Followers

Sunday, July 21, 2019

ஜோரம் வான்' இஸ்லாதில் இணைந்தார்.

ஜோரம் வான்' இஸ்லாதில் இணைந்தார்.
----------------------------------------------------------------
உலகத்தில் இஸ்லாத்தை கடுமையாக எதிர்க்கும் எவரையும் புரட்டிப்போட்டு அவர்களை அடிமையாக்கும் விஷயம் குர்ஆனில் எது?
100 வருஷங்களாக நாட்டை பாதித்துக் கொண்டிருக்கும் மனநோயின் பெயர் தான் இஸ்லாம் என்று உரக்க சொன்னவர்,
இஸ்லாத்தை தடை செய்ய வேண்டும் என மிகப்பெரும் மக்கள் திரளை திரட்டியவர்ஃபர்தாவை தடை செய்ய வேண்டும் என போராடியவர்,
பள்ளிகளின் மினாராக்கள் இடித்து நொறுக்கப்பட வேண்டும் என்று பார்லிமென்டில் முழங்கியவர்
தற்போது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்.
டச் பார்லிமென்ட் எம்.பியாக இருந்த ஜோரம் வான் கிளாவரென். (Joram van Klaveren -Dutch politician)
தற்போது இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுள்ளார்.
இஸ்லாத்தை எதிர்ப்பதற்காக புத்தகத்தை எழுத துவங்கியவர், பாதியிலேயே அதை குப்பையில் தூக்கி எறிந்துவிட்டதாக சொல்கிறார்.
இஸ்லாத்தை படிக்கும் போது தான் அதன் யதார்த்தத்தை உணர முடிகிறது.
இதுவரை இஸ்லாத்துக்கு எதிராக செயல்பட்டதற்காக வருத்தம் தெரிவித்ததுடன். இஸ்லாம் பற்றி இனி எழுதப் போகிறேன் என்கிறார்.
அல்லாஹ் அக்பர்
(இறைவன் மிகப் பெரியவன்!)
பதிவு : Anbu Chelvan


No comments: