Followers

Wednesday, October 17, 2012

ஜெர்மன் வேதியல் தொழிற்சாலையில் விபத்து!

ஜெர்மன் வேதியல் தொழிற்சாலையில் விபத்து!



மக்கள் பாதிப்படைந்து விடக் கூடாது என்பதற்காக 1400 பேரை உடனடியாக அவர்களின் வீடுகளில் இருந்து வெளியாக்கியுள்ளது நிர்வாகம். நேற்று அமெரிக்க நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் பொதுமக்கள் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. சோடியம் ஹைட்ராக்சைடால் கெமிகல் ரியாக்ஷன் ஏற்பட்டு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. வட ஜெர்மனியின் சிறிய நகரமான பேட் பாலிங் போஸ்டலில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த நிகழ்வின் எதிரொலியால் பள்ளிகள் அனைத்துக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உயிர் சேதம் எதுவும் ஏற்படாமல் கவனமாக நடந்து கொண்டுள்ளனர் நிர்வாகிகள்.


700 தீயணைப்பு வீரர்கள் கொதிகலனை குளிர்விக்க தொடர்ந்து தற்போதும் போராடி வருகின்றனர். வெப்ப நிலை அதிகரித்து கொதிகலன் வெடிக்கும அபாயம் உள்ளதால் நிலைமை சற்று அபாயத்தில்தான் உள்ளது.

இதனால் குறிப்பிடும்படியான பாதிப்பு இல்லை என்றாலும் இந்த செய்தியை படித்தவுடன் எனது சிந்தையில் கூடங்குளமே முதலில் பளிச்சிட்டது. மிக பாதுகாப்பான குறைந்த மக்கள் தொகை உடைய ஜெர்மனிக்கே அவ்வப் போது இது போன்ற சிக்கல்கள்.

ஆனால் நம் கூடங்குளத்தில் சிலரது புண்ணியத்தால் உள்ளூர் மக்களின் எதிர்ப்பையும் அணுஉலை கணிசமாக சம்பாதித்துள்ளது. அண்டை நாடுகளின் உறவும் குறிப்பிடும்படியாக இல்லை. எனவே நமது அரசு இந்த அணு உலையை செயல்படுத்தினால் உச்சகட்ட பாதுகாப்பை உறுதி செய்து விட்டே உற்பத்தியை துவங்க வேண்டும்..

-----------------------------------------------

“இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சமும், எரிசக்திப் பற்றாக்குறையும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன! இந்தியாவைப் பொருத்த மட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை! பரிதிக் கனலைப் பயன்படுத்தியும், அணுசக்தி வெப்பத்தை உபயோகித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும். இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங்களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே உருவாக்கப்பட வேண்டும்.”

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம்.

“2025 ஆண்டில் நீர்ப் பற்றாக்குறைப் பிரச்சனை அசுர வடிவ மடைந்து, 50 மேற்பட்ட உலக நாடுகளில் நீர்ப் பஞ்சம் உண்டாகி 2.8 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்.”

டாக்டர் எஸ். கதிரொளி, டைரக்டர், சென்னைத் தேசீய கடற்துறைப் பொறியியல் கூடம்.

ஹிரோஷிமா, நாகசாகியில் போட்ட அணு ஆயுதங்களால் ஆயிரக் கணக்கான மாந்தர் மாண்டு, கதிர்க்காயங்களால் துன்புற்று வரும் ஜப்பான் பூகம்ப சுனாமித் தீவுகளில் தற்போது 50 அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இயங்கி 40,000 MWe ஆற்றல் மின்சாரத்தைப் (30%) பரிமாறி வருகின்றன. அவற்றுள் கூடங்குள அணு உலைகள் போல் ஆற்றல் கொண்ட (> 1100 MWe) 14 அசுர அணுமின்சக்தி நிலையங்கள் இயங்கி வருகின்றன. அனைத்து நிலையங் களும் கடல்நீரைத் வெப்பத் தணிப்பு நீராகவும், சில நிலையங்கள் கடல்நீரைச் சுத்தீகரித்து உப்பு நீக்கிய நீரையும் பயன்படுத்தி வருகின்றன.

1950 ஆம் ஆண்டுமுதல் 30 உலக நாடுகளில் 435 அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இயங்கி 370,000 MWe (16%) ஆற்றலைப் பரிமாறி வருகின்றன. மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் ஆய்வுகள் நடத்திக் கொண்டு வருகின்றன.

அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபிள் நிலையம், ஜப்பானில் புகுஷிமா அணுமின் உலைகள் மட்டுமே சற்று பாதுகாப்பற்றவையாக கருதப்படுகின்றன.

இவை எல்லாம் கொஞ்சம் ஆறுதல் அளித்தாலும் இவ்வளவு பயத்தோடு இந்த விளையாட்டு தேவைதானா? என்று உள் மனது கூறுகிறது. திட்டம் ஆரம்பிக்கும் போது மக்களுக்கு அந்த அளவு விழிப்புணர்வு இல்லை. தற்போது மில்லியன் கணக்கில் பணத்தை உட்கொண்டு விட்டதற்கு பிறகு இது வேண்டாம் என்று சொல்வதும் ஒரு முரண்நகையாகவே படுகிறது.

ஆம்...எதில்தான் ஆபத்தில்லை. எதையும் துணிவோடு எதிர் கொள்வோம். வேறு வழியில்லை......

----------------------------------------------





Tuesday, October 16, 2012

விவசாயி தற்கொலை செஞ்சுகிட்டா அது அவன் தலைவிதி!

நரேந்திர மோடியின் பரமபத விளையாட்டு!



விவசாயி தற்கொலை செஞ்சுகிட்டா அது அவன் தலைவிதி!

இப்படி ஒரு முத்தை உதிர்த்தது வேறு யாருமல்ல. குஜராத் பிஜேபியின் தலைவர் ஆர்.சி.பல்து இந்த அரிய கருத்தை கூறி விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்த்துள்ளார். குஜராத்தில் பாலாறும் தேனாறும் ஓடுவதாக நமது மீடியாக்கள் ஏகத்துக்கும் மோடியை தூக்கி வைத்து கொண்டாடி வரும் வேலையில் சௌராஷ்ட்ராவில் 8 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்கு என்ன நடவடிக்கை எடுப்பது என்பதைப் பற்றி யோசிப்பதை விட்டு பக்கத்து மாநிலங்களான ஆந்திராவில் இதை விட அதிகம். இது போன்ற நிகழ்வுகள் அவர்களின் விதியினால் ஏற்படுகிறது. என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார் ஆர் சி பல்து.



மக்கள் தலைவர்களை ஆட்சியில் அமர்த்துவது அவர்களின் சிரமங்களை நீக்கி வைப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான். இது போன்ற சோகங்கள் அவர்களின் விதி என்று சொன்னால் இவர்கள எதற்கு ஆட்சியில் அமர்ந்திருக்க வேண்டும்?

குஜராத் காங்கிரஸின் பேச்சாளர் மோத்வாதியா இது பற்றி கூறும் போது ' விவசாயிகளின் பிரச்னையை தீர்க்க வழி சொல்வதை விட்டு விட்டு அதனை விதியின் மேலும் கடவுளின் மேலும் பழியை போட்டு பிஜேபி தப்பிக்க பார்க்கிறது' என்று குற்றம் சாட்டுகிறார்.

டெக்கான் ஹெரால்ட் தனது செய்தியில் ஒரு மாதத்தில் மட்டும் 11 விவசாயிகள் சௌராஷ்ட்ராவில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

பரிவர்தன் பார்டியின் தலைவர் கேசுபாய் பட்டேல் தனது செய்தியில் 'விவசாயிகளின் தற்கொலைகளுக்கு முழு காரணம் மோடியின் திறமையற்ற ஊழல் மிகுந்த ஆட்சியே! மக்கள் ஒரு வித பீதியில் உள்ளனர். குண்டர்களின் ராஜ்ஜியமாக போய் விட்டது குஜராத்.' என்கிறார்.

மோடியின் தலைமையின் கீழ் குஜராத் வளர்ச்சி அடைந்துள்ளது என்று பாஜகவினரும் ஊடகங்களும் குஜராத் மாநிலத்திற்கு வெளியே பிரச்சாரம் செய்து வந்தாலும் அம்மாநிலத்திற்குள் நிலைமை வேறுமாதிரி இருக்கிறது. வளர்ச்சி என்ற பெயரில் கடற்கரை நிலங்களும் விவசாய நிலங்களும் பெரும் வணிக நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டிருப்பதால் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் தொழிலாளர்களின் கோபப் பார்வைக்கு மாநில அரசு ஆளாகியுள்ளது.

கடலும் கடல் சார்ந்த இடங்களும் மீனவர்களுக்குச் சொந்தமானது என்ற இயற்கையான நடைமுறைக்கு மாற்றமாக , கட்ச் மற்றும் செளாராஷ்டிரா மாவட்டங்களில் உள்ள கடல் பகுதிகள் பெரும் வணிக நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டன. சௌராஷ்டிரா பகுதியில் நிர்மா சிமெண்ட் ஆலைக்கு நிலம் ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ஒன்றிணைந்து போராடி வருகின்றனர். மற்ற விவகாரங்களில் அவர்கள் ஒன்றாக இணைந்து போராடாவிட்டாலும் அவர்களிடம் அரசுக்கு எதிரான நிலையே உள்ளது.

வருகிற சட்டமன்ற தேர்தலில் கணிசமான பிஜேபியின் வாக்குகளை கேசுபாய் பட்டேல் பிரிக்க சாத்தியம் உண்டு எனவே இம்முறை மோடி வருவது கேள்விக் குறியே என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

http://www.deccanherald.com/content/273527/farmer-suicides-gujarat-go-up.html


http://indiatoday.intoday.in/story/gujarat-bjp-chief-blames-it-on-farmers-fate-for-their-suicide/1/214167.html

ஐஏஎஸ் அதிகாரி திரு சஞ்சீவ் பட் நரேந்திர மோடிக்கு எழுதிய பகிரங்க கடிதம்!

Gujarat’s suspended IPS officer Sanjiv Bhatt, who had once accused chief minister Narendra Modi of instructing bureaucrats and top cops to allow Hindus to vent out their anger against the minority community, has written scathing open letters to Modi and Maya Kodnani, the BJP MLA, who has been sentenced 28 years imprisonment in the 2002 Naroda Patiya massacre case.

In his letter to Modi, Bhatt wrote, “You must have been apprised about the punishment meted out to your loyal lieutenants Dr Maya Kodnani and Babu Bajarangi, as well as the misguided foot-soldiers of misconceived Hindutva, who have now been condemned to spend a life in prison. Was it perchance that you smartly distanced yourself from all these unfortunate people at an opportune moment?”

Till late Saturday night, neither Modi nor Kodnani, or anybody from the government, had reacted to Bhatt’s letter.

“Have you even once thought about the plight of the wives and children of your onetime adulators who have been condemned for life?” Bhatt wrote to Modi.
Mincing no words, Bhatt said, “Have you ever looked at the reflection of the real face behind the mask? Have you ever introspected about your true self concealed behind the meticulous imagery created by your media managers?”

An alumni of Indian Institute of Technology, Bombay (IITB), Bhatt chose his words carefully, asking, “Have you even once thought whether it is really worth it to sustain power, even if it requires sacrificing fellow human beings at the alter of expediency? Have you ever considered, even once, whether it is alright to facilitate or connive in the killing of another human being just because he does not conform to your beliefs?”

Bhatt asked Kodnani how as a woman and a doctor she could incite the kind of violence that took place in Naroda Patiya. “Have you ever thought is it ok to kill another human being just because someone directed you to wreak vengeance on a particular community?” he asked Kodnani, adding, “Did it ever occur to you that those who patronised you, might one day betray and sacrifice you for political expediency?”

Mr. Narendra Modi,

Some very evocative thoughts shared by my dear friend and practicing Gandhian, Mr. Shrikant Barhate from Wardha in Maharashtra, has inspired me to write this open letter to you.

You have recently embarked upon the Yuva Vikas Yatra in the name of Swami Vivekananda with much fanfare and at a tremendous burden to the Public exchequer. It is perceived that you have chosen Swami Vivekananda to unscrupulously paraphrase and propagate your version of ‘Weltherrschaft’ (World Domination) and forward your ideology of ‘Lebensraum’ (Living Space), sterilized of sections of Society who do not agree with your perverted interpretation of Hinduism and your brand of divisive Nationalism.
You are widely believed to be reasonably intelligent and well read. You are said to have been trained and indoctrinated by the RSS. However it seems that you are not adequately acquainted with the major philosophical underpinnings of the thought systems of Hindu Philosophy. Inadequacy of such knowledge and awareness would have been acceptable in a benign Shaiva, Vaishnava, Shakta, or Smarta. But you, Mr. Modi, apparently seem to be none of these. You are widely perceived as a very intelligent and diabolic political leader who wants to rule on the basis of myopic segregation and divisive hatred. Since you chose Vivekananda to present your sophistries in front of the religiously inclined Gujarati populace, it is important to remind you that Swami Vivekananda was a seeker of truth and not a practitioner of deceit.
Do you know Mr. Modi that the paper through which Swami Vivekananda presented his idea of Hinduism to the West resolutely adopts the Advaita approach of Vedanta? Do you know that this approach is the complete antipode of the concept of discrimination on the basis of ‘Self versus the Other’ or ‘Us versus Them’? Do you know that Swami Vivekananda invoked the Krishna Yajurvediya Shwetashwataropanishad dictum that calls humanity as children of immortal bliss - Shrunvantu Vishwo Amrutasya Putra! Are you aware that the ecstasy of Swami Vivekanda’s belief is evident in his joyous proclamation of the phrase "Children of immortal bliss”! Do you, Mr. Modi, believe that all the citizens of Gujarat are children of the same divine light?
Did you ever think of Swami Vivekananda or his ideology when thousands of innocent children of divine light were mercilessly massacred under your watch or when inconvenient and expendable individuals were liquidated at your instance? Did the voice of Swami Vivekananda ever prick your conscience in the eerie silence of continuing subjugation and dominance? Why is it that most of your actions and pronouncements still propagate the divisive ideology ‘Us versus Them’.

We know that Swami Vivekananda believed that ‘Religion is the idea which is raising the brute unto man, and man unto God’. We know that Swami Vivekananda prescribed more than 100 years ago, that ‘We must not only tolerate other religions, but positively embrace them’. But you seem to have conveniently reduced God to a particular religion, a wholly misconceived religion that converts some of your enthusiastic and gullible followers in to heartless brutes who are potentially willing to kill innocent people. Where does Swami Vivekananda or his venerable ideology fit into your diabolical scheme of Realpolitik

In the humble estimate and opinion of many Indians like me, your megalomania for grandeur and the insatiable and self-consuming hunger for power can be appropriately graced by certain illustrious historical figures like Adolf Hitler, Pol Pot, Bernard Munyagishari, Radovan Karadžić, or Ratko Mladić. Any of these icons of diabolism would be appropriate mascots for the on-going, Government of Gujarat funded, Yuva Vikas Yatra.

May the divine light lead you and Gujarat from Untruth to Truth and from Darkness to Light.

God bless!
Sanjiv Bhatt IPS
Ahmedabad




http://www.hindustantimes.com/India-news/NewDelhi/Sanjeev-Bhatt-writes-open-letter-to-Narendra-Modi/Article1-922809.aspx



Sunday, October 14, 2012

ஆதி மனிதனின் உயரம் என்ன? சில தேடல்கள்.

ஆதி மனிதனின் உயரம் என்ன? சில தேடல்கள்.

முதன் முதலாக கொரில்லாக்களை பற்றிய ஆராய்ச்சியை விரிவான முறையில் மேற் கொணடவர் போஸே தயான் (Fossey Dian) என்ற பெண்மணி ஆவார். இந்த போஸே தயான் அமெரிக்காவைச் சேர்ந்த விலங்கியல் வல்லுனர் ஆவார். இவர் கொரிலாக்களைப் பற்றிய ஆய்விற்காக தன் வாழ்வின் பெரும் பகுதியை அர்பணித்தவர். இதற்கென காங்கோ மற்றும் ருவாண்டாவின் மலைக் காடுகளில் தன் பாதச் சுவடுகளை பதித்து கொரில்லாக்களைப் பற்றிய பல தகவல்களை வெளிக்கொண்டு வந்தவர். இவர் மூலமாகத்தான் கொரில்லாக்களைப் பற்றிய நிறைய தகவல்கள் தெரிய வந்தன. 1967 முதல் 1985 ஆண்டு வரை காட்டில் அமைந்த தன் ஆராய்ச்சி கூடத்தில் மர்மமான முறையில் கொல்லப்படும் காலம் வரை இந்த ஆராய்ச்சியில் மிக ஈடுபாட்டுடன் ஆய்வுகள் மேற்கொண்டார். சில ஆராய்ச்சியாளர்களால்தான் இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று விக்கி பீடியாவே கூறுகிறது. இவரது ஆராய்ச்சி முடிவு டார்வினின் பரிணாமவியலுக்கு குழி தோண்டும் விதமாக இருந்ததால் பரிணாமவியலாரே இவரை போட்டு தள்ளியிருக்கலாம்.

http://en.wikipedia.org/wiki/Dian_Fossey



இவருடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் உலக அளவில் கொரில்லாக்களைப் பற்றிய ஒரு நல்ல தெளிவைக் கொடுத்துள்ளது. அவருக்கு பிறகும் இன்னும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த கொரில்லாக்கள் டார்வினை மயக்கியதற்கு காரணம் மனிதனுக்கும் இவற்றுக்கும் உள்ள உருவ ஒற்றுமை ஒன்றைத் தவிர வேறு அறிவியல் காரணங்கள் இல்லை. கடவுளை நேரிடையாக காட்டினால்தான் அந்த இறைவனை ஒத்துக் கொள்வேன் என்பவர்கள் பரிணாமம் நடந்து குரங்கு மனிதனாக மாறியதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்காமலே 'இல்லாமலா சொல்லுவாரு' என்று கற்பனை கதைகளை இன்று வரை ஒப்பேத்தி வருவது என்ன எழவு நியாயமோ தெரியவில்லை.

பரிணாமத்தின் அடிப்படை நியதியே ஒரு உயிரினம் மாற்றங்களை உள்வாங்கி அதனை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதே, அந்த மாற்றங்கள் உயிரினத்தின் தக்க வைத்தலுக்கு நன்மை பயக்கும் போது அது தொடரும், அதே போல மாற்றங்கள் தேவை இல்லாத போது அது நீக்கப்படும். அதே போல மாற்றங்களை நிகழ்த்துவதாலும், மாற்றங்களை உள்வாங்குவதாலுமே இனம் விருத்தியடைந்து வருகின்றது எனலாம். பரிணாமத்தை தூக்கிப் பிடிப்போர் வைக்கும் வாதங்களே இது.

நாம் கேட்பது ஒரு உயிரினத்திலிருந்து மற்ற உயிரனமாக மாற புறத் தோற்றத்தில் அந்த விலங்கு 1,2,3,4 என்று பல நிலைகளை அடைந்து தற்போதய நிலையை அடைந்திருக்க வேண்டும். இதற்கு பல மில்லியன் வருடங்கள் ஆனதாக பரிணாமத் தத்துவம் கூறுகிறது. ஒரு இனம் ஒன்றாவது நிலையிலிருந்து நான்காவது நிலையை அடைவதாகக் கொள்வோம். இதற்கு இடைப்பட்ட இரண்டு நிலைகளை அந்த உயிர் பரிணாமத்தால் அடைந்திருக்க வேண்டும். இப்பொழுது நாம் பார்க்கும் அனைத்து தாவரங்களும் விலங்குகளும் இன்று நாம் எப்படி பார்க்கிறோமோ அதே போன்ற நிலையில்தான் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பும் பல லட்ச வருடங்களுக்கு முன்பும் இருந்துள்ளன என்பதை விளங்குகிறோம். இதற்கு இடைப்பட்ட இனமான இரண்டாம் நிலையும், மூன்றாம் நிலையும் இதுவரை நமக்கு கிடைக்கவில்லை. இதை அவர்கள் சமர்ப்பித்து விட்டால் டார்வினுக்கு ஒரு 'ஜே' போடலாம் :-)

ஜீன்களின் மாற்றத்தினால் உயரத்திலும் பருமனிலும் பல வித்தியாசங்கள் நடந்துள்ளது. இதை அனைவரும் ஒத்துக் கொள்கிறோம். தண்ணீரில் நீந்தியது ஊர்வனவாக மாறியதற்கும், ஊர்வன பிறகு பறப்பனவாக மாறியதற்கும் படிம ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப் படவில்லை.

//முதலில் ஆதி மனிதனின் 10 அடி எலும்புக் கூடுகள் எங்கே எப்போது கிடைத்துள்ளன எனக் கூற முடியுமா ? நல்ல காமடி பண்றீங்க சார் நீங்க.. படித்த உங்களைப் போன்றோரே இப்படியான சதிக் கோட்பாடுகளைப் பரப்ப நினைத்தால் பாமரர் பாடு அதோ கதி தான் !!!// - இக்பால் செல்வன்

மேலும் மனிதன் முன்பு நம்மைவிட உயரமாக இருந்ததற்கும் மனிதனின் எலும்புக் கூடு கிடைத்துள்ளது. அந்த எலும்பும் இப்போது நமக்குள்ள அதே அமைப்பில்தான் உள்ளது. பரிணாம மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. அளவில் தான் சிறிதாகி இருக்கிறது.




மனிதன் 10 அடிக்கு மேல் உயரமாக முன்பு இருந்துள்ளான் என்பதற்கு இன்றும் சாட்சியாக சவுதி அரேபியாவில் அல் ஊலாவில் உள்ள 'மத்யன் சாலிஹ்' என்ற கிராமத்தை சொல்லலாம். இங்கு நானும் எனது நண்பர்களும் நேரிலேயே பார்த்த இடம் இது. முகமது நபிக்கு முன் அரபுகளுக்கு நபியாக அனுப்பப்பட்ட அரபியரான நபி சாலிஹ் அவர்களை பின்பற்றி மக்கள் வாழ்ந்த கிராமம் இது. கிட்டத்தட்ட ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இது போன்ற மலை வீடுகளை நாம் பார்க்கலாம். இந்த மக்கள் மலைகளையே குடைந்து தங்கள் வீடுகளை அமைத்துள்ளனர். நானே ஆறடி உயரமுடையவன். என்னை விட மூன்று மடங்கு உயரமாக இந்த வீட்டின் வாசற்படி அமைந்துள்ளது. மலைகளை உடைக்கும் வசதியில்லாத அந்த காலத்தில் கைகளாலேயே உளியைக் கொண்டு இவ்வளவு பெரிய வாசற்படியை அந்த மக்கள் ஏன் உருவாக்க வேண்டும்? அந்த மக்கள் எவ்வளவு உயரத்தில் இருந்தார்களோ அந்த அளவு வாசற்படிகளையும் அமைத்துள்ளார்கள் என்ற காரணத்தைத் தவிர வேறு காரணம் இருக்க சாத்தியமில்லை. நாம் தற்போது சராசரியாக ஆறடி உள்ளதால் 6 அல்லது 7 அடிகளில் வாயிற்களை நமது வீடுகளுக்கு அமைக்கிறோம்.

ஒவ்வொருவருக்கும் தனித் தனி படுக்கை அறைகள். வீடுகளின் சுவர்களில் பூக்களின் படங்களை செகுக்கி வைத்துள்ளார்கள். சில வீடுகளின் சுவர்களில் நம் ஊர் கோவில்களில் காணப்படுவது போன்ற சில உருவங்களையும் செதுக்கியுள்ளனர். நம் ஊர் கடவுள்களுக்கு உறவினர்களாக இருக்கலாம்.


அடுத்து இந்த மக்களின் பிரார்த்தனைக் கூடம் எந்த அளவு உயரமாக கட்டப்பட்டுள்ளது என்பதை பாருங்கள். மனிதர்கள் 10 அடிக்கு மேல் உயரமானவர்களாக இருந்ததால்தான் இவ்வாறான உயரத்துக்கு அவசியம் ஏற்பட்டுள்ளதை அறிந்து கொள்ளலாம்.

https://maps.google.com/maps/ms?ie=UTF8&hl=en&safe=on&msa=0&msid=113753071555606991078.0004748cfea43852a2b4a&ll=27.80021,41.19873&spn=9.322106,14.084473&z=6

மதாயின் ஸாலிஹ் செல்வதற்கு இந்த கூகுள் மேப் உங்களுக்கு வசதியாக இருக்கும்.

3000 அல்லது 4000 வருடங்களுக்கு முன்பு இந்த மக்கள் வாழ்ந்ததாக அறிகிறோம். எந்த ஒரு ஆராய்ச்சியாளரையும் அழைத்து வந்தால் நானே அவர்களை எனது செலவில் அழைத்து செல்கிறேன். எந்த பரிசோதனையையும் செய்து பார்த்துக் கொள்ளலாம். ஒரு கிராமமே இன்றும் ஆராய்ச்சிக்காக காத்துக் கொண்டிருக்கிறது..







கால் பாதத்தின் இந்த படிமமானது டெக்ஸாஸ் மாகாணத்தின் ஆற்றோரத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த மனிதன் 10 அடி உயரமும் 1000 பவுண்ட் எடை உள்ளவனாகவும் இருந்திருக்க வேண்டும். டெக்ஸாஸ் மாகாணத்தில் பிளாங்கோ அருங்காட்சியகத்தில் இன்றும் இது பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இரண்டு கால்களின் அளவுகளில்தான் வித்தியாசம் உள்ளதே ஒழிய அதன் அமைப்புகளில் எந்த மாற்றத்தையும் நம்மால் காண முடியவில்லை. குரங்குகளின் கால்களோடு கொஞ்சம் கூட இவைகள் ஒத்துப் போகவில்லை..

http://www.6000years.org/frame.php?page=giants

1950 வாக்கில் துருக்கியின் யூப்ரடீஸ் பள்ளத்தாக்கில் சாலைகளை பழுது பார்க்கும் பணி நடக்கும் போது ஒரு பெரிய ஒற்றை எலும்பின் பாகம் கிடைத்தது. இதன் அளவு 120 செமீ. பிளாங்கோ படிமங்கள் அருங்காட்சியகத்தின் இயக்குனர் ஜோ டைலர் ஆய்வுக்கு உட்படுத்தி இதனை உறுதி செய்துள்ளார். இந்த காலுக்குரிய மனிதன் கிட்டத்தட்ட 14 லிருந்து 16 அடி உயரம் உள்ளவனாக இருந்திருக்கக் கூடும் என்று சொல்கிறார். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் இந்த எலும்பு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.



இந்த எலும்புப் பகுதியும் தற்போதுள்ள மனிதனின் காலெலும்போடு ஒத்துப் போகிறதே ஒழிய குரங்குகளோடு சற்றும் பொருந்தி வரவில்லை. இது ஒன்று மட்டும் அல்ல. தோண்ட தோண்ட பரிணாமத்துக்கு எதிரான தகவல்களே அதிகம் வந்து கொண்டிருக்கிறது.



அனைத்து ஆதாரங்களையும் ஒரே இடத்தில் இந்த யுட்யூபில் பார்த்துக் கொள்ளலாம்.
---------------------------------------------------------------------------------
//ஆதி மனிதன் 60 முழம் என்றால் அவன் சந்ததிகள் இன்று சுருங்கிப் போனதேனோ ??? கடவுள் சிக்கன நடவடிக்கை செய்துவிட்டாரோ ????//

இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர் டாக்டர் மார்தா லாகர் தலைமையிலான குழுவினர் மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அவர்கள் ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய கண்டங்களில் வாழும் மனிதர்களின் மண்டை ஓடுகள் மூலம் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

சமீபத்தில் இஸ்ரேலில் உள்ள குகைகளில் இருந்து மனித மண்டை ஓடுகள் கிடைத்தன. அது கடந்த 1 லட்சம் முதல் 1 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த குகை மனிதர்களுடையது என தெரிய வந்தது. அவர்கள் நடத்திய ஆய்வின் மூலம் இவர்கள் மிகவும் உயரமாகவும், கட்டுமஸ்தான உடலமைப் புடனும் இருந்தது தெரிய வந்துள்ளது.

அதே போன்று அவர்களின் மூளை அளவு பெரிதாக இருந்தது. அவர்களின் உடல் அமைப்பை தற்போது வாழும் மனிதர்களுடன் ஒப்பிட்டு ஆய்வு மேற்கொண்டனர். கடந்த 10 ஆயிரம் ஆண்டுக்குள் ஆதிகால மனிதனை விட தற்போதைய மனிதனின் உயரமும், உடல் எடையும் குறைந்துள்ளது.

அதே நேரத்தில் மூளையின் அளவும் 10 சதவீதம் குறைந்து சுருங்கி இருப்பது கண்டு பிடிக்கப் ட்டுள்ளது. அதற்கு தற்போது உணவு கட்டுப்பாடு மற்றும் சுகாதாரமற்ற சூழ்நிலை, இதை தொடர்ந்து ஏற்படும் நோய்களும் காரணம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.-விக்கிபீடியா

http://www.dinamalar.com/News_Detail.asp?id=258195&Print=1

இத்தனை வருடம் பழமையான மண்டை ஓடுகள் கிடைத்தும் தற்போதுள்ள மனிதனின் அமைப்பில் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை. உயரமாக இருந்த மனிதன் புறத் தோற்றத்தில் ஆறடி ஐந்தடியாக குறைவாக்கப்பட்டிருக்கிறான். இதுவும் அவன் வாழ்ந்த சூழலினால் ஏற்பட்ட மாற்றம். இந்த இடத்திலும் வழக்கம்போல் நம் டார்வின் மாமாவின் பரிணாமம் தோற்றுப் போகிறது.

----------------------------------------------------


குகை மனிதனின் தாடை எலும்பு. தற்போதய மனிதனுக்கும் பழங்கால மனிதனுக்கும் அளவுகளில் உள்ள வேறுபாடு. இங்கும் இந்த தாடை எலும்புகள் கொரில்லாக்களோடு ஒதது வரவில்லை. மனிதனோடே ஒத்து செல்கின்றன.


---------------------------------------------------
இந்த படிமங்களின் வரலாறையும் இங்கு லேசாக பார்ப்போம்.

"Ever since Darwin there has been a disturbing void, both paleontological and psychological, at the base of the Phanerozoic eon. If his theory of gradualistic evolution be true, then surely the pre-Phanerozoic oceans must have swarmed with living animals—despite their conspicuous absence from the early fossil record" - N. J. Butterfield, Terminal Developments in Ediacaran Embryology, Science Magazine, 23 December 2011, Vol. 334, no. 6063, pp. 1655-1656, DOI: 10.1126/science.1216125.

தொல்லுயிரியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் ஒரு குழப்பமான வெற்றிடம் டார்வினின் காலந்தொட்டே இருந்து வருகின்றது. படிப்படியாக உயிரினங்கள் மாறியிருக்க வேண்டும் என்ற அவருடைய கோட்பாடு உண்மையென்றால், கேம்ப்ரியன் காலத்திற்கு முன்பான காலக்கட்டம் விலங்குகளால் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஆரம்ப கால உயிரினப்படிமங்களில் அவை தென்படவே இல்லை - (extract from the original quote of) N. J. Butterfield, Terminal Developments in Ediacaran Embryology, Science Magazine, 23 December 2011, Vol. 334, no. 6063, pp. 1655-1656, DOI: 10.1126/science.1216125 (simplified for the easy understanding).

உயிரினப் படிமங்கள் சுமார் 500 மில்லியன் ஆண்டுகளாகததான் நமக்கு கிடைக்கிறது. இங்கிருந்துதான் படிமங்களின் வரலாறு தொடங்குகிறது. கேம்பிரியன் காலமான இங்கிருந்து எடுக்கப்பட்ட படிமங்கள் அனைத்தும் முழுமையான நாம் தற்போது பார்க்கும் வடிவிலேயே எடுக்கப்பட்டுள்ளன. எந்த ஒரு உயிரும் பரிணாமம் அடைந்து எடுக்கப்பட்ட தகவல்கள் இல்லை.

இந்த கேம்பிரியன் காலத்துக்கு முந்தய காலமான இடியக்காரா காலம் சென்று படிமங்களை ஆராய்ந்தால் ஏதும் கிடைக்குமா என்று உங்கள் ஆய்வாளர்கள் தேடினர். ஆச்சரியமாக இடியக்காரா காலத்தில் விலங்களின் படிமங்கள் சுத்தமாக இல்லை. அதாவது அந்த காலத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான எந்த துப்பும் கிடைக்கவில்லை. இடியக்காரா காலத்தில் மறைந்த படிமங்கள் கேம்பிரியன் காலத்தில் திடீரென எவ்வாறு வந்தது? இதற்கு டார்வின் ஆதரவாளர்கள் என்ன பதிலை வைத்திருக்கின்றனர்?

திமிங்கிலத்தை எடுத்துக் கொண்டால் புறத் தோற்றம் மட்டும் அல்லாது சுவாச உறுப்புகளும் தரைக்கு ஏற்றவாறு பரிணாமம் அடைந்திருக்க வேண்டும். புறத் தோற்றத்தையே அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியாமல் திணரும் நீங்கள் சுவாச உறுப்புகளின் பரிணாமத்தை எந்த காலத்தில் நிரூபிக்கப் போகிறீர்கள்? :-)

http://suvanappiriyan.blogspot.com/2011/06/blog-post_25.html
http://garry-nelson.hubpages.com/hub/Human-Giants
http://mtblanco.com/MtBlancoTour.htm

டிஸ்கி: இன்று வரை எனது இந்த வலைப்பூவுக்கு வந்த மொத்த பார்வையாளர்கள் கணக்கு 206908 என்று கூகுள் கூறுகிறது. ஒவ்வொரு நாளும் படிப்பவர்களின் எண்ணிக்கை சராசரியாக 800 லிருந்து 1000 மாக உள்ளது. திரட்டிகளில் தமிழ்மணத்தின் மூலமே அதிக பார்வையாளர்கள் வந்துள்ளனர். இன்ட்லி, தமிழ்10 போன்ற திரட்டிகளிலிருந்தும் குறிப்பிட்ட பார்வையாளர்கள் வந்துள்ளனர்.

ஆபாசம், சினிமா, மொக்கை என்று வெகுஜன விருப்பத்தை புறந்தள்ளி இந்த அளவு வாசகர்கள் வருவது பெரிய விஷயம். நல்ல விஷயங்களை கொடுத்தால் அதை ஆர்வமுடன் படிக்க வாசகர்கள் உள்ளனர் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. பதிவுகளை படித்து பின்னூட்டம் இட்டு ஓட்டுக்களையும் வழங்கி வரும் வாசகர்களுக்கு நன்றி. அதேபோல் தமிழ் மணம், இண்ட்லி, தமிழ10 திரட்டிகளுக்கும் நன்றி!

டைமண்ட் திருடி பிடிபட்ட 20 வயது இள நங்கை!



இன்றைய நவ நாகரிக உலகில் மனிதனின் செலவுகள் அதிகரித்து விட்டது. அந்த செலவுகளில் அதிக இடத்தை ஆக்கிரமித்துக் கொள்வது ஆடம்பர செலவுகளே! கல்லூரிக்கு படிக்க அனுப்பினால் நாகரிகம் என்ற பெயரில் காதல் வலையில் வீழும் இளைய சமுதாயம். பெற்றோர் தரும் பணம் போதவில்லை என்றால் அதற்காக எதையும் செய்ய சிலர் துணிந்து விடுகின்றனர். அது போன்ற சம்பவம்தான் நாம் பார்த்துக் கொண்டிருப்பது.

டெல்லியை பூர்வீகமாக கொண்ட ஜோதி என்ற இந்த பெண் வசதியான குடும்பத்து பெண். தனது பெற்றோர்களிடம் வெளியூர் செல்வதாக சொல்லி விட்டு ஜெய்பூர் வந்துள்ளார். வந்த இடத்தில் பணத்துக்கு அவசியம் வந்திருக்கிறது. என்ன செய்வது. வேலைக்கு சேர்ந்தார். நகை கடையில் தனது திறமையை காட்ட ஆரம்பித்தார். ஆனால் நகைக் கடை உரிமையாளர்கள் ஜோதியை விட திறமை வாய்ந்தவர்கள் என்பதை கவனிக்க தவறி விட்டார்.

கண்காணிப்பு காமிராவில் இவர் டைமண்ட்களை திருடி தனது உடலில் மறைப்பது அழகாக படமாகியது. திருடிய டைமண்ட்களின் மதிப்பு 25 லட்சமாம். மூன்று மோதிரங்கள். தற்போது அந்த மங்கையின் டெல்லி அட்ரஸூக்கு தகவல் தெரிவித்து பெற்றோரை வரவழைத்திருக்கிறார்கள்.

தேவையற்ற செலவுகளை நாமாக குறைத்துக் கொண்டால் இவ்வாறு தேவையற்ற பிரச்னைகளில் சிக்கத் தேவையில்லை.




சிறு குழந்தை முதற்கொண்டு எவ்வாறு நகை கடையில் திருடுகிறார்கள் என்பதை காமெராவில் பாருங்கள். இந்த குடும்பஸ்தர் குடும்பத்தை வளர்த்தது கூட்டாக சேர்ந்து கொள்ளையடிக்கவோ! இதனால் உண்மையிலேயே வாங்கும் நோக்கில் கடைகளுக்கு வருபவர்களும் சந்தேகக் கண்ணோடு பார்க்கப்படுகிறார்கள். சட்டம் கடுமையானால் ஓரளவு இந்த திருட்டுகள் குறைய வாய்ப்புண்டு.

சென்ற இடத்தால் செலவிடாது தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.

திருக்குறள் அதிகாரம் 43, 422

மனம் போகும் போக்கெல்லாம் தானும் போகாமல் அதனைத் தடுத்து தீமையைத் தவிர்த்து நன்மையான காரியங்களில் நமது சிந்தனையை செலுத்த வேண்டும். குதிரைப் பாகன் தனது குதிரையை நிலத்தின் தன்மை அறிந்து ஒழுங்காகச் செலுத்துவது போல மனத்தை அறிவு எனும் நல்வழியில் செலுத்த முயற்சிக்க வேண்டும்.

Friday, October 12, 2012

சிலந்தி, குளவியால் டார்வினசத்துக்கு மற்றுமொரு பின்னடைவு!


படத்தில் இருப்பது 97 லிருந்து 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சிலந்தி யும் குளவியும். சிலந்தி அதனுடைய வலையில் தவறி விழுந்த குளவியை சாப்பிட போகையில் அப்படியே குளவியும் சிலந்தியும் நின்று விட்டன! ஏன்? இதை ஒரேகான் பல் கலைக் கழக அறிவியல் ஆய்வாளர்கள் தங்கள் பர்மா ஆய்வின் போது இவற்றை கண்டு ஆராய்ச்சி செய்துள்ளார்கள். அவ்வாறு ஆராயும் போது நூறு மில்லியன் வருடங்களுக்கு முன்பு தனது வலையில் விழுந்த குளவியை சிலந்தி தாக்கப் போகுமுன் இரண்டுமே மரப் பிசினால் மூடப் பட்டு விட்டன என்று தெரிந்து கொண்டுள்ளார்கள்.



'இந்த இளம் சிலந்தி குளவியை சாப்பிடுவதற்குள் மரப் பிசினால் இழுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. பல மில்லியன் வருடங்கள் ஆகியும் அதன் உருவ அமைப்புகளில் எந்த மாற்றமும் தென் படாதது எனககு ஆச்சரியத்தையே உண்டாக்குகிறது.' என்கிறார் ஜார்ஜ் பைனர். இவர் ஒரேகான் பல்கலைக் கழகத்தில் உயிரியல் துறையில் பணி புரிந்த உலக பிரசித்திப் பெற்ற பூச்சியியல் நிபுணராவார்.

.

இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னும் இந்த இரு உயிரினமும் இன்று நாம் பார்க்கும் அதே அளவில் அதே எண்ணிக்கையுடைய கால்கள் மற்றும் பல உறுப்புகளோடு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்டார்வினின் பல தியரிகளை குப்பை கூடைக்கு அனுப்ப நேரம் நெருங்கி விட்டதையே காட்டுகிறது. இனிமேல் யாரும் குரங்கிலிருந்துதான் மனிதன் பரிணாமம் அடைந்தான் என்ற விட்டலாச்சாரியா(டார்வினின்) சொம்பை தூக்கிக் கொண்டு பரிணாமப் பாடம் நடத்த வேண்டாம். ஆமாம. சொல்லிபுட்டேன்.


This picture shows a nearly intact fossil of Fuxianhuia protensa. The inset shows the fossilized brain in the head of another specimen. The brain structures are visible as dark outlines. Credit: Specimen photo: Xiaoya Ma; inset: Nicholas Strausfeld Complex brains evolved much earlier than previously thought, as evidenced by a 520-million year old fossilized arthropod with remarkably well-preserved brain structures. Representing the earliest specimen to show a brain, the fossil provides a "missing link" that sheds light on the evolutionary history of arthropods, the taxonomic group that comprises crustaceans, arachnids and insects.

Read more at: http://phys.org/news/2012-10-complex-brains-evolved-earlier-previously.html#jCp

சுமார் 520 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பூச்சியினத்தில் சிக்கலான மூளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய உயிரினங்களில் இருப்பது போன்றே உள்ளது. ஆக, உயிரினங்கள் முதன் முதலாக தோன்றிய காலக்கட்டத்திலேயே மூளை அமைப்பு சிக்கலாக இருப்பது பரிணாமவாதிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அக அமைப்பிலோ புற அமைப்பிலோ எந்த மாற்றங்களையும் கொள்ளாது பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு எப்படி உயிரினங்கள் இருந்ததோ அதே அமைப்பிலேயே இன்றும் அவை காணப்படுகின்றன. பரிணாமம் உண்மையிலேயே நடந்திருந்தால் பரிணாமம் அடைந்த இடைப்பட்ட உயிரினங்களின் படிமங்கள் லட்சக் கணக்கில் நமக்கு கிடைத்திருக்க வேண்டும். அது போன்ற இடைப்பட்ட உயிரினங்களின் படிமங்களை இவர்கள் சமர்ப்பிக்காத வரை பாடப் புத்தகங்களில் உள்ள பரிணாமம் சம்பந்தமான பகுதிகளை நீக்க அரசு உத்தர விட வேண்டும். உலக அளவில் இந்த நகைச்சுவை இன்று வரை அறிவு ஜீவிகள் என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்வோரால் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.

பரிணாமவியலை நிரூபிக்கிறேன் என்று உலகில் பல நாடுகளில் பல விஞ்ஞானிகள் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கே தெரியும் தங்களின் ஆராய்ச்சியின் முடிவு என்ன எனபது. இருந்தாலும் வேலை போய் விடுமே என்று இன்று வரை இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு செலவழிக்கும் பணத்தை செல்வந்த நாடுகள் வறிய நாடுகளின் முன்னேற்றத்துக்கு திருப்பி விட்டு புண்ணியத்தை தேடிக் கொள்ளலாம் .:-)

http://phys.org/news/2012-10-complex-brains-evolved-earlier-previously.html

http://www.24dunia.com/english-news/shownews/0/Ancient-Spider-Attack-On-Wasp-Trapped-In-Amber/15384148.html

http://gizmodo.com/5950032/holy-crap-heres-a-100+million+year+old-spider-eating-a-wasp
http://dvice.com/archives/2012/10/spider-attacks.php

http://oregonstate.edu/ua/ncs/archives/2012/oct/fossil-ancient-spider-attack-only-one-its-type-ever-discovered

பரிணாமவியலில் ஓரளவு பல பதிவுகளை எழுதிய சகோ ஆஷிக் பூச்சியினங்களைப் பற்றி முன்பு எழுதிய அழகிய ஒரு இடுகையை பாருங்கள். மேலும் பல விளக்கங்கள் கிடைக்கும்.