Followers

Tuesday, March 24, 2020

வீட்டிலேயே இருங்க வாடகை வேண்டாம்.

வீட்டிலேயே இருங்க வாடகை வேண்டாம்.
கொரோனா வைரஸுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளால் ஏழை மக்கள் மிக கடுமையாக பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.
நாகூர் தொழிலதிபர் A.T.மொய்தீன் அவர்கள் தனது வாடகை வீட்டில் வசித்துவரும் குடியிருப்பு வாசிகளுக்கு இரண்டு மாத வாடகையை வேண்டாம் என்று தள்ளுபடி செய்துவிட்டார்.
பணம் பலபேர் இடத்தில் இருக்கலாம் கொடுப்பதற்கு மனம் வேண்டும் அல்லவா. இறைவன் அவரது செயல்களுக்கு நிறைவான கூலியை அருள்வானாக.


1 comment:

Dr.Anburaj said...


இவர்தான் பிறாமணர். அந்தணர்.

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்-குறள்


அந்தணர் என்பது ஒரு சாதிப் பெயரன்று. குணப்பெயர் என்பது 'அந்தணர் என்போர் அறவோர்' என்ற குறிப்பு மறுப்பாலும் பெறப்படுகிறது' என்பார் வ சுப மாணிக்கம். 'அந்தணர் என்போர் அறுதொழிலோர் என்றோ, பார்ப்பார் என்றோ, பிறப்பால் உயர் குலத்தார் என்றோ விளக்கம் தராமல், அவற்றை மறுப்பார் போலப் புதுவிளக்கம் தந்து மடைமாற்றுகிறார் வள்ளுவர்' என்பார் தமிழண்ணல். பரிமேலழகரும் இப்பாடலுக்கான உரையில் அந்தணர் என்பது சாதிப் பெயராகாது என்ற வகையில் 'அருளுடையராகலின் காரணப் பெயராயிற்று' என்று பொருள் கூறியுள்ளமை நோக்கத்தக்கது. எனவே அந்தணர் என்னும் சொல் பிறப்புப்பற்றி வந்ததன்று என்பது தெளிவு.
அற உணர்வும் அருள் நெஞ்சமும் உடையவர் இந்தநாட்டில் இந்தச்சமயத்தில் இந்தக்குலத்தில் பிறத்தல் வேண்டும் என்பதில்லை. அவர்க்கு நாடு, நிறம், மொழி, சமயம், சாதி போன்ற வேற்றுமைகள் தோன்றுவதில்லை. அறநெஞ்சம் படைத்தவர் யாராயினும் எக்குடிப் பிறந்தவராயினும் எந்நிலையில் இருப்போராயினும் இல்லறத்தாராயினும் துறவறத்தாராயினும் ஆணாயினும் பெண்ணாயினும் அவர் அந்தணர் ஆவர். செந்தண்மை பூண்டொழுகும் ஈரநெஞ்சம் இல்லாதவர் பார்ப்பனக் குலத்திலோ, வேறு எக்குலத்திலோ பிறந்தாலும் அந்தணராகார். இதனால், எவ்வுயிருக்கும் செந்தண்மை பூண்டொழுகும் சிறப்பொழுக்கம் இல்லாதவர், அந்தணர் எனப்படமாட்டார் என்பதும், எக்குலத்தில் பிறந்தாலும் செந்தண்மை பூண்டொழுகும் அறவோர் அந்தணர் எனப்படுவாரென்பது இப்பாடல்வழி தெளிவுறுத்தப்பட்டது. அந்த நல்லருள் உடையவர்களே அறவோர்கள். அறவோர்களே அந்தணர்கள். அவர்களாலேயே எவ்வுயிர்க்கும் வேற்றுமை பாராட்டாது அருள் பூண்டொழுக முடியும்.
அந்தணர் சாதிப்பெயரைக் குறிக்கும் சொல் அல்ல என்பதும் இப்பாடல்வழி உணர்த்தப்பட்டது. பிராமணர்களில் சிலர் அந்தணர்களாகப் போற்றப்பட்டிருக்கலாம்; அதனால் பிராமணர்கள் எல்லோரும் அந்தணர்கள் ஆகிவிடமாட்டார். அருளுடைமையினால்தான் எவரும் அந்தணர் ஆக முடியும்.
உலகநன்மைக்குப் பாடுபடும் அறக்குணம், எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டுதல் என்பவை நீத்தார் பண்புகள் எனச் சொல்ல வரும் வேளையில் அந்தணர் என்ற சொல்லுக்கான விளக்கமும் தருகிறார் வள்ளுவர் இங்கு.

எல்லா உயிர்களிடத்தும் அருள்கொண்டு ஒழுகுவராதலால் அந்தணர் என்போர் அறவோர் என்பது இக்குறட்கருத்து.