Followers

Saturday, July 27, 2019

இந்தியாவின் 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு

இவ்வருட ஹஜ்ஜுப் பயணிகளின் தேவையை முன்னிட்டும் மற்றும் இந்தியாவின் 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் சார்பாக நேற்று (26.07.2019) 20-வது *இரத்ததான முகாம்* ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இம்முகாமில் இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான், சூடான், எகிப்து மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகளிலிருந்து ஆர்வமுள்ள சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
இம்முகாமில் 130 நபர்கள் கலந்துகொண்டனர். அதில் 116 நபர்களிடமிருந்து குருதிக்கொடை பெறப்பட்டது.
இம்முகாமில் அனைத்து கிளை நிர்வாகிகள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் சிறப்பாக பணியாற்றினர்.




No comments: