சாக்கிரதையாக இருப்போம் ! விழிப்போடு இருப்போம் !
பாஜக வை இனியும் குறைத்து மதிப்பிட முடியாது , இது தமிழ் மண் , பெரியார் மண் என்று சொல்லிக்கொண்டு அசட்டையாக இருந்துவிடக்கூடாது!
நமது தமிழகத்திலும் அவர்கள் தங்களுக்கான வேர்களை ஊன்றி வருகின்றனர் என்பதை மறந்துவிடக்கூடாது !
அடுத்த 25 ஆண்டுகளில் இந்த தேசம் எப்படி இருக்கவேண்டும் எனபதை இன்றே அவர்கள் திட்டமிடுகிறார்கள் !
அவர்கள்து நோக்கம் வெறும் ஆட்சி அதிகாரம் மட்டும் அல்ல , அவர்களது கர்வாப்சி கொள்கையை நாடெங்கும் திணிப்பதே அவர்களின் எண்ணம் !
ஒரே நாடு , ஒரே மொழி & ஒரே கலாச்சாரம் என்பதை உருவாக்கவே திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார்கள் !
எந்த வொரு - எதிர்ப்பு விமர்சனங்களை பற்றி கவலைப்படாமல் வேகமே நாட்டை துண்டாடி வருகிறார்கள் !
அவர்கள் கனவெல்லாம் - இந்திய தேசத்தை இந்துக்களின் தேசமாக மாற்றிவிடவேண்டும் என்பதே !
அவர்கள் உருவாக்க நினைக்கும் இந்தியா - எப்படி பட்டதாக இருக்க போகிறது என்பதை - இன்று நாம் உணர தவறினால் - நமது அடுத்த தலைமுறை பிள்ளைகள் மிக பெரிய சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும் !
அடுத்த 50 ஆண்டுகளில் அவர்கள் விரும்பும் விடயங்களை - இந்தியாவில் அவர்கள் நிலைநாட்ட விரும்பும் - புதியக்கல்வி கொள்கையால் எட்டமுடியும் !
ஆம் - கல்வி என்பது வரலாற்றையே மாற்றி வடிவமைத்து விடும் சக்தி படைத்தது !
கடந்த தேர்தலில் அவர்களது வெற்றி - ஏமாற்றுத்தனமான வெற்றி என்றாலும் - அவர்கள் வென்றுவிட்டார்கள் என்பதே நிதர்சனம் !
மிருக பலத்தோடு 303 நாடாளுமன்ற உறுப்பினர்களோடு ஆட்சி அமைத்துவிட்டார்கள் எனபதே கசப்பான உண்மை !
கடந்த நாட்களிலேயே - மக்களுக்கு விரோதமான பல்வேறு மசோதாக்களை ( NIA , RTI & UAPA & முத்தலாக் உட்பட பல்வேறு மசோதாக்களை ) தங்களது பலத்தினால் நிறைவேற்றிவிட்டார்கள் !
அதே மக்களவையில் எம் போன்றோர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறோம் என்றாலும் - வலிமையற்ற எங்களால் - எதிர்த்து குரல் மட்டுமே கொடுக்க முடிந்தது !
அதனால் - சனநாயக சக்திகள் நாம் அனைவரும் ஒன்றிணைந்து - பாஜக வின் மக்கள் விரோத கொள்கைகளை - பட்டி தொட்டியெல்லாம் பரப்ப வேண்டிய கடமையுள்ளது !
மக்களவையில் செய்ய முடியாததை - மக்கள் மன்றத்தில் செய்து காட்டுவோம் தோழர்களே !
-தொல் திருமாவளவன் பேச்சு
1 comment:
பாரதிய ஜனதா கட்சி பக்கம் அல்லாவின் கருணை வீசுகின்றது. ஆகவே நீங்கள் போன்றவர்கள் ஒரு மயிரைக் கூட பிடுங்க முடியாது. அரேபிய கலாச்சாரம் அரேபியாவில் துளிர்க்க வேண்டும்.இதற்கு இந்தியாவில் இடம் கிடையாது. மேலும் பாக்கிஸ்தான் கிழக்கு பாக்கிஸ்தான் என்று பெரும் நிலப்பரப்பை தன் பங்காக அடாவடித்தனமாக இந்துக்களின் இரத்தக்களறியில் பெற்றுக் கொண்டீர்கள். அங்கு வாழ்ந்த இந்துக்களை நாசம் செய்து பாழாக்கியுள்ளீர்கள். இதை நாங்கள் மற்ககவில்லை நண்பரே. இதற்கு என்ன பரிகாரம் காணப்போகின்றீர்கள் என்பதுதான் கேள்வி. பின் மற்ற கேள்விகளுக்கு வருவோம்.
Post a Comment