Followers

Thursday, December 11, 2014

இன்னா... அய்யிரே! மதம் மாறணுமா?



'இன்னா..... அய்யிரே..... மதம்தானே... மாறிட்டாப் போச்சு....... நீ சொல்றது போல இந்துவா மாறிட்டா கோயில்ல குருக்களா மணியாட்ட என்ன வெப்பியா.... உன் சாதியில என்னை சேத்துப்பியா... இல்லேன்னா... என்னை எந்த சாதியிலே வெச்சுப்பே........ அத்த மொதல்ல சொல்லு...'



2 comments:

Dr.Anburaj said...

இந்துவாக மதம் மாறி தாய்மதம் திரும்பி வாழ விரும்பும் அனைவரையும் நாடாா் சாதியில் சோ்த்துக் கொள்ள நாங்கள் தயாா்.ஆவன செய்யப்படும். வாருங்கள் சோதரரே. அரேபிய காடையா்களின் மதமும் கலாச்சாரமுமு் அழுகிய மு்ட்டையாய் நாறிக்கொண்டு உலகை இரத்தக்களறியில் குளிப்பாட்டிக் கொண்டிருக்கின்றது. கை கழுவுங்கள்.சுவாமி விவேகானந்தாின் பாதைக்கு வாருங்கள். மனித வளம் பெருக்குவோம்.

Dr.Anburaj said...

உண்மையில் மனுதர்ம சாஸ்திரம் பிராமணர்களை உயர்ந்த பிறப்பாளர்கள் என்று கூறுகிறதா? என்பதை ஆராய மனுதர்ம சாஸ்திர நூலுக்குள் சென்று பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும் போது எடுத்த எடுப்பிலேயே அந்த நூல் நமக்கு அதிர்ச்சியை தருகிறது இறைவனது படைப்பில் பிராமணன் மிக உயர்ந்தவன் அவனை பின்பற்றி நடக்க வேண்டியது மற்ற மனிதர்களின் தலையாய கடமை என்று அடித்து சொல்கிறது அப்படி சொல்கிற மனுதர்ம சாஸ்திரம் அடுத்தபடியாக பிராமணன் என்பவன் எப்படி இருப்பான்? அவன் யார்? என்பதை தெளிவாக காட்டுகிறது. பிராமணனின் உண்மையான இலக்கணம் தெரிந்தவுடன் நமக்கு கூட கண்டிப்பாக பிராமணன் உயர்ந்தவனே என்ற நம்பிக்கை வருகிறது.

அமைதியாக சகல உயிர்களையும் நேசிக்கின்ற ஜீவகாருண்யன் போன்ற வேடம் அணிந்து ஒரு பூனை தான் வேட்டை ஆட நினைக்கின்ற எலி பொந்திலிருந்து வெளியில் வருகிறவரை காத்திருந்து வந்தவுடன் ஆக்ரோஷமாக பாய்ந்து கதற கதற எலியை கடித்து விழுங்குவது போல தனது சுயநலத்தை மறைத்து மற்றவர்களின் பொருளை பறிக்க நினைத்து பொய்களை பரப்பி கர்வம் கொண்டு பிறர்பால் பொறமை வைத்து வாழ்கின்ற பிராமணன் எவனும் நரகத்தில் வீழ்வான் இவனுக்கு தானம் கொடுப்பவனும் நரக வாழ்வை அனுபவிக்க நேரிடும் என்று எச்சரிக்கை செய்து பிராமணன் எப்படி இருக்க வேண்டும் என்ற விபரங்களை நமக்கு தருகிறது.


வேதத்தை ஓதுவதும் கற்பிப்பதும் மட்டுமே அவனது தொழில் பொருளை எதிர்பார்த்து இதை அவன் செய்ய கூடாது கொடுத்தவனுக்கு அதிகமாகவும் கொடுக்காதவனுக்கு குறைவாகவும் கற்பிக்க கூடாது எந்த நேரத்திலும் அடுத்த வேளை உணவுக்காக சேமிக்கும் பழக்கம் இல்லாமல் ஒவ்வொரு வேளையும் தானாம் வாங்கியே அல்லது யாசகம் பெற்றே பசியாற வேண்டும் வியாபாரம் செய்வது லாபம் சம்பாதிப்பது அவனுக்கு கூடாது லேவாதேவி செய்வதோ மற்றவர்களிடத்தில் பணிபுரிந்து சம்பளம் வாங்குவதோ கூடவே கூடாது என்று கட்டளை போடுகிறது அதே நேரம் நாடகம் நடிப்பது இசை முதலிய கலைகளில் ஈடுபடுவது ஜோதிடம் பார்ப்பது போன்றவைகள் பிராமணனால் நடத்த படக்கூடாது என்று மனுதர்ம சாஸ்திரம் வலியுறுத்துகிறது மாறாக இவைகளை செய்பவன் பிராமணனே அல்ல என்றும் அடித்து கூறுகிறது. அதனால் தான்

சூத்ரோ ப்ராமணதாமேதி
ப்ராமணஷ்சைதி சூத்திரதாம்
ஷத்திரியாஜ்ஜாதமேவம் து
வித்யாத் வைச்சியாத் தைதவச

என்கிறது அதாவது சூத்திரன் பிராமணன் ஆகலாம் பிராமணனும் சூத்திரன் ஆகலாம் அதை போலவே சத்திரிய வைசிக குலத்தவர்களும் மாறி கொள்ளலாம் அவனவன் தர்மமும் சுயபுத்தியும் மாறும்போது வர்ணமும் ஜாதியும் தானாக மாறுகிறது. இதை நான் கூறவில்லை ஜாதிகளை உருவாக்குகிறது என்று பலரும் குறை கூறுகிறார்களே அந்த மனுதர்ம சாஸ்திரம் தெளிவாக கூறுகிறது.

பிராமணன் என்பவன் அடுத்த வேளை சோற்றை பற்றி சிந்திக்காமல் இறைவனை பற்றி மட்டுமே சிந்தித்து கொண்டிருப்பான் தனக்காகவும் தன்னை சுற்றி உள்ள சமூகத்திற்காகவும் அவனால் மட்டுமே பிரார்த்தனை செய்ய முடியும் வழிபாடு நடத்த முடியும் அதனால் பிராமணனே வழிபாடு நடத்துவதற்கு தகுதியானவன் என்பதே நமது மதத்தின் இறுதியான முடிவு. இந்த இலக்கணத்திற்குள் இல்லாத எவனும் பிராமணன் அல்ல அப்படி பிராமண தர்மத்தை கைவிட்டவனை வைத்து கொண்டு வழிபாடு நடத்த வேண்டும் என்று நமது சாஸ்திரங்கள் கட்டளை போடவும் இல்லை.

குறைந்தபட்சம் அதிகபட்சம் என்ற வித்தியாசத்தை தர்மத்தை பொறுத்தவரை சலுகைகாட்ட முடியாது. வேதம் ஒதுவதையே தொழிலாக கொண்டவனை மட்டுமே பூஜாரியாக நமக்காக இறைவனிடம் முறையிடுபவனாக வைக்கலாம் மற்றவர்களை வைத்தால் அது அவனுக்கும் பாவம் நமக்கும் பாவம் இப்போது சொல்லுங்கள் பிராமணன் உயர்ந்தவனா இல்லையா? நிச்சயம் தர்மப்படி வாழுகிற பிராமணன் உயர்ந்தவனே காரணம் அவன் மட்டுமே பிராமணன் அந்தண குலத்தில் பிறந்தேன் அதனால் நானும் பிராமணன் என்று எவனாவது சொன்னால் அப்படி கூறுவது கூட பாவம்.

- See more at: http://www.ujiladevi.in/2013/04/blog-post_29.html#sthash.HwzBOEoT.dpuf