Followers

Thursday, July 31, 2014

பரிதாபப்பட வைத்த ஒரு நிகழ்வு - ஒரு இந்துத்வாவாதியின் மனக் குமுறல்



சென்ற ரமலானில் இந்துத்வா கட்சியான பிஜேபி இஃப்தார் பார்ட்டி கொடுத்து அங்கு இஸ்லாமியர்களையும் அழைத்திருந்ததை நாம் பத்திரிக்கைகளில் படித்திருப்போம். நேற்று வரை காங்கிரஸ் மற்றும் திராவிட கட்சிகளை 'ஓட்டுக்காக இப்படி கஞ்சி குடிக்க செல்லலாமா? இதுதான் மதசார்பின்மையா?' என்று கலாய்த்த பிஜேபி இன்று அதே காரியத்தை செய்கிறது. இது பற்றி தமிழ் இந்துவில் ஒரு இந்துத்வாவாதி இட்ட பின்னூட்டத்தைப் பார்ப்போம்.

//இந்துத்துவவாதிகள் நோன்பு கஞ்சி குடிப்பதிலோ, முஸ்லீமாகவே மாறுவதிலோ எங்களுக்கு எந்த ஆக்ஷேபனையும் இல்லை. ஆனால் நாங்கள் கூற விளைவதெல்லாம் எங்களை முஸ்லீம்கள் பயங்கரவாதிகள், அவர்களும் இந்துக்களும் சேர்ந்து வாழவே முடியாது. நாம் தாடியை மழிப்போம், அவன் மீசையை மழிப்பான். நாம் மேலிருந்து கீழாக முகம் கழுவுவோம், அவன் கீழிருந்து மேலாக முகம் கழுவுவான், முஸ்லீம்கள் கடைகளைப் புறக்கணியுங்கள். லவ் ஜிகாத். இராமர் கோவில், பொது சிவில் சட்டம், காஷ்மீருக்கு விசேஷ அந்தஸ்து ரத்து, சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு, கல்வி உதவித் தொகை கூடாது, காந்தி முஸ்லீம்களை நம்பி ஏமாந்தவர்… இப்படியெல்லாம் சொல்லி எங்களை உசுப்பேத்தி விட்டு விட்டு இத்தனை ஆண்டுகள் கஞ்சி குடிக்கப் போகாதவர்கள் இப்போது போவதேன் என்பதே கேள்வி. இத்தனை நாள் கஞ்சி குடித்திருந்தால், காந்தியைப் போல் எப்போதும் ஒரே பேச்சாயிருந்திருந்தால் ஏன் இவர்களைக் கேள்வி கேட்கப் போகிறோம். மோடி குல்லா போட்டாரா. கஞ்சி குடித்தாரா. இல்லையே. ஏன். அவரை எந்த நல்ல முஸ்லீமும் அழைக்க வில்லையா. ஸந்தர்ப்பவாதத்தைத் தான் கண்டிக்கிறோமே தவிர கஞ்சி குடித்ததை அன்று.//

- கிருஷ்ணபிரசாத்

சகோ கிருஸ்ண பிரசாத்தின் உள்ளக் குமுறலை நானும் ஆதரிக்கிறேன். இதையேதான் தேர்தலுக்கு முன்பும் நான் சொன்னேன். இஸ்லாமியர் எதிர்ப்பு என்பது உங்களிடமிருந்து ஓட்டுக்களைப் பெறுவதற்கே. இந்து மதத்தின் பெருமைகளை சொல்லி உங்களிடமிருந்து பிஜேபி ஓட்டுக்களை குவிக்க முடியாது. ராமர் கோவில், பொது சிவில் சட்டம், காஷ்மீர் தனி அந்தஸ்து, முஸ்லிம் கடைகளில் பொருள் வாங்காதே, லவ் ஜிஹாத் என்று எதையாவது சொல்லித்தான் ஓட்டு அறுவடையை உங்களிடமிருந்து பெற முடியும்.

உபி முஸாஃபர் நகரில் நடந்ததென்ன? ஒரு இந்து பெண்ணை இரண்டு இஸ்லாமிய இளைஞர்கள் சீண்டினார்கள் என்று ஊர் முழுக்க செய்திகளை பரப்பி கலவரத்தை உண்டு பண்ணினர். முடிவில் அந்த பெண்ணே அவரது குடும்பம் சகிதமாக 'இப்படி ஒரு நிகழ்வே நடக்கவில்லை. அந்த இளைஞர்கள் என்னை தொடவே கிடையாது' என்று பேட்டி கொடுத்ததை தொலைக் காட்சியிலே பார்த்தோம். அமீத்ஸா வின் திட்டமிடலால் மிகக் கச்சிதமாக காய்கள் நகர்த்தப்பட்டன. 50 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். பல கோடி ரூபாய் சொத்துக்கள் நாசமாக்கப்பட்டன. இதன் விளைவாக இந்துக்களின் ஓட்டை மிகச் சுலபமாக பெற்றது பிஜேபி. இன்று மோடி அருதி பெரும்பான்மை பெறுவதற்கு இந்த சம்பவம் மிக முக்கிய காரணமாக இருந்தது. பிஜேபியின் ஓட்டு பொறுக்கும் தந்திரம் இதுதான்.

இனி ஐந்து வருடத்திற்கு ராமர் பாசம் எடுபட்டு விடும். இஸ்லாமிய எதிர்ப்பு குறைந்து விடும். இனி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்வார் மோடி. ஐநாவில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு: இஃப்தார் பார்ட்டி என்று இன்னொரு காங்கிரஸாக பிஜேபி மாறும் என்பது எனக்கு முன்பு நன்றாகவே தெரியும். இதை சற்றும் எதிர் பார்க்காத ஒரு சில இந்துத்வாவாதிகள் ஆச்சரியப்படுகின்றனர். அவர்களை நினைத்து பரிதாபம்தான் பட முடியும். எத்தனை முறைதான் அவர்களும் ஏமாறுவார்கள்? ஆனால் முஸ்லிம்களாகிய எங்களுக்கு எந்த வித ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் பிஜேபியின் இஸ்லாமிய எதிர்ப்பு என்பது இந்துக்களின் ஓட்டை ஒருமுகப்படுத்துவதற்காக கைக்கொள்ளப்படும் தந்திரம் என்பது இந்திய அரசியலை அவதானிக்கும் அனைத்து மக்களுக்கும் தெரியும்.

No comments: