'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Tuesday, December 09, 2014
உத்தர பிரதேசத்தில் 200 முஸ்லிம்கள் மதம் மாற்றப்பட்டுள்ளனர்.
ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தள் போன்ற இந்து தீவிரவாத அமைப்புகள் ஏழ்மை நிலையிலுள்ள முஸ்லிம் கிராமங்களை குறி வைத்து மத மாற்றத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த மதமாற்ற நிகழ்ச்சியில் 57 இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இந்து கடவுள்களின் சிலைகளின் கால்களை தொட்டு வணங்க வைக்கப்பட்டனர். ஆக்ரா விலுள்ள மதுநகர் ஏரியாவில் இந்நிகழ்வு டிசம்பர் 8 ந்தேதி நடந்துள்ளது.
இந்த மக்கள் அனைவரும் சேரிகளில் வாழ்ந்த ஏழைகளாவர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னால் வெஸ்ட் பெங்காலிலிருந்தும் பங்களாதேஸிலிருந்தும் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள். நேற்று வரை இவர்களுக்கு ரேஷன் காரடோ மற்ற எந்த ஆதார அட்டைகளோ இல்லாதிருந்தது. இனி இவர்களுக்கு அனைத்தும் கிடைக்கும். இந்துத்வாவினரின் தேச பக்தி இந்த இடத்திலும் பல் இளிக்கிறது.
ஆர் எஸ் எஸ்ஸின் வட்டாரத் தலைவர் ராஜேஸ்வர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் '5000 முஸ்லிம்கள் இன்னும் சில நாட்களில் இந்து மதத்தில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். அலிகரில் உள்ள மகேஸ்வரி கல்லூரியில் இந்நிகழ்வு மிக பிரமாண்டமாக நடைபெறும் வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை என்ற அனைத்தையும் மாற்றி அவர்களுக்கு புதிய இந்து பெயரை சூட்டும் நிகழ்வும் நடந்தேறியது' என்று தெரிவித்துள்ளார்.
'நான் தினமும் குர்ஆன் ஓதுகிறேன். ஐந்து வேளை தொழுகையும் செய்கிறேன். ஆர்எஸ்எஸ் எங்களுக்கு இருக்க வசதியான வீடும். மற்றும் என் பேரக் குழந்தைகளுக்கு நல்ல படிப்பும் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளது. எனவே நான் இந்து மதத்துக்கு மாறியுள்ளேன். சிறந்த உணவும் இருப்பிடமும் கிடைக்கும் பொது எனது மதத்தை மாற்றிக் கொள்வதில் தவறு என்ன இருக்கிறது' என்கிறார் மதம் மாறிய 76 வயது சோஃபியா பேகம்.
மாதத்துக்கு ஐம்பது லட்ச ரூபாய் 1000 நபர்களுக்கு செலவு செய்ய உத்தேசித்துள்ளோம். இதுவரை நாங்கள் 2.73 லட்சம் முஸ்லிம்களை இந்துக்களாக மாற்றியுள்ளோம். 2003 ஆம் வருடத்திலிருந்து இவற்றை நிகழ்த்தி வருகிறோம். ஆக்ரா, பதேபூர் சிக்ரி, மதுரா, பெரோஸாபாத், மீரட், உத்தரகாண்ட் போன்ற இடங்களிலிருந்து அதிக அளவு மத மாற்றம் நடந்துள்ளது' என்கிறார் ராஜேஸ்வர்சிங்.
இந்நிகழ்வுகளை பிஜேபியின் வினய் கட்டியாரும் ஆதரித்து பேசியுள்ளார். 'அந்த மக்கள் தங்களின் தாய் மதம் திரும்புகின்றனர். யாரையும் வற்புறுத்தவில்லை. இதில் என்ன தவறு இருக்கிறது?' என்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் தாரிக் அன்வர் கூறும்போது 'திட்டமிட்டு அப்பாவிகளை ஏழைகளை பணத்தைக் காட்டி மத மாற்றம் செய்கின்றனர். ஐந்து வருடம் இவர்களின் ஆட்சி முடியும் வரை இது தொடர்ந்து கொண்டுதானிருக்கும்' என்கிறார்.
தகவல் உதவி
ஐபிஎன், டைம்ஸ் ஆஃப் இந்தியா
08-12-2014
கிறித்தவர்கள் பணம் கொடுத்து மதம் மாற்றுகின்றனர் என்று ஓயாது குரல் கொடுத்து வந்த இந்துத்வாவாதியினர் இன்று அதே பொருளை கொடுத்து ஏழை முஸ்லிம்களை மதம் மாற்ற முயற்சிக்கின்றனர். இவை எல்லாம் எத்தனை காலத்துக்கு? இவர்களை விட அதிக பொருட்களை கிறித்தவர்கள் கொடுத்தால் நாளை அங்கு சென்று விடுவர். மத மாற்றம் என்பது தனது மனதால் எழ வேண்டும். ஏ ஆர் ரஹ்மானையோ அல்லது யுவன் சங்கர் ராஜாவையோ பெரியார் தாசனையோ அழைத்து கோடிகளை கொடுத்தாலும் இந்து மதம் திரும்புவார்களா? மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் இஸ்லாத்தை விளங்கி வந்துள்ளார்கள். அதன் கொள்கையில் ஈர்ப்பு ஏற்பட்டு வந்துள்ளார்கள். இவர்களிடம் யாரும் சென்று 'இஸ்லாத்துக்கு வாருங்கள்' என்று வற்புறுத்தினார்களா? இல்லையே.
எனவே இந்து மதத்தின் பெருமைகளையும் அதன் விசால தன்மைகளையும் :-) விளக்கி இவர்கள் பிரசாரம் செய்து அதன் மூலம் மதம் மாறினார்கள் என்றால் அதனை யாரும் எதிர்க்க போவதில்லை. பணத்தை காட்டி மத மாற்றுவதன் மூலம் தங்களிடம் விவாதத்திற்கு ஏதும் சரக்கு இல்லை என்பதை மறைமுகமாக ஒத்துக் கொள்வதாகவே அர்த்தமாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
ஆக்ராவில் 57 முஸ்லிம் குடும்பத்தினர் இந்து மதத்தை தழுவினர் என்று நேற்று பரபரப்பாக தேசிய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. தர்ம ஜாக்ரான் மஞ்ச் மற்றும் பஜ்ரங் தளம் ஆகிய சங் அமைப்புகள் நடத்திய நிகழ்வில் இந்த முஸ்லிம் குடும்பத்தினர் இந;து மதத்தைத் தாமே முன்வந்து இந்து மதத்தைத் தழுவியதாக இந்த செய்திகள் வெளியாகின.
இந்த செய்தி தவறானது என்றும் தாங்கள் முஸ்லிம்களாகவே வாழ்வதாக இந்த 57 குடும்பத்தினரும் அளித்துள்ள பேட்டி இந்துஸ்தான் டைம்ஸ் டைம்ஸ் ஆப் இந்திய முதலிய செய்தித்தாள்களில் இன்று செய்திகள் வெளியியாகியுள்ளன.
http://www.hindustantimes.com/india-news/day-after-homecoming-muslim-families-deny-embracing-hinduism/article1-1294852.aspx
மதம் மாற்றுவது துலுக்கர்களுக்கு மட்டும் தனி உரிமையா என்ன ? நீங்க செய்தா நியாயம் மற்றவர்கள் செய்தா தப்பா?
நாட்டை விட்டு வெளிய போங்கடா துலுக்கனுங்கலா.
Post a Comment