Followers

Thursday, July 31, 2014

கருவியல் சம்பந்தமாக ஆனந்த் சாகருக்கு விளக்கம்!


ஆன்ந்த் சாகர்!

//மேற்கண்ட மொழிபெயர்ப்பு உங்கள் அண்ணன் பீ.ஜே வின் ஏமாற்றுவேலை. அறிவியலை குரானின் உளறல்களுக்குள் நுழைப்பதற்கு உங்கள் அண்ணன் போடும் தமாஷான குட்டிக்கரனங்களில் இதுவும் ஒன்று. உங்கள் அண்ணன் சேர்த்துள்ள தவ்ஹீத் ஜமாஅத் கூட்டம் ஒரு பிராடு கூட்டம். உங்களுக்கு ஏன் இந்த ஈனத்தனமான பிராடு பிழைப்பு?//

சகோ பிஜே இந்த ஆராய்ச்சிகளை செய்யவில்லை. டாக்டர் கெய்த் மூரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீரகளா?

டாக்டர் கெய்த் மூர் உலக அளவில் புகழ் பெற்ற உயிரியல் துறை அறிஞர் ஆவார். இவர் உயிரியலில் மனிதனின் கரு வளர்ச்சியைப் பற்றி பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். அப்படி அவர் எழுதிய புத்தகங்களில் "The Developing Human" என்ற புத்தகம் அமெரிக்க அரசால் சிறந்த புத்தகமாக தெரிவு செய்யப் பட்டுள்ளது. டாக்டர் கெய்த் மூர் Anotomy and cell Biology துறைகளில் பேராசிரியராக டொராண்டோ பல்கலைக் கழகம் கனடாவில் பணியாற்றுகிறார். இக்கல்லூரியில் Anotomy துறையில் எட்டு வருடங்களாக தலைமைப் பதவியிலும் இருந்து வருகிறார். இனி அவர் தரும் விளக்கங்களை ஆங்கிலத்திலேயே பார்ப்போம்.

In the Holy Quran God speaks about the stages of Mans embryonic development:

“We created man from an extract of clay. Then we made him as a drop in a place of settlement, firmly fixed. Then we made the drop in to an alaqah (leech,suspended thing,and blood clot) then we made the alaqah in to a mudghah (chewed – like substance)…… “ - Quran 23 : 12,13 ,14

literally, the Arabic word alaqah has three meanings : 1) leech 2)suspended thing 3)blood clot.
1) In comparing a leech to an embryo in the alaqah stage, we find similarity between the two as we can see in figure 1. also the embryo at this stage obtains nourishment from the blood of the mother, similar to the leech ,which feeds on the blood of others.

Figure 1 : Drawing illustrating the similarities in appearance between a leech and a human embryo at the alaqah stage. (leech drawing from Human development as Described in the Quran and sunnah. Moore and others page 37, modified from integrated principles of zoology, Hickman and others.Embbroyo drawing from The developing Human, Moore and persaud,page 73)

2)The second meaning of the word alaqah is “suspended thing.” This is what we can see in figures 2 and 3 the suspension of the embryo, during the alaqah stage, in the womb of the mother.

Figure 2 : We can see in this diagram the suspension of an embryo during the alaqah stage in the womb (uterus) of the mother. ( The developing Human, Moore and persaud, 5th edition page 66

3) The third meaning of the word alaqah is “blood clot.” We find that the external appearance of the embryo and its sacs during the alaqah stage is similar to that of a blood clot. This is due to presence of relatively large amounts of blood present in the embryo during the stage.(see figure 4). Also during the stage, the blood in the embryo does not circulate until the end of the third week. Thus the embryo at this stage is like a clot of blood.

Figure 3 : In this photomicrograph, we can see the suspension of an embryo (marked b) during the alaqah stage (about 15 days old) in the womb of the mother. The actual size of the embryo is about 0.6 mm. (The developing Human,Moore,3rd edition page 66,from Histology, Leeson and Leeson.)

Figure 4 : Diagram of the primitive cardiovascular system in an embryo during the alaqah stage. The external appearance of the embryo and its sacs is similar to that of a blood clot, due to the presence of relatively large amounts of blood present in the embryo. (The developing Human, Moore 5th edition, page 65.)

அரபு இலக்கணத்தின்படி 'அலக்' என்ற சொல்லுக்கு இரத்தக் கட்டி, தொங்கிக் கொண்டிருக்கும் நிலை, ஒன்றுடன் ஒன்று கோர்த்துக் கொண்டது என்ற மூன்று பொருளை தருகிறது. இந்த மூன்று மொழி பெயர்ப்புகளையும் அந்த நிலைக்கு பொருத்திக் கொள்ளலாம்.

ஆக 'அலக்' எனும் அரபி சொல்லுக்கு வரும் மூன்று விளக்கங்களும் கரு வளர்வின் ஆரம்பத்தில் உள்ள அடுத்தடுத்த நிலைகளை மிகத் துல்லியமாக விளக்குகிறது.

மேலும் விரிவாக காணொளிகளோடு பார்க்க இந்த லிங்குக்கு செல்லவும்.


http://suvanappiriyan.blogspot.com/2011/12/blog-post.html

அறிவியல் விளக்கப் படங்களுடன் குர்ஆன் கூறும் கருவியலைப் பார்க்க இந்த லிங்குக்கு செல்லுங்கள்.

http://suvanappiriyan.blogspot.com/2013/04/blog-post_25.html

டாக்டர் கெய்த் மூரும் உளருகிறார் என்று நீங்கள் அடம் பிடித்தால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது.

4 comments:

ஆனந்த் சாகர் said...

@ சுவனப்பிரியன்,

//அரபு இலக்கணத்தின்படி ‘அலக்’ என்ற சொல்லுக்கு இரத்தக் கட்டி, தொங்கிக் கொண்டிருக்கும் நிலை, ஒன்றுடன் ஒன்று கோர்த்துக் கொண்டது என்ற மூன்று பொருளை தருகிறது. இந்த மூன்று மொழி பெயர்ப்புகளையும் அந்த நிலைக்கு பொருத்திக் கொள்ளலாம்.

ஆக ‘அலக்’ எனும் அரபி சொல்லுக்கு வரும் மூன்று விளக்கங்களும் கரு வளர்வின் ஆரம்பத்தில் உள்ள அடுத்தடுத்த நிலைகளை மிகத் துல்லியமாக விளக்குகிறது.//

சரி, அலக் என்ற அரபி வார்த்தை இரத்தக் கட்டி, தொங்கிக் கொண்டிருக்கும் நிலை, ஒன்றுடன் ஒன்று கோர்த்துக் கொண்டது என்ற மூன்று பொருளை தருகிறது. பிறகு ஏன் உங்கள் சகோ பீ.ஜே சினை முட்டை என்று இல்லாத அர்த்தத்தை நுழைத்து தகிடுத்தத்த வேலை செய்தார்? அவர் சரியாக பெயர்த்து இருந்தால், அந்த வசனத்தை பின்வரும் ஏதாவது ஒரு மொழி பெயர்ப்பைதானே செய்திருக்க வேண்டும் ?

"அவன் மனிதனை ரத்த கட்டியிலிருந்து படைத்தான்"

"அவன் மனிதனை தொங்கிக் கொண்டிருக்கும் நிலையிலிருந்து படைத்தான்"

"அவன் மனிதனை ஒன்றுடன் ஒன்று கோர்த்துக் கொண்டதிலிருந்து படைத்தான்"

இங்கே சினைமுட்டை என்ற பொருள் எங்கு வந்தது? இது பீ.ஜே வின் ஏமாற்று வேலைதானே? இது ஏமாற்று மொழிபெயர்ப்பு என்பதை ஒரு வழியாக ஒப்புக்கொண்டீர்!

suvanappiriyan said...

'ஒன்றுடன் ஒன்று கோர்த்துக் கொள்ளுதல்' என்றால் அங்கு நடைபெறும் மாற்றம் என்ன? ஆணின் விந்து பெண்ணின் கரு முட்டையில் சென்று கோர்த்துக் கொள்கிறது. இவ்வாறு கோர்த்துக் கொண்டவுடன் அது கருவுற்ற சினை முட்டையாகிறது. நீங்கள் நடப்பை சொல்கிறீர்கள். பிஜே அந்த நடப்பால் நடந்த நிகழ்வைக் கூறுகிறார். இதில் என்ன பித்தலாட்டத்தைக் கண்டீர்கள்?

Anonymous said...

சுவனப்பிரியரே,
நீங்கள் குரான் அறிவியல் நகைச்சுவையை விடுவதாக இல்லை என்பது தெரிகிறது.

கெய்த் மோரின் அரேபிய தொடர்பை பற்றி பேச விருப்பம் இல்லையோ ? அவர் இஸ்லாமிய மதத்துக்கு மாறவும் இல்லை.

200ம் நூற்றாண்டில் கெலன் என்ற "எம்பிரியோ" ஆராய்ச்சியாளர் இருந்தார் என்பது உங்களுக்கு தெரியுமா ?
அவர் எழுதியதையும் குரான் சொல்லியதையும் கம்பேர் செய்து பார்ப்போமா ?

quran
Thereafter We made him (the offspring of Adam) as a Nutfah (mixed drops of the male and female sexual discharge and lodged it) in a safe lodging (womb of the woman). Then We made the Nutfah into a clot (Alaqa, a piece of thick coagulated blood), then We made the clot into a little lump of flesh (Mudghah), then We made out of that little lump of flesh bones, then We clothed the bones with flesh, and then We brought it forth as another creation. So blessed be Allah, the Best of Creators!

galen

The first stage, geniture, corresponds to [nutfah], the drop of semen; the second stage, a bloody vascularised foetus with unshaped brain, liver and heart ("when it has been filled with blood") corresponds to [alaqa], the blood clot; the third stage "has the form of flesh" and corresponds to [mudghah], the morsel of chewed flesh. The fourth and final stage, puer, was when all the organs were well formed, joints were freely moveable, and the foetus began to move.

இந்த 'எம்பிரியோலோஜி' என்பது பழைய கதை. 3500 வருடங்களுக்கு முன்னாலேயே கர்ப சாஸ்திரம் எழுதப்பட்டது. கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை பாருங்கள். 2500 வருடங்களுக்கு முன்னால் எழுதிய சாரகாசம்கிதா மிக தெளிவாக கரு உருவாவதைப் பற்றி சொல்கிறது. இதை யாரும் இறைவன் சொன்னது என்று சொல்லவில்லை. காரணம் இதன் ஆராய்ச்சி 3500 வருடங்களாக இருக்கிறது.

கெய்த் மோர், புகாயில் போன்ற காபிர்களை நம்பித்தான் இஸ்லாம் என்ற வண்டியை ஓட்ட முடியும் என்று நம்புகிறீர்களா.

அது போகட்டும். பெண்ணின் சினை முட்டையை பற்றி பேசும் வசனம் எங்கே இருக்கிறது என்று சொல்ல முடியுமா ?

http://www.mallstuffs.com/Blogs/BlogDetails.aspx?BlogId=308&BlogType=Spiritual&Topic=Science%20in%20hinduism-Embryology%20in%20Garbhopanishad%20and%20Charaka%20samhita

ஆனந்த் சாகர் said...

@ சுவனப்பிரியன்,

//நீங்கள் நடப்பை சொல்கிறீர்கள். பிஜே அந்த நடப்பால் நடந்த நிகழ்வைக் கூறுகிறார். இதில் என்ன பித்தலாட்டத்தைக் கண்டீர்கள்?//

அலக் என்ற அரபி வார்த்தையை பி.ஜே கருவுற்ற சினைமுட்டை என்று மொழிபெயர்த்திருக்கிறார். இது மொழிபெயர்ப்பு இல்லை, அது ஒரு பித்தலாட்ட இடைசெருகல் என்று நான் கூறுகிறேன். இதைத்தான் நீங்கள் வேறுவிதமாக ஒப்புக்கொள்கிறீர்.

பிஜே அந்த நடப்பால் நடந்த நிகழ்வைக் கூறுகிறார் என்றால் பிறகு அதை மொழிபெயர்ப்பு என்று எப்படி கூறமுடியும்? மொழிபெயர்ப்பு என்றால் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு வார்த்தைக்கு வார்த்தை மொழியாக்கம் செய்வது மட்டுமே. ஒரு சம்பவத்தை விவரிக்கும் சொற்றொடரை வேறு மொழியில் மொழிபெயர்க்க வேண்டுமென்றால் அந்த சம்பவத்தை சொல்லும் சொற்றொடரைத்தான் வார்த்தைக்குக் வார்த்தை மொழியாக்கம் செய்ய வேண்டுமே ஒழிய அந்த சம்பவத்தினால் ஏற்படும் விளைவுகளை பற்றி கதை சொல்வது மொழிபெயர்ப்பாகாது. உதாரணத்திற்கு, ஒருவர் காய்ச்சலுக்கு மாத்திரை உட்கொண்டார் என்கிற சம்பவத்தை ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மொழியாக்கம் செய்வதென்றால் அந்த இரு மொழிகளிலும் உள்ள சொற்தொடர் ஒருவர் மாத்திரை உட்கொண்டார் என்றுதான் கூறவேண்டும். மாறாக, அந்த மாத்திரை உட்கொண்டதால் அந்த நபருக்கு தூக்கம் வந்தது, பிறகு வியர்வை ஏற்பட்டது, சில மணி நேரத்திற்கு பிறகு உடல்வலி நீங்கியது, கடைசியாக காய்ச்சல் நீங்கியது என்று விளைவுகளை பற்றி கூறுவது மொழிபெயர்ர்ப்பு ஆகாது. அப்படி செய்வது வெறும் கதையாடல்தான். இந்த கதையாடல் வேலையைத்தான் பி.ஜே குரான் மொழிபெயர்ப்பு என்று பித்தலாட்டம் செய்கிறார்.

தன்னை அல்லாஹ்வின் உடபடிக்கை தூதர் என்று ஏமாற்றிய ரஷாத் கலிபாவும் ஆங்கில மொழிபெயர்ப்பு என்று கூறிக்கொண்டு குரான் வசனங்களுக்கு பொருள் என்று தான்தோன்றித்தனமாக எண்ணியதை எல்லாம் மொழிபெயர்ப்பு என்று வெளியிட்டார். அவருடைய நோக்கம் தன்னை அல்லாஹ்வின் தூதர் என்று நிரூபிக்க வேண்டும், அதற்கு எண் 19 என்கிற அற்புதம் குர்ஆனில் இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும், குரான் வன்முறையை போதிக்கவில்லை என்று காட்ட வேண்டும் என்பதாக இருந்தது.

உங்கள் சகோ பி.ஜே வின் நோக்கம் குரான் அறிவியல் பூர்வமானது, அறிவியல் பேசுகிறது என்று நிரூபிக்க வேண்டும் என்பதுதான். அதற்காக அவர் எல்லாவித வார்த்தைஜால பித்தலாட்டங்களை நிறையவே அவர் சொல்லிக்கொள்கிற மொழிபெயர்ப்பில் செய்திருக்கிறார்.