இந்துக்களின் கடவுள் கொள்கை பற்றி ஒரு அலசல்!
//ஒரு இந்துவாகப்பட்டவர், எச்சமயத்தவர் கருத்தையும் — அது உகந்ததாக இருந்தால் ஏற்றுக்கொள்வார். சமயத்தை நோக்கமாட்டார். அவரைப் பொதுச்சமயத்தார் என்று முலாம் பூசவும் மாட்டார்.
அப்படி நோக்கினால் — வேளாங்கண்ணிக்கோ, நாகூர் தர்க்காவுக்கோ இந்துக்கள் செல்ல மாட்டார்கள்.
— சந்த கபீர், ஷீரடி சாயிபாபா போன்றவர்கள் இந்துக்களால் அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கப்பட்டிருக்கமாட்டார்கள்.//
அய்யா அரிசோனரே! இந்துக்களாகிய உங்களுக்கு ஒரு தீர்க்கமான கடவுள் கொள்கை இல்லாததால் கண்ட இடத்திலும் கையை தூக்கி கும்பிட்டுச் செல்கிறீர்கள்.தாங்கள் பள்ளி கல்லூரிகளில் படித்த கல்வி என்னும் பகுத்தறிவை வெறும் வயிற்றுப் பிழைப்பிற்கு மட்டுமே பயன்படுத்துகிறீர்கள்.சரியான உண்மையானா ஒரே கடவுளை அடையாளம் காண உங்கள் பகுத்தறிவு தவறியதால், வேளாங்கன்னி,நாகூர் என்று ஓடுகிறீர்கள்.எம்மதமும் சம்மதம்,எல்லா நதிகளும் முடிவில் கடலுக்கே செல்கின்றன என்ற முரண்பாடான கொள்கைகளை சரி காண்கிறீர்கள்.
ஓர் இறைவனை வணங்குவதும் இந்துமதம், பல தெய்வங்களை வணங்குவதும் இந்து மதம்,உருவத்தை வணங்குவதும்,அருவத்தை வணங்குவதும் இந்து மதம்.தெய்வமே இல்லை எனும் நாஸ்திகனும் இந்துதான்.அழியக்கூடிய பலவீனமான மனிதர்களுக்கு தேவைப்படும் மனைவி,குடும்ப சுகம்,மக்கள் செல்வம் அனைத்தையும் எல்லாம் வல்ல கடவுள்களிடமும் காண முடிகிறது.படைத்தவனுக்கும் படைப்பினங்களும் எந்த வேறுபாடும் இல்லை.செத்து மடியும் ஜென்மங்களும் ,என்றும் நித்திய ஜீவிதமாக இருக்கக்கூடிய சிருஷ்டி கர்த்தாவும் ஒன்றாக இருக்க முடியுமா?உங்களுக்கு எல்லாமே ஒன்று.ஆம்! பகுத்தறிவுக்கு விடுதலை கொடுத்து விட்டால் இது சாத்தியமே!
//பலமுறை சிவபெருமான் பெயர் குறிப்பிடப்படும் திருமந்திரத்தில் கடவுள் பெயர், குறிப்பிடப்படவில்லை என்னும் நீங்கள் திருமந்திரத்தையே படிக்கவில்லை என்றுதான் எனக்குப் படுகிறது.//
அய்யா அரிசோனரே! தாங்கள் சைவம் என்ற ஒரு சமயத்தை திருமூலர் பேசுவதாக கூறுகிறீர்கள்.ஆனால் திருமூலர் ஒரு சமயம் நன்று மற்றது தீது என்கிற வாதத்தை “மாய மனிதர் மயக்க மதுமொழி” என்கிறார். சமயங்களின் அடிப்படையில் பேசுபவர்கள் இறைவனை உள்ளவாறு உணர்ந்தவர் அல்லர். இறைவன் சமயங்களுக்கு அப்பாற்பட்டவன். ஆகவே அறுசமயங்களால் முடிவான பொருள் என்று கூறப்படும் தன்மை இல்லாதவன், இதைப்பற்றி நாம் ஆராயும்பொழுது கிடைக்கும் தெளிவு நமக்கு, நிலையான வீட்டின்பத்தை அளிக்கும்.
“ஆறு சமயமுங் கண்டவர் கண்டிலர்
ஆறு சமயப் பொருளும் அவனலன்
தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்தபின்
மாறுதல் இன்றி மனைபுக லாமே” (திருமந்திரம் – 1533)
சமயங்களின் நோக்கம் முடிவான பரம்பொருளை அடையும் வழியைத் தொட்டுக் காட்டுவதுதான். அதற்கு மாறாக சமயவாதிகள் தத்தம், சமயங்களே சிறந்தது என்றும் மற்றவை தாழ்ந்தது என்றும் கூறுவார்களேயானால் அவர்கள் குன்றைப் பார்த்துக் குரைக்கும் நாயைப் போல் இருப்பர் என்று கூறுகிறது நீங்கள் படித்த திருமந்திரம்.
“ஒன்றது பேரூர் வழியா றதற்குள
என்றது போல இருமுச் சமயமும்
நன்றிது தீதிது என்றுரை யாளர்கள்
குன்று குரைத்தெழு நாயையத் தார்களே”. (திருமந்திரம் – 1558)
ஆகவே,திருமூலரை சைவராக்கி நீங்கள் குன்று குரைத்தெழு நாயாக வேண்டாம்.
-ஷாலி
'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Showing posts with label திரு மந்திரம். Show all posts

Tuesday, September 08, 2015
இந்துக்களின் கடவுள் கொள்கை பற்றி ஒரு அலசல்!
Sunday, July 19, 2015
திரு மூலர் கூறும் ஓரிறைக் கொள்கை!
திரு மூலர் கூறும் ஓரிறைக் கொள்கை!
1. கடவுள் வாழ்த்து. ( 1 - 50 )
0001: சிவன் ஒருவனே சத்தியோடு இரண்டாய், பிரம்ம, விஷ்ணு, ருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளாகி ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களைச் செய்து, நான்கு வேதங்களாகி உண்மை விளங்கச் செய்து, ஐந்து இந்திரியங்களையும் அடக்கும் ஆற்றல் அளிப்பவனாய், ஆறு ஆதாரங்களிலும் விரிந்து, அதற்கு மேல் ஏழாவது இடமாகிய சகஸ்ரதளத்தின் மேல் பொருந்தி, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகிய எட்டுப் பொருள்களையும் உணர்ந்து அவற்றில் கலந்து அட்டமூர்த்தமாய் விளங்குகின்றான்.
0002: இனிமையான உயிரிலே பொருந்தியிருக்கும் தூய்மையானவனும் நான்கு திசைகளுக்கும் பராசக்திக்கும் தலைவனும், தெற்குத் திசைக்குரிய இயமனைஉதைத்தவனுமாகிய இறைவனைப் புகழ்ந்து பாடி நான் உரைக்கின்றேன்.
0003: உயிர்களோடு உடனாய் நின்றவனும், அழிவில்லாத தேவர்கள் “ஆடையில்லாதவன்" என்று பகரும் தலைவனும், பக்கத்திலுள்ள தேவர்களாலும் கூட அறியமுடியாத மேலோனும் ஆகிய இறைவனை நான் அணுகி இருந்து அநுதினமும் வழிபாடு செய்வேன்.
0004: அகன்ற சீவர்களுக்கு மெய்ப்பொருளானவனும் ஆகாய மண்டலத்துக்கு வித்துப் போன்றவனும், அடைக்கலமான இடத்தில் என்னைச் செல்ல விட்டவனும் ஆகிய இறைவனைப் பகலிலும் இரவிலும் வணங்கிப் பரவி மாறுபாடுடைய இவ்வுலகில் நான் அறியாமை நீங்கி நின்றேன்.
0005: சிவபெருமானோடு ஒப்பாகவுள்ள கடவுள் புறத்தே உலகில் எங்குத் தேடினும் இல்லை. அவனுக்கு உவமையாக இங்கு அகத்தே உடம்பிலும் எவரும் இல்லை. அவன் அண்டத்தைக் கடந்து நின்ற போது பொன் போன்று பிரகாசிப்பான். சிவன் செந்நிறம் பொருந்திய ஊர்த்துவ சகஸ்ரதளத் தாமரையில் விளங்குபவனாவான்.
0006: சிவனைக் காட்டிலும் மேம்பட்ட தேவர்கள் ஒருவரும் இல்லை. சிவனல்லாது செய்கின்ற அருமையான தவமும் இல்லை. அவனை அல்லாது பிரமன், விஷ்ணு, உருத்திரன் ஆகிய மூவராலும் பெறுவது ஒன்றும் இல்லை. அவனையல்லாது வீடு பேறு அடைவதற்குரிய வழியை அறியேன்.
0007: பொன் போன்ற சகஸ்ரதளத்தில் விளங்குபவனும், பழமையாகவே சமமாக வைத்து எண்ணப்படும் பிரமனாதி மூவருக்கும் பழமையானவனும், தனக்கு ஒப்பாரும் மிக்காருமில்லாத தலைமகனும் ஆகிய இறைவனை யாரேனும் "அப்பனே" என்று வாயார அழைத்தால் அப்பனாக இருந்து உதவுவான்.
0008: தாழ்ந்த சடையுடைய சிவன் தீயைக் காட்டிலும் வெம்மையானவன்; நீரைக் காட்டிலும் குளிர்ச்சியானவன்; குழந்தையினும் நல்லவன்; பக்கத்தில் இருப்பவன்; அவனிடம் அன்பு செய்வார்க்கு தாயைக் காட்டிலும் கருணை புரிவான். இவ்வாறிருந்தும் இறைவனது கருணையை அறிபவர் இல்லை.
0009: பொன்னால் செய்யப்பெற்ற அழகான சடை என்று கூறுமாறு அவன் பின்புறம் விளங்க இருப்பவன். அவனது திருநாமம் நந்தி என்பதாகும். உயிர்கட்கெல்லாம் தலைவனாகிய அந்த சிவன் என்னால் வணங்கத்தக்கவன். அப்பெருமானால் வணங்கத் தக்கவர் வேறு எவரும் இல்லை.
0010: சிவனாகிய தானே இப்பூவுலகத்தைத் தாங்கிக் கொண்டு ஆகாய வடிவினனாகவும் உள்ளான். சிவனே சுடுகின்ற அக்கினியாகவும் உள்ளான். சிவனே அருள் பொழியும் சத்தியுமாய் இருக்கிறான். சிவனே விசாலமான மலையாகவும் குளிர்ச்சியான கடலாகவும் உள்ளான். சிவனே எல்லாப் பொருளிலும் வியாபகமாய் உள்ளான்.
0011: தூரத்திலும் பக்கத்திலும் எமக்கு முன்னோனாகிய இறைவனது பெருமையை எண்ணினால் "ஒத்ததாகச் சொல்லக் கூடிய பெரிய தெய்வம் பிறிதொன்றில்லை." முயற்சியும் முயற்சியின் பயனும் மழையும் மழை பொழிகின்ற மேகமும் அந்த இறைவனே ஆகும். அவன் பெயர் நந்தி.
0012: ஒப்பற்ற அன்போடு அழியாதிருக்கும் நெற்றிக் கண்ணையுடைய "சிவனே அழியாதிருக்கும் அருள் புரிபவன்" என்பதை விண்ணவரும் மண்ணவரும் அறியாதிருக்கின்றனரே! என்ன அறியாமை!.
0013: கண்ணில் கலந்தும் எங்கும் கடந்தும் விளங்குகின்ற சிவனை பிரமன், விஷ்ணு முதலான தேவர்களும் எண்ணத்தில் அகப்படுத்தி நினைப்பதில்லை. மண்ணுலகோரோ சிவனைக் கடந்து சென்று அறிய முடியவில்லை.
0014: சிவன் சுவாதிட்டான மலரிலுள்ள பிரமனையும், மணிப்பூரகத்திலுள்ள விஷ்ணுவையும், அநாகதச் சக்கரத்திலுள்ள ருத்திரனையும் கடந்து சிரசின் மேல் சகஸ்ரதளத்தில் நின்று எங்கும் கண்காணித்துக் கொண்டுள்ளான்.
0015: சிவன் உலகினைப் படைப்பவனாயும், உடலைக் காத்து மாற்றம் செய்பவனாயும் அழிப்பவனாயும், குவிதல் இல்லாத இயல்போடு ஊழைச் செலுத்துபவனாயும், திருவருள் சோதியாயும், என்றும் அழியாத தன்மையோடு நிறைந்து உள்ளான்.
0016: அமரர்களும் தேவர்களும் குற்றத்தில் பொருந்தியுள்ளமையால் அழகு நிறைந்த ஒளியோடு கூடிய நெற்றியையுடைய உமாதேவியை ஒரு பாகத்தில் உடையவனாகிய சிவனது குணத்தைப் பாராட்டி நாடமாட்டார்கள்.
0017: தூல உடம்பும் சூக்கும உடம்பும் ஒன்றாகக் கலந்து இருப்பினும் மாயை சம்பந்தமுடைய சூக்கும உடம்பில் தான் கானமானது மிகுந்திருக்கும். அக்கானம் அல்லது நாத வழியே மனம் பதிந்து ஆன்மா தன்னை ஒளி வடிவாகக் காணினும் உடலை விட்டு ஆகாய வடிவினனாகிய சிவனோடு கொள்ளும் தொடர்புக்கு நிகரில்லை.
0025: பிறவாதவனும் அழிவில்லாதவனும் யாவற்றையும் ஒடுக்குபவனும் பேரருளுடையவனும் எல்லோர்க்கும் இடையறாது இன்பத்தை நல்குபவனும் ஆகிய சிவனை வணங்குங்கள். அவ்வாறு வணங்கினால் நீங்கள் அவனடி மறவாதவர்களாய் அஞ்ஞானம் நீங்கி ஞானப்பேறு அடையலாம்.
0026: ஆன்மாக்களை என்றும் தொடர்ந்து நிற்கும் சிவனை வணங்குங்கள். அவ்வாறு வணங்கினால் எங்கும் வியாபித்துள்ளவனும் விசாலமான உலகம் முழுவதும் கடந்து நின்றவனும் சகஸ்ரதள கமலத்தின் மேல் உடனாய் இருந்தவனும் ஆகிய சிவனது திருவடிப்பேறு கிட்டும்.
மேலே உள்ள திருமந்திர விளக்கத்தில் சிவபெருமானைத் ஒப்பாக உலகில் ஒருகடவுளும் இல்லை என்று திருமூலர் நெத்தியடி அடிக்கிறார். இந்துமத மற்ற கடவுள்களான பிரம்மன்,விஷ்ணு,உருத்திரன் ஆகிய மூவராலும் பெறுவது ஒன்றும் இல்லை என்கிறார். இதுதான் திரு மூலர் காட்டும் ஓர் இறை சைவ சமயம்.

Saturday, May 23, 2015
குருவானவர் எப்படி இருக்க வேண்டும்? – திருமந்திரம்

குருவானவர் எப்படி இருக்க வேண்டும்? –திருமந்திரம்
//சுவனப்பிரியன்!
இந்துக்களாகிய நாங்கள் எ்ங்கள் மதத்தை நவீனப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். அகோரிகளைப்பற்றி எழுதும் நேரத்தில் தாயுமானவர் திருமந்திரம் பற்றி எழுதுங்களேன்! குப்பைகளைப் பற்றி எழுதுவானேன்.// - டாக்டர் அன்பு ராஜ்
டாக்டர் அன்பு ராஜின் விருப்பத்திற்கினங்க இன்று திருமந்த்ரம் என்ன சொல்கிறது என்று பார்போம்.
நித்தியானந்தா, பிரேமானந்தா, சாய்பாபா என்று வரிசையாக பல இந்து ஆன்மீக தலைவர்களை குருக்களை நமது காலங்களிலேயே பார்த்து வருகிறோம்.
குரு என்பவர் மட்டுமே இறை உபதேசம் பண்ண இயலும். குரு இறை நிலையை உணர்ந்தால் மட்டுமே தன்னுடைய சிஷ்யனுக்கு உண்மையை உபதேசிக்க இயலும். அதனால் தான் திருமூலர்:
குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடுங் குழிவிழுமாறே – 1680 , திருமந்திரம்
வேடதாரிகளை விட்டுவிடுங்கள் அவர்கள் குருட்டு வழியினர். குருடனுக்கு குருடன் வழி காட்டினால் இருவரும் வீழ்ந்து அழிவர்." என்கிறார் திருமூலர்..
சிஷ்யனும் ஏதும் அறியா குருடன். அவன் பின்பற்றும் குருவும் ஏதும் அறியா குருடன். இருவருமே கருத்துக் குருடர்கள். இந்த இரண்டு குருடுகளும் ஒன்றாகி ஒருவருக்கொருவர் வழி காட்டினால் முடிவில் தவறான பாதைக்கு சென்று வீழ்ந்து அழிவர் என்று இந்த பாடல் நமக்கு உணர்த்துகிறது.
கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக
உள்ள பொருளுடல் ஆவியுடன் ஈக
எள்ளத் தனையும் இடைவிடாதே நின்று
தெள்ளி யறியச் சிவபதந்தானே.
1693 : -திருமந்திரம் 6ம் தந்திரம்
விளக்கம்:
குருவாக ஒருவனை அவசரப்பட்டுத் தேர்ந்தெடுக்கலாகாது. மிக நன்றாக யோசித்துத் தெளிந்த பின்னரே ஒருவனைக் குருவாகக் அடைதல் வேண்டும். அப்படிப் பெறப்படும் குருவானவன் நல்லவனாய், நாம் அறியாதவற்றை அறிந்தவனாய், நமக்கு அவற்றை எடுத்துச் சொல்பவனாய், நம்மை நன்னெறிப்படுத்துவனாய், குற்றமில்லாதவனாய், நமக்குப் பிறவிப் பயன் கொடுப்பவனாய் அமைதல் வேண்டும்.
திருமந்திரத்தின் இந்த இரண்டு பாடல்களும் நமக்கு குருவாக எப்படிப்பட்டவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உணர்த்துகிறது. மேலே சொன்ன திரு மூலரின் பாடல் முகமது நபிக்குப் பொருந்தி வருவதை எண்ணி வியக்கிறோம். ஒரு இறைத்தூதர் எப்படி இருக்க வேண்டும். எப்படி வாழ வேண்டும். என்ன விஷேச சக்திகளை பெற்றிருக்க வேண்டும் என்று திரு மூலர் அழகாக இந்த பாடலில் வர்ணிக்கிறார். நமது தமிழ் மொழிக்கு வந்த இறைத் தூதரின் இலக்கணங்கள் இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்று தமிழில் இறங்கிய இறை வேதம் பட்டியலிட்டிருக்கலாம். அதையே திரு மூலர் தனது பாடலில் எடுத்தாண்டிருக்கிறார் என்று நான் எண்ணுகிறேன்.
-----------------------------------------------------------
முகமது நபி அவர்களுக்கு ஆடு ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்பொழுது உணவுகள் குறைவாக இருந்த காலம். தமது குடும்பத்தாரிடம் 'இந்த ஆட்டை சமையுங்கள்' என்று கூறினார்கள். பெரிய பாத்திரம் ஒன்று இருந்தது. அதில் அந்த உணவு வைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது. உணவு கிடைக்காத தோழர்கள் எல்லாம் அழைக்கப்பட்டனர். முகமது நபி அவர்களும் அவர்களுடன் அமர்ந்து கொண்டனர். உணவுத் தட்டைச் சுற்றி அனைவரும் அமர்ந்து சாப்பிடலானார்கள். கூட்டம் அதிகமாக இருந்ததால் முகமது நபி அவர்கள் மண்டியிட்டு அமர்ந்து மற்றவர்களுக்கு இடம் கொடுத்தார்கள். அப்போது ஒரு கிராமவாசி 'என்ன இப்படி உட்கார்ந்திருக்கிறீர்கள்?' என்று கேட்டார். அதற்கு நபி அவர்கள் 'இறைவன் என்னை அடக்கு முறை செய்பவனாகவும் மமதை பிடித்தவனாகவும் ஆக்கவில்லை. பெருந்தன்மை மிக்க அடியானாகவே ஆக்கியுள்ளான்.' என்று விடையளித்தார்.
-ஆதாரம் -அபுதாவுத் 3773, பைஹகீ 14430
பலரும் அமர்ந்து சாப்பிடும் ஒரு தட்டில் மேல் நிலையில் உள்ளவர்கள் ஒன்றாக சாப்பிடுவதை கவுரவக் குறைவாகவே கருதுவார்கள். மேலும் அன்றைய சமூக அமைப்பில் மண்டியிட்டு அமர்வது தாழ்த்தப்பட்டவர்களுக்கான பழக்கமாக இருந்தது. இதனால்தான் அந்த கிராமவாசி கூட அமர்ந்ததை குறை காண்கிறார். தாம் ஒரு ஆட்சியாளர் என்றோ மதத்தின் தலைவர் என்றோ, வீட்டின் உரிமையாளர் என்றோ முகமது நபி அவர்கள் நினைக்கவில்லை. மற்றவர்களைப் போல் பசித்திருக்க்க் கூடிய ஒரு மனிதனாக மட்டும் தான் தம்மை முன்னிறுத்துகிறார்கள். இப்படி ஒரு பண்பான ஆட்சியாளரை நாம் பார்த்திருக்கிறோமா?
ஒரு மனிதர் முதன் முதலாக முகமது நபி அவர்களைச் சந்திக்க வருகிறார். பொதுவாக மன்னர்கள் முன்னிலையில் உடலை வளைத்து பவ்யமாக குடி மக்கள் நிற்பதுதான் அன்றைய வழக்கம. முகமது நபியையும் அதுபோல் நினைத்துக் கொண்டு உடல் நடுங்கி பய பக்தியுடன் வந்தார். 'சாதாரணமாக இருப்பீராக! உலர்ந்த இறைச்சியைச் சாப்பிட்டு வந்த குறைஷிக் குலத்துப் பெண்ணுடைய மகன்தான் நான்.' என்று கூறி அவரை சகஜ நிலைககு கொண்டு வந்தார்கள்.
-நூல் இப்னுமாஜா 3303.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நமது தமிழ்நாட்டு முதல்வர் மேடையில் பேசும் போது மற்ற அமைச்சர்கள் நின்று கொண்டிருப்பதை பார்க்கிறோம். முதல்வரின் கால்களில் விழுவதையும் பார்க்கிறோம். அதுவும் இந்த இருபதாம் நூற்றாண்டில். ஆனால் முகமது நபியோ ஒரு மன்னர். அதிலும் மதத் தலைவர் தனது குடிமக்களிடம் எவ்வளவு அன்யோன்யமாக பழகியிருக்கிறார்கள் என்பதை இந்த சம்பவம் விளக்குகிறது.
தரையில் எதுவும் விரிக்காமல் அமர்வார்கள். தரையில் அமர்ந்து சாப்பிடுவார்கள். ஆட்டில் தாமே பால் கறப்பார்கள். அடிமைகள் அளிக்கும் விருந்தையும் ஏற்பார்கள்.
-தப்ரானி 12494
அகழ் யுத்தத்தின் போது முகமது நபி அவர்களும் மக்களுடன் சேர்ந்து அகழ் வெட்டினார்கள். மண் சுமந்தார்கள். முகமது நபி அவர்களின் வயிற்றை மண் மறைத்தது.
-புகாரி 2837, 3034,4101
முகமது நபி அவர்கள் மதினா வந்தவுடன் பள்ளிவாசலைக் கட்டிய போது அவர்களும் மக்களோடு சேர்ந்து கல் சுமந்தார்கள்.
-புகாரி 3906
இப்படி எந்த வேலையிலும் பின் வாங்காமல் மக்களோடு மக்களாக ஒன்றரக் கலந்திருந்ததுதான் முகமது நபி அவர்களின் வாழ்க்கையாக இருந்தது. எனவே இன்று வரை அவரது புகழ் மேலும் மேலும் எட்டுத் திக்கும் பரவிக் கொண்டிருக்கிறது. ஒரு இறைத்தூதர், ஒரு குரு எவ்வாறு தனது மக்களுக்கு இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாக முகமது நபி அவர்கள் திகழ்ந்து வருகிறார.
Labels:
இந்தியா,
இஸ்லாம்,
தமிழகம்,
தமிழர்கள்,
திரு மந்திரம்
Saturday, January 03, 2015
"குன்று குரைத்தெழு நாயை ஒத்தார்களே!" - திருமூலர்

//"ஒன்றது பேரூர் வழி அதற்குள்
என்றதுபோல இருமுச் சமயமும்
நன்றிது தீதிது என்றுரை யாளர்கள்
குன்று குரைத்தெழு நாயை ஒத்தார்களே!"
அரேபிய மாா்க்கம் தான் உண்மை என வாதிடுபவனை குரைக்கும் நாய் என்கிறாா் திருமூலா்.சுவனப்பிாியன் நாயா ?//
நான் நாயா? அல்லது திரு மூலர் திருமந்திரத்தின்படி யாரை நாய் என்கிறார் என்பதை சற்று விரிவாக பார்போம்.
திருமந்திரம் கூறும் ஆறு சமயங்கள் சாங்கியம், யோகம், நியாயம், வைசேசிகம், பூர்வ மீமாம்சம், வேதாந்தம் என்று சிலரும்
பாசுபதம், மாவிரதம், வைரவம்,சாத்தம். காணாபதீயம், கௌமாரம் என்று சிலரும்
சைவம், வைணவம், சாத்தம், காணாபத்தியம், கௌமாரம், சௌரம்` என்று சிலரும்
வைணவம், சாத்தம், காணாபத்தியம், கௌமாரம், சௌரம்,சௌமியம் என்று சிலரும் கூறுகின்றனர்.
இந்த சமயங்களுக்குள் அடிதடி நிறையவே நடந்துள்ளது. அதிலும் சைவமும் வைணவமும் மிக அதிகமாக பூசலை ஏற்படுத்தி பல கொலைகளையும் நடத்தியுள்ளது. கமலஹாசனும் தனது 'தசாவதாரத்தில்' சிறிதாக இந்த நிகழ்வுகளை தொட்டிருப்பார். திருமூலர் வாழ்ந்த காலத்தில் இந்து ஆறு சமயங்களே மக்களின் பயன் பாட்டில் இருந்துள்ளன. எனவே தான் அதனை தனது பாட்டில் எடுத்தாள்கிறார் திருமூலர்.
பாடலின் முதல் இரண்டு வரிகளில் வீடுபேறு எனும் முக்தி நிலையை ஒரு பெருநகரமாகவும், ஆறு சமயங்களையும் அந்த நகரத்தைச் சென்றடையும் ஆறு வீதிகளாகவும் உருவகப் படுத்துகிறார் திருமூலர். பெரும்பாலான கிராமங்களுக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கும். கிராமத்தின் உள்ளே செல்லும் அந்த வீதியில்தான் வெளியே வரவும் முடியும். ஆனால் பெரு நகரங்களைப் பொறுத்தவரையில் பல வீதிகள் பல இடங்களிலிருந்து அங்கே வந்து சேரும் நகரத்தின் அளவும் முக்கியத்துவமும் அதிகமாக அதிகமாக, அதில் வந்து சேரும் வீதிகளின் எண்ணிக்கையும் அதிகமாகும்.
ஊருக்குச் செல்ல பல வழிகள் இருப்பது போல் கடவுளை அடைய பல சமயங்கள் நம்மிடையே உள்ளன. அதில் இரு பெரும் சமயங்களான சைவமும் வைணமும் நீ பெரிதா நான் பெரிதா என்று போட்டியிட்டு உயிர் பலி வரை சென்றதை தனது வாழ்நாளில் பார்க்கிறார் திரு மூலர். இந்த கொடுமையை கடவுளின் பெயரால் நிகழ்த்திய மாபாதகர்கள் அசையாத மலையைப் பார்த்து குரைக்கும் நாயைப் போன்றவர்கள் என்கிறார் திரு மூலர். குரைத்து குரைத்தே ஒரு பெரிய மலையை வீழ்த்திவிட முடியும் என்று நினைக்கும் நாய்களுக்கு ஒப்பானவர்கள் இவர்கள் என்பதே இந்த நான்காவது வரியின் பொருளாகும்.
பல வழிகள் இருந்தாலும் சென்றடையும் இலக்கு ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால் சைவ வைணவ கடவுள் கொள்கையாகட்டும், மனு ஸ்ருமிதியாகட்டும், நான்கு வேதங்களான ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களாகட்டும் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களாகட்டும் ஒவ்வொன்றும் தனித் தனி ஊருக்கு வழி காட்டுகின்றன. இதை நீங்களும் மறுக்க முடியாது.
இரு சமயங்களோடுதான் விட்டு தொலைத்தீர்களா? அந்த சமயத்திலும் சாதிகளை உண்டாக்கி அந்த சாதிகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு கடவுளையும் உண்டாக்கி 'நீ சூத்திரன்: நீ ஷத்திரியன், நீ பஞ்சமன், நான் பிராமணன்' என்று மக்களை பிளவு படுத்தி கடவுளை வணங்கக் கூட தலித்களை அனுமதிக்காத மாபாவிகளைப் பார்த்துதான் 'மலையைப் பார்த்து குரைக்கும் நாய்கள்' என்கிறார் திரு மூலர். கடவுளின் பெயரால் சமணத்தையும் பவுத்தத்தையும் இருந்த சுவடே தெரியாமல் தமிழகத்தில் அழித்து எண்ணாயிரம் சமணர்களை கழுவில் ஏற்றிக் கொன்றார்களே அந்த மாபாவிகளைப் பார்த்துதான் 'மலையைப் பார்த்துக் குரைக்கும் நாய்கள்' என்கிறார் திருமூலர்.
திரு மூலர் வாழ்ந்த காலத்தில் அராபியாவும் பல தெய்வ வழிபாட்டில்தான் இருந்தது. 1400 ஆண்டுகளுக்கு முன்புதான் நபிகள் நாயகம் இஸ்லாத்தை அந்த மக்களுக்கு போதிக்கிறார். நபிகள் நாயகம் காலத்துக்கு முன்பே திரு மூலர் திரு மந்திரத்தை சொல்லி விட்டு சென்றுள்ளார். எனவே எந்த வகையில் பார்த்தாலும் திருமூலர் இஸ்லாமியர்களை சொல்லவில்லை. மனிதனை வர்ணாசிரமத்தால் நான்கு வர்ணங்களாக பிரித்து அதனை இன்று வரை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் மனிதர்களை நோக்கித்தான் 'நாய்கள்' என்கிறார் திருமூலர். அன்பு ராஜ் என்று புனை பெயரை வைத்திருக்கும் நீங்கள் இந்துத்வாவை தூக்கிப் பிடிப்பதால் கண்டிப்பாக வர்ணாசிரமத்துக்கு வக்காலத்து வாங்குவீர்கள். இவ்வாறு கடவுளை பல கூறுகளாக பிரித்து மனிதர்களின் தொழிலை வைத்து ஏற்ற தாழ்வுகளை உருவாக்கி அதற்கு ஆதரவும் நல்கிக் கொண்டிருக்கும் அன்பு ராஜ் போன்றவர்களைப் பார்த்தே 'குரைக்கும் நாய்கள்' என்கிறார் திரு மூலர்.
இனி இஸ்லாமிய கருத்தை எவ்வாறு திரு மூலர் தனது பாடலில் கொண்டு வருகிறார் என்பதையும் பார்போம்.
"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி யில்லைநுஞ் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே" (திருமந்திரம் - 2104)
Labels:
கார்ட்டூன்கள்,
தமிழர்கள்,
திரு மந்திரம்,
விவாதம்
Wednesday, December 31, 2014
யான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம் - திருமந்திரம்!

யான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடில்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே.
-திருமூலரின் திருமந்திரப் பாட்டு
"இறைவனின் திருவருளால் நான் அந்த இன்பத்தைப் பெற்றேன். இந்த இன்பத்தினை இந்த மண்ணுலகமும் பெறவேண்டும். பெருமை கொண்ட வேதத்தின் உண்மைப் பொருளை இதுதான் என்று எடுத்துக் கூறினால் அதுவே நாவாகிய தசையினை நாம் பெற்றதன் பலனை அடைந்தவராவோம். அவ்வாறு அந்த இறை வேதமாகிய உண்மைகளை நாம் மேலும் மேலும் நேசிக்க அந்த இறைவனின் திருப் பொருத்தத்தை அளவில்லாமல் அடையலாம்." என்கிறார் திருமூலர்.
இதனை ஒரு அழகிய கதையின் மூலம் மேலும் அறிந்து கொள்வோம்.
பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். தாகத்தால் உயிர் போய்விடுமோ என்று நினைத்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது.
மிகவும் கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான். அங்கே ஒரு கையால் அடித்து இயக்கும் பம்பும், அதன் அருகில் ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன.
ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அந்தப் பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்."...
அந்தப் பம்போ மிகவும் பழையதாக இருந்தது. அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது சந்தேகமாக இருந்தது.
அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.
அவன் யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது.
ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்தப் பம்பு இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால், இனி தன்னைப் போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போகத் தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது.
அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்தத் தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது.
தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரையும் நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனமும் நிறைந்திருந்தது.
நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது.
இந்தக் காலக் கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது.
"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?
இது போன்று தமிழ் மொழியில் எண்ணிலடங்கா ஏகத்துவ கொள்கையையும் நற்பண்புகளையும் போதிக்கும் பல நுல்கள் உள்ளன. ஆனால் ஆரிய படையெடுப்பால் பல நூல்கள் ஆற்றில் வீசியும் தீயிலிட்டு கொளுத்தியும் நாசமாக்கினர் மாபாவிகள். எஞ்சியது திருக்குறள், திருமந்திரம் போன்ற மிக சொற்ப நூல்களே. அதனையும் வஞ்சகத்தால் மறைத்து புராணங்களையும் இதிகாசங்களையும் பிரபலப்படுத்தி மக்களை இன்று வரை அடிமைகளாக வைத்திருப்பவர்களை நாம் அடையாளம் கண்டு தமிழனின் உண்மை வரலாற்றை உலகுக்கு கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.
Labels:
கார்ட்டூன்கள்,
தமிழர்கள்,
தமிழ்,
திரு மந்திரம்
Tuesday, January 28, 2014
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் - திருமூலர்
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே
சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே
ஒன்றே குலமும் = ஒன்றே குலம். உயந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, உயர்ந்த மதம், தாழ்ந்த மதம் என்று ஒன்றும் கிடையாது....எல்லோரும் ஒரே குலம்.
ஒருவனே தேவனும் = கடவுள் ஒருவன் தான். இத்தனை கடவுள்கள் கிடையாது
நன்றே நினைமின் = நன்றே நினைமின். நல்லதே நினைக்க வேண்டும் - நமக்கு மட்டும் அல்ல மற்றவர்களுக்கும்.
நமன் இல்லை = அப்படி எல்லோருக்கும், எப்போதும் நல்லதே நினைத்து வாழ்ந்தால், இறப்பைப் பற்றிய பயம் இல்லாதிருக்கும்..
நாணாமே = வெட்கப் படாமல்
சென்றே புகும்கதி இல்லை = நல்லதை நினைப்பதை தவிர வேறே வேறு கதி இல்லை
நும் சித்தத்து = உங்களுடைய சித்தத்தில்
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே = எப்போதும் நல்லதையே நினைத்து நீங்கள் உய்யும் வழியை அடையுங்கள்
ஒன்றே குலம். உயந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, உயர்ந்த மதம், தாழ்ந்த மதம் என்று ஒன்றும் கிடையாது....எல்லோரும் ஒரே குலம். கடவுள் ஒருவன் தான். இத்தனை கடவுள்கள் கிடையாது. நல்லதே நினைக்க வேண்டும் - நமக்கு மட்டும் அல்ல மற்றவர்களுக்கும். அப்படி எல்லோருக்கும், எப்போதும் நல்லதே நினைத்து வாழ்ந்தால், இறப்பைப் பற்றிய பயம் இல்லாதிருக்கும்.. வெட்கப் படாமல் நல்லதை நினைப்பதை தவிர வேறே வேறு கதி இல்லை. உங்களுடைய சித்தத்தில் எப்போதும் நல்லதையே நினைத்து நீங்கள் உய்யும் வழியை அடையுங்கள்.
இவ்வளவு அழகாக ஓரிறைக் கொள்கையை நமது முன்னோர்கள் கடை பிடித்து வந்துள்ளார்கள். ஆனால் இன்று பெரும்பான்மை தமிழர்களின் இறை வணக்கங்களை திருமூலரின் வாக்கோடு ஒப்பிட்டு பார்த்தால் எந்த அளவு முரண்பட்டு உள்ளோம் என்பது தெரிகிறதல்லவா?

Sunday, March 25, 2012
மார்க்கத்தின் குருவானவர் எப்படி இருக்க வேண்டும்? -திருமந்திரம்
குரு என்பவர் மட்டுமே இறை உபதேசம் பண்ண இயலும். குரு இறைநிலையை உணர்ந்தால் மட்டுமே தன்னுடைய சிஷ்யனுக்கு உண்மையை உபதேசிக்க இயலும். அதனால் தான் திருமூலர்:
குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்வார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடுங் குழிவிழுமாறே – 1680 , திருமந்திரம்
வேடதாரிகளை விட்டுவிடுங்கள் அவர்கள் குருட்டு வழியினர். குருடனுக்கு குருடன் வழி காட்டினால் இருவரும் வீழ்ந்து அழிவர்." என்கிறார் திருமூலர்.
கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக
உள்ள பொருளுடல் ஆவியுடன் ஈக
எள்ளத் தனையும் இடைவிடாதே நின்று
தெள்ளி யறியச் சிவபதந்தானே.
1693 : -திருமந்திரம் 6ம் தந்திரம்
விளக்கம்:
குருவாக ஒருவனை அவசரப்பட்டுத் தேர்ந்தெடுக்கலாகாது. மிக நன்றாக யோசித்துத் தெளிந்த பின்னரே ஒருவனைக் குருவாகக் அடைதல் வேண்டும். அப்படிப் பெறப்படும் குருவானவன் நல்லவனாய், நாம் அறியாதவற்றை அறிந்தவனாய், நமக்கு அவற்றை எடுத்துச் சொல்பவனாய், நம்மை நன்னெறிப்படுத்துவனாய், குற்றமில்லாதவனாய், நமக்குப் பிறவிப் பயன் கொடுப்பவனாய் அமைதல் வேண்டும்.
திருமந்திரத்தின் இந்த இரண்டு பாடல்களும் முகமது நபிக்குப் பொருந்தி வருவதை எண்ணி வியக்கிறோம். ஒரு இறைத்தூதர் எப்படி இருக்க வேண்டும். எப்படி வாழ வேண்டும். என்ன விஷேச சக்திகளை பெற்றிருக்க வேண்டும் என்று திரு மூலர் அழகாக இந்த பாடலில் வர்ணிக்கிறார். நமது தமிழ் மொழிக்கு வந்த இறைத் தூதரின் இலக்கணங்கள் இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்று தமிழில் இறங்கிய இறை வேதம் பட்டியலிட்டிருக்கலாம். அதையே திரு மூலர் தனது பாடலில் எடுத்தாண்டிருக்கிறார் என்று நான் எண்ணுகிறேன்.
-----------------------------------------------------------
முகமது நபி அவர்களுக்கு ஆடு ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்பொழுது உணவுகள் குறைவாக இருந்த காலம். தமது குடும்பத்தாரிடம் 'இந்த ஆட்டை சமையுங்கள்' என்று கூறினார்கள். பெரிய பாத்திரம் ஒன்று இருந்தது. அதில் அந்த உணவு வைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது. உணவு கிடைக்காத தோழர்கள் எல்லாம் அழைக்கப்பட்டனர். முகமது நபி அவர்களும் அவர்களுடன் அமர்ந்து கொண்டனர். உணவுத் தட்டைச் சுற்றி அனைவரும் அமர்ந்து சாப்பிடலானார்கள். கூட்டம் அதிகமாக இருந்ததால் முகமது நபி அவர்கள் மண்டியிட்டு அமர்ந்து மற்றவர்களுக்கு இடம் கொடுத்தார்கள். அப்போது ஒரு கிராமவாசி 'என்ன இப்படி உட்கார்ந்திருக்கிறீர்கள்?' என்று கேட்டார். அதற்கு நபி அவர்கள் 'இறைவன் என்னை அடக்கு முறை செய்பவனாகவும் மமதை பிடித்தவனாகவும் ஆக்கவில்லை. பெருந்தன்மை மிக்க அடியானாகவே ஆக்கியுள்ளான்.' என்று விடையளித்தார்.
-ஆதாரம் -அபுதாவுத் 3773, பைஹகீ 14430
பலரும் அமர்ந்து சாப்பிடும் ஒரு தட்டில் மேல் நிலையில் உள்ளவர்கள் ஒன்றாக சாப்பிடுவதை கவுரவக் குறைவாகவே கருதுவார்கள். மேலும் அன்றைய சமூக அமைப்பில் மண்டியிட்டு அமர்வது தாழ்த்தப்பட்டவர்களுக்கான பழக்கமாக இருந்தது. இதனால்தான் அந்த கிராமவாசி கூட அமர்ந்ததை குறை காண்கிறார். தாம் ஒரு ஆட்சியாளர் என்றோ மதத்தின் தலைவர் என்றோ, வீட்டின் உரிமையாளர் என்றோ முகமது நபி அவர்கள் நினைக்கவில்லை. மற்றவர்களைப் போல் பசித்திருக்க்க் கூடிய ஒரு மனிதனாக மட்டும் தான் தம்மை முன்னிறுத்துகிறார்கள். இப்படி ஒரு பண்பான ஆட்சியாளரை நாம் பார்த்திருக்கிறோமா?
ஒரு மனிதர் முதன் முதலாக முகமது நபி அவர்களைச் சந்திக்க வருகிறார். பொதுவாக மன்னர்கள் முன்னிலையில் உடலை வளைத்து பவ்யமாக குடி மக்கள் நிற்பதுதான் அன்றைய வழக்கம. முகமது நபியையும் அதுபோல் நினைத்துக் கொண்டு உடல் நடுங்கி பய பக்தியுடன் வந்தார். 'சாதாரணமாக இருப்பீராக! உலர்ந்த இறைச்சியைச் சாப்பிட்டு வந்த குறைஷிக் குலத்துப் பெண்ணுடைய மகன்தான் நான்.' என்று கூறி அவரை சகஜ நிலைககு கொண்டு வந்தார்கள்.
-நூல் இப்னுமாஜா 3303.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நமது தமிழ்நாட்டு முதல்வர் மேடையில் பேசும் போது மற்ற அமைச்சர்கள் நின்று கொண்டிருப்பதை பார்க்கிறோம். முதல்வரின் கால்களில் விழுவதையும் பார்க்கிறோம். அதுவும் இந்த இருபதாம் நூற்றாண்டில். ஆனால் முகமது நபியோ ஒரு மன்னர். அதிலும் மதத் தலைவர் தனது குடிமக்களிடம் எவ்வளவு அன்யோன்யமாக பழகியிருக்கிறார்கள் என்பதை இந்த சம்பவம் விளக்குகிறது.
தரையில் எதுவும் விரிக்காமல் அமர்வார்கள். தரையில் அமர்ந்து சாப்பிடுவார்கள். ஆட்டில் தாமே பால் கறப்பார்கள். அடிமைகள் அளிக்கும் விருந்தையும் ஏற்பார்கள்.
-தப்ரானி 12494
அகழ் யுத்தத்தின் போது முகமது நபி அவர்களும் மக்களுடன் சேர்ந்து அகழ் வெட்டினார்கள். மண் சுமந்தார்கள். முகமது நபி அவர்களின் வயிற்றை மண் மறைத்தது.
-புகாரி 2837, 3034,4101
முகமது நபி அவர்கள் மதினா வந்தவுடன் பள்ளிவாசலைக் கட்டிய போது அவர்களும் மக்களோடு சேர்ந்து கல் சுமந்தார்கள்.
-புகாரி 3906
இப்படி எந்த வேலையிலும் பின் வாங்காமல் மக்களோடு மக்களாக ஒன்றரக் கலந்திருந்ததுதான் முகமது நபி அவர்களின் வாழ்க்கையாக இருந்தது. எனவே இன்று வரை அவரது புகழ் மேலும் மேலும் எட்டுத் திக்கும் பரவிக் கொண்டிருக்கிறது. ஒரு இறைத்தூதர், ஒரு குரு எவ்வாறு தனது மக்களுக்கு இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாக முகமது நபி அவர்கள் திகழ்ந்து வருகிறார.
--------------------------------------------------------
டிஸ்கி:
ஒரு அவசர உதவி!
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஷெரீப் என்ற பெயருடைய ஒரு சகோதரர் டூ வீலரில் போகும் போது லாரி மோதி அந்த இடத்திலேயே இறந்துள்ளார். கடந்த 10 நாட்களாக ரியாத் சுமைசி ஹாஸ்பிடலில் உடல் உள்ளது.
அவருடைய ஸ்பான்ஸர் தமாம். அங்கிருந்து ஓடி வந்து ரியாத்தில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த ஏழு வருடமாக ஊர் செல்லவில்லை. வயது சுமாராக 45 இருக்கும்.
அவரது செல் நம்பர் 0542039717. அதுவும் பொலீஸ் வசம் உள்ளது. தெரிந்தவர்கள் உடன் தொடர்பு கொண்டு உடலை அடக்கம் பண்ண ஏற்பாடு செய்யவும்.
.

Tuesday, February 14, 2012
தேமதுரத் தமிழான திருமந்திரத்தில் நனைவோமா!
படமாடக் கோயில் பகவற்கொன் றீயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கங் காகா
நடமாடக் கோயில் நம்பர்க்கொன் றீயில்
படமாடக் கோயில் பகவற்க தாமே””””””
-திருமூலர்-திருமந்திரம்
படமாடக் கோயில்: கோயிலில் உள்ள கடவுள் சிலை என்று பொருள் .
நடமாடக் கோயில்: அகத்தில் கடவுளைக் கொண்ட மனிதன் என்று பொருள் .
கோயிலில் உள்ள கடவுள் சிலைகளுக்கு
பலவிதமான வாசனை திரவியங்களைக் கொண்டு
பன்னீர் , இளநீர் , பால் , சந்தனம், விபூதி
போன்றவற்றைக் கொண்டு அபிஷேகம் செய்கிறோம் .
சாமி சிலைகளை குளிப்பாட்டுகிறோம் .
பலவிதமான அணிகலன்களை அணிவிக்கிறோம்
கோயிலில் இருக்கும் சாமி சிலைக்கு உணவு படைக்கிறோம்
இவற்றையெல்லாம் கோயிலில் உள்ள சாமி சிலைக்கு செய்வதால் என்ன பயன்? இவற்றையெல்லாம் கல்லாக இருக்கும் சிலைக்கு செய்வதால் என்ன பயன்? ஒரு பயனும் இல்லை .
கோயிலில் உள்ள கடவுளுக்கு செய்வது வறுமையில் வாடிக் கொண்டிருக்கும் ஏழைக்கு சென்று சேர்வதில்லை. அதாவது நடமாடும் மனிதனுக்கு பயன் இல்லை என்கிறார் திருமூலர் .
நடமாடக் கோயில் நம்பர்க்கொன் றீயில்
படமாடக் கோயில் பகவற்க தாமே
உண்ண வழி இல்லாமல் தவிக்கும் ஏழைக்கு உணவு கொடுக்க வேண்டும்.
வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவருக்கு ,பொருளாதார உதவி செய்ய வேண்டும். வறுமையில் வாடும் ஓர் ஏழைக்கு உதவிகள் செய்ய வேண்டும்.
உண்ண உணவு இல்லாதவர்க்கு உணவு கொடுத்தால்;
உடுத்த உடை இல்லாதவர்க்கு உடுத்த உடை கொடுத்தால்;
இருக்க இடம் இல்லாதவர்க்கு இருக்க இடம் கொடுத்தால்;
அதை விட புண்ணியம் வேறு இல்லை. அதை விடுத்து சிலைகளுக்கு
செலவு செய்வதால் என்ன பயன்? என்று கேட்கிறார் திருமூலர். இவ்வளவு அழகாக சிறியவர்களுக்கும் விளங்கும் வண்ணம் இறை வழிபாட்டை போதித்திருக்க இன்று நாம் கடவுள் பெயரால் அழிக்கும் உணவுப் பொருட்கள் எத்தனை எத்தனை!
திரு மந்திரத்தை அருளிய திரு மூலரைப் பற்றி பல கதைகள் உலவுகின்றன. ஆனால் ஆதாரமான நூல்கள் அவரது வரலாறை உறுதியிட்டு கூறவில்லை. இவர் நந்தீசரின் சீடராக அறியப்படுகிறார். திருமந்திரம் கூட நமது தமிழ் மொழிக்கு அருளப்பட்ட வேதமாகக் கூட இருக்கலாம். ஒரு சில வசனங்கள் சிதைந்திருப்பது மனிதக் கரங்கள் புகுந்ததாகவும் இருக்கலாம். இறைவனே அறிவான். இவரால் எழுதப்பட்ட மூவாயிரம் பாடல்களை 'மந்திர மாலை' என்று அழைத்தனர். பிற்காலத்தில் அதன் பெயரை 'திரு மந்திரம்' என்று மாற்றி அதனை ஒன்பது பகுதிகளாக பிரித்தனர்.

'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்றும் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றும் கூறும் மந்திரங்கள் தமிழகம் முழுதும் பிரபல்யம். தமிழகத்துக்கு மட்டும் அல்லாமல் முழு உலகுக்கும் அறிவுரை கூறும் நூலாக திரு மந்திரம் உள்ளது. குர்ஆன் பைபிள் வசனங்கள் பலவற்றோடு மிகவும் ஒத்துப் போகிறது.
-----------------------------------------------------------
தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே! அதைப் பிறருக்கு மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச் சிறந்தது. உங்கள் தீமைகளுக்கு இதைப் பரிகாரமாக ஆக்குகிறான். நீங்கள் செய்வதை இறைவன் நன்கறிந்தவன்.
-குர்ஆன் 2:271
2:177. புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; தன் பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்); இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் பயபக்தியுடையவர்கள்.
- குர்ஆன் 2:177
நூல்: முஸ்லிம் 5021
நபி அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் ஒரு மனிதரிடம், ஆதமின் மகனே! நான் நோயுற்றிருந்த போது என்னை உடல் நலம் விசாரிக்க நீ வரவில்லையே ஏன்? என்று கேட்பான். அதற்கு மனிதன், என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உன்னை நான் எவ்வாறு உடல் நலம் விசாரிப்பேன்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், உனக்குத் தெரியுமா? என் அடியானான இன்ன மனிதன் நோய்வாய்ப்பட்டிருந்த போது அவனிடம் சென்று நீ நலம்விசாரிக்கவில்லை. தெரிந்து கொள்! அவனை உடல் நலம் விசாரிக்க நீ சென்றிருந்தால் அவனிடம் என்னைக் கண்டிருப்பாய் என்று கூறுவான்.
மேலும் அல்லாஹ், ஆதமின் மகனே! நான் உன்னிடம் உணவு கேட்டேன். ஆனால், நீ எனக்கு உணவளிக்கவில்லை என்பான். அதற்கு மனிதன், என் இறைவா! நீ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க இயலும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், உனக்குத்தெரியுமா? உன்னிடம் என் அடியானான இன்ன மனிதன் உண்பதற்கு உணவு கேட்டான். ஆனால், அவனுக்கு நீ உணவளிக்கவில்லை. தெரிந்து கொள்! அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய் என்று கூறுவான்.
மேலும் ஆதமின் மகனே! நான் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டேன். ஆனால், எனக்கு நீ தண்ணீர் தரவில்லை என்று அல்லாஹ் கூறுவான். அதற்கு மனிதன், என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு தண்ணீர் தர இயலும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், என் அடியானான இன்ன மனிதன் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டான். ஆனால், அவனுக்கு நீ தண்ணீர் கொடுக்கவில்லை. தெரிந்து கொள்! அவனுக்குக் குடிப்பதற்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய் என்று கூறுவான்.
இந்த மூன்றையும் நோக்குங்கால் இஸ்லாம் ஏழைகளுக்கு உதவுவதையே இறைவனுக்கு செய்யும் தொண்டாக போதிக்கிறது. இந்துக்களின் பாலாபிஷேகத்தைப் பார்த்த ஒரு சில முஸ்லிம்கள் நமக்கும் இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தில் உருவாக்கிக் கொண்டதுதான் கொடி ஏற்றம், சந்தனக் கூடு எடுத்தல். அங்கு தேர்: இங்கு சந்தனக் கூடு: அங்கு பாலாபிஷேகம்: இங்கு சந்தனாபிஷேகம்:
இரண்டு மதங்களுமே இது போன்று சாப்பிடும் பொருட்களை வீணாக்குவதை தடுக்கிறது. இப்படி பொருட்களை வீணாக்குவதை முகமது நபி வன்மையாக கண்டித்திருக்கிறார்.

அடுத்து கிறித்தவ மதத்தையும் பார்ப்போம். அங்கும் ஏழைக்கு செய்யும் ஊழியமே இறைவனுக்கு செய்யும் ஊழியமாக போதிக்கப்படுகிறது.
நூல் : பைபிள்
மத்தேயு : அதிகாரம் 25
31 ' வானதூதர் அனைவரும் புடை சூழ மானிட மகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார்
.41 பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ' சபிக்கப் பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள்.42 ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை.43 நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை ' என்பார்.44 அதற்கு அவர்கள், ' ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்? ' எனக் கேட்பார்கள்.45 அப்பொழுது அவர், ' மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' எனப் பதிலளிப்பார்.
திரு மந்திரத்தின் கருத்தும் திருக்குர்ஆனின் கருத்தும் பைபிளின் கருத்தும் எந்த அளவு ஒத்துப் போகிறது பார்த்தீர்களா!
முன்பு திண்ணையில் ஒரு இந்து நண்பர் 'நம் தமிழ் மொழியில் எவ்வளவோ அறிவுரைகள் கொட்டிக் கிடக்க எங்கோ இருக்கும் அரபு கலாசாரத்தை ஏன் தூக்கிப் பிடிக்கிறீர்கள்?' என்று கேட்டார். நல்ல கேள்வி: எனது முன்னோர்களான திராவிடர்கள் மிகச் சிறந்த கல்வியறிவும் மார்க்க அறிவும் பெற்றிருந்தனர். 2000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கலாசார புரட்சியால் எனது முன்னோர்களின் நூல்கள் மறைக்கப்பட்டன: கொளுத்தப்பட்டன: எஞ்சிய திருக்குறள் திரு மந்திரம் போன்ற ஒன்றிரண்டு நூல்கள் மட்டுமே தற்போது நமது கைக்கு கிடைக்கிறது. திரு மநதிரத்தின் மேலும் அதிகமான பாகங்கள் நமது கைக்கு கிடைக்கவே இல்லை. போலி ஆன்மீகம் புகுந்ததால் எனது முன்னோர்கள் பூர்விகமான இந்து மதத்தை விட்டு இஸ்லாத்தை தழுவ நேரிட்டது. எனது மூதாதையர்களின் கலாசாரம் இன்று அழியாமல் இருந்திருக்குமானால் அது முழுக்க முழுக்க குர்ஆனை ஒட்டியே இருந்திருக்கும்.
இறைவனே அனைத்தும் அறிந்தவன்!

இந்து,
இஸ்லாம்,
கிறித்தவம்,
திரு மந்திரம்,
மூடப்பழக்கங்கள்
Subscribe to:
Posts (Atom)