Followers

Monday, July 22, 2019

பொய் சொல்வதற்கு கூச்சமாக இல்லையா ஜீயர் அவர்களே!

காஞ்சிபுரம் முன்பு யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தது?
அத்தி வரதர் சிலையை குளத்தில் மூழ்கடித்தது இஸ்லாமியருக்கு பயந்துதான் என்ற உலக மகா பொய்யை ஜீயர் சொன்னது அறிவோம். வட நாட்டில் இஸ்லாமியர் ஆட்சி பரவலாக நடந்து வந்தது. ஆனால் தென்னாட்டில் அந்த அளவு இஸ்லாமியரின் ஆதிக்கம் இருந்ததில்லை. தமிழகத்தில் இஸ்லாமியர் ஆட்சியானது மதுரை பக்கத்தில்தான் 25 ஆண்டுகள் நடந்துள்ளது. காஞ்சிபுரம் அந்த காலம் தொட்டு இந்துக்கள் கையில்தான் இருந்துள்ளது. பவுத்த நகரமாக இருந்த காஞ்சியை இந்து நகரமாக மாற்றியது சைவர்கள். அத்தி வரதர் சிலை கூட புத்தரின் சிலை போல தான் தெரிகிறது. காஞ்சிபுரம் எவ்வாறு சைவ சமயமாக வன்முறையால் மாற்றப்பட்டது என்பதற்கு வரலாற்று ஆதாரங்களை வரிசையாக தருகிறேன். இதற்கெல்லாம் ஜீயர் பதில் சொல்வாரா?
கும்பகோணம் விநாயகர் ஆலயம்!
கும்பகோணம் நாகேசுவரசாமி திருமஞ்சன வீதியில் உள்ள விநாயகர் ஆலயத்தில் பகவரிஷி என்னும் பெயருள்ள புத்தர் கோவில்கள் பல பிற்காலத்தில் விநாயகர் கோவில்களாக்கப்பட்டன. இங்குள்ள விநாயகர் கோவிலும் அதில் உள்ள புத்தர் உருவமும் இதற்குச் சான்றாகும்.
-மயிலை சீனி வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும், பக்கம் நாற்பத்தி ஐந்து.
காஞ்சிபுரத்திற்கு தென்மேற்கே பல்லவபுரம் என்ற பல்லாவரத்திற்கு அருகில் 'கணிகிலுப்பை' என்ற ஊரில் புத்தர் கோவிலை இடித்து அந்த இடத்தில் விநாயகர் ஆலயம் கட்டியிருக்கிறார்கள். அத்தோடு அங்கிருந்த புத்த உருவங்களையும் ஏரிக் கரையில் கொண்டு போய்ப் போட்டு விட்டார்கள்.
-மயிலை சீனி வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும்,பக்கம் நாற்பத்தி ஐந்து.
காஞ்சிபுரம்!
காஞ்சிபுரத்தில் முக்கியமானவைகளாகக் கருதப்படும் எல்லாவற்றிலும் காமாட்சி அம்மையார் கோயில்ஒன்றாகும்.
'காமாட்சி அம்மன் கோயில் ஆதியில் பௌத்தரின் தாராதேவி ஆலயம். இவ்வாலயத்தில் பல புத்த உருவங்கள் இருந்தன.'
-மயிலை சீனி வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும், பக்கம் ஐம்பத்து ஐந்து.
'ஸ்ரீ ஆச்சாரியாள் பௌத்தமத நிரஸனம் செய்து வேத மதத்தை நிலை நாட்டிக் காஞ்சியில் ஷண்மத ஸ்தாபனம் செய்தபோது 'சத்தி' மதத் தலைமை ஸ்தாபனமாகப் பிரதிஷ்டை செய்ததே இந்தக் காமாட்சி அம்மன் கோவில் ஆகும்.'
-எம்.கே.ஸ்ரீநிவாசன்,காஞ்சிக் கோவில்கள், காஞ்சிபுரம், பக்கம் முப்பத்தது ஐந்து.
காஞ்சிபுரத்திலுள்ள 'புத்தர் கோவில் தெரு' இப்போது 'காமாட்ஷி அம்மன் சந்நிதித் தெரு' என்ற பெயரைப் பெற்றிருக்கிறது.
-சோமலெ,செங்கற்பட்டு மாவட்டம்,சென்னை, 1963, பக்கம் நூற்று முப்பத்தொன்பது.
காஞ்சி காமாட்சி!
“scholars have for long opined that the idol now worshipped as Sankaracharya in the present Kamatchi Temple, originally represented the Buddha.”
'காமாட்சியம்மன் ஆலயமே பௌத்தர் கோவிலாக இருந்திருக்க வேண்டுமென்று பலர் கருதுகிறார்கள்.'
-k.r.venkatraman, Devi Kamatchi in kanchi, Tirunelveli, 1973, Page 39.
-எம் ராதாகிருஷ்ண பிள்ளை, தமிழ் வளர்த்த கோவில்கள், சென்னை,
1989, Page 50,51.
கச்சீஸ்வரர் கோவில்!
காஞ்சிபுரத்தில் உள்ள கச்சீஸ்வரர் கோவிலின் முன் கோபுரத்தின் அஸ்திவாரக் கல் கட்டிடத்தில் சில புத்த உருவங்களும் உள் மண்டபத்திலும் சில கல் தூண்களிலும் புத்த உருவங்கள் இப்போதும் இருக்கின்றன. இவைகளால் இந்த ஆலயம் பூர்வத்தில் புத்தர் கோவிலெனத் தெரிகிறது.
-பௌத்தமும், தமிழும், பக்கம் ஐம்பத்து மூன்று, ஐம்பத்து நான்கு.
ஏகாம்பரேஸ்வரர் கோவில்!
காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில் வெளி மதில் சுவர்களில் சில புத்த உருவங்கள் சிற்பமாக அமைக்கப் பட்டிருக்கின்றன. இந்த மதிற்சுவர் விஜய நகர அரசனான கிருஷ்ணதேவராயரால் கி.பி.1509-ல் கட்டப்பட்டது. பழைய புத்தர் கோவில்களை இடித்து அக்கற்களைக் கொண்டு இந்த மதிற்சுவர் கட்டியிருக்க வேண்டும் என்பர் மயிலை சீனி வேங்கடசாமி.
-பௌத்தமும், தமிழும், பக்கம் ஐம்பத்து நான்கு.
இவ்வாறு பவுத்த கோவில்களை இடித்து சைவ கோவிலாக மாற்றி விட்டு அதில் இருந்த புத்தரின் சிலைகளை ஏரியில் தூக்கி போட்டு விட்டு அதற்கு அத்தி வரதர் என்ற பெயரையும் சூட்டி விட்டு அதற்கு காரணம் இஸ்லாமியர்தான் என்று பொய் சொல்வதற்கு கூச்சமாக இல்லையா ஜீயர் அவர்களே!


2 comments:

Dr.Anburaj said...

பவுத்தத்தை அழித்தது கௌதமனை அவர் சீடர்கள் உருவாக்கிய நிறுவனங்களை அழித்தது முகலாய ஆட்சி என்கிறாா் பாரத ரத்னா அம்பேத்காா் அவர்கள். பல்கலைக்கழகங்கள் மடங்கள் போன்றவற்றை கொள்யைடித்து பாழாக்கியவர்கள் முகலாள படைவீரா்கள்.

பவுத்தம் சமணம் தன்னுள் மிதமிஞ்சிய அஹிம்சை போன்ற வாழிவியல் நெறிகளைக் கொணடிருந்தது.இன்றும் சமண துறவிகள் நிா்வாகமாக-திகம்பரா் -களாக இருக்கினறனா். இதுபோன்ற காரணங்களால் - மக்கள் பவுத்தத்தை சமணத்தை கைவிட்டாா்கள். மேற்படி இரண்டுசமய நிறுவனங்களின் அழிவுக்கு காரணம் அது மக்களுக்கு ஏற்புடையதல்ல என்பதே.அம்மணத்தை யாா்தான் விரும்புவார்கள். கௌதமரின் சமண சமயத்தில் நல்ல கருத்துக்களை இந்து சமயம் ஏற்றுக் கொண்டு தன்னை திருத்தி அமைத்துக் கொண்டது.விளைவு புத்தமதம் என்று ஒரு மதம் தேவையில்லாது போயிற்று.பவுத்தம் அழியவில்லை பரிணாமம் அடைந்துவிட்டது. சமணம் அழியவில்லை பரிணாமம் அடைந்து விட்டது.

vara vijay said...

Wow Suvi, what about ARCOT Nawabs fuderates of MUGHALS, they ruled whole Tamilnadu for almost a centuray, it is because of there incompetence and in house fight, British got foothold in south India. What about malik kafure seizure on soughern india. So before writing article try to collect some facts. Dont tell muslims ruled only parts of madurai for few years. Anyhow the writter accepted that the muslims rule over north India had spread wide range of unrest and intolerance among the people and bought down lot of temples like SOMNATH. . More over hindus actually helped muslims by minimising Buthist dominace firstly budisit dont believe in God, judgement day, They are pure atheist. If they are still dominant in south India Suvi has to debate daily with them. Andwho knows there may be one more Rohingya crisis and Budha bala sena will do the rest.