Followers

Saturday, March 21, 2020

நமது முன்னோர்கள் வாழ்ந்த இடம் உங்கள் நாட்டில்

வணக்கம்...
(மொகஞ்சதாரோ, ஹரப்பா) என் தமிழ் சமூகம் மறந்து விட்ட ஒரு வரலாறு. கீழடி கண்டு பிடித்து விட்டோம் என்று வானுக்கும், பூமிக்கும் குதிக்கும் என் தமிழ் சமூகமே! நம் முன்னோர்கள் வாழ்ந்த இடம், உலகத்துக்கு நாகரிகம் கற்று கொடுத்த மொகஞ்சதாரோ, ஹரப்பா எங்கே இருக்குறது? (இந்தியா, பாக்கிஸ்தான் பிரிவினையின் போது அந்த இடங்கள் பாக்கிஸ்தான் எல்லைக்கு சென்று விட்டது)
அப்போது ஊமைகள் போல் அனைத்து தலைவர்களும் அமர்ந்து இருக்கும் போது இந்த தமிழ் மகன் பொன் முத்துராமலிங்க தேவர்....... முஹம்மது அலி ஜின்னாவை பார்த்து சொன்னார்
" நமது முன்னோர்கள் வாழ்ந்த இடம் உங்கள் நாட்டில் பாது காப்போடு இருக்கட்டும்."
அதை கேட்ட முஹம்மது அலி ஜின்னா அவர்கள் பொன் முத்துராமலிங்க தேவரை பார்த்து "எனக்கு பின்னரும் நம் முன்னோர்கள் வாழ்ந்த இடம் பாது காப்போடு என் நாட்டில் இருக்கும்" என்று வாக்குறுதி கொடுத்து அன்று முதல் இன்று வரை பாகிஸ்தானில் மொகஞ்சதாரோ, ஹரப்பா இராணுவ பாதுகாப்பில் உள்ளது என்பது என் தமிழ் சமூகம் அறியாத ஒன்று.
ஒரு முறை பொன் முத்துராமலிங்க தேவர் மேடையில் பேசும் போது "பாக்கிஸ்தான் ஜிந்தா பாத்" (பாக்கிஸ்தான் வாழ்க) என்று சொன்னார் என்பதற்காக தமிழக அரசு கைது செய்து நீதி மன்றத்தில் நிறுத்திய போது இந்த மகன் யாரும் நீதிபதியை பார்த்து கேட்க அஞ்சும் ஒரு வார்த்தையை சொன்னார்... "எங்கள் முன்னோர்கள் வாழ்ந்த இடமான மொகஞ்சதாரோ, ஹரப்பா இடத்தை இன்று வரை பாதுகாத்து வரும் நாட்டுக்கு நான் நன்றி சொல்வது குற்றம் என்றால் இந்த சட்டம் என் கால் செருப்புக்கு சமம்......" என்றார். வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த தமிழ் மகன் இந்த பூவுலகில் வாழ்ந்த நாட்கள் 20075.. சிறையில் கழித்த நாட்கள் 4000. இப்படி ஒரு வீரமிக்க ஒரு தமிழ் மகனை என் தமிழ் சமூகம் ஒரு சாதியின் தலைவராக சித்தரித்தது தான் கேவலம்.
(அன்புடன் வாசுகி மோகன்)



1 comment:

Dr.Anburaj said...

திரு.முத்துராமலிங்கம் அவர்களை நன்கு படித்த இரண்டு பேர்களிடம் இது குறித்து விசாரித்தேன். இப்படி ஒரு சம்பவம் கிடையாது என்று உறுதியுடன் தெரிவித்தனா். கட்டுக்கதையாக இருக்க வேண்டும் .இந்த சம்பவத்திற்கான ஆதாரங்களை அளிக்க வேண்டும்..

”பாக்கிஸ்தான் வாழ்க” என்று ஐயா சொல்வாரா ? நம்ப முடியவில்லை.