Followers

Sunday, July 27, 2014

காஞ்சி சங்கரராமனைக் கொன்றது மாமிசம் சாப்பிட்டவரா?

ஹானஸ்ட் மேன்!

//Islamic State Fighters சிரியன் army யை சேர்ந்த 85 பேரை கொன்று அதில் 50 பேரின் தலைகளை கொய்து Raqa city யில் காட்சிக்கு வைத்தனாராம்! எப்படி இவர்கள் இவ்வளவு ஈவு இரக்கம் இல்லாமல் செயல்படுகிறார்கள் என்றே தெரியவில்லை. தினமும் ஆடு வெட்டி வெட்டி இரத்தத்தை பார்த்து பார்த்து இரக்கம் என்பதே இல்லாமல் போய்விட்டதோ?//

இந்த செய்தி எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. போர்க்களத்தில் என்ன நடக்கிறது என்பதை யாராலும் ஊகிக்க முடியாது. உண்மை பின்னரே தெரிய வரும்.

மற்றபடி ஆட்டை அறுத்து சாப்பிடுபவர்கள்தான் அதிகம் கொலைகளை செய்வார்கள் என்று இல்லை. மாமிசமே சாப்பிடாத பவுத்த மதத்தை சார்ந்தவர்கள்தான் இலங்கையில் தமிழர்களை கொத்து கொத்தாக கொன்றனர். மாமிசம் சாப்பிடாத இந்துக்கள்தான் குஜராத்தில் கர்பிணி பெண்ணின் வயிற்றைக் கிழித்து அந்த சிசுவை வெளியில் இழுத்து தீயில் இட்டனர். அதனை கேமராவுக்கு முன்னால் சந்தோஷமாக சொல்லியும் காட்டினர். காஞ்சியில் சங்கரராமனைக் கொன்றவர்கள் சைவப்பிரியர்களே!

//கேட்கிறவன் முட்டாளாக இருந்தால் கேப்பையில் நெய் வடிகிறது என்று சொல்வார்களாம். பேசாமல் பள்ளி மற்றும் கல்லூரிகளில் விஞ்ஞான பாடங்களை எடுத்துவிட்டு இந்த குரானை பாடமாக வைத்து விடலாம் போல இருக்கிறதே!//

குர்ஆன் பல விஷயங்களை பேசுகிறது. வரலாறு, அறிவியல் என்று பல துறைகளை தொடுகிறது. இதில் ஏதாவது ஒரு வசனம் இன்றைய அறிவியலுக்கு முரண்படுகிறது என்று உங்களால் காட்ட முடியுமா? குர்ஆனே சவால் விடுகிறது.

'நமது அடியாரான முகம்மதுக்கு நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு அதில் நீங்கள் உண்மையாளராகவும் இருந்தால் இது போன்ற ஒரு அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள். இறைவனைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்.'
2 : 23 - குர்ஆன்

'அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? இது இறைவன் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் அனேக முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.'
4 : 82 - குர்ஆன்


இது போன்ற வசனங்களின் சவால்கள் இன்று வரை முறியடிக்கப் படாததால் நான் குர்ஆனை இறை வேதம் என்றே நம்புகிறேன்.இதற்கு முன் அருளிய வேதங்களையும் நம்புகிறேன். மதிக்கிறேன்.

மேலும் நம் முன்னோர்களான தமிழ் அறிஞர்கள் திருவள்ளுவர், சித்தர்கள், திரு மந்திரத்தை அருளியவர்கள், ரிக்,யஜீர், சாம,அதர்வண வேதத்தை அருளியவர்கள் அனைவரையும் நானும் மதிக்கிறேன். இவற்றில் ஏதாவது ஒன்று முன்பு இறைச் செய்தியாகக் கூட வந்திருக்கலாம். இது போன்ற வேதங்களில் புராணங்களில் மனிதக் கருத்துகளும் புகுந்து விட்டதால் இதற்கு முன் அருளிய வேதங்களையெல்லாம் உள்ளடக்கி உலக முடிவு நாள் வரைக்கும் வரக் கூடிய மக்களுக்கு குர்ஆனை இறைவன் வழங்கினான். எனவே தான் மற்ற வேதங்களை நான் மதிப்பதோடு பின் பற்றத் தக்கதாக குரஆனைப் பார்க்கிறேன்.

//அது சரி, மேற்கத்திய கல்வி கூடாது என்று கூறும் போகோ ஹராம் என்ற அமைப்பின் ஒரிஜினல் தலைவர் முஹம்மத் யூசுப் என்பவன் தனது followers க்கு “”"பூமி தட்டையானது”"” என்று போதித்தானாம். இது எப்படி இருக்கு?//

யாரும் எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும். அது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் குர்ஆன் பூமியை தட்டை என்று எங்கும் சொல்லவில்லை. இது பற்றி நான் முன்பு விளக்கியும் இருக்கிறேன்.

//Secularism என்ற வார்த்தைக்கு பொருத்தமானவர்கள் இந்துக்கள்தான். அதனால்தான் கோவா மாநிலத்தில் இன்றைக்கு டெபுடி முதல்வராக இருப்பவர் Francis D ‘souza என்ற கிறிஸ்தவர் ஆவார்.//

அதனால்தான் 'இந்தியாவை சேர்ந்த அனைவரும் இந்துக்களே' என்று கூறி சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார். இப்படி சொல்பவர்களைத்தானே பதவியிலும் அமர்த்துவீர்கள்.

//அது மட்டுமா? முஸ்லிம் வர்த்தகர்களும் முஸ்லிம் வந்தேறிகளும் (=immigrants ) தொழுவதற்காக ஒரு இந்து அரசனால் கேரளாவில் கட்டப்பட்டதுதான் “சேரமான் மசூதி” இது மெக்காவிற்கு அடுத்த 2 வது மிகப் பழமையான மசூதி ஆகும்.//

இந்தியாவின் வந்தேறிகள் யார் என்பது 90 சதமான இந்தியர்களுக்குத் தெரியும். கி.வீரமணியிடம் கேட்டால் ஆதாரங்களோடு பட்டியலிடுவார். அடுத்து கேரளாவில் இருக்கும் சேரமான் பள்ளி என்பது முகமது நபி காலத்திலேயே அவரை சென்று சந்தித்து தனது பெயரை தாஜூதீன் என்று மாற்றிக் கொண்ட சேரமான் பெருமாளின் வாரிசுகள் கட்டிய பள்ளி அது. இது பற்றியும் முன்பு நான் விளக்கியுள்ளேன்.

5 comments:

Anonymous said...

நட்சத்திரத்தை வைத்து சாத்தானை விரட்டுவது.

67:5
And We have certainly beautified the nearest heaven with stars and have made [from] them what is thrown at the devils and have prepared for them the punishment of the Blaze.

Anonymous said...

உலகை படைத்து பிறகு வானத்தைப் படைப்பது

2:29

It is He who created for you all of that which is on the earth. Then He directed Himself to the heaven, [His being above all creation], and made them seven heavens, and He is Knowing of all things.

Anonymous said...

பாக்டீரியா தன்னை இரண்டாக பிரித்து இனப்பெருக்கம் செய்கிறது. முகமது காலத்தில் இது தெரிய வாய்ப்பு இல்லைதான்.

51:49

And of all things We created two mates; perhaps you will remember.

Anonymous said...

And you had already known about those who transgressed among you concerning the sabbath, and We said to them, "Be apes, despised."

your Allah (muhammad) not even know what jewish believe in.

Historically, Judaism has been a strict form of monotheism. But the author of the Qur'an accuses Jews of polytheism by stating that they call Uzair (Ezra) the son of God in the same way that Christians see Jesus as the son of God. The author of the Qur'an seems to be unaware of the different theological implications of these two terms between Judaism and Christianity.

9:30

The Jews say, "Ezra is the son of Allah "; and the Christians say, "The Messiah is the son of Allah ." That is their statement from their mouths; they imitate the saying of those who disbelieved [before them]. May Allah destroy them; how are they deluded?

ஆனந்த் சாகர் said...

@சுவனப்பிரியன்,

//குர்ஆன் பல விஷயங்களை பேசுகிறது. வரலாறு, அறிவியல் என்று பல துறைகளை தொடுகிறது.//

ஆனால் தப்பு தப்பாக பேசுகிறது.

//இதில் ஏதாவது ஒரு வசனம் இன்றைய அறிவியலுக்கு முரண்படுகிறது என்று உங்களால் காட்ட முடியுமா?//

குரானின் பெரும்பாலான வசனங்கள் அறிவுக்கும் அறிவியலுக்கும் முற்றிலும் முரண்படுகிறது. குரானை போல் மிக மோசமாக எழுதப்பட்ட புத்தகத்தை உலகில் காணவே முடியாது.

//குர்ஆனே சவால் விடுகிறது.

'நமது அடியாரான முகம்மதுக்கு நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு அதில் நீங்கள் உண்மையாளராகவும் இருந்தால் இது போன்ற ஒரு அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள். இறைவனைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்.'
2 : 23 - குர்ஆன்//

இது எப்படிப்பட்ட சவால்? அது குரானின் மொழிநடையை குறித்த சவாலா? அல்லது அதில் கூறப்படுகிற விஷயங்களை குறித்த சவாலா?

//'அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? இது இறைவன் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் அனேக முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.'//
4 : 82 - குர்ஆன்

குர்ஆனில் நிறைய முரண்பாடுகள் உள்ளன. அவைகள் பல தளங்களில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.

//இது போன்ற வசனங்களின் சவால்கள் இன்று வரை முறியடிக்கப் படாததால் நான் குர்ஆனை இறை வேதம் என்றே நம்புகிறேன்.//

இதைத்தான் தூங்குவதுபோல் நடிப்பது என்பது. முதலில் குரானின் சவாலே அபத்தமானது, முட்டாள்தனமானது. குரானின் இந்த முட்டாள்தனமான சவாலும் முறியடிக்கப்பட்டுள்ளது.

//இதற்கு முன் அருளிய வேதங்களையும் நம்புகிறேன். மதிக்கிறேன்.//

எப்படி மதிக்கிறீர்கள்? முந்தைய வேதங்கள் மனிதர்களால் மாற்றப்பட்டுவிட்டன, அவற்றை பின்பற்றக்கூடாது என்று முஸ்லிம்கள் சொல்வதைத்தானே மதிக்கிறீர்கள் என்று கூறுகிறீர்கள்? இது மதிப்பதால், மட்டம் தட்டுவது.