Followers

Monday, October 22, 2012

ரியாத்தில் இரத்ததான முகாம் சில தகவல்கள்!


மனித நேயம் என்பதை வெறும் வார்த்தைகளால் சொல்லாமல் அதனை செயலில் காட்டிட ஒரு அருமையான சந்தர்ப்பம் இந்த ரத்த தானம். இதனை சில வருடங்களாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மிகச் சிறப்பாக செய்து வருகிறது. அந்த வகையில் போன வெள்ளிக்கிழமை கிங் ஃபஹத் மெடிகல் சிட்டியில் இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்றது. மெடிக்கல் சிட்டியின் நிர்வாகிகள் டிஎன்டிஜே நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ஹஜ்ஜூக்கு வரும் வெளிநாட்டவர்களின் தேவைக்காக ரத்த தான முகாம் நடத்துமாறு கேட்டுக் கொண்டனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று வெள்ளிக் கிழமை காலை எட்டு மணியிலிருந்து ஆட்களை கொண்டு வந்து சேர்க்கும் பணியினை டிஎன்டிஜேயின் அங்கத்தினர்கள் சிறப்பாக செயல்படுத்தினர்.



இரத்தம் வழங்கும் கொடையாளிகள், முந்தைய இரவு நன்றாக குறைந்தது 5 - 6 மணி நேரமாவது உறங்கியிருக்க வேண்டும் என்றும், அதிகமான திரவ உணவுகளை சாப்பிட்டிருக்க வேண்டும் எனவும் கொடையாளிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. முஸ்லிமல்லாத தமிழ் சகோதரர்களும் கலந்து கொண்டு, TNTJவின் பணியை பாராட்டி, தொண்டரணியிலும், வாகன சேவையிலும் தங்களையும் ஈடுபடுத்திக் கொண்டனர்.


தமிழர்கள் மட்டுமன்றி பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, சிரியா நாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட ஆந்திரா, கேரளா, கர்நாடகா, கஷ்மீர், உ.பி., பீஹார் மற்றும் இதர மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் இதில் ஆர்வத்தோடு பங்கேற்றனர்.

ரியாத் மண்டலம் தொடர்ச்சியாக KFMC -யில் முகாம்கள் நடத்துவதால், மருத்துவமனை அதிகாரிகளே ரியாத் TNTJ பெயரில் பிரத்தியேகமாக பேனர்கள் தயாரித்து மருத்துவமனையின் பல இடங்களில் வைத்திருந்தனர்.

வெளிநாடுகளிலேயே ஒரே முகாமில் அதிகமாக இரத்த தானம் செய்த மண்டலம் என்ற இடத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



2010 மற்றும் 2011 ஆண்டுகளில் வெளிநாட்டு மண்டலங்களில் தொடர்ந்து முதலிடத்தை வகித்து வருவது போன்று, 2012 ஆண்டிலும் ரியாத் மண்டலம் முதலிடத்தை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

நமது தமிழகத்திலும் தொடர்ந்து ஐந்து வருடங்களாக ரத்ததானம் செய்வதில் முதலிடத்தைப் பெற்று வருவது கவனிக்கத் தக்கது. தொழுகை, நோன்பு என்று இதை மட்டுமே சொல்லிக் கொண்டிருப்பது இஸ்லாம் அல்ல. மனித நேயத்தோடு செய்யக் கூடிய இது பொன்ற நல்ல செயல்களும் இஸ்லாமிய நடவடிக்கையில் அடங்கும்.

இந்த முறை நானும் இரத்ததானம் செய்தேன். 6 மாதங்களுக்கு முன்பும் கொடுத்துள்ளேன். ஆரோக்கியமான நபர் 4 மாதங்களுக்கு ஒரு முறை கொடுக்கலாம். அங்கு ரத்தம் கொடுக்க வந்த ஒரு சகோதரர் கொஞ்சம் வீக்கானவர் போலிருக்கிறது. ரத்தம் கொடுத்து விட்டு வெளியில் வந்தவருக்கு சிறிது நேரத்திலேயே மயக்கம் வர கீழே விழுந்து விட்டார். பிறகு அவரை தூக்கி சிறிது இளைப்பாற வைத்தோம. நினைவு திரும்பியவுடன் சகஜ நிலைக்கு வந்தார். இது போல் நூற்றில் யாருக்காவது ஒருவருக்கு மயக்கம் வரலாம். எனவேதான் ரத்தம் கொடுத்தவுடன் உடனே வெளியேறாமல் சிறிது ஓய்வெடுத்து விட்டு பிறகு வெளியேற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்த முகாமில் 375 க்கும் மேற்பட்ட சகோதர-சகோதரிகள் கலந்து கொண்டனர். காலை 9 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்ட முகாமில், கொடையாளிகள் கூட்டம் அலை மோதியதால், காலை 8.45 மணிக்கே துவங்கியது. இம்முகாமில் பெண்கள் உட்பட 333 பேரிடம் மட்டும் இரத்தம் பெறப்பட்டது. இரத்த அழுத்தம் அதிகம், ஹீமோகுளோபின் குறைவு, ஹஜ்ஜூக்கான தடுப்பூசி போன்ற காரணங்களுக்காக பல சகோதர-சகோதரிகளால் இரத்தம் வழங்க முடியவில்லை. காலையிலிருந்து தொடர்ச்சியாக பணியாற்றும் இரத்த வங்கி ஊழியர்கள் களைப்புற்ற காரணத்தால், இத்துடன் முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ள மாலை 5.15 மணியோடு இரத்த தானம் நிறுத்திக் கொள்ளப்பட்டது. 2011 இல் நடந்த ஹஜ்ஜூக்கான முகாமில் 135 லிட்டர் இரத்தம் பெறப்பட்டது. அதிகபட்சமாக 150 லிட்டருக்கும் மேல் இரத்தம் பெறப்பட்டது இதுவே முதல் முறை.

இரத்த தானம் செய்தவர்கள் அனைவருக்கும் காலை சிற்றுண்டியும், சிறப்பு மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மருத்துவமனை அதிகாரிகள் குருதிக் கொடையளித்தவர்களுக்கும் ரியாத் TNTJ - யினருக்கும் நன்றி தெரிவித்தனர். ரியாத் மண்டலத்தின் இரத்த தான பொறுப்பாளர்களான சகோ. அப்துர்ரஹ்மான் நவ்லக், சகோ. மாஹீன் & சகோ. ஷேக் அப்துல் காதர் மற்றும் மண்டல நிர்வாகிகளின் ஏற்பாட்டில், சிறப்பான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மண்டல செயலாளர் சகோ. ஹாஜா மைதீன் தலைமையில் களப்பணியாற்றிய தொண்டர் அணியினர், கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் கடுமையான உழைப்பும் ஒத்துழைப்பும் இம்முகாம் சிறப்புடன் நடைபெற முக்கிய காரணமாகும். மண்டல துணைச் செயலாளர் சகோ. நூருல் அமீன், மண்டல செயற்குழு உறுப்பினர் சகோ. ஹாஜா அலாவுதீன் மேற்பார்வையில், மண்டல/கிளை நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் பம்பரமாக சுழன்று பணியாற்றி சுமார் 20 வாகனங்களில் கொடையாளிகளை முகாமுக்கு அழைத்து வரும் வண்ணமாயிருந்தனர்.

'ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்'
-குர்ஆன் 5:32

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

-------------------------------------------------------

தமிழர்களின் அளப்பரிய சேவையை பாராட்டி அரப் நியூஸூம் தனது பங்குக்கு இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

A blood donation campaign was held in Riyadh on Friday to help this year’s Haj pilgrims.

King Fahd Medical City (KFMC) teamed up with Tamil Nadu Thowheed Jamaath (TNTJ), and collected 331 units of blood from 375 volunteers at the hospital premises during the weekend.

The event took place at the KFMC Blood bank in Riyadh with the help of men and women from the Asian expatriate community members.

According to a royal decree issued in 1984, the Ministry of Health does not import blood. They are collected from residents and citizens, who voluntarily and regularly donate blood.

The 20 health directorates in the Kingdom make their own arrangements with the blood donors to contribute to this worthy cause.

An official from the Health Ministry said it had stocked 16,000 units of blood to help the Haj pilgrims this year. He added that Friday’s blood donation campaign is part of its contingency plan to stock more blood to provide services to the guests of Allah.

Faisal Mohamed, president of TNTJ Riyadh, said this was the 21st blood donation campaign sponsored by his company.

“The noble act of donating blood will not only give a new lease of life to many, it also heightens our sense of social responsibility by fulfilling the humanitarian and social needs of our local communities,” Mohamed said, adding that the organization not only conducts such events regularly but also arranges a supply of blood as and when required for emergency purposes.

In July, the group conducted a similar campaign to collect blood in aid of Umrah pilgrims.

“We are guided by the Qur’an which says '… and whoever saves a life, it is as though he had saved the life of all mankind! ...' (Al-Qur’an 5:32),” he stressed.

“We got an overwhelming response from our community members as well as from others,” he added.

The donors included mothers from Tamil Nadu whose husbands are working in the Kingdom. Egyptians, Syrians, Pakistanis, Sri Lankans and Bangladeshis also participated in the drive…….

Arab news 22-10-2012

.

Sunday, October 21, 2012

இந்த வருட ஹஜ் பயணத்தில் அமீர் கான்!

இந்த வருட ஹஜ் பயணத்தில் அமீர் கான்!



இந்திய பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களில்(கூத்தாடிகளில்) ஒருவரான அமீர்கான் இந்த வருடம் தனது ஹஜ் பயணத்தை நிறைவேற்றுவதற்காக மெக்கா நோக்கி தனது தாயாரோடு(ஜீனத் ஹூசைன்) புறப்பட்டார். ஹஜ் செய்ய வேண்டும் என்ற தீராத ஆசை தனது தாய்க்கு இருந்ததாகவும் அவருக்கு துணையாகவும் தானும் முதன் முதல் ஹஜ் செய்ய வேண்டியும் இந்த வருடம் மெக்கா செல்வதாக பத்திரிக்கையாளர்களிடம் அமீர் கான் கூறினார்.






மும்பையில் தனது தாயாரோடு.....

ஹஜ்ஜூக்கு செல்வோர் கட்டாயம் அணிய வேண்டிய 'இஹ்ராம்' என்ற வெள்ளைத் துணியை உடுத்திக் கொண்டு மும்பை ஏர்போர்ட் வந்தபோது பலரையும் பரவசத்தில் ஆழ்த்தியது.

ஹஜ் முடித்தவுடன் இதற்கு முன் செய்த பாவங்கள் (இணை வைப்பு மற்றும் மனிதர்களுக்கு செய்த துரோகங்கள் நீங்கலாக) அனைத்தும் மன்னிக்கப்பட்டு புது மனிதனாகிறான்.

எனவே ஹஜ்ஜூக்கு பிறகு இனி படங்களில் நடித்தால் ஆபாசங்களை தவிர்த்து நாட்டு மக்களுக்கு நன்மை தரும் விதமாக கதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். 'சத்யமேவ ஜெயதே' போன்ற அருமையான நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தலாம். ஏழை பணக்காரன், வெள்ளையன் கருப்பன், ஐரோப்பியன் ஆப்ரிக்கன் என்ற பேதமையை மறந்து 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற பரந்த மனப்பானமைக்கு வர வழைக்கும் இந்த அழகிய வழி முறை கண்டிப்பாக அமீர்கானை மாற்றும்.



ஜெத்தா ஏர்போர்டில் அமீர்கான்.

நமது இணைய பதிவர்களில் பலரும் இந்த வருடம் ஹஜ் பயணத்துக்காக உலகமெங்குமிருந்தும் வந்துள்ளார்கள். பலரிடம் நானும் அலை பேசியில் பேசி விசாரித்தேன். சகோதர சகோதரிகள் அனைவரின் புனிதப் பயணமும் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக மாற நாமும் பிரார்த்திப்போம்.



பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சையத் அஃப்ரிதியுடன் அமீர்கான் மெக்காவில்

'அந்த ஆலயத்தில் இறைவனுக்காக ஹஜ் செய்வது சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் ஏக இறைவனை மறுத்தால் இறைவன் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்'
-குர்ஆன் 3:97


--------------------------------------------------------


சௌதி அரேபியாவுக்கு ஆண் துணையின்றி ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள வந்ததாகக் கூறப்படும் 170க்கும் மேற்பட்ட நைஜீரியப் பெண்களை சௌதி அரேபியா நாட்டை விட்டு வெளியேற்றியதை அடுத்து, சௌதி அரேபியாவுக்கு புனிதப் பயணம் செய்யும் பயணிகளை ஏற்றிச்செல்லும் அனைத்து விமானச் சேவைகளையும் நைஜீரியா இடை நிறுத்தியிருக்கிறது.

நைஜீரிய ஹஜ் பயணிகள் இவ்வாறு நடத்தப்படுவதைப் பற்றி புகார் செய்ய சௌதி அரேபியாவுக்கு நைஜீரிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் தலைமையில் ஒரு குழு செல்லவிருக்கிறது.

தாங்கள் தடுத்துவைக்கப்பட்டபோது, தங்களுக்கு உணவு எதுவும் தரப்படவில்லை என்றும், ஒரே ஒரு கழிப்பறையைப் பகிர்ந்துகொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் தடுத்து வைக்கப்பட்ட நைஜீரியப் பெண்களில் ஒருவர் பிபிசியிடம் கூறினார்.
ஹஜ் புனிதப் பயணம் முடிந்த பிறகு பல ஆப்ரிக்கர்கள் சௌதி அரேபியாவிலேயே தங்கி, அங்கு பிச்சையெடுப்பதன் மூலமும், விபச்சாரத்தில் ஈடுபடுவதன் மூலமும் பிழைப்பு நடத்துவதாக வரும் செய்திகள் குறித்து சௌதி அரேபியா நீண்டகாலமாகவே கவலை தெரிவித்து வருகிறது.

நன்றி:பிபிசி

-----------------------------------------------------------

சென்னை விமானநிலையத்தில் நின்றுகொண்டு இருந்த ஏர் இந்தியா விமானம் திடீரென விபத்துக் குள்ளானது.இதில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சென்னையிலிருந்து சவூதி அரேபியா ஜித்தாவிற்கு, செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் இன்று காலை 10:30 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. இதில் ஹஜ் பயணிகள் 421 பேர், சோதனை முடிந்து விமானத்தில் அமர்ந்திருந்தனர்.

பயணிகளின் சரக்குகளை ஏற்றி வரும் டிராக்டர் எதிர்பாராதவிதமாக, விமானத்தின் மீது மோதியது இதனால் விமானம் குலுங்கியது, மேலும் உள்ளே இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனே அதிலிருந்த ஹஜ் பயணிகள் அனைவரும் உடனே விமானத்திலிருந்து இறக்கப் பட்டு விமான நிலையத்துக்கு மீண்டும் அழைத்து வரப் பட்டனர்.

இதனை தொடர்ந்து குறிப்பிட்ட ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப் பட்டதாக அறிவிக்கப் பட்டது.

இதேபோன்று பல தடவை சென்னை விமான நிலையத்தில் டிராக்டர் மோதிய விபத்துகள் நடைபெற்றது குறிப்பித்தக்கது,

www.inneram.com

நல்ல நிர்வாகம் பண்றாங்கப்பா! டிராக்டர் இடித்தது இது முதல் முறை அல்லவாம். பல முறை நடந்தும் திருத்திக் கொள்வதாக இல்லை. :-).

Saturday, October 20, 2012

மீன்களையும் விட்டு வைக்கவில்லை என்டோசல்ஃபான்!

மீன்களையும் விட்டு வைக்கவில்லை என்டோசல்ஃபான்!



'நம்ம வீட்டுக்கார பையனோட லேப்டாப்புல ஒரு சேதிய நான் சைடுல பார்த்தேன். அத நான் சொல்லட்டுமா?'

'ம்..ம்......சொல்லு... சொல்லு.....'

'என்சைக்ளோபீடியா தகவல்படி பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு நம்ம மூதாதையர்களில் பல பேர் கால் முளைத்து பரிணாமம் அடைந்து நில வாழ் உயிரினமா மாறிட்டாங்களாம்'

'அடடே....ஆச்சரியமா இருக்கே! அப்போ நீரில் வாழும் நம்முடைய சுவாச உறுப்புகளும் மாற்றமடைந்திருக்கணுமே! அது எப்படி ஆச்சு?'

'இப்படி குறுக்கு கேள்வி எல்லாம் கேட்டா எனக்கு என்ன தெரியும்? நான் சொல்றதை கண்ணை மூடிக்கிட்டு நம்பணும். புரியுதா?'

'???????????????'

--------------------------------------------------------

பல்வேறு வகையான மீன்களில் ஆராய்ச்சி செய்த சலீம் அலி சென்டர் பார் ஆர்னிதாலாஜி அண்ட் நேச்சுரல் ஹிஸ்டரி (SACON) என்ற அமைப்பு கேரளாவில் சிறப்பாக இயங்கி வருகிறது. மாநில அரசின் அங்கீகாரம் மற்றும் ஊக்கத்தில் இந்த அமைப்பு செயல்படுகிறது. சமீபத்தில் நடத்திய ஆய்வில் சில அதிர்ச்சிகரமான உண்மைகளை நமக்கு தந்திருக்கிறது.

கேரளாவில் பாயும் நதிகளில் பூச்சிகொல்லி மற்றும் தீங்கு விளைவிக்கும் விஷங்கள் பற்றி ஆய்வு செய்ய இந்த அமைப்பை கேரளா பயோ டைவர்சிடி போர்டு சமீபத்தில் அங்கீகாரம் அளித்து நியமித்தது. பாலக்காடில் பாயும் சித்துர்புழா என்ற ஒரு சிறு ஆற்றைத் தவிர ஏனைய 44 நதிகளையும் இந்த SACON அமைப்பு ஆய்வு செய்தது.



மிகவும் அதிர்ச்சிக்குரிய கண்டுபிடிப்பாக, ஆய்வுக்கு எடுக்கப்பட்ட 159 மீன்களில் அனைத்திலும் DDT எனப்படும் பூச்சிகொல்லி மருந்தும், என்டோசல்பான் எனப்படும் நச்சு பொருளும் கலந்துள்ளது தெரிய வந்தது.

சமீபத்தில் என்டோசல்ஃபான் உற்பத்திக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் அணி திரண்டதும் இந்தியா அதற்கு ஆதரவு அளித்ததும் பிறகு உச்ச நீதிமன்றம் தலையிட்டு அரசுக்குக் கொட்டு வைத்ததும் மத்திய அரசு என்டோசல்பான் உற்பத்தியாளர்களுக்கு வக்காலத்து வாங்கி நீதிமன்றத்தில் பேசியதும் குறிப்பிடத்தக்கது.

'இது சாதாரண விஷயம் அல்ல. இந்த டிடிடி மறறும் என்டோசல்ஃபான் பாதிப்பானது மண், நீர், தாவரம், மிருகங்கள், பறவைகள, மனிதர்கள் என்று அனைத்து ஜீவன்களையும் பாதிக்க தொடங்கியுள்ளது. ஆற்றோரங்களில் உள்ள பலர் தங்களின் குடிநீராக ஆற்று நீரையே பயன்படுத்தி வருகின்றனர். ஆறு மட்டுமல்ல கடலும் பொலிவிழந்து வருகிறது. தொழிற்சாலை கழிவுகள் கடலில் கொட்டப்படுவதால் அங்குள்ள மீன்களும் மிகுந்த பாதிப்படைந்து மனிதனுக்கு தீங்கு விளைவிக்கின்றன' என்கிறார் ஆய்வாளர் சி.எம்.ஜாய்.

விட்டமின் சி உடம்புக்கு தேவை என்று வாரத்துக்கு இரண்டு முறை மீன் குழம்பை விரும்பும் பிரியர்கள் நோய்களை விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறார்களோ? நமது வீட்டிலேயே ஒரு குளத்தை வெட்டி இனி நாமே மீன் வளர்க்க வேண்டியதுதான்.

முன்பு எங்கள் வீட்டில் அழகிய கிணறு இருந்தது. மோட்டர் பம்பு வைத்ததால் எவருமே கிணறை உபயோகப்படுத்துவதில்லை. எனவே அதனை மணலை போட்டு மூடி விட்டோம். முன்பெல்லாம் அந்த கிணற்றில் அருமையான கெழுத்தி மீன்களை வளர்ப்போம் குழம்புக்கு மிக ருசியான மீன். இனி அந்த கிணற்றை சுத்தம் செய்து அதில் மீன் வளர்க்கலாமா என்று யோசிக்கிறேன்.

தொழிற்சாலைகளின் கழிவுகள் ஆற்றில் கலப்பதாலேயே அதிகமாக நீர் மாசுபட காரணமாகிறது. ஆற்றோரங்களில் வாய்க்கால் ஓரங்களில் பலர் காலைக்கடனை கவலையினறி கழிக்கிறார்கள். மழை பெய்தால் அத்தனையும் ஆறுகள் வாய்க்கால்களில் கலந்து நீர் மாசுபடுகிறது. பல வீடுகளின் கழிவு நீர் ஆறுகளிலும் வாய்க்கால்களிலுமே கலக்கின்றன. இவற்றை எல்லாம் அரசு கவனத்தில் கொண்டு கழிவறைகளின் அவசியத்தை மக்களுக்கு போதிக்க வேண்டும். பாடபுத்தகங்களிலும் இது பற்றிய விழிப்புணர்வை சிறு வயதிலிருந்தே மாணவர்களின் மனத்தில் பதிய வைக்க வேண்டும்.
http://www.deccanchronicle.com/channels/cities/kochi/ddt-kerala-fish-453

Friday, October 19, 2012

பரிணாமவியலை கேள்வி கேட்டால் ஜாகிர்நாயக் பதிலாகி விடுமா!

பரிணாமவியலை கேள்வி கேட்டால் ஜாகிர்நாயக் பதிலாகி விடுமா!

குரங்குக்கும் மனிதனுக்கும் உள்ள இடைப்பட்ட படிமங்களின் ஆதாரத்தை விளக்கி இனி பதிவுகள் எழுதப் போகிறேன் என்று சில நாள் முன்பு சார்வாகன் சொன்னார். நானும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தால் அதைப் பற்றிய அறிவிப்பு எதையும் காணோம். ஆனால் சம்பந்தமில்லாமல் ஜாகிர் நாயக்கையும் பிஜேயையும் சம்பந்தப்படுத்தி காமெடி செய்து பரிணாமவியலின் தவறை மறைக்க பார்க்கும் தந்திரத்தை தற்போது செய்து வருகிறார். சரி அதிலாவது தனது தரப்பு வாதம் நிற்கும்படியான செய்திகளைத் தரப்படாதோ? இனி சார்வாகன் சொல்வதைக் கேட்போம்.

//ஜாகிர நாயக் மீது இபோது முஸ்லிம்களே ஒத்துக் கொள்ளும் இருகுற்றச்சாட்டுகள் உண்டு.
1.குரான் 79.30ல் டஹாஹ என்னும் அரபி சொல்லுக்கு இலாத த்வறான பொருள் நெருப்புக் கோழி முட்டை என்று சொல்லி உலகம் நெருப்புக் கோழி முட்டை போல் இருக்கிறது என பொய் சொன்னார்.
http://satyagni.com/science-zakir/

zakir Naik says:
The earth is not exactly round like a ball, but geo-spherical i.e. it is flattened at the poles. The following verse contains a description of the earth’s shape “And the earth, moreover, Hath He made egg shaped.” [Al-Qur'aan 79:30]
The Arabic word for egg here is dahaha, which means an ostrich-egg. The shape of an ostrich-egg resembles the geo-spherical shape of the earth. Thus the Qur’aan correctly describes the shape of the earth, though the prevalent notion when the Qur’aan was revealed was that the earth is flat// - சார்வாகன்!

இது பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

'பூமியை நாம் விரித்தோம்: நாம் அழகுற விரிப்பவர்கள்.'
-குர்ஆன் 51:48

'இதன் பின்னர் பூமியை விரித்தான்'
-குர்ஆன் 79:30

'பூமியை விரித்தான்' என்ற குர்ஆனின் வசனத்தில் வரும் 'தஹாஹா' என்ற சொல் 'தஹ்வு' என்ற சொல்லின் மூலத்திலிருந்து வந்தது. இங்கு 'விரித்தல்' என்ற ரீதியில் பொருள் கொள்வதுதான் அரபு இலக்கணத்தின் படி சரியாகும். ஜாகிர் நாயக்கும் இதை ஒத்துக் கொள்கிறார்.

மேலதிக விபரமாக தனது சொந்த விளக்கமாகத்தான் 'முட்டை' வடிவிலானது என்ற கருத்தை வைக்கிறார் ஜாகிர் நாயக். இவர் ஒரு டாக்டர். அறிவியல் அறிஞர் கிடையாது. எனவே இவரது கருத்தில் தவறும் இருக்கலாம்.

'சார்பியல்' தத்துவத்தை சொன்னபோது ஐன்ஸ்டீனே தவறிழைக்கவில்லையா? 1923 இல் ஐன்ஸ்டைன் மாறாத பிரபஞ்சத்தைப் பற்றி எழுதியதைத் 'தான் செய்த மாபெரும் தவறு ' என்று ஒப்புக் கொண்டார்! அலெக்ஸாண்டர் ஃபிரைட்மன் கருத்தை ஏற்றுக் கொண்டு விரியும் பிரபஞ்சக் கோட்பாடைப் பிரதி பலிக்க, ஐன்ஸ்டைன் தன் சமன்பாடுகளைத் திருத்தி எழுதினார்!

ஆக.. ஐன்ஸ்டீனுக்குக் கூட ஆராய்ச்சியில் தவறு மனிதன் என்ற முறையில் வரலாம். ஜாகிர் நாயக்குக்கும் வரலாம். பிஜேக்கு கூட வரலாம். ஆனால் இறை வேதத்தில் வராது.

'பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை கோள்களும் நமது பூமி உட்பட உப்பி விரிகிறது. அதாவது பிரபஞ்சம் நிலையாக முடங்கிக் கிடக்கும் ஒரு பொருள் என்று கருதக் கூடாது. அது சோப்புக் குமிழி போல உப்பிக் கொண்டே போகும் ஒரு கோளம்'
-விஞ்ஞானி ஹப்பிள்.

இதைத்தான் இறைவனும் 'பூமியை விரித்தான்' அதாவது பூமியை விரிவாக்கம் செய்தான் என்று கூறுகிறான்.. விஞ்ஞானி ஹப்பிளின் கருத்தை அப்படியே பிரதிபலிப்பதை பார்க்கவில்லையா!

'பிரபஞ்சம் இருவித முடிவுகளில் சிதைந்து போகலாம்! ஒன்று குமிழிபோல் உப்பிக் கொண்டு அது தொடர்ந்து விரியலாம்! அல்லது பெரும் வெடிப்பில் [Big Bang] தோன்றிய பிரபஞ்சம், ஒரு பெரும் நெருக்கலில் [Big Crunch] மறுபடியும் நொறுங்கி முடிந்து போகலாம்! எனது யூகம், பிரபஞ்சம் பெரும் நெருக்கலில் ஒரு சமயம் அழிந்து போய்விடும் என்பது! பிரபஞ்சத்தின் பிரளய முடிவுகளை முன்னறிவித்த முனிவர்களை விட எனக்கு ஓர் பெரிய சலுகை உள்ளது! இப்போதிருந்து பத்து பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு எது நிகழ்ந்தாலும், என் கருத்து பிழையான தென்று நிரூபிக்கப்பட நான் உயிரோடு இருக்கப் போவதில்லை ' என்று புன்னகை புரிகிறார், ஹாக்கிங்!

நான் போன பதிவில் கூறியது போல் ஆய்வுகளில் தவறுகள் வரலாம் அது இயற்கை. அதுதான் ஜாகிர் நாயக்கிடம் நடந்தது. ஆனால் பரிணாமவியலை நம்ப வைக்க வேண்டும் என்பதற்காக மனிதனின் மண்டை ஓட்டையும் குரங்கின் தாடையையும் ஒட்ட வைத்து பற்களுக்கு சாயங்களை பூசி 40 வருடம் அறிவியல் உலகை ஏமாற்றியிருக்கின்றனர் பரிணாமவியலார். ஒரு சாதாரண படிப்பறிவில்லாதவனை ஈஸியாக புரியாத மொழியில் பேசி சம்மதிக்க வைத்து விடலாம். ஆனால் ஒரு ஆய்வுக் கூடத்தில் அறிவியல் அறிஞரகள் நிறைந்த சபையில் 40 வருடம் இதை மறைக்க வேண்டும் என்றால் ஒரு பெரும் குழுவே வேலை செய்திருக்க வேண்டும். புதிய படிமங்கள் மட்டும் கிடைக்காமல் போயிருந்தால் பரிணாமவியல் உண்மைதான் என்று இன்று வரை சாதித்துக் கொண்டிருப்பர்.

http://en.wikipedia.org/wiki/Ultimate_fate_of_the_universe
http://simple.wikipedia.org/wiki/A_Brief_History_of_Time

------------------------------------------------------

//2. ஜாகிர் நாயக், பி.ஜேவின் " இயேசு இறைமகான என்னும் புத்த்கத்தை அப்படியே த்னது சொந்த சரக்காக் பி.ஜே விடம் அனௌமதி பெறாமல் ஆங்கிலத்தில் எழுதி விட்டார்

இப்போது ஜாகிர் நாயக்கின் மோசடிகள், தவறால் குரான் தவறாகி விடும் என்றால், பில்ட் டௌன் மோசடியால் பரிணாமமும் த்வறாகி விடலாம்
நன்றி//- சார்வாகன்

பி.ஜே யின் புத்தகத்தை அனுமதி பெறாமல் ஜாகிர் நாயக் ஆங்கிலத்தில் மொழி பெய்ர்த்தால் அது அவர்கள் இருவருக்குமிடையில் உள்ள காப்பீட்டு பிரச்னை. பிஜே தனது பதிவுகளை இவ்வாறு காப்பி செய்தால் அதை அதிகம் பெரிதுபடுத்துவதும் இல்லை. சவுதி அரசே கூட பிஜேயின் பல புத்தகங்களை அரபியிலும் ஆங்கிலத்திலும் இன்னும் உலகின் பல மொழிகளிலும் மொழி பெயர்ப்பு செய்துள்ளது. அதற்கு கூட எந்த பிரதிபலனையும் எதிர் பாராமல் இலவசமாகவே மொழி பெயர்க்க அனுமதி கொடுத்தார். ஜாகிர் நாயக் ஏசுவின் வாழ்வை தவறாக விமர்சித்து இருந்தால்தான் அல்லது பொய் சொல்லியிருந்தால்தான் அதை பிரச்னையாக்க முடியும்.

இதனால் பில்ட் டவுன் மோசடியை நியாயப்படுத்தப் பார்க்கிறார். என்ன ஆனது உங்களுக்கு சார்வாகன் உரிக்க உரிக்க வெங்காயம் போல் சென்று கொண்டிருக்கிறதே உங்கள் அனைத்து வாதங்களும்? :-)

---------------------------------------------------------

பிரபஞ்சம் விரிவடைதலைப் பற்றி நான் முன்பு இட்ட பதிவை மேலதிக விபரமாக தருகிறேன்.

பிரபஞ்சம் விரிவடைகிறது என்பது உண்மையா?

இதன் பின்னர் பூமியை விரித்தான்'
-குர்ஆன் 79:30

'வானத்தை நாம் ஆற்றலைக் கொண்டு படைத்தோம்: நிச்சயமாக நாம் அதை விரிவாக்கம் செய்பவராவோம்.'
-குர்ஆன் 51:47

'பூமியை நாம் விரித்தோம்: நாம் அழகுற விரிப்பவர்கள்.'
-குர்ஆன் 51:48

பூமியை நாம் விரித்து அதில் உறுதியான, மலைகளை நிலைப் படுத்தினோம்; ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளவின்படி அதில் நாம் முளைப்பித்தோம்.
-குர்ஆன் 15:19



மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான் - நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
-குர்ஆன் 13:3

இன்னும், பூமியை - படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான்.

-குர்ஆன் 55:10


'பூமியை விரித்தான்' என்ற குர்ஆனின் வசனத்தில் வரும் 'தஹாஹா' என்ற சொல் 'தஹ்வு' என்ற சொல்லின் மூலத்திலிருந்து வந்தது. இங்கு தஹ்வு என்ற சொல்லுக்கு விரித்தல் என்ற பொருள் வரும்.

நாம் அமரும் பாயை சுருட்டுங்கள் என்கிறோம். பாயை விரியுங்கள் என்கிறோம். இங்கு சுருக்கப்பட்ட பொருள் விரிவடையும்போது என்ன வார்த்தையை பயன்படுத்துகிறோமோ அதே வார்த்தையை கொண்டு பூமியையும் இறைவன் கையாள்கிறான்.




பல காலமாகவே இந்த பிரபஞ்சம் நிலையான ஒன்று என்றுதான் அறிவியலார் கூறி வந்தனர். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்தான் ரஷ்ய இயற்பியல் விஞ்ஞானி அலெக்சாண்டர் ஃபிரைட்மேனும் பெல்ஜிய விஞ்ஞானி லேமைட்ரீயும் பிரபஞ்சத்தின் விரிவடைதலை கண்டறிந்தனர். இந்த உண்மை 1929ல் தொலைநோக்கி சோதனை மூலம் விஞ்ஞானி எட்வின் ஹப்பிளால் நிரூபிக்கப்பட்டது. மேலும் நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்கள் ஒன்றை யொன்று விலகிச் செல்வதையும் தனது சோதனையில் கண்டறிந்தார் ஹப்பிள்.

பிரபஞ்சம் விரிவடைவது சம்பந்தமாக மூன்று அமெரிக்கர்கள் நோபல் பரிசை பகிர்ந்து கொண்டனர். அதன் காணொளியைப் பார்ப்போம்.



உப்பி விரிகிறது. அதாவது பிரபஞ்சம் நிலையாக முடங்கிக் கிடக்கும் ஒரு பொருள் என்று கருதக் கூடாது. அது சோப்புக் குமிழி போல உப்பிக் கொண்டே போகும் ஒரு கோளம்'
-விஞ்ஞானி ஹப்பிள்.
இதைத்தான் இறைவனும் 'பூமியை விரித்தான்' அதாவது பூமியை விரிவாக்கம் செய்தான் என்று குர்ஆனில் கூறுகிறான். விஞ்ஞானி ஹப்பிளின் கருத்தை அப்படியே பிரதிபலிப்பதை பார்க்கவில்லையா
!


முன்பு பூமியில் இருந்த நிலப்பரப்பு அனைத்தும் ஒன்றாகவே இருந்தன. பூமியானது விரியத் தொடங்கியவுடன் ஒன்றாக இருந்த நிலப்பரப்புகள் கண்டங்களாகவும், நாடுகளாகவும், தீவுக் கூட்டங்களாகவும் பிரிகின்றன. இதனை இந்த காணொளி அழகாக விவரிக்கிறது.



ஹாக்கிங் கூறுகிறார்:

'இருபதாம் நூற்றாண்டிற்கு முன்னர் ஒருவர் கூட பேரண்டம் விரிந்து செல்கிறது அல்லது சுருங்கி வருகிறது எனும் கருத்தைத் தெரிவிக்கவில்லை. பேரண்டம் மாற்றமே இன்றி நாம் காண்பது போலவே எக்காலமும் இருந்திருக்கிறது என்றே பலரும் நம்பி வந்தனர். பெரும்பாலான மக்களின் மன நிலையும் இதை ஒட்டியே அமைந்திருந்ததும் காரணமாக இருக்கலாம்.'

-எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம் (பக்கம் 6)

“The discovery that the universe is expanding was one of the great intellectual revolutions of the 20th century.
(பேரண்டம் விரிவடைகிறது எனும் இக்கண்டுபிடிப்பு இருபதாம் நூற்றாண்டின் பெரும் அறிவுப் புரட்சிகளில் ஒன்றாகும்)
(அதே புத்தகம் பக்கம் 42)



உலகின் தலை சிறந்த விஞ்ஞானிகளான ஐசக் நியூட்டன் மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்ற அறிஞர்கள் கூட பிரபஞ்சம் விரிவடைகிறது என்ற செய்தியை அறிந்திருக்கவில்லை. அது பற்றிய சிந்தனையும் அவர்களுக்கு எழவில்லை. இது போன்ற ஒரு வார்த்தைப் பிரயோகத்தை முகமது நபி என்ற ஒரு மனிதரால் சொல்லியிருக்க முடியுமா? என்று சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம். படிப்பறிவற்ற அந்த சமூகத்தையும் தனது தாய் மொழியையே எழுத படிக்க தெரியாத முகமது நபியையும் இங்கு நாம் நினைவில் நிறுத்தி பார்க்க வேண்டும். இந்த உண்மைகளை ஆராய்ந்தால் குர்ஆனின் வார்த்தைகள் நம்மைப் படைத்த இறைவனின் வார்த்தைகள் என்ற முடிவுக்கே வருவோம்.

மேலும் விபரங்கள் அறிய...
http://en.wikipedia.org/wiki/Universe


Thursday, October 18, 2012

பரிணாமவியலின் பொய் முகங்கள் அம்பலம்

பரிணாமவியலின் பொய் முகங்கள் அம்பலம்!


'ம் ஹூம்....யம்மாவ்..'

'என்ன குழந்தாய்?'

'எத்தனை நாள் நான் குரங்காவே இருக்கிறது. நான் எப்போ மனுஷனா மாறுவேன்'

'கவலைப் படாதே குழந்தே! நம்ம டார்வின் மாமா கிட்டே சொல்லி ஒன்னய மனுஷனா மாத்திட சொல்லிடறேன்'

'அவருதான் செத்து போயிட்டாரே'

'அவர் போனா என்ன? அவரோட சிஷ்யர்கள் கிட்டே சொல்லி ஒன்னய மனுஷனா மாத்திர்றேன். கவலைப் படாதே'

------------------------------------------------


//பாருங்க நீங்களும் சரியாப் புடிச்சீங்க. வ்ரலாறு,அறிவியலை திரிகாமல் மத பிரச்சாரம் செய்ய முடியாது என்பது உண்மை என்றாலும்,வஹாபிகள் போல் 100% பொய் சொல்ப்வர்கள் நான் பார்த்தது இல்லை.

இவர்களையும் நம்பி ஒரு கூட்டம், நாம் மட்டும் எழுதவில்லை என்றால் ,இவர்கள் பாட்டுக்கு கதை விட்டே,கால்த்தை ஓட்டிக் கொண்டு இருப்பாரகள்.
இதற்குத்தான். உடனே மறுப்பு பதிவு இட்டுவிடுகிறோம்.
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் கொடுமை!!!!!!!!

அன்றில் இருந்து இன்று வரை பொய் பொய், மேலும் பொய் இதுவே வஹாபி பிரச்சாரம் ஆகும்!!!// -சார்வாகன்.



இது சார்வாகன் கொடுத்த பின்னூட்ட பதில். அதாவது வஹாபிகள் பொய்களை சொல்லி தங்கள் மார்க்கத்தை பரப்புகிறார்களாம். அதிலும் 100 சதவீதம் பொய்கள் தானாம். ஒருவனை பார்த்து பொய சொல்லுகிறாய் என்று சொல்லும் போது மற்ற அவரது நான்கு விரல்களும் அவரை நோக்கியே திரும்புகின்றன என்பதை ஏனோ மறந்து விடுகிறார்.



இந்த டார்வினிஷ்டுகள் எந்த அளவு பொய்களில் கை தேர்ந்தவர்கள் என்பதற்கு ஒரு சம்பவத்தை நாம் இங்கு எடுத்துக் கொள்வோம்.



இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய அறிவியல் மோசடி என்று சொன்னால் பில்ட்டவுன் மோசடியை சொல்லலாம். மனிதன் குரங்கிலிருந்து பரிணாமம் அடைந்தான் என்ற பொய்யை நம்ப வைக்க இவர்களுக்கு இடைப்பட்ட படிமங்கள் கிடைக்கவில்லை. இதனை கருத்தில் கொண்டு சார்லஸ் டாசன் என்ற தொல்லுயிரியலாளர் ஆய்வுகளை மேற்கொண்டார். இங்கிலாந்தின் கிழக்கு சிசெக்ஸ் பகுதியில் பில்ட் டவுன் என்ற கிராமத்தில் ஒரு மனித படிமத்தை கண்டெடுத்தார். 1912 ஆம் ஆண்டு தன் நண்பர்கள் ஆர்தர் கீத்வுட்வர்ட், தே சார்டின் போன்ற அறிஞர்களின் துணையுடன் ஆய்வுகளை மேற்கொண்டார்.



(பொய்யாக புனையப்பட்ட மண்டை ஒடு)

இவர்களுக்கு மண்டை ஓட்டின் சில பகுதிகள் மற்றும் தாடையின் சில பகுதிகள் மட்டுமே கிடைத்தன. இவற்றின் உதவியால் சில ஆண்டுகள் கழித்து முழு மண்டை ஓட்டை புனரமைப்பு செய்து புவியியல் கழகத்திடம் ஒப்படைத்தனர். அதற்கு கற்பனையான முகமும் கொடுக்கப்பட்டது.




மனித மண்டை ஓடும் குரங்கின் தாடையும் ஒரே இடத்தில் கிடைத்திருப்பதால் இவை இரண்டும் ஒரே உயிரினத்தின் படிமம்தான் என்பது போன்ற செய்தியை பரப்பினர். இதன் தாடைப் பகுதியில் இருந்த பற்கள் மனிதனை ஒத்து இருந்ததால் குரங்கிலிருந்து மனிதன் பரிணமித்தான் என்பதற்கு இடைப்பட்ட படிம ஆதாரம் கிடைத்து விட்டது என்று வெகுவாக பிரபலப்படுத்தப் பட்டது. இந்த உயிரினத்திற்கு 'பில்ட்டவுன் மனிதன்' என்று பெயர் சூட்டினர். இந்த மனிதன் ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவன் என்றும் கதை கட்ட ஆரம்பித்தனர்.



இதில் சந்தேகமடைந்து சிலர் கேள்வி கேட்கப் போக அவர்களை கிண்டலடித்து அவர்களை அடக்கி விட்டனர் பரிணாமவியலார். (தற்போது கூட யாராவது பரிணாமத்தை சந்தேகங் கொண்டு கேள்வி கேட்டால் ஒரு நமட்டு சிரிப்பு சிரித்து விட்டு 'ஹி..ஹி...உங்களுக்கு பரிணாமத்தை புரியும் அளவுக்கு இன்னும் அறிவு வளர வில்லை' என்று சார்வாகன், தருமி போன்றவர்கள் கிண்டலடிப்பதையும் பல இடங்களில் பார்த்திருக்கிறோம்)



கார்டியன் பத்திரிக்கை இந்த செய்தியை 21-11-1912 ஆம் ஆண்டு வெளியிட உலகம் முழுவதும் மனித பரிணாமத்துக்கு இடைப்பட்ட படிமம் கிடைத்தாக செய்தி பிரபலம் ஆனது. 1913 ஆம் ஆண்டு அதே இடத்தில் ஒரு கோரைப் பல்லும் கிடைத்தது. அதே இடத்தில் சில மூளைப் பகுதிகளும் சில தாடைப் பகுதிகளும் கிடைக்க ஆரம்பித்தன. ஈரைப் பேனாக்கி பேனை பெருமாளாக்கும் பரிணாமவியலார் மேலும் ஒரு ஆதாரம் கிடைத்ததாக துள்ளி குதித்தனர்.



முன்பு ஆட்சேபித்த சில அறிஞர்கள் தற்போது கீத்தின் வாதத்தை ஒப்புக் கொள்ள ஆரம்பித்தனர். இடையில் நோய் வாய் பட்டு சார்லஸ் டாசன் இறந்து விடுகிறார். அந்த சுரங்கத்தில் அதன் பிறகு வேறு எந்த படிமங்களும் கிடைக்காததது ஆராய்ச்சியாளர்களை சற்று குழப்பத்தில் ஆழ்த்தியது.



1924 ஆம் ஆண்டிலிருந்து 1946 ஆம் ஆண்டு வரை உலகமெங்கும் பல இடங்களில் பல ஆதி மனிதனின் படிமங்கள் கிடைக்க ஆரம்பித்தன. கிடைத்த படிமங்கள் அனைத்தும் பில்ட்டவுன் படிமங்களோடு ஒத்து வரவில்லை. இது ஆராய்ச்சியாளர்களை மேலும் சந்தேகத்திற்க்குள்ளாக்கியது.



உலகின் பல்வேறு இடங்களில் மனித படிமங்கள் கண்டுபிடிக்கப்பட, இந்த இரண்டு படிமங்களுக்குமான வேறுபாடு பரிணாமவியலாளர்களை சங்கடத்தில் ஆழ்த்தியது. இந்த இரண்டில் எது சரி? பில்ட்டவுன் மனித படிமமா? அல்லது உலகின் மற்ற இடங்களில் சேகரிக்கப்பட்ட படிமங்களா?



பரிணாமத்தை தூக்கிப் பிடிக்கும் ஆய்வாளர்கள் பில்ட்டவுன் படிமத்தையே உண்மை என்று நம்பினர். ஏனெனில் இதை வைத்துதான் குரங்கிலிருந்து மனிதன் பரிணமித்ததை ஆதாரத்தோடு நிறுவ முடியும். ஆனால் காலம் செல்லச் செல்ல நிறைய படிமங்கள் கிடைக்க ஆரம்பித்தன. இவை அனைத்துமே பில்ட்டவுன் படிமத்தோடு ஒத்து வரவில்லை. எனவே ஆய்வாளர்கள் வேறு வழி இன்றி பில்ட்டவுன் படிமத்தை ஆய்வுக்கு கொண்டு செல்லும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.



படிமங்களின் வயதைக் கணக்கிடும் ப்லூரின் சோதனை 1940 வாக்கில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இந்த புதிய யுக்தியைக் கையாண்டு கென்னத் ஒக்லி என்ற தொல்லுயிரியலாளர் பில்ட்டவுன் படிமத்தை ஆய்வு செய்ய ஆரம்பித்தார்.



ஆய்வு ஆரம்பித்தவுடன் முடிவுகள் வர ஆரம்பித்தது. அறிவியல் உலகமே ஸ்தம்பித்து விட்டது. ஆம். பில்ட்டவுன் படிமம் பல பொய்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளதை அறிவயல் உலகம் தெரிந்து கொண்டது. அப்படி என்ன அதிர்ச்சி தரும் பொய்களை சமர்ப்பித்திருந்தனர்?



முதல் அதிர்ச்சி: பில்ட்டவுன் படிமம் ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முந்தயது என்று சொன்னது மகா பொய். அது வெறும் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள படிமம்தான்.இது முதல் சறுக்கல். ஏனெனில் மனிதன் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தற்போதய நிலையில் இருந்ததாக படிமங்களின் ஆய்வு உறுதி செய்கிறது.



மனிதன் தறபோதய வளர்ச்சியில் முழுதாக பரிணமித்து உள்ளபோது இடையில் அதன் இடைப்பட்ட இனம் எவ்வாறு வர முடியும் என்று கேட்டனர் ஆய்வர்கள்?



அதிர்ச்சி இரண்டு: மண்டை ஓடு மனிதனுக்கானது. ஆனால் அதன் தாடையோ ஓரங்கூட்டான் குரங்கினுடையது என்பது ஆய்வில் தெரிய வந்தது. வேதிப் பொருட்களைக் கொண்டு அந்த படிமங்கள் ஒரே வயதுடையதாக பொய்யாக காட்டப்பட்டுள்ளது.



அதிர்ச்சி மூன்று: தாடைப்பகுதியில் இருந்த பற்கள் குரங்கின் பற்களாகும்.அதை மனித பற்களாக தெரிய வைக்க கருவிகள் கொண்டு தீட்டப்பட்டு மண்டை ஓட்டின் படிமத்துக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டிருந்தது ஆய்வில் தெரிய வந்தது. மனிதனின் பழங்கால பற்கள் போன்று தோற்றமளிக்க அதனை வர்ணத்தால் மாற்றவும் செய்துள்ளனர்.

இந்த மேசடி வேலையை செய்த கூட்டு களவானிகளாக அறியப்படுபவர்கள். இவர்கள் அனைவருமே பரிணாமவியலை கரைத்து கடித்த அறிஞர்களாம். :-)

1.Charles Dawson,

2.Tielhard de Chardin,

3.W. J. Sollas,

4.Grafton Elliot Smith,

5.Arthur Conan Doyle,

6.Martin A. C. Hinton

ஒரு படித்த அறிவியல் அறிஞர்கள் செய்யும் செயல்களா இது? அதிலும் ஒருவர் அல்ல. பலர் சேர்ந்து செய்த சதி திட்டம் இது. பரிணாவியலை தூக்கிப் பிடிக்கும் அறிவியல் அறிஞர்களின் லட்சணம் இதுதான். ஒரு குழுவாக சேர்ந்து நாற்பதாண்டு காலம் இந்த உலகை முட்டாளாக்கியிருக்கின்றனர் பரிணாவியல் ஆராய்ச்சியாளர்கள். இவர்கள் தங்களின் கருத்தை மெய்ப்பிப்பதற்காக எதையும் செய்யத் தயங்காதவர்கள் என்பது இந்த பதிவின் மூலம் நிரூபணமாகிறது.



1953 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி "தி டைம்ஸ்" மற்றும் "தி ஸ்டார்" பத்திரிக்கைகள் இது குறித்து செய்தி வெளியிட்டன. தி டைம்ஸ் நாளிதழ் இதனை "பித்தலாட்டம்" என்றும் "நேர்த்தியான மோசடி" என்றும் தலையங்கத்தில் குறிப்பிட்டது.

ஆராய்ச்சியில் பிழை ஏற்படலாம். அதை யாரும் குறை காண மாட்டார்கள். ஆனால் ஒரு உயிரினம் மற்றொரு உயிரினமாக பரிணாமம் அடைகிறது என்ற பொய்யை நிரூபிப்பதற்காக உலகை முட்டாளாக்கிய இந்த பரிணாம மோசடிகாரர்களை அறிவியல் உலகம் என்றுமே மன்னிக்காது.


டிஸ்கி: பரிணாவியல் என்றாலே அது ஆஷிக்தான். தற்போது புதிதாக திருமணம் ஆனதால் கொஞ்சம் பிசியாக இருக்கிறார். எனவே அவர் பதிவிலிருந்து சில விபரங்களை எடுத்து கொஞ்சம் எளிதாக்கி இந்த பதிவை வெளியிடுகிறேன். வஹாபிகளை குறை சொல்ல புகு முன் பரிணாமவியலின் உண்மை முகம் என்ன என்பதை சார்வாகனுக்கு விளக்கவே இந்த பதிவு. பரிணாவியல் ஆய்வாளர்களின் பொய்களை அடுக்கினால் 10 பதிவுகள் தேறும். அவைகளையும் நேரமிருப்பின் பிற்பாடு வெளியிடும் எண்ணமும் உள்ளது இறைவன் நாடினால்..

References:
1. Piltdown Man, The Bogus Bones Caper - Richard Harter, Talk Origins Website.
2. Creationist Arguments: Piltdown Man, Talk Origins Website.
3. Piltdown Man - Natural History Museum, London.
4. The Unmasking of Piltdown Man - BBC
5. Fossil fools: Return to Piltdown - Paul Rincon, BBC dated 13th November 2003.
6. Piltdown Man: Timeline of deceit - BBC dated 13th November 2003.
7. Charles Dawson: 'The Piltdown faker' - BBC dated 21st November 2003.
8. Piltdown Man Forgery - Times Archive, Times Online Website.
9. Piltdown Man is revealed as fake - PBS
10. Piltdown Man Forgery (The times article extract) - Clark University.
11. Piltdown Man - wikipedia.
12. Piltdown Man - archaeology - famous hoax: Age of the Sage website.
13.ethirkkural.com/2010/09/evolution-stheory-harry-potter-stories.html