Followers

Friday, August 21, 2009

வரலாற்றுச் சின்னங்கள் ஒரு பார்வை!



நான் தற்போது பணி செய்து கொண்டிருக்கும் இடம் சவூதியின் மாநிலங்களில் ஒன்றான தபூக். இந்த இடமும் சுற்றியுள்ள இடங்களும் இஸ்லாம், கிறித்தவம், யூதம போன்ற மார்க்கங்களுக்கு மிக நெருங்கிய தொடர்புடைய பல பிரதேசங்களைக் கொண்டுள்ளது. தபூக்கிலிருந்து ஜோர்டான்,எகிப்து, பாலஸ்தீன், இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு கடல் மார்க்கமாகவும், தரை மார்க்கமாகவும் எளிதாக பயணிக்க முடியும்.

சில மாதங்களுக்கு முன்பு திபா என்ற கடற்கரை பிரதேசத்துக்கு பயணித்திருந்தோம். மிகவும் அழகிய ஆரவாரம் இல்லாத கடற்கரை. நம் ஊர் மெரீனா கடற்கரையைப் போன்ற பெரிய அலைகளை பார்ப்பது அரிது. நிறமும் சற்று வித்தியாசப்படுகிறது. கடற்கரை ஓரம் நின்று பார்த்தாலே எகிப்தின் கடற்கரைகளை காணக் கூடியதாக இருக்கிறது.

அங்கிருந்து பிறகு மக்னா என்ற இடத்தை நோக்கி பயணித்தோம். இது வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் ஒன்று. 'டென் கம்மேண்ட்ஸ்' படம் பார்த்தவர்கள் கடல் அலைகள் பிளந்து தூதர் மோஸே (மூஸா)வுக்கு வழி விட்ட சம்பவத்தைப் பார்த்திருக்கலாம். அந்த படத்தில் வரும் காட்சி இடம் பெற்ற இடத்தில்தான் நாங்கள் நின்று கொண்டிருந்தோம். அந்த படத்தின் காட்சிகள் சூட் பண்ணப்பட்ட இடத்தையும் அங்குள்ளவர்கள் காட்டினார்கள்.

எகிப்து நாட்டின் பாரோ(பிர்அவுன்) மன்னன் தானே இறைவன் என்றும், தன்னையே வணங்க வேண்டும் என்றும் நாட்டு மக்களை மிரட்டுகிறான். இதற்கு இறைத்தூதர் மோஸேயும் அவரைப் பின்பற்றிய முஸ்லிம்களும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கோபம் கொண்ட மன்னன் மோஸேயையும் அவரது கூட்டத்தாரையும் அழிப்பதற்கு தனது படையுடன் துரத்துகிறான். மோஸேயும் அவரைப் பின்பற்றிய முஸ்லிம்களும் மன்னனின் தாக்குதலுக்கு அஞ்சி வெருண்டோடுகின்றனர். அப்போது அவர்களின் எதிரே கடல் குறுக்கிடுகிறது. முன்னால் கடல். பின்னால் மன்னனும் அவனது படைகளும்.

'இரு கூட்டத்தினரும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டபோது 'நாம் பிடிக்கப்பட்டு விடுவோம்' என்று மூஸாவின் சகாக்கள் கூறினர்.
'அவ்வாறு இல்லை என்னோடு என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழி காட்டுவான்' என்று மூஸா கூறினார்.
'உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக!' என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே கடல் பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போல் ஆனது.
அங்கே மற்றவர்களையும் நெருங்கச் செய்தோம். மூஸாவையும் அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம். பின்னர் மன்னனையும் அவனது கூட்டத்தையும் மூழ்கடித்தோம்.'
-குர்ஆன் 26:61....66.


குர்ஆனின் இந்த வசனத்தின் படி மோஸேயும் அவரது கூட்டத்தாரும் வழி விட்ட கடலில் பயணித்து கடலின் மறு கரையான தற்போது நாங்கள் நிற்கும் இடத்தை அடைகின்றனர். இந்த இடத்தை அடைந்த மக்களுக்கு தாகம் எடுக்கிறது. உடனே அந்த மக்கள் 'மூஸாவே! எங்களுக்காக இறைவனிடம் தண்ணீருக்காகப் பிரார்த்திப்பீராக' என்ற கோரிக்கையை வைக்கிறார்கள். இனி குர்ஆன் சொல்வதைப் பார்ப்போம்.

'மூஸா தனது சமுதாயத்திற்க்காக நம்மிடம் தண்ணீர் வேண்டியபோது 'உமது கைத்தடியால் அந்தப் பாறையில் அடிப்பீராக!' என்று கூறினோம். உடனே அதில் பன்னிரண்டு ஊற்றுகள் பீறிட்டன. ஒவ்வொரு கூட்டத்தாரும் தத்தமது நீர்த்துறையை அறிந்து கொண்டனர்.
-குர்ஆன் 2:60


மலைப்பாங்கான அந்த இடத்தில் ஊற்றுக்கள் வருவதற்கு அதிக சாத்தியங்கள் இல்லை. இறைவனின் ஆற்றலால் 12 ஊற்றுகள் பீறிட்டுக் கிளம்புகின்றன. மக்களுக்கும் தாகம் தணிகிறது. அந்த ஊற்றுகளில் சில ஊற்றுகளைத்தான் நாங்கள் பார்த்தோம். இன்றும் அந்த மலையிலிருந்து தண்ணீர் ஊற்றாக வந்து கொண்டிருப்பதை ஆச்சரியத்துடன் பார்த்தோம். சில ஊற்றுகள் பாலைவன புழுதிக் காற்றால் மூடப்பட்டு விட்டது. இந்த இடத்தை புனிதமாக நினைத்து மக்கள் வணங்க அரம்பித்து விடுவார்கள் என்ற பயத்தில் சவுதி அரசு இந்த இடத்தை அதிகம் பிரபல்யப்படுத்தவில்லை.

இந்த இடங்களில் சிலவற்றைத்தான் மேலே ஸ்லைட் ஷோவில் நீங்கள் பார்க்கிறீர்கள். மேலும் மலைகளை குடைந்து வீடுகளை அமைத்த இடங்களையும் பார்வையிட்டோம். அதுபற்றிய விபரங்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.

9 comments:

Anonymous said...

பயனுள்ள பதிவு.

-ராஜா

கலாட்டாப்பையன் said...

நானும் சவுதி இல் தான் பனி புரிகின்றேன், இந்த மாதிரி வரலாற்றுக்கு சின்னங்களை பார்க்க வேலை பளு காரணமாக பார்க்க முடியவில்லை,......மிகவும் பயனுள்ள பதிவு..நன்றி..

Unknown said...

இது போன்ற வரலாற்றுச் சின்னங்களை பார்வையிடும்போது மனதில் ஈமானின் பலம் அதிகரிக்கின்றது.

suvanappiriyan said...

மன்னன் பாரோ(பிரவுன்)வின் உடல் உலகத்தார் அத்தாட்ச்சிக்காக இன்றும் எகிப்தின் கெய்ரோ மியூஸியத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த உடல் பாதுகாக்கப்படும் என்றும் குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது.

suvanappiriyan said...

வாங்க சுல்தான்!

குர்ஆனின் ஒவ்வொரு வரிகளும் சொல்லும் செய்திகளுக்கு மறுக்க முடியாத வரலாற்று ஆதாரங்கள் இன்றும் இருப்பதை நினைத்து நாம் ஆச்சரியப்படுகிறோம். இந்த நாடுகளுக்கெல்லாம் சென்று வராத முகமது நபி எவ்வாறு இவ்வளவு துல்லியமாக அனைத்து நாடுகளின் வரலாறுகளையும் சொல்ல முடிகிறது? இந்த குர்ஆன் இறைவன் அல்லாது வேறு யாரால்தான் கூறியிருக்க முடியும் என்ற சிந்தனை வருகிறதல்லவா?

suvanappiriyan said...

திருச்சிகாரன்!

நாம் வேலை செய்யும் இந்த நாளிலேயே இது போன்ற வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பிறகு இவ்வளவு செலவு செய்து இந்த இடங்களுக்கு வருவது சிலருக்கு முடியாமலும் போகலாம்.

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

suvanappiriyan said...

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ராஜா.

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதர் சுவனப்பிரியன் அவர்களுக்கு,

தாங்களின் அனைத்து பதிவும் அருமை, அதுவும் இப்பதிவு மிகவும் அற்புதமாக உள்ளது. இதே போல் வரலாற்றுச் சான்று பதிவு போடவும். எல்லாம் வல்ல அல்லாஹ் தாங்களுக்கும் தாங்களின் குடும்பத்தாறுக்கும் பரக்கத் செய்வானகவும். ஆமின்.

நட்புடன்.
மஸ்தான் ஒலி.

suvanappiriyan said...

திரு மஸ்தான்!

//அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதர் சுவனப்பிரியன் அவர்களுக்கு,

தாங்களின் அனைத்து பதிவும் அருமை, அதுவும் இப்பதிவு மிகவும் அற்புதமாக உள்ளது. இதே போல் வரலாற்றுச் சான்று பதிவு போடவும். எல்லாம் வல்ல அல்லாஹ் தாங்களுக்கும் தாங்களின் குடும்பத்தாறுக்கும் பரக்கத் செய்வானகவும். ஆமின்.

நட்புடன்.
மஸ்தான் ஒலி.//

வ அலைக்கும் வஸலாம்!

உங்களைப் போன்றவர்கள் தரும் ஊக்கத்தால்தான் ஆர்வமுடன் பதிவுகளை இடுகிறேன். பிரார்த்தனையில் எங்களையும் சேர்த்துக் கொள்வதற்கு நன்றி.

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.