'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Tuesday, July 01, 2014
நோன்பு திறப்பு: ரியாத் பள்ளியில்.......
சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் துர்க்கி பின் அப்துல்லாஹ் பள்ளியில் நோன்பு திறக்க காத்திருக்கும் முஸ்லிம்கள்!
அரேபியன், ஐரோப்பியன், ஆப்ரிக்கன், ஆசியன், அமெரிக்கன் என்று எந்த பாகுபாடும் இல்லாமல் சகோதர வாஞ்சையோடு ஒருவருக்கொருவர் கொடுத்துதவி நோன்பு திறக்கும் காட்சியை உலக பள்ளிகள் அனைத்திலும் சர்வ சாதாரணமாக காணலாம். பல கண்டங்கள்: பல இனங்கள்: பல மொழிகள் என்று பிரிந்திருந்தாலும் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற பழமொழியை வாயளவில் மாத்திரம் உச்சரிக்காது செயலிலும் காட்டுகின்றனர் முஸ்லிம்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
//அரேபியன், ஐரோப்பியன், ஆப்ரிக்கன், ஆசியன், அமெரிக்கன் என்று எந்த பாகுபாடும் இல்லாமல் சகோதர வாஞ்சையோடு ஒருவருக்கொருவர் கொடுத்துதவி நோன்பு திறக்கும் காட்சியை உலக பள்ளிகள் அனைத்திலும் சர்வ சாதாரணமாக காணலாம். பல கண்டங்கள்: பல இனங்கள்: பல மொழிகள் என்று பிரிந்திருந்தாலும் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற பழமொழியை வாயளவில் மாத்திரம் உச்சரிக்காது செயலிலும் காட்டுகின்றனர் முஸ்லிம்கள்.//
இந்த பள்ளிவாசல்களில் ஷியாக்களையும் அஹ்மதியாக்களையும் அனுமதிப்பார்களா என்பதையும் நீங்கள் சொல்ல வேண்டும்.
நட்பு, சகோதரத்துவம் முஸ்லிம்களுக்கு இடையே தான் இருக்க வேண்டும்; காபிர்களிடம் நட்பு பாராட்ட கூடாது என்பது முஹம்மது வகுத்து கொடுத்த இஸ்லாமிய கொள்கை. இதை மறைத்து யாரை ஏமாற்ற இப்படி தகியா(வஞ்சக மோசடி) செய்கிறீர்?
//இந்த பள்ளிவாசல்களில் ஷியாக்களையும் அஹ்மதியாக்களையும் அனுமதிப்பார்களா என்பதையும் நீங்கள் சொல்ல வேண்டும். //
தாராளமாக அனுமதிப்போம். இஸ்லாத்தில் எந்த தடையும் இல்லை. ஆனால் ஒரே மதமான தலித்களை நீங்கள் எப்போது கோவிலுக்குள் அனுமதிக்கப் போகிறீர்கள்? :-)
//நட்பு, சகோதரத்துவம் முஸ்லிம்களுக்கு இடையே தான் இருக்க வேண்டும்; காபிர்களிடம் நட்பு பாராட்ட கூடாது என்பது முஹம்மது வகுத்து கொடுத்த இஸ்லாமிய கொள்கை.//
நீர் உண்மையாளராக இருந்தால் இதற்கான ஆதாரத்தை குர்ஆனிலிருந்தோ நபி மொழிகளிலிருந்தோ எடுத்துக் காட்டவும். இல்லை என்றால் நீர் பொய் சொல்வது அம்பலப்பட்டுப் போகும்.
//தாராளமாக அனுமதிப்போம். இஸ்லாத்தில் எந்த தடையும் இல்லை. //
இது வெறும் வெற்று சவடால் என்பது எல்லோருக்கும் தெரியும். எந்த சுன்னத் ஜமாஅத், தவ்ஹீத் ஜமாஅத் பள்ளி வாசலில் ஷியா முஸ்லிம்களும் அஹ்மதியா முஸ்லிம்களும் போஹ்ரா முஸ்லிம்களும் அவரவர் வழக்கப்படி தொழுகை நடத்த அனுமதிக்கப்படுகின்றனர் என்பதை ஆதாரப்பூர்வமாக எடுத்து காட்டுங்கள்.
//ஆனால் ஒரே மதமான தலித்களை நீங்கள் எப்போது கோவிலுக்குள் அனுமதிக்கப் போகிறீர்கள்? :-)//
நீங்கள் இஸ்லாத்தை பற்றி பதிவிடுகிறீர்கள். அதற்கு நாங்கள் எதிர்வினை ஆற்றுகிறோம். இங்கு இஸ்லாம்தான் விவாதப்பொருள். இதில் ஏன் எந்த சம்பந்தமுமில்லாமல் தலித் பிரச்சினையை இழுக்கிறீர்கள்? அதற்கும் இஸ்லாத்திற்கும் என்ன சம்பந்தமிருக்கிறது?
//நீர் உண்மையாளராக இருந்தால் இதற்கான ஆதாரத்தை குர்ஆனிலிருந்தோ நபி மொழிகளிலிருந்தோ எடுத்துக் காட்டவும். இல்லை என்றால் நீர் பொய் சொல்வது அம்பலப்பட்டுப் போகும்.//
ஏராளமாக இருக்கின்றன. அதை இந்த வலைப்பூவில் பதிவிட்டால் எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே வெளியிட நீங்கள் தயாரா? என்னுடைய வலைப்பூவின் பெயரையே இந்த வலைப்பூவில் வெளியிட மறுக்கிறீர். பொய் உண்மையை கண்டு அஞ்சத்தான் செய்யும்.
இந்து பண்பாடு கலாச்சாரம் ஒன்றும் அரேபியாவில் முகம்மது என்பவரால் துவக்கி வைக்கப்பட்ட அரேபிய வல்லாதிக்க இயக்கம் அல்ல. இநதியாவில் வீட்டில் கோவில் குடும்பக் கோவில் சாதிக் கோவில் தெருக்கோவில் குலுதெய்வம் எனறெல்லாம் மக்கள் பலவிதத்தில்வைத்து வாழ்ந்து வருகின்றார்கள். தலித் மக்களின் கோவில்களில் அவர்களுக்கு முழு உரிமை உள்ளது. பெரிய கோவில்கள் என்றாலும் அதுவும் ஒரு கூட்டத்தின் உரிமையில் இருந்த காரணத்தால் பிற குழுக்களுக்கு அனுமதியில்லாதிருந்தது. தற்சமயம் மாறி வருகின்றது.தலீத் இந்துக்கள் பிரமாண்டமான ஆலயங்கள் கட்டி நிர்வகித்து வருகின்றனர் .எனது ஊரில் கோவில்பட்டியில் பெரிய அம்மன் கோவில் தக்கார் தலீத் இந்துதான். காலமாற்றத்தை உணர்ந்து நடைபெறும் மாற்றங்களை கவனித்து கருத்து தெரவியுங்கள்.
செங்கொடி,இறையில்லா இஸ்லாம அலிசேனா என்ற வலைதளதங்களை படித்தால் காபீர் என்ற பட்டம் பெற்றவர்கள் பட்டப பாடு தெரியும். 3வது கலியா உதுமான -முகம்மதுவின் மனைவிகதிஜாவின் இரு மகள்களை திருமணம் செய்தவர் - முகம்மதுவின் மனைவியான ஆயிசாவால் காபீர் என்று அழைக்கப்பட்டார். பின் முதல் கலிபா அபுபக்கரின் மகன் அபுபககரால் கொல்லப்பட்டாா். பின் 4ம் கலிபா பதவிக்கு முகம்மதுவின் மகளை திருமணம் செய்ய முகம்மது அலிக்கும், முகம்மதுவின் மனைவி ஆயிசாவின் மைத்தருனருக்கும் எற்பட்ட பதவிச்சண்டையில் ஒட்டகப்போர்நடந்ததை சுவனப்பிரியன் ஏன் மறந்து வீடுகிறார் ?
//தலீத் இந்துக்கள் பிரமாண்டமான ஆலயங்கள் கட்டி நிர்வகித்து வருகின்றனர் .எனது ஊரில் கோவில்பட்டியில் பெரிய அம்மன் கோவில் தக்கார் தலீத் இந்துதான். காலமாற்றத்தை உணர்ந்து நடைபெறும் மாற்றங்களை கவனித்து கருத்து தெரவியுங்கள். //
எங்கள் பகுதியிலும் இதே நிலைதான். இங்கே தலித் குடும்பம் என்று சொன்னால் அது ஒன்றோ இரண்டோ தான் இருக்கும். இங்கு உள்ள பிரபலமான கோவிலை ஒரு தலித் தான் தலைமை ஏற்று நிர்வகித்து வந்தார். இரண்டு வருடங்களுக்கு முன்பு திடீரென்று அவர் இறந்துவிட்டதால் 25 வயதுகூட ஆகாத அவருடைய மகனையே கோவில் நிர்வாக குழு தலைவராக மற்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்தனர். அந்த பையனும் இப்பொழுது கோவிலை நிர்வகித்து வருகிறான். இந்த கோவிலுக்கு புது கோபுரம் கட்டப்பட்டு இரண்டு மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் விமர்சையாக நடத்தப்பட்டது. இந்த கோவிலுக்கு அருகாமையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளிலிருந்து நிறைய வட இந்தியர்கள் வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் பிரதோஷம் அன்று விசேஷமாக சிவனுக்கு பூஜை நடத்தப்படுகின்றது.
Post a Comment