Followers

Monday, July 21, 2014

தெலுங்கானா அரசு மசூதிகளுக்கு 2 கோடியே 20 லட்சம் ஒதுக்கீடு!



ரமலான் மாதத்தில் மசூதிகளையும் தர்ஹாக்களையும் புணரமைப்பு செய்து தூய்மைப்படுத்துவதற்காக தெலுங்கானா அரசு 2 கோடியே 20 லட்ச ரூபாயை அரசு நிதியாக ஒதுக்கியுள்ளது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. பல பள்ளி வாசல்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருக்கும். ரமலானில் மக்கள் தொழுவதற்கு கூட்டம் கூட்டமாக வருவார்கள். அந்த மக்களின் நலனைக் கருதி தெலுங்கானா அரசு ஒதுக்கியுள்ள இந்த நிதி பாராட்டத்தக்க ஒன்றாகும். இதே போல் தமிழக அரசும் பராமரிப்பு வசதியின்றி இருக்கும் பள்ளி வாசல்களை கணக்கிட்டு அரசு நிதியை ஒதுக்குமாறு கோரிக்கை வைப்போம்.

---------------------------------------------------------------

ஆந்திராவின் சிங்கம் அஸாவுத்தீன் உவைசி பள்ளிவாசலில் தனது ரமலான் உரையில் பேசிய அழகிய பேச்சின் தமிழாக்கத்தைப் பார்ப்போம். 'யா அல்லாஹ்! மறுமை நாளில் காசாவில் இறந்த அந்த பிஞ்சு குழந்தைகள் உனது முன்னால் அந்த யூதர்களை காட்டி 'எந்த பாவமும் செய்யாத எங்களை இலக்காக்கிய இந்த இஸ்ரேலியர்களை இறைவா! தண்டிப்பாயாக!' என்று கேட்கும். பெஞ்சமின் நெதன்யாகுவே! அந்த நாளும் வரும். நீ செய்து வரும் அத்தனை அட்டூழியத்திற்கும் இன்றில்லா விட்டாலும் மறுமையில் இதற்கான தண்டனையை அடைந்து கொள்வாய்'

'எனது இளைய சமுதாயமே! 300 மக்கள் தொடர் குண்டு வெடிப்பில் இறந்தாலும் பாலஸ்தீன வீடுகளில் அந்த மக்கள் நோன்பிருக்கும் காட்சியைப் பார்க்கிறீர்கள். 300 க்கும் மேற்பட்ட தங்கள் சொந்தங்களை இழந்தாலும் அந்த மக்கள் தொழுகையை விட்டு விடவில்லை. எனவே இளைய சமுதாயமே! நோன்பிருக்க பழகிக் கொள் தொழுகையை கடைபிடி. முன்பு நம்மிடம் இறை நம்பிக்கை மிகைத்து இருந்தது. எனவே எதிரிகள் நம்மைக் கண்டு பயந்தனர். நம்மிடம் இறை நம்பிக்கை இல்லாது போனது. இன்று கண்டவனும் நம்மை சீண்டிப் பார்க்கிறான். இந்த இழி நிலைக்கு காரணம் நாம் தான். முன்பெல்லாம் மிகச் சிறந்த மருத்துவர்களை நாம் பெற்றிருந்தோம். கல்வியிலும் சிறந்து விளங்கியிருந்தோம். நமக்கு சமூகத்தில் அந்தஸ்து கிடைத்தது. இன்று படிப்பை தொலைத்தோம்: அரசு வேலைகளை தொலைத்தோம். இன்று பலராலும் எள்ளி நகையாடப்படுகிறோம். எனது இளைய சமுதாயமே! படிப்பதில் ஆர்வம் கொள். இறைவனை நினைப்பதில் ஆர்வம் கொள். இழந்த நமது கௌரவத்தை இறைவன் நாடினால் திரும்பவும் பெறலாம்.'

5 comments:

ஆனந்த் சாகர் said...

//ஆந்திராவின் சிங்கம் அஸாவுத்தீன் உவைசி //

அந்த ஆள் சிங்கம் அல்ல, அசிங்கம்.

ஆனந்த் சாகர் said...

//ரமலான் மாதத்தில் மசூதிகளையும் தர்ஹாக்களையும் புணரமைப்பு செய்து தூய்மைப்படுத்துவதற்காக தெலுங்கானா அரசு 2 கோடியே 20 லட்ச ரூபாயை அரசு நிதியாக ஒதுக்கியுள்ளது.//

அப்ப இன்னும் பல குண்டுவெடிப்புகளை ஐதராபாதில் எதிர்பார்க்கலாம். முஸ்லிம் வாக்குகளை பெறுவதற்காக வெட்கமில்லாமல் இப்படி அரசியல் வாதிகள் நடந்து கொள்கிறார்கள். ஜனநாயகத்தில் முஸ்லிம்களின் வாக்குகள் தேவை இல்லை என்ற நிலை வரவேண்டும்.

ஆனந்த் சாகர் said...

//முன்பு நம்மிடம் இறை நம்பிக்கை மிகைத்து இருந்தது. எனவே எதிரிகள் நம்மைக் கண்டு பயந்தனர். நம்மிடம் இறை நம்பிக்கை இல்லாது போனது. இன்று கண்டவனும் நம்மை சீண்டிப் பார்க்கிறான். இந்த இழி நிலைக்கு காரணம் நாம் தான். //

எப்படிப்பட்ட இறைநம்பிக்கை? காபிர்களை கொல்லு அல்லது கொல்லப்படு என்கிற முஹம்மது குர்ஆனில் சொன்ன இறை நம்பிக்கைதானே! இந்த நம்பிக்கை உள்ள மிருகங்களை கண்டு சாதாரண மனிதர்கள் பயந்துதான் இருப்பார்கள்.

ஆனந்த் சாகர் said...

// 'யா அல்லாஹ்! மறுமை நாளில் காசாவில் இறந்த அந்த பிஞ்சு குழந்தைகள் உனது முன்னால் அந்த யூதர்களை காட்டி 'எந்த பாவமும் செய்யாத எங்களை இலக்காக்கிய இந்த இஸ்ரேலியர்களை இறைவா! தண்டிப்பாயாக!' என்று கேட்கும். பெஞ்சமின் நெதன்யாகுவே! அந்த நாளும் வரும். நீ செய்து வரும் அத்தனை அட்டூழியத்திற்கும் இன்றில்லா விட்டாலும் மறுமையில் இதற்கான தண்டனையை அடைந்து கொள்வாய்'//

மறுமை என்பது இல்லை. கடவுள் எவரையும் தண்டிப்பதும் இல்லை. பயத்தின் மூலம் மற்றவர்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைப்பதற்கு முஹம்மது இட்டுகட்டிய பொய்தான் குர்ஆனில் அவர் கூறிய பல விதமான நரக தண்டனைகள்.

Anonymous said...

அப்பன் வீட்டு பணத்தை கொடுக்கிறார்கள். அரபு அடிமைகளுக்கு பள்ளிவாசல் கட்ட உதவி செய்ய சவுதி அரசு இருக்கிறதே அங்கே கேட்க வேண்டியது தானே