Followers

Monday, July 07, 2014

விபத்தில் சிக்கியவருக்கு தனது காரை கொடுத்த அமைச்சர்!




பெங்களூரு: கர்நாடகாவின் சுகாதாரத் துறை அமைச்சர் சாலை விபத்தில் மாட்டியவர்களை தன்னுடைய காரில் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு ஆட்டோவில் சென்ற சம்பவம் அங்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநில சுகாதார துறை அமைச்சர் யு.டி. காதர். அவர் நேற்று காரில் பயணித்துக் கொண்டிருந்த போது, வயதான தம்பதியர் விபத்தில் சிக்கி பரிதவித்ததைப் பார்த்தார். உடனே அவர்களை தன்னுடைய காரின் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு, ஆட்டோ மூலம் தன்னுடைய பயணத்தை தொடர்ந்துள்ளார்.


அமைச்சர் தன்னுடைய தொழுகைக்காக சென்று கொண்டிருந்தார். ரம்ஜான் நேரம் என்பதால் அவர் நோன்பிலும் இருந்தார். அப்போதுதான் மெக்ரி சர்க்கிள் அருகில், ஆட்டோ ரிக்‌ஷாவில் விபத்துக்குள்ளான தம்தியினரைப் பார்த்துள்ளார். உடனடியாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தன்னுடைய கார் ஓட்டுநரின் மூலமாக கே.ஜி. மருத்துவமனை மல்லேஸ்வரத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்" என்று அதிகாரி ஒருவர் கூறினார். விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின்பு காதர் அங்கிருந்து ஆட்டோ மூலமாக மசூதிக்கு சென்றுள்ளார். மேலும், தன்னுடைய நோன்பையும் தாமதமாக முடித்துள்ளார்.

தகவல் உதவி

tamil.oneindia.in




1 comment:

suvanappiriyan said...

திரு அடியவன்!

//1. ஆடிட்டர் ரமேஷை இஸ்லாமியத் தீவிரவாதிகள்தான் கொன்றார்கள் என்பது விசாரனையில் தெரிந்து விட்டது. ஆடிட்டர் ரமேஷ் அப்பழுக்கில்லாதவர். அவர் குறித்து மனச்சாட்சியுடன் உங்கள் கருத்து ரவுடி என்பதுதானா?//

ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களே. கோர்ட்டில் கைதானவர்கள் 'குற்றத்தை ஒப்புக் கொள்ளச் சொல்லி போலீஸார் துன்புறுத்துகின்றனர்' என்று கூறியதை மறந்து விட்டீர்களா? அவர்கள் இன்றும் விசாரணை கைதிகளே! இன்னும் குற்றம் நிரூபிக்க முடியாமல் காவல் துறை கையை பிசைந்து கொண்டு நிற்கிறது. எனவே ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகள் வெளி வரட்டும். அதற்குள் நீங்களே அந்த வழக்குக்கு நீதிபதியாகி விட வேண்டாம்.

//பெரியவர் ராம கோபாலனை நீங்கள் சந்தித்டிருக்கிறீர்களா? அவர் கட்டப் பஞ்சாயத்து செய்பவரா? நீங்கள் விரும்பினால் அவரிடம் அழைத்துச் செல்கிறேன். சந்தியுங்கள். பிறகு சங்கம், முன்னணி குறித்த உங்கள் பார்வை மாறும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை.//

நீங்கள் பெரியவராக மதிக்கும் ராம கோபாலனின் மேடைப் பேச்சுக்களை நீங்கள் கேட்டதுண்டா? அனைத்தும் வன்முறையை தூண்டக் கூடிய பேச்சுக்கள். ஆபாசமான அர்ச்சனைகள். முழு பேச்சும் இஸ்லாத்தையும், கிறித்தவத்தையும் தாக்கும் பேச்சுக்களாக இருக்கும். அவர் பேச்சில் இந்து மதத்தின் பெருமைகள் எதுவும் இருக்காது. வெறும் வசை மொழிகளே! விவேகானந்தரும், கிருபானந்த வாரியாரும், குன்றக்குடி அடிகளாரும், மறைந்த காஞ்சிப் பெரியவரும் இந்து மத மேன்மைக்காக பல தொண்டுகளை ஆற்றியுள்ளனர். அவர்களை இன்றும் நான் மதிக்கிறேன். அவர்களோடு ராம கோபாலனை சேர்க்க வேண்டாம். ராம கோபாலன் போன்றவர்களால் இந்து மதத்துக்கு இழுக்கே!