Followers

Thursday, April 25, 2013

மனிதனின் படைப்பின் ரகசியம் - ஓர் ஆய்வு

மனிதனின் படைப்பின் ரகசியம் - ஓர் ஆய்வுநமது உடலை ஆய்வு செய்தால் வியப்பின் உச்சிக்கே சென்று விடுவோம். நாம் ஒன்றை நினைத்த மாத்திரத்தில் அடுத்த நொடியில் கைகளை அசைப்பதும், கால்களை அசைப்பதும், ஒவ்வொரு செயல்களும் அன்னிச்சையாக நடந்து வருவதை பார்த்து வருகிறோம். இவை அனைத்தும் மூளையிலிருந்து பெறப்பட்ட கட்டளைகளை நரம்புகள் மூலமாக நொடிப் பொழுதில் செய்திகள் பரிமாறப்பட்டு நமது செயல்கள் தினமும் நடந்து வருகின்றன. இந்த சக்திகளை எல்லாம் ஒருங்கே நமக்கு கொடுத்துதவிய அந்த இறைவனை போற்றி புகழ்வோம். எவ்வளவு கச்சிதமான கட்டமைப்பு: இவ்வளவு அழகிய படைப்பை படைத்த அந்த இறைவனுக்கு நன்றி கூறும் முகமாக நாள் பூராவும் நின்று வணங்கினாலும் அது ஈடாகி விடாது.

"நிச்சயமாக நாமே உங்களைப் படைத்தோம்; பின்பு உங்களுக்கு உருக்கொடுத்தோம்."

குர்ஆன் 7:11


"வானங்கள், பூமி, இவற்றின் ஆட்சியையும் இறைவன் படைத்திருக்கும் மற்றப் பொருள்களையும் அவர்கள் நோட்டமிடவில்லையா? அவர்களுடைய மரண தவணை நெருங்கியிருக்கக்கூடும் என்பதையும் அவர்கள் சிந்திக்கவில்லையா? இதற்குப் பின்னர் எந்த விஷயத்தில்தான் தான் அவர்கள் ஈமான் கொள்ளப்போகிறார்கள்?"

குர்ஆன் : 7:185

-----------------------------------------------------

'களிமண்ணின் சத்திலிருந்து மனிதனைப் படைத்தோம். பின்னர் அவனை பாதுகாப்பான இடத்தில் விந்துத் துளியாக ஆக்கினோம். பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினை முட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினை முட்டையை சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான்.

- குர்ஆன் 23 : 12 , 13 , 14
முதல் மனிதனை களிமண்ணால் படைத்தேன் என்று இறைவன் கூறுகிறான். இதன் மூலம் டார்வினின் பரிணாமக் கொள்கை தவறு என்று விளங்குகிறது. அறிவியல் ரீதியாகவும் டார்வின் கொள்கை நிரூபிக்கப் படவில்லை என்று முந்தைய பதிவுகளிலும் பார்த்துள்ளோம். இது சம்பந்தமாக சுவனத்தென்றலில் வந்த கட்டுரையை இனி பார்ப்போம்.

ஆணின் விதைப்பையிலிலுள்ள விதையிலிருந்து (Testis) உற்பத்தியாகும் பல கோடிக்கணக்கான உயிர் அணுக்கள் விதைப்பையிலிலுள்ள ‘Epididymis’ என்ற பாதுகாப்பான பகுதியில் பத்திரமாக சேகரித்து வைக்கப்படுகிறது. ஆண், பெண் சேர்க்கையின் போது இந்த உயிர் அணுக்கள் இங்கிருந்து புறப்படடு ‘Vas deferns’ என்ற குழாய் வழியாக ஆம்புல்லா (Ampulla) என்ற குழாய்க்கு வந்து பின்னர் ‘Seminal Vasicle’ மற்றும் புரோஸ்டேட் கிளான்ட (Prostate gland) என்ற பகுதியிலுள்ள திரவங்களுடன் கலந்து இந்திரியமாக மாறுகிறது. பிறகு இந்திரியம் ‘Ejaculatory tube’ வழியாக ஆணுறுப்பிலிலுள்ள முத்திரக்குழாயை அடைந்து பின்னர் அங்கிருந்து பெண்ணின் கர்ப்பப் பையில் செலுத்தப்படுகிறது.

கர்ப்பப் பையினுல் செலுத்தப்படும் இந்திரியத்திலுள்ள பல இலட்ச/கோடிக் கணக்கான உயிர் அணுக்களிலிருந்து சில நூறு உயிர் அணுக்களே ஃபலோப்பியன் டியூப் (Fallopian Tube) என்ற குழாயை அடைகிறது. சினைப் பையிலிருந்து மாதம் ஒரு முறை வெளிவரும் ஒரு சினை முட்டையும் மாதவிடாயிலிருந்து 14-ம் நாள் ஃபலோப்பியன் டியூப் (Fallopian Tube) க்கு வந்து சேர்கிறது. இங்கு தான் கருவுறுதல் நடைபெறுகிறது. ஃபலோப்பியன் டியூப் (Fallopian Tube) க்கு வந்து சேர்ந்த ஆணின் சில நூறு உயிர் அணுக்களிலிருந்து ஒரே ஒரு உயிர் அணு மட்டும் பெண்ணின் சினையுடன் சேர்ந்து கருவுகிறது. பின்னர் இந்தக் கரு செல் டிவிசன் (Cell Division) என்ற முறையில் ஒரு செல் இரண்டு செல்களாகி, இரண்டு நான்காகி, நான்கு எடடாகி இவ்வாறு பல்கி பெறுகிறது. பின்னர் இந்த கரு ஃபலோப்பியன் டியூப் (Fallopian Tube) லிருந்து சொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கருவுற்ற நாளிலிருந்து 8 ஆம் நாள் கர்ப்பப் பையை வந்து அடைந்து, கர்ப்பப் பையின் சுவர்களில் ஒட்டிக் கொண்டு தொங்குகிறது. இவ்வாறு கரு கர்ப்பப்பையின் சுவற்றில் ஊடுறுவுவதை ‘Implantation’ (இம்பிலேன்டேசன்) என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.இது வரை நாம் பார்த்த விளக்கங்கள் எவ்வாறு குர்ஆனோடு ஒத்துப் போகிறது என்று பார்ப்போம். விதைப் பையிலிலுள்ள எபிடிமிஸ் என்ற பகுதியில் பத்திரமாக சேகரித்து வைக்கப் பட்டுள்ள இந்திரியம் கர்ப்பப் பையினுள் செலுத்தப்பட்டு கருவுற்று கர்ப்பப் பையின் சுவர்களில் ஒட்டிக் கொண்டு தொங்கும் (அலக்) நிலைக்கு வருகிறது. இதையே மேற்கண்ட வசனத்தின் முதல் மூன்று வரிகள் கூறுகிறது. இங்கே குர்ஆன் கூறும் சில அற்புதங்களைக் காண வேண்டும்.

இந்திரத்துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம் என அல்லாஹ் கூறுகிறான். அலக் என்பதற்கு இன்றைய குர்ஆன் விரிவுரையாளர்கள் மூன்று விதமான பொருளைத் தருகின்றார்கள்.

1. ஒட்டிக் கொண்டு தொங்கும் ஒரு பொருள்,
2. ஒரு அட்டையைப் போன்ற ஒரு பொருள்,
3. இரத்தக் கட்டி.

அல்ஹம்துலில்லாஹ். குர்ஆன் கூறும் அலக் என்ற வார்த்தையின் இந்த மூன்று அர்த்தங்களும் இங்கே பொருந்திப் போகின்றது. முதலில் கருவானது ஃபலோப்பியன் குழாயிலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக நகர்ந்து வந்து கர்ப்பப் பையை அடைந்து, கர்ப்பப் பையின் சுவர்களில் ஒட்டிக் கொண்டு தொங்குகிறது. இவ்வாறு ஒட்டிக் கொண்டு தொங்கும் இந்தக் கரு கர்ப்பப் பையின் சுவர்களில் ஆழமாக வேருன்றி அதிலிலுள்ள இரத்த நாளங்களிலிருந்து தனக்குத் தேவையான சத்துக்களை (Nutrition) ஒரு அட்டையைப் போன்று உறிஞ்சி எடுத்துக் கொள்கிறது. இவ்வாறு ஒரு அட்டையைப் போன்று ஒட்டிக் கொண்டு சத்துக்களை (Nutrition) உறிஞ்சும் இந்தக் கரு இப்போது பார்ப்பதற்கு இரத்தக் கட்டியைப் போன்று தோற்றமளிக்கின்றது.நாம் இனி அடுத்து என்ன நிகழ்கிறது என்று பார்ப்போம்.

கரு வளர்ந்து வரும் பொழுது ஒரு கட்டத்தில் வாயில் போட்டு மென்று சவைக்கப்பட்ட மாமிசம் போல தோன்றுகிறது. மருத்துவர்கள் இதை ஆய்வு மூலம் கண்டறிந்திருக்கின்றார்கள். இதையே குர்ஆன் ‘முத்கா’ என்று குறிப்பிடுகிறது. இந்த மாமிச பிண்டத்திற்குள் தான் பின்னர் எலும்புகள் உருவாகின்றன. அடுத்து அந்த எலும்புகளைச் சுற்றி சதைப் பிடிப்பு ஏற்படுகிறது. இந்த சதை பிடிப்பை குர்ஆன் ‘லஹ்ம்’ என்கிறது. இந்தக் காலகட்டத்தில் மனிதனுக்கு தேவையான மற்ற உறுப்புகளும் வளர்ச்சியடைந்து மனிதபடைப்பாக மாறுகிறது. இவ்வளவு நுணுக்கமான முறையில் கருவின் வளாச்சி குறித்து குர்ஆன் விவரிக்கிறது. ஒரு தேர்ந்த மருத்துவரால் தான் இந்த உண்மைகளை நன்கு புரிந்து கொள்ள முடியும்; விளங்கிக் கொள்ள முடியும். ஆனால் இந்த நவீன கண்டுபிடிப்பை குர்ஆனில் 1400 ஆணடுகளுக்கு முன்னரே மிகத்துல்லியமாக வர்ணிக்கப்பட்டிருப்பது இது இறைவேதம் என்பதற்கு மற்றுமொரு சான்றாகும்.

-----------------------------------------------------------

மேலே உள்ள குர்ஆன் வசனத்துக்கு திரு பி.ஜெய்னுல்லாபுதீனும், புரபஸர் எமிரிடஸ் கெய்த் மூரும் விளக்கங்களை அளித்துள்ளார்கள். முதலில் நாம் பி.ஜெய்னுல்லாபுதீனின் விளக்கத்தை எடுத்துக் கொள்வோம்.

இவ்வசனங்களின் மூலத்தில் 'அலக்' எனும் சொல் இடம் பெற்றுள்ளது. இச் சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளன. இரத்தக்கட்டி, தொங்கிக் கொண்டிருக்கும் நிலை,ஒன்றடன் ஒன்று கோர்த்துக் கொண்டது என்றெல்லாம் பொருள் உண்டு.

இந்த இடத்தில் இரத்தக் கட்டி என்று பொருள் கொள்ள முடியாது. கருவில் இரத்தக்கட்டி என்று ஒரு நிலை இல்லை.தொங்கிக் கொண்டிருக்கும் நிலை எனவும் பொருள் கொள்ள முடியாது.ஏனெனில் மனிதனின் மூலத்தைக் கூறும்போதுஅது ஒரு பொருளாகத்தான் இருக்க முடியும்.தொங்கும் நிலை என்பது ஒரு பொருள் அல்ல.

மனிதன் உருவாவதற்கு ஆணிண் உயிரணு, பெண்ணின் சினை முட்டையுடன் சேர்ந்து கருவுற்ற சினை முட்டையாக வேண்டும்.இது தான் மனிதப் படைப்பின் முதல் நிலை. ஆணின் உயிரணு மட்டுமோ, பெண்ணின் சினை முட்டை மட்டுமோ மனிதனின் முதல் நிலை அல்ல. இரண்டும் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக் கொள்வதால் உருவாகும் பொருளிலிருந்து தான் மனிதன் படைக்கப் பட்டான். இதனால்தான் சுருக்கமாக கருவுற்ற சினை முட்டை என்ற தமிழ்ப் படுத்தியுள்ளோம்.இரண்டு பொருள்கள் ஒன்றுடன் ஒன்று கலப்பது என்பது இதன் நேரடிப் பொருள். இதன் கருத்து தான் கருவுற்ற சினை முட்டை.

அடுத்து புரபஸர் எமிரெடஸ் கெய்த் மூரின் கருத்துக்களை படிப்பதற்கு முன் இவரைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம்.

டாக்டர் கெய்த் மூர் உலக அளவில் புகழ் பெற்ற உயிரியல் துறை அறிஞர் ஆவார்.இவர் உயிரியலில் மனிதனின் கரு வளர்ச்சியைப் பற்றி பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். அப்படி அவர் எழுதிய புத்தகங்களில் "The Developing Human" என்ற புத்தகம் அமெரிக்க அரசால் சிறந்த புத்தகமாக தெரிவு செய்யப் பட்டுள்ளது. டாக்டர் கெய்த் மூர் Anotomy and cell Biology துறைகளில் பேராசிரியராக டொராண்டோ பல்கலைக் கழகம் கனடாவில் பணியாற்றுகிறார். இக்கல்லூரியில் Anotomy துறையில் எட்டு வருடங்களாக தலைமைப் பதவியுலும் இருந்து வருகிறார். இனி அவர் தரும் விளக்கங்களை ஆங்கிலத்திலேயே பார்ப்போம்.

In the Holy Quran God speaks about the stages of Mans embryonic development:

“We created man from an extract of clay. Then we made him as a drop in a place of settlement, firmly fixed. Then we made the drop in to an alaqah (leech,suspended thing,and blood clot) then we made the alaqah in to a mudghah (chewed – like substance)…… “ - Quran 23 : 12,13 ,14

literally, the Arabic word alaqah has three meanings : 1) leech 2)suspended thing 3)blood clot.
1) In comparing a leech to an embryo in the alaqah stage, we find similarity between the two as we can see in figure 1. also the embryo at this stage obtains nourishment from the blood of the mother, similar to the leech ,which feeds on the blood of others.

Figure 1 : Drawing illustrating the similarities in appearance between a leech and a human embryo at the alaqah stage. (leech drawing from Human development as Described in the Quran and sunnah. Moore and others page 37, modified from integrated principles of zoology, Hickman and others.Embbroyo drawing from The developing Human, Moore and persaud,page 73)

2)The second meaning of the word alaqah is “suspended thing.” This is what we can see in figures 2 and 3 the suspension of the embryo, during the alaqah stage, in the womb of the mother.

Figure 2 : We can see in this diagram the suspension of an embryo during the alaqah stage in the womb (uterus) of the mother. ( The developing Human, Moore and persaud, 5th edition page 66

3) The third meaning of the word alaqah is “blood clot.” We find that the external appearance of the embryo and its sacs during the alaqah stage is similar to that of a blood clot. This is due to presence of relatively large amounts of blood present in the embryo during the stage.(see figure 4). Also during the stage, the blood in the embryo does not circulate until the end of the third week. Thus the embryo at this stage is like a clot of blood.

Figure 3 : In this photomicrograph, we can see the suspension of an embryo (marked b) during the alaqah stage (about 15 days old) in the womb of the mother. The actual size of the embryo is about 0.6 mm. (The developing Human,Moore,3rd edition page 66,from Histology, Leeson and Leeson.)

Figure 4 : Diagram of the primitive cardiovascular system in an embryo during the alaqah stage. The external appearance of the embryo and its sacs is similar to that of a blood clot, due to the presence of relatively large amounts of blood present in the embryo. (The developing Human, Moore 5th edition, page 65.)

ஆக 'அலக்' எனும் அரபி சொல்லுக்கு வரும் மூன்று விளக்கங்களும் கரு வளர்வின் ஆரம்பத்தில் உள்ள அடுத்தடுத்த நிலைகளை மிகத் துல்லியமாக விளக்குகிறது.

அடுத்த நிலையான 'முத்கா' என்ற நிலையை குர்ஆன் விளக்குகிறது. 'முத்கா' என்றால் நாம் ஒரு சூயிங்கம்மை வாயில் போட்டு நன்றாக மென்றவுடன் வரும் நிலை இருக்கிறதல்லவா அந்த நிலைதான் 'முத்கா' என்று அரபியில் சொல்லப்படும்.ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என்றால் “chewed like substance” என்று சொல்லலாம். இதைப்பற்றி திரு கெய்த் மூர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்:

The next stage mentioned in the verse is the Mudghah stage. The Arabic word mudghah means “chewed like substance.” If one were to take a piece of gum and chew it in his mouth and then compare it with an embryo at the mudghah stage, we would conclude that the embryo at the mudghah stage acquires the appearance of a chewed like substance. This is because of the somites at the back of the embryo that “somewhat resemble teethmarks in a chewed substance.” (see figures 5 and 6)

Figure 5 : photograph of an embryo at the mudghah stage (28 days old). The embryo at this stage acquires the appearance of a chewed-like substance, because the at the back of the embryo somewhat resemble teeth marks in a chewed substance. The actual size of the embryo is 4 mm. (The developing Human Moore and persaud, 5th edition, page 82, from professor hideo nishimura, Kyoto university, Kyoto,Japan)

Figure 6 : When comparing the appearance of an embryo at the mudghah stage with a piece of gum that has been chewed , we find similarity between the two.
a) Drawing of an embryo at the mudghah stage. We can see here the somites at the back of the embryo that look like teeth marks. (The developing Human, Moore and persaud,5th edition, page 79)
b) Photograph of a piece of gum that has been chewed


How could Mohammad have possibly known all this 1400 years ago, when scientists have only recently discovered this using advanced equipment and powerful microscopes which did not exist at that time? Hamm and Leeuwenhoek were the first scientists to observe human sperm cells (spermatozoa) using an improved microscope in 1677 (more than 1000 years after Mohammad. They mistakenly thought that the sperm cell contained a miniature preformed human being that grew when it was deposited in the female genital tract.

1981 ஆம் வருடம் புரபஸர் கெய்த் மூர் சவூதி அரேபியா தம்மாம் நகரில் நடந்த ஏழாவது மருத்துவ கருத்தரங்கிற்கு வருகை தந்திருந்தார்.அப்பொழுது அவர் தமது அறிக்கையை பின் வருமாறு சமர்ப்பித்தார் : 'எனக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுத்தது குர்ஆனின் மேற் சொன்ன வரிகள். மனிதனின் கருவில் நிகழும் அடுத்தடுத்த நிலைகளை குர்ஆன் மிகவும் துல்லியமாக பட்டியலிடுகிறது.ஏழாவது நூற்றாண்டில் அரிஸ்டாட்டில் மனிதனின் கரு வளர்ச்சியைப் பற்றி நன்கு ஆராய்ந்தார்.ஆனால் அதன் பிறகு தொடர்ந்து வரும் நிலைகளின் மாற்றங்களை அறியும் வாய்ப்பும் வசதியும் அரிஸ்டாட்டிலுக்கு அன்று கிடைக்கவில்லை. அவர் கோழி முட்டையின் கரு வளர்ச்சியின் அடிப்படையைத்தான் விளக்கி விட்டுப் போனார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரை கருவியலைப் பற்றிய ஒரு தீர்க்கமான முடிவுக்கு அறிவியல் வரவில்லை. தற்போதுதான் கருவியல் ஓரளவு வளர்ச்சி கண்டுள்ளது. அதற்கான சாதனங்களும் வாய்ப்புகளும் தற்போதுதான் இலகுவாக கிடைக்கின்றன.

மருத்துவம் படிக்காத, எந்த நுண்ணோக்கி வசதியும் இல்லாத, எழுதப் படிக்கத் தெரியாத ஒரு சமூகத்தில் தோன்றிய ஒரு தனி நபரான முகமது நபி இப்படி ஒரு உண்மையை சொல்லவே முடியாது. குர்ஆன் கண்டிப்பாக இறைவனின் வார்த்தைகள் தான் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.' என்று தனது அறிக்கையை சமர்ப்பித்தார்.

இக் கட்டுரையில் வரும் அறிவியல் செய்திகளைப் பற்றி மேலும் விபரங்கள் அறிய :

1) “The Developing Human” – Moor and Persaud, 5th edition, page8,65,9
2) “Human Development as described in the Quran and Sunnah” – Moor and others page no 36,37,38
3) The reference for this saying is “This is the Truth” (Video Tape) . For copy of this video tape please contact one of the organizations listed .
A) Islamic Foundation Of America
p.o. box – 3415, Merrifield,VA 22116,USA,
Tel : (703) 914-4982, Fax – (703) 914-4984
Mail – ifam@erols.com

B)Bader Islamic Association of Toronto
474 Roncesvalles Avenue, Toronto, Ontario M6R 2N5, Canada
Email : islam@badercenter.com

c) Al- Muntada Al-Islami Centre
7 Bridges Place, Parsons Green, London , SW6 4HW, UK
Mail : muntada@almuntada-alislami.org
mail@jimas.org

d)http://suvanathendral.com/portal/?p=265

12 comments:

Anonymous said...

நம்முடைய கேள்வி என்னவென்றால்;

1. பா.ஜ.க அலுவலகத்தில் சட்ட சபை தேர்தல் நேரத்தில் குண்டு வெடிக்க காரணம் என்ன ? சதி செய்பவர்களுக்கு இது பா.ஜ.க வின் ஓட்டுக்களை அதிகரிக்கும் என தெரியாதா ?

2. கண்காணிப்பு காமிராவில் பதிவான நபரின் புகைப்படம் இன்று வரை ஏன் வெளியிடப்படவில்லை ?

3. பெங்களுரு குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட புகாரியை நாகர்கவிளில் பா.ஜ.க மாநில நிர்வாகி காந்தி தாக்கப்பட்ட வழக்கிலும் தொடர்பு படுத்தியது ஏன் ?

இது போன்ற பல கேள்விகளுக்கு யாரிடமும் விடை இல்லை.

நிச்சயமாக புகாரி விடுதலை பெறுவார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆனால்,இவர் கைது செய்யப்பட்டதன் நோக்கம் ஒன்றாக மட்டுமே இருக்க முடியும் என "சிறுபான்மை உதவி அறக்கட்டளையின்" பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில்;

"சகோ. புகாரி அவர்கள் தன் மீது போடப்பட்டிருந்த அனைத்து வழக்குகளும் பொய் வழக்குகள் என நீதிமன்றம் மூலம் உடைத்து வெளி வந்தவுடன், 16 ஆண்டுகளாக கோவை சிறையில் வாடும் மற்ற அப்பாவி சிறைவாசிகளுக்காக உச்சநீதிமன்றம் வரை சென்று மேல்முறையீடு செய்தார்.

மிக சிறப்பாக வாதாடக்கூடிய நல்ல வழக்கரிஞ்சர்களை வைத்து வாதாட அனைத்து வழிகளையும் தயார் படுத்தினார். உச்சநீதிமன்றத்தில் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என முழு நம்பிக்கையில் மிக கடுமையாக நேரம் பாராது உழைத்தார்.

இந்த நேரத்தில் கைது செய்யப்பட்டு இருப்பது பல சந்தேகங்களை கொண்டதாக இருக்கிறது. இவரை போல் மற்ற அப்பாவி சிறைவாசிகளும் விடுதலை பெற்று விடுவார்கள் என்ற அச்சத்தில் காவல்துறை இது போன்ற நாடகங்களை அரங்கேற்றி வருகிறது. இந்த கைதை கண்டித்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தும் என எதிர்பார்கின்றேன் என கூறினார்.

ஆக, நம் தமிழகத்தில் இருக்கும் முஸ்லிம் ஜமாத்துக்கள் புகாரி அவர்களுக்காக களத்தில் நின்று அவருடைய விடுதலைக்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளையும் விரைந்து செய்ய வேண்டும் என்பதே சாதாரண மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

நன்றி: Media Voice Web TV

சுவனப் பிரியன் said...

திரு சாரங்!

//
சுவனப்ரியன் சார்

வஹாபிகளுக்கு தான் ஆலயத்தில் புண்ணியம் கிண்ணியமேல்லாம் கிடையாதே. எதுக்கு இம்புட்டு காசு செலவு பண்ணி போய் வாறீங்க?//

இனம், நிறம் எல்லாம் துறந்து தூய வெள்ளை ஆடையை அதுவும் தைக்கப்படாத வெள்ளை ஆடையை உடுத்திக் கொண்டு பெரும் கோடீஸ்வரர்களும் ஏழைகளோடு ஒன்றாக செலவிடும் அந்த 10 நாட்களில் மனிதன் பண்பட்டு விடுகிறான். குல வெறி, சாதி வெறி, நிற வெறி, பொருளாதார வெறி அனைத்தையும் தூரமாக்குகிறது இந்த ஹஜ் பயணம். இதை நேரில் அனுபவித்ததனால் சொல்கிறேன்.

சுவனப் பிரியன் said...

திரு சிவஸ்ரீ விபூதி பூஷன்!
ஜனாப் சுவனப்பிரியன்//
“உலகில் முதலில் இறைவனை வணங்குவதற்காக எழுப்பப்பட்ட முதல் ஆலயம் கஃபா என்பதாலேயே அந்த இடம் புனிதப்படுகிறது”. உலகில் கஃபாவிற்கு முன்னால் கோயில்களே எழுப்பபட்ட வில்லையா. என்ன? ஏன் அபிராஹாமிய மதங்களில் மூத்ததான யூதசமயக்கோயில் ஏதும் முன்னர் கட்டப்படவில்லையா. வரலாற்று ஆதாரங்கள் தேவை.//

இறைத் தூதர் ஆபிரஹாமுக்கு முன்பும் பல தூதர்கள் வந்துள்ளனர். முதல் மனிதர் ஆதம் இறைவனை வழிபட கட்டிய பள்ளியை ஆபிரஹாம் புணருத்தானம் செய்தார். அதுதான் தற்போது கஃபா என்று அழைக்கப்படுகிறது. பிறகு தான் உலகம் முழுக்க பல ஆலயங்கள் இறைத் தூதர்களால் உருவாக்கப்பட்டதாக இஸ்லாமிய வரலாறு கூறுகிறது. ஜெருசலத்தில் உள்ள பள்ளியும் மிக பழமை வாய்ந்தது.

திருக்குர்ஆன் கூறுவது.
3:96. இறை வணக்கத்திற்கென மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் நிச்சயமாக மக்காவில் உள்ளதுதான். அது பாக்கியம் மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.

jaisankar jaganathan said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

jaisankar jaganathan said...

படம் போட்டு பாகம் குறித்து அல்லாவை விளக்கிட்டீங்க.

நன்றி

Dr.Anburaj said...

வியாசரின் மருத்துவ சாதனை மகாபாரதத்தில் ஒரு நிகழ்வு
வயிற்றில் அடித்துக் கொண்டதால் கருச்சிதைவு ஏற்பட்டது.அதன் பிண்டங்களை 100 எண்ணிக்கை தனிதனி பாத்திரத்தில்போட்டு வியாசர் என்ற முனிவர் 100 குழந்தைகளாக வளர்த்தார் அந்த 100 பேர்கள்தான் கௌரவர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள்.விந்து அணு பெண்ணின் கருவோடு இணைந்ததும் அது வளரும் போது நூற்றுக் கணக்கான குழந்தைகள் உருவாகக் கூடிய அடிப்படை கூறுவாக அது வளர்ந்து விடும்.நமது உடல் அந்த கருக்களில் ஒன்றை மட்டும் வளர அனுமதிக்கும்.அதுதான் ஒரு குழந்தையாக பிறக்கின்றது.இதில் குறைபாடு ஏற்படும் போது ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில்குழந்தை பிறக்கின்றது.சோதனைக்குழாய் குழந்தை கூட சோதனைக்குழாயில் கருவை உருவாக்கி பெண் கருப்பறையில் சேர்த்துவிடுவதுதான் இன்றைய விஞ்ஞானம். 5000 ஆண்டுகளுக்கு முன்னர் முழு குழந்தையையும் அதுவும் 100குழந்தைகளை கருப்பையின் உதவியின்றி குழந்தையாகவளர்க்கும் கலை நமது இந்துஸ்தானம் அறிந்ததுதான்.இந்துஸ்தானம் உயிரியில் விஞ்ஞானத்தில் அரேபியாவைவிட ..... விட .. விட அதிக முன்னேற்றம் பெற்றிருந்தது.வியாசரின் சாதனையை நாமும் வியந்து மனதில் நிறுத்தி மேலும்பல சாதனை செய்வோம்.

திருநெல்வேலி வானொலி நிலையத்தில் நெல்லை மருத்துவர் அக்னஸ் அவர்களின் சொற்பொழிவில் கேட்டது.

The Islam Papers said...

See www.islampapers.com/embryology for a collection of papers, posts and videos on the subject of embryology in the Qur'an

The Islam Papers said...

I have listed some of the posts related to Embryology in the Qur’an on a single page for easy access.

http://islampapers.com/embryology/

The Islam Papers said...

See www.islampapers.com/embryology for a collection of papers, posts and videos on the subject of embryology in the Qur'an

jaisankar jaganathan said...

// குல வெறி, சாதி வெறி, நிற வெறி, பொருளாதார வெறி /

மதவெறிய விட்டுட்டீங்களே சுவனம்

Anonymous said...

டார்வினின் கொள்கையை விடுங்கள் முதல் மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டவன் என்று எந்த விஞ்ஞானமும் சொன்னதாக எனக்கு தெரியவில்லை.டார்வின் கொள்கை பொய் என்றவுடன் நீங்கள் சொல்வது உண்மையாகிவிடாது.உங்கள் உணர்வுகளையும் மத நம்பிக்கையையும் மதிக்கின்றேன் சகோ,ஆனால் யார் கூறினாலும் விஞ்ஞான கருத்துக்கள் நிரூபிக்கப்படாவிடத்து வெறும் குப்பையாகவே கருதப்படும்.

தருமி said...

//முதல் மனிதனை களிமண்ணால் படைத்தேன் என்று இறைவன் கூறுகிறான். இதன் மூலம் டார்வினின் பரிணாமக் கொள்கை தவறு என்று விளங்குகிறது.//

ஆஹா ...