Followers

Sunday, July 14, 2019

முகலாயர்கள் ஆட்சியில் இந்தியா செல்வத்தில் கொழித்தது!

முகலாயர்கள் ஆட்சியில் இந்தியா செல்வத்தில் கொழித்தது!
பொதுவாக நாடு பிடிப்பவர்கள் அந்நாட்டிலிருந்து செல்வங்களை கொள்ளையடித்து தனது நாட்டுக்கு கொண்டு செல்வர். உலகம் முழுக்க இதுதான் வழக்கமாக இருந்தது. சேர சோழ பாண்டிய மன்னர்களிலிருந்து ஆங்கிலேயர் ஆட்சி வரை இதைத்தான் பார்க்கிறோம். ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவிலிருந்து கொண்டு சென்ற செல்வத்தால் லண்டன் பொருளாதாரத்தில் செழித்து விளங்கியது.
ஆனால் மொகலாயர்களைப் பொருத்த வரை நிலைமை வேறாக இருந்துள்ளது. அவர்கள் தங்களின் பூர்வீக பூமியான ஆப்கானிஸ்தானத்தை வளப்படுத்துவதை விட இந்திய துணைக் கண்டத்தை சிறப்பாக்குவதில் அதிக கவனம் செலுத்தியுள்ளனர். இந்திய நாட்டு பெண்களை மணந்து இந்நாட்டு குடி மக்களாகவே மாறி விட்டனர். இந்த நாட்டையே நேசித்து தங்கள் உடல்களை இந்த மண்ணிலேயே புதைக்கவும் ஆசைப்பட்டனர்.
ஆனால் ஆங்கிலேயர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களில் ஒரு ஆட்சியாளர் கூட இந்நாட்டு மக்களை திருமணம் முடித்து இங்கேயே தங்கி விட ஆசைப்படவில்லை. 400 ஆண்டு காலம் இந்துஸ்தானை ஆண்டும் அவர்களின் எவரின் உடலும் இம்மண்ணில் புதைக்கப்படவில்லை. முஸ்லிம் மன்னர்களான பாபர், ஹூமாயூன், அக்பர், சாஜஹான், ஒளரங்கஜேப் என்று அனைத்து மன்னர்களின் கல்லறையும் டெல்லியில் இன்றும் கம்பீரமாக காட்சியளித்துக் கொண்டுள்ளது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வரலாற்றாய்வாளர் ஆங்குஸ் மெடிஸன் தனது ஆய்வு புத்தகத்தில் மோகலாயர்களின் ஆட்சி காலத்தில் ஜிடிபி 28.9 சதமாக இருந்ததாக கூறுகிறார். சீனாவையே பின்னுக்கு தள்ளி நாம் பொருளாதாரத்தில் அன்று சிறந்து விளங்கி வந்துள்ளோம். அதன் அட்டவணையையும் தந்துள்ளேன். பார்த்துக் கொள்ளுங்கள்.
ஃப்ரான்ஸின் ஆய்வாளர் ஃப்ரான்ஸியர் பெர்னியர் மொகலாயர்களின் ஆட்சியில் இந்துஸ்தான் வந்துள்ளார். அவர் தனது ஆய்வு நூலில் 'தங்கமும் வெள்ளியும் உலகமெங்குமிருந்தும் ஹிந்துஸ்தானில் குவியத் தொடங்கின. அந்த அளவு பொருளாதார வளர்ச்சி இருந்தது' என்கிறார்.
இன்று தேசபக்தி என்று வாய் கிழிய பேசும் ஆர்எஸ்எஸூம் பிஜேபியும் நமது நாட்டை கார்பரேட் முதலாளிகளுக்கு கமிஷன் வாங்கிக் கொண்டு தாரை வார்ப்பதை பார்க்கிறோம். தமிழகத்தின் விளை நிலங்கள் எல்லாம் கார்பரேட் கம்பெனிகளுக்கு மாற்றப்பட்டு சொந்த மக்கள் தண்ணீருக்கே அல்லாடுவதை பார்க்கிறோம்.
ஆய்வறிக்கையின் ஆங்கில மூலத்தின் லிங்கை தருகிறேன். படித்துப் பார்த்து யார் இந்த நாட்டை நேசிப்பவர்கள் யார் இந்த நாட்டின் தேச துரோகிகள் என்ற உண்மையை விளங்கிக் கொள்ளுங்கள்.



1 comment:

Dr.Anburaj said...

கஜனி முகம்மது தான் கொள்ளை அடித்த பெரும் செல்வத்தை
இந்தியாவிலா முதலீடு செய்தாா் ?

கௌதமரின் தவறான போதனையால் இந்தியா ராணுவ வலிமையின் முக்கியத்துவத்தை மறுதலித்து வாழ்ந்து வநதது. மேலும் பல உள்நாட்டு பிரச்சனைகளில்சிக்கி வலிமையற்ற மன்னர்களின் ஆடம்பர வாழ்வால் மக்கள் நொந்து போய் இருந்தாார்கள்.இதனால் ராமன் ஆண்டால் என்ன இராணம் ஆண்டால் என்ன என்று சவத்தைப் போல் இருந்தார்கள். இதனால் முகலாய படையெடுப்பு சாத்தியப்பட்டது. முகலாள ஆட்சியாளர்கள் காபுல் துருக்கி போன் ற நாடுகளுக்கு தங்கள் கொள்ளையடித்த பெரும் செல்வங்களை கொண்டு சென்று அந்த நாடுகளை வளப்படுத்தியது உண்மை.
முகலாளர்கள் ஆங்கிலேயர்கள் ஆட்சி on balance இருண்ட காலம்தான். வைக்கோல்போரினல் குண்டுசி இருப்பதைப்போல்சில நன்மைகள் இருந்ததாக காட்டலாம். கடலளவு மலையளவு தீமைகள் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ளது என்பது தான் உண்மை. வாங்கிய காசுக்கு எதையாவது எழுதி புத்தகம் போடுபவன் புத்தகங்கள் குப்பை தொட்டிக்குள் போய்விடும்.அண்டப்புளுகு.ஆகாச புளுகு.