Followers

Sunday, July 13, 2014

பஞ்சாயத்து தீர்ப்பின்படி 10 வயது சிறுமி பலாத்காரம்!



ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஊர் பஞ்சாயத்தின் உத்தரவுப்படி 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது.

இது தொடர்பாக ஊர் பஞ்சாயத்து தலைவர், பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர், பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ள அக்கிராமத்தில் போலீஸார் குவிக்கப் பட்டுள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் போலீஸில் அளிக்கப்பட்ட புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜார்க்கண்ட் மாநிலம் ஸ்வாங் குல்குலியா தோரா கிராமத்தைச் சேர்ந்த நாகாபாந்தி பாஸி (25) திங்கள்கிழமை இரவு பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டுக்குள் புகுந்து அவரது தயாரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த அந்த சிறுமியின் தந்தை, நாகாபாந்தியை அடித்து துரத்தினார். தான் தாக்கப்பட்டதாக நாகாபாந்தி ஊர் பஞ்சாயத்தில் அடுத்த நாளே புகார் அளித்தார். இதையடுத்து இரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் பஞ்சாயத்துக்கு வரவழைக் கப்பட்டு விசாரணை நடை பெற்றது.

நாகாபாந்தி தாக்கப்பட்டு காயமடைந்துள்ளார். எனவே அதற்கு பழி வாங்கும் வகையில் தன்னை தாக்கியவரின் மகளை (10 வயது சிறுமி) பலாத்காரம் செய்யலாம் என்று பஞ்சாயத்து தலைவர் கோஷல் பாஸி கொடூரமான உத்தரவைப் பிறப்பித்தார்.

இதையடுத்து நாகாரபாந்தி பஞ்சாயத்தார் மத்தியில் இருந்து அந்த சிறுமியை மறைவான இடத்துக்கு இழுத்துச் சென்ற பலாத்காரம் செய்துள்ளார். அச்சிறுமியின் தாய் கதறி அழுத போதிலும் பஞ்சாயத்தில் இருந்தவர்கள் மனம் இரங்கவில்லை. என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

எதிர் தரப்பில் இருந்தும் போலீஸில் புகார் அளிக்கப் பட்டது

இந்த சம்பவம் தொடர்பாக ஊர் பஞ்சாயத்து தலைவர் கோஷல் பாஸி, பலாத்காரத்தில் ஈடுபட்ட நபர், பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் ஆகியோரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த கிராமத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே பெருமளவில் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.

நன்றி
தமிழ் ஹிந்து தினசரி
13-07-2014

இஸ்லாம் தாறுமாறாக இந்தியாவில் வளர்ந்து கொண்டு இருக்கிறது என்று கூப்பாடு போடுபவர்கள் சற்று இந்த நிகழ்வை சீர் தூக்கி பார்க்க வேண்டும். தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்து விட்டதனாலேயே அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பெண்ணாக பிறந்து விட்டதனாலேயே அவர்களுக்கு சுய மரியாதை, கற்பொழுக்கம், மானம் இவை எதுவும் இருக்கக் கூடாது என்பது இன்று இந்தியாவில் எழுதப்பட்ட விதியாகி விட்டது. இந்து மதம் பெரும்பான்மையானது என்பதை சுட்டிக் காட்டுவதற்கு மட்டும் தலித்களை இந்து மதத்துக்குள் கொண்டு வருவார்கள். மற்றபடி தலித்களுக்கும் இந்து மதத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல்தான் இது வரை நிகழ்வுகள் நடந்து வருகின்றன. எத்தனை ஆட்சிகள் மாறினாலும் தலித் கொடுமையும் பெண் கொடுமையும் மட்டும் மாறுவதில்லை. இது நமது நாட்டின் சாபக்கேடு.

-------------------------------------------

A ten-year-old girl was allegedly raped by her neighbour on the diktat of a Panchayat chief in Bokaro district, the police said on Wednesday.

The 25-year-old rape accused allegedly dragged the girl to a nearby bush and raped her on the directive of Bhopal Pasi, the Panchayat chief of Swang Gulgulia Dhoura village in Bokaro district's Gomia police station area, at a panchayat meeting on Tuesday evening.

Both the rape accused and Bhopal were arrested today on the basis of the girl's statement, Bokaro SP Jitendra Kumar Singh said.

The police also arrested the victim's brother after the accused's wife lodged a counter-complaint accusing him of molesting and assaulting her.

The police said that the rape accused had allegedly entered the victim's house in an inebriated state on Monday night and tried to molest her mother. But, her father beat him up and drove him out of the house, police said.

The next morning the accused went to the panchayat and complained to Bhopal of being assaulted by the father, they said, adding that a meeting of the panchayat was convened.

In the meeting, where both the families were present, Bhopal allegedly directed the accused to rape the 10-year-old girl to avenge his assault, police said.

The accused then allegedly dragged the girl away into a bush, little distance away from the panchayat venue, ignoring the cry of the victim's mother to spare her daughter, and raped her, they said.

An hour later, the victim's mother brought the profusely-bleeding little girl from the bush before the panchayat, the police said.


indiatoday.intoday.in/story/minor-girl-raped-panchayat-chief-order-jharkhand-bokaro/1/370579.html

No comments: