Followers

Showing posts with label பசு. Show all posts
Showing posts with label பசு. Show all posts

Saturday, August 19, 2017

பிஜேபி தலைவர் பராமரித்த கோசோலையில் 200 பசுக்கள் பலி!

பிஜேபி தலைவர் பராமரித்த கோசோலையில் 200 பசுக்கள் பலி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் துர்க் மாவட்டத்தில் உள்ள கோசோலையை பிஜேபி தலைவர் ஹரீஸ் வர்மா நிர்வகித்து வருகிறார். இந்த கோசோலையில் மட்டும் சில தினங்களுக்குள் 200 பசுக்கள் பசியாலும் சரியாக பராமரிக்காமலும் இறந்துள்ளன. மாஜிஸட்ரேட் ராஜேஷ் பட்ரே இதனை உறுதிப்படுத்தியுள்ளார். 

கோசோலைக்கு அரசு அளிக்கும் பணத்தை இந்த பிஜேபி தலைவர் முழுவதும் ஸ்வாகா பண்ணி மாடுகளை பட்டினி போட்டு கொன்றுள்ளார். இந்துத்வாக்கள் இவ்hறு பசு பேரில் காசு பண்ணுவதற்காகத்தான் 'பசு பக்தி' என்று நாடகமாடுகிறார்கள். பாமர இந்துக்கள் இவர்களை புரிந்து கொள்ள வேண்டும்.

தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
19-08-2017

Monday, August 14, 2017

இறந்த கோசோலை பசுவை அடக்கம் செய்த முஸ்லிம்கள்!

இறந்த கோசோலை பசுவை அடக்கம் செய்த முஸ்லிம்கள்!

ஹர்தா: ம.பி.,யில், நகராட்சி நடத்தும் கோசாலை அருகே, நோயால் உயிரிழந்து, கேட்பாரற்று கிடந்த பசுவின் உடலை, அந்த பகுதி முஸ்லிம்கள், உரிய மரியாதையுடன் அடக்கம் செய்தனர்.

ம.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த, சிவ்ராஜ் சிங் சவுகான் முதல்வராக உள்ளார். ஹர்தா மாவட்டத்தில், பசுக்களை பராமரிக்கும் கோசாலை உள்ளது. இதில் இருந்த பசு ஒன்று, உடல் நலன் பாதிக்கப்பட்டதால், கோசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டது. 

சமீபத்தில், கோசாலை அருகே, அந்த பசு இறந்து விட்டது.இது தொடர்பாக, நகராட்சி நிர்வாகத்திற்கு அந்த பகுதி மக்கள் தகவல் அளித்தனர். இருப்பினும், பசுவின் உடலை அகற்ற யாரும் முன்வரவில்லை. இந்நிலையில், அந்த பகுதியில் வசிக்கும் முஸ்லிம்கள், இறந்த பசுவின் உடலை எடுத்துச் சென்று, உரிய மரியாதையுடன் அடக்கம் செய்தனர்.

இது குறித்து, சாஹித்கான் என்பவர் கூறுகையில், ''கோசாலை அருகே, சாலையில் பசு இறந்து கிடந்தது குறித்து, நகராட்சிக்கு தெரிவித்தோம்; பல மணி நேரம் ஆகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், பசுவின் உடலை நாங்களே எடுத்துச் சென்று, உரிய மரியாதையுடன் அடக்கம் செய்தோம்,'' என்றார்.

தகவல் உதவி
தின மலர்
15-08-2017

பயன் தராத நோய் வாய் பட்ட பசுக்களை கோசோலையிலிருந்து விரட்டி விட்டுள்ளார்கள். நோய் முற்றி தெருவில் செத்துக் கிடந்துள்ளது. பசுவை தெய்வமாக வணங்கும் கோசோலை நிர்வாகமோ பசு ஆர்வலர்களோ பல மணி நேரமாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முடிவில் முஸ்லிம்கள் முன் வந்து அந்த இறந்த உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்துள்ளனர். மனித நேயம் எங்கிருக்கிறது என்பது விளங்குகிறதா?





Saturday, July 22, 2017

கோமாளிகளின் ஆட்சியில் 46 பசுக்கள் பலி!

கோமாளிகளின் ஆட்சியில் 46 பசுக்கள் பலி!

காக்கிநாடா: ஆந்திராவில், விலங்குகள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் பராமரிக்கப்பட்ட, 46 பசுக்கள், நிமோனியா காய்ச்சல் மற்றும் பட்டினியால் பாதிக்கப்பட்டு, பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள காக்கிநாடா நகரில், ஆதரவற்ற விலங்குகளை பராமரிக்கும் அமைப்பு இயங்கி வருகிறது. இங்கு, 480 பசுக்கள் பராமரிக்கப்படுகின்றன.


மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால், இங்குள்ள பசுக்களில் சில, மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளன. உணவுப் பற்றாக்குறையால், பல பசுக்கள், பசியால் வாடி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலை யில், கடந்த சில நாட்களாக, நிமோனியா காய்ச்சல் மற்றும் பட்டினியால் பாதிக்கப்பட்ட, 46 பசுக்கள் பரிதாபமாக இறந்தன.


இது குறித்து, தகவல் அறிந்த, மாநில கால்நடைத் துறை அதிகாரிகள், மாடுகள் பராமரிக்கப்படும் இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பசுக்களின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். இதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.


இது குறித்து, கால்நடைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மிகச் சிறிய இடத்தில், அதிகப்படியான பசுக்கள் பராமரிக்கப்படுவதே, அவற்றின் நோய் தாக்கத்திற்கு காரணம். 150 பசுக்கள் மட்டுமே பராமரிக்க கூடிய இடத்தில், இந்த அமைப்பினர், 480 பசுக்களை பராமரித்து வருகின்றனர். மழைக் காலம் என்பதால், பசுக்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.


அனைத்து பசுக்களுக்கும் போதிய உணவளிக்க முடியாததால், அவற்றில் சில, பட்டினியால் பலியாகியிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். நிமோனியா நோய் பாதிப்பாலும், சில பசுக்கள் பலியாகியுள்ளன. இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

தகவல் உதவி
தின மலர்
23-07-2017


இந்த பசுக்கள் விவசாயிகளிடம் இருந்திருந்தால் நல்ல விலைக்கு விற்று அதனை காசாக்கியிருப்பார்கள். உழைக்கும் மக்களுக்கு உணவாகவும் சென்றிருக்கும். அதை விடுத்து 'கோமாதா எங்கள் தெய்வம்: அதனை இறைச்சிக்காக அறுக்கக் கூடாது: அதனை நாங்களே பராமரிக்கிறோம்' என்று கோமாளித்தனமான முடிவை எடுத்ததனால் இன்று 64 பசுக்கள் இறந்துள்ளன. சுற்றுப்புற சூழலுக்கும் கேடு விளைவிக்கின்றன. இந்த கோமாளிகளான இந்துத்வா ஆட்சியாளர்கள் இதனை என்றுதான் உணருவார்களோ!


Monday, November 30, 2015

பசுவைப் பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது என்று பார்போமா?

'மாடு எங்களின் தெய்வம்: அதை புசிக்கக் கூடாது' என்று சொல்கின்றனர் இந்துத்வாவாதிகள். கன்றுக்காக சுரக்கும் பாலை மட்டும் பசுவிடமிருந்து திருடி நாம் சாப்பிடலாமா? என்று யாராவது கேட்டால் முறைப்பார்கள். இனி அந்த பசுவைப் பற்றியும் அது பற்றி குர்ஆனின் அணுகுமுறையையும் இந்த பதிவில் காண்போம்.

"நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் தக்க படிப்பினை இருக்கின்றது, அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக தாராளமாகப் புகட்டுகிறோம்."

அல்குர்ஆன் 16:66


இந்த இறைவசனத்தின் முதல் பகுதியில் கால்நடைகளிடம் தக்க படிப்பினை உள்ளதாக அல்லாஹ் கூறுகிறான். இங்கு படிப்பினை என்பதை ஆராய்ச்சி என்ற கோணத்தில் பார்க்க வேண்டும். இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள அல்லாஹ் ஐந்து விஷயங்களை (குளு) முன்வைக்கிறான் அவைகளாவன.....


1) கால்நடைகளின் வயிற்றுப்பகுதி

2) வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்ததிற்கும் இடையில்

3) கலப்பற்ற பால்

4) அருந்துபவர்களுக்கு இனிமை

5) தாராளமாக புகட்டுகிறோம்


மேற்கண்ட ஐந்து ஆராய்ச்சிகளில் முதல் இரண்டை பார்ப்போமா?

1. கால்நடைகளின் வயிற்றுப் பகுதி

2. வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்ததிற்கும் இடையில்

பொதுவாக உயிரினங்களுக்கு வயிற்றுப்பகுதி என்ற அமைப்பு இருக்கும். இங்குதான் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகி அந்த செரிமானமாகிய உணவு புரதச்சத்தாக மாறி இரத்தத்தில் கலநது நமக்கு உடல் வலிமையைத் தருகிறது. ஆனால் இந்த வயிற்றுப்பகுதி ஒருசில கால்நடைகளுக்கு அதாவது பசுமாடுகள், ஆடுகள், ஒட்டகங்கள் மற்றும் மான்கள் ஆகியவற்றிற்கு மட்டும் தனியாக அமைந்து அவை மனிதனுக்கு பயன்படும் வகையில் அமைந்துள்ளது. உதாரணமாக பசுமாட்டை இங்கு ஆராய்வோம்.

பசுமாடும் அதன் வயிற்றுப் பகுதியும்



பசுமாடுகள், ஆடுகள், ஒட்டகங்கள் மற்றும் மான்கள் ஆகிய கால்நடைகளுக்கு அதன் வயிறுப்பகுதி நான்கு தனித்தனி அறைகளாக அமைந்துள்ளன: அவைகளாவன

RETICULUM (ரெடிகுழம்)
RUMEN, (ரூமென்)
OMASUM, (ஓமசம்)
ABOMASUM (அபோமசம்)

இங்கு குறிபிடத்தக்க அம்சம் என்னவெனில் மேற்கண்ட கால்நடைகளுக்கு மட்டுமே அமைந்துள்ள இந்த 4 அடுக்கு பகுதிகள் பன்றி முதலான மற்ற மிருகங்களுக்கு கிடையாது என்பதே!.

பசுமாடும் அதன் உணவு உட்கொள்ளும் முறையும்:

பசுமாடு புல்வகைகளை உணவாக விழுங்குகிறது. விழுங்கிய உணவு நேரடியாக ரூமென் மற்றும் ரெடிகுழம் பகுதிக்கு சென்று சேமிக்கப்படுகிறது. பிறகு பசுமாட்டிற்கு உண்ட கலைப்பு ஏற்பட்டு அமைதியாக அமர்ந்து விடுகிறது.

சேமிக்கப்பட்ட உணவை ரெடிகுழம் என்ற பகுதி அதன் மற்ற இரு பாகங்களான RUMEN, (ரூமென்) OMASUM, (ஓமசம்) என்ற பகுதிகளுக்குள் தள்ளிவிடுகிறது.



அமைதியாக அமர்ந்திருக்கும் பசுமாட்டிற்கு மீண்டும் உணவுப் பசி எடுக்க ஆரம்பிக்கிறது. உடனே புல்வெளியை நாடிச் செல்லாமல் தான் வயிற்றில் சேமித்து வைத்த உணவு மீண்டும் வாய்ப் பகுதிக்கு இழுத்து பசுமாடு அசை போட ஆரம்பிக்கிறது. இந்த இயக்கத்திற்கு ரெடிகுழம் பயன்படுகிறது. இதன் மூலம் முதல் முறையாக உட்கொண்ட உணவு மீண்டும் பசுமாட்டின் வாய் பகுதிக்கு செலுத்தப்பட்டு நன்றாக மீண்டும் ஒருமுறை அசை போட முடிகிறது.



பசுமாடு உட்கொண்ட உணவை சுத்திகரிக்கும் முறை

பசுமாடு மறுசுழற்சி முறையில் அசைபோட்ட உணவை அதன் வயிற்றுப்பகுதியான ரூமென் என்ற அறைக்குள் தள்ளுகிறது. இங்கு பல மில்லியன் மைக்ரோப்ஸ்-கள் அடங்கியுள்ளன. இந்த மைக்ரோப்ஸ்கள் அசைபோட்டு நான்றாக அரைத்த உணவில் செரிமானம் செய்ய முடியாத கடினமான பகுதியை கூட மிக எளிதாக செரிமானம் செய்ய பயன்படுகிறது.



பிறகு செரிமானம் ஆன உணவு ஓமசம் என்ற அறைக்கு சென்றடைகிறது. இந்த ஓமசம் பகுதியைப் பற்றி அறிவியல் உலகம் முழுவதுமாக இன்னும் ஆராய்ந்து முடிக்கவில்லை. எனினும் தோராயமாக ஆராய்ந்து பார்த்ததில் உட்கொண்ட உணவை சிறு சிறு துகள்களாக ஒரே சீராக மாற்ற இந்த பகுதி பயன்படுகிறது என்று நம்பப்படுகிறது.



செரிக்கப்பட்ட உணவு இரத்தத்தில் எவ்வாறு கலக்கிறது!



பசுமாட்டின் வயிற்றிலுள்ள இறுதிப் பகுதியான அபோமசம் என்பது மற்ற பிராணிகளின் வயிறுகளை ஒத்து அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள ஹைட்ரோகுளோரிக் திரவம் ரூமென் பகுதில் செரிமானத்திற்கு பயன்படுகின்ற மைக்ரோப்ஸ்களை அபோமசம் அறைக்குள் நுழையாமல் தடுப்பதற்கும் அவ்வாறு நுழையும்பட்சத்தில் அவைகளை அழிக்கவும் பயன்படுகிறது.



மேலும் இந்த அபோமசம் பகுதியில் சேகரிக்கப்பட்ட அசைபோட்ட உணவுகள் சிறுகுடல் பகுதிக்கு அனுப்பப்பட்டு அங்குள்ள மைக்ரோபியல் எனப்படும் செல் கட்டமைப்புகளால் முழுவதுமாக ஜீரணமாக்கப்படுகிறது. புரதச் சத்துக்களான அமினோ ஆசிட் மற்றும் விட்டமின்கள் உருவாக இந்த பகுதியே பயன்படுகிறது. பிறகு முழுவதும் ஜீரணமான உணவு நேரடியாக இரத்தில் கலந்துவிடுகிறது!



இரத்தத்திலிருந்து எவ்வாறு பால் உற்பத்தியாகிறது?

பசுமாடுகளின் உடலில் உள்ள செல்கள் இரத்தத்திலிருந்து நீரையும் ஊட்டச் சத்துக்களையும் அகற்றி அகற்றப்பட்ட அந்த நீரையும் ஊட்டச்சத்தையும் பாலாக மாற்றுகிறது. இந்த பால் பசுமாடுகளின் மடிகளின் வாயிலாக வெளியேறுகிறது. அதைத்தான் நாம் இனிமையாக பருகுகிறோம்.



மேற்கண்ட ஐந்து ஆராய்ச்சிகளில் இறுதியான மூன்றை பகுதியை பார்ப்போமா?



3. கலப்பற்ற பால்

4. அருந்துபவர்களுக்கு இனிமை

5. தாராளமாக புகட்டுகிறோம்

கலப்பற்ற பால்

ஒரு மனிதனுக்கு ஊட்டச்சத்துக்களில் புரோட்டீன், கால்சியம் ஆகியவை இன்றியமையாமையாதவையாக உள்ளன. இவைகள் பசும் பாலில் அதிகமாக காணப்படுகின்றது. கால்சியம் எலும்பு நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.


பசும்பாலில் விட்டமின் ஏ, பி12, தையாமின் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளது.


பசும்பாலில் தயாரிக்கப்படும் வெண்ணெய், நெய் போன்றவைகளில் கால்சியம் உள்ளதால் இது மனிதனின் தற்காப்பு சிஸ்டம் அதாவது IMMUNE SYSTEM-ஐ மேம்படுத்துகிறது.


உறங்குவதற்கு முன் 1 கிளாஸ் பால் அருந்திவிட்டால் அழகிய தூக்கம் கூட வருகிறதாம்.


அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் கலப்பற்ற பால் என்று கூறுவதன் மூலம் அந்த பாலில் எப்படிப்பட்ட ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன என்பதை சிந்திக்க வலியுறுத்துகிறான் ஆனால் மனிதன் அந்த பாலில் தண்ணீரை ஊற்றி கலப்படம் செய்து விற்கிறான். இஸ்லாம் கலப்படத்தை வன்மையாக கண்டிக்கிறது!

பால் பற்றி கூறும்போது அல்லாஹ் அதை அருந்துபவருக்கு இனிமை என்று வர்ணிக்கிறான் மேற்படி ஆய்வுகளை பார்த்தால் பால் எவருக்குத்தான் கசக்கும்.

தாராளமாக புகட்டுகிறோம்

இங்கு அல்லாஹ் பால் பற்றி குறிப்பிடும் போது இறுதியாக தாராளமாக புகட்டுகிறோம் என்று கூறுகிறான் காரணம் அவன் படைத்த ரப்புல் ஆலமீன் அவன் கூறுவது எப்போதும் பொய் ஆகாது என்று இந்த கருத்தின் மூலம் நாம் அறிய வேண்டும்.



ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று ஒரு பழமொழி உள்ளது அந்த பழமொழியின் அடிப்படையில் இந்த வார்த்தை உண்மை என்பதை நிருபிக்க இந்தியா நாட்டின் பால் உற்பத்தியை அளவுகோளாக பயன்படுத்தி பார்ப்போமா?

இந்தியாவின் பால் உற்பத்தி

1968 21 மில்லியன் டன்கள்

2001 81 மில்லியன் டன்கள்

மக்கள் தொகை பெருக பெருக பாலின் உற்பத்தியும் பெருகி வருகிறது மாறாக பாலின் உற்பத்தி குறைந்தபாடில்லை. இந்தியாவிற்கு அடுத்தபடியாக அமெரிக்க நாடு ஆண்டுக்கு சராசரியாக 71 மில்லியன் டன்கள் பால் உற்பத்தியை மேற்கொள்கிறது.



பாலின் உற்பத்தியை 1998ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி உலக நாடுகள் முழுவதையும் கணக்கிட்டுப் பார்த்தால் ஆண்டுக்கு சராசரியாக 557 மில்லியன் டன்கள் குறைவில்லாமல் பால் உற்பத்தியாகிறது.

சிந்தித்துப்பாருங்கள்

அல்லாஹ்வின் கருணையினால் பால் என்ற இனிமையான பானத்தை நாம் குடிக்கிறோம் ஆனால் இந்த பாலை குடித்துவிட்டு கருணையாளன் அல்லாஹ்வை இணைவைத்து ஒரு சாராரும், அல்லாஹ்வைத் தவிர்த்து பிற வஸ்துக்களை ஒரு சாராரும் வணங்கி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் அல்லாஹ் கோபப்பட்டு பசுமாடுகள் உட்பட பால் கொடுக்கும் கால்நடைகளின் வயிறுகளில் பால் சுரக்காமல் இருக்க கட்டளையிட்டுவிட்டால் நிலைமை என்னவாகும் என்பதை ஒருகனம் சிந்தித்தப்பாருங்கள்! ஆனால் ரஹ்மத்துல் ஆலமீன் மக்கள் மீது கருணையுள்ளம் கொண்டவனாக இருக்கிறான் அதனால்தான் மனிதனை விட்டுப்பிடிக்கிறான். அவன் பிடியிலிருந்து தப்பிக்க எவருக்கேனும் வலிமை உள்ளதா?

தகவல் உதவி:

இஸ்லாமிக் பாரடைஸ்

Wednesday, October 28, 2015

கோமாதா பிரியர்கள் இந்த யாகங்களுக்கு என்ன பதில் வைத்துள்ளார்கள்!

கோமாதா பிரியர்கள் இந்த யாகங்களுக்கு என்ன பதில் வைத்துள்ளார்கள்!

கோசவம்- பசுமாடுகளை கொல்லும் யாகம்

வாயவியஸ் வேதபசு- வாயூ தேவதைகளுக்காக வெள்ளை பசுவைக் கொல்லும் யாகம்

காமயபசு‬- தனது எண்ணங்களை ஈடேற்றி கொள்வதற்கு உரிய பசு யாகம்

‪வதசொபகரணம்‬- கன்று குட்டியைக் கொலை செய்து நடத்தும் யாகம்

‪அஷ்டதச பசுவிதானம்‬ – 18 பசுக்களைக் கொலை செய்து நடத்தும் யாகம்

‪‎ஏகாதசீ பசுவிதானம்‬ – 11 பசுக்களைக் கொல்லும் யாகம்

‪கிறாமாரணயா பசுபிர்சம்ஷா‬ – நாட்டிலும் காட்டிலும் உள்ள பசுக்களைக் கொன்று யாகம் செய்வது

ஆதித்யவேதபசு‬ – சூரிய தேவனுக்கு பசு யாகம்

‪‎ரிஷபாலம்பன விதானம்‬ – எருதைக் கொன்று நடத்தும் யாகத்தின் விதி…

Wednesday, September 30, 2015

மாட்டுக் கறி சாப்பிட்ட முஹம்மது அக்லாக் கொல்லப்பட்டார்!





உத்தர பிரதேசத்தில் உள்ளது தாத்ரி நகர். இங்குள்ள பிஷாரா கிராமத்தில் வசித்து வருகிறார் முஹம்மது அஹ்லாக். இவர் தனது வீட்டில் மாட்டுக் கறியை சேமித்து வைத்து சாப்பிட்டார் என்று ஊர் முழுக்க வதந்தியை பரப்பிய இந்துத்வா கும்பல் 50 வயது மதிக்கத்தக்க முஹம்மது அஹ்லாக்கை அடித்தே கொன்றுள்ளது. ஹஜ்ஜூப் பெருநாளன்று கிடைக்கும் கறியை சேமித்து வைத்து ஒரு வாரம் வரை கூட சாப்பிடுவது சர்வ சாதாரணமான ஒரு நிகழ்வு. இதனை ஒரு பிரச்னையாக்கி இன்று அதனை கொலை வரை கொண்டு சென்றுள்ளது இந்துத்வா. 22 வயதான அவருடைய மகனையும் தாக்கியுள்ளனர் காட்டு மிராண்டிகள். மிக அபாயகரமான சூழலை நோக்கி நமது இந்தியா சென்று கொண்டுள்ளது என்பதனையே இந்த நிகழ்வு உணர்த்துகிறது.

தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
30-09-2015

Sunday, April 12, 2015

மாட்டிறைச்சி தடையால் வன விலங்குகளுக்கும் உணவு தட்டுப்பாடு!




மாட்டிறைச்சித் தடையால் பொருளாதார இழப்பும் வேலைவாய்ப்புப் பாதிப்பும் ஏற்படும் என்று லண்டன் கார்டியன் இதழ் கூறுகிறது.

மகாராட்டிர மாநிலத்தில் பசுக்களை புனிதம் என்று அறிவிப்பு மாட்டி றைச்சிக்குத் தடை விதிக் கப்பட்டுள்ளதானது முசுலீம்கள், கிறித்தவர்கள் மற்றும் ஏராளமான தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆகியோருக்கு மாட்டிறைச்சித் தடையின்மூலமாக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

நித்தின் தரோட் என்பவர் உரிய நேரங்களில் மழைப் பொழிவு இன்மையால் ஏற்பட்ட வருவாய் இழப்பால், தன்னிடம் உள்ள மாடுகளை விற்பனை செய்து கிடைக்கும் பணம், தன் சகோதரியின் திருமணத்தை நடத்த உதவியாக இருக்கும் என்று நினைத்தார். ஆனால், மோடியின் இந்து தேசியவாதக் கட்சியான பா.ஜ.க. ஆளும் இந்தியாவின் மேற்குப் பகுதி மாநிலமான மகாராட்டிர மாநிலத்தில் பசு மாடு மற்றும் எருது, காளைகளைக் கொல்வதற்குத் தடை விதிக்கப் பட்டுள்ளதன் காரணமாக மாடுகளை உரிய விலை கொடுத்து வாங்கு பவர்களை அவர் தேடுவதற்கு போராட வேண்டி யுள்ளது.

வேதனையுடன் தரோட் கூறும்போது, இப்போதைக்கு நான் கடன் வாங்குவதைத் தவிர வேறு வழி இல்லை என்கிறார். மும்பையிலிருந்து 370 மைல்கள் தொலைவில் உள்ள அகோலாவில் உள்ள அவர் குடும்பத்தில் உடன் பிறந்தவர்கள் வயதானவர்களாக 5 பேர் உள்ளனர். அவர் வருவாயை மட்டுமே குடும்பம் நம்பியுள்ளது.

மோடியின் பாஜக, இந்துக்களால் வழிபடக் கூடியது, பசுவைப் பாதுகாப்பது என்று கூறிவருவதால், மகாராட்டிர மாநிலத்தில் இறைச்சிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. விவசாயிகள் தங்களிடம் உள்ள விலங்குகளை விற்பனை செய்ய முடியாதவகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலை மேலும் மற்ற மாநிலங்களிலும் பரவிவிடும்.

விலங்குகளும் பட்டினி

மும்பை தேசியப் பூங்காவில் உள்ள சிங்கங்கள், புலிகள், சிறுத்தைகள் ஆகிய விலங்குகளின் வழமையான உணவான மாட்டிறைச்சி வழங்கப்படாமல், கோழி, ஆட்டிறைச்சி உணவாக வழங்கப்படுகிறது.

இறைச்சிக்கூடங்கள் இதுபோன்ற பாஜகவின் அறிவிப்பை எதிர்த்து இரண்டு வாரங்களுக்கும் மேலாக கடையடைப்பு செய்தன.
இந்தியாவில் இரண்டாமிடத்தில் உள்ள மாநிலத்தில் பசுவைக் கொல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாஜக ஆளும மாநிலங் களான ஜார்கண்ட் மற்றும் அரியானா மாட்டிறைச்சி வணிகத்தில் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

முசுலீம்கள், கிறித் தவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் ஆகியோர் குறைந்த விலையில் கிடைக்கும் சத்தான இறைச்சியாக உண்கிறார்கள். இதனாலேயே பாகுபாடுகளை உருவாக்கும் வகையில் மாட்டிறைச்சிக்குத் தடை விதித்துள்ளது பாஜக அரசு. தேசிய அளவில் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளில் அச்சுறுத்தலை உண்டாக்கியுள்ளது.

மாட்டிறைச்சி வணிகம் மற்றும மாட்டிறைச்சி சார்ந்த தோல் பொருள்கள் உள்ளிட்ட தொழில் களில் ஈடுபட்டுள்ள முசுலீம்கள் பல்லாயிரக்கணக்கில் வேலைவாய்ப்புகளை இழக்கும்நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த வணிகத்தில் உள்ள தலைவர்கள் மிகுந்த கவலையை வெளிப்படுத்தி உள்ளனர்.

மகாராட்டிரத்தில் பாராமதிப் பகுதியில் கால்நடைகளை விற் பனை செய்து வருபவரான ஆசிப் குரேஷி என்பவர் கூறுகையில், என்னுடைய தொழில் முற்றிலும் அழிந்து விட்டது. விவசாயிகள் தங்களிடமுள்ள கால் நடைகளை குறைந்த விலைக்கு தருவதற்கு முன்வந்துவிட்டார்கள். ஆனால், வெட்டுவது சட்டவிரோதம் என்று ஆனபிறகு என்னால் அந்தக் கால்நடைகளை வாங்கமுடியவில்லை என்று கூறினார்.
ஆளும் பாஜக அரசின் மாட்டிறைச்சித் தடைக்கு எதிராக முழு வேலை நிறுத்தப் போராட்டத்தை இறைச்சிக்கடைக்காரர்கள் செய்தார்கள். தடை இல்லாத எருமை மாடுகளையும் வெட்டாமல் போராடி வந்தனர். இந்துக்களில் பசுவை புனிதம் என்பவர்கள் எருமையைப் புனிதம் என்று கூறுவதில்லை.

பாஜக ஆளும் பிற மாநிலங்களில் மாட்டிறைச்சித் தடையைக் கட்டாயப்படுத்தவில்லை. பாஜக ஆளும் கோவா மாநிலத்தில் தடையைக் கொண்டுவருவதற்கு மறுத்த அம்மாநில முதல்வர் 40 விழுக்காட்டினர் உணவாக சாப்பிடுவதை, சிறுபான்மையர் உரிமையை மதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே இந்து தேசியவாதக் குழுக்கள் பாஜகவுடன் இணைந்து அதிக அளவில் கால் நடைகளுக்கான முகாம்களை அமைத்து, விவசாயிகள் நீண்ட காலத்துக்கு பராமரிக்க முடியாத பசுவையும், மற்ற வீட்டு விலங்குகளையும் பராமரிக்கவும் வேண்டும் என்று அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

300 மில்லியன் கால்நடைகள்

இந்தியாவில் சுமார் 300 மில்லியன் கால் நடைகள், வயதான உணவுக்கு மட்டுமே பயன் படக்கூடிய பசுக்கள், நகரங்கள் மற்றும் கிராமங்களின் வீதிகளில் திரிய விடப்படுகின்றன. அப்படி தெருவில் விடப் படும் மாடுகளின் எண்ணிக்கை மகாராட்டிர மாநிலத்தில் மட்டும் சுமார் இரண்டு லட்சம் ஆகும். மாட்டிறைச்சி வணிகத்தைப் பொறுத்தவரை விவசாயிகள் அந்த மாடுகளை விற்க முடியாமல் அப்படியே தெருவில் திரியும்வகையில் பராமரிக்காமல் கைவிட்டு விடுகின்றனர்.

தகவல் உதவி
Theguardian
23-03-2015


http://www.theguardian.com/world/2015/mar/23/india-beef-ban-jobs-economy-maharashtra-cows

Tuesday, March 10, 2015

மாட்டிறைச்சிக்குத் தடை: கோவையில் ஆர்ப்பாட்டம்



மாட்டிறைச்சிக்குத் தடை: மகாராஷ்டிர அரசைக் கண்டித்து கோவையில் நூதன ஆர்ப்பாட்டம்

மகாராஷ்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையைக் கண்டித்து கோவையில் ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தினர் திங்கள்கிழமை நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை செஞ்சிலுவை சங்க கட்டிடம் முன்பு ஆதித் தமிழர் விடுதலை இயக்கம் இளைஞர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் விடுதலை மணி தலைமை வகித்தார்.

மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், மகாராஷ்டிர மாநில அரசைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், மாட்டிறைச்சி பிரியாணி சாப்பிட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏழைகள் அதிகம் பயன்படுத்தும் இந்த இறைச்சி பயன்பாட்டுக்கு 5 ஆண்டு சிறை மற்றும் அபராதம் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. இதனால் தலித், சிறுபான்மை மக்கள் பாதிப்படுவார்கள். இந்த தடையை நீக்கும் வரை போராட்டம் தொடரும் என்று விடுதலை மணி தெரிவித்தார்.

நன்றி:
தமிழ் இந்து நாளிதழ்
10-03-2015


Saturday, March 07, 2015

சென்னை உயர்நீதி மன்றத்தில் மாட்டுக்கறி உண்ணும் போராட்டம்!



06-03-2015 அன்று சென்னை உயர் நீதி மன்ற வளாகத்தில் தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர்கள் மன்றம் சார்பில் 'மாட்டுக் கறி உண்ணும் போராட்டம்' மிக விமரிசையாக நடந்தது. வழக்கறிஞர்கள் ஆர்.சி.பாலகனகராஜ், மனோகரன், பாரி, தமிழினியன் போன்ற ஏராளமானோர் கலந்து கொண்டு மாட்டுக் கறியை இன்பமோடு தின்று மகாராஷ்டிர அரசின் மக்கள் விரோத போக்கைக் கண்டித்தனர்.

தமிழகத்தில் பசுவதை தடுப்பு சட்டமோ அல்லது மாட்டிறைச்சிக்கு தடையோ விதிக்கப்படவில்லை என்றபோதிலும், மகாராஷ்ட்ராவில் பசுவதை தடுப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதோடு, பசு மற்றும் மாடுகளை கொல்லவும், அவற்றின் இறைச்சிகளை விற்கவோ, கொண்டு செல்லவோ, வைத்திருக்கவோ கூடாது என அரசு தடை விதித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது. முன்னதாக மகாராஷ்ட்ரா அரசின் மேற்கூறிய தடை உத்தரவை பின்பற்றி தமிழக அரசும் அதேப்போன்ற தடை உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் அறிக்கை விடுத்திருந்தார். போராட்டக் குழுவினர் ராம கோபாலனுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.

முஸ்லிம்களுக்கு எதிராக காய்களை நகர்த்துவதாக எண்ணிக் கொண்டு இந்துத்வாவாதிகள் இந்த சட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர். இந்த சட்டத்தால் நேரிடையாக பாதிக்கப்படுவது இந்து பிற்படுத்தப்பட்ட மக்கள் என்பதனை ஏனோ இந்துத்வாவாதியினர் மறந்து விட்டனர். 'தேன் கூட்டில் கை வைத்து விட்டோம்' என்று இந்துத்வாவாதிகள் இனி உணர்ந்து கொள்வார்கள்.




Friday, March 06, 2015

இந்து மதத்தில் பசு மாமிசம் - ராஜா ராஜேந்திரலால் மத்ரா

இந்து மதத்தில் பசு மாமிசம் - ராஜா ராஜேந்திரலால் மத்ரா

தற்போது பசு மாடுகளை உணவுக்காக வெட்டக் கூடாது என்று மத சட்டங்களைக் காட்டி ஏழைகளின் உணவான பசு மாமிசத்தை மகாராஷ்ட்ராவில் தடை செய்துள்ளனர். நாடு முழுக்க மிகுந்த எதிர்ப்பை இந்த நிகழ்வு ஏற்படுத்தியுள்ளது. பண்டைய காலத்தில் பசு மாமிசம் எவ்வாறு கையாளப்பட்டு வந்தது என்பதை இந்து மதத்தை ஆசாரமாக பின்பற்றும் ஒருவரின் ஆராய்ச்சியை இனி பார்போம்.

இந்து நிபுணரான ராஜா ராஜேந்திரலால் மத்ரா எல்.எல்.டி., சி.ஐ.இ., வங்காள வைஷ்ணவர். இவரால் எழுதப்பட்ட "இந்து ஆரியன்" என்ற புத்தகத்தில் 6வது அத்தியாயத்தில் கூறப்பட்டிருக்கும் விஷயத்தின் ஒரு பகுதியை நாம் இனி கீழே பார்போம்:

“பசு மாமிசத்தை உணவாக புசிக்கலாம் என்று நினைத்தவுடனேயே இந்துக்களின் மனம் புண்பட்டு விடுகிறது. ஆயிரக்கணக்கான இந்துக்கள் தானென்ன? லட்சக்கணக்கான இந்துமதப் பற்றுடைய இந்துமத நிபுணர்களும் கூட பசு மாமிசம் என்ற பெயரையுங் கூட வாயால் சொல்ல அருவறுக் கிறார்கள். நம் நாட்டில் பசு வதை செய்யும் விஷயத்தில் பெருங் கிளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு காலத்தில் உயிர்ப் பிராணிகளை அறுப்பதால் சில ஆத்மாக்கள் அமைதியாக இருந்தது மட்டுமல்லாமல், அவ்வாறு அறுக்கப்படுவது விருந்தினர்களுக்கெனக் கருதப்பட்டும் வந்தது. மேலும், இறந்து போன இந்துவுடன் ஓர் பசுவையும் சேர்த்து மயானக் கரையில் வைத்து எரிக்கப்பட்டு வந்தது. இவ்வந்தரங்கமான விஷயத்தை வெளியிடுவதன் நிமித்தம் இந்துக்களின் தற்போதைய கிளர்ச்சிகளை யுணர்ந்த இந்தியர்களுள் பெரும் ஆச்சரியத்தையும் கிளர்ச்சியையும் உண்டுபண்ணும். இவ்விஷயங்களை நான் எந்த கிதாப் (புத்தகம்) பிலிருந்து எடுத்திருக்கின்றேனோ அக்கிரந்தங்களில் எத்தகைய சந்தேகமும் அதிருப்தியும் கொள்ள முடியாது.

மனுஸ்மிருதியில் பசு மாமிசம்

எக்காலத்திலுமே பசு மாமிசம் சாப்பிடலாமென மனுஸ்மிருதி அனுமதிக்கிறது. ஆனால் அதைச் சாப்பிடுவதற்கு முன் ஒரு துண்டைத் தேவதைகளுக் கென்றாவது, பெரியோர்களின் ஆத்மாக்களுக்கென்றாவது, விருந்தாளிக்கென்றாவது மனதில் ஞாபகம் செய்து கூப்பிட வேண்டும். மேலும் மனுஸ்மிருதியில் வரையப்பட்டிருப்பதாவது: யாதொரு மனிதன் கிரயத்திற்காவது, இலவசமாகவாவது பசுமாமிசத்தை வாங்கி தேவர் களுக்காவது அல்லது ஆத்மாக்களுக்காவது ஸ்தோத்திரம் செய்த பிறகு அம் மாமிசத்தைச் சாப்பிடுவதில் எத்தகைய பிணியும் கிடையாது. (மனு 235)

ஆனால் மனுஸ்மிருதி பசு மாமிசத்தை ஓர் உணவாகக் கூறவில்லை யாயினும், மனிதன் சாப்பிடக்கூடிய உயிர்ப் பிராணிகளின் நாமங்களைக் கூறப்பட்டிருக்கும் அத்தியாயத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

முள்ளெலி, பெருச்சாளி, ஆமை, முயல் ஆகியவைகளை இந்து மத நிபுணர்கள் உண்ணலாமென வைத்திருக்கின்றார்கள். நான்கு கால் மிருகங்களில் ஒட்டகம் ஒன்று மட்டும் நீங்கலாக ஒரு பக்கத்தில் மட்டும் பல்லிருக்கக் கூடிய மிருகங்கள் எதானாலும் சாப்பிடலாம். (மனு 185)

மேலே கூறப்பட்ட நிபந்தனைப்படி பசுவும் அதில் சேர்ந்ததென்பதில் ஐயமில்லை. ஏனெனில் பசுவுக்கு ஒரே பக்கத்தில்தான் பற்களுண்டு என்பது மனு ஸ்மிருதியில் மறைவானதன்று, மனு பசுவைச் சாப்பிடக் கூடாதென்று விலக்கியிருந்தால் ஒட்டகத்தோடு சேர்த்துப் பசுவையும் கண்டிப்பாகச் சாப்பிடக் கூடாதென விலக்கியிருப்பார்கள். ஆனால் முன்பின் வாசகங்களைக் கவனிப்பது கொண்டு பசுவைச் சாப்பிடக் கூடாதென விலக்கவில்லை யென்று நாம் அர்த்தம் செய்து கொள்வது சரியான அத்தாட்சியாகமாட்டாது. ஆதலின் பிரமச்சாரியானவர் தம் வீட்டிற்கு திரும்பி வருவதற்காக குருவுக்கு சில காணிக்கைகள் கொடுக்கின்றார்கள். இவ் விஷயம் மனு ஸமிருதியில் தக்க ஆதாரமாக இருக்கிறது. அதில் எழுதியிருப்பதாவது:

பிரமச்சாரிகள் விவாகத்திற்கு முன் வேதங்களில் கூறப்பட்டிருக்கும் காணிக்கைகளைச் சேகரித்து புஷ்பங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட கம்பளத்தில் உட்கார்ந்து மார்க்கக் கோட்பாட்டின் படி குருவுக்கு ஒரு பசுவை வெகுமதியாக கொடுக்கவேண்டும். (மனு 6 3)

அதன் பின்வரும் ஒரு வாசகத்தில் காணப்படுவது: இராஜாக்கள் பிரபல விருந்தினர்களுக்காக இன்பமான சாதமும் பசு மாமிசமும் செய்யப்பட்டு வந்திருக்கின்றது.

குர்ஹீயா சூத்திரத்தில் பசு குர்பானியின் முறை ஓர் விதமாகக் கூறப் பட்டிருக்கிறது. அதற்கு சுடப்பட்ட பசு மாமிசம் உப்புக் கண்டம் எனக் கூறப்படுகிறது. அதற்காக வேண்டி பசுக்களில் நல்ல பசுவாகவும், கொழுத்த தாகவும் இருப்பதுடன் பாதரம் நிறமாகவும் இருக்கக் கூடாது. இவ்வாறு இந்தப் பசுவுக்கு பல நிபந்தனைகளுண்டு. அவ்வாறு குர்பானி செய்யப்படும் பசுவிற்கு எத்தனை நிபந்தனைகளிட்டிருக்கின்றார்களோ அத்தனை நிபந்தனைகளும் பொருந்திய ஓர் பசுங்கன்று கிடைத்தால் வெந்நீர் கொண்டு குளிப்பாட்டி அதை ரூரா (சுவாமி)வுக்கு வேண்டுதலைசெய்து கட்டிவைத்து வளர்த்து வருகின்றார்கள்.

அந்தக் கன்றுக்குப் பற்கள் பூராவும் முளைத்து குறிப்பிட்ட தவணை வந்தவுடன் குர்பானியின் மந்திரம் கிரிவுக்கள் தெரிந்த புர்ஹத் பிராமணனை அழைத்து அவர் படிக்க வேண்டிய மந்திரங்களைப் படித்து நெருப்பில் போட வேண்டிய வஸ்துக்களைப் போட்டு செய்ய வேண்டிய கிரியைகள் பூராவையும் செய்து முடித்துவிட்டு புது நூதனமாக தயார் செய்யப்பட்ட ஓர் இடத்திற்கு அந்தப் பசுவைக் கொண்டுபோய் பொதுவான சட்டப்படி அறுத்து அதன் ஈரலை எடுத்து ஓர் தட்டில் வைத்து 12 தேவதைகளின் நாமங்களைச் சொல்லிக்கொண்டே அந்தத் தட்டை நெருப்பில் வைத்து விடுகிறார்!

அதன் பிறகு வைக்கோல் புற்களை விரித்து கொஞ்சம் அரிசிப் பொத்தலையும் பசு மாமிசத்தையும் வைத்து ரூரோவுக்கு பூஜை செய்கின்றார்கள். பூர்வீக காலத்தில் அவ்வாறு குர்பானி செய்யப்பட்ட பசுவின் எலும்பு, ஜவ்வு, தோல் இவைகளை நெருப்பில் போட்டு எரித்து சாம்பலாக்கப்பட்டு வந்தது. அதற்குப் பிறகு வந்த சம்பீதா ரிஷியானவர் அவ்வாறு நெருப்பில் போடப்படும் வஸ்துக்களில் பொது ஜனங்களுக்குப் பிரயோஜனம் தரக்கூடியதான தோலை நெருப்பில் போடுவதற்கு பதிலாக செருப்பாக தைத்து உபயோகப்படுத்திக் கொள்ளலாமென பொதுவாக உத்தரவு செய்து விட்டார். அவ்வாறு ரூராவுக்கு பூஜை செய்ததன் பிறகு பிராமண பூசாரியானவர் இடது பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டு நேராக எழுந்து நின்று ஏதோ சில மந்திரங்களைப் படித்துக்கொண்டே அறுக்கப்பட்ட பசுவின் இரத்தத்தை அவ்விடங்களிலிருக்கும் சாப்பங்களுக்கு சேர்க்கை செய்து விடுகிறார். இவ்வெல்லாக் கிரியைகளும் செய்து முடித்த பிறகு கடைசியாக (சுவிஸ்த்தாக்கிர்த்) என்ற ஒரு பூஜையும் செய்யப்படுகிறது. பிறகு அப்பசுவுடைய நெஞ்சு மாமிசத்தினின்றும் சுடுவதற்காகக் கொஞ்சம் மாமிசத்தை எடுத்துக் கொள்ளப்படுகிறது.

அதன் பிறகு மீதியாயிருக்கும் அப்பசுவின் மாமிசத்தைப் பொதுவாக எல்லோரும் சாப்பிடலாமென்று சில சூத்திரங்கள் கூறுகின்றன. சில சூத்திரங்கள் அப்பசுவை குர்பானி செய்தவர்கள் மட்டும் சாப்பிடலாமெனக் கூறுகின்றன.

இவ்வாறு ஒரு மனிதன் குர்பானி செய்து விட்டால் அவனுக்கு வயது அதிகமாகிறதென்றும், செல்வந்தனாவானென்றும், நல்ல நிலைமையிலே இருப்பானென்றும், தன் மதத்தில் கௌரவமுடையவனாக இருப்பானென்றும், சந்ததிகள் அதிகமாகுமென்றும், கால் நடை மிருகங்கள் அவனுக்கு அதிகமாகு மென்றும், அவ் வேதத்தில் ஆசை காண்பிக்கப்பட்டிருக்கிறது. சகல தனவந்தர் களும் அவர்கள் வயதில் ஓர் விடுத்தமாவது இவ்வாறு குர்பானி செய்ய வேண்டியது முக்கியமென்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் அவ்வாறு குர்பானி செய்யப்பட்ட பசு மாமிசம் எவ்வாறு சமைக்கப்பட்டதென்ற விஷயம் விரிவாகக் கூறப்படாதது மிகவும் வருந்தத்தக்கதே. சமைக்கப்படும் முறை விவரமாக கூறப்படாவிடினும் அறுக்கப்பட்ட பசுவின் நெஞ்சு மாமிசத்திலிருந்து சுடுவதற்காக மாமிசம் எடுப்பதே அவர்கள் சமைக்கும் முறையை நன்கு விளக்கிக் காட்டுகிறது.

பகுத்தறிவு (மா.இ.) கட்டுரை மார்ச்சு 1936
-குடியரசு

எங்கள் கிராமத்தில் மாட்டுக் கறியில் உப்புக் கண்டம் போடும் பழக்கம் இன்றும் இருக்கிறது. தமிழக முஸ்லிம்கள் இந்து மதத்திலிருந்து வந்தவர்கள் ஆதலால் பழைய பாரம்பரிய பழக்கம் தொடர்ந்து வருகிறதோ என்று நினைக்கிறேன். :-)

மாட்டுக் கறியை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் தலித்களும், பிற்படுத்தப்பட்ட இந்துக்களும், முஸ்லிம்களும், கிருத்தவர்களும் தங்கள் புராதன இந்து மதத்தின் ஒரு கொள்கையை வழி வழியாக பின்பற்றி வருகிறார்கள் என்றே இதனை பார்க்க வேண்டியாதாயிருக்கிறது.

எனவே இந்து மதத்தின் பழைய கொள்கையான மாட்டுக் கறி படையலை மீண்டும் கொண்டு வந்து இந்து மதத்தின் பெருமையை நரேந்திர மோடி நிலை நாட்ட வேண்டும் என்பதே பெரும்பானமை இந்திய மக்களின் விருப்பமாக உள்ளது.

தலித் தலைவர் திருமா வளவனும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸூம் மாட்டுக் கறிக்கான தடையை வன்மையாக கண்டித்திருப்பதையும் இங்கு நாம் நினைவு கூறுகிறோம்.

Wednesday, March 04, 2015

பலரையும் சிந்திக்க வைத்த விவேகானந்தர்!



பலரையும் சிந்திக்க வைத்த விவேகானந்தர்!

ஒருமுறை விவேகானந்தரிடம் பசுக்களைப் பரிபாலிக்கும் சங்கத்தைச் சேர்ந்த ஒரு பிரச்சாரகர் வந்து பசுக்கள் பாதுகாப்புப் பணிக்கு நன்கொடை கொடுக்குமாறு கேட்டார்.

அப்பொழுது அந்தப் பிரச்சாரகரைப் பார்த்து “உங்கள் சங்கத்தின் நோக்கம் என்ன?” என்று கேட்டார் விவேகானந்தர்.

“நமது நாட்டில் உள்ள பசுத் தாய்களைக் கசாப்புக் காரர்களிடமிருந்து நாங்கள் பாதுகாக்கிறோம். நோயுற்ற பசுக்கள், வலிவிழந்தனவும், கசாப்புக்காரர்களிடமிருந்து வாங்கப்பட்டனவும் பரிபாலிக்கப்படுவதற்காகப் பசு வைத்தியசாலைகளை ஏற்படுத்தியிருக்கிறோம்” என்று பதில் சொன்னார்.

“மத்திய இந்தியாவிலே ஒரு கொடிய பஞ்சம் எழுந்து விட்டது. ஒன்பது லட்சம் மக்கள் பட்டினியால் இறந்தார்கள் - இவர்களுக்காக உங்கள் சங்கம் என்ன செய்தது?” என்ற கேள்வியை எழுப்பினார் விவேகானந்தர்.

“பஞ்சம் முதலிய துன்பம் வரும்போது நாங்கள் உதவி புரிவதில்லை. எங்கள் சபை பசுத் தாய்களைப் பரிபாலிக்கும் பொருட்டே ஏற்படுத்தப்பட்டது. பஞ்சங்கள் என்பவை மக்களுடைய பாவ கருமத்தினாலே ஏற்பட்டது. கருமம் எப்படியோ, பயனும் அப்படியே!”

“பசுத் தாய்களும் தம்முடைய கருமத்தினால் கசாப்புக்கடைக்காரர்களின் கையில் அகப்பட்டு இறக்கின்றன என்று சொல்லி விட்டுப் போக வேண்டியதுதானே” என்று மடக்கினார் விவேகானந்தர்.

“ஆம், நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் பசு நம் அன்னை என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றனவே” என்றார் பிரச்சாரகர்.

அப்பொழுது நறுக்கென்று ஒன்று சொன்னார் விவேகானந்தர் “ஆம். பசு நம் அன்னை என்பதை அறிந்து கொண்டேன். இத்தகைய புத்திசாலிகளான பிள்ளைகளை வேறு யார்தான் பெறுதல் கூடும்?” என்று கேலியாகச் சொன்னார்.

"விடுதலை” தலையங்கம் 21-1-2012



Sunday, December 07, 2014

மாட்டுக் கறி விற்பனையால் பலனடைபவர்கள் யார்?

மாட்டுக் கறி விற்பனையால் பலனடைபவர்கள் யார்?

இந்தியாவில் மாட்டுக் கறி ஏற்றுமதி செய்து வரும் பிரபலமான 6 கம்பெனிகளில் 4 ன் உரிமையாளர்கள் இந்துக்கள். மாட்டுக் கறி ஏற்றுமதியில் உலகிலேயே முதலிடத்தை பெறுவது பிரேசில். அடுத்த இடத்துக்கு வருகிறது இந்தியா. ஆஸ்திரேலியா, அமெரிக்க, இங்கிலாந்து என்று அடுத்தடுத்து வருகின்றன.

இனி இந்தியாவிலிருந்து மாட்டுக் கறி ஏற்றுமதி பண்ணும் முன்னணி நிறுவனங்களின் பெயர் பட்டியலைப் பார்ப்போம்.

1) Al-Kabeer Exports Pvt. Ltd.
Its owner name: Mr. Shatish &Mr. Atul Sabharwal
Add: 92, Jolly makers, Chembur Mumbai 400021

2) Arabian Exports Pvt.Ltd.
Owner's name: Mr.Sunil Kapoor
Add: Russian Mansions, Overseas, Mumbai 400001

3) M.K.R Frozen Food Exports Pvt. Ltd.
Owner's name Mr. Madan Abott.
Add : MG road, Janpath, New Delhi 110001

4) P.M.L Industries Pvt. Ltd.
Owner's name: Mr. A.S Bindra
Add : S.C.O 62-63 Sector -34-A, Chandigarh 160022

வளைகுடா வியாபாரத்தை கணக்கில் கொண்டு அராபிய பெயர்களை நரித்தனமாக இந்த மேல் சாதியினர் தங்கள் கம்பெனிகளுக்கு வைத்து காசுபார்க்கிறார்களே. கோமாதாவை வெட்டலாமா என்று இந்த பனியா மற்றும் மார்வாடி கும்பலுக்கல்லவா ஆலோசனை வழங்க வேண்டும்? செய்தார்களா? இந்த இடத்தில் இவர்களுக்கு கோமாதாவை விட காசுதான் முக்கியம்.

ஏற்கெனவே இந்திய பொருளாதாரம் நொடித்துப் போயுள்ளது. பால் தராத கிழட்டு மாட்டுக்களை அறுத்து பதப்படுத்தி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதில் இந்துத்வாவினருக்கு என்ன பிரச்னையோ தெரியவில்லை. இந்துத்வாவினருக்கு மாதா மாதம் அமெரிக்க ஐரோப்பிய வளைகுடா நாடுகளிலிருந்து பார்பன அம்பிகள் பணம் அனுப்புவதால் செழிப்பாக இருக்கின்றனர்.

ஆனால் வானமும் பொய்த்து பலன் தந்த பசுவும் பால் தருவதை நிறுத்தி விட்டால் அந்த ஏழை விவசாயி அடிமாடாக பசுக்களை விற்காமல் என்ன செய்வான்? இஸ்லாமிய பெயர்களில் ஒளிந்து கொண்டு கோடிகளில் புரளும் இந்து முதலாளிகளை அல்லவா முதலில் இந்த இந்துத்வாவினர் கண்டிக்க வேண்டும்? ஆனால் செய்ய மாட்டார்கள். எங்காவது ஒரு தலித் வயிற்றுப் பசிக்காகவும் உழைத்து வாழும் அவனுக்கு தேவையான புரதத்தைப் பெறவும் மாட்டை அறுத்தால் சங் பரிவார கும்பல் ஓடி சென்று அடித்து அவனை கொன்றும் விடும். முன்பு வட நாட்டில் நான்கு தலித்களை இந்த இந்துத்வாதியினர் மாட்டை அறுத்ததற்காக கொன்றதை நாம் மறந்து விட முடியாது.



Sunday, November 30, 2014

நேபாளத்தில் ஒரே நேரத்தில் 5000 மாடுகள் பலி கொடுக்கப்பட்டுள்ளன!





காத்மாண்டு: நேபாளம், பாரா மாவட்டத்தில் உள்ள பரியார்பூர் என்ற கிராமம். இங்குள்ள காதிமை கோவிலில், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை எருமைகளை பலியிடுவது வழக்கம். இந்த ஆண்டு, 5 ஆயிரத்திற்கும் அதிகமான எருமை மாடுகள் ஒரே நேரத்தில் பலி கொடுக்கப்பட்டன. இவ்வாறு விலங்குகளை பலி கொடுப்பதால், தங்களுக்கு நல்ல வசதியாக வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். எருமை மாடுகளை பலி கொடுப்பதற்காக 400 பேர் பணியில் இருந்தனர். எருமை மாடுகள் தவிர ஆயிரக்கணக்கான ஆடுகளும், பன்றி மற்றும் கோழிகளும் இந்த விழாவில் பலி கொடுக்கப்பட்டன. விலங்குகள் பாதுகாப்பு ஆர்வலர்கள் இதில் தலையிட்டு, தடுக்க முயற்சி மேற்கொண்டனர். ஆனால், பராம்பரியமாக இந்த விழா நடத்தப்பட்டு வருவதாகவும், அதனால் நிறுத்த முடியாது என்றும் விழா ஏற்பாட்டாளர்கள் கூறி உள்ளனர். இந்த விழாவில் கலந்து கொண்ட ஒரு குழந்தை குளிர் தாங்காமல் இறந்துவிட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி, மூதாட்டி ஒருவர் இறந்தார்.

தினமலர்
30-11-2014

மாடுகளை தனது வயிற்றுப் பசிக்காக அறுத்து புசித்த நான்கு தலித்களை அடித்தே கொன்றது மேல் சாதி வர்க்கம். சில ஆண்டுகளுக்கு முன் வட இந்தியாவில் நடந்த இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஞாபகம் இருக்கலாம். மாட்டுக் கறியில் புரதச் சத்து அதிகம் உள்ளது. விலையும் குறைவு. உடல் உழைப்பு சார்ந்த தொழில் செய்யும் தலித் மக்களுக்கு இந்த புரதம் அவசியம். அலுவலக வேலை மட்டுமே செய்து பழக்கப்பட்ட பார்பனர்களுக்கு இந்த புரதச் சத்தெல்லாம் தேவைப்படாது. தேவைப்படுபவர்கள் தங்களின் பொருளாதாரத்தை செலவு செய்து பெற்றுக் கொள்வதில் இவர்களுக்கு என்ன பிரச்னை என்று தெரியவில்லை.

ஒருவருக்கு மாடு தெய்வம் என்றால் அதனை அவரது வீட்டில் வைத்து அதற்கு மரியாதை செய்து கொள்வதை யாரும் தடுக்கவில்லை. பொது வெளியில் மொத்த மக்கள் தொகையில் இரண்டு சதவீதமே இருக்கும் பார்பனர்கள் 'எனது நம்பிக்கைப்படி மற்ற 98 சதமான இந்தியர்களும் மாற வேண்டும்' என்று அடம் பிடிப்பது சர்வாதிகாரம் இல்லையா?

இவர்களுக்கு அவசியம் என்றால் ஒரே இடத்தில் 5000 மாடுகளை வெட்டி யாருக்கும் பயன் படாமல் அழுக விடுவார்கள். சுற்றுப் புற சூழலை மாசுபடுத்துவார்கள் பக்தியின் பெயரால். ஆனால் வயிற்றுப் பசிக்காக அறுத்து எவரேனும் புசித்தால் அதனை பிரச்னையாக்குகிறார்கள். இதனை அறிவு ஜீவிகள் என்று சொல்லிக் கொள்வோரும் ஆதரிப்பதுதான் விந்தை.

இனி இந்து மதம் பசு பற்றி என்ன கூறுகிறது என்றும் பார்போம்.

யாதொரு மனிதன் கிரயத்திற்காவது, இலவசமாகவாவது பசுமாமிசத்தை வாங்கி தேவர் களுக்காவது அல்லது ஆத்மாக்களுக்காவது ஸ்தோத்திரம் செய்த பிறகு அம் மாமிசத்தைச் சாப்பிடுவதில் எத்தகைய பிணியும் கிடையாது. (மனு 235)

முள்ளெலி, பெருச்சாளி, ஆமை, முயல் ஆகியவைகளை இந்து மத நிபுணர்கள் உண்ணலாமென வைத்திருக்கின்றார்கள். நான்கு கால் மிருகங்களில் ஒட்டகம் ஒன்று மட்டும் நீங்கலாக ஒரு பக்கத்தில் மட்டும் பல்லிருக்கக் கூடிய மிருகங்கள் எதானாலும் சாப்பிடலாம். (மனு 185)

பசு குர்பானியின் முறை ஓர் விதமாகக் கூறப் பட்டிருக்கிறது. அதற்கு சுடப்பட்ட பசு மாமிசம் உப்புக் கண்டம் எனக் கூறப்படுகிறது. அதற்காக வேண்டி பசுக்களில் நல்ல பசுவாகவும், கொழுத்த தாகவும் இருப்பதுடன் பாதரம் நிறமாகவும் இருக்கக் கூடாது. இவ்வாறு இந்தப் பசுவுக்கு பல நிபந்தனைகளுண்டு. அவ்வாறு குர்பானி செய்யப்படும் பசுவிற்கு எத்தனை நிபந்தனைகளிட்டிருக்கின்றார்களோ அத்தனை நிபந்தனைகளும் பொருந்திய ஓர் பசுங்கன்று கிடைத்தால் வெந்நீர் கொண்டு குளிப்பாட்டி அதை ரூரா (சுவாமி)வுக்கு வேண்டுதலைசெய்து கட்டிவைத்து வளர்த்து வருகின்றார்கள். அந்தக் கன்றுக்குப் பற்கள் பூராவும் முளைத்து குறிப்பிட்ட தவணை வந்தவுடன் குர்பானியின் மந்திரம் கிரிவுக்கள் தெரிந்த புர்ஹத் பிராமணனை அழைத்து அவர் படிக்க வேண்டிய மந்திரங்களைப் படித்து நெருப்பில் போட வேண்டிய வஸ்துக்களைப் போட்டு செய்ய வேண்டிய கிரியைகள் பூராவையும் செய்து முடித்துவிட்டு புது நூதனமாக தயார் செய்யப்பட்ட ஓர் இடத்திற்கு அந்தப் பசுவைக் கொண்டுபோய் பொதுவான சட்டப்படி அறுத்து அதன் ஈரலை எடுத்து ஓர் தட்டில் வைத்து 12 தேவதைகளின் நாமங்களைச் சொல்லிக்கொண்டே அந்தத் தட்டை நெருப்பில் வைத்து விடுகிறார்! அதன் பிறகு வைக்கோல் புற்களை விரித்து கொஞ்சம் அரிசிப் பொத்தலையும் பசு மாமிசத்தையும் வைத்து ரூரோவுக்கு பூஜை செய்கின்றார்கள். பூர்வீக காலத்தில் அவ்வாறு குர்பானி செய்யப்பட்ட பசுவின் எலும்பு, ஜவ்வு, தோல் இவைகளை நெருப்பில் போட்டு எரித்து சாம்பலாக்கப்பட்டு வந்தது.

-குர்ஹீயா சூத்திரம்

தாவரங்களை கொன்று திண்பவர்கள் அது உயிர் வதையில் சேராது என்று வாதிப்பார்கலானால் அது முற்றிலும் தவறு. தாவரங்களும் உணர்கின்றன, வலியையும் உணர்கின்றன, தாவரங்களுக்கு rudimentary nerve structure என்று உள்ளது, அது தான் வலியை உணரக்கூடியதாக உள்ளது. ஒரு இலையை அதிலிருந்து எடுத்தாலோ அல்லது அதை தொட்டால் கூட அது உணரக்கூடியதாக உள்ளது. மேலும் மற்ற தாவரங்களோடு பேசுவதாக உள்ளது என்பது மேலும் ஆச்சர்யமான விஷயம்.

அது பற்றி மேலும் அறிய கீழ உள்ள சுட்டியை பார்க்கலாம்:

http://www.viewzone.com/plants.html

Tuesday, August 12, 2014

மாட்டுக்காக ஒரு முஸ்லிமை துவம்சம் செய்யும் மனித குல விரோதிகள்!



அடி மாடுகளை விற்பனைக்காக எடுத்துச் சென்ற ஒரு முஸ்லிமை இந்துத்வாவாதிகள் எந்த அளவு மூர்க்கத்தனமாக தாக்குகின்றனர் என்பதை இந்த காணொளி நமக்கு விளக்குகிறது. மிருகத்தை விட கேவலமாக சக மனிதனோடு நடக்கும் இது போன்ற இந்துத்வாவாதிகள் மனித குல எதிரிகள் என்றாலும் மிகையாகாது. மேலும் மாட்டுக் கறியை அதிகம் விரும்பி சாப்பிடுவது தாழ்த்தப்பட்ட மக்களே! குறைந்த விலையில் அதிக புரதத்தை அந்த உழைக்கும் மக்கள் பெறுவதை உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் ஒரு கும்பல் தினமும் தடுத்துக் கொண்டிருக்கிறது.

இதே காணொளியில் அதே மாடுகளை இந்துக்கள் பலி கொடுப்பதற்காக எந்த அளவு சித்ரவதை செய்து கொல்கிறார்கள் என்பதையும் பாருங்கள். முதலில் அவர்களை அல்லவா இந்த இந்துத்வாவாதிகள் தடுக்க வேண்டும். உனது மதத்தவன் செய்யும் ஒரு செயலை தடுக்க திராணி இல்லாமல் அப்பாவி ஓட்டுனரை அவர் முஸ்லிம் என்பதற்காக மிருகத்தை அடிப்பது போல் அடிக்கிறாயே! இதற்கெல்லாம் விடிவு இல்லை என்றா நினைத்துக் கொண்டிருக்கிறாய்.

ஐஎஸ்ஐஎஸ் என்ற தீவிரவாத அமைப்பு ஈராக்கில் மற்ற மதத்தவரை கட்டாயப் படுத்தி இஸ்லாத்தை ஏற்கச் சொல்கிறது என்ற வாதம் வைக்கப்படுகிறது. இது உண்மையிலேயே ஐஎஸ்ஐஎஸ் என்ற அமைப்பு செய்யும் செயல் தானா அல்லது இவர்களின் பெயரைக் கெடுக்க அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து செய்யும் சதித் திட்டமா என்பதை உறுதிப்படுத்த உறுதியான தகவல் நமக்கு வரவில்லை. நமது செவிலியர்கள் இந்துக்களாக இருந்தாலும் அவர்களுக்கு ரமலான் மாதத்தில் கஷ்டப்பட்டு உணவை கொண்டு கொடுத்து 'நீங்கள் எங்கள் சகோதரிகள். நாங்கள் நோன்பிருந்தாலும் உங்களைப் பசியுடன் இருக்க விட மாட்டோம்' என்று சொன்ன அவர்களா தங்கள் நாட்டு மக்களை அநியாயமாக மதமாற்றம் செய்வர்! ஈராக்கின் செய்தி ஸ்தாபனம் அனைத்தும் அமெரிக்கர்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளதை நாம் அறிவோம். நமது நாட்டு செவிலியர்கள் ஈராக்கை விட்டு வெளியேறியதால் அவர்களைப் பற்றிய உண்மை செய்தி கிடைத்தது. இல்லை என்றால் அந்த செய்தியும் மறைந்து போயிருக்கும்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை முஸ்லிம்களை ஏன் கண்டிக்கவில்லை என்று பலரும் கேட்கின்றனர். இந்த இந்துத்வாதிகள் செய்யும் காட்டுமிராண்டித் தனத்தை இந்துக்கள் ஏன் கண்டிப்பதில்லை என்று யாரும் தங்கள் கருத்தை வைப்பதில்லை. இதுதான் மதசார்பற்ற இந்தியா!

Sunday, June 29, 2014

பசு வதை பற்றி சில கருத்துக்கள்!

திரு தாயுமானவன்!

//ஒன்றை மட்டும் கூறுகிறேன். என்னதான் கூப்பாடு போட்டாலும் இந்து மதம் கோ மாமிசத்திற்கு எதிரானது என்று கூறுவது சகிக்கவொன்னாத வரலாற்று மோசடி. வேத காலத்தில் பசு மாமிசம் உண்டதர்க்கான ஆதாரம் வேதத்தில் தொடங்கி ஆயுர்வேத மருத்துவம் முதல் மனு தர்மம் வரை நிறையவே இருக்கின்றது. நிலைமை இப்படி இருக்கும் போது பசு மாட்டின் இறைச்சியை தடை செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் மோகன் பகவத் முதல் இங்கிருக்கும் ராமகோபாலன் வரை கூப்பாடு போட்டு புனித பசுக்களாக தங்களை காட்டி கொள்வது தான் வரலாற்று நகை முரண்..//

ஒரு இந்துவாக இருந்து கொண்டு மிக அருமையான வாதத்தை வைத்துள்ளீர்கள். இதையே நான் சொன்னால் 'நீ எப்படி சொல்லப் போயிற்று' என்று சாரங்க் சண்டைக்கு வருவார்.

உலகில் ஆயிரக்கணக்கான உயிர்கள் உள்ளன. எல்லா உயிர்களையும் சமமாக பாவிப்பவர் அனைத்து உயிர்களையும் மாமிசத்துக்காக வெட்டுவதை எதிர்ப்பார். அது என்ன பசு மாமிசத்துக்கு மாத்திரம் ஒரு எதிர்ப்பு? நீங்கள் சொல்வது போல் வேத காலம் தொட்டு பசு வேள்விக்காக கொல்லப்பட்டுள்ளது. அதெல்லாம் தவறு என்று ஃபத்வா கொடுக்கப் போகிறீர்களா?

மேலும் மனிதன் உணவுக்காக அறுக்கும் விலங்குகள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவையே. உலகம் முழுக்க பெரும்பாலான மக்கள் இதனையே விரும்பி சாப்பிடுகின்றனர். இவற்றின் எண்ணிக்கை எங்காவது குறைந்துள்ளதாக நீங்கள் படித்திருக்கிறீர்களா? மேலும் மேலும் இவற்றின் எண்ணிக்கை பெருகிக் கொண்டுதானே இருக்கிறது. உணவுக்காக அறுக்கப்படாத சிங்கம், புலி போன்றவற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறது. இது விநோதமாக இல்லையா? தினமும் கோடிக்கணக்கான ஆடுகளும், மாடுகளும், கோழிகளும் உணவுக்காக வெட்டப்படுகிறது. இவை எல்லாம் ஒரே நாளில் நின்று போனால் இவற்றின் எண்ணிக்கை அதிகரித்து சுற்றுப்புற சூழலை கெடுக்கவும் செய்யும். ஆஸ்திரேலியாவில் கங்காருகள் அதிகரித்து சுற்றுச் சூழலுக்கு ஆபத்தை விளைவித்ததால் பெரும் எண்ணிக்கையிலான கங்காருகளை அந்த அரசாங்கம் சுட்டுக் கொன்றது.

எனவே உங்களுக்கு பசு மாடானது தெய்வம் என்றால் உங்கள் அளவில் அதனை புனிதப்படுத்திக் கொள்ளுங்கள். கோசோலைகளை அமைத்து கிழட்டுப் பசுக்களை பராமரியுங்கள். அதை விடுத்து பசு மாமிசம் சாப்பிடுபவர்களை வன்முறையைக் கொண்டு தடுக்க நினைப்பது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்.