திரு அரிசோனன்!
//ஜனாப் சுவனப்பிரியன் அவர்களே!
ஈராக் நாட்டின் வட எல்லையில் இருக்கும் மோசூல் என்ற நகரை ISIS என்ற இஸ்லாமிய இயக்கம் கைப்பற்றி உள்ளது. அங்கு உள்ள கிறித்தவர்களுக்கு ISIS அமைப்பு ஒரு இறுதி எச்சரிக்கை செய்துள்ளது. அந்த எச்சரிக்கை இதுதான்:
http://www.cnn.com/2014/07/18/world/meast/iraq-isis-christians-threatened/index.html?hpt=hp_bn2
1. அங்கு இருக்கும் கிறித்தவர்கள் இஸ்லாம் சமயத்தைத் தழுவ வேண்டும். அதிகப்படியான வரியையும் ஷாரியா நீதிமன்றங்களுக்குக் கட்ட வேண்டும்.
2. இல்லாவிட்டால் மோசூல் நகரத்தைவிட்டு வெளியேறவேண்டும்.
3. மேற்கொண்ட இரண்டில் ஒன்றை, ஒரு நாளுக்குள் செய்யாவிட்டால் வாளுக்குப் பதில் சொல்லவேண்டும் (will have to answer the sword),
1. “வன்முறையே வரலாறாய்” என்ற வரலாற்றுக் கட்டுரையை — ஜனாப், நீங்கள் மருதளித்தீர்கள். இஸ்லாமியர்கள் கத்தி முனையில் மதமாற்றம் செய்யவில்லை என்றீர்கள்.
2. மேற்கண்ட செய்தி பற்றி உங்கள் கருத்து என்ன?//
இந்த செய்தி உண்மையாக இருந்தால் இது இஸ்லாமிய நடைமுறை அல்ல. ஏனெனில் இஸ்லாத்தில் கட்டாய மத மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. முகமது நபிக்கு பணிவிடை செய்த ஒரு யூத சிறுவன் 'நான் இஸ்லாத்துக்கு செல்லட்டுமா?' என்று தனது தந்தையிடம் கேட்கிறான். 'முகமது நபியின் மார்க்கத்தில் இணைந்து கொள்' என்று அந்த சிறுவனின் தந்தை அனுமதியளிக்கிறார். அதன் பிறகுதான் அந்த சிறுவன் இஸ்லாத்தை ஏற்கிறான். அந்த நேரம் நபிகள் நாயகம் அவர்கள் முழு அரபுலகத்துக்கும் சக்கரவர்த்தியாக இருந்த நேரம். அந்த சிறுவனைக் கூட நபி அவர்கள் கட்டாயப்படுத்தாமல் அவனது விருப்பத்துக்கு விடுகிறார்கள்.
ஈராக்கின் செய்தி ஸ்தாபனங்கள் அனைத்தும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளன. அமெரிக்கா ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு உலக ஆதரவு பெருகி விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறது. எனவே உண்மை செய்தி வெளி வரும் வரை நாம் ஒரு முடிவுக்கு வர முடியாது. சிஎன்என் கூறும் செய்தி உண்மையானால் அந்த ஈராக்கிய போராளிகள் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டனர் என்றுதான் அர்த்தம். ஈராக்கின் உண்மையான நிலவரம் என்ன என்பது இன்னும் நமக்கு அறிய வரவில்லை.
அடுத்து தற்போது இஸ்ரேல் கோழைத் தனமாக பாலஸ்தீன அப்பாவி சிவிலியன்களை இலக்காக்கி ஏவுகணைகளை வீசி வருகிறது. பெண்களும் குழந்தைகளும் இறந்த செய்தி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல கிறித்தவ நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. சிலி என்ற கிறித்தவ நாடு இஸ்ரேலுடனான தொடர்புகளை முற்றாக நிறுத்தி விட்டது. மும்பை ஹோட்டல்கள் அனைத்தும் இஸ்ரேலிய பொருள்களை பயன் படுத்துவதில்லை என்று முடிவெடுத்துள்ளன. அரபு நாடுகளும் முற்றிலுமாக புறக்கணிக்கப் போவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இது தொடர்ந்தால் இஸ்ரேலின் பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சியடையும் என்று இஸ்ரேலிய அமைச்சரே வருத்தப்பட்டு பேட்டி கொடுத்துள்ளார். எனவே கிறித்தவ நாடுகளின் கவனத்தை திசை திருப்ப ஐஎஸ்ஐஎஸ் போராளிகள் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் வீண் பழி சுமத்துவதாகவே நான் நினைக்கிறேன். பிபிசியிலோ, அல்ஜஜீராவிலோ இந்த செய்திகள் எதனையும் நான் பார்க்கவில்லை.
அதே நேரம் நமது நாட்டு செவிலியர்கள் கொடுத்த பேட்டியையும் நாம் புறம் தள்ள முடியாது. 'நாங்கள் முஸ்லிம்கள் அல்ல என்பதை தெரிந்து கொண்டு அந்த போராளிகள் நோன்பிருந்தாலும் எங்களுக்கு உணவுக்கு ஏற்பாடு செய்தனர். எங்களை சகோதரிகள் என்றே அழைத்தனர். எங்களை மிகவும் கண்ணியமாக நடத்தினர்' என்று கேரள செவிலியர்கள் நமது தொலைக் காட்சிக்கு கொடுத்த பேட்டியை நீங்கள் பார்க்கவில்லையா? இவ்வளவு பரந்த மனம் உடைய அந்த போராளிகள் இவ்வாறு தனது நாட்டு கிறித்தவர்களோடு நடப்பார்கள் என்று நம்மால் நம்ப முடிகிறதா? எனவே முன்பு போல் அவசரப்படாதீர்கள். சற்று பொறுமையாக இருப்போம். உண்மை இரண்டொரு நாளில் வெளி வரும். சிஎன்என் சொல்வது உண்மையாக இருந்தால் அந்த இயக்கத்தை எதிர்க்கும் முதல் ஆள் நானாகவே இருப்பேன்.
1 comment:
அருமையான விளக்கம்
Post a Comment