Followers

Tuesday, July 22, 2014

மலர் மன்னன் சொல்லுவார் சுதந்திரத்தை இழப்பார்கள் என்று!

மலர் மன்னன் சொல்லுவார் சுதந்திரத்தை இழப்பார்கள் என்று!

திரு பாண்டியன்!

//ஹிந்து மதத்திற்கென்று ஒரு standard code இல்லை இங்கு. யாரோ சொன்னார் , புக் இல் உள்ள நம்பர் சொல்லியது என்று இங்கு யாரும் அதை குருட்டுத்தனமாக ஃபாலொ பண்ணுவது இல்லை.//

பிறகு எதற்கு கோவிலில் சென்று சாமி கும்பிடுகிறீர்கள்? அந்த சாமியைக் கும்பிடும்போது சமஸ்கிரதத்தில் ஸ்லோகங்களை ஒரு பார்பனரை சொல்ல வைத்து அவரிடமிருந்து பிரசாதமும் வாங்கிச் செல்கிறீர்கள். கோவிலை எத்தனை முறை சுற்ற வேண்டும். எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும். என்று கட்டளைகளை நீங்கள் பின் பற்றுவதில்லையா?

மனு ஸ்ருமிதி ஒரு இந்து எப்படி நடக்க வேண்டும். ஒரு பார்பனரிடம் மற்ற சாதி இந்துக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற சட்டதிட்டங்கள் வரிசையாக பட்டியலிடப்பட்டுள்ளதே! திருமணம் இப்படித்தான் செய்ய வேண்டும். என்று சட்டங்கள் வரிசையாக உள்ளதே. ஆக உலகின் எந்த மதமாக இருந்தாலும் அந்நந்த மதத்துக்கென்று சில சட்டங்கள்: சில சம்பிரதாயங்கள் இருந்தே வருகிறது. இந்து, முஸ்லிம், கிறித்தவ, யூத மதத்தவர் அதனை (உங்கள் பாஷையில் சொல்ல வேண்டுமென்றால்) குருட்டுத் தனமாக பின்பற்றியே வருகின்றனர். இதற்கு இந்து மதம் மட்டும் விதி விலக்கன்று.

//மலர்மன்னன் சொல்லுவார் , இங்கு இருந்து மதம் மாறுபவர்கள் முதலில் இழப்பது சுதந்திரத்தை என்று ..//

எனது மூதாதையர் முன்பு இந்துக்கள். இன்று நான் ஒரு முஸ்லிம். இப்படி இஸ்லாமுக்கு மாறியதால் நான் எந்த சுதந்திரத்தை இழந்து விட்டேன் என்று மலர் மன்னன் ஆதங்கப்படுகிறார். கல்வி, விளையாட்டு, உடற்பயிற்சி, திருமணம், பொருளீட்டுதல் என்று எந்த துறையிலும் நான் இஸ்லாமியன் என்பதால் பின் வாங்கவில்லை. எனது சுதந்திரத்தை இழக்கவுமில்லை. சொல்லப் போனால் இப்பொழுதுதான் எனக்கு அதிக சுதந்திரமும் மகிழ்ச்சியும் கிடைத்துள்ளது.

நான் இந்துவாகவே இருந்திருந்தால் ஸ்ரீரங்கம் கோவிலின் கருவறைக்குள் எங்களையும் அனுமதியுங்கள் என்று இன்று கும்பலாக கோஷம் போட்டுக் கொண்டிருப்பேன். பக்தி முத்திப் போய் திருமணத்தையும் வெறுத்து இந்து மதம் காட்டும் சாமியாராகக் கூட மாறியிருப்பேன்.(நித்தியானந்தவைப் போல் ஒரு ஆசிரமத்தையும் இது வரை உண்டாக்கியிருப்பேன்) :-) தேரை அந்த சாதி இழுப்பதா அல்லது இந்த சாதி இழுப்பதா என்று பஞ்சாயத்து பண்ணிக் கொண்டிருப்பேன். அர்ச்சகராக பட்ட படிப்பு படித்த பின்னும் கோவில்களில் எங்களை ஏன் ஆனுமதிப்பதில்லை என்று ஒவ்வொரு கோர்டாக ஏறி இறங்கிக் கொண்டிருப்பேன். இரட்டை குவளை முறை, அக்ரஹார ஒதுக்கல், பொது குளத்தில் தண்ணீர் எடுக்க தடுத்தல் என்று தலித்களுக்கு இழைக்கப்படும் கொடுமையை கண்டித்து போராட்டமெல்லாம் நடத்திக் கொண்டிருப்பேன். சிதம்பரம் கோவிலில் தமிழில் இறைவனை பாட போராட்டம் நடத்திக் கொண்டிருப்பேன். வன்னியர்களும், தேவர்களும் தலித்களுக்கு வருடா வருடம் இழைத்து வரும் கொடுமைகளை தட்டிக் கேட்டுக் கொண்டிருப்பேன்.

ஆனால் அதற்கெல்லாம் இன்று அவசியம் இல்லை. ஏனெனில் நான் இன்று ஒரு இஸ்லாமியன். இதற்காக எனது மூதாதையருக்கு முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறைவனுக்கும் நன்றி செலுத்திக் கொள்கிறேன்.

மலர் மன்னன் என்னை 'பேராண்டி' என்று செல்லமாக அழைப்பார். ஆனால் இன்று அவர் நம்மிடம் இல்லை. அறியாமல் செய்த அவரது பாவங்களை மன்னித்து இறைவன் அவரை பொருந்திக் கொள்வானாக!

6 comments:

Anonymous said...

//கல்வி, விளையாட்டு, உடற்பயிற்சி, திருமணம், பொருளீட்டுதல் என்று எந்த துறையிலும் நான் இஸ்லாமியன் என்பதால் பின் வாங்கவில்லை. எனது சுதந்திரத்தை இழக்கவுமில்லை. சொல்லப் போனால் இப்பொழுதுதான் எனக்கு அதிக சுதந்திரமும் மகிழ்ச்சியும் கிடைத்துள்ளது. //

பிறகு ஏன் உங்கள் ஆட்கள் அடிக்கடி "நாங்கள் இரண்டாம் குடிமக்களாக நடத்தப்படுகிறோம், எங்களுக்கு கல்வி இல்லை, வேலை இல்லை, உரிமை இல்லை. கொடுமை படுத்தப்படுகிறோம்" அப்படி இப்படி என்று போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று கொடி பிடித்து திரிகிறார்கள். குறிப்பாக அண்ணாத்த பீ.ஜே மற்றும் அவருடைய அடிவருடிகள் இந்த விசயத்தில் ரொம்பவே துள்ளி கொண்டு இருக்கிறார்களே எல்லாம் டிராமாவா?

ஒரு சில இஸ்லாமியர்கள் தரித்திரம் பிடித்து இருகிறார்கள் என்றால் அதற்கு இந்த நாடோ அரசோ காரணம் அல்ல. கொழுப்பு எடுத்து திரிவது என்று எங்கள் ஊரில் சொல்வார்கள் அது தான் காரணம், அதை வைத்து பீ.ஜே போன்ற பிராடுகள் நன்றாகவே வயிறு வளர்த்து கொண்டு திரிகிறதுகள்

suvanappiriyan said...

நானும் எனது குடும்பமும் மட்டும் நலமாக இருந்தால் போதுமா? தலித்களை விட கீழ் நிலையில் இருக்கும் பல இஸ்லாமிய கிராமங்களை சென்று பாருங்கள். திட்டமிட்டு இஸ்லாமியர் என்பதால் வஞ்சிக்கப்படுகிறார்கள். வட நாடுகளில் இன்னும் நிலைமை மோசம்.

பிஜே என்ற ஒருவரை இறைவன் தமிழகத்துக்கு தந்ததால்தான் பல இளைஞர்கள் மூட பழக்கங்களை விட்டு குர்ஆனை கையில் எடுத்துள்ளார்கள். படிப்பதிலும் ஆர்வம் செலுத்துகிறார்கள். அவர் மீது அபாண்டமாக பழி சுமத்த வேண்டாம்.

A&S GROUPS said...

நான் இஸ்லாமை வெறுக்கிறேன்...அது அரபியர்களுகாக மட்டுமே எழுதப்பட்ட நூல். சவூதி துதி பாடும் சுவனப்ரியனே நீங்கள் சவூதி தெருக்களில் நடந்து போனது வுண்டா...நடந்தால் கல்லடிதான் கிடைக்கும்
இது எதனால்....அரபு நாட்டில் பேரீச்சம் பழம்தான் கிடைக்கும் அதனால்தானே நோன்பு திறபதற்கு அதை பயன்படுதுகிரீங்கள்...உலகிலேயே அதிக சந்தேக புத்தி உள்ளவர்கள் அரபிகளே...ஏன் அல்லா உங்கள் வீட்டு பெண்களை காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை உங்களுக்கு இல்லை....

A&S GROUPS said...

கோவில்களில் சமஸ்கிருதத்தில் அர்ச்சனை நடப்பதை பற்றி பேசும் நீங்கள் தமிழ் நாட்டில் அரபு மொழியில் ஓதுவது ஏனோ...அல்லாவுக்கு தமிழ் தெரியாதா....

A&S GROUPS said...

முஸ்லீம்கள் ஏன் எப்போதும் மதத்தை பற்றியே பேசுகிறீர்கள்...எழுதுகிறீர்கள் ...

tamilan said...

சுட்டியை சொடுக்கி படியுங்கள்.




>>>1.பகுதி 71. தமிழ் நேசபாஷையா? நீசபாஷையா? தமிழ் உள்ளே போகக்கூடாது என்பதற்காக தெய்வத்தை வெளியே தூக்கிவருகிறார்கள்.

>>>2.பகுதி 69 – 70. கட‌வுளை காலையில் சுப்ரபாதம் பாடி எழுப்பனுமா?. Good Morning. கடவுளுக்கு காலை வணக்கம் செலுத்தி அவரை எழுப்புவது தான் சுப்ரபாதம். சுப்ரபாதம் ஏன் தமிழில் இல்லை?...

>>>3.பகுதி 68. தமிழை கட்டிப்போட்ட சமஸ்கிருதம். பூசையில் சூழ்ச்சி. தமிழன் வெளியே ? சமஸ்கிருதர்கள் உள்ளே ?

>>>4. பகுதி 66 – 67. ஏன் சாமி! “உங்க மனைவி மகள் கிட்டயெல்லாம் சமஸ்கிருதத்துலயா பேசறீங்க. அதுபோல பகவான்ட்டயும் தமிழ்லயே பேசுங்களேன்.”

>>>5.
பகுதி 31. கோவில் கட்டியவனுக்கு சாமியை சுமக்க, பூசை செய்ய தடையா? ‘சூத்ராள் பூஜை பண்றது, அதுவும் தமிழ்ல பண்றது ஏத்துக்க முடியாது.

>>>6. பகுதி 27. சூத்ரனோ, பஞ்சமனோ கோயிலுக்குள் பாதம் வைத்தால் விக்ரகம் வெறுங்கல்லாகி பகவான் பட்டென ஓடிப் போய் போய்விடுவார். பரிகாரம் கும்பாபிஷேகம். அதாவது குடமுழுக்கு.

>>>7. பகுதி 25. தமிழில் பேசினால் தீட்டு கழிய‌ ஸ்நானம் பண்ணணும்.

.