'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Showing posts with label கம்யூனிஸம். Show all posts
Showing posts with label கம்யூனிஸம். Show all posts
Tuesday, April 14, 2015
நக்ஸல்பாரி தலைவர் டி என் ஜோய் இஸ்லாத்தை தழுவினார்!
நக்ஸல் இயக்கத்தின் தலைவரும் சமூக ஆர்வலருமான டி என் ஜோய் தூய இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக் கொண்டுள்ளார். சென்ற திங்கட்கிழமை முக நூல் மூலமாக தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை பகிரங்கப்படுத்தியுள்ளார்.
'எனது தந்தையார் எனக்கிட்ட பெயர் ஜோய். இன்று இஸ்லாத்தை ஏற்றவுடன் நான் வைத்துக் கொண்ட பெயர் நஜ்மல் பாபு. பாபரி மசூதி இடிப்புக்குப் பின் இந்து மதத்தில் இந்துத்வாவின் கை ஓங்கி வருகிறது. இந்தியாவில் முஸ்லிம்கள் ஒரு வித அச்சத்துடன் வாழ்கின்றனர். நான் எந்த இஸ்லாமிய இயக்கத்திலும் சேரப் போவதில்லை. தனித்தே இயங்குவேன்' என்று கூறுகிறார்
1970 லிருந்து நக்ஸல் இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றி வரும் ஜோய் எமர்ஜென்ஸி நேரத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். தீவிரவாத பாதையிலிருந்து விலகி அன்பையும் பண்பையும் போதிக்கும் தூய இஸ்லாத்தை வாழ்வியலாக ஏற்றுக் கொண்ட ஜோய் என்ற அஜ்மலை இரு கரம் நீட்டி அரவணைப்போம்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா
14-04-2015
Saturday, February 28, 2015
கம்யூனிஸ்டான கொடிக்கால் செல்லப்பாவின் அனுபவங்கள்! - 6
கம்யூனிஸ்டான கொடிக்கால் செல்லப்பாவின் அனுபவங்கள்!

கொடிக்கால் செல்லப்பாவாக இந்து மதத்தில் இருந்த போது.....

கொடிக்கால் அப்துல்லாவாக இஸ்லாமிய மார்க்கத்தில் இணைந்த போது....
'சமூகத்தில் சாமான்ய மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது இஸ்லாமா? கம்யூனிஸமா?' என்ற தலைப்பின் கீழ் வரிசையாக பார்த்து வருகிறோம். இந்த பதிவில் மற்றொரு தீவிர கம்யூனிஸ்டின் அனுபவங்களைப் பார்போம்.
கம்யூனிஷம் ஒன்றுதான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சரியான தீர்வை தரும் என்று தனது வாழ்நாளின் பெரும் பகுதியை கம்யூனிஷ பிரசாரத்திலேயே கழித்த கொடிக்கால் செல்லப்பாவை அறியாதவர்கள் தமிழகத்தில் யாரும் இருக்க முடியாது. பல ஆய்வுகள் செய்து கம்யூனிஷத்தை கரைத்து குடித்தவர். அவரும் பல ஆண்டு காலம் செத்துப் போன கம்யூனிஷத்தை தூக்கிக் கெண்டு அலைந்து திரிந்து துவண்டு போய் முடிவில் அந்த கொள்கைக்கே மூடு விழா நடத்தியவர். இனி அவர் பேசுகிறார் நாம் கேட்போம்......
எனக்கு கிடைத்த அனுபவங்கள்
நான் ஒரு இந்துவாக இருந்து கொண்டே முஸ்லிம் மக்களின் வாழ்க்கை முறைகளையும், மார்க்க அனுஷ்டானங்களையும் கூர்ந்து கவனித்து வருகிறேன். நான் சமீபத்தில் அப்துல்லாஹ் அடியார் அவர்களுடன் வேலூருக்கு சென்றிருந்தேன்.
நாங்கள் பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும் போது அவர்களிடமிருந்து தொப்பி ஒன்றை வாங்கி தலையில் அணிந்து கொண்டேன். தொப்பியை அணிந்ததும் என் சிந்தனைகள் பலவாறு எழுந்தன. எனது நிலை திடீரென்று உயாந்தது மாதிரி எனக்குள்ளே மகிழ்ச்சியும் பூரிப்பும் ஏற்பட்டிருப்பதை உணர்ந்தேன். பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும் போதே இஸ்லாமிய மார்க்க சம்பந்தமான விபரங்களை அடியார் அவர்கள் எனக்கு விளக்கிக் கொண்டே வந்தார்கள். நான் எழுப்பிய பல சந்தேக வினாக்களுக்கு, தெளிவான விடை கொடுத்துக் கொண்டிருந்தார். நாங்கள் மாலை சுமார் 6:30 மணியளவில் வேலூரை அடைந்தோம். பஸ்ஸிலிருந்து இறங்கிய எங்கள் தோற்றத்தை கண்டு, பாய் உங்களுக்கு எங்கே போகவேண்டும் என்று ரிக்ஷாக்கரரர் கேட்டார். தொப்பி அணிந்திருந்த என்னை பாய் என்று அவர் அழைத்ததும் எனக்கு மேலும் ஒரு புத்துணர்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஊட்டியது.
நாங்கள் இஸ்லாமிய மதரஸா ஒன்றின் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லி ரிக்ஷாவில் அங்கு சென்றோம். மதரஸாவை அடைந்த எங்களை இஸ்லாமிய மார்க்க முறைப்படி ஒரு பெரியவர் வரவேற்றார். சிறிது நேரத்தில் மதரஸாவின் முதல்வர் வந்தார். அவருக்கு என்னை அப்துல்லாஹ் அடியார் அறிமுகப்படுத்தினார். உடனே முதல்வர் என்னை கட்டித்தழுவி நலம் விசாரித்தார்.
இரவு தொழுகைக்கான நேரம் வந்ததும், அந்த மதரஸாவில் மார்க்க கல்வி கற்க வந்திருந்த மாணவர்களைப் பார்த்தேன். அவர்கள் தொழுகைக்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்ததையும் பார்த்தேன். பின்பு அவர்கள் அனைவரும் வரிசை வரிசையாகவும் ஒருவரை ஒருவர் நெருங்கி இணைத்துக்கொள்ளும் வகையில் நின்று தொழுதுக்கொண்டிருந்ததை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். தொழுகை முடிந்ததும், அந்த இஸ்லாமிய நண்பர்களோடு கலந்துரையாட விரும்பி அணுகினேன். என்னுடைய தோற்றத்தை கண்ட அவர்கள் இஸ்லாமிய முறைப்படி 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்று சொன்னார்கள். எனக்கு அந்த சலாமிற்கு பதில் சொல்ல வேண்டிய முறை தெரிந்திருந்ததால் 'அலைக்கும் சலாம்' என்று சொன்னேன்.
அங்கே 8 வயது முதல் 80 வயது வரையுள்ள முஸ்லிம்கள் இருந்தனர். அவர்களிடம் உரையாடிக்கொண்டிருந்தபோது அவர்களைப் பற்றி நான் சற்றும் எதிர்பாராத சில தகவல்களை சொன்னார்கள்.
அவர்களில் பெரும்பாலான பெரியவர்களும், சிறியவர்களும் சமீபத்தில் இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்தை தழுவியவர்கள் என்பதை அறிந்ததும், வியப்பும் ஆச்சரியமும் அடைந்தேன். அவர்களுடைய பேச்சு, நடவடிக்கை, அனுஷ்டானங்கள் எல்லாம் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவரும் முஸ்லிம்களை ஒத்து இருந்தன. அவ்வளவு தூரம் புதிய மார்க்கத்தில் தங்களை இணைத்து ஒன்றி போயிருந்தனர். அவர்களுடைய கண்ணியமான பேச்சும் கனிவான நடவடிக்கையும் அவர்கள் மீது எனக்குள்ள பிடிப்பையும், பாசத்தையும் அதிகப்படுத்தியது.
இரவு மணி 9 ஆகிவிட்டதால் நான் அவர்களிடமிருந்து விடைபெற்று, மீண்டும் நாளை சந்திப்பதாக சொன்னதும் இன்ஷாஅல்லாஹ் (இறைவன் நாடினால்) என்று கூறி அவர்கள் எனக்கு விடை தந்தார்கள். நானும் மீண்டும் அப்துல்லாஹ் அடியார் இருந்த இடத்திற்கு வந்து, நடந்த விபரங்களை விரிவாகச் சொன்னேன். எனது மகிழ்ச்சியில் அவரும் மற்றவர்களும் சேர்ந்துக் கொண்டனர். மறுநாள் அதிகாலை 5 மணிக்கு எழுந்ததும் காலைக் கடன்களை முடித்துவிட்டு சற்று தொலைவில் இருந்த தேநீர் கடைக்கு நான் சென்றேன். அது ஒரு ஜாதி இந்துவின் கடையாக இருந்தது. நான் கல்லாவில் இருந்த உரிமையாளரைப் பார்த்து டீ கேட்டேன். அவர் தொப்பி அணிந்திருந்த என்னைப் பார்த்ததும், பாய்க்கு ஒரு டீ கொடு என்று சொன்னார். அவர் எனது தோற்றத்தை கண்ட மாத்திரத்திலே உரிய மரியாதையை கொடுத்ததை கண்டு ஒரு புத்துணர்ச்சி ஒரு உயர்வைப் பெற்று விட்டது போல் நான் உள்ளுர உணர்ந்து கொண்டிருந்தேன்.
நான் டீயைக் குடித்துவிட்டு தங்கியிருந்த மதரஸாவிற்குச் சென்றேன். அவர்கள் என்னை எதிர்பார்த்துக் கொண்டே இருந்தார்கள். நான் இப்போது தேநீர் கடையில் நடந்த நிகழ்ச்சியை அவர்களிடம் ஆனந்தத்தோடு எடுத்துச் சொன்னேன். எனக்கு ஏற்பட்ட பூரிப்பில் அவர்களும் பங்கு கொண்டனர்.
இன்னொரு சம்பவத்தைக் கூற விரும்புகிறேன்:-
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய் பட்டிணத்தில் நடைபெற்ற ஒரு மீலாது விழா நிகழ்ச்சியைப் பார்க்க சென்றிருந்த நான் இஸ்லாமிய நண்பர்கள் என் மீது கொண்டிருந்த அன்பின் காரணமாக என்னை கண்ணியப்படுத்தி மேடையில் அமர வைத்தனர்.
சிறந்த சிந்தனையாளரும், பேச்சாளருமாகிய அப்துல்லாஹ் அடியார் அவர்களுடைய பேச்சைக் கேட்க பெரும் கூட்டம் திரண்டிருந்தது. நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே பன்னிரண்டு வயதுள்ள ஒரு சிறுவன் 'கிராத்' ஒதினான். அவன் லுங்கியும் தொப்பியும் அணிந்திருந்தான். சிறுவனேயானாலும், அரபு மொழியில் அழுத்தமும் திருத்தமுமாக அவன் உணர்ச்சியோடு ஒதியதை செவிமடுத்த மார்க்க அறிஞர்கள், அச்சிறுவனை உற்று நோக்கினார்கள். அவன் ஓதும் முறை எல்லோரையும் கவர்ந்திழுக்கக் கூடியதாக இருந்தது.
இப்ராஹீம் என்ற அந்த சிறுவன் நெல்லை மாவட்டம், மீனாட்சிபுரத்தில் இந்துவாக இருந்து மதம் மாறி இஸ்லாமிய மார்க்கத்தில் இணைந்தவன் என்ற செய்தியை தலைவர்; அவர்கள் தந்து, அறிமுகப்படுத்தியது மேலும் வியப்பை தந்தது. புதிய மார்க்கத்தை, வழியை அவன் தேடிக்கொண்டது சாதராணமாக எனக்கு படவில்லை. அவன் புதிய வழியை நன்கு அறிந்து அதைத் தழுவியுள்ளான் என்பதை அறிந்துக் கொண்டேன்.
அடுத்து எதிர்பாராத விதமாக என்னை பேசும்படி விழாத்தலைவர் அறிவித்தபோது சற்று திகைத்தேன். காரணம், அது ஒரு மார்க்க மேடை, அறிஞர்களும் உலமா பெருமக்களும் ஒருங்கே கூடியிருந்த ஒரு விழா அது. அவர்கள் முன்னிலையில் பேசுவது என்பது எனக்குத் தயக்கமாக இருந்தது. ஆனாலும் இறைவனை மனதில் நினைத்துக் கொண்டதும், தைரியமும் உற்சாகமும் தானாக ஏற்பட்டது. பேசத் துவங்கினேன்.
அங்கே கிராத் ஓதிய அந்த இப்ராஹீம் என்னும் சிறுவனுக்கு அவனை பொறுத்தமட்டில் சமூக விடுதலை கிடைத்துவிட்டது என்பதை அந்த இடத்திலேயே உணர்ந்தேன். அந்த மாபெரும் சபை அந்த சிறுவனை கண்ணியப்படுத்திக் கொண்டிருந்தது. அங்கே என்னுடைய நிலையை உணர்ந்தேன்.
இறைவா இந்த சிறுவனுக்கு கிடைத்த விடுதலையும் உயர்வும் எனக்கு எப்போது கிடைக்கும் என்ற ஏக்கத்தை நான் அங்கே வெளிப்படுத்தினேன். அச்சிறுவனை பொறுத்தமட்டில் அவனுக்கு சமூக விடுதலை மட்டுமல்ல. ஒரு புதிய அந்தஸ்தும் கிடைத்திருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன். அச்சிறுவனுக்கு தொழுகையை இமாமாக முன்னின்று நடத்தும் அருமையான கௌரவமும் கிடைத்திருக்கிறது என்பதை அறிந்து நான் ஆச்சரியப்பட்டேன். எவ்வளவு கண்ணியமான மார்க்கம் இஸ்லாம் என்பதை அன்றைய நிகழ்ச்சியில் அனுபவபூர்வமாக உணர்ந்து கொண்டேன்.
-இந்த கட்டுரை திரு. கொடிக்கால் செல்லப்பா (இன்று கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ்) என்ற மூதறிஞர் தனது சொந்த வாழ்க்கைச் சுவடுகளின் அடிப்படையில் கன்னியாகுமரி - விவேகானந்தா கேந்திரத்தில் 1986 அக்டோபர் 2ல் நடைபெற்ற 'தீண்டாமை ஒழிப்பில் காந்திஜீயின் பங்கு' என்ற கருத்தரங்கில் ஆற்றிய உரையின் ஒரு பகுதியாகும்.

Friday, February 27, 2015
ஆண், பெண் பற்றி கம்யூனிஷம் கூறிய கருத்துகளுக்கு மறுப்பு - 5

//பதிவர் சுவனப்பிரியன் பதிவிட்டிருக்கும் இரண்டாவது மூன்றாவது பதிவுகளை நான் அலட்சியம் செய்கிறேன். காரணம், விதி எண் ஆறில் குறிப்பிட்டபடி கம்யூனிசத்துக்கும் அந்தப் பதிவுகளுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. அப்படி ஏதேனும் இருப்பதாக பதிவர் சுவனப்பிரியன் கருதி, அதை விளக்கிக் கூறினால் தொடரும் பதிவுகளில் அதைப் பார்க்கலாம்.//
அதாவது கம்யூனிஷத்தின் அடிப்படைகளையே ஆட்டம் காணச் செய்யும் செயல்களை இவர் ஒதுக்கி விடுவாராம். கம்யூனிஷம் பெண்களை உடல் உழைப்பு சார்ந்த வேலைகளுக்கு வலுக்கட்டாயமாக இழுத்து வந்தது. அதனை பார்த்து நமது மக்களும் பெண் விடுதலை என்று ஆண்கள் பார்க்கும் வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தனர். அதன் முடிவு என்னவாக இருந்தது? தினத் தந்தியின் வேலைக்குச் சென்ற பெண்களின் உள்ளக் குமுறலை பதிவாகக் கொடுத்திருந்தேன். இதற்கு பதில் சொல்லாமல் ஓடி ஒளிகிறார்.
கார்ல் மாக்ஸூம், லெனினும், ஸ்டாலினும் பெண்கள் சார்பாக கொண்ட கருத்து நடைமுறை சாத்தியமில்லாதது என்பது தெளிவாகிறது. பெரும் பெரும் வால்யூம்களாக நாம் தத்துவங்களை எழுதிக் கொண்டிருக்கலாம். அது நடைமுறை சாத்தியமா என்பதில்தான் அந்த தத்துவங்களின் வெற்றி இருக்கிறது. இங்கு கம்யூனிஷத்தின் கொள்கை ஏட்டுச் சுரைக்காயாகத்தான் உள்ளது.
//ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மனரீதியாக வித்தியாசம் இருக்கிறது என்பது பொய். இதை எந்த அறிவியலாளரும் ஏற்றுக் கொள்வதில்லை.//
நான் பொய் சொல்கிறேனா? அல்லது இந்த கம்யூனிஸ்ட் பொய் சொல்கிறாரா என்பதை இந்து பத்திரிக்கையில் வந்த கட்டுரையின் மூலம் பார்போம்.
அமெரிக்காவில் உள்ள வேய்னே ஸ்டேட் மருத்துவ பல்கலைக் கழகத்தின் உளவியல் மற்றும் நரம்பியல் துறை பேராசிரியர் எட்வர்ட் காஃபி. சென்னையில் எம்.வி.அருணாசலம் அறக்கட்டளை சார்பாக நடந்த அகில உலக நரம்பியல் மற்றும் உளவியல் அமைப்பின் 8 வது மாநாட்டில் 'பாலினத்தின் பாத்திரம் (Role of sexes)" என்ற தலைப்பில் பேராசிரியர் காஃபி உரையாற்றினார். அதில் உரையாற்றும் போது ஏன் ஆண்கள் ஆண்களாக இருக்கினறனர், பெண்கள் ஏன் பெண்களாக இருக்கின்றனர் என்பதற்கான விளக்கம் மனித மூளையில் உள்ளதாகத் தெரிவித்தார்.
உடல் கட்டமைப்பு ரீதியாகவும், செயல்பாடு ரீதியாகவும் ஆண் பெண் மூளைகளில் வித்தியாசங்கள் உள்ளன. மூளையின் அளவிலும், மூளையின் உட் பொருட்களான செர்ப்ரோஸ்பினல் ஃபுளூயிட்டின் (serebrospinal fluid) அளவு மற்றும் வெள்ளை பருப் பொருள் (white matter), சாம்பல் பருப் பொருட்களின் அளவு (gray matter) வரை ஆண் பெண் மூளைகளில் வித்தியாசங்கள் உள்ளன.
இந்த உடல் கட்டமைப்பு ரீதியான வேறுபாடு பிறப்பிலேயே தோன்றுகின்றது. ஆனால் இந்த வேறுபாடு மனிதன் வளர வளர மாறுபடுகின்றதா? அல்லது அதே நிலையில் நீடிக்கிறதா?
இது வரை இந்த கேள்விக்கான பதில் நமக்குத் தெரியாமல் இருந்தது. ஆனால் மனிதனின் வளர்ச்சிக்கும் வயதுக்கும் ஏற்ப மூளைகளில் மாறுபாடுகள் தோன்றுகின்றன என்பதற்கான புதிய ஆதாரங்கள் தற்போது வெளி வரத் தொடங்கியுள்ளன என்று கூறுகிறார் பேராசியர் காஃபி.
சில வருடங்கள் தொடர்ந்து மூளையைப் புகைப்படங்கள் எடுத்து ஆய்வு செய்ததில் அது ஒரே மாதிரி இருப்பதில்லை, மூளையில் மேலே குறிப்பிட்ட பகுதிகள் வயதுக்கு ஏற்ப மாற்றம் அடைகின்றன என காஃபி விளக்குகின்றார்.
30 வயதுக்கு மேல் மனிதனுக்கு வயது கூட கூட மூளையின் கட்டமைப்பு சுருங்குகின்றது.
நரம்பியல் மற்றும் உளவியலோடு பாலினத்துக்குத் தொடர்பு இருக்கின்றது என்றால் அப்பொழுது கண்டிப்பாக மூளையிலும் வேறுபாடு இருக்கும் என்று குறிப்பிட்டார் பேராசிரியர் காஃபி.
மொழி செயல்பாடுகள் –language function
காட்சி இடம் சார் செயல்பாடுகள்- visual –spatial function
சமூக அறிவாற்றல் திறன்- social cognition skills
உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் முறை- empathy
உணர்வு மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்துதல்-emotion and perception
தேடுதல் மற்றும் பரபரப்பு- seeking and sensation
இவ்வாறு அனைத்து செயல்களிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடு உள்ளதாக அறிக்கை கூறுகிறது.
9 வயதில் மூளையின் வெளிப் பகுதியை மூடி இருக்கும் கோர்டெக்ஸ் (cortex) எனும் பொருள் பெண் மூளையை விட ஆண் மூளையில் பெரிதாக இருக்கின்றது. ஆனால் அடுத்த பத்து ஆண்டுகளில் அதாவது 19 வயதில் இந்த வேறுபாடுகள் மாற்றம் அடைகின்றன.
இந்த வேறுபாடுகள் ஆண் பெண் என்ற பாலினத்தைப் பொருத்து மாறுபடுகின்றது. ஆண் மூளை 'முன் மடலின் (frontal lobe) ' தடிமன் பெண் மூளையை விட வெகுவாக குறைகிறது. ஆனால் மூளையின் பின் பக்கப் பகுதி (posterior region) இதற்கு நேர் மாற்றமாக உள்ளது. அதாவது பெண் மூளையின் பின் பக்க பகுதியின்(posterior region) தடிமன் ஆண் மூளையை விட வேகமாகக் குறைகின்றது.
பண்புகள் ஒரே மாதிரி இருந்தாலும் ஆண் பெண்ணிற்கான அடிப்படை உயிரியல் ஒன்றல்ல.
ஒரே வேலையைச் செய்து முடிப்பதற்கு ஆண் மூளையில் செயல்படும் பகுதியும் பெண் மூளையில் செயல்படும் பகுதியும் வேறு வேறாக உள்ளது.
இந்த உடற் கூறு ரீதியான வேறுபாடு ஆண் பெண்களின் சமுதாய நிலையினாலும் தோன்றி இருக்கலாம். சமூகத்தில் ஆண்கள் தேடக் கூடியவர்களாகவும் (hunter) அனைத்தையும் திரட்டக் கூடியவர்களாகவும் (gatherer), பெண்கள் குழந்தைகளை சுமக்கக் கூடியவர்களாகவும் குடும்பத்தை வீட்டை கவனிக்கக் கூடியவர்களாகவும் இருக்கின்றனர் என்பதே இதற்குக் காரணமாக இருக்கும் என பேராசிரியர் காஃபி குறிப்பிடுகின்றார்.
இருந்தாலும் இந்த வேறுபாடுகள் நம்மை வகைப்படுத்தி வரையறுக்கின்றதா? ஆம். இந்த உடற்கூறு ரீதியான வேறுபாடுகள் நம்மை ஆண் பெண் என மட்டும் தான் வேறுபடுத்துகின்றது. தனிப்பட்ட மனிதன் அவனுடைய சிறப்பான மாறுபட்ட திறமைகளை வைத்து வேறுபடலாம். அது எப்படி இருந்தாலும் உடல் நலத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் இந்த ஆண் பெண் உடல் ரீதியான வேறுபாடுகளில் நாம் கண்டிப்பாக கவனம் செலுத்தியாக வேண்டும் எனக் கூறி முடிக்கின்றார் அமெரிக்கப் பேராசியர் காஃபி.
Why boys will be boys and girls will be girls, has an explanation in their brains, Prof. Coffey adds. Structurally, and functionally, there are differences between the brains of men and women, as a collective. Right from brain volume, to cerebrospinal fluid volume, white matter and gray matter, there are differences between the male and the female brain.
http://www.thehindu.com/todays-paper/tp-miscellaneous/tp-others/article2464138.ece?css=print
கார்ல் மாக்ஸூம், லெனினும், ஸ்டாலினும் பெண்கள் சார்பாக சொன்ன கருத்துக்கள் அனைத்தும் இந்த ஆய்வின் மூலம் குப்பைக் கூடைக்கு சென்று விட்டன. இதை உணர்ந்ததால்தானோ என்னவோ ஸ்டாலின் தன் மகளுக்கு உடலின் கவர்ச்சியை காட்டாது ஆடைகளை அணிய வலியுறுத்தினார். தனது குடும்ப பெண்களை இஸ்லாமிய பெண் போல் நடக்க வைத்து விட்டு செங்கொடி போன்ற ஏமாந்த கம்யூனிஸ்டுகளிடம் தங்கள் உப்பு பெறாத சரக்கை ஏற்றி விட்டு மறைந்து விட்டனர். இது தெரியாத கம்யூனிஸ்டுகள் இதனை வேத வாக்காக நம்பி இன்று வரை மோசம் போய்க் கொண்டுள்ளனர்.
இது பற்றி தமிழர்கள் சுலபமாக விளங்கிக் கொள்ள தமிழனுக்கு பிடித்த சினிமாவிலிருந்தே உதாரணங்களை சொல்வோம்.
எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் ஜோடியாக நடித்த பண்டரிபாய் சில காலம் கழித்து இதே இருவருக்கும் தாயாக நடித்தார். ரஜினி காந்துக்கு 'அன்புள்ள ரஜினிகாந்தில்' மகளாக நடித்த மீனா சில காலம் கழித்து 'தில்லானா.. தில்லானா' என்று அதே ரஜினியோடு டூயட் பாடினார். 10 வருடம் கழித்து தற்போது குழந்தை பெற்றுக் கொண்டு டிவியில் விளம்பர நிகழ்ச்சியில் நடித்து வருகிறார். இன்னும் ஒரு இரண்டு வருடம் போனால் இதே ரஜினிக்கு தாயாக வேஷம் கட்டி வருவார். ஆனால் ரஜினி இன்னும் 10 வருடத்துக்கு சோனாக்ஷி சின்ஹா போன்ற இள நடிகைகளோடு டூயட் பாடி செங்கொடி போன்றவர்களை மகிழ்விப்பார். :-) இந்த எளிய உதாரணமும் விளங்காது கம்யூனிஷ கொள்கையானது அவரை சிந்திக்க விடாமல் தடுத்தால் நம்மால் ஒன்றும் சொல்ல இயலாது.
இதனை சரியாக உணர்ந்ததால்தான் குர்ஆன் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடு உள்ளது என்று தெளிவாக கூறுகிறது. அதனை எப்படி கையாள வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது.
சிலரை மற்றும் சிலரை விட இறைவன் மேன்மைபடுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள். ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு.
-குர்ஆன் 4:32
சிலரை மற்றும் சிலரை விட இறைவன் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள்.
-குர்ஆன் 4:34
குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் பெற்றோரும்,உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பங்கு உண்டு. பெற்றோரும் உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் பெண்களுக்கும் பங்கு உண்டு. இப் பங்கீடு கட்டாயக் கடமை.(4:7)
ஆண்களிலோ பெண்களிலோ நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
-குர்ஆன் 4:124

கம்யுனிஸத்தை சொல்லப் போய் இஸ்லாத்தை வாங்கி வந்த துரை!

சாராயத்திற்குப் பெயர் போன நெல்லை மாவட்டம் சொக்கம்பட்டி கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவன் நான். சாதிச் சண்டையின் பாதிப்பால் இடம் பெயர்ந்து செங்கோட்டை வட்டம் விஸ்வநாதபுரத்தில் வசித்து வருகிறேன்.
சமூகப் பொராளியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் என்னை இணைத்துக் கொண்டு டி.ஐ.ஒய்.எஃப், எஸ்.எஃப்.ஐ போன்ற அமைப்புகளில் பொறுப்பாளர்களாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தேன். இந்த ஈடுபாடு மதங்களையும் அதன் கட்டுப்பாடுகளையும் அதன் சுதந்திரங்களையும் எனக்கு அறியத் தந்தது. ஆனாலும் மதம் ஒரு அபின்: மதங்கள் மனிதனைப் பண்படுத்துவதற்காக மனிதனால் உருவாக்கப்பட்டவை என்ற மார்க்சிய எண்ணம்தான் என்னில் வேரூன்றி இருந்தது.
வர்ணாசிரமக் கொள்கையை கையில் ஏந்தி திராவிட இனங்களை ஜாதிகளாகப் பிரித்து அடிமைப்படுத்தி கொடுமைப்படுத்தும் உயர் ஜாதிகள் என்று கூறிக் கொள்பவர்கள் இன்றளவும் செய்யும் கொடுமைகளுக்கு எதிராகவும் அகில உலக ரட்சகனாகத் தன்னைப் பிரகடனப் படுத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் மார்க்சியப் போராட்டங்களில் முழு அளவில் இணைந்து 12 ஆண்டு காலம் போராடி பல முறை சிறை சென்றுள்ளேன்.
நான் சார்ந்திருந்த சமூக மக்கள் உழைக்கும் மக்களாக பள்ளன் என்றும் பறையன் என்றும் சக்கிலியன் என்றும் பல பெயர்களால் அவர்களைத் தீண்டத் தகாதவர்களாக்கி கொடுமைப் படுத்தப் படுவதும் ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என இந்தியச் சூழல் இருந்தாலும் இன்றும் திண்ணியம் கிராமத்திலே தாழ்த்தப்பட்ட சகோதரனுக்கு மனிதக் கழிவை வாயில் திணித்ததும், செத்த மாட்டின் தோலை உரித்ததற்காக மத வெறியர்கள் ஐந்து தாழ்த்தப்பட்ட மக்களை அடித்தே கொன்ற கொடுமையும், பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி போன்ற கிராமங்களில் ஜனநாயக உரிமை கூட மறுக்கப்படுவதும் ........ இவை எல்லாமே பல வடிவங்களில் தொடர்ந்து நடக்கும் கொடுமைகள் ஆகும்.
இவற்றுக்கு தீர்வு வெறும் போராட்டங்கள் அல்ல. மனித சட்ட திட்டங்களாலோ ஆணைகளாலோ இவற்றிற்கு தீர்வு காண முடியாது. பிறகு இதற்கு என்னதான் வழி? தொட்டால் தீட்டு, பட்டால் பாவம் என்ற கொடுமைகளுக்கு விடிவு காலம் எப்போது? கார்ல் மார்க்சின் 'மாறாது' என்ற சொல்லைத் தவிர மற்றவை எல்லாம் காலப் போக்கில் மாறும் என்பது வெறும் தத்துவம் தானா?
இந்தத் தலைவர்கள், மேதாவிகள் அவர்தம் கொள்கைகள் காலப் போக்கில் மங்கி நிறமிழந்து போகும் போது எந்த வழிதான் இந்த உலகை உயிர்ப்பிக்கும் என்ற தேடல் எப்போதம் என்னுள் உண்டு.
இந்தச் சூழலில் நெல்லை மாவட்டம் கடைய நல்லூர் ஒன்றிய டி.ஒய்.எஃப்.ஐ பொறுப்பாளராக கட்சியின் மாவட்ட நிர்வாகத்தால் பணியமர்த்தப்பட்டேன். இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் கடையநல்லூரில் இஸ்லாமிய மக்களிடம் கட்சியை வளர்ப்பதில் மட்டுமே நாட்டம் கொண்ட மார்க்சிய வாதங்களை எடுத்து வைப்பேன். அதே சமயம் உலக அளவில் சிறுபான்மையினர் கொடுமைப்படுத்தப்படுதல் குறிப்பாக நர வேட்டை நாயகன் நரேந்திர மோடி குஜராத்தில் நடத்திய இனப் படுகொலைகள், இஸ்லாமியப் பெண்கள் மீது நடத்திய தாக்குதல்கள் வகுப்பு வாத பாசிச வெறியர்களால் இந்தியா முழுவதும் நடக்கும் கொடூரச் செயல்கள் பொன்றவற்றிற்கு எதிராகக் குரல் கொடுத்தும் போராடியும் இருக்கிறேன். இந்தச் சிறுபான்மை மக்களில் பெரும்பாலோர் மௌனிகளாக இருப்பது கோபத்தையும் ஒரு இரக்கத்தையும் கூட என்னுள் ஏற்படுத்தியது.
கட்சியை அறிமுகப்படுத்தி வளர்ப்பதற்காக பகுத்தறிவுப் புத்தகங்கள், மார்க்சியப் புத்தகங்கள், கட்டுரைகள், கவிதைகள், நான் எழுதிய 'போர் வாள்", செம்மண், கிராமத்துக் கரையோரம் ஆகிய நூல்களை எல்லாம் மக்களிடம் எடுத்துச் செல்வேன். அப்படி எடுத்துச் செல்லும் போது 20 வயதான மதினா நகர் டி.எ.அப்துல் அஜீஸ் எனும் நண்பரையும் சந்திக்கச் செல்வேன். அவர் மார்க்க அறிஞரோ அல்லது மார்க்கத்தை முழு அளவில் எடுத்துரைக்கும் அழைப்பாளரோ அல்ல. பத்து வருடங்களுக்கு முன் இஸ்லாத்தில் இணைந்தவர்தான்.
என் நூல்களை அவர் படித்தாரா என்று தெரியாது. என் உணர்வுகளை மதித்து நெருங்கி தோழமை உணர்வோடு பழக ஆரம்பித்தார். அவரை இஸ்லாமிய மக்கள் மத்தியில் மார்க்சிய அறிவைப் புகுத்தி போராட்டவாதியாக ஆக்க முயன்றேன்.
இஸ்லாமிய நண்பர்களிடம் மார்க்சிய வாதங்களை எடுத்துரைத்து தோற்றுப் போகத்தான் முடிந்தது. அப்துல் அஜீஸிடம் நான் தோற்றுப் போனேன். 'நான் மார்க்சியத்தை படிப்பது இருக்கட்டும்: நீங்கள் நபிகளின் வாழ்க்கை முறையை படியுங்கள்' என்று நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை எனக்குத் தந்தார்.
என்ன ஒரு அற்புத வாழ்வு!ஆஹா..! நடைமுறைக் கேற்ற அழகிய வழி காட்டுதல்கள். அந்த மாமனிதரின் வாழ்வு முறை என்னை ஈர்த்தது. ஓரிறைக் கொள்கையின் மீது ஒரு பிரியம் ஏற்பட்டது. சிந்திக்க ஆரம்பித்தேன். திருக்குர்ஆனின் அத்தியாயங்களை ஒவ்வொன்றாகப் படிக்கத் தொடங்கினேன். விஞ்ஞான உலகோடு ஒப்பாய்வு செய்து படித்தேன். நபிகளார் மூலம் மனித குலத்திற்கு இறைவன் அருளிய வழி காட்டுதல்கள் உண்மையானவை: சத்தியமானவை: கண்ணீர் மல்க கரைந்துருகினேன். நான் இப்போது அப்துல் அஜீஸ்.
தீண்டாமையை ஒழிக்கவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விடிவு காலம் பிறக்கவும், ஏற்றத் தாழ்வுகளைக் களையவும் அருமருந்தான இஸ்லாத்தை என் சமூக மக்களிடம் எடுத்துச் செல்வேன்.
ஓரிறையை ஏற்று திருமறை வழியில் நடப்பதன் மூலமே மனித குலம் மேம்பாடு அடைய முடியும். மனிதன் மாண்பு பெற இம்மார்க்கமே மகத்தான மருந்து என உலகிற்குப் பறை சாற்றப் போகிறேன்.
-அப்துல் அஜீஸ் (முன்னால் வி.பி துரை)
நன்றி:சமரசம்
-------------------------------------------------------------------
ஆஹா... என்ன ஒரு தீர்க்கமான முடிவு! என்ன ஒரு ஆணித்தரமான வார்த்தைகள்! இனி உங்களை ஒருவனும் சூத்திரன் என்று கூற மாட்டான். நெஞ்சை நிமிர்த்தி சொல்லுங்கள் நான் ஆதமின் வழி வந்த வாரிசு என்று!
'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பது இனி ஏட்டளவில் மட்டுமல்ல செயலிலும் நீங்கள் செயல்படுத்தலாம். தமிழனின் பூர்வீக மதத்தை நோக்கி ஓடி வந்த நமது சகோதரன் துரையை இரு கரம் நீட்டி அரவணைப்போம்.
இஸ்லாத்தை வாழ்வியலாக கொண்டு வாழ்ந்து வரும் என்னை ஒருவர் கம்யூனிஸ்டாக மாற்றப் போகிறேன் என்று சவால் விட்டுள்ளார். :-) அதற்காக என்னோடு விவாதமும் செய்து வருகிறார். இவரைப் போன்ற கம்யூனிஸ்டான துரை தற்போது அப்துல் அஜீஸாக மாறி இறைப் பணி செய்து வருகிறார். இதே போன்று என்னோடு வாதிடுபவரும் ஒரு நாள் கண்டிப்பாக கம்யூனிஸத்தை விட இஸ்லாமே சிறந்த வாழ்வு முறை என்ற புரிதலுக்கு வருவார். நாமும் பிரார்த்திப்போம்.
"முஹம்மதே! நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது! மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான். அவன் நேர் வழி பெற்றோரை நன்கறிந்தவன்."
அல்குர்ஆன் 28:56
'உள்ளங்களைப் புரட்டக் கூடியவனே! என் உள்ளத்தை உனது மார்கத்தில் உறுதியாக ஆக்கி வைப்பாயாக!' என்பது நபிகள் நாயகம் அவர்களின் பிரார்தனையாக இருந்தது.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : திர்மிதீ 3511
'மனிதனின் உள்ளங்கள் அல்லாஹ்வின் இரண்டு விரல்களுக்கிடையே உள்ளன. அவன் விரும்பியவாறு அந்த உள்ளங்களைப் புரட்டுகிறான்' என்று நபிகள் நாயகம் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி)
நூல் : முஸ்லிம் 4798
'உள்ளங்கள் இறைவனது கைவசத்திலேயே உள்ளன; அதில் எவருக்கும் எந்தப் பங்குமில்லை' என்பதற்கு இவை தெளிவான சான்றுகள்.
Thursday, February 26, 2015
குறைஷி குலம் உயர்ந்தாக நபிகள் நாயகம் சொன்னார்களா? - 4
செங்கொடியின் கேள்விகளுக்கான எனது பதில்கள்......
//1.கள்ள உறவுக்குள் ஒழியும் கடவுள் எனும் பதிவுக்கான பதில்.//
இரண்டாவது கேள்வியில் இதற்கான பதில் இருக்கிறது.
//2. முதலில் எழுத்து விவாதத்துக்கு நேரம் இல்லை என்று பொய்யாக கூறியதன் காரணம் என்ன?//
பொய்யெல்லாம் கூறவில்லை. கிடைக்கும் ஓய்வு நேரத்தை உங்களோடு வீணாக்காமல் மற்ற ஆக்கபூர்வ பணிகளில் கவனம் செலுத்தலாமே என்றுதான் சொன்னேன்.
//3. நேரடி விவாதத்துக்கு வர வேண்டும் என்று கூறியவர் தன் முடிவை மாற்றிக் கொள்ள நேர்ந்ததற்கான காரணம் என்ன?//
இப்பொழுதும் உங்களுடன் நான் விவாத ஒப்பந்தமெல்லாம் போட்டு விவாதிக்கவில்லையே! 'சமூகத்தில் சாமான்ய மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது இஸ்லாமா? கம்யூனிஸமா?' என்ற தலைப்பில் சில கருத்துக்களை உங்களிடம் கேட்டுள்ளேன். விவாதம் என்று வந்தால் அது நேரிடையாக நடந்து குறிப்பிட்ட நாட்களை ஒதுக்கி செய்தால்தான் முடிவுக்கு வரும். இப்போதும் அதற்கு நான் தயார். இதற்கு முன் பல வருடங்களாக உங்களோடு எழுத்து முறையில் விவாதித்து எந்த தரப்பும் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வரவில்லை என்பதால் தான் எழுத்து பூர்வ விவாதத்தை மறுக்கிறேன்.
//4.சுவனப்பிரியன் – நெருப்புக்கோழி பதிவில் இருக்கும் குறிப்பான அம்சங்களுக்கான பதில்,//
இரண்டாவது கேள்வியில் இதற்கான பதில் இருக்கிறது.
//5.இந்தப் பதிவில் விவாதிக்கப்பட்டவைகளுக்கான பதில்.//
நேரம் கிடைக்கும் போது ஒவ்வொன்றாக வரும்.
//6.இந்த விவாதத்துக்கு பொருத்தமான தலைப்பை தேர்ந்தெடுப்பது.//
'சமூகத்தில் சாமான்ய மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது இஸ்லாமா? கம்யூனிஸமா?'
//இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள், இந்த ஆட்சியதிகாரம் குரைஷிகளிடம் தான் இருக்கும் அவர்களில் இருவர் எஞ்சியிருக்கும் வரை. புஹாரி 3501//
இது பற்றி சற்று விரிவாகப் பார்போம். ஒரு மனிதனிடமிருந்து இரண்டு கருத்துக்கள் வந்திருக்க முடியாது. குறைஷி குலம் உயர்ந்தது என்ற ரீதியில் நீங்கள் பதிந்த நபி மொழி வருகிறது. ஆனால் 10க்கும் மேற்பட்ட நபி மொழிகள் குலம் உயர்த்தி தாழ்த்தி பேசுதலை கண்டிக்கிறது. குர்ஆன் வசனமும் இவ்வாறு மனிதர்களில் உயர்ந்த குலம் தாழ்ந்த குலம் என்ற பாகுபாட்டை காட்டி தீண்டாமை கடைபிடிப்பதை வன்மையாக கண்டிக்கிறது.
குரைஷிக் குலம் பற்றி இனி பார்போம்.
குறைஷிக் குடும்பத்தார் இறைத்தூதர் இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழித் தோன்றல்கள். இதன்படி கஅபாவை நிர்வகிக்கும் பொறுப்பைக் குரைஷிகள் தலைமுறை தலைமுறையாகப் பெறுகின்றனர். இவர்கள் தங்கள் குடும்பங்களை தனித்துவமிக்க குடும்பங்களாக ஆக்கிக் கொண்டனர். எவ்வாறு நமது நாட்டில் பார்பனர்கள் தங்களுக்கென்று தனி உரிமைகள், தனி வழிபாடுகள், தனி ஆளுமைகளை கொண்டிருக்கிறார்களோ அவ்வாறே அன்றைய குரைஷிகள் இருந்தனர்.
குரைஷிகள் தங்களை ஹுமுஸ் என்று அழைத்துக் கொண்டனர். ஹுமுஸ் என்றால் கடுமை, கடினம் என்று பொருளாகும். குரைஷிகள் தங்கள் மார்க்கத்தில் பிடிப்பாக இருப்பதால் அவர்களுக்கு இந்தப் பெயர். (நவவீயின் முஸ்லிம் விரிவுரை)
இவர்கள் ஹஜ், உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து விட்டால் இறைச்சி சாப்பிட மாட்டார்கள்; முடி, கம்பளியினால் ஆன ஆடைகளை அணிய மாட்டார்கள். மக்காவுக்கு வந்தால் இந்த ஆடைகளைக் களைந்து விடுவர். இது அப்துல் அஜீஸ் பின் இம்ரான் அல்மதனீ என்பார் கூறும் விபரமாகும்.
குரைஷிகளிடம் குரைஷி அல்லாதவர் யாரேனும் பெண் பேசி வந்தால், தங்கள் பிள்ளை தங்கள் மார்க்கத்தில் தான் இருப்பாள் என்று நிபந்தனையிட்டே திருமணம் முடித்துக் கொடுப்பார்கள். இந்த அடிப்படையில் சம்பந்தம் கொள்கின்ற கிளையாரில் தாய்கள் மட்டும் ஹுமுஸைச் சார்ந்தவர்கள் ஆவர். (பத்ஹுல் பாரி)
தனித்துவத்தைத் தக்க வைத்தல்
ஆரம்ப காலத்தில் இவர்களது முன்னோர்கள் சீர்திருத்தவாதிகளாக, இறைத்தூதர்களாக இருந்ததால் கஅபா எனும் ஆலயத்தை நிர்வகிக்கும் பொறுப்பைப் பெறுகின்றனர். அதை வைத்துத் தங்கள் குடும்பத்தின் தனித்தன்மையை அப்படியே தலைமுறை தலைமுறையாகத் தக்க வைத்துக் கொண்டிருந்தார்கள்.
ஹஜ் என்பது மக்கள் அனைவரும் மக்காவில் ஒன்று கூடுவதாகும். அப்படி ஒன்று கூடும் மக்கள், மக்காவில் கஅபா எனும் ஆலயத்திற்கும், முஸ்தலிபா என்ற இடத்திற்கும், அரஃபா என்ற இடத்திற்கும் கண்டிப்பாக வருகையளிக்க வேண்டும்.
ஆனால் இந்தக் குரைஷிகளோ மற்ற மக்களைப் போன்று அரஃபாவுக்கு வர மாட்டார்கள். முஸ்தலிபா என்ற இடத்திற்கு மட்டும் வருகையளிப்பார்கள்.
மடமைக் காலத்தில் மக்கள் நிர்வாணமாகவே கஅபாவைச் சுற்றி வந்துள்ளனர். ஹும்ஸ் கிளையாரைத் தவிர. ஹும்ஸ் என்றால் குரைஷிகளும் அவர்களது சந்ததிகளும் ஆவர். அவர்களில் ஓர் ஆண் இன்னோர் ஆணுக்கு தவாஃப் செய்வதற்காக ஆடை கொடுப்பார். ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு ஆடை கொடுப்பார். இந்த ஹும்ஸ் கிளையார் யாருக்கு ஆடை கொடுக்கவில்லையோ அவர் நிர்வாணமாக தவாஃப் செய்வார். மேலும் மக்கள் அரஃபாவிலிருந்து திரும்புவார்கள். ஆனால் குரைஷிகளோ எல்லாம் முடிந்த பின்னர் முஸ்தலிஃபாவிலிருந்து தான் திரும்புவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 1665
அல்குர்ஆன் வைக்கும் ஆப்பு
இந்த அறியாமைக் காலப் பழக்கத்திற்கு, அகந்தைக்கு, குல வெறிக்குத் தான் அல்குர்ஆன் ஆப்பு வைக்கின்றது.
மக்கள் எங்கிருந்து புறப்படு கிறார்களோ அங்கிருந்து நீங்களும் புறப்படுங்கள்! (2:199) என்ற வசனம் குரைஷிகள் தொடர்பாக இறங்கியது தான். (புகாரி 1665)
அல்குர்ஆனின் இந்த ஆணைப் படி குரைஷிகளின் குடும்ப வெறி அடித்து உடைத்துத் தரைமட்டமாக்கப் படுகின்றது. அதன்படி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்யும் போது அவர்கள் குரைஷிக் குடும்பத்தவராக இருந்தாலும் அரஃபாவில் வந்து நிற்கின்றார்கள்.
அதைப் பார்த்து மற்ற குரைஷிகள் ஆச்சரியப்படுகின்றனர்.
(நான் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்) அரஃபா தினத்தில் எனது ஒட்டகம் காணாமல் போனது. அதைத் தேடிக் கொண்டு வந்த போது நபி (ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்தில் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தேன். அப்போது நான், "இவர் குரைஷிக் குலத்தவராயிற்றே! இவருக்கு இங்கு என்ன வேலை?'' என்று எனக்குள் கூறிக் கொண்டேன்.
அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்யிம்(ரலி)
நூல்: புகாரி 1664
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் குரைஷிக் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தங்கள் வழக்கத்தை அப்படியே தக்க வைத்துக் கொள்வார்கள் என்று குரைஷிகள் எதிர்பார்த்தனர். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அந்த அறியாமைக் காலத்துப் பழக்கத்திற்கு அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப ஆப்பு வைத்து விடுகின்றார்கள்.
"நிச்சயமாக உங்களுடைய இந்த மாதத்தில், உங்களுடைய இந்த நகரத்தில், உங்களுடைய இந்த நாள் எவ்வாறு புனிதம் பெற்று விளங்குகின்றதோ அவ்வாறே உங்களின் உயிர்களும் உடைமை களும் கண்ணியமும் உங்களுக்குப் புனிதமானவையாகும்'' என்று பல தடவை கூறினார்கள்.
நூல்: புகாரி 1739
மக்களே! உங்கள் இறைவன் ஒரே ஒருவன் தான். உங்களுடைய தந்தை ஒருவர் தான். ஓர் அரபியருக்கு அரபியல்லாதவரை விடவும், ஓர் அரபியல்லாதவருக்கு அரபியரை விடவும், ஒரு கருப்பருக்கு சிவப்பரை விடவும், ஒரு சிவப்பருக்கு ஒரு கருப்பரை விடவும் எந்தச் சிறப்பும் இல்லை, இறையச்சத்தைத் தவிர!
நூல்: அஹ்மத் 22391
அறியாமைக் காலத்து அனைத்துக் காரியங்களும் என் இரு பாதங்களுக்கடியில் போட்டுப் புதைக்கப்படுகின்றன.
நூல்: முஸ்லிம் 2137
அறியாமைக் காலத்து (கொலைக்காக இப்போது) பழி வாங்குதல் (இன்றுடன்) ரத்து செய்யப்படுகின்றது. (அவ்வாறு) முதன் முதலில் ரத்து செய்யப் படுவது எங்களது குடும்பத்தைச் சார்ந்த ரபீஆவுடைய குழந்தைக்காக வாங்க வேண்டிய பழியாகும். ரபீஆ, அப்துல் முத்தலிபுடைய பேரர் ஆவார். இந்த ரபீஆவின் குழந்தை ஸஃத் கிளையாரிடம் பால் குடித்துக் கொண்டிருக்கும் போது ஹுதைல் கிளையினர் கொன்று விட்டனர். (இதுவரை பழி தீர்க்கப்படாமல் இருக்கும் அந்த உயிருக்காக இனி பழி தீர்க்கப்படாது என்று இப்போது அறிவித்து விட்டேன்)
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்கள்: முஸ்லிம் 2137, திர்மிதீ 3012, அபூதாவூத் 1628, 2896, இப்னுமாஜா 3046, 3065, இப்னு குஸைமா
தலைமைப் பொறுப்புக்குத் தாங்கள் மட்டுமே தகுதி என்று எண்ணிக் கொண்டிருந்த குரைஷிகளின் குருட்டு எண்ணத்தையும் நபி (ஸல்) அவர்கள் உடைக்கின்றார்கள். அடிமையாக இருந்த ஸைத் (ரலி) அவர்களையும், அதற்குப் பின் அவரது மகன் உஸாமா (ரலி) அவர்களையும் படைகளுக்குத் தளபதியாக நியமித்து, குலப் பெருமையைக் குழி தோண்டிப் புதைக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள், உஸாமா பின் ஸைத் (ர-) அவர்களைத் தளபதியாக்கி ஒரு படையை அனுப்பினார்கள். மக்களில் சிலர் உஸாமா அவர்களின் தலைமையைக் குறை கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "(இப்போது) இவரது தலைமையை நீங்கள் குறை கூறுகின்றீர்கள் என்றால், இதற்கு முன் (முஃத்தா போரின் போது) இவரது தந்தையின் தலைமையையும் நீங்கள் குறை கூறிக் கொண்டிருந்தீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் (ஸைத்) தலைமைப் பொறுப்புக்குத் தகுதி உடையவராகவே இருந்தார். மேலும் அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானவராக இருந்தார். இவர் (உஸாமா) தான் அவருக்குப் பின் எனக்கு மிகவும் பிரியமானவர் ஆவார்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 3730
குரைஷ் குலத்தின் உட்பிரிவான மக்ஸூமியா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடி விட்டார். இது குரைஷிக் குலத்தவருக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியது. தம் குலத்துப் பெண்ணுக்கு திருட்டுக் குற்றத்திற்காக கைகள் வெட்டப் படுவது அவர்களுக்கு இழிவாகத் தோன்றியது. எனவே நபிகளிடம் கை வெட்டும் தண்டனையை கைவிடுமாறு பரிந்துரைக்கப்பட்டது. அப்போது நபி அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா?
"உங்களுக்கு முன் சென்றவர்கள் தங்களில் உயர்ந்தவர் திருடினால் அவரை விட்டு விடுவார்கள். பலவீனர் திருடினால் அவருக்குத் தண்டனையை நிறைவேற்றுவார்கள். அதனால் தான் அவர்கள் நாசமாயினர். அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன். இந்த முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவரது கையை நான் வெட்டுவேன்'' என்று பிரகடனம் செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 3475
"(தன்) இனத்தை ஆதரித்து, குருட்டு சிந்தனை என்ற கொடியின் கீழ் போரிட்டு கொல்லப்படுபவரின் மரணம் அறியாமைக் காலத்து மரணமே'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்துல்லாஹ் அல்பஜலி (ரலி)
நூல்: முஸ்லிம் 3440
"மக்களே! உங்கள் இறைவன் ஒரே ஒருவன் தான். உங்களுடைய தந்தை ஒருவர் தான். ஓர் அரபியருக்கு அரபியல்லாதவரை விடவும், ஓர் அரபியல்லாதவருக்கு அரபியரை விடவும், ஒரு கருப்பருக்கு சிவப்பரை விடவும், ஒரு சிவப்பருக்கு ஒரு கருப்பரை விடவும் எந்தச் சிறப்பும் இல்லை, இறையச்சத்தைத் தவிர!''
(நூல்: அஹ்மத் 22391)
மேலே நாம் பல நபி மொழிகளையும் குர்ஆன் வசனங்களையும் பார்தோம். அவை அனைத்தும் குரைஷி குலம் உயர்ந்தது என்று நினைப்பவர்களுக்கு சம்மட்டி அடியாக அமைந்துள்ளதைப் பார்க்கிறோம். இவ்வாறு சொல்லி விட்டு அதற்கு நேர்மாறான வேறொரு கருத்தை நபிகள் நாயகம் சொல்லியிருப்பார்களா?
இங்கு இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். குர்ஆனுக்கு மாற்றமாக எந்த நபிமொழிகள் இருந்தாலும் அது இட்டுக் கட்டப்பட்டவை என்று ஒதுக்கி விட வேண்டும். இஸ்லாத்தில் இணைவதாக நடித்த ஒரு சில யூதர்கள் நபி அப்படி சொன்னார் நபி இப்படி சொன்னார் என்று நிறைய கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டனர். அவ்வாறு வரும் நபி மொழிகளை இஸ்லாமியர்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்பதையும் இங்கு பதிவு செய்து கொள்கிறேன். குர்ஆனை பாதுகாப்பதாக சொன்ன இறைவன் நபி மொழிகளுக்கு அந்த உத்தரவாதத்தைக் கொடுக்கவில்லை. எனவே இரு வேறு கருத்துக்களை சுமந்த நபி மொழிகள் நமக்கு கிடைத்தால் குர்ஆனோடு அதனை உரசிப் பார்க்க வேண்டும். குர்ஆனை ஒட்டி எந்த கருத்து வருகிறதோ அதனையே நபி அவர்கள் சொன்னதாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். குர்ஆனின் கருத்துக்கு மாற்றமாக ஒரு நபி மொழி கிடைத்தால் நபியவர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள் என்று அதனை ஒதுக்கி விட வேண்டும். உலக முஸ்லிம்கள் பொதுவாக ஒத்துக் கொண்ட நடைமுறையே இது.
இனி கம்யூனிஸத்தைப் பற்றி வரும் பதிவுகளில் பார்போம்.

Labels:
இஸ்லாம்,
கம்யூனிஸம்,
சாதி வெறி,
செங்கொடி,
விவாதம்
Friday, February 20, 2015
பெண்களை வேலையில் அமர்த்திய கம்யூனிஷ பார்வை - 3

//கம்யூனிசம் சாதிக்காததை இஸ்லாம் சாதித்திருப்பதாக கூறுகிறார். என்ன சாதித்திருக்கிறது என்பதை கூற முன்வந்தால், எது சாதனை? எது வேதனை? என அதை விரிவாக அலசலாம்.// - செங்கொடி
இஸ்லாம் சொல்கிறது எக்காலத்திலும் ஆணும் பெண்ணும் சமமாக முடியாது என்று. ஆனால் கம்யூனிஸமோ ஆணையும் பெண்ணையும் பிரித்து பார்பதில்லை. கணவனும் மனைவியும் கட்டாயமாக வேலை செய்து உற்பத்தியை பெருக்க வேண்டும் என்பது கம்யூனிஸ பார்வை. இது பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம். லெனினும், ஸ்டாலினும் சொன்னதை நம்பி வேலைக்கு சென்ற பெண்கள் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைப் பற்றி போலீஸ் கமிஷனர் முன் நமது சென்னையில் சொன்னதை இனி பார்போம்.
கமிஷனர் ராஜேந்திரன் முன்னிலையில் வேலைக்குச் செல்லும் பெண்கள் கொட்டிய உள்ளக் குமுறல்கள் வருமாறு:-
வேலைக்குப் போகும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மூன்று விதமாகச் சொல்லலாம். வீட்டில் சந்திக்கும் பிரச்சினை, அலுவலகத்துக்குச் செல்லும் வழியில் ரோட்டில் நடந்து செல்லும் போது, பஸ் ஏற காத்திருக்கும் போது, பஸ்களில், ரெயில்களில் பயணம் செய்யும் போது ஏற்படும் உடல், உள்ள ரீதியான மற்றும் பாலியல் ரீதியான தொல்லைகள், அலுவலகத்தில் தனக்கு மேலும், கீழும் வேலை பார்க்கும் ஆண் அதிகாரிகள் கொடுக்கும் `செக்ஸ்' தொல்லைகள் என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
வேலைக்கு பெண்கள் புறப்படும் போது நன்றாக ஆடை அணிந்து, அலங்காரம் செய்து சென்றால் சில கணவர்கள் பொறாமையோடு பார்க்கிறார்கள். இன்னும் சில கணவர்கள் சந்தேகப் பார்வை பார்க்கிறார்கள். இதனால் கணவர்களோடு வீட்டில் கடும் பிரச்சினைகளைச் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. பையைத் தோளில் தொங்கப் போட்டுக் கொண்டு வீட்டுக்கு வெளியே வந்துவிட்டால் பலரும் ஒவ்வொரு விதமாகப் பார்க்கிறார்கள். ரோட்டில் தனியாக நடந்து செல்லும் போது எதிரில் வருபவர் சேட்டை பார்வை வீசுவார். பஸ் ஏற பஸ் நிலையத்தில் காத்திருக்கும் போது, வயதானவர்கள் முதல் இளைஞர்கள் வரை கிண்டல் பாட்டு பாடுகிறார்கள். பஸ்சில் ஏறிவிட்டால் போதும் இடிமன்னர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. பஸ் டிரைவர் `பிரேக்' போட மாட்டாரா என்று பல காமுகர்கள் ஏக்கத்தோடு நிற்கிறார்கள்.
`பிரேக்' அடித்தால் போதும் அந்தச் சாக்கில் பெண்கள் மீது சாய்ந்து அற்ப சுகம் காண்கிறார்கள்.
வெட்கத்தை விட்டுச் சொல்கிறோம், அவ்வாறு சாய்கிறவர்கள் முதலில் மார்பை குறி வைத்துத் தான் பிடிக்கிறார்கள். நாங்கள் அவர்களோடு சண்டை போடுவதா, எச்சரிக்கை செய்வதா, கன்னத்தில் அறைவதா என்பது புரியாமல் சில நேரங்களில் இடி மன்னர்களின் தாக்குதலைத் தாங்கிக் கொண்டு மவுனமாக அழுதுவிட்டுத் தான் வருகிறோம்.
மிரட்டல்
ஒரு வேளை எதிர்த்துச் சண்டை போட்டால், சிலர் பிளேடால் கீறி விட்டு ஓடிவிடுகிறார்கள். இன்னும் சிலர் கேவலமாகத் திட்டுகிறார்கள். இதையெல்லாம் சந்திக்க முடியாமல் நாங்கள் தவிக்கிறோம்.
அலுவலகத்துக்குச் சென்று விட்டால் உயர் அதிகாரிகளும், கீழ் அதிகாரிகளும் செய்யும் பாலியல் தொல்லைகள் சொல்லிமாளாது. இப்போது காணாத குறைக்கு செல்போனில் வேறு `ஓடிப் போகலாம் வர்றீயா' என்று கூப்பிடுகிறார்கள். செல்போன்களில் ஆபாசப் படங்களையும் அனுப்புகிறார்கள். எம்.ஜி.ஆர். ஒரு சினிமா படத்தில் `இப்படித் தான் இருக்க வேண்டும் பொம்பளை' என்ற பாடலை பாடினார். அந்தக் காலம் எல்லாம் இப்போது மலை ஏறிவிட்டது.
பெண்களாகிய நாங்கள் எங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஏதாவது செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். போலீசார் எங்களுக்கு உற்ற துணையாக இருந்து பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
இருட்டான இடங்களில்...
பெண்கள் சில நேரங்களில் வேலைக்குப் போய்விட்டு இரவு வெகு நேரம் கழித்து வீடு திரும்ப வேண்டிய நிலை உள்ளது. அப்போது அவர்கள் ரோடுகளில் தனியாக நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு பெண்கள் தனியாக நடந்து செல்லும் இருட்டான பகுதிகளில் போலீசாரை ரோந்து பணியில் ஈடுபடுத்த வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு சொல்லியபடி, பெண்களின் சுய பாதுகாப்புக்காக `விசாகா' கமிட்டிகளை அனைத்து பகுதிகளிலும் பலமாக நிறுவுவதற்கு போலீசார் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.
போலீஸ் நிலையத்துக்குப் புகார் கொடுக்க சென்றால் புகார்களை வாங்காமல் இழுத்தடிப்பார்கள், உடனடியாக எப்.ஐ.ஆர். போட மாட்டார்கள் என்ற தவறான எண்ணம் பெண்கள் மத்தியில் உள்ளது. அதைப் போக்கும் வகையில் பெண்கள் கொடுக்கும் புகார்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்யவேண்டும்.
பஸ்களில்
தற்போது பெண்கள் செல்லுவதற்கு தனி ரெயில் விடப்பட்டுள்ளது. அது போல, பெண்கள் பயணம் செய்வதற்காக அதிகளவில் மகளிர் பஸ்களை விட வேண்டும். பொதுவான பஸ்களில் பெண்களை முன்பக்கத்தில் ஏறுவதற்கும், ஆண்களை பின்பக்கத்தில் ஏறுவதற்கும் விசேஷ ஏற்பாடு செய்ய வேண்டும். அதோடு பொதுவான பஸ்களில் பெண் கண்டக்டர், ஆண் கண்டக்டர் என்று இரண்டு கண்டக்டர்களை நியமிக்க வேண்டும். தைரியமாக புகார் கொடுக்க வருவதற்கு பெண்கள் மத்தியில் இது போன்ற கூட்டங்களை நடத்தி போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும்.
அலுவலகங்களில், பெண்களுக்கு `செக்ஸ்' தொல்லை கொடுப்பவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்பதையும், பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்கள் தைரியமாக புகார் கொடுக்க முன் வர வேண்டும் என்ற வாசகத்தையும் எழுதி போட வேண்டும்.
நாங்கள் பஸ்சில் பயணம் செய்யும் போது பல்வேறு தந்திரங்களைக் கையாண்டு தான் இடிமன்னர்களிடமிருந்து எங்களைக் காப்பாற்றிக் கொள்கிறோம். சில நேரங்களில் முக்கியமான போலீஸ் அதிகாரிகளின் பெயரைச் சொல்லி, அவர்கள் எங்கள் உறவினர்கள் என்று சொல்லி இடிமன்னர்களை மறைமுகமாகப் பயமுறுத்துகிறோம்.
பெங்களூரில் ஆட்டோ டிரைவர்கள் தங்களது பேட்ஜ், உடை போன்றவற்றை அணிந்துகொண்டு நாகரிகமாக நடந்து கொள்கிறார்கள். ஆட்டோவிப் போட்டு இருக்கிறார்கள். சென்னை நகரிலும் ஆட்டோ டிரைவர்களை இது போல் நடப்பதற்கு போலீசார் அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு பெண்கள் தங்களது உள்ளக் குமுறல்களை கொட்டி பேசினார்கள்.
தினத் தந்தி
-31 டிசம்பர் 2009
இந்த பெண்களின் உள்ளக் குமுறலுக்கு கம்யூனிஸ்டுகள் என்ன பதிலை வைத்துள்ளனர். இனி வேலைக்கு செல்லும் அனைத்துலக பெண்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க கம்யூனிஸ்ட் காமரேட்டுகள் தயாரா? செங்கொடி இதற்கு ஏற்பாடு செய்வாரா? இங்கும் கம்யூனிஸத்தின் ஆண் பெண் சமம் என்ற கோட்பாடு தோல்வியை தழுவியுள்ளதைப் பார்கிறோம்.
-----------------------------------------------
இனி 1400 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு ஆதாரபூர்வமான நிகழ்ச்சியை நினைவு கூறுவோம்.
நபிகள் நாயகம் வாழ்ந்த காலத்தில் பெண்குழந்தை பிறந்தால் வறுமைக்கு அஞ்சி அதனை உயிரோடு புதைத்து விடுவார்கள். தமிழ் நாட்டில் இன்றும் அந்த கொடுமை உசிலம்பட்டி போன்ற கிராமங்களில் நடந்து வருகிறது. இது போன்ற சூழ்நிலையில்தான் குர்ஆன் 'பெண் குழந்தைகளை கொன்றால் அதற்காக மறுமையில் தண்டிக்கப்படுவீர்கள்' என்ற இறை வசனம் இறங்குகிறது. அன்று முதல் மக்கா மதினாவில் பெண் குழந்தைகளை உயிரோடு புதைக்கும் பழக்கம் அந்த மக்களால் கைவிடப்படுகிறது. இந்த சூழ்நிலையில் ஒரு நீண்ட நபி மொழி ஒன்றை பார்போம்.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் நபியவர்களிடம் 'இறைவனின் தூதரே! நான் புது மாப்பிள்ளை' என்று சொல்லி ஊருக்கு விரைவாக செல்ல அனுமதி கேட்டேன். அவர்கள் எனக்கு அனுமதி அளித்தார்கள். 'நீ கன்னிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டாயா? அல்லது வாழ்ந்து அனுபவமுள்ள பெண்ணை மணந்து கொண்டாயா?' என்று கேட்டார்கள். அதற்கு நான் 'வாழ்ந்த அனுபவமுள்ள ஒரு பெண்ணைத்தான் மண முடித்துக் கொண்டேன்' என்று பதில் கூறினேன். அதற்கு நபியவர்கள் ' கன்னிப் பெண்ணை மணமுடித்திருக்கக் கூடாதா? நீ அவளுடனும் அவள் உன்னுடனும் விளையாடலாமே' என்று கூறினார்கள்.
நான் 'இறைவனின் தூதரே! எனக்கு சிறு வயது சகோதரிகள் பலர் இருக்கும் நிலையில் என் தந்தை இறந்து விட்டார். எனவே எனது சகோதரிகளுக்கு ஒழுக்கம் கற்பிக்கவோ அவர்களைப் பராமரிக்கவோ இயலாத சிறு வயதுப் பெண்ணை நான் மணந்து கொள்ள விரும்பவில்லை. எனவே தான் அனுபவமுள்ள ஒரு விதவைப் பெண்ணை மணந்து கொண்டேன்' என்று பதிலளித்தேன்.
ஆதார நூல்: புகாரி 2967
பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்த சமூகத்தில் குர்ஆன் இறங்கியதற்கு பிறகு அந்த இளைஞனின் மனதில் ஏற்பட்ட மாற்றத்தை பாருங்கள். தனது சுகத்தை விட தனது சகோதரிகளின் சுகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வயது அதிகம் உள்ள ஒரு பெண்ணை மணந்ததை பார்கிறோம். இந்த தாயுள்ளம் அந்த இளைஞனுக்கு வரக் காரணமாயிருந்தது நபிகள் நாயகத்தின் போதனைகளும் குர்ஆனின் வசனங்களும் தான். இவர் மட்டுமல்ல ஒட்டு மொத்த சமூகமும் பெண்களுக்கு கண்ணியத்தை கொடுக்க ஆரம்பித்தது. அந்த பெண்களுக்கு கல்வியையும் கொடுத்தது இஸ்லாம். அவர்களின் உடல் நிலைக்கு தக்க வேலையை தேர்ந்தெடுத்து கொள்வதையும் இஸ்லாம் தடுக்கவில்லை. இஸ்லாம் விதிக்கும் ஒரே நிபந்தனை ஆணும் பெண்ணும் கலந்து கல்விச்சாலைக்கோ வேலைக்கோ போகக் கூடாது என்பதுதான். பெண்களின் பாதுகாப்பைக் கருதியே இத்தகைய சட்டத்தை இஸ்லாம் வகுத்தது.
ஆனால் கம்யூனிஸமோ ஆணும் பெண்ணும் கலந்து படிப்பதையும், வேலைக்குச் செல்வதையும் ஊக்குவித்தது. பெண்ணுக்கு விருப்பமில்லா விட்டாலும் பொருளாதார ஆசையை காட்டி அவர்களை கட்டாயப்படுத்தியது. அவ்வாறு கட்டாயப்படுத்தி வேலைக்கு அனுப்பிய பெண்கள் படும் துயரங்களைத்தான் நாம் மேலே தினத் தந்தியின் செய்தியில் பார்தோம். கட்டுப்பாடான இந்தியாவிலேயே பெண்களுக்கு இத்தகைய கொடுமை என்றால் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் பெண்கள் படும் தொல்லைகளை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
எனவே கம்யுனிஸம் முற்போக்கு பொருள் முதல் வாதம் என்று கூறி பெண்களை படுகுழியில் தள்ளியது. இஸ்லாமோ இறை நம்பிக்கையை ஊட்டி பெண்களுக்கு பாதுகாப்பையும் கல்வியையும் உறுதி செய்து அவர்களின் உடலுக்கு ஏற்ற தகுந்த வேலைகளை கொடுத்து கண்ணியப்படுத்தி வருகிறது.
'சிலரை மற்றும் சிலரை விட இறைவன் மேன்மைபடுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்.ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு'-குர்ஆன் 4:32
விவாகரத்து இஸ்லாத்தில் மிக எளிதாக்கப்பட்டுள்ளது. பிடிக்கவில்லை என்றால் 'தலாக்' என்று சொல்லி மூன்று மாத இடைவெளி விட்டு மூன்று முறை கூறி கண்ணியமாக பிரிந்து விடுங்கள் என்கிறது இஸ்லாம். ஆனால் இந்து மதத்திலும், கிருத்தவ மதத்திலும் கம்யுனிஸத்திலும், விவாகரத்து கடினமாக்கப்பட்டுள்ளது. அவ்வளவு சுலபத்தில் விவாகரத்து கிடைத்து விடாது. ஆனால் இந்தியா மற்றும் உலக நாடுகள் அனைத்திலும் எடுத்துக் கொண்டால் விவாகரத்து குறைவாக நடப்பது இஸ்லாமியரிடத்தில்தான். அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் மிக அதிக அளவில் விவாகரத்து நடப்பதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன. நமது இந்தியாவிலும் படித்த குடும்பங்களில் மிக அதிக அளவு விவாகரத்துகள் நடப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. பணம்... பணம் என்று ஆணும் பெண்ணும் அலைந்ததால் நிம்மதி போய் மனச் சிதைவுக்கு ஆளாகி முடிவில் விவாகரத்தை நாடுகின்றனர். கம்யூனிஸ சித்தாந்தத்தால் சமூகம் அடைந்த கேடுகளில் இதுவும் ஒன்று.
இந்த இடத்திலும் இஸ்லாம் நிமிர்ந்து நிற்கிறது. கம்யூனிஸம் தனது செல்வாக்கை இழந்து நிற்கிறது.
ப.சிதம்பரம் ஒருமுறை சொன்னார், "இருபத்தைந்து வயதுக்குள் ஒருவன் கம்யூனிஸம் பேசவில்லை என்றால் அவனுக்கு இதயமே இல்லை என்று அர்த்தம்; இருபத்தைந்து வயதுக்குப் பிறகும் கம்யூனிஸம் பேசினான் என்றால் அவனுக்கு மூளையே இல்லை என்று அர்த்தம்" என்று. எங்கோ படித்தது...... :-) பொருளாதார புலி ப.சிதம்பரம் சரியாகத்தான் சொல்லியுள்ளாரா என்று செங்கொடிதான் சொல்ல வேண்டும்.
இறைவன் நாடினால் இனியும் எழுதுவேன். நான் எழுதிய மூன்று பதிவுகளுக்கு உரிய பதிலை செங்கொடி கொடுத்து விட்டால் மேற்கொண்டு தொடரலாம்.
Thursday, February 19, 2015
காலத்துக்கு தக்கவாறு கொள்கையை மாற்றும் கம்யூனிஸ்டுகள்! - 2
காலத்துக்கு தக்கவாறு கொள்கையை மாற்றும் கம்யூனிஸ்டுகள்! - 2

மேற்கு வங்க மாநிலத்தின் முன்னால் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியாவை நாம் அறிந்திருப்போம். தனது மாநிலத்தில் தொழில் துறை மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் நேரடி அன்னிய முதலீட்டை கவர்ந்திழுக்கும் நோக்கில் மலேஷியா, இந்தோனேஷியா சென்றார். வெளியுலக பயணத்தைப் பார்த்தவுடன் தான் கம்யூனிஸ்டுகள்" குண்டி சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டு இருப்பது" முதல்வருக்கு விளங்கியது. இந்தோனேஷிய பத்திரிக்கையான 'ஜகார்தா போஸ்ட்' என்ற இதழுக்கு அவர் அளித்த பேட்டியைப் பார்போம்.
'பழைய கொள்கைகளையே பேசி பெருமை பாராட்டிக் கொண்டிருக்கும் வழமையை கம்யூனிஸ்டுகள் கை விட வேண்டும். கொள்கையில் சீர் திருத்தம் கொண்டு வர வேண்டும். மாறி வரும் சூழலுக்கு ஏற்ப புதிய கொள்கைகளை வகுக்க வேண்டும். இல்லாவிட்டால் கம்யூனிஸ்டுகள் அழிந்து போவார்கள்.
மாற்றத்தை விரும்பிதான் எனது மாநிலத்துக்கு அன்னிய முதலீட்டை வெகுவாக அனுமதித்துள்ளேன். சீனாவைப் பாருங்கள். பழைய கம்யுனிஸ கொள்கைகளை பிடித்து தொங்கிக் கொண்டு இருந்திருந்தால் இத்தகைய புரட்சிகரமான மாற்றத்தை அவர்களால் கொண்டு வந்திருக்க முடியாது. எனவே கம்யூனிஸ்டுகள் தங்கள் கொள்கைகளில் மாற்றங்களை புகுத்த வேண்டியது அவசியத்திலும் அவசியம்'
ஆதாரம்:
தினமணி
28-08-2005
மேலே உள்ள கருத்துகள் கருத்து முதல்வாதத்தை வைக்கும் சுவனப்பிரியனின் கருத்தல்ல. பொருள் முதல் வாதத்தை அடிப்படையாக கொண்ட பொதுவுடமைக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான புத்ததேவ் பட்டாச்சாரியாவின் கருத்துக்களே இவை. ஜோதிபாசுவின் ஓய்வுக்குப் பிறகு அவரது இடத்தை நிரப்ப இந்தியாவில் சரியான காம்ரேடு இவர்தான் என்று செங்கொடியின் தலைவர்களால் இனம் காட்டப்பட்டவர். இவரது கருத்துக்கு ஜோதிபாசுவும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
"புதிய உலகின் சிற்பி நாங்களே! இனி உலகை ஆளப் போவது கம்யூனிஸமே" என்று இறுமாப்புடன் பதிவுகள் எழுதி வரும் செங்கொடிகள் சற்று இந்த தலைவர்களின் ஆலோசனைகளை கேட்பது நல்லது. வறட்டுப் பிடிவாதத்தினால்தான் சீனாவில் செங்கொடியை இழந்தீர்கள். ரஷ்யாவிலும் செங்கொடியை இழந்தீர்கள். அதன் தொடர்சியாக ரஷ்யா பல நாடுகளாக பிளவுண்டது. இன்று அந்த நாடுகளில் லெனினின் பெயரையும், ஸ்டாலினின் பெயரையும் உச்சரிக்கக் கூட ஆட்களில்லை. முன்பு உச்சரித்த வாய்களெல்லாம் இன்று நபிகள் நாயகத்தை உச்சரித்து முன்பு செய்த தவறுக்கு பிராயச்சித்தம் தேடிக் கொண்டிருக்கின்றன. ஆப்பானிஸ்தான் முஜாஹித்களிடம் வாங்கிய அடியில் கோமாவில் தள்ளப்பட்டீர்கள். கடைசியில் இந்தியாவில் பொய்யான வாக்குறுதிகளை ஏழைகளிடம் கொடுத்துக் கொண்டு காலத்தை கடத்திக் கொண்டுள்ளீர்கள். "ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் ஆண்டி" என்பது போல் எங்கெங்கோ சுற்றி விட்டு தனது இறுதி மூச்சை இந்தியாவில் இழுத்துக் கொண்டிருக்கிறது கம்யூனிஸம். கோமாவுக்கு சென்றவர்கள் திரும்ப வருவது அரிது என்பதால் செங்கொடியின் முயற்சிகள் விழலுக்கு இரைத்த நீரே! :-)
பொருள் இருப்பவனையும் பொருள் இல்லாதவனையும் பரம்பரை விரோதிகளாக மாற்றி தொழிற் கூடங்களை இழுத்து பூட்ட வைத்து இரண்டு பேரையும் நடுத் தெருவில் விட்டதுதான் நீங்கள் இந்த சமூகத்துக்கு செய்த தொண்டு. இதனை மறுக்க முடியுமா உங்களால்? இந்த உலகம் இயங்க பணக்காரனும் ஏழையும் இருந்தே ஆக வேண்டும். இந்த சாதாரண யதார்த்தத்தைக் கூட சரிவர புரிந்து கொள்ளாத உங்களால் சமூகத்துக்கு விடிவை எப்படி கொடுக்க முடியும்?
கருத்து முதல்வாதத்தை வைத்த இஸ்லாம் கம்யூனிஸ்டுகளுக்கே பாடம் எடுக்கும் நிலையில் இன்று உள்ளது. உழைக்கும் ஏழைக்கு உரிய பங்கை அளித்து வருகிறது. பொருள் உள்ளவனும் பொருள் இல்லாதவனும் எந்த நட்டத்தையும் அடையாமல் சிறந்த வழிமுறையை இஸ்லாம் கட்டாய கடமையாக முஸ்லிம்களுக்கு கட்டளையிடுகிறது. பயிரிடும் நிலம், வசிக்கும் வீடு, அணிந்திருக்கும் நகை, இருப்பில் உள்ள பணம், என்று அனைத்தையும் கணக்கிட்டு அதனை தொழிலாளிக்கு மற்றும் இல்லாதவர்களுக்கு உலக முஸ்லிம்கள் கணக்கிட்டு கொடுத்து வருகின்றனர். சத்தமில்லாத ஆர்பாட்டமில்லாத ஒரு புரட்சி உலகமெங்கும் நடந்து வருகிறது. எனது ஓனரான சவுதியும் அவரது சகோதரரும் வருடா வருடம் கணக்கிட்டு லட்சக் கணக்கான ரியால்களை ஏழைகளுக்கு கொடுத்து வருவதை நான் நேரிடையாக பார்த்துள்ளேன். தற்போது தமிழகத்திலும் இந்த செயலானது தொடங்கப்பட்டு பல ஏழைகளை பணக்காரர்களாக்கியுள்ளது நபிகள் நாயகம் கொண்டு வந்த வழிமுறை. ஏனெனில் இந்த இஸ்லாமிய சட்டங்களானது படைத்த இறைவன் கொடுத்த சட்டங்கள் என்று நம்பியதாலேயே அந்த சவுதிகள் லட்சக்கணக்கான ரியால்களை தானமாக தர முன் வருகின்றனர். மறு உலக வாழ்வில் இதனால் தங்களுக்கு நன்மை கிடைக்கும் என்ற எண்ணம் மேலோங்கியதாலேயே இது சாத்தியப்பட்டது.
அதே நேரம் பொருள் முதல் வாதத்தை முன்வைத்த நாத்திக சித்தாந்தமான கம்யுனிஸம் மனிதனால் உருவாக்கப்பட்டடதால் பல திருத்தங்களை காலத்துக்கு தக்கவாறு மாற்ற வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு மாற்றங்களை கொண்டு வந்தும் உழைப்பாளியின் ஏக்கத்தை உங்கள் கொள்கையால் ஈடு செய்ய முடியவில்லை. இஸ்லாத்துக்கும் கம்யூனிஸத்துக்கும் உள்ள வேறுபாடே இதுதான்.
எனது கேரள நண்பன் ஜார்ஜ் மாத்யூ சில வருடங்கள் முன்பு என்னிடம் தமிழகத்தில் தொழில் தொடங்க எந்த மாவட்டம் சிறந்தது என்று கேட்டான்.
'நீ மலையாளிதானே! ஏன் கேரளாவில் தொழில் தொடங்கக் கூடாது?' என்று நான் கேட்டேன்.
'அங்கே சாதாரண மனிதர்கள் தொழில் தொடங்க முடியாது. நிறைய பணம் வேண்டும். தொழில் தொடங்கி லாபமாக நடந்தால் உடன் கம்யூனிஸ்டுகள் லாபத்தில் பங்கு கேட்டு கொடி பிடிப்பர். கம்யுனிஸ்ட் தலைவர்களுக்கு லஞ்சமாக லட்சக் கணக்கில் பணம் செலுத்த வேண்டும். தவறினால் ஸ்ட்ரைக். எங்கெல்லாம் கம்யூனிஸ்டுகள் அதிகமாக உள்ளனரோ அங்கு தொழில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பே இல்லை. எனவே தான் தமிழகத்தில் முதலீடு செய்யலாம் என்று நினைக்கிறேன்'
என்ன ஒரு சத்தியமான வார்த்தை. ஆச்சரியத்தோடு அவனை பார்த்துக் கொண்டிருந்தேன். ஐந்து நாள் மாநாடு போட்டு விளக்கினாலும் இந்த அளவு தெளிவாக கம்யுனிஸத்தை விளக்கியிருக்க முடியாது. கம்யூனிஸம் வளர்வதால் அந்த சமூகம் எவ்வாறு மாறிப் போகும் என்பதற்கு ஜார்ஜ் மேத்யூ சொன்ன இந்த வரிகளே சிறந்த உதாரணம்.
இன்றைக்கு இது போதும் என்று நினைக்கிறேன். இனிவரும் நாட்களிலும் செங்கொடியின் உளரல்களை அடித்து, துவைத்து காயப் போடும் பணி அவ்வப்போது தொடரும். :-)

செத்த கம்யூனிஸத்துக்கு உயிர் கொடுக்க நினைக்கும் செங்கொடி! -1

(கம்யுனிஸ கொள்கையில் வெறுப்புற்ற ஹங்கேரிய மக்கள் ஸ்டாலினின் சிலைக்கு கொடுத்த மரியாதையே இது)
//மதவாதி என்பதற்கான இலக்கணத்தை கொஞ்சமும் விட்டு விலகாமல் கடைப்பிடிக்கிறார் சுவனப்பிரியன். விசயத்தை குழப்புவது, தெளிவாகத் தெரியும் உண்மைகளை மறுப்பது, சுற்றி வளைப்பது, எது பேசுபொருளோ அதைத் தவிர மற்றெல்லாவற்றையும் பேசுவது, யதார்த்தத்தை பரிசீலிக்காமல் தான் சொல்வது மட்டுமே சரி என குருட்டுத்தனமாக வாதிடுவது இவைகளெல்லாம் மதிவாதியின் இலக்கணம்.//
மதவாதியை உங்களை அறியாமலேயே மதிவாதி அதாவது சிந்திக்கத் தெரிந்தவன் என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி. உங்களையும் அறியாமல் ஆத்திகத்தின் பக்கம் வர ஆரம்பித்துள்ளீர்கள் என்பதையே இந்த தட்டச்சு பிழை காட்டுகிறது. :-)
//பதிவர் சுவனப்பிரியனை நான் கம்யூனிஸ்டாக மாற்றிக் காட்டுகிறேன். இது சவால். ஏற்றுக் கொள்ளும் துணிவு இருக்கிறதா பதிவர் சுவனப்பிரியனிடம்.//
ஏற்கனவே வலுவானதொரு கொள்கையை கொண்டிருக்கும் நான், கம்யூனிஸத்தையோ அல்லது முதலாளித்துவத்தையோ அல்லது சோஷயலிசத்தையோ நாத்திகத்தையோ ஏற்றுக்கொள்ள எந்த தேவையும் இல்லை. இஸ்லாத்தில் குறை இருந்தால் அல்லவா மற்ற இடங்களை தேடி நான் ஓட வேண்டும்? இஸ்லாத்தில் கொஞ்சம், முதலாளித்துவத்தில் கொஞ்சம், நாத்திகத்தில் கொஞ்சம் சோஸலிஷத்தில் கொஞ்சம் என்று எடுத்து கார்ல் மார்க்ஸ் செங்கொடிக்கு கொடுத்த ஒரு நாத்திக சித்தாந்தமே இந்த கம்யுனிஸம். எந்த ஒரு இஸமும் மக்களால் பின் பற்றத்தக்க ஒன்றாக இருக்க வேண்டும். கம்யுனிஸ கொள்கைகளை அதனை உருவாக்கிய கம்யூனிஸ்டுகளே பின்பற்றுவதில்லை.
"மகளே ஸ்வெத்லானா! உடலோடு ஒட்டிக்கொள்ளும் படியாக ஏன் ஆடைகள் அணிகிறாய்? வளர்ந்த பெண்தானே! தொளதொளப்பான ஆடைகளை அணிய பழகிக்கொள். ஒரு போல்ஷ்விக் பெண்ணுக்கு கண்ணியம்தான் முக்கியம்!"
நூல்: சர்வம் ஸ்டாலின் மயம், என்ற புத்தகத்தில் பக்கம்;135
தனது மகளுக்கு நம்ம ஸ்டாலின் அண்ணாச்சி எழுதிய கடிதமே நாம் மேலே பார்பது. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் அடிப்படையில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நிறைய வித்தியாசம் உண்டு. அறிவியலும் ஒத்துக் கொள்கிறது. இஸ்லாமும் ஒத்துக் கொள்கிறது. ஆனால் கம்யூனிஸ்டுகள் ஒத்துக் கொள்வதில்லை. இதை உணராத காரணத்தினாலேயே கம்யூனிஸ்டுகள் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து பெண்களையும் தொழிற்சாகைளுக்கு இழுத்து வந்து கட்டாய வேலை வாங்கினர். கம்யுனிஸ வெறியில் ஏதோ சில ஆண்டுகள் இவர்களால் தாக்குப் பிடிக்க முடிந்தது. இந்த திட்டம் முடிவில் தோல்வியில் முடிந்தது. குடும்ப வாழ்வு சிதைந்து பல குழந்தைகள் பராமரிப்பின்றி மனநோயாளிகளாக மாறியதைத்தான் பார்தோம். ரஷ்யா மக்களே கம்யூனிஸத்தை குப்பை கூடையில் தூக்கி எறிந்தனர். ஸ்டாலின் சிலையை உடைத்து அதே கம்யுனிஸ்டுகள் குப்பை கூளத்தில் தள்ளி விட்டுருப்பதைத்தான் இங்கு நாம் பார்கிறோம். ரஷ்யாவிலிருந்து பிரிந்து சென்ற உஸ்பெஸ்கிஸ்தான் இன்று கம்யூனிஸத்தை தூர எறிந்து விட்டு இஸ்லாத்தை கையில் எடுத்துள்ளது. செசன்யாவிலும் கம்யுனிஸம் போய் இஸ்லாம் ஒவ்வொரு வீட்டையும் ஆள்கிறது.

(போன மாதம் நபிகள் நாயகத்தின் கார்ட்டூனுக்கு எதிராக சார்ளி ஹெப்டோ பத்திரிக்கையை எதிர்த்து கம்யூனிஸ செசன்யாவில் திரண்ட முஸ்லிம்களில் ஒரு பகுதியினரே இவர்கள். கம்யூனிஸம் தோன்றிய நாடுகளிலேயே அதனை சவக்குழிக்கு அனுப்புவதில் முன்னணியில் உள்ளது முஸ்லிம்களே))
ஆணும் பெண்ணும் சமம்தான் என்று சொன்ன ஸ்டாலின் தனது மகளை மட்டும் இஸ்லாமியர்களைப் போல் கண்ணியமாக உடை அணிய ஆர்வமூட்டுகிறார். தனக்கு ஒரு நியாயம் ஊருக்கு ஒரு நியாயம் என்று வாழ்ந்ததனாலேயே கம்யூனிஸம் நமது கண் முன்னாலேயே கரைந்து கொண்டிருக்கிறது.
அடுத்து ஆணும் பெண்ணும் சரி சமமாக உழைக்க வேண்டும் என்று கூறும் செங்கொடியும் மற்ற கம்யூனிஸ்டுகளும் தங்கள் மனைவியை அவ்வாறுதான் நடத்துகிறார்களா? தமிழகத்தில் உள்ள வலது, இடது, உல்ஃபா, மாவோ என்று எத்தனை கம்யுனிஸ்டுகள் உள்ளனரோ அவர்களில் 80 சதவீதமான நபர்கள் தங்கள் மனைவியை குடும்ப தலைவியாகத்தான் நடத்துகின்றனர். நன்றாக சமைக்க வேண்டும்: வீட்டை நன்கு பராமரிக்க வேண்டும்: அழகிய குழந்தைகளை பெற்றுத் தர வேண்டும்: அந்த குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டும். அந்த குழந்தைகளுக்கு கல்வியை போதிக்க வேண்டும். வயதான பெற்றோரைக் கவனித்துக் கொள்ள வேண்டும். உழைத்து களைத்து வரும் கணவனுக்கு இல்லற சுகத்தை தர வேண்டும். கற்பை பேணிக் கொள்ள வேண்டும். இதுதான் கம்யூனிஸ்டுகளின் வீடுகளிலும் பெரும்பாலும் நடக்கிறது. ஊருக்கு உபதேசம் செய்யும் இவர்கள் நடைமுறையில் தாங்கள் மிக கவனமாகவே இருந்து கொள்கின்றனர். :-)
அடுத்து கம்யுனிஸ கொள்கைகள் எங்கெல்லாம் போகிறதோ அதனை ஏற்காத மக்களை வன்முறையால் கொன்றொழிப்பதே இவர்கள் வேலை. கார்ல்மார்க்ஸ், எஞ்செல்ஸ், ரோஸா லக்ஸம்பர்க், லெனின், ட்ராட்ஸ்கி, மாவோ, ஸ்டாலின், போல்போட் என்று நீளும் வரிசையில் உள்ள அனைவருமே வன்முறை மூலம் அதிகாரத்தை கைப்பற்றுவதை முக்கியமானதொரு அடித்தள கொள்கையாக கொண்டவர்கள். நான் உயரிய நோக்கத்திற்காக கொல்கிறேன் என்றுதான் எல்லா வன்முறையாளர்களும் கூறுகிறார்கள். :-)
திபெத்தில் லட்சக்கணக்கான பவுத்தர்களையும் உய்குர் மாகாணத்தில் லட்சக்கணக்கில் முஸ்லிம்களையும் கட்டாயப்படுத்தி கம்யூனிஸத்தை திணிப்பதும் உடன்படாதவர்களை கொன்று ஒழிப்பதுவுமே கடந்த கால கம்யூனிஸ வரலாறு. கம்யூனிஸ்ட் என்று தங்களை கூறிக்கொள்ளும் இவர்களிலிருந்து, நேபாள மாவோயிஸ்டுகளிலிருந்து, பெங்கால், ஜார்க்கண்ட், பிகார், ஆந்திரா தமிழ்நாடு என்று பரவும் நக்ஸல்பாரிகளிலிருந்து, உல்பா கம்யூனிஸ்டுகளிலிருந்து, வடகிழக்கு பயங்கரவாதிகளிலிருந்து நடுத்தெருவில் சந்தையில் என்று குண்டுவைக்கும் பயங்கரவாதிகள், வன்முறையையே தங்கள் வாழ்க்கையாக கொண்டுள்ளனர். கம்யுனிஸ வரலாறுகளை எங்கு புரட்டினாலும் அங்கு ரத்தக் கறையைத்தான் முதலில் நாம் பார்கிறோம். ஆட்சியை பிடிப்பது வரை ஏழைகளின் பக்கம் நிற்பர். ஆட்சியில் அமர்ந்து விட்டால் முதலாளிகளின் பக்கம் சாய்ந்து விடுவர். இந்த இரட்டை வேடத்தினால்தான் உலக மக்கள் கம்யூனிஸத்தை தூக்கி எறிந்தது.
உடனே நீங்கள் ஐஎஸ்ஐஎஸ்ஐ உதாரணமாக்கி இஸ்லாத்தில் இல்லையா என்று கேட்கலாம். இந்த தீவிரவாதிகளை உருவாக்கியதே அமெரிக்க ஆயுத வியாபாரிகள்தான். முகமூடிகளை கழற்றினால் அவர்களில் பெரும்பாலானோர் ஐரோப்பியர்களாகவும், அமெரிக்கர்களாகவும், இஸ்ரேலியர்களாகவும் இருப்பர். அமெரிக்கா நினைத்தால் ஒரே நாளில் ஐஎஸ்ஐஎஸ்ஐ ஒடுக்கி விடலாம். ஆனால் அரபு நாடுகளை மிரட்டி வைக்க அதற்கு ஐஎஸ்ஐஎஸ் தேவைப்படுகிறது. ஒபாமா கட்சியை நடத்த அமெரிக்க ஆயுத வியாபாரிகள் பெரும் பணத்தை தருகின்றனர். அவர்களை ஒபாமா எந்த நாளும் பகைத்துக் கொள்ள மாட்டார். அமெரிக்காவின் தேவை முடியும் வரை ஐஎஸ்ஐஎஸ் தினமும் கழுத்தறுப்பு வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கும். :-)
அடுத்து தீண்டாமையை எடுத்துக் கொள்வோம். நமது இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக கம்யுனிஸம் இருந்தும் எந்த இடத்திலும் அவர்களால் தீண்டாமையை ஒழிக்க முடியவில்லை. தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் அநேக கிராமங்களில் கம்யூனிஸ கொடி பறப்பதை நான் பார்த்திருக்கிறேன். இந்த அளவு அந்த ஒடுக்கப்பட்ட மக்கள் கம்யூனிஸத்தை விரும்பினாலும் அவர்களுக்கு இன விடுதலையை கம்யூனிஸத்தால் தர இயலவில்லை.
முன்பு மீனாட்சிபுரமாக இருந்து இன்று ரஹ்மத் நகராக மாறியுள்ள கிராமத்துக்கு சில ஆண்டுகள் முன்பு பிபிசி குழு கள ஆய்வுக்கு சென்றிருந்தது. அதனை மேற்கொண்டு பார்போம்.
தேவர் இனத்தவரின் சொல்ல முடியாத அடக்கு முறையினால் வேறு வழி இன்றி இஸ்லாத்தை நோக்கி இந்த மக்கள் சென்றனர். தற்போது இந்த மக்களின் வாழ்வில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்று கண்டு வர எங்களது குழு மீனாட்சிபுரத்துக்கு சென்றது.
'மதம் மாறியதைப் பற்றி உங்களின் கருத்து என்ன?'
'நீங்க சொல்லித்தான் நாங்க மதம் மாறின ஞாபகமே வருது. அந்த அளவு இஸ்லாத்தில் தற்போது ஐக்கியமாகி உள்ளோம். எனது பிள்ளைகள் இந்த கேள்விக்கே இடமில்லாமல் இஸ்லாமிய சமூகத்தில் இரண்டற கலந்து விட்டனர். நாயக்கர் சாதி, ஆசாரி போன்ற சாதியினர் கூட எங்களை மாமன், மச்சான் என்று உரிமையோடு தற்போது கூப்பிடுகிறார்கள். மதம் மாறுவதற்கு முன்பு இந்த நிலை இல்லை.'.
'மதம் மாறியதாலே சமூக அந்தஸ்து உங்களுக்கு கிடைச்சிடுச்சா?'
'நிறையவே நாங்கள் மாற்றங்களை உணருகிறோம். முன்பெல்லாம் 8 வயசு 10 வயசு பசங்களெல்லாம் 'டேய் சுப்பையா! டேய் மாடா! இங்க வாடா' என்று தான் ஏளனமாக கூப்பிட்டனர். இன்று அந்த நிலை முற்றாக மாறி எங்களை மரியாதையாக நடத்துகின்றனர்.'
'வெளியூர்களில் உங்களின் நிலைமை தற்போது என்ன?'
'எந்த பிரச்னையும் இல்லாமல் தற்போது இருக்கிறோம். உள்ளூரில்தான் சிலருக்கு நாங்கள் தாழ்த்தப்பட்ட சாதியிலிருந்து மதம் மாறியதாக தெரியும். வெளியூர்களில் எங்களின் பெயரை கேட்டவுடனேயே தானாக சமூக அந்தஸ்து கிடைத்து விடுகிறது. எந்த ஹோட்டலுக்கு போனாலும் சரி சமமாக உட்கார்ந்து சாப்பிடுகிறோம். யாரும் எங்களை ஏளனமாக பார்ப்பதில்லை. பிரச்னையும் கொடுப்பதில்லை. முருகேஷனை 'முருகேஷா இங்க வாடா' என்று கூப்பிடுபவர்கள் மதம் மாறிய அன்வர் அலியை 'வாங்க அன்வர் அலி' என்று கூப்பிடுகின்றனர். இதற்கு என்ன சொல்கிறீர்கள்?'
பல வருடங்களுக்கு முன்பு மதம் மாறிய ஒருவர் அன்று கொடுத்த பேட்டி:
ஆசிரியர்: நீங்க படிச்சவங்கன்னு சொன்னீங்க; அதுவரைக்கும் படிச்சிருக்கீங்க?
உமர்செரீப்: பி.ஏ. வரை படிச்சிருக்கேன்.
ஆசிரியர்: எந்தக் காலேஜில்?
உமர்செரீப்: ஸ்ரீவைகுண்டம் காலேஜ்ல.
ஆசிரியர்: சரி, இவ்வளவு படிச்சிருக்கீங்க. உங்களுக்கு சலுகைகள்லாம் கிடைச்சிருக்குமே!
உமர்செரீப்: ஆமா கிடைச்சது.
ஆசிரியர்: உங்களுக்கு தாழ்த்தப்பட்டவங்க அப்படீங்கறதனாலதான் இந்த சலுகையெல்லாம் கிடைச்சது. அப்போ இந்தச் சலுகையெல்லாம் கிடைக்காதுன்னு தெரிஞ்சு தானே மாறுனீங்க?
உமர்செரீப்: ஆமா! தெரிஞ்சு தான் மாறுனோம். சலுகை கிடைக்காட்டிலும் பரவாயில்லை தாழ்த்தப்ப்ட்டவன் என்கிற முத்திரையில்லாம இருந்தால் போதும் என்று மாறினோம்.
ஆசிரியர்: இதுக்கு முன்னால் இந்தக் கொடுமைகள்லாம் அனுபவிச்சுக்கிட்டுதானே இருந்தீங்க? இப்ப எப்படி திடீர்னு இந்த முடிவுக்கு வந்தீங்க?
உமர்: நாங்கள் கொடுமை அனுபவிச்சாலும் பரவாயில்லை எங்க வருங்கால சந்ததியாவது நல்லா இருக்கட்டுமென்றுதான் இந்த முடிவுக்கு வந்தோம். வருங்கால சந்ததி மற்றவர்களோடு சரி சமமாக மானத்தோட இருக்கணும்னுதான் இந்த முடிவுக்கு வந்தோம்.
நன்றி:
பிபிசி தமிழோசை
லெனினின் கருத்துக்களும், ஸ்டாலினின் கருத்துக்களும் சாதிக்காதவைகளை நபிகள் நாயகம் கொண்டு வந்த ஏக இறைக் கொள்கை தமிழகத்தில் சாதித்துக் காட்டியுள்ளது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது என்பது போல எழுதி வைத்த கம்யூனிஸ சட்டங்களை விட அன்றாட வாழ்வில் நடைமுறைப் படுத்தி அதில் வெற்றியும் கண்ட இஸ்லாமிய கொள்கையே சிறந்தது என்பது என் வாதம். இஸ்லாம் இனியும் தமிழகத்தில் வீறு கொண்டு எழும். சமாதியாகி விட்ட கம்யுனிஸ கொள்கை இனியும் துளிர்காது.
உங்களை விட அதிக கொள்கை பிடிப்புடன் இருந்து நாத்திகம், கம்யூனிஸம், பெரியாரிஸம், புத்திஸம் என்று எங்கெங்கோ அலைந்து திரிந்து கடைசியில் இஸ்லாத்தில் சரணடைந்தவர்தான் பெரியார் தாசன். அது போன்று உங்களுக்கும் ஒரு நாள் வரலாம்.
ஆனால் நீங்கள் முயற்சி செய்யுங்கள். நம்பிக்கையில்தானே வாழ்க்கையே ஓடிக் கொண்டிருக்கிறது. :-)
இன்னும் வரும்......
Saturday, June 09, 2012
கேரளாவில் அழிந்து கொண்டிருக்கும் அமைதி!

'தொழிலாளர்கள் நலன் குறித்து காரல் மாக்ஸ் சொன்னாஹோ! லெனின் சொன்னாஹோ! ஸ்டாலின் சொன்னாஹோ'
'எல்லாம் நான் நல்லாயிருக்கணும் என்று தானே சொன்னாஹோ! அதுக்கு முதல்ல நான் உயிரோட இருக்கணுமுல்ல...!அதுக்கு ஒரு வழியை சொல்லுங்கப்பு...'
-----------------------------------------
நான் கேரளாவைப் பற்றி பல நேரங்களில் ஆச்சரியமாக சிந்திப்பதுண்டு. அவர்களின் படிப்பு. அவர்களின் சம்பாத்திய திறன். பணம் சம்பாதிப்பதற்காக மற்றவர்களையும் முடிந்தால் குழி பறிப்பது: மூன்று மதங்களை சேர்ந்தவர்களும் 'நாங்கள் மலையாளிகள்' என்று ஒன்று கூடுதல்: அந்த நாட்டின் இயற்கை அழகு: என்று பல முறை கேரளாவைப் பற்றி சிந்தித்த வண்ணம் இருப்பேன்.
120 வருடங்களுக்கு முன்னால், சுவாமி விவேகானந்தர், திருவாங்கூர் சமஸ்தானத்தின் வழியே செல்லும்போது, இங்கே இருந்த ஜாதி ஏற்றத்தாழ்வை கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார். சுயமாக தங்களுக்குத்தாங்களே பட்டம் சூட்டிக்கொண்ட “மேல்ஜாதிகள்” பிற்பட்ட ஜாதிகள் மீது நடத்தும் கொடுமையை கண்டு கேரளாவுக்கு ஒரு அடைமொழி கொடுத்தார். அது “பைத்தியக்கார விடுதி” என்பது. அவர் சொன்னதை மெய்ப்பிக்கும் வண்ணமாக தற்போது கேரளா அமைதியிழந்து தவிக்கிறது. தற்கொலைகளில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக வந்திருப்பது அந்த மக்களிடையே அமைதி எந்த அளவு பறி போயிருக்கிறது என்பதை தெளிவாக்குகிறது.
கம்யூனிஸ்ட் தோழர் மணி அவர்கள் எந்த அளவு தோழமையோடு தனது கட்சி விசுவாசத்தை காட்டுகிறார் என்பதை இந்த காணொளியைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
“ஆமாம். நாங்கள்தான் சிபிஎம் எதிரிகளை கொன்றோம். நாங்கள் சுட்டோம். கத்தியால் குத்தினோம். அடித்தே சாகடித்தோம். கட்சி எதிரிகளை பற்றி லிஸ்டு போட்டு ஒவ்வொன்றாக தீர்த்து கட்டினோம். யார் யாரெல்லாம் கொல்லப்பட வேண்டுமோ அவர்களை எல்லாம் சிபிஎம் கட்சி கொல்லும்” என்று எம் எம் மணி முழங்குகிறார்..
அய்யப்பதாஸ் என்ற சிபிஎம் கட்சி உறுப்பினரில் ஒருவர் கொல்லப்பட்டதற்கு பழி வாங்க பாலு என்ற காங்கிரஸ் ஆளை கொன்றது நாங்களே என்று எம் எம் மணி கூறினார். 13 பேர்களை கொண்ட எதிரிகள் லிஸ்டிலிருந்து ஒருவர் சுட்டுகொல்லப்பட்டார், ஒருவர் குத்தி கொல்லப்பட்டார், மற்றொருவர் அடித்தே கொல்லப்பட்டார்.

நினைவில் வைத்துகொள்ளுங்கள். கொலை செய்வதற்கு காசு வாங்கிகொண்டு கொலை செய்தவன் போலீஸிடம் மூடிய கதவுகளுக்கு பின்னே கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம் அல்ல. காங்கிரஸ் சிபிஎம் கட்சி மீது வைத்த குற்றச்சாட்டும் அல்ல. கம்யூனிஸ்டான பினாரயி விஜயனின் தீவிர ஆதரவாளர் ஒருவரால் மேடையில் செய்யப்பட்ட பகிரங்க பேச்சு.
சிபிஎமை விட்டு வெளியேறிய டி பி சந்திரசேகரனை கொலை செய்தது எந்த அளவுக்கு அழுகியிருக்கிறது என்பதை இந்த வெறித்தனமான பேச்சுகாட்டியிருக்கிறது. ஆகவே, மணி அதனை விளக்கியது யாருக்கும் ஆச்சரியமாக இல்லை. 1980களில் அரசியல் எதிரிகளை தீர்த்துக்கட்டியதை சுட்டிக்காட்டி, ’சிபிஎம்முக்கு துரோகம் செய்த’ சந்திரசேகரனை கொன்றதை நியாயப்படுத்தியிருக்கிறார்.
ஒரு நாட்டில் கட்டுங்கடங்காத சுதந்திரம் இருந்தால் மேடைப் பேச்சு எப்படி இருக்கும் என்பதற்கு மணி அவர்களின் பேச்சே ஒரு உதாரணம். இதை எப்படி அரசு அனுமதித்தது? காவல் துறை இவருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? நமது நாட்டின் ஸ்திர தன்மையை விரும்பும் அனைவரும் இது போன்ற வன்முறைப் பேச்சுக்களை முளையிலேயே கிள்ளி எறிய கட்சி வேறுபாடு இன்றி ஒன்றிணைய வேண்டும்.
அரசியல் சீர்திருத்தத்துக்கு முன்னோடியாக, முன்னாள் முதலமைச்சர் வி.எஸ் அச்சுதானந்தன் பகிரங்கமாக மணிக்கு எதிராக வெளிவந்திருக்கிறார். டெல்லியில் இருக்கும் கட்சி தலைமைக்கு இப்படிப்பட்ட செயல்களை நியாயப்படுத்தும் ஒழுக்கமுறையை கேள்வி கேட்டு கடிதம் எழுதியிருக்கிறார். ஜூன் இரண்டாம் வாரத்தில், இதன் மீது ஏகேஜி பவனில் விவாதம் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
பினாரயி விஜயனின் தீவிர ஆதரவாளராக இருக்கும் மணி, இறந்த டிபி சந்திரசேகரன் மரண ஊர்வலத்தில் கலந்துகொண்டதற்காக வி.எஸ் அச்சுதானந்தனை விமர்சித்தார். இரங்கல் கூட்டத்தில் கலந்து கொள்வதிலும் கட்சி விசுவாசம் பார்க்க வேண்டுமா? கட்சியை விட்டு விலகுபவர்கள் எப்போதுமே நல்ல கம்யூனிஸ்டாக இருக்கமுடியாது என்று வேறு அங்கலாய்க்கிறார். ஒரு காலத்தில் எம் எம் மணி அச்சுதானந்தன் பக்கத்தில் இருந்தவர்தான்.
அக்டோபர் 22, 2006இல் தலசேரியில் முகம்மது பைஸல் என்பவர் சிபிம்மிலிருந்து விலகிய சில நாட்களிலேயே கொலை செய்யப்பட்டார். ஒரு அமைப்பிலிருந்து விலகுவது என்பது கொலை செய்யும் அளவுக்கு இமாலய தவறா என்பதை கம்யூனிஸ ஆதரவாளர்கள்தான் விளக்க வேண்டும். CBI இந்த கொலையில் கரயி ராஜன் என்ற சிபிஎம் கன்னூர் மாவட்ட கமிட்டி உறுப்பினரும், திருவாங்காடு லோக்கல் கமிட்டி உறுப்பினர் கரயி சந்திரசேகரனும் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்று கூறுகிறது.
மேற்குவங்காளத்தில் 20000 பேர்கள் அரசியல் காரணங்களுக்காக கொல்லப்பட்டார்கள் என்று மத்திய அரசாங்கம் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் கொல்லப்பட்டது கம்யூனிஸ்டுகள் ஆட்சியிலிருந்த முப்பதாண்டு காலத்தில். கேரளாவில் 200 பேர்கள் அரசியல் காரணங்களுக்காக கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. கண்ணூரில் சிபிஎம்முக்கும் ஆர்.எஸ்.எஸுக்கும் முடிவே இல்லாமல் நடந்து வரும் பலிக்கு பலி கொலைகளால் அந்த மாவட்டமே ரத்தத்தால் சிவந்து கிடக்கிறது.
---------------------------------
மோகன்லால் தனது வலைப் பக்கத்தில் எழுதியதை பார்ப்போம்.
கோழிக்கோடு:கேரளாவில் வசிப்பதற்கே தனக்கு பயமாக இருப்பதாகவும், அம்மாநிலம், பைத்தியக்காரர்களின் வாழ்விடமாக மாறி வருகிறதோ என, பிரபல மலையாள நடிகர் மோகன்லால் அச்சம் தெரிவித்துள்ளார்.
கோழிக்கோடு அருகே ஒஞ்சியம் பகுதியைச் சேர்ந்த புரட்சிகர மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த, டி.பி.சந்திரசேகரன் என்பவர் நடுரோட்டில் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம், மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.இதனால், மே 21 ல், தன், 52வது பிறந்த நாளை மோகன்லால் கொண்டாடவில்லை.
அதற்கு அவர், "த கம்ப்ளீட் ஆக்டர்' என்ற வலை தளத்தில், தன் கைப்பட எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: "எனக்கு ஒரு கஷ்டம் வந்தால், என் தாயின் மனது துடிப்பதை என்னால் உணரமுடியும். சிறிய காயம்பட்டாலும், துடித்துப்போகும் என் தாயைப் போலத்தானே, உடலில் பல வெட்டுக்காயங்களை பெற்று கொலையான சந்திரசேகரனின் தாயின் மனதும் துடித்துப் போயிருக்கும்.
அந்தத் தாயின் கண்ணீர் கடலில், என் பிறந்தநாள் கொண்டாட்டம் மூழ்கி விட்டது. சந்திரசேகருடன் எனக்கு பழக்கமில்லை. இருந்தாலும், அவர் தற்போது உயிருடன் இருந்திருந்தால், கிட்டத்தட்ட என்னுடைய வயது தான் அவருக்கும் இருந்திருக்கும். அவருடைய தாய்க்கும் எனது தாயின் வயது தான் இருக்கும்.கொலை செய்ய தூண்டுபவர்களும், கொலை செய்பவர்களும் அதிகரித்து வரும் கேரளாவில் வசிப்பதற்கே எனக்கு தயக்கமாகவும், அச்சமாகவும் உள்ளது. பைத்தியக்காரர்களின் மாநிலமாக, கேரளா மாறி வருகிறதோ என, எண்ணத் தோன்றுகிறது". இவ்வாறு மோகன்லால் வலை தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொண்டன் கட்சி சொல்லுவதற்கு தனது உடலையும் ஆன்மாவையும் அடிமையாக்கி கொண்டிருக்கிறான். கட்சியின் ஆணைக்கு முன்பு மனிதநேயம் கரைந்துவிடுகிறது. கூடவே, மிகவும் ஆழகாக சமூகம் அரசியல் படுத்தப்பட்டிருப்பதும், அரசாங்கத்தின் ஒவ்வொரு முகத்திலும் அரசியலே ஆணை செலுத்துவதும் முக்கிய காரணங்களாகின்றன.
தொழிலளர்களின் நலனுக்காக உண்டாக்கப்பட்ட இந்த உன்னத இயக்கம் அதன் முகவரி இழந்து வன்முறைக்கு துணை போகும் ஒரு இயக்கமாக பரிணமித்துள்ளது. கம்யூனிஸ்ட் தோழர்கள் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளும் கால கட்டத்தில் இருக்கின்றனர். இந்த நண்பர்களால் பல நன்மைகள் உழைக்கும் வர்க்கத்துக்கு இன்று வரை கிடைத்து வருவதை மறுக்க முடியாது. அந்த நல்ல நோக்கம் சிதைந்து விடக் கூடாதே என்பதுதான் நமது ஆதங்கமும்.
Labels:
அரசியல்,
இந்தியா,
கம்யூனிஸம்,
கார்ட்டூன்கள்,
சமூகம்
Subscribe to:
Posts (Atom)