Followers

Friday, July 25, 2014

இறந்த ஒரு ஆன்மா இன்னொரு உடலில் ஏறிக் கொள்ளுமா?

ஆனந்த் சாகர்!

//ஒவ்வொரு பௌதீக பிரபஞ்சத்திலும்(physical universe) கோடி கோடியான நட்சத்திரங்களும்(சூரியன்கள்) அவற்றை மையமாக வைத்து சுற்றிவருகின்ற பல கோடி கோடி கோடி கோடியான பூமி போன்ற கிரகங்களும் இருக்கின்றன. அவைகளிலும் உயிரினங்கள் வாழ்கின்றன. அங்கிருந்தும் சில ஆன்மாக்கள் இந்த நமது பூமியில் பிறப்பெடுக்கின்றன. அப்படியே இங்கிருந்தும் சில ஆன்மாக்கள் அந்த கிரகங்களில் பிறப்பெடுக்கின்றன.//

முதல் பாதி சரி. ஒத்துக் கொள்கிறேன். ஆனால் மறு பாதியான அங்கிருந்து உயிர்கள் இங்கு வருவதும் இங்கிருந்து உயிர்கள் அங்கு போவதும் நடைமுறை சாத்தியமில்லாதது. ஏனெனில் பூமியன் தட்ப வெப்பத்தை தாங்கும் அளவிலேயே மனிதன் படைக்கப்பட்டுள்ளான். சந்திரனுக்கு நாம் செல்ல இங்கிருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களை எடுத்துச் செல்கிறோம். அங்கு சுவாசிக்க ஆக்சிஜன் இல்லை. மற்ற பல கொள்களை நீங்கள் நெருங்கவே முடியாது. அந்த அளவு வெப்பம். இன்னும் சில கோள்களில் தாங்க முடியாத குளிர். உறைந்து விடுவீர்கள். எனவே மற்ற கோள்களில் உள்ள உயிர்கள் பூமிக்கு வருவதென்பது நடைமுறை சாத்தியமில்லாதது. அறிவியல் அறிஞர்களால் இதனை நிரூபிக்கவும் முடியவில்லை.

//மேலும் ஒரு ஆன்மா ஒரே நேரத்தில் பல உடல்களில் தங்கி இருக்க முடியும். அதாவது ஒரே ஆன்மா ஒரே நேரத்தில் பல உடல்களில் தங்கி இருந்து உடல் அனுபவத்தை அனுபவிக்க முடியும். இது குவாண்டம் இயற்பியல் (quantum physics) மூலம் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. உதாரணதிற்கு ஒரே ஆன்மாவானது ஒரே நேரத்தில் இருவேறு நபர்களாக இருவேறு உடல்களில் வாழ்ந்து கொண்டு இருக்கும். இந்த இரு நபர்களும் இருவேறு நபர்களாக கருதப்படுவார்கள். ஆனால் அவர்கள் இருவரும் உண்மையிலேயே ஒரே நபர்தான். எனவே உயிர்களின்(உடல்களின்) எண்ணிக்கை கூடுவது என்பது புதிரான விஷயம் அல்ல.//

நீங்கள் அதிகம் விட்டலாச்சாரியா படங்களை விரும்பி பார்ப்பவர் என்று நினைக்கிறேன். அல்லது ரஜினியின் சந்திரமுகி படத்தை பார்த்த பாதிப்பாகவும் இருக்கலாம்.  ஒரு உடலில் இன்னொரு உயிரின் ஆன்மா நுழைவது என்பது படத்துக்கு வேண்டுமானால் சாத்தியமாகலாம். நிஜ வாழ்க்கையில் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை நண்பரே! சவுதி அரேபியாவில் பேய் என்றோ, அல்லது பேயை விரட்டுகிறேன் என்றோ யாராவது மந்திரிக்க ஆரம்பித்தால் அவரை முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே தள்ளி விடுவார்கள். ஏனெனில் குர்ஆனின் கட்டளைப் படி பேய் பிசாசு என்பது இல்லாத ஒன்று. அறிவியலும் பேய் பிசாசுகளை ஒத்துக் கொள்வதில்லை.

நான் கேட்ட கேள்விக்கு இது வரை யாரும் பதில் சொல்லவில்லை.

அதாவது ஒருவர் முன்பு ஒரு நாயை கொடுமைபடுத்தியிருந்தால் மறு பிறவியில் அந்த நாய் மனிதனாக பிறந்து போன பிறவியில் நாயை கொடுமை படுத்தியவன் நாயாக மறு பிறவி எடுப்பான் என்பது உங்களின் கொள்கை. பாதிப்படைந்த அந்த நாய் இந்த மனிதனை இந்த பிறவியில் கொடுமைப்படுத்துவான் என்பது மறுபிறவியின் தத்துவம். அந்த தத்துவத்தின் படி இன்ன குற்றத்திற்காக இவன் இவ்வாறாக படைக்கப்பட்டான் என்று அவனுக்கு தெரிய வேண்டும் அல்லவா? இத்தனை கோடி ஆண்டு ஆகியும் ஒருவருக்கும் தான் முற்பிறவியில் என்னவாக இருந்தோம். நமது ஏழு பிறவியில் இது எத்தனையாவது பிறவி என்ற உண்மை தெரிந்திருக்க வேண்டும். இப்படி எதுவுமே தெரியாமல் அவனை மறுபிறவியில் இழிவானவாக பிறக்க வைப்பதில் என்ன நன்மை கிடைக்க முடியும்?

தான் எதற்காக தண்டிக்கப்படுகிறோம் என்ற காரணமே தெரியாமல் ஒருவன் துன்பத்தை அனுபவிப்பது அவனை எந்த வகையில் நேர்வழியில் கொண்டு வரும்? இதைக் கொண்டு மற்றவர்கள் எப்படி பாடம் படிக்க முடியும்?

மேலும் உயிரைப் பற்றி இன்றைய அறிவியல் உலகம் ஒரு தீர்க்கமான முடிவுக்கே வர இயலவில்லை. அது ஒரு பெரும் புதிராக இருப்பதாக அறிவியல் அறிஞர்களே ஒத்துக் கொள்கின்றனர். உயிருக்கே சரியான விளக்கம் கிடைக்காத போது ஒரு உயிர் மற்றொரு உயிரில் ஏறிக் கொள்வதாகவும், மற்ற கோள்களில் இருந்து சில உயிர்கள் நமது பூமியில் மனிதனின் உடலில் புகுந்து கொள்வதாகவும் சொல்வதை எங்கிருந்து படித்தீர்கள்? இது நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மையா? சங்கரிடம் இதைப் பற்றி சொன்னால் எந்திரன் போல ஒரு சினிமா எடுக்க வேண்டுமானால் இந்த கதை உதவும் நடைமுறை வாழ்வுக்கு ஒத்து வராத ஒன்று.


5 comments:

tamilan said...

வருடாவருடம் தாசிகளுடன் இரவு முழுதும் தங்கியிருந்துவிட்டு திரும்பும் கடவுள் பெருமாள்..

பெருமாளுக்குப் பிராட்டியாரை பார்த்துப் பார்த்துப் பழகிப் பழகி அலுத்துப் போய்விடுகிறது. அதனால் என்ன நினைக்கிறார் என்றால்... கொஞ்ச நேரம் வெளியே போய் சுற்றிவிட்டு வரலாமே என்றுதான்.

இந்த உற்சவத்திலே இன்னொரு விசேடம் ஆண் மகன் எங்கே வேண்டுமானாலும் போவான். ஆனால்... பெண்ணானவள் அதையெல்லாம் சகித்துக் கொள்ளவேண்டும்.

தெய்வங்களிடையிலேயே இப்படித்தான் நடக்கிறது

மேலும் படிக்க <<<

.

tamilan said...

சில கேள்விகள்

*ஹிந்து மதம் இந்தியாவுக்குச் செய்த நன்மைகள் எவை எவை?

* இன்று இந்தியா எதிர்நோக்கும் பிரச்சனைகளான: ஊழல், குடி, சூது, தற்கொலை, விபச்சாரம் இவற்றில் ஹிந்து மதம் கூறும் தீர்வுகள் யாவை?

* ஹிந்துமதம் கூறும் விக்கிரக் கடவுள்கள் அவை தாக்கப்பட்டால் தடுத்திடும் சக்தி பெற்றவையா?

* கடத்தப்பட்டால் மீண்டும் வந்து தாங்கள் ஆலயங்களில் அமர்ந்திடும் ஆற்றல் பெற்றவையா?

*மனிதர்களால் சித்தரிக்கப்பட்டு படைக்கப்பட்டு மனிதர்களின் உதவியை எல்லா நிலைகளிலேயும் நாடும் இவற்றை கடவுள் என வணங்குவது சரியா?

*இந்தியா 95 சதவீதம் இந்தியர்களுக்குச் சொந்தமா? அல்லது 5 சதவீதம் பிராமணர்களுக்குச் சொந்தமா?

*ஹிந்து மதம் இந்தியாவிலேயே தோன்றியது தானா?

இல்லை கைபர் பணவாய் வழியாக பிராமணர்களோடு இந்தியாவுக்குள் வந்த மதமா?

* ஒரு மனிதன் தன்னை பிராமணனாக மாற்றிக் கொள்ள இயலுமா?

* ஜெர்மன் ஆரியர்களுக்கும் இந்தியாவிலிருக்கும் ஆரியர்களான பிராமணர்களுக்கும் என்ன உறவு?

* பிராமண நாஜிகள் ஆரியர்களின் சின்னமாகிய ஸ்வஸ்திக்கையே கொண்டுள்ளனரே ஏன்?

அன்புள்ள வாசகனே உன்னையே நீ கேள்?

உன்னுடைய இறைவன் யார்?

*கங்கையையும், வெண்ணிலவையும் தன் தலை மேல் கொண்டுள்ள அதே நேரத்தில் தன் மகளையே யார் என்று தெரியாமல் தலையைக் கொய்த சிவனா?


*அல்லது சாதாரண சுக்ரீவனின் மாறுவேடத்தைப் புரிந்து கொள்ள இயலாத இன்னொரு கடவுளை மறைந்திருந்து கொலை செய்த இராமானா?


*அல்லது மன்மத லீலைகளில் மிகைத்து நின்ற கிருஷ்ணனா?

>>>> மேலும் படிக்க <<<

.

ஆனந்த் சாகர் said...

//இறந்த ஒரு ஆன்மா இன்னொரு உடலில் ஏறிக் கொள்ளுமா?//

முதலில் உங்களுடைய இந்த கட்டுரையின் தலைப்பே தவறானது! ஆன்மா இறக்கும் என்று நான் சொல்லவே இல்லை. ஆன்மாவுக்கு இறப்பே இல்லை. அது அழிக்கப்பட முடியாதது. அது எவராலும் படைக்கப்படவும் இல்லை. அதற்கு பிறப்பு, இறப்பு என்பதே இல்லை. எனவே உண்மையில் நாம் பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை. நாம் எந்த மாற்றமும் இல்லாமல் என்றென்றும் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்.

ஒருவர் இறந்தவுடன் அவரின் உடலில் தங்கி இருந்த ஆன்மா உடனே வாழ்ந்துகொண்டிருக்கும் இன்னொருவரின் உடலில் புகுந்துவிடும் என்றும் நான் சொல்லவே இல்லை. பௌதீக அனுபவத்தை பெறுவதற்காக ஆன்மா தொடர்ந்து பிறவிகள் எடுக்கிறது என்றுதான் கூறுகிறேன். ஒருவர் இறந்தவுடன், அதாவது அவருடைய பௌதீக உடல் இறந்தவுடன் அவருடைய ஆன்மா மறுபிறவி எடுக்கிறது. இந்த மறுபிறவி என்பது இன்னொரு உடலை அது கருவாக உருவாகும்போது தேர்ந்தெடுத்து அதில் நுழைந்து அந்த உடலின் பிறப்பு முதல் இறப்புவரை அந்த நபராக உடல் அனுபவத்தை பெறுகிறது என்பதே.

ஆனந்த் சாகர் said...

@ சுவனப்பிரியன்,

//முதல் பாதி சரி. ஒத்துக் கொள்கிறேன். ஆனால் மறு பாதியான அங்கிருந்து உயிர்கள் இங்கு வருவதும் இங்கிருந்து உயிர்கள் அங்கு போவதும் நடைமுறை சாத்தியமில்லாதது. ஏனெனில் பூமியன் தட்ப வெப்பத்தை தாங்கும் அளவிலேயே மனிதன் படைக்கப்பட்டுள்ளான். சந்திரனுக்கு நாம் செல்ல இங்கிருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களை எடுத்துச் செல்கிறோம். அங்கு சுவாசிக்க ஆக்சிஜன் இல்லை. மற்ற பல கொள்களை நீங்கள் நெருங்கவே முடியாது. அந்த அளவு வெப்பம். இன்னும் சில கோள்களில் தாங்க முடியாத குளிர். உறைந்து விடுவீர்கள். எனவே மற்ற கோள்களில் உள்ள உயிர்கள் பூமிக்கு வருவதென்பது நடைமுறை சாத்தியமில்லாதது. அறிவியல் அறிஞர்களால் இதனை நிரூபிக்கவும் முடியவில்லை//

என்ன சுவனப்பிரியன், உமக்கு குழந்தைக்கு சொல்லி கொடுப்பதைப்போல பாடம் எடுக்க வேண்டும் போலிருக்கிறதே! உம்முடைய சிந்தனை மிக அமெச்சூர் தனமாகவே இருக்கிறது. ஐந்து வயது குழந்தை எப்படி சிந்திக்குமோ, பேசுமோ அப்படித்தான் உம்முடைய சிந்தனையும் பேச்சும் இருக்கிறது! குழந்தைகளால் பெரிய விஷயங்களை விளக்கி சொன்னாலும் புரிந்துகொள்ள முடியாது. உங்களுடைய புரிந்துகொள்ளும் சக்தியும் அந்த நிலையில்தான் உள்ளது என்பதை பல முறை பார்த்திருக்கிறேன்.

சரி, விஷயத்துக்கு வருவோம். ஆன்மாக்கள்தான் பல கிரகங்களில் மாறி மாறி பிறவி எடுக்கின்றன என்று கூறினேன். பௌதீக உடலோடு(physical body) அப்படி செல்வதாக நான் கூறவில்லை. குளிர், வெப்பம், காற்று , நீர், உணவு எல்லாம் பௌதீக உடலுக்குத்தான் தேவை. ஆன்மாவுக்கு(soul) அவை தேவை இல்லை. ஆன்மா அவைகளால் எந்த பாதிப்புக்கும் ஆளாவதில்லை. எனவே ஆன்மா எந்த கிரகத்திற்கும் சென்று அந்த கிரகத்திற்குரிய உடல் எடுத்து அந்த சூழலில் உள்ள பௌதீக அனுபவத்தை அனுபவிக்க முடியும். எந்த கிரகத்தில் எப்பொழுது உடலில் பிறவி எடுக்கலாம் என்பதை அந்தந்த ஆன்மாக்களே ஆன்ம உலகில் முடிவெடுக்கின்றன. கிரகங்களுக்கு மாறி மாறி செல்ல வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் கிடையாது. விரும்புகிற ஆன்மாக்கள் விரும்புகிற கிரகங்களுக்கு செல்கின்றன. நாம் பெரும்பாலும் இந்த பூமிக்கே திரும்ப திரும்ப பிறவி எடுத்து வருகிறோம்.

ஆனந்த் சாகர் said...

@சுவனப்பிரியன்,

//நீங்கள் அதிகம் விட்டலாச்சாரியா படங்களை விரும்பி பார்ப்பவர் என்று நினைக்கிறேன். அல்லது ரஜினியின் சந்திரமுகி படத்தை பார்த்த பாதிப்பாகவும் இருக்கலாம்.//

நான் விட்டலாச்சாரியா படங்களை பார்த்ததில்லை. சந்திரமுகி படத்தின் சில பகுதிகளை(clippings ) தொலைகாட்சியில் பார்த்திருக்கிறேன், முழுதாக பார்க்கவில்லை.

//ஒரு உடலில் இன்னொரு உயிரின் ஆன்மா நுழைவது என்பது படத்துக்கு வேண்டுமானால் சாத்தியமாகலாம். நிஜ வாழ்க்கையில் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை நண்பரே!//

ஒரு உடலில் ஒரு ஆன்மா இருக்கும்போது அதனுள் இன்னொரு ஆன்மா நுழையாது. அதாவது ஒரு கரு உருவாகும்போது அதை தேர்ந்தெடுக்கும் ஆன்மா மட்டுமே அந்த உடல் வாழும்வரை அதில் தங்கி இருந்து பௌதீக அனுபவத்தை பெறும். இன்னொரு ஆன்மா அதில் நுழையாது, நுழைய விரும்பாது.

ஒரே நேரத்தில் ஒரு ஆன்மா பல உடல்களில் தங்கி இருக்க முடியும் என்று நான் முன்பு கூறியதை நீங்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை.

ஒரு உடலில் ஒரு ஆன்மா மட்டுமே இருக்க முடியும். ஆனால் ஒரு ஆன்மா ஒரே நேரத்தில் பல உடல்களை அவை கருவாக உருவாகும்போது தேர்ந்தெடுத்து அவற்றின் பிறப்பு முதல் இறப்பு வரை தங்கி அந்த மனிதர்களாக வாழ்ந்து மனித அனுபவத்தை பெற முடியும். இந்த மனிதர்களின் உள்ளே இருப்பது ஒரே ஆன்மா தான். வேறு வகையில் சொல்வதென்றால், ஒரு ஆன்மா ஒரே நேரத்தில் பல மனிதர்களாக வாழ முடியும். உதாரணத்திற்கு, ஒரே ஆன்மா நீங்களாகவும் உங்கள் அண்ணன் பீ ஜே வாகவும் பிறப்பெடுத்து இரு வேறு தனி நபர்களாக வாழ்ந்துகொண்டு இருக்கலாம். உங்கள் இருவரின் உடல்களிலும் தங்கி உங்கள் மனித அனுபவத்தை பெறுவது ஒரே ஆன்மா என்பதால் உண்மையில் நீங்கள் இருவரும் தனித்தனி நபர்கள் அல்ல, ஒரே நபர்தான்.

உண்மையில் சொல்லப்போனால் இருப்பது ஒரே ஒரு ஆன்மாதான். அந்த ஒரே ஆன்மாவின் பூரண பிரதிகள்தான் (fractals) எல்லா தனி ஆன்மாக்களும். தனி ஆன்மா என்பதும் ஒரு மாயைதான்.

// சவுதி அரேபியாவில் பேய் என்றோ, அல்லது பேயை விரட்டுகிறேன் என்றோ யாராவது மந்திரிக்க ஆரம்பித்தால் அவரை முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே தள்ளி விடுவார்கள். ஏனெனில் குர்ஆனின் கட்டளைப் படி பேய் பிசாசு என்பது இல்லாத ஒன்று. அறிவியலும் பேய் பிசாசுகளை ஒத்துக் கொள்வதில்லை.//

அப்படியா? அப்ப ஜின்கள் பற்றி குரான் ஏன் பேசுகிறது? அரபியர்களின் ஜின்கள் பற்றிய நம்பிக்கைக்கும் மற்ற கலாசாரங்களில் உள்ள பேய், பிசாசு பற்றிய நம்பிக்கைக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?