளி நாடுகளிலிருந்து ஹஜ் செய்ய வந்த வெளி நாட்டு ஹாஜிகள் - 1377751

விமானம் மூலம் வந்தவர்கள் - 1327751

தரை மார்க்கமாக வந்தவர்கள் - 36981

கடல் மார்க்கமாக வந்தவர்கள் - 12923


தகவல் உதவி
சவுதி கெஜட்
22-09-2015

------------------------------------

அரஃபா நாளில் நோன்பு நோற்பது பற்றி நபிகள் நாயகம் அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் "அது கடந்த வருடத்தின் மற்றும் வரக்கூடிய வருடத்தின் பாவத்தை போக்கிவிடும்!" என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி), நூல்: முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத்.

"நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் ஒன்பதாம் நாள் நோன்பு வைப்பார்கள் என்று நபிகள் நாயகம் அவர்களின் துணைவியார்களில் சிலர் கூறினார்கள்"

அறிவிப்பவர்: ஹுனைதாபின் காலித்(ரலி), நூல்கள்: அபூதாவூத், நஸயி, அஹ்மத்.

Thursday, September 17, 2015

முன்பு போதைக்கு அடிமையானவர்கள் இன்று ஹஜ் பயணத்தில்!



இந்த வருட ஹஜ் பயணத்தில் திருத்தப்பட்ட போதைக்கு அடிமையானவர்களை அரசு செலவில் ஹஜ்ஜூக்கு அனுப்பி வைக்கிறது துபாய் காவல் துறை. இந்த வருட ஹஜ் பயணத்தில் நான்கு பேர் அரசு செலவில் வருகின்றனர்.

'தாருல் பர்' என்ற பெயரில் துபாய் காவல் துறையில் ஒரு அமைப்பு இயங்கி வருகிறது. இதன் பணி போதைக்கு அடிமையானவர்களை கண்டெடுத்து அவர்களுக்கு அன்பான முறையில் சிகிச்சை அளித்து அவர்களை சமூகத்தில் ஒன்றர கலக்க விடுவதே. 2009 ஆம் ஆண்டு ஆரமபிக்கப்பட்ட இந்த பணி 2015 வரை 69 ஆட்களை போதை பழக்கத்திலிருந்து முற்றிலுமாக விடுவித்து முடிவில் அவர்களை அரசு செலவில் ஹஜ்ஜூக்கும் அனுப்பி வைத்துக் கொண்டுள்ளது.

போதை மருந்துக்கு அடிமையான இரண்டு துபாய் நாட்டவர் அதிலிருந்து விடுபட்டு தங்களின் படிப்பையும் முடித்து அரசிடமிரந்து சான்றிதழ்களை பெறுவதையும்தான் நாம் மேலே பார்க்கிறோம்.

தகவல் உதவி
கல்ஃப் நியூஸ்
13-09-2015

போதை மருந்துக்கு அடிமையான ஒரு துபாய் வாசியின் வாக்கு மூலம்

“I tried to kill myself when I was 18, but failed. Then I tried again at 22, but failed again. My last attempt was at 25. I tried hanging myself, cutting my veins and burning myself — all because I was high and depressed,” Salman (full name withheld upon request) told Gulf News.

மதுவினால் நமது தமிழகம் முற்றிலுமாக அழிந்து வருகிறது. சகோதர சமுதாயத்தைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலான கூலி தொழிலாளிகள் தங்கள் வருமானத்தில் பெரும்பாலானவற்றை மதுவுக்கே அர்பணிக்கின்றனர். பள்ளி குழந்தைகள் கூட இன்று குடிக்கு அடிமையாகி உள்ளனர். இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத அரசு தனது அதிகாரிகளை மதுவின் விற்பனையை அதிகமாக்குங்கள் என்று அதிகாரத்தால் மிரட்டவும் செய்கிறது. தமிழகத்தின் வருங்காலத்தை நினைத்தால் திகிலாக இருக்கிறது. இறைவன்தான் எனது நாட்டைக் காப்பாற்ற வேண்டும்.

மது அருந்துதல் குறித்த இறைவனின் எச்சரிக்கை: –

“நபியே! மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு அவற்றில் சில பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது.” (அல்குர்ஆன் 2: 219)

மது அருந்துதல் ஷைத்தானின் அருவக்கத்தக்க செயலாகும்: –

நம்பிக்கை கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்-குர்ஆன் 5:90-91)

மது அருந்துபவர் மற்றும் மதுவுடன் தொடர்புடையவர்கள் அல்லாஹ் மற்றும் நபிகள் அவர்களால் சபிக்கப்பட்டவராவர்: –

மது அருந்துபவர், அதனை அருந்தச் செய்பவர், வாங்குபவர், விற்பவர், தயாரிப்பாளர், சுமப்பவர், இதன் மூலம் கிடைத்த வருவாயை சாப்பிடுபவர்கள் அனைவரையும் நபிகள் நாயகம் அவர்கள் சபித்துள்ளார்கள். (ஆதாரங்கள் : அபூதாவுத், திர்மிதி, இப்னுமாஜா)

Wednesday, September 16, 2015

வரலாறு காணாத இழப்பீட்டுத் தொகை வழங்க மன்னர் உத்தரவு!



சென்ற செப்டம்பர் 11 அன்று நடந்த மெக்கா கிரேன் விபத்தில் இறந்தவர்களுக்கு வரலாறு காணாத இழப்பீட்டுத் தொகையை வழங்க மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார். போன உயிர் திரும்பி வரப் போவதில்லை. ஆனால் சொந்தங்களை இழந்தவர்களுக்கு இந்த பொருளுதவியானது மிக உதவிகரமாக இருக்கும்.

பின் லாடன் குரூப்பின் பாக்கர் பின் லாடன் முதல் முக்கிய அதிகாரிகள் வரை எவரும் நஷ்ட ஈட்டுத் தொகையை அளிக்காமல் சவுதியை விட்டு வெளியேற முடியாது என்ற கண்டிஷனும் போடப்பட்டுள்ளது.


- இறந்தவர்களின் எண்ணிக்கை : 111

- காயமுற்றவர்கள் : 238+

- இறந்தவர்கள் மற்றும் நிரந்தரமாக ஊனமுற்றவர்களுக்கு - 1 கோடி, 78 லட்ச ருபாய்

- காயமடைந்தவர்களுக்கு - 89 லட்ச ருபாய்

- இந்த நஷ்ட ஈடு, பாதிக்கப்பட்ட மக்கள் கோர்டில் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்வதை தடுக்காது

- சவுதி அரசு செலவில், இறந்து போனவர்களின் குடும்பத்தினர் இருவர் அடுத்த வருடம் ஹஜ் செய்யலாம்

- இந்த வருடம் ஹஜ் செய்ய முடியாத நிலையில் காயமுற்றவர்கள், அடுத்தவருடம் மன்னரின் விருந்தினராக ஹஜ் செய்யலாம்

- காயமுற்றவர்களின் குடும்பத்தினருக்கு சவுதியில் தங்கி, அவர்களை கவனித்துக்கொள்ள பயண விசா அளிக்கப்படும்

" "என்னுடைய 50 வருட ஊடக துறையில், எந்த ஒரு முஸ்லிம் தலைவரும் இதுபோன்ற ஒரு பிரம்மாண்டமான நஷ்ட ஈடு அளித்ததாக நான் கேள்விபட்டதே இல்லை", என்று அமெரிக்காவை சார்ந்த, பத்திரிக்கையாளர் கமர் அப்பாஸ் ஜாப்ரி கூறியுள்ளார்.

போபாலில் நடந்த விஷ வாயு வழக்கில் யூனியன் கார்பைடு நிறுவனம் இன்று வரை முழுமையான இழப்பீட்டுத் தொகையை அந்த மக்களுக்கு வழங்கவில்லை. அதே நேரம் விபத்து நடந்த சில நாட்களிலேயே அதற்கு முடிவையும் கண்ட மன்னர் சல்மானுக்கு இறைவன் மேலும் அபிவிருத்தியை தந்தருள்வானாக!

துல் ஹஜ் முதல் பத்து நாட்களின் சிறப்பு

ஒரு முறை நபிகள் நாயகம் அவர்கள் தனது தோழர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது...

"தோழர்களே! இந்த துல்ஹஜ் மாதத்தில் முதல் பத்து நாட்களில் செய்யும் அமல்களை நேசிப்பது போல் அல்லாஹ் வேறு எந்த அமல்களையும் நேசிப்பது கிடையாது" என்று கூறியவுடன் அங்கிருந்த தோழர்கள்,

"யா ரஸூல்லல்லாஹ்! ஜிஹாத் செய்வதை விடவும் அதை அல்லாஹ் நேசிக்கின்றானா?" என்று கேட்டபோது,

"ஆம்," என்று கூறி விட்டு "என்றாலும் ஜிஹாதில் தனது உயிரையும், தனது பொருளையும் அல்லாஹ்வுக்காக அர்ப்பணித்தவர்களைத் தவிர" என்று கூறினார்கள்.

ஆதாரம் : (புஹாரி-969, திர்மிதி-688)

துல் ஹஜ்ஜின் முதல் 10 நாட்களில் நம்மால் முடிந்த நல்ல அமல்களை அதிகம் அதிகம் செய்து இறைவனின் நெருக்கத்தைப் பெறுவோமாக!

Tuesday, August 25, 2015

அரசு அனுமதி இல்லாமல் ஹஜ் செய்வோர் கவனத்திற்கு!



சவுதியில் வேலை செய்து வருவோர் குறைந்த செலவுதானே என்பதால் ஒவ்வொருவரும் நான்கு முறை ஐந்து முறை ஹஜ் செய்கிறார்கள். இதை பெருமையாக வெளியில் சொல்லவும் செய்கிறார்கள். ஐந்து வருடத்துக்கு ஒரு முறைதான் அரசு அனுமதிக்கும் என்பதால் ஆர்வமிகுதியால் சிலர் அரசு அனுமதியின்றி ஹஜ் பயணத்தை மேற்கொள்கின்றனர். கடன் இல்லாமல் வசதியுடையவர்களுக்கே ஹஜ் கடமையாகும். அதை விடுத்து அரசுக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாக குறைந்த பணத்தைக் கொடுத்து கள்ளத்தனமாக வண்டிகளில் ஏறி ஹஜ் பயணம் செய்வது மிகப் பெரிய குற்றமாகும். இதற்கு உதவி செய்பவர்களுக்கும் ரூம் அமைத்து கூடாரம் அடித்துக் கொடுப்பவர்களுக்கும் சவுதி அரசு 100000 ரியால் அபராதமும் இரண்டு வருட் சிறை தண்டனையையும் கொடுக்கிறது. இந்த வருடம் இதனை கடுமையாக அமுல்படுத்த சவுதி அரசு திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு கள்ளத்தனமாக ஹஜ்ஜூக்கு வருபவர்கள் பலருக்கு சிரமத்தை கொடுக்கிறோம் என்பதை ஏனோ மறந்து விடுகிறார்கள். வெளிநாட்டு ஹஜ் பயணிகள் லட்சக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து பல நாள் சிரமப்பட்டு வருகின்றனர். சவுதி அரசு பல நாடுகளுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையையே ஒதுக்குகிறது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கே இந்த ஏற்பாடு. கழிவறைக்கு பிரச்னையாகும், குடி தண்ணீருக்கு பிரச்னையாகும், கஃபாவை வலம் வரும் போதும் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கவே இந்த ஏற்பாடு. ஒரே நேரத்தில் 20 லட்சம் பேர் கூடும் போது எத்தகைய அசௌகரியங்கள் ஏற்படும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இதில் மேற்கொண்டும் கள்ளத் தனமாக லட்சக் கணக்கில் மக்கள் கூடினால் உயிரிழப்புகள் ஏற்படவும் வாய்ப்புண்டு.

எனவே இறைவனும் விரும்பாத சவுதி அரசும் கண்டிப்புடன் கூறியுள்ள கள்ளத் தனமான ஹஜ் பயணத்தை இனியாவது தவிர்போம். தகுதிக்கு மீறி இறைவன் எவரையும் சிரமப்படுத்துவதில்லை. வாய்ப்பு கிடைக்கும் போது அரசு அனுமதியோடு ஹஜ் செய்வோம். அதுவரை பொறுத்திருப்போம்.

தகவல் உதவி
சவுதிகெஜட்
25-08-2015

Wednesday, August 19, 2015

தாய்லாந்த் ஹாஜிகளின் முதல் குரூப் மதினா வருகை!



18-08-2015 அன்று 1500 பேர் கொண்ட முதல் தாய்லாந்த் ஹாஜிகள் குரூப் மதினா விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த வருடம் தாய்லாந்திலிருந்து மட்டும் 10400 பேர் ஹஜ் பயணம் செய்வதற்கு முன் பதிவு செய்துள்ளனர். தாய்லாந்த் எம்பாஸியின் மூத்த அதிகாரி தானிஸ் நா சொங்க்லா விமான நிலையம் வந்து தனது நாட்டு ஹாஜிகளை வரவேற்று உபசரித்தார்.

'தாய்லாந்து அரசு ஹாஜிகளின் புனித பயணத்தை மிக முக்கிய நிகழ்வாகக் கருதுகிறது. ஹாஜிகளின் முதல் குரூப்பை வரவேற்கும் வாய்ப்பு பெற்றதை எனது பாக்கியமாக கருதுகிறேன்.ஹாஜிகளின் பயணத்தில் எந்த சிக்கலும் இல்லாமல் தங்கள் கடமைகளை செய்ய ஒத்துழைத்து வரும் சவுதி அரசுக்கு தாய்லாந்து அரசின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார் நா சொங்க்லா.

தகவல் உதவி
சவுதி கெஜட்
19-08-2015

Wednesday, May 06, 2015

கடவுள் இங்கு இல்லையா? மெக்காவுக்கு ஏன் போறீங்க...?





திரு ராம் நிவாஸ்!

//மெக்காவுக்கு ஏன் போறீங்க....இறைவன் அங்கேதான் இருக்காரா??????//

'உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக இறைவனையும், இறுதி நாளையும், வானவர்களையும், வேதத்தையும், இறைத் தூதர்களையும் நம்புவோரும் உறவினர்களுக்கும் அனாதைகளுக்கும் ஏழைகளுக்கும் நாடோடிகளுக்கும் யாசிப்போருக்கும் அடிமைகளை விடுதலை செய்வதற்கும் மன விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும் தொழுகையை நிலை நாட்டுவோரும் ஏழை வரியை வழங்குவோரும் வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும் வறுமை நோய் மற்றும் போர்க்களத்தில் சகித்தக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே இறைவனை அஞ்சுபவர்கள்.'

-குர்ஆன் 2:177


இந்த ஒரு வசனமே உங்கள் கேள்விக்கு அழகிய பதிலை தந்து விடுகிறது. ஐந்து வேளையும் தொழுது கொண்டு, மெக்காவுக்கும் புனித பயணம் மேற்கொண்டு விட்டு தொடர்ந்து பாவங்களை செய்து வந்தால் அவர்களின் வணக்கங்களை இறைவன் ஏற்றுக் கொள்வதில்லை என்பதை இதிலிருந்து விளங்களாம்.

கடவுள் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளார். யாரும் கடவுளைத் தேடி மெக்காவுக்கு புனிதப் பயணம் மேற்கொள்ளவில்லை. நபி ஆப்ரஹாம் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை ஏன் உலக முஸ்லிம்கள் செய்ய வேண்டும்? இதனால் முஸ்லிம்கள் அடையும் நன்மைகளை என்ன என்று இனி பார்போம்.

1. தைக்கப்படாத வெள்ளை உடையை ஆண்கள் அனைவரும் அணிய வேண்டும். அரசன், கோடீஸ்வரன், ஏழை, கருப்பன், வெள்ளையன் என்று அனைத்து தரப்பு மக்களும் இந்த உடையை உடுத்தியவுடன் நான் உயர்ந்தவன் என்ற எண்ணம் மண்ணோடு மண்ணாகும். இதை அனுபவத்தில் உணர்ந்துள்ளேன். ஹஜ்ஜூக்கு சென்று வந்தவர்கள் தங்களின் பணத் திமிர், குலத் திமிரை அடியோடு விட்டொழித்ததை நான் கண்டிருக்கிறேன்.

2. அடுத்து ஒரு இரவு திறந்த வெளியில் படுத்து உறங்க வேண்டும். என்னோடு ஹஜ்ஜூக்கு வந்த சவுதிகளில் பல கோடீஸ்வரர்களும் உண்டு. அன்றைய இரவு அவர்கள் எங்களோடு குளிரில் திறந்த வெளியில் சில கொசுக் கடிகளோடு உறங்கியதை என்னால் மறக்க முடியாது. அந்த கோடீஸ்வரர்களும் ஏழைகளின் சிரமத்தை உணர வேண்டும் என்பதற்காகவே இத்தகைய ஏற்பாட்டை இறைவன் செய்துள்ளான். எந்த சிரமம் வந்தாலும் வறுமை வந்தாலும் அனைத்தையும் நான் தாங்கிக் கொள்வேன் என்ற மன உறுதியும் இதன் மூலம் அந்த செல்வந்தர்களுக்கு கிடைக்கிறது.

3. முக்கியஸ்தர்களுக்கு தனி பரிவட்டம் எல்லாம் இங்கு கிடையாது. மன்னர்கள், அமைச்சர்கள் ஹஜ்ஜூக்கு வந்தால் பாதுகாப்புக்கு நான்கு போலீஸார் வருவர். எங்களோடு சேர்ந்துதான் அவர்களும் இறை வழிபாட்டில் ஈடுபடுவர். ஆண்டியும் அரசனும் இறைவன் முன்னால் ஒன்றுதான் என்பதை இந்த நிகழ்வு நமக்கு உணர்த்தும். கஃபாவை ஏழு முறை சுற்றி வரும் போது இதனை நான் நேரிலேயே பார்த்துள்ளேன்.

4. அடுத்து ஹஜ்ஜூக்கு செல்வது என்பது அனைவருக்கும் கடமை அல்ல. கடன் இல்லாமல், செல்வந்தர்கள் வாழ்வில் ஒரு முறை இது போன்று நடக்கும் ஹஜ்ஜூக் கிரியைகளில் கலந்து கொள்ள கட்டளையிடுகிறது இஸ்லாம். உடலால் ஆரோக்கியம் உள்ளவர்களே இந்த கடமையை செய்ய வேண்டும் என்றும் இஸ்லாம் கட்டளையிடுகிறது.

5. அடுத்து குர்பானி. ஹஜ்ஜூக்கு வருபவர் ஆட்டையோ மாட்டையோ அல்லது ஒட்டகத்தையோ அறுத்து பலியிட வேண்டும். இதனால் இறைவனுக்கு ஏதாவது நன்மை வந்து விடப் போகிறதா? எதுவும் இல்லை. மாறாக நவீன முறையில் சவுதி அரசாங்கம் அதனை அறுத்து பதப்படுத்தி ஆப்கானிஸ்தான், சூடான், எத்தியோப்பியா போன்ற வறிய நாடுகளுக்கு அந்த உணவை அனுப்பி வைக்கிறது. இதனால் பலனடைவது ஏழைகளே!

6. இது மட்டுமல்லாமல் ஹஜ்ஜில் கலந்து கொள்ளாத உலக நாடுகளில் உள்ள செல்வந்த முஸ்லிம்கள் தங்கள் வீடுகளிலும் இவ்வாறு குர்பானி கொடுத்து தங்கள் கடமையை நிறைவேற்றுவார்கள். இதன் மூலம் கோடிக்கணக்கான ஆடுகளும், மாடுகளும், ஒட்டகங்களும் உலகம் முழுவதும் வெட்டப்படுகின்றன. இந்த உணவுகளின் பெரும் பகுதி ஏழைகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இறைச்சி வாங்க சிரமப்படும் ஏழைகள் இந்த மாமிச உணவுகளை இலவசமாக அன்றைய தினம் பெற்றுக் கொள்கிறார்கள்.

7. அடுத்து கூடாமடித்து தங்குவது. எவ்வளவு பெரிய செல்வந்தனாக இருந்தாலும் நாடோடிகள் அமைத்து தங்கிக் கொள்ளும் கூடாரங்களை போன்று அமைத்து அதில் இரண்டு நாட்கள் தங்க வேண்டும். பல லட்சக் கணக்கான மக்கள் குழுமும் ஒரு இடத்தில் அந்த பனியிலும் வெயிலிலும் கூடாமடித்து தங்குவது சிரமமான காரணமே. தற்போது சவுதி அரசாங்கமே தனது செலவில் லட்சக் கணக்கான கூடாரங்களை ஹாஜிகளுக்காக அமைத்துக் கொடுத்துள்ளது. அதற்குரிய வாடகையை செலுத்தி பலர் தங்கிக் கொள்வர். வசதியில்லாதவர்கள் மலைகளில் தாங்களாகவே சொந்தமாக துணிகளைக் கொண்டு கூடாரமடித்துக் கொள்வர். வீடின்றி ரோட்டோரம் கஷ்டப்படும் ஏழைகளின் வலியை பணக்காரர்களும் உணர வேண்டும் என்பதற்காகவே இறைவன் இந்த கட்டளையை பிறப்பித்துள்ளான்.

8. உலகம் முழுவதும் அழிந்து வரும் விலங்கினங்களை காக்க அரசு பல உதவித் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் இறைவன் அறுத்து புசிக்க அனுமதித்த ஆடு, மாடு, ஒட்டகம், கோழி போன்றவை உலகில் எங்குமே குறையக் காணோம். நாளுக்கு நாள் இவைகளின் உற்பத்தி அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. இவ்வாறு உணவுக்காக இவைகள் வெட்டப்படாமல் இருந்தால் இவற்றின் எண்ணிக்கை தாறுமாறாக பெருகி சுற்றுப்புற சூழலுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும்.

இவ்வாறு உலக மனிதர்கள் எல்லாம் ஒரு தாய் மக்கள் என்ற எண்ணம் வருவதற்கு காரணமாக உள்ள 'சர்வ தேச உலக மாநாடாக' பார்க்கப்படும் இந்த ஹஜ்ஜை செல்வந்தர்கள் வாழ்வில் ஒரு முறை செய்வதால் பல படிப்பினைகளை பெற்றுக் கொள்கிறார்கள். மனித நேயத்தை வளர்த்துக் கொள்கிறார்கள். எல்லோரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வையும் பெறுகிறார்கள்.

Monday, September 08, 2014

32 nd MEGA BLOOD DONATION - RIYADH



இந்த வருட ஹஜ் பயணத்தில் கலந்து கொள்ளும் உலக மக்களின் அத்தியாவசிய தேவைக்காக இந்த இரத்ததான முகாம் நடத்தப்படுகிறது. வாகன வசதியுள்ளவர்கள் தங்கள் நண்பர்களை அழைத்து வாருங்கள். வாகனம் இல்லாதவர்கள் கைபேசியில் அழைத்தால் உங்களைத் தேடி வாகனம் வரும்.

Thursday, August 28, 2014

ஹஜ் பயணிகளின் முதல் குரூப் மதினாவை வந்தடைந்தது!



ஹஜ் பயணிகளின் முதல் குரூப் மதினாவை வந்தடைந்தது!

ஹிஜ்ரி 1435 ஆம் ஆண்டுக்கான ஹாஜிகளின் முதல் க்ரூப் மதினாவை வந்தடைந்தது. இந்த முதல் க்ரூப்பில் 235000 (இரண்டு லட்சத்து முப்பத்தி ஐயாயிரம்) பேர் நலமுடன் வந்திறங்கினர். இவர்கள் அனைவரும் இந்தியா மற்றும் பங்களாதேஷத்தைச் சார்ந்த ஹாஜிகளாவர். இந்த ஹாஜிகளை சவுதி அரசு அதிகாரிகளும், இந்திய தூதரக அதிகாரிகளும் இன்முகத்தோடு வரவேற்று உபதேசித்தனர்.

கல்கத்தா, நியூ டெல்லி, லக்னோ, ஸ்ரீநகர், மேங்களூர், டாக்கா போன்ற நகரங்களிலிருந்து ஏர் இந்தியா மற்றும் பங்களாதேஷ் விமானங்கள் விமானங்கள் தொடர்ந்து ஹாஜிகளை இறக்கிக் கொண்டிருக்கிறது. தங்களுக்கு கிடைக்கும் அன்பான உபசரிப்பு எங்களை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது என்று ஹாஜிகள் சந்தோஷத்தோடு செய்தியாளர்களிடம் தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டனர்.

'ஹஜ் வெல்ஃபேர் பாஃர்ம்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் அனைவருக்கும் தண்ணீர், பேரித்தம் பழங்களை கொடுத்து உபசரித்தனர். அவர்களின் தேவைகளை வலிய சென்று கேட்டு பூர்த்தி செய்து கொடுத்தனர். மூன்று வேளை உணவுகளும் அனைவருக்கும் பரிமாறப்பட்டது. சுங்க நுழைவு பரிசோதனையும் இந்த முறை மிக சுலபமாக முடிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டது. அதில் அவர்களைப் பற்றிய முழு விபரமும் மற்றும் அவர்கள் தங்கியுள்ள விடுதியின் விலாசமும் அரபியிலும் ஆங்கிலத்திலும் குறிக்கப்பட்டிருக்கும். வழி தவறி விடுபவர்களை தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள் அடையாளம் கண்டு உரிய இடத்தில் சேர்ப்பிப்பதற்கு இந்த அடையாள அட்டை மிக உதவிகரமாக இருக்கும்.

சவுதி ஏர்லைன்ஸூம், ஏர் இந்தியாவும் இந்த வருடம் 360 விமானங்களை ஹஜ்ஜூக்காக உபயோகப்படுத்துகிறது. மொத்தம் 100020 ஹாஜிக்கள் அரசு அனுமதியோடு அழைத்து வரப்படுகின்றனர். மேலும் 36000 ஹாஜிகள் தனியார் நிறுவனங்கள் மூலம் அதிக பணம் கட்டி அழைத்து வரப்படுகின்றனர்.

ஹஜ் விவகாரங்களுக்கான துணை அமைச்சர் முஹம்மத் மர்கலானி, மற்றும் மேஜர் ஜெனரல் முஹம்மது அப்துல்லா பராவி சவுதிக்கான இந்திய தூதர் போன்ற முக்கியஸ்தர்கள் ஹாஜிகளை விமான நிலையத்தில் வரவேற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். ஹாஜிகள் அனைவருக்கும் முஸல்லா (தொழுவதற்கான பாய்) மற்றும் சில அன்பளிப்பு பொருள்களும் வழங்கப்பட்டன.

தகவல் உதவி
சவுதி கெஜட்
28-08-2014

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றும்
'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்றும்
ஒருமித்து சொல்ல உலகெங்கிலிருந்தும்
புறப்பட்டு விட்டது எங்கள் புரட்சிப்படை!

ஓசையற்ற கல்லை நீர் உடைத்து உருக்கள் செய்கிறீர்
பூசை பெற்ற கல்லிலே பூவும் நீருஞ் சாற்றுறீர்
வாசலில் பதித்த கல் மழுங்கவே மிதிக்கிறீர்
ஈசனுக்கு உகந்த கல் இரண்டு கல்லுமல்லவே

நட்டு வைத்த தேவரும் நடாது வைத்த தேவரும்
சுட்டு வைத்த தேவரும் சுடாது வைத்த தேவரும்
இட்டு வைத்த இடத்தை விட்டு எழுந்திராத தேவரை
வட்டமிட்டு மாந்தர்கள் வணங்குமாறு எங்கனே!

நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்பம் சாற்றியே
சுற்றி வந்து மொண மொணென்று சொல்லும் மந்திர மேதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதனுள் இருக்கையிலே
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

இஸ்லாத்தின் கட்டளைகளை இனிதாக கூறிய
சிவ வாக்கியரின் சத்தியமான வார்த்தைகளை
சிலாகித்துக் கூறுவதற்கென்றே இந்த வருடமும்
புறப்பட்டு விட்டது எங்கள் புரட்சிப் படை!

Sunday, August 17, 2014

எபோலா வைரஸ்... அறிகுறிகள் என்ன?



எபோலா... அறிகுறிகள் என்ன?

அ.சோமசுந்தரம், குழந்தைகள் நல மருத்துவர்:

** எபோலா வைரஸ் மூன்று வழிகளில் பரவுகிறது. **

1. இந்த நோய் தாக்கிய ஒருவரின் உடல் திரவங்கள்... அதாவது ரத்தம், வியர்வை, சிறுநீர், எச்சில், கண்ணீர், விந்து... போன்றவை மற்றவர்களின் உடலுக்குள் செல்லும் போது எபோலா தாக்கும்.

2. எபோலா தாக்குதலுக்கு உள்ளான மிருகங்களின் மாமிசத்தைச் சாப்பிட்டால் பரவும்.

3. எபோலா தாக்கி இறந்தவரின் உடல்மீதும் அந்த வைரஸ் உயிர்ப்புடன் இருக்கும். அந்தச் சடலத்தைத் தொட்டு புழங்கும்போது எபோலா தாக்கும்.

* எபோலா வைரஸ் காற்று மூலம் பரவாது என்பது பெரிய ஆறுதல். பூச்சிக்கடி, கொசுக்கடி, தும்மல் இவற்றின் மூலமும் பரவாது.

* எபோலாவுக்கு எனப் பிரத்தியேக அறிகுறிகள் இல்லை. இந்த வைரஸ் தாக்கியதில் இருந்து சுமார் ஒரு வாரத்தில் கடுமையான காய்ச்சல், உடல் அசதி, வாந்தி, மூட்டுவலி, பசியின்மை, நெஞ்சு வலியுடன்கூடிய இருமல், கடும் வயிற்றுப்போக்கு... போன்றவை அடுத்தடுத்து தாக்கும். இறுதியில் மஞ்சள்காமாலை, ரத்தக்கசிவு ஏற்பட்டு மரணம் நேரும். மேற்கண்ட அறிகுறிகள் ஒன்றன்பின் ஒன்றாகப் பாதித்தால், உடனடியாக மருத்துவச் சோதனை மேற்கொள்ள வேண்டும்.

* மேலே சொல்லப்பட்ட அறிகுறிகளுடன் ஒருவர் மரணம் அடைந்தால், அவரை உடனடியாக அடக்கம் செய்துவிட வேண்டும்.

* எபோலாவுக்கு மருந்து கிடையாது. அந்த வைரஸ் தாக்கினால், 60 முதல் 90 சதவிகிதம் வரை மரண அபாயம் உண்டு. ஆகவே, எபோலாவால் பாதிக்கப்பட்டவரை உடனே தனிமைப்படுத்த வேண்டும்.

* சுத்தமாக இருப்பது, அடிக்கடி சோப் உபயோகித்து கைகளைக் கழுவுவது, புதிய நபர்களுடன் தொட்டுப் புழங்காமல் இருப்பது, முடிந்த வரை வீட்டிலேயே சமைத்து உண்பது, சுகாதாரமற்ற பகுதிகளில் இருந்து விலகி இருப்பது போன்றவை முன்னெச்சரிக்கை தற்காப்புகளாக இருக்கும்!

* எபோலா தாக்குதல் குறித்த உதவிகளுக்கு இந்திய அரசு அமைத்திருக்கும் 24 மணி நேர இலவச தொலைபேசி எண்: 01123061469

- விழுப்புணர்வுக்கு பகிரவும்...

-நன்றி விகடன்

அடுத்த மாதம் ஹஜ் சீசன் துவங்கி விடும். லைபீரியாவிலிருந்து அதிக அளவு மக்கள் ஹஜ் கடமையை நிறைவேற்ற வருவார்கள். மற்ற ஆப்ரிக்க நாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான ஹாஜிகள் வர உள்ளனர். இவர்களில் இந்த வைரஸ் தாக்கியவர்களை கண்டறிந்து மற்றவர்களை அனுமதிப்பது என்பது மிகவும் சிரமமான ஒன்று. சவுதி அரசாங்கம் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டுள்ளது. 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஓரிடத்தில் தங்கும் போது பல அசௌகரியங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நோய் தொற்றுவதற்கும் வாய்ப்புள்ளது. இறைவன்தான் எந்த சிக்கலும் இல்லாமல் இந்த வருட ஹஜ் பயணத்தை அனைவருக்கும் இலகுவாக்கித் தர வேண்டும். இது சம்பந்தமாக நமது தொழுகைகளில் நமது பிரார்த்தனையையும் வைப்போம்.

Wednesday, October 23, 2013

முன்னால் இஸ்லாமிய எதிரி: இன்று நண்பன்!



அர்னார்ட் வேன் டோர்ன் - ஐரோப்பாவின் டச்சு சமூகத்தை சேர்ந்த இந்த சினிமா டைரக்டரை பலரும் அறிந்திருப்பர். 'ஃபித்னா' என்ற பெயரில் நபிகள் நாயகத்தை இழிவு படுத்தும் முகமாக ஒரு சினிமாவை தயாரித்து பலரது விமர்சனத்துக்கும் ஆளானார். தான் செய்த பெரும் தவறை உணர்ந்து தற்போது திருந்தி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த ஆண்டு ஹஜ் செய்ய சவுதி வந்திருந்தார்.

'நான் முன்பு செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக ஐரோப்பாவில் இஸ்லாமிய அரசியல் கட்சி ஒன்றை துவங்க இருக்கிறேன். அது நெதர்லாந்துக்கு மட்டுமல்லாது முழு ஐரோப்பாவுக்கும் பயனுள்ள கட்சியாக இருக்கும். இந்த கட்சியின் முக்கிய கொள்கை இஸ்லாத்தை பாதுகாப்பதாகவும் முஸ்லிம்களை அரவணைத்து செல்லக் கூடியதாகவும் இருக்கும். பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களையும், முஸ்லிம் அல்லாதவர்களையும் ஒன்றிணைத்து இஸ்லாமியர்கள் ஐரோப்பாவில் எதிர் கொள்ளும் பிரச்னைகளை களைய நாங்கள் முன்னுரிமை கொடுப்போம்.

நான் போன வருடம்தான் இஸ்லாத்தை தழுவினேன். பிப்ரவரியில் உம்ராவுக்காக சவுதி வந்தேன். தற்போது இந்த வருடம் ஹஜ்ஜையும் முடித்துள்ளேன். முன்பு அந்த திரைப்படத்தை எடுத்த போது எனக்கு இஸ்லாத்தைப் பற்றிய ஒரு பொய்யான தோற்றத்தையே காட்டினர். ஊடகங்களும் அதைத்தான் செய்தன. அவ்வாறு ஒரு படம் எடுத்ததற்காக நான் வெட்கப்படுகிறேன். கிரீட் வெல்டர்ஸ் என்ற அரசியல் கட்சியின் ஆலோசனையின் பேரிலேயே அந்த படத்தை எடுத்தேன். அதில் உள்ள விபரங்களை கொடுத்தது இந்த அரசியல் கட்சிதான்.

நான் முன்பு செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக 'மனித குலத்தின் முன் மாதிரி முகமது நபி' என்ற படத்தை எடுக்கும் திட்டம் தற்போது உள்ளது. இதற்கு கனடா முஸ்லிம் அமைப்புகள் ஆதரவு தெரிவுத்துள்ளன. அவர்களின் ஒத்துழைப்போடு எனது அடுத்த படம் வெளி வரும். முகமது நபியின் வாழ்க்கையில் நடந்த சில வரலாறுகளை குறும்படங்களாக எடுக்கும் திட்டமும் உள்ளது. இது ஐரோப்பாவில் உள்ள ஐந்து மொழிகளில் வெளியாகும். மதினா நகரத்தின் சரித்திரத்தை விவரிக்கும் 'மதினா' என்ற திரைப்படம் எடுக்கும் திட்டமும் உள்ளது.

ஒரு இடத்தில் நான் ஆச்சரியப்பட்டு போனேன். பாதுகாப்புக்காக நின்ற ஒரு ஊழியர் வயதின் தள்ளாமையால் சிரமப்பட்ட ஒரு மூதாட்டியை தனது தோளில் சுமந்து கொண்டு ஜமராத் பாலத்தில் சாத்தானுக்கு கல் எறிவதற்கு உதவி செய்த காட்சி என்னை பிரமிப்புக்குள்ளாக்கியது. அந்த மூதாட்டி யார்? எந்த நாடு? என்றெல்லாம் அந்த சகோதரர் பார்க்கவில்லை. இது போன்று மனதை நெகிழச் செய்த பல நிகழ்வுகள். இவற்றை எல்லாம் புத்தகமாக தொகுத்து வெளியிட உள்ளேன்.

முன்பு செய்த பாவங்களுக்கு இறைவனிடம் மன்னிப்பு கோரினேன். தற்போது எனது வாழ்வு முற்றிலுமாக மாறி விட்டது. எனது தாயகத்துக்கு சென்று எனது மனைவிக்கும் எனது மூன்று குழந்தைகளுக்கும் இஸ்லாத்தை எத்தி வைப்பேன். முன்பே அவர்கள் குர்ஆனை படித்து வருகிறார்கள். அவர்களின் மனத்திலும் மாற்றத்தை இறைவன் ஏற்படுத்துவான் என்று நம்புகிறேன்' என்று உணர்வுபூர்வமான பேட்டியை சவுதி கெஜட்டுக்கு அளித்தார் இந்த சினிமா டைரக்டர்.

இஸ்லாத்தை ஒழிப்பதை தங்களது முழு நேர வேலையாக செய்து வரும் நம் ஊர் இந்துத்வாவாதிகளும் ஒரு நாள் உண்மையை உணர்ந்து இவரைப் போல் செய்த தவறுகளுக்கு இறைவனிடம் மன்னிப்பை கேட்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. அந்த நாளுக்காக நாமும் இறைவனிடம் பிரார்த்திப்போம்.

தகவல் உதவி

சவுதி கெஜட்



Tuesday, October 22, 2013

ஹஜ்ஜூக்காக பசுக்களை விற்ற மூதாட்டி!



'கடந்த இருபத்தைந்து வருடங்களாக ஹஜ்ஜூக்கு வர முயற்சி செய்து கொண்டுள்ளேன். ஒவ்வொரு வருடமும் ஹஜ்ஜூக்கு செல்வதற்கான பணம் என்னிடம் முழுமையடையாமல் போகும். உடன் எனது ஹஜ்ஜூ செய்ய வேண்டும் என்ற ஆவலை அடக்கிக் கொள்வேன். ஆனால் இந்த வருடம் இறைவன் எனது ஆவலை பூர்த்தி செய்துள்ளான். இந்த வருடமும் போதிய பணம் சேரவில்லை. முடிவில் எங்களது வீட்டில் இருந்த இரண்டு பசுக்களை விற்று ஹஜ்ஜூக்கான பணத்தை பூர்த்தியாக்கினேன்' என்று ஆவலோடு சொல்கிறார் 80 வயதைக் கடந்த ஜைனப். இவர் நமது நாடான இந்தியாவிலிருந்து ஹஜ்ஜூ செய்ய வந்தவர்.

'இரண்டு பசுக்கள் போனதைப் பற்றி கவலை இல்லை. ஆனால் எனது 25 வருட கனவு இன்று பூர்த்தியானது மனதுக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது. உலக முஸ்லிம்கள் அனைவரோடும் 'எல்லோரும் ஒரு தாய் மக்கள்' என்ற உணர்வோடு நான் செய்த இந்த ஹஜ்ஜை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அந்த அளவு சந்தோஷத்தோடு உள்ளேன். மெக்கா நகரம் என்னை பிரமிப்புக்குள்ளாக்கியது. எனக்கு மிகுந்த திருப்தியையும் மன நிம்மதியையும் தந்தது இந்த அழகிய ஊர். எனக்கு அனுமதி கிடைத்தால் இறக்கும் வரை இந்த ஊரிலேயே தங்கி விடலாம் என்று கூட எண்ணுகிறேன். இன்று எனது குடும்பத்தை காண எனது நாட்டுக்கு செல்கிறேன். என் வாழ்நாளில் இந்த ஊரையும் இங்கு நான் பெற்ற படிப்பினைகளையும் மறக்க இயலாது. இந்த வாய்ப்புகளை அளித்த அந்த ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்.' என்கிறார் ஜைனப்.

ஹஜ்ஜூக்கு பல லட்சங்களை செலவு செய்து வருபவர்களின் சந்தோஷ பகிர்வுகளை வரிசையாக அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த அளவு ஒவ்வொரு வருடமும் பல நாட்டவர்களின் அனுபவங்கள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கும். அதே சமயம் தனது வாழ்வாதாரமாண பசுக்களை விற்று விட்டு ஹஜ் செய்யுங்கள் என்று குர்ஆன் கட்டளையிடவில்லை. உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் போன்ற அத்தியாவசிய தேவைகள் பூரணமாகி எந்த கடன்களும இல்லாத செல்வந்தர்களையே வாழ்நாளில் ஒரு முறை ஹஜ் செய்யுமாறு பணிக்கிறது இஸ்லாம். இந்த மூதாட்டி மெக்காவையும மதினாவையும் பார்க்க வேண்டும்: தனது வாழ்நாளில் காஃபாவிலும் தொழுது விட வேண்டும் என்ற அதீத ஆசையினால் இன்று ஹஜ்ஜை நிறைவு செய்துள்ளார். இவரது ஹஜ்ஜை இறைவன் ஏற்றுக் கொள்வானாக!

ஆனால் முழுமையான வசதிகள் இருந்தும் உடல் ஆரோக்கியம் இருந்தும் இப்படி ஒரு கடமை இருப்பதை அலட்சியப்படுத்திக் கொண்டு நம்மில் பல செல்வந்தர்கள் தங்கள் காலங்களை வீணிலே கழித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரு அனுபவம், உலக முஸ்லிம்களோடு பழகும் பாக்கியம் வேறு எந்த சந்தர்ப்பத்திலும் கிடைக்காது. ஒரு முறை ஹஜ் செய்து விட்டால் அவரது வாழ்வே முற்றிலுமாக மாறி விடுவதை நான் கண் கூடாக பார்த்துள்ளேன். எனவே வசதி படைத்த செல்வந்தர்கள் தங்களுக்கு உள்ள கடமையை உணர்ந்து வரும் காலங்களிலாவது ஹஜ்ஜூ செய்வதற்கு உறுதி மொழி எடுப்பார்களாக!

தகவல உதவி:

சவுதி கெஜட்.