Followers

Monday, July 15, 2019

ரஷீதும், மொயின் அலியும் விலகிச் செல்வதைப் பார்க்கிறோம்.

இங்கிலாந்து அணியினர் வெற்றிக் கொண்டாட்டத்தில் போதைப் பொருளான மதுவை பீய்ச்சி அடிக்கும் போது அங்கிருந்து ரஷீதும், மொயின் அலியும் விலகிச் செல்வதைப் பார்க்கிறோம்.
எந்த நிலையிலும் இஸ்லாமிய சட்டங்களை விட்டுத்தர மாட்டோம் என்ற உறுதியுடன் இருந்த அந்த இருவருக்கும் இறைவன் மேலும் இதயத்தை வலுவாக்குவானாக! மற்ற வீரர்களும் மதுவை பீய்ச்சி அடிக்கும் இந்த வழக்கத்தை விட்டொழிப்பார்களாக!
---------------------------------
நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!
மது மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?
அல்குர்ஆன் 5:90


No comments: