Followers

Showing posts with label மாட்டுக்கறி. Show all posts
Showing posts with label மாட்டுக்கறி. Show all posts

Tuesday, October 06, 2015

சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளிக்கிறார் நயன்தாரா சேகல்



பிரபல எழுத்தாளரும், ஜவஹர்லால் நேருவின் உறவினருமான நயன்தாரா சேகல் 1986-ம் ஆண்டு தனக்கு அளிக்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதை திருப்பிக் கொடுக்க முடிவெடுத்துள்ளார்.

“இந்தியப் பண்பாட்டு பன்முகத் தன்மையை அரசு பாதுகாக்கவில்லை” என்று எதிர்ப்பு தெரிவித்து, சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளிக்கப்போவதாக தெரிவித்தார்.

இது குறித்து இந்தியன் கல்ச்சரல் ஃபோரம் என்ற இணையதளத்தில் வெளியான அவரது அறிக்கையின் முழு விவரம்:

இந்திய துணைக் குடியரசுத் தலைவர் ஹமித் அன்சாரி தன்னுடைய சமீபத்திய சொற்பொழிவில் அனைத்து குடிமகன்களுக்கும் பேச்சு, சிந்தனை, கருத்துரிமைகள், நம்பிக்கை, வழிபாடு குறித்த உரிமைகள் இருப்பதை வலியுறுத்தினார்.

பணிய மறுப்பது அல்லது எதிர்ப்பு தெரிவிப்பது, முரண்படுவதற்கான உரிமை என்பது நமது அரசியல் சாசன உத்தரவாதத்தின் உள்ளார்ந்த, தவிர்க்க முடியாத அம்சமாகும். அவர் ஏன் இதனை வலியுறுத்தினார் என்றால், இந்தியாவின் பண்பாட்டு பன்முகத் தன்மை பல்வேறு தரப்புகளிலிருந்து சமீப காலங்களில் தாக்குதலுக்கு உட்பட்டு வருகிறது.

மூட நம்பிக்கையைக் கேள்விக்குட்படுத்தும் பகுத்தறிவுவாதிகள், இந்து மதத்தின் அசிங்கமான மற்றும் அபாயகரமான திரிபுகளாக அறியப்படும் இந்துத்துவாவை அறிவார்த்த புலத்திலும் கலை / இலக்கிய புலத்திலும் கேள்விக்குட்படுத்துபவர்கள், உணவுப்பழக்க வழக்க முறைகள் மற்றும் வாழ்க்கை முறை என்று எதிலும் கேள்வி கேட்பவர்கள் மற்றும் மாற்று பண்பாடுகள் கொண்டிருப்பவர்கள் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுகின்றனர், அச்சு்றுத்தப்படுகின்றனர், கொல்லப்படுகின்றனர்.

சாகித்ய அகாடமி விருது வென்ற கன்னட எழுத்தாளர் கல்புர்கி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த நரேந்திர தாபோல்கர், கோவிந்த் பன்சாரே, ஆகிய மூடநம்பிக்கை எதிர்ப்பு பகுத்தறிவுவாதிகள் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும், சில எதிர்ப்பாளர்களுக்கு அடுத்து இவர்கள்தான் என்ற ரீதியில் கொலை மிரட்டல் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. சமீபத்தில் பிசாரா கிராமத்தில் மாட்டிறைச்சி சமைத்ததான சந்தேகத்தின் பேரில் மொகமது இக்லாக் வீட்டிலிருந்து வெளியே இழுத்துவரப்பட்டு மிகக் கொடூரமாக கல்லால் அடித்தே கொல்லப்பட்டுள்ளார்.

இந்த அனைத்து சம்பவங்களிலும் நீதி வழங்கப்படவில்லை. இந்த பயங்கரத்தின் ஆட்சி பற்றி பிரதமர் மோடி மவுனம் சாதித்து வருகிறார். அதாவது, அவரது கருத்தியலை ஆதரிக்கும் தீமை செய்வோரை அவர் அன்னியப்படுத்த விரும்பவில்லை என்று நாம் அனுமானிக்கவே அவரது மவுனம் வழிவகுக்கிறது.

சாகித்ய அகாடமியும் மவுனம் காக்கிறது என்பதும் வருத்தமளிக்கிறது. அகாடமிகள் எதற்காக இருக்கின்றன? படைப்புபூர்வமான கற்பனை வளத்தையும், கலை, இலக்கியம், இசை, நாடகம் ஆகியவற்றின் நுட்பமான விஷயங்களை ஊக்குவிப்பதில் பாதுகாவலர்களாக செயல்படுவதுதான் அகாடமிகளின் பணி.

கல்புர்கி கொலையை எதிர்த்து இந்தி எழுத்தாளர் உதய் பிரகாஷ் தனது சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளித்து விட்டார். அதே போல் கன்னடா சாகித்ய பரிஷத் விருதுகளை 6 எழுத்தாளர்கள் திரும்ப கொடுத்து விட்டனர்.

எனவே கொலை செய்யப்பட்ட அனைத்து இந்தியர்கள் நினைவாகவும், எதிர்ப்பதற்கான உரிமைகளை உயர்த்திப் பிடிக்கும் ஆதரவாளர்களுக்காகவும், அச்சத்துடனும், நிச்சயமின்மையுடனும் வாழும் அனைத்து எதிர்ப்பாளர்களுக்காகவும் நான் எனது சாகித்ய அகாடமி விருதை திருப்பிக் கொடுக்கிறேன்.

இவ்வாறு நயன்தாரா சேகல் கூறியுள்ளார்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
06-10-2015

Monday, October 05, 2015

கேரள மாணவ மாணவிகளின் மாட்டுக் கறி போராட்டம்!



மாட்டுக் கறி சாப்பிடுவதில் இந்தியாவிலேயே அதிக நபர்களை கொண்ட மாநிலமாக கேரளா இருக்கும் என்றே நம்புகிறேன். நான் சவுதியில் நெருங்கிப் பழகிய மலையாள நண்பர்களை கூர்ந்து நோக்கிய விதத்தில் மாட்டுக் கறிக்கு அடிமையானவர்கள் என்றே சொல்லலாம். வாரத்தில் இரண்டு முறை மாட்டுக்கறி சாப்பிடும் சாப்பிடுவோர் பெரும்பாலோர். இந்து முஸ்லிம் கிறித்தவர் என்ற பாகுபாடு இதிலும் இவர்களிடத்தில் இல்லை. கேரளா ஹோட்டல்களில் பீஃப் ஃப்ரை என்பது முக்கியமான ஐட்டம்.

சகோதரர் இஹ்லாக் மாட்டுக் கறி சேமித்து வைத்தார் என்று புரளியை கிளப்பி அவரை கொன்று போட்ட இந்துத்வா மிருகங்களுக்கு பதிலடி கொடுக்க கேரளாவில் பிஜேபி அலுவலகத்துக்கு முன்பு ஏசியன் கல்லூரி மாணவ மாணவிகள் மாட்டுக் கறியை ருசித்து சாப்பிடுகின்றனர். வயதான அந்த அப்பாவியை கொன்ற மிருகங்கள் இந்த மாணவர்களின் மேல் கை வைக்கட்டுமே பார்போம். தடுக்க வரும் இந்துத்வாவாதிகளின் தோலையே உரித்து எடுத்து விடுவார்கள் மலையாளிகள்!

Sunday, October 04, 2015

பன்றிக் கறிக்கு அனுமதி அளித்த வளைகுடா நாடு!



குர்ஆனில் பன்றிக்கறியை சாப்பிட முஸ்லிம்களுக்கு இறைவன் தடை விதித்துள்ளான். ஒரு படி மேலே போய் ஒரு சில இஸ்லாமியர் பேணுதலுக்காக பன்றி என்ற பெயரையே சொல்வதில்லை. ஆனாலும் மாற்று மதத்தவர்கள் அதிகம் வளைகுடாக்களில் வேலை செய்வதால் அவர்களின் உணவுப் பழக்கத்துக்கு மதிப்பளித்து 'முஸ்லிம் அல்லாதவர்களுக்கு' என்ற அறிவிப்போடு பன்றிக் கறியை விற்பனை செய்கின்றனர்.

பசு தெய்வம் என்ற நம்பிக்கையை வைத்து இந்துத்வ கூட்டம் மனிதனை அடித்து நர மாமிசம் சாப்பிட்டது. ஆனால் மற்றவரின் உணவுப் பழக்கத்துக்காக பன்றிக் கறிக்கு அனுமதியளித்துள்ளது இஸ்லாமிய அரசாங்கம்.

மனிதனைக் கொன்ற அந்த இந்துத்வாவாதிகள் மாட்டு மூத்திரத்தை குடிப்பதை தவிர்த்து பன்றிக் கறிக்கு அனுமதி அளித்த அந்த அரபு காரனின் மூத்திரத்தை வாங்கிக் குடிக்கலாம். அப்போதாவது புத்தி வருகிறதா என்று பார்போம்.

'மாட்டுக்கறி சாப்பிடாதேடா அபிஷ்டு!'





'மாட்டுக்கறி சாப்பிடாதேடா அபிஷ்டு!'

என்று சொன்ன அவாள் வாயாலேயே....

மாட்டு மூத்திரத்தை 'கோமியம்... புனிதம்'

என்று சொல்ல வைத்து குடம் குடமாக

அவாள் குடும்பம் சகிதமாக ருசித்து

குடிக்க வைத்து அதனை அவர்களுக்கே

புனிதமாக்கிய இறைவனுக்கே புகழ் அனைத்தும்......

Wednesday, September 30, 2015

மாட்டுக் கறி சாப்பிட்ட முஹம்மது அக்லாக் கொல்லப்பட்டார்!





உத்தர பிரதேசத்தில் உள்ளது தாத்ரி நகர். இங்குள்ள பிஷாரா கிராமத்தில் வசித்து வருகிறார் முஹம்மது அஹ்லாக். இவர் தனது வீட்டில் மாட்டுக் கறியை சேமித்து வைத்து சாப்பிட்டார் என்று ஊர் முழுக்க வதந்தியை பரப்பிய இந்துத்வா கும்பல் 50 வயது மதிக்கத்தக்க முஹம்மது அஹ்லாக்கை அடித்தே கொன்றுள்ளது. ஹஜ்ஜூப் பெருநாளன்று கிடைக்கும் கறியை சேமித்து வைத்து ஒரு வாரம் வரை கூட சாப்பிடுவது சர்வ சாதாரணமான ஒரு நிகழ்வு. இதனை ஒரு பிரச்னையாக்கி இன்று அதனை கொலை வரை கொண்டு சென்றுள்ளது இந்துத்வா. 22 வயதான அவருடைய மகனையும் தாக்கியுள்ளனர் காட்டு மிராண்டிகள். மிக அபாயகரமான சூழலை நோக்கி நமது இந்தியா சென்று கொண்டுள்ளது என்பதனையே இந்த நிகழ்வு உணர்த்துகிறது.

தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
30-09-2015

Sunday, May 03, 2015

பாகிஸ்தான் மாட்டுக் கறியை மட்டும் உதவியாக தந்ததா?





பாகிஸ்தான் அரசு நேபாளத்தக்கு அனுப்பப்பட்ட உதவிப் பொருட்களில் மாட்டுக் கறியும் கலந்து இருந்ததாக இந்திய பத்திரிக்கைகள் குற்றம் சாட்டியிருந்தன. இதனை மறுத்து கருத்து வெளியிட்ட பாகிஸ்தானின் உயர் அதிகாரி தஸ்னிம் ஆலம் தனது மறுப்புரையில் 'இந்திய ஊடகங்கள் தேவையற்ற சர்ச்சையை உதவி வழங்குதலிலும் ஏற்படுத்தியுள்ளன. பலதரப்பட்ட உணவுகள் வழங்கப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் 'பீஃப் மசாலா'. அந்த பாக்கெட்டின் மேல் தெளிவாக 'பீஃப் மசாலா' என்றும் குறிப்பிட்டிருந்தோம். நாங்கள் அனுப்பிய உணவுப் பொருட்கள் மிகவும் ருசியாக இருந்ததாகவும் மேற் கொண்டு உதவியும் தேவைப்படுவதாகவும் நேபாள அதிகாரிகள் தெரிவித்து இருக்க தேவையற்ற சர்ச்சையை இந்திய ஊடகங்கள் ஏற்படுத்துகின்றன' என்று வருத்தப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் சார்பில் அனுப்பட்ட ஒவ்வொரு உணவுப் பட்டியலில், 22 வகையான சாப்பிடத்தயாரான உணவு வகைகள் இருந்தன. அதில் அரிசி, உணவு, கோதுமை, ரொட்டி, பிரட், ஜாம், பால், தயிர், பருப்பு, கேசரி, உள்ளிட்ட பலவகையான சிறிய பாக்கெட்கள் இருந்தன, அதில் ஒன்று தான் 'பீஃப்' மசாலா. மேற்படி உணவுப் பட்டியலில், தேவையானதை சாப்பிடவும் பிடிக்காததை தவிர்ந்துக் கொள்ளும் வகையில், ஒவ்வொரு பாக்கெட்டின் மீதும் ஆங்கிலம் மற்றும் உருது மொழியில் இது இன்ன பொருள் எனத் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தியாவிலுள்ள இந்துக்களில் 90 சதவீத மக்கள் எப்படி மாட்டிறைச்சியை சாப்பிடுவார்களோ அதேப்போன்று நேபாளிலுள்ள 95 சதவீத இந்துக்கள் மாட்டிறைச்சியை விரும்பி உண்பவர்கள். அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு ஆண்டும் 5 ஆயிரம் மாடுகளை வெட்டி திருவிழா நடத்துவார்கள்.

உணவுக் கிடைக்காமல் உயிர் வாழவே சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு இக்கட்டான நேரத்திலும் மதத்தை நுழைத்து அதில் பாதிக்கப்பட்ட நேபாள மக்களை சிரமத்துக்குள்ளாக்கும் இந்துத்வாதிகளின் மனோ நிலையை என்னவென்பது?

Tuesday, March 10, 2015

மாட்டிறைச்சிக்குத் தடை: கோவையில் ஆர்ப்பாட்டம்



மாட்டிறைச்சிக்குத் தடை: மகாராஷ்டிர அரசைக் கண்டித்து கோவையில் நூதன ஆர்ப்பாட்டம்

மகாராஷ்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையைக் கண்டித்து கோவையில் ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தினர் திங்கள்கிழமை நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை செஞ்சிலுவை சங்க கட்டிடம் முன்பு ஆதித் தமிழர் விடுதலை இயக்கம் இளைஞர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் விடுதலை மணி தலைமை வகித்தார்.

மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், மகாராஷ்டிர மாநில அரசைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், மாட்டிறைச்சி பிரியாணி சாப்பிட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏழைகள் அதிகம் பயன்படுத்தும் இந்த இறைச்சி பயன்பாட்டுக்கு 5 ஆண்டு சிறை மற்றும் அபராதம் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. இதனால் தலித், சிறுபான்மை மக்கள் பாதிப்படுவார்கள். இந்த தடையை நீக்கும் வரை போராட்டம் தொடரும் என்று விடுதலை மணி தெரிவித்தார்.

நன்றி:
தமிழ் இந்து நாளிதழ்
10-03-2015


Wednesday, March 04, 2015

பலரையும் சிந்திக்க வைத்த விவேகானந்தர்!



பலரையும் சிந்திக்க வைத்த விவேகானந்தர்!

ஒருமுறை விவேகானந்தரிடம் பசுக்களைப் பரிபாலிக்கும் சங்கத்தைச் சேர்ந்த ஒரு பிரச்சாரகர் வந்து பசுக்கள் பாதுகாப்புப் பணிக்கு நன்கொடை கொடுக்குமாறு கேட்டார்.

அப்பொழுது அந்தப் பிரச்சாரகரைப் பார்த்து “உங்கள் சங்கத்தின் நோக்கம் என்ன?” என்று கேட்டார் விவேகானந்தர்.

“நமது நாட்டில் உள்ள பசுத் தாய்களைக் கசாப்புக் காரர்களிடமிருந்து நாங்கள் பாதுகாக்கிறோம். நோயுற்ற பசுக்கள், வலிவிழந்தனவும், கசாப்புக்காரர்களிடமிருந்து வாங்கப்பட்டனவும் பரிபாலிக்கப்படுவதற்காகப் பசு வைத்தியசாலைகளை ஏற்படுத்தியிருக்கிறோம்” என்று பதில் சொன்னார்.

“மத்திய இந்தியாவிலே ஒரு கொடிய பஞ்சம் எழுந்து விட்டது. ஒன்பது லட்சம் மக்கள் பட்டினியால் இறந்தார்கள் - இவர்களுக்காக உங்கள் சங்கம் என்ன செய்தது?” என்ற கேள்வியை எழுப்பினார் விவேகானந்தர்.

“பஞ்சம் முதலிய துன்பம் வரும்போது நாங்கள் உதவி புரிவதில்லை. எங்கள் சபை பசுத் தாய்களைப் பரிபாலிக்கும் பொருட்டே ஏற்படுத்தப்பட்டது. பஞ்சங்கள் என்பவை மக்களுடைய பாவ கருமத்தினாலே ஏற்பட்டது. கருமம் எப்படியோ, பயனும் அப்படியே!”

“பசுத் தாய்களும் தம்முடைய கருமத்தினால் கசாப்புக்கடைக்காரர்களின் கையில் அகப்பட்டு இறக்கின்றன என்று சொல்லி விட்டுப் போக வேண்டியதுதானே” என்று மடக்கினார் விவேகானந்தர்.

“ஆம், நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் பசு நம் அன்னை என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றனவே” என்றார் பிரச்சாரகர்.

அப்பொழுது நறுக்கென்று ஒன்று சொன்னார் விவேகானந்தர் “ஆம். பசு நம் அன்னை என்பதை அறிந்து கொண்டேன். இத்தகைய புத்திசாலிகளான பிள்ளைகளை வேறு யார்தான் பெறுதல் கூடும்?” என்று கேலியாகச் சொன்னார்.

"விடுதலை” தலையங்கம் 21-1-2012



மாட்டுக் கறி விற்பனையால் பலனடைபவர்கள் யார்?

மாட்டுக் கறி விற்பனையால் பலனடைபவர்கள் யார்?



இந்தியாவில் மாட்டுக் கறி ஏற்றுமதி செய்து வரும் பிரபலமான 6 கம்பெனிகளில் 4 ன் உரிமையாளர்கள் இந்துக்கள். மாட்டுக் கறி ஏற்றுமதியில் உலகிலேயே முதலிடத்தை பெறுவது பிரேசில். அடுத்த இடத்துக்கு வருகிறது இந்தியா. ஆஸ்திரேலியா, அமெரிக்க, இங்கிலாந்து என்று அடுத்தடுத்து வருகின்றன. மேலும் மாட்டுக் கறியை விரும்பி சாப்பிடுபவர்கள் பெரும் பாலும் உழைக்கும் வர்க்கமான தாழ்த்தப்பட்ட மக்களே! முஸ்லிம்கள் பெரும்பாலும் ஆட்டுக் கறியையே விரும்பி சாப்பிடுவார்கள். எங்கள் கிராமங்களில் மாட்டுக் கறியை 'பெரிய ஆட்டுக் கறி' என்று மறைமுகமாக குறிப்பிடுவர். இந்துக்கள் மனம் புண் படக் கூடாது என்பதற்காகக் கூட இருக்கலாம். உப்புக்கண்டம் என்ற ஒரு பொருளை செய்வதற்கு மாத்திரமே எங்கள் வீடுகளில் மாட்டுக் கறியை உபயோகப்படுத்துவர். எனவே மாடு வெட்டுதலை தடை செய்வதால் இஸ்லாமியருக்கு எந்த நட்டமும் இல்லை. உண்மையில் நட்டப்படுபவர்கள் யார்?

இனி இந்தியாவிலிருந்து மாட்டுக் கறி ஏற்றுமதி பண்ணும் முன்னணி நிறுவனங்களின் பெயர் பட்டியலைப் பார்ப்போம்.

1) Al-Kabeer Exports Pvt. Ltd.
Its owner name: Mr. Shatish &Mr. Atul Sabharwal
Add: 92, Jolly makers, Chembur Mumbai 400021

2) Arabian Exports Pvt.Ltd.
Owner's name: Mr.Sunil Kapoor
Add: Russian Mansions, Overseas, Mumbai 400001

3) M.K.R Frozen Food Exports Pvt. Ltd.
Owner's name Mr. Madan Abott.
Add : MG road, Janpath, New Delhi 110001

4) P.M.L Industries Pvt. Ltd.
Owner's name: Mr. A.S Bindra
Add : S.C.O 62-63 Sector -34-A, Chandigarh 160022

வளைகுடா வியாபாரத்தை கணக்கில் கொண்டு அராபிய பெயர்களை நரித்தனமாக இந்த மேல் சாதியினர் தங்கள் கம்பெனிகளுக்கு வைத்து காசுபார்க்கிறார்களே. கோமாதாவை வெட்டலாமா என்று இந்த பனியா மற்றும் மார்வாடி கும்பலுக்கல்லவா ஆலோசனை வழங்க வேண்டும்? செய்தார்களா? இந்த இடத்தில் இவர்களுக்கு கோமாதாவை விட காசுதான் முக்கியம்.

ஏற்கெனவே இந்திய பொருளாதாரம் நொடித்துப் போயுள்ளது. பால் தராத கிழட்டு மாட்டுக்களை அறுத்து பதப்படுத்தி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதில் இந்துத்வாவினருக்கு என்ன பிரச்னையோ தெரியவில்லை. இந்துத்வாவினருக்கு மாதா மாதம் அமெரிக்க ஐரோப்பிய வளைகுடா நாடுகளிலிருந்து பார்பன அம்பிகள் பணம் அனுப்புவதால் செழிப்பாக இருக்கின்றனர்.

ஆனால் வானமும் பொய்த்து பலன் தந்த பசுவும் பால் தருவதை நிறுத்தி விட்டால் அந்த ஏழை விவசாயி அடிமாடாக பசுக்களை விற்காமல் என்ன செய்வான்? இஸ்லாமிய பெயர்களில் ஒளிந்து கொண்டு கோடிகளில் புரளும் இந்து முதலாளிகளை அல்லவா முதலில் இந்த இந்துத்வாவினர் கண்டிக்க வேண்டும்? ஆனால் செய்ய மாட்டார்கள். எங்காவது ஒரு தலித் வயிற்றுப் பசிக்காகவும் உழைத்து வாழும் அவனுக்கு தேவையான புரதத்தைப் பெறவும் மாட்டை அறுத்தால் சங் பரிவார கும்பல் ஓடி சென்று அடித்து அவனை கொன்றும் விடும். முன்பு வட நாட்டில் நான்கு தலித்களை இந்த இந்துத்வாதியினர் மாட்டை அறுத்ததற்காக கொன்றதை நாம் மறந்து விட முடியாது.

நடத்துங்கள்..... உங்கள் அராஜகங்கள் இன்னும் எத்தனை காலத்துக்கென்று பார்போம்.

Posted by சுவனப் பிரியன் at 1:54 PM
Labels: அரசியல், இந்தியா, இந்துத்வா, தலித், பசு