Followers

Saturday, March 07, 2020

இந்தியாவை பின்னுக்கு தள்ளி அபார பொருளாதார வளர்ச்சி..

இந்தியாவை பின்னுக்கு தள்ளி அபார பொருளாதார வளர்ச்சி..
டெல்லி: ஹென்றி கிஸ்ஸிங்கர், 1970களில், வங்கதேசத்தை "ஒரு சர்வதேச பேஸ்கெட் கேஸ்" என்று அழைத்தார். உண்மைதான். அடிக்கடி ஏற்பட்ட வெள்ளப் பேரழிவுகளால் தத்தளித்தது அந்த நாடு. ஆனால் இன்று? வங்கதேசம் வேறு நாடு.
வங்கதேசம் பற்றி ஆழ்மனதில் பதிய வைத்துள்ள மோசமான கருத்தை உலகம் மாற்றிக்கொள்வதில், சோம்பேறித்தனம் இருக்கலாம். ஆனால் 1970களின் வங்கதேசம் இல்லை அது, என்ற உண்மை, விரைவில் பல நாடுகளாலும் ஒப்புக்கொள்ளப்படும்.
இந்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி சமீபத்தில் "இந்தியா ஒருவேளை அவர்களுக்கு குடியுரிமை வழங்கினால் வங்கதேசம் பாதி காலியாக மாறிவிடும்" என்று கிண்டலாக கூறியிருக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல. இந்தியாவுடன் ஒப்பிடுகையில், வங்கதேசம், வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிக்கும் குறியீடுகளில் பலவற்றில் மிகச் சிறப்பாக முன்னேறிவிட்டது என்பது பாவம் ரெட்டிக்கு தெரியுமோ தெரியாதோ!
செம வேகம்
வங்கதேசம் நாம் பொறாமை கொள்ளும் வேகத்தில் வளர்ந்து வருகிறது. அவர்கள் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி 5% க்கு கீழே போய்க்கொண்டு இருக்கிறது. ஆனால், வங்கதேசம் 8%க்கு மேல் உள்ளது. கார்ப்பரேட் வரியை குறைத்து, சீனாவை விட்டு வெளியேறும் முதலீட்டை ஈர்க்க நிர்மலா சீதாராமன் ஒருபக்கம் தீவிரமாக செயல்படுகிறார். ஆனால், உண்மையில், அந்த பலனை அனுபவிப்பது வங்கதேசம். லண்டன் மற்றும் நியூயார்க்கில் வங்கதேசத்தில் தயாரான ஆடைகள் உடுத்தப்படுகின்றன. தமிழகத்தின் திருப்பூரிலும், பஞ்சாப்பின் லூதியானாவிலும் தயாராகும் ஆடைகள் இப்போதெல்லாம் அங்கே அதிகம் விற்பனையாகவில்லை.
வாழ்க்கைத் தரமும் சூப்பர்
2019ம் நிதியாண்டில் வங்கதேசத்தின், வர்த்தக ஏற்றுமதி இரட்டை இலக்கங்களில் கிடுகிடுவென வளர்ந்துள்ளது. ஆச்சரியமில்லை. ஆனால் இந்திய ஏற்றுமதியின் செங்குத்தான வீழ்ச்சிதான், அதிர்ச்சி. பொருளாதாரம் மட்டுமல்ல.. அப்பட்டமாகக் கூறினால், வங்கதேசத்தின் வாழ்க்கை தரம், இந்தியாவை விட மிகவும் முன்னேறிவிட்டதாகவே தெரிகிறது. சும்மா சொல்லவில்லை. புள்ளி விவரமும் அதையேத்தான் கூறுகிறது.
ஒப்பீடு
வங்கதேசத்தில் ஆண்களுக்கு சராசரி ஆயுட்காலம், 71, பெண்கள் சராசரி ஆயுட்காலம் 74. இந்தியாவில், இது முறையே, 67 மற்றும் 70 ஆகும். இந்தியாவில் பேறுகால இறப்புவிகிதம், அதாவது 1,000 பேறுகாலங்களில், 22.73 என்ற அளவில் உள்ளது. வங்கதேசத்தில் பேறுகால இறப்பு விகிதம் என்பது குறைவு. 17.12 மட்டுமே. குழந்தை இறப்பு விகிதம், இந்தியாவில் 29.94 ஆகவும், வங்கதேசத்தில் 25.14 ஆகவும் உள்ளது. வங்கதேசத்தில், 15 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் 71% கல்வியறிவு பெற்றவர்கள், இந்தியாவிலோ இது 66% பேர் மட்டும்தான். வங்கதேசத்தில், மொத்த பணிகளில், பெண் பணியாளர்கள் பங்களிப்பு 30%. மேலும் உயர்ந்து வருகிறது. நம்முடையது 23% மட்டுமே. அதுமட்டுமின்றி, கடந்த தசாப்தத்தில் 8% குறைந்துள்ளது.
எதிர்கால வளமை
சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான உயர்நிலைப் பள்ளி சேர்க்கை விகிதம் எப்படி இருக்கிறது என்பதையும் பாருங்கள். ஏனெனில் எதிர்கால சந்ததிகள் எந்த நாட்டில் எப்படி செயல்படப்போகிறார்கள் என்பதற்கான குறியீடு இது. இந்தியாவில் 0.94 என்ற அளவில் உள்ளது. ஆனால் வங்கதேசத்தில் இது 1.14 ஆகும். அதாவது பெண்கள், ஆண்களைவிட அதிகம் கல்விக்கூடம் வருகிறார்கள்.
தகவல் உதவி
tamil.oneindia
By Veerakumar
08-03-2020


2 comments:

Dr.Anburaj said...

ஆடிப் போயிருக்கும் சில டி.வி. சானல்களும், பத்திரிகைகளும்!

ச.நாகராஜன்
டாக்டர் சுப்ரமண்யம் ஸ்வாமி அவர்களின் அப்பீலை ஒட்டி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தனது அப்பீலில் டாக்டர் சுப்ரமண்யம் ஸ்வாமி, இந்தியாவில் உள்ள அனைது நியூஸ் சானல்களும், ஊடக நிறுவனங்களும் இந்தியர்களையே சொந்தக்காரர்களாகக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆனால் உண்மை என்னவெனில் நியூஸ் சானல்கள் மற்றும் செய்தி நாளிதழ்களில் பெரும்பாலானவை சவூதி அரேபியா, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் துபாய் குடி மக்களுக்கே சொந்தமாக இருக்கின்றன!

சொந்தம் கொண்ட உரிமையாளர்களின் நிலை இப்படி இருக்க, இந்த ஊடகங்கள் அவற்றின் சொந்தக்காரர்கள் இசைக்கும் பாட்டுக்கு டான்ஸ் ஆட வேண்டிய நிலையில் உள்ளன. அவற்றின் சொந்தகாரர்களுக்கோ தாங்கள் அடைய வேண்டிய, யாருக்கும் தெரியாத, சொந்தக் குறிக்கோள் இருக்கிறது!

தேசத்தின் நலனைக் கருதி, சுப்ரீம் கோர்ட் இந்த நிலையை மாற்ற தகுந்த ஆணையைப் பிறப்பிக்க வேண்டும் என்று அவரது அப்பீல் முடிகிறது!

சுபிர்ரிம் கோர்ட் உறுதியான இறுதியான ஒரு ஆணையை டாக்டர் சுப்ரமணியம் ஸ்வாமியின் அப்பீலுக்குத் தந்து விட்டால் - ABP, AAJ TAK, NDTV மற்றும் அதையொத்த சானல்களும் / செய்தித்தாள் ஊடகங்களும்

மூடப்படும்!

இந்த வார்த்தையைக் கேட்ட வினாடியிலிருந்து அந்த ஊடக நிறுவனங்கள் அடி வயிறு கலங்கி ஆடிப் போயுள்ளன.

அவை கவலையின் உச்சிக்கே போய் விட்டன!

ஆனால் இதில் பரிதாபரகரமான ஒரு விஷயம் என்னவெனில், எப்போதுமே பரபரப்பைப் பரப்பி விட்டுக் கொண்டே இருக்கும் இந்த சானல்கள் இந்த செய்தியை ஃப்ளாஷ் நியூஸாகவும் வெளியிடமுடியவில்லை. டி.வியில் பளீர் செய்தியாகவும் காண்பிக்க முடியவில்லை; செய்தித்தாள்களிலும் தலைப்புச் செய்தியாக வெளியிட முடியவில்லை!

உண்மையான இந்தியர்களாகிய நாம் இந்த செய்தியை தேசம் முழுவதும் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் கொண்டு செல்வோமாக!

நன்றி : வார இதழ் ட்ரூத், தொகுதி 87- இதழ் 42 21-2-2020 தேதியிட்ட இதழ்

***

அன்பர்கள் இந்த கட்டுரை செய்தியை முடிந்த அளவு அனைவருக்கும் கொண்டு செல்ல வேண்டுகிறேன்.

இதன் ஆங்கில மூலம் :-

Breaking News.

Against an Appeal by Dr. Subramaniam Swamy, Supreme Court has given Notice to the Central Government......

In his Appeal, Dr. Swamy has stated that all News Channels and Media Houses in India should only be owned by Indians.

But the truth is that a majority of News Channels and News Magazines are owned by Saudi Arabia, Italy, America, Britain and Dubai citizens!

Because of this ownership status, these Media Houses are made to dance to the tunes of their owners, who have hidden Agendas to achieve!

His Appeal concludes with a plea that the Supreme Court should pass a suitable Order to end this status in the interest of the Nation!

If the Supreme Court issues a firm and conclusive Order in favour of Dr. Swamy’s Appeal– ABP, AAJ TAK, NDTV and similar other Channels/News Media will be closed!

From the time this situation has been heard of, these Media Houses have been shaken up to their bones!

They are really, really worried!

But, it is a pitiable situation that these Media Houses could not highlight this as Flash News in their Telecast or in their printed material!

It is our duty as a true Indians to take this news forward and spread it to every citizen across the country!

Dr.Anburaj said...

ஆச்சிரியமான சம்பவங்கள் - உண்மையோ பொய்யோ எனக்கு தெரியாது.
பீஜப்பூரை ஆண்ட சுல்தான் (இரண்டாம்) இப்ராஹீம் சிறந்த சரஸ்வதி பக்தன். சிறந்த கலைஞன். இசையில் தேர்ந்தவன்.

சுல்தான் இப்ராஹீம் அடில்ஷா II என்று வரலாற்றில் குறிப்பிடப்படுபவன். இவனது காலம் 1580-1627.

அவன் ஏன் சரஸ்வதி தேவியை வணங்கத் துவங்கினான் என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன.

முக்கியமான காரணத்தை முதலில் பார்ப்போம்.

சுல்தான் இப்ராஹீம் (II) பீஜப்பூரை ஆண்ட காலத்தில் ஒரு யோகி வாழ்ந்து வந்தார். அவர் மீது சுல்தானுக்கும் மதிப்பும் மரியாதையும் நிரம்ப உண்டு. இதற்கான முக்கியமான காரணம் சுல்தானின் வாழ்க்கையில் நடந்த ஒரு சோக சம்பவத்தை அவர் சந்தோஷ சம்பவமாக மாற்றியது தான்!