இந்திய கலாசாரத்தின் ஒரு அங்கம் மதுபானம்! -பிஜேபி எம்எல்ஏ
பனாஜி: கோவாவில், பெண்கள் மதுபானக் கூடத்திற்கு செல்லும் கலாசாரம் குறித்து, மாநில அமைச்சர் ஒருவர் கடுமையாக விமர்சித்த நிலையில், 'மதுபானக் கூடமும், மதுவும், இந்திய கலாசாரத்தின் ஒரு அங்கம்' என, பா.ஜ., - எம்.எல்.ஏ., ஒருவர் தெரிவித்துள்ளார்.
கோவா சட்டசபை எம்.எல்.ஏ.,வான விஷ்ணு வாகா, இது தொடர்பாக கூறியதாவது: கோவா சட்டசபை கூட்டத் தொடர், வரும், 22ம் தேதி துவங்குகிறது. அப்போது, சட்ட சபைக்கு வேட்டி அணிந்து செல்வேன். 'கோவா கடற்கரைக்கு, பெண்கள் அரைகுறை ஆடை அணிந்து செல்வதும், மதுபானக் கூடங்களுக்கு செல்வதும், இந்திய கலாசாரத்திற்கு எதிரானது' என, தெரிவித்த, அமைச்சர் சுதின் தவாலிகருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இவ்வாறு செய்வேன். 'குட்டையான உடைகள் அணிந்து, மதுபானக் கூடங்களுக்கு பெண் செல்வதை தடை செய்ய வேண்டும்' என, அமைச்சர் தவாலிகர் தெரிவித்தது ஏற்றுக் கொள்ள முடியாதது. தவாலிகரின் மூதாதையர்கள் எல்லாம், வேட்டி தான் அணிந்தனர். அதனால், அவரும் வேட்டி அணிந்து சட்டசபைக்கு வர வேண்டும். இந்திய கலாசாரத்தின் மீது, அவருக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், இதைச் செய்ய வேண்டும். தேவர்களும், அசுரர்களும் பார்கடலை கடைந்த போது, 14 விதமான பொருட்கள் தோன்றின. அவற்றில் ஒன்று, மதுபானம். மதுபானம் தொடர்பாக, அப்போது சண்டையே நிகழ்ந்துள்ளது.
கடவுள் வழிபாடு:
பண்டைக் காலங்களில், கடவுளுக்கு மதுபானத்தை படைத்து வழிபாடும் நடத்தி உள்ளனர். எனவே, மதுபானக் கூடங்களுக்கு செல்வதையும், மது அருந்துவதையும், மதம் மற்றும் கலாசாரத்தின் பெயரில் எதிர்ப்பது சரியல்ல. இவ்வாறு, அவர் கூறினார்.
-தினமலர்
03-07-2014
விஜய காந்தோடு கூட்ணி வைக்கும் போதே நினைத்தேன். இது போன்ற கருத்துக்கள் வரும் என்று! இன்று வந்தே விட்டது. மோடியின் நண்பரான தமிழக முதல்வர் மது விற்பனையை அரசே நடத்த வைத்து 70 சதமான தமிழர்களை மகா குடியர்களாக மாற்றி விட்டார். இன்னும் என்னவெல்லாம் இந்த நாட்டிலே அரங்கேறப் போகிறதோ பொறுத்திருந்து பார்ப்போம்.
குடி அதிகரித்தது போல் தற்கொலைகளும் அதிகரித்துள்ளன. இன்றைய தினமலரின் மற்றொரு செய்தியையும் பார்ப்போம்.
புதுடில்லி : இந்தியாவில், ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக, 1 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக, இந்தியாவில் குற்றங்கள் என்ற தலைப்பில், தேசிய குற்ற பதிவு கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டில், மகாராஷ்டிராவில், 16,622 பேரும், தமிழ்நாட்டில், 16,601 பேரும் தற்கொலை செய்து உள்ளனர். இதன்மூலம், தற்கொலைகள் அதிகம் நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில், தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. தற்கொலைகள் அதிகம் நடைபெறும் 53 மெகாசிட்டிகளில், சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் 2013ம் ஆண்டில், 2,450 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நாட்டிலுள்ள 4 மெட்ரோபாலிட்டன் நகரங்களில், மட்டும் 35 சதவீத அளவிற்கு தற்கொலைகள் நடைபெறுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளமான இந்தியா நமது கண்களில் தெரிகிறதா?
No comments:
Post a Comment