Followers

Showing posts with label திருக்குறள். Show all posts
Showing posts with label திருக்குறள். Show all posts

Sunday, August 09, 2015

திருவள்ளுவர் நாத்திகரா? ஆத்திகரா? இந்துவா? இஸ்லாமியரா?

ஒரு வடமாநிலத்துக்காரர் ஹிந்தியைத் தாய்மொழியாகக்கொண்டிருப்பவரான தருண் விஜய் ஒரு பி ஜே பி எம் பி. ஆர் எஸ் எஸ் பத்திரிக்கையான அபசர்வை பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர். இவர் தமிழைப்படித்திருக்கிறார். எல்லாரிடமும் வள்ளுவர் இந்து என்றும் தமிழரின் தாய்மதம் இந்துவே என்றும் பரப்புரை செய்து வருகிறார்.இராஜ இராஜ சோழன் வைதீகமதத்தை தழைக்கச்செய்தவன் என்று ஆர் எஸ் எஸ்காரர்கள் விழா எடுக்கிறார்கள்.

எனவே வள்ளுவர் இந்து என்று நிலைநாட்டுவது இன்றைய இந்துத்வாக் கொள்கையாகும். எனவே ஓர் அரிசோனன், இராமா பாண்டியன் போன்றோர் வள்ளுவரை ஓரிறைக்கொள்கையுடையோராக காட்டினால் இசுலாமியர் போலிருக்கிறதே என்று பயப்படுகிறார்கள். தமிழர்களில் இந்துக்களுக்கே அதுவும் வைதீக இந்துக்களுக்கே வள்ளுவர் என்பதே இவர்கள் கொள்கை.

பாவம் வள்ளுவரின் நிலைமை அரசியல் பகடைகாயாகிவிட்டது....


தமிழன் எதையும் செய்து சிரிப்பு மூட்டட்டும். மாலை போடட்டும் இல்லை மாலையை எடுக்கட்டும்.

ஆனால் வள்ளுவரை ஏன் வடவனுக்கு கொடுத்து இந்துத்வா சிறைக்கூண்டில் அடைக்க வேண்டும். நாளை இந்து என்று மட்டும் சொல்லி நிற்கமாட்டான் அவன். நாங்கதான் தமிழனுக்கு எல்லாமே சொல்லித்தந்தோம். கூமுட்டைப்பயலுக என்றால் சிரிக்கலாமே! இந்துத்வாவுக்கு மானத்தை இழக்கக்கூடாது. என்னவென்றாலும் இங்கேயே அடித்துக்கொள்ளுங்கள்.ஒன்றும் குடிமுழுகாது. ஆனால், மூன்றாம் நபரை உள்ளே விடாதீர்கள். வள்ளுவர் உங்கள் சொத்து. மற்றவனுக்குக் கோட்டை விடாதீர்கள். இன்றைக்கு வள்ளூவர் இந்து என்பான். நாளை அவர் ஹிந்திக்காரர் என்பான். போதுமா?


No he is not an atheist. அவர் நாத்திகரென்று சொல்ல அவர் கடவுள் மறுப்பு என்று எதையும் எழுதவில்லை.அவர் என்னைப்போல என்று நான் நினைக்கிறேன். அதாவது கடவுள் நம்பிக்கை உடைய நாங்கள், கடவுள் பெயரால் அரங்கேறும் அயோக்கியத்தனங்களை எதிர்க்கிறோம். மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின் என்கிறோம். மததத்தைக்காட்டி மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் சண்டாளர்களைக்கண்டு கொதிக்கிறோம். இந்தசண்டாளர்களை வளரவிட்டு உழைப்போரின் உணவைப்பறிக்கும் கூட்டத்தை ஒன்று செய்யாமல் இருக்கிறாயா என்று இறைவனுக்கே சாபம் விடுகிறோம். இப்படி மக்களை அலையவிட்ட நீயும் அலைந்து கெடுவாய என்று இறைவனைப்பழிக்கிறோம் (இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்.)

மக்களிடையே உயர்ந்தோர், தாழ்ந்தோர் தீண்ட்படாதார் என்று பிறப்பிலேயே எல்லாம் இருக்கிறது. அதைச்செய்தவன் ஆண்டவன் என்று ஊத்தக்கதை விட்டு ஊரை ஏமாற்றுவோரைப்பார்த்து. பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையால் என்கிறோம். மனந்ந்தூயமை செயல் தூய்மையிருந்தால் போதும் இறைவன் வேறெதையும் விரும்புவதில்லை என்று மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல் நீர பெற என்கிறோம். அறத்தால் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல என்று டுபாக்கூர் ஆசாமிகளை எச்சரிக்கிறோம் ;அதே சமயம், இறைவன் உண்டு. கற்றதாலாய பயன் அவனின் திருவடி தொழுதலே என்கிறோம்.

ஆக, வள்ளுவர் ஒரு கடவுள் நம்பிக்கையாளர். ஆனால் அந்நம்பிக்கை மக்களுக்குப் பலனைத் தரவேண்டுமென்று நம்புகிறவர். மக்களுக்கு நன்மையில் என்றால் அவ்விறை நம்பிக்கை தேவையில்லை.

-BS

Wednesday, July 15, 2015

திருக்குறளின் கடவுள் வாழ்த்து இஸ்லாத்தை நோக்கி செல்கிறதே!

நீங்கள் திருவள்ளுவரை இந்து என்று சொல்கிறீர்கள். வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் இசுலாமும் கிருத்துவமும் தமிழ்நாட்டில் நுழையவில்லை. உண்மைதான். ஆனால், இவ்விரு மதத்தவரும் கிருத்துவ மதக்கொள்கைகள் காணப்படுவதாகச் சொல்லலாம். அல்லது ஓரிறைக் கொள்கையைக் காட்டலாம்.

அதே சமயம், நீங்கள் வள்ளுவரை இந்துவாக்க முனைவது அவரைச் சமணர்கள் தங்கள் ஆச்சாரியராகக் கொண்டு வழிபடுவது பொய் என்று சொல்லத்தான். வள்ளுவர் கொந்தகொந்த சமணாச்சாரியாராக வழிபடப்ப‌டுகிறார் தமிழ்நாட்டில் என்பது உண்மை என்று நன்கு உங்களுக்குத் தெரியும். சமணர்கள் கூற்றுப்படி அவர் யாத்த நூல்களுள் ஒன்றேயொன்றுதான் தமிழ்நூல் – அது திருக்குறள். மற்றவை வடமொழி சமண சமய நூல்கள் என்றும் அந்நூல்கள் பெயரகளையும் குறிப்பிடுகிறார்கள் சமணர்கள்.

சமண வாதத்தை எதிர்க்க வைக்கப்பட்டதே வள்ளுவர் ஓர் இந்து என்ற இந்துத்வா பிரச்சாரமாகும். இசுலாமியருக்கும் கிருத்துவருக்கும் எதிராக அன்று. உங்கள் பிரச்சாரம் இங்கே அதுதான். ஆதி பகவன் என்பதற்கு ஆதி பராசக்தி + சிவன் என்று விளக்கம் நீங்கள் கொடுக்கலாம. உஙகளாசை. சமணர்கள் ஏற்கவில்லை. மற்றவரகள் அச்சொல் அனைத்தையும் கடந்த உள் (கடவுள்) எனபதையே குறிக்கிறதென்கிறார்கள். ஆதி என்பது தொடக்கம். தொடக்கத்திலிருந்து வந்தது என்றுதான் பொருள் படும். ஆதி என்றால் ஆதிபராசக்தி என்று சொல்ல ஆதிக்குப்பின் ஒரு சொல் பராசக்தி என்று குறிக்க வேண்டும். ஆதி என்பது அட்ஜக்டிவ் – பண்புப்பெயர். நவுன் கிடையாது. பகவன் என்பது நவுன் – பெயர்ச்சொல். அதாவது காமன் நவுன். பொதுப் பெயர். எக்கடவுளையுமே குறிக்கும். ஈஸ்வர், இறைவன், கடவுள் என்பன போல.

நன்னெறி பற்றியெல்லாம் பேசாதீர்கள். அஃதெல்லோருக்குமே தெரியும். நன்னெறி என்று போனால் மருத்துவர் ஜாண்சன் சொன்னதைத்தான் ஏற்க வேண்டும். இந்த சச்சரவெல்லாம் ஏன்? கடவுள் வாழ்த்து கடவுளைப்பற்றி; எக்கடவுள் என்று அவர் சொல்லவில்லை என்று மருத்துவர் முடித்துவிட, நீங்களோ, அது சிவ பார்வதியைக்குறிக்குமென்று வள்ளுவரை இந்து என்று மீண்டும் நிலைநாட்டுகிறீர்கள். நன்னெறி என்று விட்டீர்களா? வீண்வாதம் உங்களிடமிருந்தும் வருகிறது. ஓரிறைக்கொள்கையை வள்ளுவர் கொள்கை என்று முடித்துவிட தயக்கமேன்?
ஓரிறைக்கொள்கை இந்து சமயத்துக்குப் புதியன்று. ஓகே. அதே சமயம், அக்கொள்கையுடனே ஷாலி சொன்ன முப்பது முக்கோடி தேவர்களும் இருக்கிறார்கள். அவர்களுள் ஒன்றையே பலவற்றையோ தொழலாமென்றும் இந்துமதம் சொல்கிறது. அப்படியே மக்களும் செய்கிறார்கள். நீங்கள் அண்ணாமலையாரையும் முருகனையும் வெங்கடாஜலபதியையும் தொழுகிறீர்கள். வைணவர்கள் உங்கள் சிவ பாரவதி, முருகன் எனறு தொழவதில்லை. ஆக, என்ன புலனாகிறது இதில்? இந்துமதத்தில் ஓரிறைக்கொள்கை உண்டு; அதே சமயம், இன்னொரு கொள்கையாக பலகடவுளர் வணக்கமும் இருக்கிறது. இல்லையா?

இசுலாமில் அப்படி இல்லவே இல்லை.

//இறைவன் ஒருவனே; அவன் நாமம் அல்லா. அவனைத்தவிர இறையேதும் இல்லை//. God is Only One. His name is Allah. There is no God but Allah//

இதைத்தான் அவர்கள் நித்தம்நித்தம் ஓதுகிறார்கள். தொழுகைக்கு அழைப்பாகவும் விடுக்கிறார்கள். அதாவது அவர்கள் கொள்கை ஒன்றே.
எனவே ஓரிறைக்கொள்கையென்றால் இசுலாமே. ஒருவர் ஓரிறைக்கொள்கையைப்பற்றி சிலாகித்து எழுதுகிறரென்றால், இன்று அவரைக் கண்டிப்பாக இசுலாமியர் எனலாம். வள்ளுவர் காலத்தில் அக்கொள்கையைக் கொண்டு வாழ்பவர் எனலாம். வள்ளுவர் அப்படி வருவார். இல்லையா?

-BS

Sunday, April 05, 2015

திருக்குறளை அரபியில் மொழி பெயர்த்த ஜாகிர் ஹூசைன்!



திருவள்ளுவரால் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட திருக்குறள் அரபு மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.

சவூதி அரேபிய கலை மற்றும் கலாச்சார மையம் சார்பில் தம்மாமில் நடைபெற்ற கவிஞர்கள் மாநாட்டில் அரபு மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் வெளியிடப்பட்டது. இந்த வியத்தகு சாதனையை நிகழ்த்தியிருப்பது மதரசாவில் கல்வி பயின்ற ஜாஹிர் ஹுசைன் பாகவி. தமிழகத்தின் கடைகோடி பகுதியிலிருக்கும் குமரி மாவட்டத்திலுள்ள தக்கலையை சார்ந்த இவர், சென்னை பல்கலைக் கழகத்தின் அரபுத்துறையின் தலைவராக பணியாற்றுகிறார்.

இவ்வெளியீடு குறித்து தெரிவித்த கவிஞர் ஜாஹிர் ஹுசைன் பாகவி, "திருக்குறளை அரபு உலகிற்கு அறிமுகப்படுத்திய முதல் நிகழ்ச்சி இது. நம் தாய் நாட்டுச் சொந்தங்கள், நண்பர்கள் அதிக அதிக அளவில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். அரபுக் கவிஞர்கள் வள்ளுவரின் வார்த்தைகளை மெய்மறந்து ரசித்தார்கள். இது ஓர் அற்புதமான அனுபவம்" என்று கூறியுள்ளார்.

தகவல் உதவி
இந்நேரம்.காம்

தமிழரின் பொக்கிஷமாக விளங்கும் திருக்குறள் இனி அரபுகளின் கைகளிலும் தவழும். எல்லோருக்கும் பொதுவாக இறைவன் என்றே பல இடங்களில் கடவுளைப் பற்றி வள்ளுவர் கூறுகிறார். முன்பு தமிழர்களுக்கு கொடுத்த இறை வேதமாகக் கூட திருக்குறள் இருக்கலாம். இறைவனே அறிந்தவன்.

இஸ்லாமிய பார்வையில் தேவ மொழி என்று எதுவும் கிடையாது. உலகில் உள்ள அனைத்து மூல மொழிகளையும் தானே படைத்ததாக இறைவன் குர்ஆனிலே கூறுகின்றான். எனவே புனித மொழி என்று எதனையும் நாம் வகைப்படுத்த முடியாது. தாய் மொழிப் பற்று இயற்கையாகவே எல்லோருக்கும் இருக்கும். ஆனால் அது மொழி வெறியாக மாறி விடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சவுதியில் பல பள்ளி வாசல்களில் வெள்ளிக் கிழமை தொழுகையில் செய்யப்படும் பிரசங்கத்தை தமிழ் மொழியில் மொழி மாற்றம் செய்து ஒலி வாங்கி மூலமாக பலரும் கேட்கும் வண்ணம் ஒலிபரப்பு செய்கின்றனர். மலையாளம் உருது போன்ற மொழிகளுக்கும் இடம் தருகின்றனர். அனைத்து மொழிகளையும் படைத்தவன் இறைவன்தான் என்ற உண்மையை உணர்ந்ததால்தான் சவுதி பள்ளிகளில் வேறு மொழிகளுக்கும் இடம் கிடைக்கின்றது.



----------------------------------------------------------


"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு"

- திருக்குறள் 5

பொருள்:

'இருளில் சேர்த்து விடும் இரு வினைகளையும் தவிர்த்து இறைவன் இட்ட கட்டளைப் படி தனது வாழ்வை அமைத்துக் கொள்வோரே புகழோடு வாழ்ந்தவராவார்'

அது என்ன இருளில் சேர்க்கும் இரு வினைகள்? நன்மை தீமையை சொல்கிறாரா வள்ளுவர்? இல்லை. ஏனெனில் இரண்டு வினைகளுமே நம்மை இருளில் சேர்த்து விடும் என்கிறார். நன்மையான காரியங்களை செய்பவரை எப்படி இருளில் கொண்டு சேர்பதாக வள்ளுவர் சொல்வார்? எனவே நன்மை தீமையை இங்கு வள்ளுவர் கூறவில்லை என்பதை அறியலாம். ஆனால் பல விளக்கவுரைகளில் நன்மை தீமை என்றே 'இருளில் நேர்க்கும் இரு வினைகளுக்கு' விளக்கம் அளித்துள்ளனர். கலைஞரும் சாலமன் பாப்பையாவும் கூட நன்மை தீமை என்றே மொழி பெயர்த்துள்ளனர்.

வள்ளுவர் சொன்ன அந்த இரு வினைகள் என்ன என்று பார்போம்.

ஒன்று ஒரு மனிதன் பிறக்கும் போதே அவனோடு சேர்ந்து வரும் இறைவன் விதித்த தீமையை அடிப்படையாக கொண்ட விதி. மற்றொன்று ஒரு மனிதன் பிறந்ததற்கு பிறகு இந்த பூமியில் அவன் இறக்கும் வரை செய்து வரும் தீய வினைகள். அதாவது தீய செயல்கள். இந்த இரண்டு தீய செயல்களையும் எவன் ஒருவன் வென்று விடுகின்றானோ அவனே பாக்கியசாலி என்கிறார் வள்ளுவர்.

இஸ்லாமும் இந்த இரு வினைகளைப் பற்றி பேசுகிறது. மனிதன் இந்த பூமியில் பிறப்பதற்கு முன்பு தாயின் வயிற்றில் ஒரு வானவர் மூலமாக அவனது அனைத்து காரியங்களும் பதியப்படுவதாக நபிகள் நாயகம் அறிவித்துள்ளார். நல்லவனா? தீயவனா? என்பது இங்கு தீர்மானிக்கப்படுகிறது. இது ஒரு வினை. தாயின் வயிற்றிலிருந்து அவன் வெளியேறியவுடன் இந்த உலகில் நன்மை தீமை இரண்டும் இறை வேதங்கள் மூலம் கொடுக்கப்படுகிறது. இந்த இறை வேதங்களை ஆராய்ந்து இறைவன் இட்ட கட்டளைப்படி நன்மை செய்து இறப்பவனுக்கு சொர்கம் தருவதாகவும், இறை கட்டளைகளை மீறுபவனுக்கு நரக வேதனை தருவதாகவும் குர்ஆன் கூறுகிறது. இது இரண்டாவது தீய வினை. இங்கும் இரண்டு தீய வினைகளைப் பார்கிறோம்.

Saturday, February 21, 2015

இருளில் சேர்த்து விடும் இரு வினைகள் - திருக்குறள்



"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு"

- திருக்குறள் 5

பொருள்:

'இருளில் சேர்த்து விடும் இரு வினைகளையும் தவிர்த்து இறைவன் இட்ட கட்டளைப் படி தனது வாழ்வை அமைத்துக் கொள்வோரே புகழோடு வாழ்ந்தவராவார்'

அது என்ன இருளில் சேர்க்கும் இரு வினைகள்? நன்மை தீமையை சொல்கிறாரா வள்ளுவர்? இல்லை. ஏனெனில் இரண்டு வினைகளுமே நம்மை இருளில் சேர்த்து விடும் என்கிறார். நன்மையான காரியங்களை செய்பவரை எப்படி இருளில் கொண்டு சேர்பதாக வள்ளுவர் சொல்வார்? எனவே நன்மை தீமையை இங்கு வள்ளுவர் கூறவில்லை என்பதை அறியலாம். ஆனால் பல விளக்கவுரைகளில் நன்மை தீமை என்றே 'இருளில் நேர்க்கும் இரு வினைகளுக்கு' விளக்கம் அளித்துள்ளனர். கலைஞரும் சாலமன் பாப்பையாவும் கூட நன்மை தீமை என்றே மொழி பெயர்த்துள்ளனர்.

வள்ளுவர் சொன்ன அந்த இரு வினைகள் என்ன என்று பார்போம்.

ஒன்று ஒரு மனிதன் பிறக்கும் போதே அவனோடு சேர்ந்து வரும் இறைவன் விதித்த தீமையை அடிப்படையாக கொண்ட விதி. மற்றொன்று ஒரு மனிதன் பிறந்ததற்கு பிறகு இந்த பூமியில் அவன் இறக்கும் வரை செய்து வரும் தீய வினைகள். அதாவது தீய செயல்கள். இந்த இரண்டு தீய செயல்களையும் எவன் ஒருவன் வென்று விடுகின்றானோ அவனே பாக்கியசாலி என்கிறார் வள்ளுவர்.

இஸ்லாமும் இந்த இரு வினைகளைப் பற்றி பேசுகிறது. மனிதன் இந்த பூமியில் பிறப்பதற்கு முன்பு தாயின் வயிற்றில் ஒரு வானவர் மூலமாக அவனது அனைத்து காரியங்களும் பதியப்படுவதாக நபிகள் நாயகம் அறிவித்துள்ளார். நல்லவனா? தீயவனா? என்பது இங்கு தீர்மானிக்கப்படுகிறது. இது ஒரு வினை. தாயின் வயிற்றிலிருந்து அவன் வெளியேறியவுடன் இந்த உலகில் நன்மை தீமை இரண்டும் இறை வேதங்கள் மூலம் கொடுக்கப்படுகிறது. இந்த இறை வேதங்களை ஆராய்ந்து இறைவன் இட்ட கட்டளைப்படி நன்மை செய்து இறப்பவனுக்கு சொர்கம் தருவதாகவும், இறை கட்டளைகளை மீறுபவனுக்கு நரக வேதனை தருவதாகவும் குர்ஆன் கூறுகிறது. இது இரண்டாவது தீய வினை. இங்கும் இரண்டு தீய வினைகளைப் பார்கிறோம்.

தாயின் வயிற்றில் ஒருவனை கெட்டவனாக இறைவன் எழுதி விட்ட பிறகு அவன் எப்படி நல்லவனாக மாற முடியும்? என்று நீங்கள் கேட்கலாம். முக்காலத்தையும் உணர்ந்தவன்தான் நம்மைப்படைத்த இறைவனாக இருக்க முடியும். படைத்த தனது படைப்பினம் எவ்வாறு வாழ்ந்து மரிக்கும் என்ற புரிதல் இல்லாதவன் எவ்வாறு இறைவனாக முடியும்?

அதே நேரம் கெட்டவனாக இந்த பூமிக்கு அனுப்பப்பட்ட ஒரு மனிதன் ஆய்வு செய்து உண்மையை உணர்ந்து 'இறைவா! எனக்கு நேர் வழியைக் காட்டுவாயாக' என்று பிரார்தித்தால் அந்த பிரார்தனையை ஏற்றுக் கொண்டு எழுதிய விதியை அந்த இறைவனே மாற்றி அமைப்பதாக குர்ஆனிலே சொல்கிறான்.

'பதிவு ஏட்டில் உள்ளவைகளில் இறைவன் நாடியதை அழிப்பான். நாடியதை அழிக்காமல் விடுவான். அவனிடமே தாய் ஏடு உள்ளது'
-குர்ஆன் 13:39

ஆக.... கெட்டவனாக பூமிக்கு அனுப்பப் பட்ட தனது அடியான் தன்னிடம் நேர் வழி காட்ட பிரார்தித்தால் அதனை ஏற்று எழுதிய தாய் ஏடான பதிவு ஏட்டை திருத்தி அவனை நல்லவனாக மரணிக்க செய்கிறான். அதாவது தான் எழுதிய விதியை தானே மாற்றி எழுதுவதாக இங்கு இறைவன் கூறுகிறான். எனவே தான் மற்ற உயிரினங்களுக்கு இல்லாத பகுத்தறியும் ஆன்மாவை விசேஷமாக மனிதனுக்கு மட்டும் இறைவன் கொடுத்துள்ளான். எனவே மனிதனின் முயற்சியில்தான் ஒருவன் நல்லவனா? கெட்டவனா? என்பது தீர்மானிக்கப்படுகிறது என்பதை இதிலிருந்து விளங்குகிறோம்.

இந்து மதத்தின் ஒரு பிரிவான சைவ சமயத்திலும் இந்த இரு வினைகள் சொல்லப்பட்டுள்ளது.மனிதன் பிறக்கும் போது அவனோடு சேர்ந்து வரும் வினையாகிய ஜென்ம பாவம். அதனை சைவத்தில் 'சகச மலம்' என்று கூறுவர். அடுத்து அவன் பூமியில் பிறந்து மரிக்கும் வரை செய்த பாவ காரியங்களை கர்ம பாவம் என்று கூறுவர். இங்கும் அந்த இரண்டு தீய வினைகளும் வருவதைப் பார்கிறோம்.

இது பற்றிய செய்திகளைத் தரும் சங்க கால பாடல்களையும் பார்போம்.

“பற்றி தொடரும் இரு வினை அன்றி வேறு ஒன்றும் இல்லை பராபரமே” – தாயுமான சுவாமிகள்.

"கருவினில் கருவதாய் எடுத்தஏழு தோற்றமும்
இருவினைப் பயத்தினால் பிறந்திறந்து உழன்றிடும்..." - சிவவாக்கியர்

சங்க இலக்கியங்களும், திருக்குறளும், குர்ஆனும் ஒத்த கருத்தைப் பெற்றிருப்பதை கண்டு ஆச்சரியப்படுகிறோம். இது எப்படி சாத்தியமாகிறது? உலக மொழிகள் அனைத்துக்கும் இறைவேதத்தை அனுப்பியுள்ளதாக குர்ஆன் கூறுகிறது.

'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்துக்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்'
-குர்ஆன் 14:4


ஆதி மொழியான தமிழுக்கு வேதமும் தூதரும் வந்துள்ளனர். அந்த வேதக் கருத்துக்கள் ஒரு சில இன்றும் உயிர்ப்புடன் இருப்பதால்தான் அவை குர்ஆனோடு ஒத்து போகின்றன. இதன் மேலதிக உண்மைகளை இறைவனே அறிந்தவன்.


Sunday, April 15, 2012

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
-குறள்: 972

பிறப்பினால் உலக மக்கள் அனைவரும் ஒருவரே ஆவர். அவர்கள் செய்யும் தொழில்கள் வேறுபட்டிருந்தாலும் அதனால் அவர்களுக்குத் தனித்த சிறப்புகள் ஏதுமில்லை. ஒருவன் செய்யும் தொழிலை வைத்து அவனை பிராமணனாகவோ, செட்டியாராகவோ, தேவராகவோ, படையாச்சியாகவோ, பரையனாகவோ, பள்ளனாகவோ பாரக்கலாகாது. மரம்,செடி,விலங்குகள் என்ற அனைத்து உயிர்களும் உலகில் பிறக்கும் போது ஒத்த தன்மையுடனேயே பிறக்கின்றன. இதில் சாதி வேற்றுமை பார்த்து மனிதர்களிடையே பகைமை பாராட்டலாகாது என்கிறார் வள்ளுவர். வள்ளுவர் காலத்திலேயே பிராமணன் சூத்திரன் என்ற சாதி வேறுபாடு தலை விரித்தாடியிருக்கிறது. அதைக் கண்டிக்கும் முகமாகவே வள்ளுவர் தனது குறளில் தமிழர்களுக்கு போதனை செய்கிறார்.

இதே கருத்தையே தொடர்ச்சியாக அடுத்த குறளில்...

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.
-குறள் 973

நான் உயர்ந்த சாதி என்று கூறி பெருமை பேசுபவர் மேலான பண்பு இல்லை என்றால் உயர்ந்தோராக மாட்டார். தீண்டத்தகாதவன் என்று ஒதுக்கப்பட்டவன் சமூகத்தில் இழிவாக பார்க்கப்பட்டாலும் சிறந்த பண்புகளை கொண்ட அவன் உயர்ந்த இடத்தில் வைக்கப்படுவான் என்ற பொருளில் சொல்கிறார் வள்ளுவர். இங்கு பிறப்பினால் எந்த பெருமையும் ஒருவனுக்கு வந்து விடாது. அவன் செய்யும் சிறந்த செயல்களினால்தான் அவனுக்கு பெருமை இருக்கிறது என்கிறார் வள்ளுவர்.

“மறப்பினும் ஓத்துக் கொளலாகும், பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்”



வேதம் படிதத பார்ப்பணர்கள் அதனை மறந்தாலும் பெரும் குற்றம் வந்து விடாது: ஆனால் அவனது ஒழுக்கம் கெட்டால் சமூகத்தால் இழிந்தவனாகப் பார்கக்ப்படுவான் என்கிறார் வள்ளுவர். அன்றே இந்த மேல் சாதியினர் எந்த அளவு கோலோச்சியிருந்தனர் என்பதும் சாதி வெறி எந்த அளவு உச்சத்தை எட்டியிருந்தது என்பதும் நன்கு தெளிவாகிறது.

2000 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றும் திண்ணியமும் பாப்பாரப்பட்டியும் கீரிப்பட்டியும் நமது பெருமைகளை கூறிக் கொண்டிருக்கின்றன. வள்ளுவருக்கு கன்னியாகுமரியில் சிலை வடிப்பது கொண்டும், அவருக்கு ஒரு விழா எடுத்து அவர் பெருமையை பேசுவதோடு நமது கடமை முடிந்தது என்று நினைத்து விடுகிறோம்.

திருக்குறளை திருவள்ளுவர் எழுதவில்லை அதை எழுதியது அகத்தியர் என்று புதிய செய்தியாக ஒரு பதிவை படித்தேன். கலைஞர் எழுப்பிய மிகப் பெரிய வள்ளுவர் சிலை இனி அவ்வளவுதானா? இந்த செய்தி உண்மையாகும் பட்சத்தில் சிலைக்காக கொட்டிய கோடிக்கணக்கான மக்கள் பணம் விழலுக்கு இறைத்த நீர்தானா? நாம் எந்த லட்சணத்தில் வரலாறுகளை பாதுகாத்து வருகிறோம் என்பதற்கு இவை எல்லாம் சில சான்றுகள்.

வள்ளுவரின் இந்த குறளையொட்டி வள்ளலார் தரும் பாடலையும் இனி பார்ப்போம்.

எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
தம்முயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர்!அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம்எனநான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திட
என்சிந்தை மிகவிழைந்த தாலோ

என்ன அழகாக மனித நேயத்தை வள்ளலார் தனது அருட்பாவில் பாடலாக தருகிறார் பாருங்கள். ‘எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்’ - 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று உலக மக்கள் அனைவரிடத்திலும் சகோதர பாசத்தோடு பழகுபவனிடமே உண்மையான இறை பக்தி இருக்கும் என்பது இப்பாடல்கள் மூலம் உணர்த்தப்படுகிறது.

நமது முண்டாசு கவி பாரதியும் தனது பங்குக்கு...

எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓர் இனம்
எல்லாரும் இந்திய மக்கள்
எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர் விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே.....

என்று வாழ்த்தி விட்டு சென்று விட்டான். அந்த வாழ்த்துக்கள் அனைத்தும் இன்றும் ஏட்டளவிலேயே இருக்கின்றது. எந்த முன்னேற்றத்தையும் இது நாள் வரை கண்டபாடில்லை. உலக நாடுகள் வேறு எங்கும் இந்த அளவு தீண்டாமைக்கு எதிராக பாடல்கள் புனைந்ததும் இல்லை. இந்த அளவு இன்று வரை நம்மைப்போல் தீண்டாமையை தூக்கிப் பிடிக்கும் நாடுகளும் உலகில் எங்கும் இல்லை.

மனிதர்களில் பேதங்கள் பார்க்கலாகாது என்பதற்கு குர்ஆன் தரும் வசனத்தையும் இங்கு பார்ப்போம்.

'மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள். அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்'
-குர்ஆன் 4;1


மேலே உள்ள இந்த வசனம் உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் தந்தைக்கு பிறந்தவர்களே! நாம் அனைவரும் 'ஒரு தாய் மக்களே' என்ற அரை கூவலை மனித சமுதாயத்தின் முன் வைக்கிறது குர்ஆன். 'நான் நெற்றியில் பிறந்தேன்: எனவே நான் மட்டும்தான் மந்திரம் சொல்ல வேண்டும். மற்றவர்கள் அந்த மந்திரத்தை சொன்னால் நாக்கை இழுத்து வைத்து அறுக்க வேண்டும்' என்றெல்லாம் இன்றும் நாம் சொல்லி வருவதும் அதை சட்டமாக இன்னும் வைத்திருப்பதும் தவறு என்கிறது குர்ஆன். அதே போல் தொடையில் பிறந்தவன் கீழானவன் என்றும் அவன் சூத்திரன் என்றும் இழிவாக பேசப்படுவதையும் அதை இன்றும் சிலர் போற்றப்படுவதையும் தவறு என்று இந்த குர்ஆன் வசனம் சுட்டிக் காட்டுகின்றது. நானும், தருமியும், சார்வாகனும், நரேனும், ஆஷிக்கும், சிராஜூம், கருணாநிதியும், ஜெயலலிதாவும், ராகுல் காந்தியும் ஒரு தாய் தந்தையிலிருந்து பல்கிப் பெருகியவர்களே என்ற முடிவுக்கு வந்து விட்டால் எங்கிருந்து வரும் உயர்வு தாழ்வு? எங்கிருந்து வரும் பேதம்?

---------------------------------------------


பரம்பு மலை பாரி மன்னன் முல்லைக் கொடிக்கு தனது தேரையே தானமாக கொடுத்ததை படித்திருப்போம். இந்த சம்பவம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இது ஒரு அறிவுடைய செயலா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். ஒரு முல்லைக் கொடிக்காக தனது தேரையே அங்கு விட்டால் அது போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஆகாதா? மன்னன் தேரை இடம் பெயர்க்க எவருக்கும் தைரியமும் அந்த காலத்தில் இருந்திருக்காது. அந்த கொடியையே வேறு இடத்தில் படர விட்டாலும் அது தனது போக்கில் படர்ந்து சென்று விடும். இதிலெல்லாம் கவனம் செலுத்திய பாரி மன்னன் மக்களுக்கிடையே உள்ள சாதி வேற்றுமையை தீர்க்க குறைந்த பட்சமாவது முயற்ச்சித்திருக்கலாம்.

சாதிவாரி கணக்கெடுப்பை ஆரம்பிக்க போவதாக அரசு அறிவிப்பு வந்துள்ளது. இனி தாரை தப்பட்டையோடு சாதி சங்கங்கள் எல்லாம் வெளிக் கிளம்பும். ஏற்கெனவே முன்னேறிய சாதிகள் மேலும் முன்னேறிச் செல்லும். எத்தனை ஒதுக்கீடுகள் வந்தாலும் நீதிபதியாகவே சென்று ஒரு தாழத்தப்பட்டவன் உட்கார்ந்தாலும் உயர் சாதியினர் பார்வையில் அவன் தாழ்ததப்பட்டவனாகவே கருதப்படுகிறான். ஆரியத்தின் தாக்கம் அந்த அளவு சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிறது.

வாழ்க பாரதம்! வாழ்க தமிழ்நாடு!

----------------------------------------------


கிருமாம்பாக்கம் :புதுச்சேரியில், தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்து, ஒரே இடத்தில் சடலங்கள் புதைக்கப்பட்ட சம்பவம், நோணாங்குப்பம் மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.நோணாங்குப்பம் புதுக்காலனி, 2வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை மகன் லிங்குசாமி,28, டிரைவர். இவரும் அதே பகுதியை சேர்ந்த கண்ணகி,20, என்பவரும், கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதற்கு, இரு வீட்டாரும் எதிர்ப்புத் தெரிவித்ததால், மனமுடைந்த காதலர்கள், நேற்று முன்தினம் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இவர்களின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த காதல் ஜோடிகளின் நண்பர்கள், உறவினர்கள், தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும்படி, இரு வீட்டாரிடமும் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து, கண்ணகியின் உடல் லிங்குசாமியின் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு, அங்கு இருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. பின், இருவரின் <சடலங்களையும் ஒன்றாக ஊர்வலமாக எடுத்துச் சென்று, நோணாங்குப்பம் இடுகாட்டில் அடக்கம் செய்தனர்.இவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி, மேற்கொள்ளப்பட்ட திருமணச் சடங்கு, உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்களை, மேலும் சோகத்தில் ஆழ்த்தியது.

தின மலர்-15-04-2012

ஒரு சமூகத்துக்கு இன்னதுதான் சட்ட திட்டங்கள் என்று இல்லாமல் போனால் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதை தவிர்க்க இயலாது.